Thursday, December 11, 2014



திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2) 


பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி


"தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், தமிழ்நாட்டில் அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் நோயில் சிக்காமல் வாழுந்து வரும்,  அத்தகையோரின் அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன் இருக்கின்றன." என்பதையும், அத்தகையோர் "சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது." என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதற்குக் காரணமாக‌ ,சமூக செயல்நெறி மதகுகள் ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர். 

உதாரணமாக, 1967க்கு முன், பிராமணக் குடும்பங்களில் 'தற்கொலைகள்', கூட்டுக் குடும்பம் சிதைவு, கணவன் மனைவிகளுக்கிடையே வன்முறை, விவாகரத்து, நீதிமன்ற வழக்கு போன்றவைகள் கேள்விப்பட்டதில்லை. இது போன்ற 'சமூக வியாதிகளில்' பிராமணரல்லாதோர் மட்டுமே சிக்கி, அவதிப்படுவதாக, பெரியாரும், பெரியார் வழியை ஏற்று செயல்பட்ட, என்னைப் போன்றோரும் பிரச்சாரம் செய்தோம். இன்று இது போன்ற  'சமூக வியாதிகளில்' பிராமணக் குடும்பங்களும் சிக்கி சீரழிவதைக் கேள்விப்படுகிறோம்.

பெரியார் 'வைதீகப் பார்ப்பனரை விட, லெளகீகப் பார்ப்பனர் மோசமானவர்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிராமணருக்கான 'கட்டுப்பாடுகளை' மீறி, அசைவ உணவு உண்டு, கூடுதலாக மது, புகைப் பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கும் உள்ளாகி, எல்லோரிடமும் 'சமமாக'ப் (?) பழகும் பிராமண‌ர்களே  லெளகீகப் பிராமண‌ர்கள் ஆவர். இன்று அந்தப் பழக்கங்களுடன், கூடுதலாகப் பூணூலையும் கழட்டி வாழும் பிராமணர்கள் எண்ணிக்கை 'அபரீதமாக' அதிகரித்து வருவதும், அவர்களில் பலர், மனித உறவுகளில் 'லாப நட்ட'க் கணக்குப் பார்த்துப் பழகும் 'திராவிட மனநோயாளிக் கள்வர்களாக' வாழ்வதும், 1967க்கு பின் 'அதிகமாகவும்' , 'வேகமாகவும்' வளர்ந்தவை ஆகும்.

இயல்பின் அடிப்படையில் உண்மையாகவும், நேர்மையாகவும், லாப நட்டக் கணக்கற்ற இயல்பான அன்புடனும்,'பணம், செல்வாக்கு சம்பாதிப்பதே' வாழ்வின் இலட்சியம் என்று கருதாமல், தமது இயல்பை ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும், வாழும் பண்புள்ள மனிதர்கள் எல்லாக் காலத்திலும் ஒரு சமூகத்தில் இருப்பார்கள். 

அதே போல், 'வாய்ப்பு'க் கிடைத்தால்,லாப நட்டக் கணக்கினை மனித உறவுகளில் பயன்படுத்தி,'பணம், செல்வாக்கு சம்பாதிப்பதே' வாழ்வின் இலட்சியம் என்று கருதி, வாழும் 'திறமையுள்ள' மனிதர்கள் எல்லாக் காலத்திலும் ஒரு சமூகத்தில் இருப்பார்கள். அத்தகையோரை 'சிற்றினமாக' அடையாளம் கண்டு கட்டுப்படுத்தி, சமூகத்தைச் சிதைவுக்குள்ளாக்காமல் தடுப்பது என்பது, அந்த சமூகத்தில் உள்ள செயல்நெறி மதகுகளின் வலிமையைப் பொறுத்ததாகும். தமிழ்நாட்டில் இன்று அந்த சமூக செயல்நெறி மதகுகள் மிகவும் பலகீனமானதன் விளைவுகளில் தான், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் மரணப்பயணம் தொடங்கி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

1944-இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் ஆனவை, உணர்ச்சிபூர்வமாக தடம் புரண்டதன் காரணமாக, எவ்வாறு திராவிட மனநோயாளித்தனம் உருவாகி, அந்த செயல்நுட்பத்தில் மேலேக் குறிப்பிட்ட சீரழிவுகளை ஏற்படுத்தியது என்பதை நான் கண்டுபிடித்ததற்குக் கீழ்வருபவை எனக்கு துணை புரிந்தன.

1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' மற்றும் பின் வெளிவந்த திராவிட இயக்க இதழ்கள், புத்தகங்கள், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்களின் நூல்கள், ஜீன் பால் சாத்ரே(http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre), சாம்ஸ்கி (http://en.wikipedia.org/wiki/Noam_Chomsky )  உள்ளிட்ட பல நவீன சிந்தனையாளர்களின் நூல்கள், கட்டுரைகள், எல்லாவற்றையும் விட பெரியார்  இயக்கங்களில், குறிப்பாக திருச்சி பெரியார் மையத்தில் கிடைத்த, மதிப்பு வாய்ந்த உள்ளீடான(Valuable input), 'அனுபவங்கள்'  போன்றவை துணையுடனே தான், நான் 'திராவிட மன நோயாளித் தனத்தின்' தோற்றத்தையும், வளர்ந்த செயல்நுட்பத்தையும் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த 'திராவிட மனநோயாளி'கள் வளர்ந்த போக்கில், அகத்தில் சுயநலக்கள்வராகவும், புறத்தில் 'சாதி ஒழிப்பு, முற்போக்கு' 'வீரராகவும்', மனித இயல்பில் திரிந்தவர்களும் 'அதிவேகமாக' வளர்ந்தார்கள்.

இயல்பில் 'திரிந்தவர்கள்' 'வாய்ப்பு கிடைத்தால்', எப்படி மாறுவார்கள் என்பது தொடர்பாக எனக்குக் கிடைத்த பல அனுபங்களில் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

எனக்கும் 'மிகவும்' தெரிந்த ஒருவர், பணக் கஷ்டத்தில், கடன் வாங்கி வாழ்ந்த காலத்தில், மிகவும் 'முற்போக்காளராக'வும், தான் பிற்காலத்தில் 'அதிக வட்டி' மூலம் சம்பாதிப்பவர்களை எதிர்த்து இயக்கம் நடத்தப் போவதாகவும்,  'அடிக்கடி' சொல்வார். ஆனால் அவர் 'வசதியான' பின், தன்னிடமிருந்த பணத்தை, அவ்வாறு சம்பாதித்தவர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக 'அந்த அதிக வட்டியில்' தனது பணத்திற்கான பங்கினைப் பெற்று வாழ்ந்தார். அதிலும் தான் கஷ்டப்பட்டக் காலத்தில் 'மிகவும் குறைந்த' வட்டிக்குக் கடன் கொடுத்த 'புண்ணியவானுக்கு', ஒழுங்காக அந்த 'குறைந்த வட்டியைக் கூட' கொடுக்காமல், அவ்வாறு ‘ திராவிட மனநோயாளித்தன வாழ்வியல் புத்திசாலியாக‌’ வாழ்ந்தார்.

வசதியில் குறைந்த நிலையில் வாழும் 'இயல்பில் திரிந்தவர்கள், 'குறுக்கு வழியில்' வசதியாக வாழ‌, 'வாய்ப்பு'க் கிடைத்தால், எவ்வளவு இழிவாக வாழ்வார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள, 'திருச்சி பெரியார் மையம்'  உள்ளிட்டு,  இது போன்ற பல அனுபங்கள், 'மதிப்பு வாய்ந்த' உள்ளீடுகளாக (Valuable inputs) அமைந்தன, 

அத்தகையோர் இன்னும் 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு' தமிழ் உணர்வு', மனித உரிமை' என்று ஏமாற்றி, நீண்ட காலம் வாழ முடியாது என்பதை, தமிழ்நாட்டில் தினமும், தமது பகுதி பொதுப் பிரச்சினைகளுக்காக, சாதாரணப் பொது மக்கள், குறிப்பாக பெண்கள், வீதியில் இறங்கி தாமாகவே போராடுவதும், 'மாணவர்களாக' உள்ள தமது பிள்ளைகளை அப்போராட்டங்களில் ஈடுபடுத்தாமல் தாமே போராடுவதும், பொது இடங்களில் திருடர்களைப் பிடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து வருவதும் உணர்த்துகின்றன. 'குறுக்கு வழியில்' 'அதீத' பணம் சம்பாதித்துள்ள, திராவிட மனநோய்க் கள்வர்களை நோக்கி, அவர்கள் கவனம் திரும்பி, 'அந்த' சொத்துக்களைப் பறிமுதல் செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும்  காலம் நெருங்கி வருவதையும் அவை உணர்த்துகின்றன. 

படித்தத் தமிழர்கள்  சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது மேற்குறிப்பிட்ட  விளைவுகளுக்கான,  வினை  ஊக்கியாக (catalyst) அமையும்.'திராவிட மன நோய்க் கள்வராக’ வாழ்வது இழிவு' என்பது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேகமாக வளர்கிறதோ, அந்த வேகத்தில் தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

3 comments:

  1. ஐயா

    "பெரியார் 'வைதீகப் பார்ப்பனரை விட, லெளகீகப் பார்ப்பனர் மோசமானவர்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்." என ஒரு விமர்சனம் இன்றி ஈ.வெ.ரா.வின் கருத்தை அள்ளி இருக்கின்றீர்கள். அது இனத்துவேஷ பிரச்சாரமாக உங்களுக்கு படவில்லையா? ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு என்பதற்க்கு நல்ல சான்றுஇ. இது மேலும் ஈவேரா தன் பிரசாச்சாரங்களுக்கு அப்பால் சமூகவியல் அல்லது சரித்திர நோக்கில் சிந்தனை செய்யத் தெரியாதவர் எனக் காட்டுகிரது.

    கடந்த 150 ஆன்டுகளாகவே தமிழகத்தில் எல்லா ஜாதிகளும் இன மக்களும் பரம்பரை நடத்தை, வாழ்க்கை முறையில் இருந்து மாறி வருகின்ரனர். பரம்பரை கல்வி, தொழில் மட்டுமல்ல, கலாசாரம், வாழ்க்கை முறையும் மாறிவருவது கண்கூடு. தற்காலத்தில் இள‌ம்பெண்கள் தாவணியை கைவிட்டு, சூரிதார் உடையை அணிகின்ரனர். இது 20 வருடங்களாக நடப்பது. 25 வருடங்களுக்கு முன் "தலித்" என்ற‌ வார்த்தையே தமிழில் இல்லை; இப்போது "தலித்" என்ற அடை மொழி பலரால் பெருமையுடன் பயன்படுத்தப் படுகிரது. 30 வருஷங்களுக்கு முன் எல்லா தமிழக வீடுகளிலும் கக்கூஸ் தரையில் குழி இருப்பதுதான்; இப்போது எல்லா புது வீடுகளிலும் மேற்கத்திய பாணி உட்காரும் கக்கூஸ்.

    இது ஒரு சின்ன சாம்பிள்தான்; இந்த வாழ்க்கை முறைகள் எல்லோரையும் பாதிக்கிறன. ஈவெரா என்ற அறைகுரையாக படித்து, இனவாத சிந்தனையாளருக்கு பிராமண‌ர்கள் மீது பழி போட்டு அரசியல் ஒற்றுமையை தேடுவது.

    நீங்கள் சொல்லும் திராவிட மனநோயாளித்தனத்தின் கண்கூடு சாதாரண மனிதர்களை பெரியார், அறிஞர், கலைஞர் , மொழிஞாயிறு என பலவாறு துதிபோட்டு பகுத்தறிவு, விமர்சன புத்தியை இழப்பது - அதே மனப்பான்மையின் மறுபக்கம் சில மனிதர்கள் அல்லது பிராமண‌ர் போன்ற இனங்களின் மீது அதீத துவேஷத்தை காண்பிப்பது.


    மதிப்புடன்

    வன்பாக்கம் விஜயராகவன்

    ReplyDelete
  2. பிழை திருத்தம்:
    ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு என்பதற்க்கு நல்ல சான்றுஇ

    என்பதை

    ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு அழிந்துவிடும் என்பதற்க்கு நல்ல சான்று.

    என படிக்க.

    ReplyDelete
    Replies

    1. “நீங்கள் சொல்லும் திராவிட மனநோயாளித்தனத்தின் கண்கூடு சாதாரண மனிதர்களை பெரியார், அறிஞர், கலைஞர் , மொழிஞாயிறு என பலவாறு துதிபோட்டு பகுத்தறிவு, விமர்சன புத்தியை இழப்பது” என்ற கருத்து எனக்கும் உடன்பாடே.
      Kindly refer to my post Dt. November 5, 2014’குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத் தழுவ முடியுமா?’ with the following observation.
      “திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்வுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும் 'தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ' என்ற முந்தையப் பதிவில் பார்த்தோம். அதில் "'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும், அந்த 'உணர்வுபூர்வ' போக்கின் விளைவா? இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?" என்ற கேள்விகளையும் பார்த்தோம்.”
      “இன்று தி.க தலைவர் ' கி. வீரமணி'யின் பெயர் மறைந்து, (விடுதலை) 'ஆசிரியர்' என்றும், 'மு.கருணாநிதி' மறைந்து,'கலைஞர் ' என்றும் அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஈ.வெ.ரா, கி.வீரமணி, மு.கருணாநிதி என்று நமது பேச்சில், எழுத்தில் குறிப்பிட்டால், அவர்களை அப்பெயர்கள் மூலம் நாம் அவமதிக்கிறோமோ? என்று நமக்கு ஐயம் வரும் வகையில், அவர்கள் ஆதரவாளர்கள் நினைப்பது உண்மையா? பொய்யா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.”
      In my view, we are in a transition in which the communication has to serve the purpose of drawing the attention of those, who, in my view, are travelling in the wrong direction. You have the freedom to find fault with my approach. More than proving myself ‘right, etc’, I am more interested in de-emotionalizing TN to encourage open minded discussions, to free TN from the damages.

      Delete