Sunday, May 31, 2015



Chennai IIT & APSC issue : 
The Noises dominating over the Signals

Those interested in knowing the views of the section of the Chennai IIT students, supporting the action by the management, against APSC (Ambedkar Periyar Study Circle) , can read it in the following link.

Assuming all the above content are true, & also the media reports true, the following questions arise, raising a more serious issue w.r.t  the style of functioning of the IIT management.

There can be no IIT, minus the students.

A responsible management must have a PROPER mechanism to monitor the activities of the students, especially in a residential, closed, & well guarded campus.

The mechanism must sensitize the violations of the guidelines, if any, by any student, section of students, or a student body like APSC. Also a ‘CLEAN’ management with students  from all over India,  MUST ensure NO caste,  religion, & state, based discrimination, and the above mechanism NEED to be extra-sensitive to such discrimination; in view of the past allegations during the rule of the previous govt.

Also the students, displaying their faith in the management, must draw the attention of the management about the violations of the guidelines, if any, by any student, section of students, or a student body like APSC.

Instead if any student or a section of students send a complaint, that too anonymous, to MHRD, will it not be SIGNAL that the students of the IIT had lost faith in their management to address to their grievances? 

Sad to know, that the students in the above link disliked revealing their identity, probably fearing unwelcome repercussions. It simply means that noises and nuisances dominate the public domain even in higher education, that too w.r.t the reputed institutions like IIT, exposing the irresponsible elders backing the students, on both sides of the issue, fueling the chocking in the public debates.

If IIT had the above mentioned proper mechanism, the first step to check the violation is to draw the attention of the students of APSC, indulging in the violations, and explore rectification through counseling.

If the above step failed, then it needs to be followed up, by a show cause notice drawing the students’ attention to the proposed disciplinary action against them.

On receiving their reply, a proper enquiry shall be conducted to decide the punishment with focus to offer scope for their refinement, instead of ruining their studies & career, as a vengeance.

According to the content of the above link from the students supporting the IIT management action against APSC, the Chennai IIT management did not follow the above responsible course of action.

The following clarification from the students associated with APSC, also confirmed it.

“We resent the fact that the Dean has de-recognized our study circle unilaterally without giving us a fair hearing and an opportunity to represent ourselves.”
http://www.thenewsminute.com/article/full-letter-iit-madras-apsc-students-respond-derecognition

Strange is the following clarification from the IIT management.

"They are free to conduct their activities on their own. They merely cannot use the name of IITM in their pamphlets and communication (as they have been doing), and they do not get institutional funding for their activities."

Does it not mean that the IIT management is more concerned with the funds & the name, than the nature of the activities of the students?
I have the following more serious question to both the students supporting & opposing APSC.

Are they aware of the following news, endangering the very survival of IIT, as top ranking institutions in India?

“The government initiated budget cuts for the five new IITs and IIMs—from `Rs. 500 crore to `Rs.65 crore. For the existing 16 IITs, the budget has been cut by Rs.163 crore.”

The above information, if true, will prove to be a ‘TRAGIC REWARD’ to the student community, who, with high hopes, had contributed to the election of Modi, as PM. Also if it is the ‘tip of the iceberg of the changes’ introduced by the Modi govt, it may prove to be the ‘Modi’s waterloo’, nullifying all other achievements of the non-corrupt govt. Branding the ‘changes’ as simply ‘saffronization’ , unaware of the pro & anti-modi forces within the Hindutva, will prove to be a self defeating strategy of the pro-India, but mentally colonized  ‘secular’(?) parties.

Obviously the above cuts, probably for the FIRST TIME in independent India, will not affect the salary part of the IIT staff. Only the students , the research scholars and the projects meant for S.C/S.T/Physically challenged, etc will suffer in terms of winding up the projects,  decreased facilities & funds for the purchase of hardware, software, books,etc.  No surprise, if promising research scholars & faculties migrate to foreign countries, not WASTING their talents in India. Probably they may opt for China, in view of the following development.

“Chinese spending has grown by 20% per year since 1999, now reaching over $100bn, and as many as 1.5 million science and engineering students graduated from Chinese universities in 2006. China published 184,080 papers as of 2008. China has also become a top destination for international students. (http://en.wikipedia.org/wiki/Education_in_China)

If the above dangerous trend is unchecked, Chennai IIT may soon be downgraded to the level of TN govt colleges. Also Modi govt will be blamed the decreasing the investment for the future development of India, apart from downgrading the present R & D activities.

On the other hand, if the cut was initiated to curtail wasteful expenditure, will it not warrant to initiate immediate enquiry to assess the total amount wasted in all the IITs all these years, identify & punish the culprits?

Had Chennai IIT management followed the proper mechanism mentioned above, the APSC issue would not have reached such unfortunate decibel level in the media with the noises from  both the opposite sides dominating over the signals ; distracting the students from the more serious issue of the very survival of the IIT. Any unilateral decision of the management, minus the proper mechanism, will become a source for noises, causing pollution in the higher education domain, as demonstrated in the current controversy; high time to review the performance of the ‘babus’ of MHRD, in the light of the following observation by the reputed journalist Prabhu Chawla.

“For the past 13 months, they have been forced to reach office before 9 am, but their productivity hasn’t increased commensurately. By nature, babus are pygmies. They are, however, capable of halting an elephant in its tracks with red tape and regulation tricks. Modi replaced over 60 secretary-level officials after the retirement of the incumbent officers, but continued with Seth since the officer was privy to the ways and means of the UPA government. It was the PM’s first encounter with the army of official mercenaries whose only object is to thrive even if the country is on the verge of an administrative chaos.”
http://www.newindianexpress.com/prabhu_chawla/columns/New-Cab-Sec-Modis-Mission-of-Making-Bureaucracy-an-Obedient-Partner-Gets-Headstart/2015/05/31/article2841145.ece .

Note: “IIT-Madras Revokes De-recognition of APSC Student Group; In hindsight, admitted DoST Sivakumar Srinivasan in a mail to APSC members in the evening, other options could have been considered. “I have taken into consideration your note stating that guidelines were circulated to students via mail only on 18th April, 2015, while your event was on 14th April, 2015. Noting that the guidelines were not disseminated when the meeting took place, in hindsight it appears that other options could have been considered,” he said in the e-mail. “We see this as a result of the protests by students and progressive and democratic forces across the country. This is a small step in a fight to ensure that anything under the sun can be discussed and debated in the public sphere,” said Akhil B, a member of APSC.” http://www.newindianexpress.com/cities/chennai/IIT-Madras-Revokes-De-recognition-of-APSC-Student-Group/2015/06/08/article2854717.ece

Sunday, May 24, 2015


தமிழ்நாட்டில் 'தமிழ் வேர்' மரணப்படுக்கையில்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும் 

 


 '1944இல், திராவிடர் கழகம் தோன்றிய பின், பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கின. அப்போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்', தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னைப் போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக' சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம்,  திருச்சி ‘பெரியார் மையம்’ அனுபவங்கள் காரணமாக, எனக்குள் எழுந்தது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்ட, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? என்ற ஆய்வுகளில்,  நான் ஈடுபட,  அந்த அனுபவங்கள் காரணமாகும். 'என்பதையும்;

'அதன்பின்,  'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின்தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது ஆய்வு முயற்சிகளில், நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றங்களும் (http://musictholkappiam.blogspot.in/; http://musicdrvee.blogspot.in/) ஏற்பட்டன. வணங்கத்தகும் மனிதர்கள் எனது சமூக வட்டத்தில் இடம்பெறும் போக்குகளும் அதிகரித்தன. ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்திலிருந்து விடுபட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியதே, அதற்கு காரணமாகும். (refer post dt. April 17, 2015;’ 'கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா? நாமே 'கொள்கைப் பிணமாக'வா? எப்படி நாம் வாழ்கிறோம்?’)' என்பதையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். 

அவ்வாறு எனது 'நல்லின சமூக வட்டத்தில்' இடம் பெற்றுள்ள திரு.மா. அர்ச்சுனமணி அவர்கள், கீழ்வரும் கட்டுரையை எனது பார்வைக்கு அனுப்பினார்கள்.

‘அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.’

அக்கட்டுரை தொடர்பாக, கீழ்வரும் கருத்தை அவருக்கு அனுப்பினேன்.

"தமிழருக்குள்ள பல பரிமாண அடையாளச்சிக்கலில், ஆன்மிகம் தொடர்பான தீர்வுக்கான தேடலில் உள்ளவர்களின் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரிய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். நன்றி. 

"இன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன்? சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்." தொடர்பாக; 

தமிழ்நாட்டில் தமிழர்கள் நம்பமுடியாத அளவுக்கு அகத்தில் சீரழிந்து, 'பிழைப்பு வேதத்தில்' சிக்கியுள்ளார்கள்; வட மொழி வேதமா? தமிழ் வேதமா? என்பது பற்றிய கவலையின்றி.(‘தமிழரின் நிகழ்கால திரிந்த புறநானூறு வாழ்வியல் கோட்பாடு’; “திரிதல் அம்ம, இவ்வுலகம்; இழிசினர்;"- 'தமக்கென வாழா மன நோயாளிகள் ';post dt. February 17, 2015; http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html )

'தமிழ், தமிழ் உணர்வு' என்பது சுயநல பொது வியாபார மூலதனம் ஆனபடியால், ஆங்கில வழிக் கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில்,  தமிழை சரியாகப் படிக்கத் தெரியாமல், தமிழ் சான்றோர்கள்/தலைவர்கள்/பேராசிரியர்கள்/ஆர்வலர்கள் குடும்பங்களிலேயே  தமிழ் வேரற்ற மாணவர்கள்  அதிகரிக்கும் அளவுக்கு, தமிழ் வேரற்ற சமூகம் எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளர்ந்து வருகிறது. 

திராவிட/தமிழ் கட்சிகளின் செயல்பாட்டால், பேச்சும், எழுத்தும் தனது தகவல் பரிமாற்ற வலிமையை(communication strength)  இழந்துள்ளது. முன்மாதிரி செயல்(role model)  மட்டுமே, இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் தகவல் பரிமாற்ற வலிமை பெற்றுள்ளது என்பது எனது அனுபவமாகும்.

ஏழ்மை காரணமாக, தமிழ்வழி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூலம் 'உயிர்மூச்சு' விட்டு, மரணப்படுக்கையில் 'தமிழ் வேர்' உள்ளது. தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால்தான், தமிழ் வேர் பிழைக்கும். தமிழ் வேர் பிழைத்தால் தான், தமிழ் வேதம் தழைக்கும்." 

அது தொடர்பாக, திரு.மா. அர்ச்சுனமணி தெரிவித்த கருத்து வருமாறு;  

" 'தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால்தான், தமிழ் வேர் பிழைக்கும். தமிழ் வேர் பிழைத்தால்தான், தமிழ் வேதம் தழைக்கும்' எனும் தங்களது கூற்றில் ஒரு சிறு மாற்றம் தேவை.  

அவர்கள் தாமாக ஒதுங்கமாட்டார்கள். நம் தமிழ் மக்கள்தாம் அவர்களை ஓரங்கட்ட வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற அறிஞர்களின் புகழும் தொகையும் பெருக வேண்டும். அந்நாள் விரைவில் வரவேண்டும். அதற்கென நாமனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்." 

அக்கருத்தை நடைமுறைப்படுத்தும் சமுக செயல்நுட்பம் (social mechanism)பற்றிய எனது சிறு விளக்கம் வருமாறு; 

"அவர்கள் தாமாக ஒதுங்கமாட்டார்கள். நம் தமிழ் மக்கள்தாம் அவர்களை ஓரங்கட்ட வேண்டும்.  அந்நாள் விரைவில் வரவேண்டும். அதற்கென நாமனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்." தொடர்பாக; 

'அவர்களை' ஓரங்கட்ட, நாமனைவரும் ஒன்றுபடுவதற்கான சமுக செயல்நுட்பம் (social mechanism)’  பற்றி; 

'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, , அவ்வாறு விலகுவதால், விளையும் இழப்புகளை 'துணிச்சலுடன்' விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்.' (refer post dt. May 6, 2015;’ 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை;  தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460’ ; http://tamilsdirection.blogspot.in/ ) 

அந்த முயற்சியில் பணமும், புகழும் உருவாகி, ஒரு குறிப்பிட்ட வரையெல்லையைத்(Threshold level)  தாண்ட வாய்ப்புள்ள நிலையில், மேற்கண்ட செயல்நுட்பத்தில் இருப்பது போல் ஏமாற்றி, அதைக் 'களவாடும்' திறமைசாலிகள் தமிழ்நாட்டில் திராவிட/தமிழ் கட்சிகளில் நிறைந்துள்ளனர். எனவே அந்த வரையெல்லையை, ஆபத்து எல்லையாகக்(danger zone)  கருதி, எந்த தனி மனிதரும் மேற்கண்ட செயல்நுட்பத்தில்,  'புகழ், செல்வம், செல்வாக்கு' ஈட்ட வழியில்லாதவாறு பார்ப்பது அவசியமாகும்.

அதைச் செயல்படுத்த, 'தமிழ், தமிழ் உணர்வு' என்று மேடையில் பேசுபவர்களும், எழுதுபவர்களும்,தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் எந்த அளவுக்கு ஒற்றுமை/வேற்றுமை உள்ளது? 'அந்த' பேச்சாளாரும், எழுத்தாளரும்' பொது வாழ்வில் நுழைந்தபோது எவ்வளவு சொத்து இருந்தது? அது எவ்வாறு அதிகரித்தது? என்பதை தெளிவுபடுத்தாதவர்கள் மீது,  'தீண்டாமையை'க் கடைபிடிக்கும் துணிச்சலும் அவசியமாகும். 

‘தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’ - திருக்குறள் 462  “ 

மேற்குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தை அமுல்படுத்த, இந்தியாவிலேயே, தமிழர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அடையாளச் சிக்கலையும், அதன் காரணமாக, தமிழ்நாட்டுத்  தமிழர்கள் (depoliticize) அரசியல் நீக்கத்திற்குள்ளாகியுள்ளதையும் ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். அது தொடர்பான, கேள்விகள் வருமாறு;

“பெரியாரின் 'திராவிட நாடு பிரிவினை'யை ராஜாஜி ஆதரித்ததால், 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் பலகீனமாக, ராஜாஜி பங்களிப்பு வழங்கியுள்ளார். இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே, 'தமிழர், திராவிடர், இந்தியர்' குழப்பங்களால், அடையாளச்சிதைவுக்கு உள்ளானார்கள். அதனால், 1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்த போக்குகள், 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை சீரழித்து, கேலிப்பொருளாக்கியது போலவே, 'தனித் தமிழ் ஈழ' முயற்சிகள் முள்ளிவாய்க்கால் மரணத்தில் முடிய காரணமா? இந்த போக்குகள் தமிழ்நாட்டு தமிழர்களை அரசியல் நீக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா (depoliticize)? சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை, ஆதாயத்தொண்டர்களும்/ தலைவர்களும் செல்வாக்கு பெற‌, அதுவே காரணமா?

கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குமுள்ள அதீதமான‌ செல்வாக்கிற்கும், உள்ள காரணங்கள் யாவை?” (refer post dt. May 6, 2015;’ 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை,  தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460’)  'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தொடக்கப்புள்ளியாக, வெறுத்தாலும், விரும்பினாலும், மேற்குறிப்பிட்ட 'செல்வாக்குகள்' இயற்கை விதியாக அமைந்துள்ளன.அதிலும் மோடி உள்ளிட்டு, நிகழ்கால தலைவர்களில், தமது கட்சியிலும், ஆட்சியிலும், எந்த தடையுமின்றி, நினைத்ததை சாதிக்கக்கூடிய‌ ஒரே தலைவர் ஜெயலலிதா ஆவார். அந்த வகையிலான‌ எம்.ஜி.ஆரின் சாதனையே தமிழக அரசின் பெரியாரின் எழுத்து சீர்திருத்தமாகும்.

மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரிலும், 'தமிழர்' என்ற அடையாளமும், 'இந்தியர்' என்ற அடையாளமும் எந்த அளவுக்கு வேர் பிடித்துள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும். 

'தமிழ், தமிழ் உணர்வு' என்பன‌, சுயநல பொது வியாபார மூலதனம் ஆனதன் விளைவாக, ஆங்கில வழிக்கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டுச் சூழலில் , அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள். இதனால் அம்மாணவர்களிடம், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை கேலிக்குள்ளாகி வருகிறதா? அம்மாணவர்களில் பெரும்பாலோர், தமிழில் சரியாக படிக்கத் தெரியாமல், 'தமிழ் வேரற்ற'வர்களாகி வருவதும், அதே நேரத்தில்,  அவர்களிடையே பிரமிக்கும் வகையில், (கிரிக்கெட், வெளிநாடு வேலை, etc மூலம்) 'இந்தியர்' என்ற அடையாளம் ‘வேர் வலிமை’ பெற்று வருவதும் உண்மையா? என்பது ஆய்விற்குரியதாகும். அது உண்மையெனில், மேலே குறிப்பிட்ட ஜெயலலிதா பற்றாளர்களும், அந்த அடையாளத்தில் பயணிக்க இருப்பது, வரலாற்றில் தவிர்க்க இயலாத போக்கு என்று நிரூபணமாகும். 

"'தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால் தான், தமிழ் வேர் பிழைக்கும்." என்பதை மேலே பார்த்தோம். தமிழ்நாட்டில் 'தமிழ்,தமிழுணர்வு, தமிழர்கள்' என்று பேசிக்கொண்டு, மனச்சாட்சியை அடகு வைத்து,'பிழைப்பு வேத'ப் போக்கில், தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்த/வைத்துக் கொண்டிருக்கும் (வெளிநாடு/வெளிமாநில‌ வாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை)  கட்சித் தலைவர்கள் யாவரும், தமிழ் வேரை அழிக்கும் வேர்க்கொல்லிகளாவர். 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூலாசிரியர், அந்நூலை எழுதியதன் விளைவாக, சாகும் வரை தனது நண்பர்கள் பாதுகாப்பிலேயே உயிர் வாழ்ந்தார். அந்த அளவுக்கு, தமிழானது, தி.மு.க வின் சுயநல அரசியலில் சிக்கியுள்ளது. (refer post dt. November 27, 2014; ‘தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய  திருக்குறள் ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) அந்த 'தமிழ் வேர்க்கொல்லி' போக்கில், அடிவருடி பிழைத்த தமிழறிஞர்கள் யார்? அவர்களின் 'புலமையை'(?) பறை சாற்றும் படைப்புகள் யாவை? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழ் வேர்க்கொல்லி நோய் செல்வாக்கில் சிக்கிய தமிழர்களின், குடும்பம், அரசியல், மதம் உள்ளிட்ட அமைப்புகளில், தவறுகள் தடையின்றி  சமூக புற்று நோய் போல் பரவும், என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. December 9, 2014;’ திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:  சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks)’)

உலக வரலாற்றில், ஒரு மொழியை, ‘பிழைப்பு வேத', 'கட்சி அரசியல் சிறை’யில் சிக்க வைத்து, அதன் வேரை அழிக்கும் முயற்சியானது, தமிழ்நாட்டில் மட்டுமே நடந்துள்ளதா? தமிழ் வேர்க்கொல்லிகளுக்கு சாதகமான உணர்ச்சிபூர்வ சூழலில், அதனை அறிவுபூர்வமாக விவாதிக்க வாய்ப்புண்டா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழர்களின் அடையாளச்சிதைவின் அடிப்படையில், அரசியல் நீக்கம்(depoliticize)  எவ்வாறு நடந்தது? அந்த போக்கில், தமிழானது, ‘பிழைப்பு வேத', 'கட்சி அரசியல் சிறை’யில் சிக்கி, எவ்வாறு தமிழ் வேர்க்கொல்லி நோய்க்குள்ளானது? என்ற விவாதத்திற்கு இடமில்லாத சூழலில், தமிழ்வழி அரசுப் பள்ளிகளின் மரணப்பயணத்தை தடுத்து, தி.மு.கவின் சுயநல அரசியலில் சிக்கி சீரழியும்,  தமிழை, அந்த‌ 'சிறை’யிலிருந்து விடுவித்து, தமிழ் வேரை மீட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வரலாற்றில் நிலையான புகழ் பெற முடியும். எனவே அபரீதமான மக்கள் செல்வாக்குடன் ஆட்சியில் உள்ள,‌  தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மனது வைத்தால் மட்டுமே, தமிழ் வேரானது, தனது மரணப்படுக்கையிலிருந்து, மீண்டு, உயிர் வாழ வாய்ப்புள்ளது. 

குறிப்பு: 
விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன. சான்றுகளாக;

1. www.ccsenet.org/ass - Asian Social Science Vol. 7, No. 12; December 2011- Primary School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in Ibadan Metropolis by Dr. David O. Fakeye;
2. The findings of a comprehensive research review carried out for the World Bank: Dutcher, N. in collaboration with Tucker, G.R. (1997): The Use of First and Second Languages in Education: A Review of Educational Experience , Washington D.C., World Bank;
3. Education for All: Policy Lessons From High-Achieving Countries: UNICEF Staff Working Papers , Mehrotra, S. (1998), New York, Unicef;
4. Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies- Dutcher, N: , Center for Applied Linguistics, Washington DC.(2001);
5.  Education in a multilingual world  - Published in 2003 by UNESCO http://unesdoc.unesco.org/images/0015/001556/155642E.pdf
From: ‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’ post dt. October 24, 2013; http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html;  
 
Also visit: ‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts (16); Thanks to TN CM, there is now hope  to arrest the suicides and the decay to the Tamil;’post dt. September 20, 2013; http://tamilsdirection.blogspot.in/2013_09_01_archive.html;

Friday, May 15, 2015



தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?


'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படாத எந்த கொள்கையும் மரணமடைவதைத் தடுக்க முடியாது என்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அது தனது கொள்கைக்கும் பொருந்தும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே பெரியாரின் கொள்கைகளையும்,நிலைப்பாடுகளையும் 'காலதேச வர்த்தமான'  மாற்றங்களுக்குட்படுத்தாமல் பயணிக்கும், பெரியார் கட்சிகளும், ஆதரவாளர்களும், பெரியாருக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைக்கிறார்கள்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். பிறர் தூண்டியோ, தாமாகவோ பெரியார் படத்தை செருப்பால் அடித்து, சிறுநீர் கழித்து, புகைப்படங்கள் வெளியிட்டவர்கள்,  கண்ணுக்கு தெரிந்து தீங்கிழைத்தவர்கள் ஆவர். மேற்குறிப்பிட்ட தீங்கானது, அதை விட ஆழமான,மோசமான தீங்காகாதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இன்று 'இந்துத்வா' ஆதரவாளர்களில் சிலர், பெரியாரை இழிவுபடுத்திவரும் போக்கானது, 1967க்கு முன், திமுகவினர் மேற்கொண்ட போக்குடன், ஒப்பிடக்கூடியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் வெளிப்பட்ட இந்த, - தாம் எதிர்க்கின்ற நபரின் தியாகங்களை மதிக்காத‌ போக்கு- , 1944க்குப் பிறகுதான், திராவிட கட்சிகளிடமும் வெளிப்பட்டது. தாம் எதிர்க்கின்ற நபர் புரிந்த தியாகங்களை மறந்து, உணர்ச்சிகர பேச்சில், எழுத்தில் அவரை, குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராவை, இழிவுபடுத்துவதில் தேசியவாதிகளை 1967க்கு முந்தைய தி.மு.கவினர் விஞ்சினர்; இப்போது தி.மு.கவினரை, இந்துத்வா கட்சியினரில் சிலர் விஞ்சி வருகின்றனர்.' 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

"1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா?" என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெரியாரின் (தூத்துக்குடி மாநாட்டு) உரையில் வெளிப்பட்ட சரியான போக்கானது, சறுக்கலுக்குள்ளாகி, சீரழிவு போக்கின் வலிமையைக் கூட்டியதும் அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.‘ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில்,  ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ, அந்த பயணத்தின் முடிவில், அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது, அந்த தலைவர்களை உணர்ச்சிபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள். அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html ) 

தூத்துக்குடி மாநாட்டிற்குப்பின் பெரியார் 'சறுக்கிய' போக்கில், பயணித்த கட்சிகள், இப்போது மக்கள் செல்வாக்கை இழந்து, ஆதாயத்தொண்டர்கள் பலத்தையே நம்பி பயணித்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அந்த போக்குகளுக்கு வித்திட்ட பெரியாரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், திறந்த மனதும், அறிவு நேர்மையும், சுயலாப நோக்குமுமற்ற, 'புலமையாளர்களின்' முயற்சிகள் துணையுடன், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படுத்தி, உரிய மாற்றங்களுடன் அவற்றில் , நிகழ்கால தேவைகளுக்குதவும் 'உயிரை' உறுதி செய்து,   பெரியாரின் வரலாற்று மரணத்தை தடுக்க வேண்டிய காலக்கட்டம் இது. தமிழும், தமிழுணர்வும் மாணவர்களின் கேலிப்பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளதா? ('தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?';
http://tamilsdirection.blogspot.com/2015_06_01_archive.html) தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நீக்க சூழலில், வெளிநாடு வேலை வாய்ப்புகள், கிரிக்கெட், etc மூலம் 'இந்தியர்' அடையாளம் வலுப்பெற்று வருவதானது, தமிழ்/திராவிட கட்சிகளை மாணவர்கள் மத்தியில் செல்லாக்காசாக்கியுள்ளதா? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய ஆபத்தான சூழலில் தமிழ்நாடு பயணிக்கிறது.

 தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்)  மரணப்பயணத்தோடு, தமிழர்கள் அகத்தில் பெற்று வரும் சீரழிவையும், அதனால் தமிழ்நாடு புறத்தில் பெற்றுவரும் சீரழிவையும் , தாமதமின்றி தடுக்க வேண்டிய காலக்கட்டம் இது. தவறினால், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம்,  முன் நிபந்தனையாகி விடும். 

தமக்கு இப்போதிருக்கும் செல்வம், செல்வாக்கு, வசதிகளுடன் தமது காலத்தை பெரியார் கட்சிகளின் தலைவர்கள் கழித்து விடலாம். ஆனால் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணத்தை முன்நிபந்தனையாக்கிய குற்றவாளிகளாக அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. எனது ஆய்வுகள் அடிப்படையில் தெளிவு பெற்று, 2005 முதல் நான் மட்டுமே, நானறிந்த வரையில், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில்,  இந்த அபாய அறிவிப்பை முன் வைக்கிறேன்.

 ‘பெரியாரை பின்பற்றுபவர்களின் விபரீதமான நீதி உணர்வு ‘ - ‘Periyar’s Followers Have A Perverse Sense Of Justice’ -  என்ற தலைப்பில் பத்ரி சேஷாத்திரி ( பிரபல புத்தக வெளியீட்டாளர்) எழுதியுள்ள ஆங்கில கட்டுரை தொடர்பான எனது பதிவும், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில் உருவானதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_23.html) 'பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை'  
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html) என்ற பதிவை நான் எழுதியதும் அந்த அடிப்படையில் தான்.

எனது இந்திய குடிஉரிமையை 'சரண்டர்'(surrender) செய்து, என்னை மதித்து, எனது ஆய்வுகளை ஊக்குவிக்கும் நாட்டில் பகிரங்கமாக அடைக்கலம்(asylum)  கேட்க, அனுமதிக்குமாறு, இந்திய குடியரசு தலைவருக்கு மடல் எழுத எண்ணியதற்கு , 2005 முதல் நான் மட்டுமே, தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வருவதால் ஏற்பட்ட சலிப்பும் காரணமாகும். எனது ஆய்வுகளின் அடிப்படையில், எனது சமூக வட்டத்தில் இடம் பெற்று , என் மீது மிகுந்த அன்பும் ஆதரவும் செலுத்துபவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள், அதை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதையும் கணக்கில் கொண்டு, எனது ஆய்வுகள் மூலம் பணம், புகழ் ஈட்டும் நோக்கமில்லாததால், எனது ஆய்வுகளின் வளர்ச்சியை விட, தமிழ்நாட்டிலேயே இருந்து எதிர்நீச்சல் போட்டே, எஞ்சிய வாழ்க்கையையும் முடித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

“நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான 'அறிவுபூர்வ' விவாதங்களை தவிர்த்து,  நாம் 'உணர்ச்சி பூர்வ கொள்கைப் பற்றுடன்'  வாழ்வது என்பது; ஒன்று அந்த கொள்கை செத்து, பிணம் தின்னும் கழுகுகளாக நாம் வாழ்வதை உணர்த்தும்; அல்லது நாமே 'கொள்கைப் பிணமாக' உயிருடன் வாழ்வதை உணர்த்தும்.'கொள்கைப் பிணமாக' வாழ்பவர்கள் தான், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து வாழ முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ்கிறோம்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

எனது வாழ்வின் பெரும்பகுதியை, சுயலாப நோக்கின்றி,  பெரியார் கொள்கையாளனாக கழித்தவன் நான். (அதன் காரணமாகவே நிகழ்காலத்தில். வேறு எவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாத, இழப்புகளுடன், அந்த இழப்புகளையே எனது பதிவுகளுக்கான மதிப்புமிக்க உள்ளீடுகளாக(inputs)  மாற்றி, வாழ்ந்து வருபவன் நான்.) பின் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் வரைஎல்லைகள் (limitations)  பற்றிய புரிதல் அவருக்கு இல்லாததால், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான, 'மிகவும் ஆபத்தான' , 'தமிழர்களை 'வேரற்ற'வர்களாக ஆக்கும், அவர் வெளிப்படுத்திய‌ கொள்கைகளை உண்மை என்று நம்பி, எனது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி விட்டேனோ? என்ற ஐயம் எழுந்தது. அது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தைத் தொடங்க, நான் எழுதிய கட்டுரையானது, 'கறுப்பு, வெள்ளை (அல்லது  சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில், 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2006 வெளிவந்தது. 
(https://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)  இன்று வரை எந்த பெரியார் கொள்கையாளரிடமிருந்து அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த கருத்தும் எனக்கு வரவில்லை.”
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html) 'கொள்கைப் பிணம்' தின்னும் கழுகுகளும்,'கொள்கைப் பிணங்களும்' செல்வாக்கு செலுத்தும் சமூகத்தில், தமிழர்கள் அகத்தில்  சீரழிந்து, அதனால் தமிழ்நாடு புறத்தில் சீரழிவதில் வியப்புண்டோ? தமிழர்கள் அகத்தில்  சீரழிந்து, 'சுமரியாதை, மானம், அறிவு' இழந்து, 'பணம்' ஈட்ட, 'மனித நாய்களாகவும், காக்கைகளாகவும்' தமிழ்நாட்டில் 'தமிழர்கள்' அதிகரித்து வரும் போக்கிற்கான காரணங்களை தேடி, 'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக' மாறி வருவதை, சரி செய்வதில், ஆர்வமின்றி, 'சாதி ஒழிப்பு, மனித உரிமை' என்ற வட்டங்களுக்குள்   செயல்படுவது, தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளவா? அல்லது ஊரை ஏமாற்றவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

‘பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. 

எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, (மேலே குறிப்பிட்டவாறு)  2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html) (பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிப்பு கீழே)

‘திராவிடர் இயக்க வரலாற்றில் அறிவுபூர்வ போக்குகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் செல்வாக்குடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையை எப்போது, எப்படி அடைந்தது? தமிழ்நாட்டு சமூக அமைப்புகளின் (குடும்பம், கட்சி, etc  ) செயல்பட்டுக்கான சமூக ரத்த ஓட்டத்தில் (மனித உறவுகளில் லாப நட்டம் பார்க்கும்) 'கள்வர் பண்பு' ( திருக்குறள் 813  ) எப்போது, எப்படி நுழைந்து கெடுத்தது? என்பது போன்ற கேள்விகளைத் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய வேண்டிய கட்டத்தில் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்பு நோக்கிய முயற்சிகள் இருக்கின்றன.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html) சிற்றின மனிதர்கள் சமூகக் கேடான தீயினமாக வளர்ந்ததற்கான, 'பொது மூலதனமாக' பெரியார் சிக்கி விட்டதை, திருச்சி பெரியார் மையம் மூலம் நான் கண்டுபிடித்ததையும்(discovery) ,  முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

பெரியார் ஈ.வெ.ராவைத் தெரிந்து கொள்ளாமல், தமிழில் சரியாக படிக்கத் தெரியாமல், இன்றைய மாணவர்கள், 'தமது கல்வி, தாம் பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital devices), வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில்  'லேடஸ்ட்'(latest)  தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது. ‘மீடியா’க்களில் செல்வாக்குடன் வலம் வரும் ஆதாயத்தொண்டர்களும், கட்சித் தலைவர்களும், இது போன்ற மாணவர்களும், தமிழ்நாட்டிலேயே தனி தனித் தீவுகளில் வாழ்கிறார்கள்.' என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html) 'கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, ஜெயலலிதாவிற்குள்ள அதீதமான செல்வாக்கிற்கும், அதுவே காரணமா?' என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம். இளைய சமூகத்தின் பார்வையிலிருந்து, பெரியார் 'சருகாகி உதிரும்' போக்கு உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

'தமிழ், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இருந்ததை 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை 65) ( முந்தையப் பதிவில் விளக்கியுள்ளவாறு) என்ற செயல்நுட்பத்திற்கு உட்படுத்தாமல், அவற்றைத் தமிழர்க்குக் கேடானவையாகக் கருதி, உருவாக்கிய கொள்கைகள் வழியில் பெரியார் பயணித்தார். அதாவது ஒரு சமூகத்தின் ஆணி வேரையே நோயாகக் கருதி அவர் பயணித்ததால், அவரது இயக்கத்திற்கான சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களிலிருந்து அவர் அந்நியமானார். எனவே ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக ஆற்றலில் இயக்கம் பயணித்து , வலுவிழக்க நேரிட்டது. மிகுந்த தியாகங்களுடன் தோன்றி வளர்ந்த அவரது இயக்கம் சந்தித்த இந்த முரண்பாடுகள் காரணமாகவே, 'குறுக்கு வழி செல்வம் சேர்க்கும்' நோயாளிகள் பொது வாழ்வில் 'அதி வேகமாக' வளர்ந்து,
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html),  விமர்சனப் பார்வையற்ற உணர்ச்சிபூர்வ 'தமிழுணர்வாளர்கள்' அவர்களிடம் சிக்கியதால்,  பெரியாரையும் மீறி, தமிழையும், தமிழர்களிடம் இருந்த பண்பாடுகளையும் சீரழித்து, தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க அம்முரண்பாடுகள் வழி வகுத்ததா? அந்த நோயில் தமிழ்நாட்டில் கணிசமானோர் சிக்கியதால், அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தமிழ்நாட்டில் வளர வழி வகுத்ததா? என்பது போன்ற கேள்விகளை ஆராயாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பித்து மீள முடியுமா?' 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html)

தமிழர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகிய சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களானது, ஆங்கிலவழிக்கல்வி மூலம், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அந்நியப்பட்டு, வண்டு போகும் ஆபத்தில் சிக்கியுள்ளது.  அதிலிருந்து மீள தவறினால், தமிழ்நாட்டில் தமிழர்கள் எல்லாம், தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக, அறிவு புலத்திலும், உடல் உழைப்பிலும் பின்தங்கி, பெரும்பாலோர் 'தரகர்களாகவும்', 'திருடர்களாகவும்' பிழைப்பதில் முடியும் ஆபத்து, தவிர்க்கமுடியாதாகி விடும். எனவே, கடைசி ‘பெரியார் மீட்பு முயற்சி’யாக, 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை' விட்டு விலகி, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் பெரியாரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படுத்தி மறு ஆய்வு செய்து, உரிய திருத்தங்களை பகிரங்கமாக அறிவித்து பயணிப்பதே ஒரே வழியாகும். தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான மறு ஆய்வையும் உரிய திருத்தங்களையும் தாமதப்படுத்துவது என்பது, பெரியாரின் வரலாற்று மரணத்தை வேகப்படுத்துவதாகிவிடும்.
                                               --------------------------------

பெரியாரின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிப்பு :

“ இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்.‍‍‍‍‍‍...........மனித சமூக வளர்ச்சிக்கு இரு பாலார் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது." 'பெண் ஏன் அடிமையானாள்?' பக்கம் 23 - 24

பெரியார் மேலே எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகளில் சில கீழே உள்ளன. 

How Men's Brains Are Wired Differently than Women's?
male brains had more connections within hemispheres, whereas female brains were more connected between hemispheres;
male brains may be optimized for motor skills, and female brains may be optimized for combining analytical and intuitive thinking;

Data from this study and previous research supports the notion that males and females rely on different brain networks to perform the same function, with the implications must notable in the academic realm. Halpern and colleagues (2007) suggest that we can use this knowledge to teach female and male students ways to solve problems that correspond to their most efficient cognitive process (i.e. verbal versus visuospatial solution strategies) to allow more flexibility in their problem solving and positively impact performance overall.’ (‘Gender differences in working memory networks: A BrainMap


தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். இன்றும் ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தியாவில் ஊதியத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இன்றும் அந்த பிரச்சினை எவ்வாறு உள்ளது? என்று ஆய்வதும் பலனளிக்கும். 

செவிலியர் (nursing)  பணியில் பெண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, ஆண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகளில் ஆண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, பெண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; என்பது என் கருத்து.