Thursday, June 4, 2015


உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்; திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்(2)

 

'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் (morons) யார்?யார்?



தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அரசியல் நீக்கத்திற்குள்ளாகி(depoliticize) , சமூக, அரசியல் வெற்றிடம் வளர்ந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

'பெரியார்' கட்சிகள் அந்த வெற்றிடத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால்,பெரியாரின் கொள்கைகளிலும், நிலைப்பாடுகளிலும், உலக அரங்கில் வெளிப்பட்டுவரும் ஆய்வுகளைக் கணக்கில் கொண்டு, குறிப்பாக, தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான மறு ஆய்வையும், உரிய திருத்தங்களையும், மேற்கொள்ள வேண்டும். தவ‌றினால்,பெரியாரின் வரலாற்று மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

“ 'இந்துத்வா' அரங்கில் உணர்ச்சி பூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி 'பெரியார்' ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், 

ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/

மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.


மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, 'பெரியார்' இயக்க ஏடுகளில் ஏதேனும் வெளிவந்திருந்தால், அதை எனது பார்வைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் அவற்றை திறந்த மனதுடன் படித்து, எனது கருத்துக்களை நெறிப்படுத்திக் கொள்ள அவை உதவும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இந்துத்வா எதிர்ப்பாளர்களின் 'அறிவுஜீவிகளாக' உலக அளவில் வலம் வரும்  வெண்டி டோனிகர் (Wendy Doniger), ஷெல்டன் பொல்லாக்(Sheldon Pollock)  போன்றோரின் நூல்களை தடை செய்வதை ஆதரிக்காமல், அறிவுபூர்வ விவாதத்தில் இந்துத்வா எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு, அந்த அறிவுஜீவிகளின் 'அறிவுக் குறைபாடுகள்' அம்பலமாகத் தொடங்கியுள்ளன. உலக அளவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ராஜிவ் மல்கோத்ரா ஆவார். தனதளவில் கடும் முயற்சியின் மூலம் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டவர்களே அப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திவருகிறார்.

“ Before public campaigns, start with oneself. Decolonize your own self. This involves a lot of study, introspection and changing. Second go to those in your circle in small settings, to test and learn. Dont try to overnight become a public teacher - bypassing the years of tapas required.” - Rajiv Malhotra” என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சமூக, அரசியல் வெற்றிடம் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக வரவிரும்பும் பா.ஜ.க(BJP)  தலைவர்களில் சிலருக்கு  , தமிழ்நாட்டு அரசியலின் வரலாறு, பாரம்பரியம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல், 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' என்ற வகையில் , தமிழக பா.ஜ.க பயணிக்கிறதா"  என்ற கேள்வியை கீழ்வரும் பகுதி எழுப்புகிறது.

" முதலில் ஈ.வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் ஈ.வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா ஈ.வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று ஈ.வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும். ( http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html ) 
 
காங்கிரஸ் கட்சி துவங்கியது முதல் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது." என்ற நோக்கத்தில்,  'இராஜ விசுவாசம்' முதல் தீர்மானமாக, எத்தனை வருடங்களாக நிறைவேற்றப்பட்டது? காங்கிரஸ் தலைவர்களில் யார் யார் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது." என்று சொல்லியவர்கள்?

ஆக எச்.ராஜாவின் அளவுகோலின்படி,"ஈ.வே.ரா, அண்ணாதுரை" மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள், ராஜாஜி, இந்து மகா சபா தலைவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலில் உள்ளவர்களையெல்லாம் இந்தியாவை விட்டு " சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." என்பது தொடர்பான சான்றுகளை மேற்குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.

உலக அரங்கில் என்னென்ன ஆய்வுகள் நடைபெற்று,  என்னென்ன முடிவுகள் வெளியாகி வருகின்றன? என்பது பற்றிய கவலையின்றி; அறிவுபூர்வ விவாதங்களே எதிர் எதிர் முகாம்களில் மதிக்கப்படுகின்றன, என்பது தெரியாமல்; உணர்ச்சிபூர்வ பேச்சுக்களும், எழுத்துக்களும், குறிப்பாக தனிநபர்களை, அதிலும் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை இழிவுபடுத்துவது 'அநாகரிகமாக' கருதப்படுகின்றன என்ற தெளிவின்றி; உணர்ச்சிபூர்வ போதைத் தொண்டர்களின் பாராட்டை பெரிதாக,  மதித்து  வாழும் உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில் திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும் பயணிப்பதை ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

தடை என்ற போக்கை ஆதரிக்காமல், இந்துத்வா எதிர்ப்பாளர்களை 'அறிவுபூர்வமான' விவாதம் மூலம் எதிர்த்துவரும் , அமெரிக்காவில் வாழும், ராஜிவ் மல்கோத்ராவின் கீழ்வரும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

“ எனது ஆய்வுகளை, நமது ஆதரவாளர்கள் படித்து,விளங்கி,விவாதித்து, எதிர்வினையாற்ற வைப்பது என்பது எனக்குள்ள மிகப்பெரும் சவாலாகும்.அவர்களில் 99% உணர்ச்சிபூர்வ‌ மடையர்களாக‌ இருப்பார்கள் என கருதுகிறேன். ஒரு மூடனான பின்பற்றுபவரை விட, புத்திசாலி எதிரி மதிக்கத்தக்கவராவார்.” 

" My biggest challenge will be getting our own folks to read, understand, discuss, respond. I expect 99% will be morons, but brag emotionally. AN INTELLIGENT OPPONENT IS MORE WORTHY THAN A STUPID FOLLOWER." - RajivMalhotraDiscussion] My next book (on the battle between Sanskrit tradition and Western scholars)

மேற்குறிப்பிட்ட இணைய விவாதக்குழுவில் நான் இடம் பெற்றுள்ளதால், அதில் பலர் ஆழமான புலமையுடன் அறிவுபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதை நான் அறிவேன். அவ்விவாதத்தில் கர்நாடக இசையை மிகவும் உயர்த்தி கருத்து வெளிவந்த போது, எனது ஆய்வுகளின் அடிப்படையில் கர்நாடக இசையில் உள்ள சுருதிக் குழப்பங்கள் பற்றி பதிவு செய்தேன். (‘இந்திய செவ்விசையில் சுருதிச் சிக்கல்கள்; (Pitch Problems in Indian Classical Music)’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) 

என் மீது எவரும் கோப்பப்படாமல், அது அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. எனவே இந்துத்வா ஆதரவாளர்களில் 99% உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் என்று ராஜிவ் மல்கோத்ரா கருத்து தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பது என் கருத்து. அவரது கருத்துக்காக இந்துத்வா வட்டாரங்களில் எவரும் அவர் மீது கோபப்படவில்லை.

அதே போல், 'ச,ரி,க,ம,ப,த,நி' எனும் 7 சுரஎழுத்துக்கள் பற்றிய தொன்மை சான்று தமிழில் இருப்பதை வெளிப்படுத்திய எனது ஆய்வுக்கட்டுரையானது சமஸ்கிருத ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது. (“During ancient times Sanskrit and Tamil had mutually beneficial complimentary interactions. The great works of Buddhist and Jain scholars in the form of epics like ‘perungkathai’ (having more musicological details on string instruments than chilappathikAram) and grammar works like ‘cEnhthan thivAkaram’ (with valuable musicology details including the earliest reference –Sanskrit references seem to be later- for the seven music LETTERS sa, ri, ga, ma, pa, dha, & ni) might be the results of such healthy interactions.”-P149, ‘ tholkAppiam and the use of Sanskrit words in Tamil’; The Journal of Sanskrit Academy- Vol XX- 2010)

ஆனால் 'பெரியார்' ஆதரவாளர்களில் 99% உணர்ச்சிபூர்வ‌ மூடர்களா? இல்லையா? என்ற கேள்வியை நான் எழுப்ப இடம் இருக்கிறது, என்பதற்கான, சிறு விளக்கத்தைப் பார்ப்போம்.

“அறிவுபூர்வ விவாதத்தைத் தொடங்க, நான் எழுதிய கட்டுரையானது, 'கறுப்பு, வெள்ளை (அல்லது  சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில், 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2006 வெளிவந்தது. ( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )  இன்று வரை எந்த 'பெரியார்' கொள்கையாளரிடமிருந்து அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த கருத்தும் எனக்கு வரவில்லை.”(http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html ) 'கொள்கைப் பிணம்' தின்னும் கழுகுகளும்,'கொள்கைப் பிணங்களும்' செல்வாக்கு செலுத்தும் சமூகத்தில், தமிழர்கள் அகத்தில்  சீரழிந்து, அதனால் தமிழ்நாடு புறத்தில் சீரழிவதில் வியப்புண்டோ?” என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

"திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

எனவே தமிழ்நாட்டில் 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும்,  உணர்ச்சிபூர்வ மூடர்கள் (morons)  இருந்தால், வியப்பில்லை. எத்தனை சதவீதம்? என்பதில் வேண்டுமானால், கருத்து வேறுபாடு இருக்கலாம். அத்தகையோரை ஓரங்கட்டி, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், பயணிப்பவர்களே தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் சமூக, அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் போகிறவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது. அதுவரை தமிழ்நாட்டின் அரசியல் அடிப்படையில், ‘அனிமேசன் வீடியோ’ (animation video) நகைச்சுவைக் காட்சிகள் மாணவர்களின் 'ஸ்மார்ட் ஃபோன்களில்' (Smart phones),  அதிவேகமாக, அரங்கேறி வருவதை எவரும் தடுக்கமுடியாது. அவற்றில் வெளிப்படும் தொழில்நுட்ப, படைப்பாற்றல்  திறமைகள் ( technical & creative skills) எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கான அறிகுறிகளேயாகும்.

குறிப்பு:
'இந்தியர்' என்ற அடையாளமானது, நதிநீர் பிரச்சினைகள் மூலம் பலகீனமாகி வருகிறதா? கூடுதலாக, தமிழ்நாட்டில், 'தமிழர், திராவிடர்' அடையாளக் குழப்பங்கள் மூலம்,  அரசியல் நீக்கமும்(Depoliticize),  அதன் தொடர் விளைவாய் ஊழல் அரசியலும் ஏற்பட்டுள்ளதா?   'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு இக்கேள்விகளைப் புறக்கணித்து,பயணிக்க முடியுமா? எவரும் சமூக, அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?

No comments:

Post a Comment