Monday, June 8, 2015



தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (1) 


வீரசவர்க்கார் எழுதிய 'எரிமலை' -'The Indian War of Independence' - நூலில் 1857 இல் வடநாட்டில் இருந்த முஸ்லீம் அரசர்களும் இந்து அரசர்களும் சேர்ந்து, வெள்ளையரை எதிர்த்தது பற்றிய சான்றுகள் உள்ளன. அது வரலாற்றில்  ‘முதலாம் இந்திய‌ விடுதலைப் போர்’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளைக்காரர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். இந்தியா பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும்; தமிழ்நாடும் பல மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும்; என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. அப்போது இந்திய மக்களிடம் 'இந்தியர்' என்ற, இன்றுள்ளது போன்ற, ஒரே தேசத்திற்கான‌, அடையாளத்திற்கான (Identity), அரசியல் தேவைக்கு வாய்ப்பு கிடையாது. 'ஐரோப்பியர்' போன்ற, பொது பாரம்பரிய, வரலாறு அடிப்படைகளில், 'இந்தியர்' என்ற அடையாளமானது, மேற்கத்திய சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க, ஒரு வரலாற்று தேவையாக, உருவாகி வளர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது.

அது தோல்வியானதன் விளைவாய், காலனிய ஆட்சியில் சிக்கி, அதன்பின் 1947இல்  இந்தியா விடுதலையானது. ஒரே தேசத்திற்கான, அடையாளமாக 'இந்தியர்' என்ற அடையாளமானது, அரசியல் அடிப்படையில் முன்னுரிமை பெற்று, அரசு ஆதரவுடன் பயணித்தாலும், மாநிலங்களுக்கிடையிலான‌ நதிநீர் பிரச்சினைகளில், அது கேள்விக்குறியாக வெளிப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் அரசரின் ஆட்சியில், தமிழ்நாட்டுடன் இருந்த கச்சத்தீவை, இந்திய விடுதலைக்குப்பின், அதிலும் 1970களில்,  மத்திய அரசு, இலங்கைக்கு 'தானமாக்கி' விட்டு, இன்று, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக, மத்தியில் ஆண்ட, ஆளும் அரசுகள் குற்றம் சுமத்துகின்றன. இது தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளத்தை, எந்த அளவுக்கு பலகீனமாக்கி வருகிறது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“ ஒரு நாட்டின் அரசு அமைப்பை புறவிசைகள் (external forces) மூலம் காவல்துறை, நிர்வாகத்துறை, வரிவசூல் போன்றவற்றை உருவாக்கிடலாம்.ஆனால் தேசக் கட்டுமானம்(nation-building)  என்பது அந்த தேசத்து மக்கள் விரும்பி ஏற்கும் தேச அடையாளத்தை(national identity,)  உள்ளடக்கியதாகும். தங்களின் மொழி, பண்பாடு, வரலாறு போன்றவற்றின் மூலம் திணிக்கப்படாமல் மக்களை ஒன்றிணைத்து உருவாவதே தேச அடையாளம் ஆகும்.”  இது ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா-Francis Fukuyama - என்ற உலகப்புகழ் பெற்ற நிகழ்கால சிந்தனையாளரின் கருத்தாகும்.

( external forces can erect the skeleton of state in an embattled country, creating police forces, administrative structures, and taxing authorities. But nation-building goes further and involves a shared sense of national identity, built on elements that tie people together — such as shared culture, language, and history — that cannot be imposed from without.)

பல மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்திய சூழலில்,  'தங்களின் மொழி, பண்பாடு, வரலாறு போன்றவற்றின் மூலம் திணிக்கப்படாமல், மக்களை ஒன்றிணைத்து',  'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகாமல், மேற்கத்திய சூழ்ச்சியில் சிதைக்கப்பட்டு வருவதையும், இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு தேவைப்படும் 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ் (Grand Narrative)  ஆனது, மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி இருப்பதையும்,  இந்துத்வா ஆதரவு அறிஞர் ராஜிவ் மல்கோத்ரா கீழ்வரும் வரிகளில் விளக்கியுள்ளார்.(bold mine)

“every country needs its own narrative, a narrative rooted in its tradition and story; without this narrative, its agenda could be appropriated by more powerful countries, and the country is more likely to fail. India needs such a narrative. The problem, he argued, is that currently the Indian narrative belongs to the West – it is where the best quality education is for South Asian Studies, where an intellectual has to publish papers and attend conferences to be someone in their field. It is with an identity created for it by the West that India presents itself to the world.” http://logos.nationalinterest.in/2014/10/the-indian-grand-narrative/ 

மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து, 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ்' மீட்கப்படவில்லையெனில், இந்தியா, சோவியத் நாடு போல பிளவுபடும் ஆபத்தும் இருக்கிறது.
Beyond the Chinese fantasy: Will India Disintegrate? Bhartendu Kumar Singh
Indian Defence Accounts Service
http://www.ipcs.org/article/india-the-world/beyond-the-chinese-fantasy-will-india-disintegrate-2957.html
Will India ever split? If so, under what circumstances?
http://www.quora.com/Will-India-ever-split-If-so-under-what-circumstances
அவ்வாறு அந்நிய‌ சூழ்ச்சியில் பிளவுபடும் இந்தியாவில், அடையாளச் சிதைவுடன், அரசியல் நீக்கத்திற்குள்ளான தமிழ்நாடானது, எளிதில், தமது குடும்ப பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் படிக்க வைத்த/வைக்கும், சுயநல, 'தமிழ்வேர்க்கொல்லி' ஆட்சியாளர்களின் பிடியில், அந்நிய‌ சுயநலன்களுக்காக, ஆப்பிரிக்க நாடுகளை போல சீரழியும்.


ராஜிவ் மல்கோத்ராவின் ‘Breaking India’  (http://www.breakingindia.com/)  என்ற புத்தகமானது, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்திலும் தமிழ்நாட்டில் 'தமிழர்', 'திராவிடர்' என்ற அடையாளங்களின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை தமிழ்நாட்டில் பலகீனமாக்கி, விடுதலைக்குப் பின் நடந்த முதல் 1952 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாத விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பம்(Social Mechanism)  போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கருதுகிறேன். அதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன்.அந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேரவிடாமல் தடுத்துவரும், தமிழ்நாட்டு இந்துத்வா கட்சிகளில் எச்.ராஜா போன்றவர்கள் ஆற்றி வரும் 'இந்தியா உடைக்கும்- ' Breaking India’- 'சேவை பற்றி விளங்கிக் கொள்ள, அந்த நூல் துணை புரியுமா? என்ற ஆய்விற்காகவும் மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன். 


ராஜிவ் மல்கோத்ரா போன்ற அறிஞர்களுக்கு, தமிழ்நாட்டில், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பகையாகக் கருதி,'தமிழர், திராவிடர்' என்ற அடையாளங்கள் எந்த அளவுக்கு வலுவாக, 1947 வரை வளர்ந்து வந்தன? என்பது பற்றிய தகவல்கள் தெரியாதிருந்தால், வியப்பில்லை.

"இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் 1952 பொது தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் பெரும்பான்மையின்றி தோற்றது. கம்யூனிஸ்டுகளின் அதரவுடன் முத்துராமலிங்கத்தேவர் ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பைக் கெடுத்து, ராஜாஜியின் பங்களிப்பால்,  'கட்சித்தாவல்' (Defection) தமிழ்நாட்டில் அறிமுகமாகி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது, (http://thevartrust.blogspot.in/2010/12/history-of-pasumpon-muthuramalinga.html) பின் காமராஜர் எதிர்ப்பு அரசியலில் தி.மு.கவை ஆதரித்து, 1967 பொதுத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க கைப்பற்ற உதவியது, 1969இல் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக உதவியது, போன்றவற்றால், தமிழ்நாட்டில் தமிழர்களின் அடையாளச் சிதைவு, அதன் தொடர்விளைவான அரசியல் நீக்கம் (depoliticize)  ஆகிய‌ சீரழிவில், ராஜாஜியின் பங்களிப்பும், விருப்பு வெறுப்பற்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

பெரியாரின் 'திராவிட நாடு பிரிவினை'யை ராஜாஜி ஆதரித்து, 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் பலகீனமாக பங்களிப்பு வழங்கியுள்ளார். இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே, 'தமிழர், திராவிடர், இந்தியர்' குழப்பங்களால், அடையாளச்சிதைவுக்கு உள்ளானார்கள். அதனால், 1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்த போக்குகள், 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை சீரழித்து, கேலிப்பொருளாக்கியது போலவே, 'தனித் தமிழ் ஈழ' முயற்சிகள் முள்ளிவாய்க்கால் மரணத்தில் முடிய காரணமா? இந்த போக்குகள் தமிழ்நாட்டு தமிழர்களை (depoliticize) அரசியல் நீக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா?" என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

தேசக் கட்டுமானம் (nation-building) என்ற செயல்முறையில் (process) தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவை,  அந்த கட்டுமானத்திற்கான சமூக இழைகள் (social fibers), மற்றும் சமூக பிணைப்புகளின் (social bonds) மூலங்களாகும். பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கு இருந்த, கல்வி தொடர்பான வரைஎல்லைகள் (limitations)  காரணமாக, அவர் தமிழ், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, தமிழர்க்கு கேடாகக் கருதியதை ஏற்கனவே பார்த்தோம்.

ஒரு தேசத்தில் “ அங்கம் வகிக்கும் மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,/  சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம்  மனிதரின் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன என்பது (ON GROWTH AND FORM BY D'ARCY WENTWORTH THOMPSON ) இந்நூலைப் படிக்கையில் எனக்கு தெளிவானது. 

'முற்போக்கு', 'புரட்சி' என்று உணர்வுமயமாக அவற்றை சிதைத்தால், சமூகம் எவ்வளவு ஆபத்தான அழிவுப் பாதையில் பயணிக்கும் என்பதும் எனக்கு தெளிவானது…… சட்டத்தை ஏமாற்றி, குறுக்கு வழிகளில் (மனித நாய்களாகவும், காக்கைகளாகவும், 'வாழ்வியல் புத்திசாலிகளாக')  செல்வம் செல்வாக்கு சம்பாதிப்பவர்களை, 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது,  தமிழர்களின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும்.அது தமிழ்நாட்டில் வாழும்  தமிழர்களுக்கு இடையில் உள்ள,  தொடர்புகளாகிய‌ சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813),  உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.” (‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html  )
அடையாளச் சிதைவும், அதன் தொடர்விளைவான அரசியல் நீக்கமும், மனித உறவுகளில் 'சுயநலக் கள்வர்' நோயைத் தூண்டி, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட சமூக ஆணிவேர்களையும், ஊழல் மூலம் இயற்கை கனிவளங்களையும் எந்த அளவுக்கு சீரழிக்கும்,  என்ற ஆய்விற்கான, சோதனைக்களமாக தமிழ்நாடு மாறிவிட்டது. (உயிர் தொடர்பான அமைப்புகள் பற்றிய, Biology, Maths, Physics, Chemistry உள்ளிட்ட அறிவியல் விதிகள் அடிப்படையிலான, ‌ ‘ON GROWTH AND FORM’ - BY D'ARCY WENTWORTH THOMPSON- என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, சமுக அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் வடிவம் (form)  பற்றிய எனது ஆய்வே, உலக அளவில் முதலாவது என்று கருதுகிறேன். அது உண்மையெனில், தமிழில் உள்ள எனது பதிவுகளே அந்த துறைக்கு மூலமாகும்.)

இந்தியாவில் உள்ள மொழிகள், பாரம்பரியம்,பண்பாடு, வரலாறு போன்றவற்றில் மேற்கத்திய சூழ்ச்சியின் மன அடிமைகளாக, காலனிய மனநோயாளிகளாக, பெரியாரும்,கம்யூனிஸ்டுகளும் தமிழ்நாட்டில் பயணித்தார்கள். அகில இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்துத்வா உள்ளிட்ட கட்சிகள் எல்லாம்  மையப்படுத்தப்பட்ட(centralized) , செங்குத்து தர‌ஏணி வரிசையிலான (vertical hierarchy)  கட்சி அமைப்புகளுடன்(party structures)  பயணித்தார்கள். அது மேற்கத்திய கிறித்துவ மாதிரி அமைப்பாகும். அசோகர், ராஜராஜசோழன் போன்ற 'சாம்ராஜ்யங்கள்' உச்சக்கட்ட வளர்ச்சிநிலையில் இருந்த காலத்திலும், இந்தியாவில் கிராம அளவிலான சுயாட்சி(autonomous) , கிடைத்தள(horizontal)  அமைப்புகளே,  அந்த ஆட்சிகளின் 'அஸ்திவாரமாக'(base)  அமைந்தன; பாரம்பரியம்,உணவு முறை உள்ளிட்ட பண்பாடு போன்றவற்றில் சட்டபூர்வ அரசு தலையீடு ஏதுமின்றி.

எனவே அரசியல் கட்சிகளில், 'ஜனநாயகம்' என்ற பெயரில் தனிநபர் ஆதிக்கங்களுக்கு, அது இடமளித்தது. வாக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் தலைவரான சுபாஸ் சந்திர போஸ், காந்தியின் தனிநபர் ஆதிக்கத்தில் தாக்கு பிடிக்க முடியாமல், ஜெர்மன் உளவாளிகள் துணையுடன் இந்தியாவிலிருந்து தப்பித்து போக, அதுவே காரணமானது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் உளவாளிகளின் பிடியில், 'இந்திய விடுதலை' போராட்டம் சிக்கியதற்கும் அதுவே காரணமா? என்பதும் ஆய்விற்குறியதாகும். அத்தகைய ஆய்விற்குதவும், 'இரகசியம் நீக்கப்பட்ட' (declassified) தகவல்கள்,  வரும் காலத்தில் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)’ பற்றிய ஆய்வுக்கு, அது கூடுதல் துணையாக அமையும்.
(வளரும்)

No comments:

Post a Comment