Sunday, April 23, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும்,அரசியல் நீக்கமும் (depoliticize) (12)
சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? தமிழகத்தை ‘காவி மயமாக்க’(?) முடியாதா?   


அகத்தில் சுயலாப கணக்குடன் தான், எவரையும் ஆதரிப்பது/எதிர்ப்பது என்ற நோயின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் நமக்கு தெரிந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், நமக்கு மேற்குறிப்பிட்ட நோயில்லை, என்ற வகையில் புரிதல் உள்ளவர்களிடம் மட்டுமே, நாம் வெளிப்படையாக உரையாட முடியும்.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு.க கட்சிக்காரர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாடானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அதற்கான காரணத்தை, சில மாதங்களுக்கு முன் நான் சந்தித்த, தி.மு.க தலைவர் 'கலைஞர்' மு.கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் தெளிவு படுத்தினார் ( சற்று கோபத்துடனேயே).

ஆட்சியில் இருக்கும் போது, 'சம்பாதித்த'(?) பணத்தை, தி.மு.க காரன் தனக்கே வைத்துக் கொள்கிறான். ஆனால் அ.இ.அ.தி.மு.க காரனோ கிராமத்தில் மற்றவர்களுக்கும் உதவி, தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை அந்த கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணுகிறான்.' என்ற வகையில், அவர் தெளிவுபடுத்தினார். 

அது போலவே, பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) புறத்தில் 'கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு' என்று 'காட்சி' தந்து, அகத்தில் 'கடவுள் பக்தி', சாதி 'வெறி'யுடன் வாழ்பவர்களில், ஒப்பீட்டளவில் தி.மு.கவினர் அதிகமாகவும், அ.இ.அ.தி.மு.கவினர் குறைவாகவும் உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது 'திராவிட' அரசியலில், தமிழ்நாட்டில் இன்று உச்சத்தில் உள்ள அரசியல் நீக்கம் (Depoliticize) போக்கில், 'தனிநபர் விசுவாசம்' என்ற சமூக செயல்நுட்பமானது, மேல் மட்டத்திலிருந்து, கிராமம் வரையிலான கீழ் மட்டம் வரை, செயல்படும் போக்கில், வெளிப்பட்டுவரும் சமூக ஆற்றல்களில் (Social Energy)  தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'உள் குத்து' செயல்நுடபத்தில், இரண்டு கட்சிகளிலும் மேல் மட்டத்தில் உள்ளவர்களிடையே வேறுபாடு ஏதும் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேலே குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு, இந்திய தேசிய எதிர்ப்பு' போன்றவற்றுடன் 'அந்நியமாகி' பயணிப்பதில் அ.இ.அ.தி.மு.கவினர் முன்னிலையிலும், அவற்றை தமது 'சுயநல அரசியலுக்கு' பயன்படுத்தி, 'நீர்த்துப் போக' செய்ததில் தி.மு.கவினர் முன்னிலையிலும், உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

திருப்பு முனை கட்டத்தில் உள்ள தமிழ்நாட்டில், சமூக ஆற்றல்கள் தொடர்பான சரியான புரிதலே, அடுத்த கட்ட அரசியலை, கணிக்க உதவும். 'தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை தனது கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணி' வரும் நபர்களின் பலத்தில் இயங்கி வரும் அ.இ.அ.தி.மு.கவானது, ஒன்றாக வலுவுடன் பயணிக்கும் 'இணைப்பு' முயற்சி தோல்வியாகும் போது, என்ன ஆகும்? என்ற கேள்விக்கான விடையானது, அந்த கணிப்பிற்கு துணை புரியும். 1944இல் தி.க தொடங்கிய போது, தமிழ்நாட்டில் இருந்த ஆக்கபூர்வ/அழிவுபூர்வ சமுக ஆற்றல்கள் யாவை?; அவை எந்தெந்த மனிதர்களின் 'இயல்பை' பொறுத்து, அந்தந்த‌ மனிதர்கள் மூலம் வெளிப்பட்டன? 1949இல் தி.மு.க உருவானபோது முதல் இடத்தில் இருந்த அண்ணாவிற்கும், இன்று தி.மு.க தலைவராக இருக்கும் 'கலைஞர்' மு. கருணாநிதிக்கும், இடையில் 'தலைவர்கள் வரிசையில்' இருந்தவர்கள் யார்? யார்? எந்த 'சமூக செயல்நுட்பத்தின்' அடிப்படையில், அவர்களை எல்லாம் பின் தள்ளி, இன்று தி.மு.கவானது நேரு பாணி குடும்ப அரசியலில் சிக்கியது? அந்த  'சமூக செயல்நுட்பத்தின்' பிரதிநிதிகளாக இன்று அழிவுபூர்வ சமூக ஆற்றல்களின் பிரதிநிதிகளாக வலம் வருபவர்கள் யார்? அவர்களின் சுயலாப கணக்கில் சிக்கிய,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு' போன்ற முகமூடிகளை எவ்வாறு அகற்றி, அவர்களின் 'சுய உருவத்தை' மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, 1944க்கு முன் இருந்த, நேர்மையான சுயசம்பாத்திய திறமையும், ஆர்வமும் அற்ற‌, அத்தகையோருக்கான 'சிற்றினம்' என்று, அவர்களை ஓரங்கட்ட முடியும்? என்ற கேள்விகளும், மேற்குறிப்பிட்ட கணிப்பிற்கு துணை புரிபவை ஆகும்.
 (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.htmlபாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் இருந்த தடைகள் எல்லாம், 1944 முதல் பலகீனமான போக்கில்;


சிற்றின மனிதர்கள் எல்லாம், 'முற்போக்கு' முகமூடிகளுடன் சமூக வெளியில் (Social Space), அறிவிலும், பண்பிலும் உயர்ந்திருந்த மனிதர்களை எல்லாம், 'உணர்ச்சிபூர்வ' அச்சுறுத்தல்கள் மூலம் ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் 'ஆதிக்க சக்தியாக' வளர்ந்ததன் 'பலனை', இன்று தமிழும், 'நேர்மையான' தமிழர்களும், தமிழ்நாடும் 'அனுபவித்துக் கொண்டிருக்கிறதா'? என்பதும் ஆய்விற்குரியதாகும். மனசாட்சியுடன் வாழும் தமிழர்களை நோக்கி, 'தேரா தமிழா'? என்று கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் விட்டது. (http://tamilsdirection.blogspot.sg/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் தமிழ்நாட்டில் உள்ள சமூக ஆற்றல்களில் (Social Energy)  பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்கள் வருமாறு:

ஜெயலலிதாவின் 'மர்மமான' மரணத்திற்குப்பின், 'பொதுச்செயலாளரான'(?) சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களில் பெரும்பாலோர், சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.'ஜெயலலிதா சிறை சென்றபோது, அ.தி.மு.க தொண்டர்கள் தீக்குளித்தனர். சசிகலா சிறை சென்ற போது, பட்டாசு வெடித்தனர்' ( துக்ளக் 26.4.2017)

அ.தி.மு.க கட்சியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிப் போக்கு தொடர்பான, கீழ்வரும் தகவல்களும், தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையிலான சமூக ஆற்றல் தொடர்பான வேறுபாடுகளை புரிந்து கொள்ள துணை புரியும்.

1989‍இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க பிளவின் காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 1991 இல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன. தற்போது எந்த குடும்ப செல்வாக்கிலும் இல்லாதவராக தன்னை வெளிப்படுத்தியுள்ள ஜெயலலிதா அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவருக்கும் செல்வாக்கில்லை என்பதும் உண்மையே.ஒப்பீட்டளவில் தி.மு.க தலைவர்களை விட, ஜெயலலிதா தமிழர் என்ற அடையாளத்துக்கு இணக்கமாக ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் மீது பற்றுள்ளவர் என்பதும் உண்மையே.ஆட்சிக் கலைப்புக்குள்ளான சமயங்களில் பல தி.மு.க தலைவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் 'தனித் தமிழ்நாடு' கோரிக்கைகளை எழுப்பி, அக்கோரிக்கையை கேலிக்குள்ளாக்கினார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆங்கில வழியில் படித்து கல்லூரி மாணவர்களாயிருப்பவர்களிடையே, இத்தகையப் போக்குகள் 'தமிழ், தமிழுணர்வு' போன்ற‌வற்றையும் கேலிக்குள்ளாகியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

தி.மு.கவின் ஊழல் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடி, வலிமை பெற்று வந்த காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரசை' ஓரங்கட்டி, எம்.ஜி.ஆர் பயணித்த குடும்ப அரசியலுக்கு  எதிரான போக்கில், இன்று ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' விளைவித்த கோபமும் சேர்ந்து, அடுத்த கட்ட 'குடும்ப அரசியல் எதிர்ப்பு' போக்கானது, ஓ.பி.எஸ் தலைமையில் அரங்கேறி வருகிறதா? என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.

‘ 'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', 'திராவிடக்' கட்சி ஆட்சியில் அரங்கேறிய 'குடும்ப அரசியலுக்கு' எதிராக, 'புரட்சி' செய்து வெளியேறி, சாகும் வரை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கட்டத்திலிருந்து (phase);

'ஜானகி' மூலம் 'குடும்ப அரசியலுக்கு' புத்துயிர் கொடுக்க முனைந்த 'அமாவாசைகளை' வீழ்த்தி, முதல்வரான ஜெயலலிதா, 'சசிகலா' மூலம் புத்துயிர் பெற்று, தமிழ்நாட்டை அச்சுறுத்தி வந்த 'குடும்ப அரசியலுக்கு' எதிராக போரிட்டு, அதன் காரணமாகவே, 'மர்மமான' முறையில் மரணமடைந்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறை செல்ல, அக்குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்து, அடுத்து சிறை செல்ல வாய்ப்புள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கவில் 'அமாவாசைகளின் புரட்சியானது', ஒபிஎஸ் தலைமையில் அரங்கேறியுள்ளது. 
(http://tamilsdirection.blogspot.com/2017/02/digital-age-2017.html) என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

ஓ.பி.எஸ் அணியானது மோடியின் பின்னணி பலத்தில் செயல்படுவதாக, தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் மூலமாகவும், தமிழ்நாட்டில் 'சசிகலா குடும்ப அரசியலுக்கு'எதிராக கிளம்பியுள்ள சூறாவளியில் (சசிகலாவின் படத்தை தவிர்த்து, தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்த அளவுக்கு), தமிழக பா.ஜ.க-வும் பலன் பெற்று வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu;https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு. அதே வகை 'வித்தியாசமான அரசியலில்', பிரதமர் மோடியால் ஈர்க்கப்படும், 'திராவிட' கட்சிகளின் ஆதரவாளர்களை 'விரட்டும்' வகையில், தமிழக பா.ஜ.க தலைவர்களில் சிலர், பய‌ணித்து வருவதால்,மேலே குறிப்பிட்டுள்ள 'பலனுக்கும்', பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

1967க்குப் பின் முதல் முறையாக, தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் துணையின்றி, கடந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் ( தி.மு.க அணி முற்றிலும் தோற்க) பெற்ற வெற்றியிலிருந்து சறுக்கியதானது, அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.  

'தமிழை காட்டுமிராண்டி மொழி' என்றும், பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தமிழர்க்கு கேடானவை என்றும் தவறாக கருதிக் கொண்டு;

அறிவுபூர்வ அணுகுமுறையில் நாத்திகர்கள் ஊக்குவிக்க வேண்டிய மொழி சமஸ்கிருதம் என்பது தெரியாமலும்; {“Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language” ( Page 35, ‘Identity and Violence’ by Amartya Sen)}

‘எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவி மயமாக்க முடியாது’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ள கருத்தும் ஆய்விற்குரியதாகும். ( http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-attacks-bjp-at-party-public-meeting-280628.html'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' போக்கில் இந்துத்வா எதிர்ப்பு சக்திகள் பயணித்து வருவதற்கு துணையாக, பா.ஜ.கவிலும் சில தலைவர்கள் பயணித்து வருவதால், இது போன்ற கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

இது போன்ற முயற்சிகள் எல்லாம்;

'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' (தமிழ்நாட்டின் குடும்ப ஊழல் அரசியல் பாதுகாப்பிலும்?) ஒன்றாகி; 

பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும், பொது மக்களுக்கு ஊறு இன்றியும், ஆனால் அரசை அச்சுறுத்தும் 'பெரியார்' ஈ.வெ.ராவின் போராட்ட வடிவங்களை, 'பிரமிக்கும்' வகையில், சுயசம்பாத்தியமுள்ள இளைஞர்களும், மாணவர்களும், வளர்த்து, 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்' வெற்றி ஈட்டிய பின்னும், 'பந்த்' போன்ற மக்களிடமிருந்து 'அந்நியமாகும்', 'பிரம்மச்சாரி' இளைஞர்களின், பயணிகளின், தினக் கூலிகளின், கடையோர வியாபாரிகளின், 'கோபத்தை' சம்பாதிக்கும், போராட்டங்களுடன் பயணித்து;

கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாகியுள்ள‌, 'சசிகலா குடும்ப அரசியல்' பாதுகாப்பு முயற்சியில், சுவடின்றி அழியப் போகிறர்களா?

அல்லது சமூக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறர்களா?

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களிலிருந்து 'விடுதலை'யாகி, குழப்பமற்ற 'தமிழர்' அடையாளத்திற்கும் (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527 ), 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்க ஏதுவாக', 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பின் அடிப்படையில், தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
(http://tamilsdirection.blogspot.com/2017/02/depoliticize11-identity-rescueoperation.html


1967 ஆட்சி மாற்றத்தின் தொடர்விளைவாக, 1991 முதல் அரங்கேறிய 'திராவிட மஃபியா' வளர்ச்சிப் போக்கினை (துக்ளக் 3.5.2017 தலையங்கம்);

எதிர்க்காமலும், 'அனுசரித்தும்' பயணித்த தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பில், தமிழ் மொழியும் அந்த 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' போக்கில் சிக்கி, மரணப் பயணத்தில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.htmlசமூக ஆற்றல் செயல்பாடு என்ற சமூக இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், தமிழ்ச் சமூக இரத்தமே அந்த நோயில் பண்பு மாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ? அந்த நச்சு நோயின் விளைவாக திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்கி, ஆங்கிலத்தில் திரிந்த தமிழ் பேசும் நோயாளிகளாக தமிழர்கள் மாறுவதில் வியப்புண்டோ? தேனீக்கள் சுவடின்றி அழிந்தது போல, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் சுவடின்றி அழிவதில் வியப்புண்டோ? (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html) அவ்வாறு சுவடின்றி அழிவதற்கே, 'பெரியார்' ஈ.வெ.ரா அவதரித்தாரா? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )  முள்ளிவாய்க்கால் அழிவில், அந்த போக்கின் பங்களிப்பை, திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக விவாதித்து, பாடங்கள் கற்று பயணிக்க தாமதமாவதும், 'ஈழ' தமிழர்களை 'இன்னொரு பாலத்தீனியர்களாக', மாற்றி வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html & http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_26.htmlஇலங்கை மலையகத் தமிழரின் பிரச்சினையை இருட்டில் தள்ளி, தமிழ்நாட்டில் 'திராவிட ஆதாய அரசியல்’ சூழலில், 'வெளிச்சம்' போட்ட 'ஈழத் தமிழர்' பிரச்சினையானது, சாதாரண மக்களிடம் 'சாயம் வெளுத்துப் போனதன்' விளைவாகவே, முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணியானது, மகத்தான வெற்றி பெற்றதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நடுத்தர ஏழை மக்கள் மட்டத்தில் தொடங்கி, இன்று சசிகலாவை குவியமாகக் கொண்டு, 'சுனாமியாக' வளர்ந்துள்ள 'குடும்ப அரசியல் ஊழல் எதிர்ப்பு அலையை' உணர்ந்து, 'படித்த தமிழர்கள்' எல்லாம் அந்த அலையோடு, தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு'  நோக்கில், நெறிப்படுத்தும் வாய்ப்பினை தவற விட்டால், தமிழ் 'இன்னொரு பாலி' மொழியாகி (https://en.wikipedia.org/wiki/Pali );

தமிங்கிலீசர்கள் (பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும்) வாழும் நாடாக, தமிழ்நாடு சீரழியும் வாய்ப்பும், எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.(‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; 
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html


சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், சீரழிவுக்கான 'வித்துக்களை', திறந்த மனதுடன் தேடி அழிக்க தயங்கினால், மீட்சிக்கு வழியில்லை என்பதும், கவனிக்கத் தக்கதாகும்.

‘தமிழில் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை மேலேக் குறிப்பிட்ட மேற்கத்திய 'முற்போக்கு, மார்க்சிய' பார்வைகளில் அணுகிய முயற்சிகள் எல்லாம் குருடர்கள் தேடிய ஓவியங்களின் கதையானது.  அத்தகையப் பார்வையில் சிக்கியதாலேயே, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள், தமிழைக்  காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் (அதிலும் குறை கண்டு) தவிர்த்து, மற்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவை என்றும் முடிவு செய்தார்.  (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html ).
அகத்தில் உருவாகி, புறத்தில் வெளிப்படும் எந்த படைப்புகளையும், புறப்பார்வையின் மூலம் மட்டுமே விளங்கிக் கொள்ள முயற்சித்ததே 'மேற்கத்திய பகுத்தறிவு'ப் பார்வையின் குறைபாடாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

2-5-1925 இல் ஆரம்பித்து 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களால் வெளியிடப்பட்ட ‘குடி அரசு’ இதழைத் தொடங்கி வைத்தவர், தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிஎனும் ’ஞானியார் சுவாமிகள் ஆவார். அந்த முயற்சியானது, 1944இல் திசை திரும்பியதன் தொடர் விளைவாக, தமிழின், தமிழரின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு' முயற்சியில்,  தமிழ் சைவ ஆதரவாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளது உள்ளிட்டு, எனது பதிவுகள் தொடர்பான அறிவுபூர்வ மறுப்பை, நான் வரவேற்கிறேன். 


குறிப்பு:

ஊடக வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் பல நல்ல காரியங்கள் நடந்து வருவதை நான் அறிவேன். ஆனால் என்னை பிரமிக்க வைத்த, கீழ்வரும் 'சாதனை'யானது, தமிழ்நாட்டின் மீட்சியில், எனது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

‘இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.’ (https://www.facebook.com/Sreepriya.Iyer/posts/10154818460822885

தமிழ்நாட்டில் அவ்வாறு மண்ணுக்குள் ஏரிகள் எப்போது முதல், ஏன் புதைந்தன? அதற்கான காரணகர்த்தாக்களை, 'புரவலராக' கொண்டு  செயல்பட்ட தமிழ்/திராவிட கட்சிகள் யார்?யார்?

Tuesday, April 11, 2017

ஜெயலலிதாவின் ‘மர்ம‌’ மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும்;


தமிழ்நாட்டின்  ‘சமூக அதிர்ச்சி வைத்தியமா’ ?


சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.


(1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்’ குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.)

மேலே குறிப்பிட்ட நகைச்சுவை காட்சிகளில், ஒரு சிறிய மாற்றம் கற்பனை செய்தால், அது நிகழ்கால அரசியலுக்கு பொருத்தமாக இருக்க வாய்ப்புண்டு.

சத்யராஜுக்குப் பதிலாக இன்னொரு எடுபிடியை தேர்தலில் மணிவண்ணன் நிறுத்தி, வெற்றி பெற்ற 'எடுபிடிக்கு',  சத்யராஜ் அதே 'அமாவாசையாக' எடுபிடியாகி, மணிவண்ணனுடன் 'நெருக்கமாக இருந்த பெண்ணை',  அந்த வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கு நெருக்கமாகுமாறு தூண்டி, மணிவண்ணனை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும்?

ஜெயலலிதாவுக்கு இருந்த 'மேல்மட்ட' ஆதரவாளர்களில் ஏறத்தாழ அனைவருமே, 'அமாவாசைகள்' என்பதை,  ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் மூலம்,  சசிகலா வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.

‘இன்றைக்கு அ.இ.அதி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்'   ஜெயலலிதா துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும், 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;

ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட சதிகாரர்கள் ஜெயலலிதா சிசிச்சை பெற்ற அப்பொல்லோ மருத்துவமனைக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்; ஆளுநரையே தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றும் வகையில் முயன்ற போது, பார்க்க கூட அனுமதிக்காத நிலையில் ?

சசிகலாவை சந்தித்து அனுதாபமும், ஆதரவும் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களில் எவராவது மேற்குறிப்பிட்டது தொடர்பாக, விளக்கம் கேட்டார்களா? அவ்வாறு விளக்கம் கேட்காமல் இருந்தால், அவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நீடிப்பதானது, தமிழ்நாட்டிற்கு கேடாகாதா?

என்று 'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத சாதாரண பொதுமக்கள் 'கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்'.’ ( ‘1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே; 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா? ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?’ ; http://tamilsdirection.blogspot.in/2017/01/1948.html )

தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்', அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.htmlஉலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்க‌ளையும், தியாகங்களையும், தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர் கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால் நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும், அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல‌ தலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்த‌ கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கீழ்வரும் சமூக செயல் நுட்பத்தின் 'வித்தியாசமான' தொடர்ச்சியாக, 'திருச்சி பெரியார் மையம்' பின்பலத்தில்,  சசிகலாவின் 'பெரியார் அமாவாசைகளாக' பயணித்து வந்த, 'பெரியார் சமூக கிருமி'களுக்கும், அக்கிருமிகளின் எடுபிடிகளுக்கும், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்தானது, தமது 'வளமான புது வாழ்வின்' வருங்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html )

உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு, ஈ.வெ.ரா அவர்களின் கொள்கைகளை', ஈ.வெ.ரா வலியுறுத்திய‌ 'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், 'பெரியார் சிறையில்' பயணித்த போக்குகளே, ஈ.வெ.ரா வாழ்ந்த காலத்தில் இல்லாத, 'பெரியார் அமாவாசைகள்' எல்லாம், 'துணிச்சலுடன் வெளிப்பட' காரணமா? என்ற கேள்வியை எழுப்பி, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழிவகுத்து, வரலாற்றில் 'இடம்'(?) பெற்று விட்டார்கள். 'சமூக ஒப்பீடு தொத்து நோயில்'(Social Comparison Infection) சிக்கி, 'பாதுகாப்பின்மை'க்குள்ளாகி (insecurity) பயணிக்கும் 'திராவிட மனநோயாளியாக' வாழும் போக்கின் உச்சக்கட்டமாகவே, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம் வெளிப்பட்டுள்ளார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

அது போலவே, உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு;

தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html ), தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் பயிற்றுவித்து, 'தமிழ்வழிக் கல்வி' ஆதரவாளர்களாக காட்சி தரும், 'தமிழ் அமாவாசைகள்' எல்லாம்  உருவானார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகள் எல்லாம், 'தமிழ் அமாவாசைகளின்' ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லையென்றால்;

புலமையுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் 'வற்றி' விடவில்லையென்றாலும்;

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 'அமாவாசை சமூக செயல்நுட்பமானது' 1967இல் வெளிப்பட்டு, 1969-க்குப்பின் தடையின்றி வளர்ந்து, 1991-க்குப்பின் 'வீரியம்' பெற்ற போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கமானது, எந்த அளவுக்கு சிக்கி, பலியானது? என்ற ஆய்வின் அவசியத்தை, கீழ்வரும் தகவல் உணர்த்தியுள்ளது.

‘1980களில் போராளிகளின் எண்ணிக்கையில், ஆயுத பலத்தில், பண பலத்தில் விடுதலைப் புலிகள் மூன்றாம் இடத்தில் இருந்த போது;

முதல் இரண்டு இடங்களில் இருந்த 'புளோட்' தலைவர் உமா மகேசுவரனையும், 'டெலோ' தலைவர் சிரி சபாரெத்தினத்தையும் 'வானளாவ' புகழ்ந்து, அந்த குழுக்கள் சார்பில் வெளிவந்த இதழ்களிலும், நூல்களிலும் எழுதிய எழுத்தாளர்களிலும், புகழ்ந்த பேச்சாளர்களிலும், யார், யார், அந்த இரண்டு தலைவர்களையும், அக்குழுக்களின் போராளிகளையும் விடுதலைப் புலிகள் அழித்த பின், பிரபாகரனை 'வானளாவ' புகழ்ந்து எழுதினார்கள்? பேசினார்கள்?

அதே போல், முன்பு ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியவர்களில் யார், யார்,  ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா காலில், இன்று விழுந்து வணங்குகிறார்கள்?

மேற்குறிப்பிட்ட இரண்டு போக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டா?’ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html )

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம், தமது கட்சியில் 'உள்குத்து' வேலைகளில் ஈடுபட்ட 'அமாவாசைகளை', அன்றைய முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்து, ஆவேசப்பட்டதை, ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_20.htmlஇனிமேல் தமிழ்நாட்டில் உள்ள சிறிய, பெரிய கட்சிகள் எல்லாம், தத்தம் கட்சிகளில் உள்ள 'அமாவாசைகளின் உள்குத்து' பாதிப்புகளிலிருந்து, தப்பித்து பயணிக்க முடியுமா? என்ற கேள்வியானது, கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து தொடங்கி விட்டது.


‘தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில், யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்? என்று ஆராய்ந்தால்,’ (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html );

'அமாவாசை தலைவர்களை' பார்த்து, 'பொறாமையில்' வாழும், 'முற்போக்கு அமாவாசைகளும்', தமிழ்நாட்டில் இருப்பது தெளிவாகும். 'தமது அமாவாசை பிழைப்பை' பாதுகாத்துக் கொண்டே, 'சுயமரியாதை, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு' என்று  வாழும் 'முற்போக்கு அமாவாசைகளும்' அதில் அடக்கம்.

தமிழ்நாட்டில் 'அமாவாசை சமூக செயல்நுட்பமும்', பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும், பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், போராட்டங்களும், ஒரே காலக்கட்டத்தில், ஒன்றையொன்று வளர்த்து, இன்று உச்சத்தில் இருப்பதால், அடுத்து அவற்றின் வீழ்ச்சியும் தொடங்க உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தை' முடித்து வைக்கும், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக', சசிகலா வெளிப்பட்டாலும், வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )'ஜெயலலிதா' என்ற கேடயத்தின் வலிமை பற்றிய, அந்த 'வலிமையை' இழந்து, 'அந்த கேடயத்தின் இடத்தை ஆக்கிரமிப்பதில்' உள்ள 'புதை குழிகள்' பற்றிய, 'அறியாமையில்', டிஜிட்டல் யுகத்தில் (Digital Age), "அப்போல்லோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக் கொண்டு, யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம்" என்று அப்போது உறைத்திருக்க நியாயமில்லை" ( 'புதிய ஜனநாயகம்';ஜனவரி 2017) என்பதன் விளக்க உரையே, இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும். ' (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html )


தமிழ்நாட்டில் தமக்கு வெளிப்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, (அறிவுபூர்வமாக இன்று தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ள) 'ஆரிய - திராவிட' கவசத்தை முதலில் முன்னிறுத்திய சசிகலா குடும்பமானது (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html );

அதனால் பலனில்லை என்று அறிந்ததும், சுப்பிரமணியசுவாமியிடம் சரணடைந்ததன் மூலம், 'அமாவாசை சமூக செயல்நுட்பத்தின் மீட்சி எல்லையைத்' தாண்டி, அந்த செயல்நுட்பத்தின் மரணத்திற்கு வழி வகுக்கும், 'புரட்சி'(?) இன்று அரங்கேறிவருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் தரகர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், நேர்மையற்ற வழக்காடிகள் (unscrupulous litigants) அடங்கிய 'நன்கு மசகிடப்பட்ட (ஊழல்) எந்திரம்' (well-oiled machine), 'பெரிய அளவில்' (mega racket), செயல்பட்டு வருவதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, அம்பலப்படுத்தியுள்ளது. (http://timesofindia.indiatimes.com/city/chennai/magistrates-cannot-direct-issue-of-birth/death-certificates-high-court/articleshow/58188926.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section)

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', அது போன்ற ஊழல் எந்திரங்கள் செயல்பட்டு, ஆட்சியில் தலைமையில் இருப்பவர்களுக்கு 'அதிக லாபங்களுடனும்', அடுத்தடுத்த கீழ் மட்டங்களுக்கு 'அந்தந்த தகுதிக்கான' லாபங்களுடனும், உலகிலேயே 'தனித்துவமான ஊழல் பிரமீடு' தமிழ்நாட்டில் செயல்படுகிறதா? என்பது தொடர்பாக, ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், 'தரமுள்ள' பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டால், என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும். ஜனநாயகத்தின் தூண்களின் கண்களில் மண்ணைத் தூவி, அந்த 'ஊழல் பிரமீடின்' துணையுடன், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் நிகழ்ந்ததா? என்ற கேள்விக்கு, பாரபட்சமற்ற விசாரணை மூலமே விடை கிடைக்கும்.

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பாக விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாத தீபாவின் நிலையோ, 'சாண் ஏறி, முழம் சறுக்கின' கதையாகி விட்டது. 

அந்த விசாரணை கோரிக்கையை முன்னெடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் செல்வாக்கில், 'சசிகலாவின் எடுபிடியோ'? என்று,  தீபாவை, 'சுயலாப' நோக்கின்றி ஆதரித்தவர்கள் எல்லாம் சந்தேகிக்கும் அளவுக்கு, தீபா 'செல்லாக்காசாகி' வருகிறார். 

'அரசியல் நீக்கம்'(depoliticize) போக்கில், ஆதாய அரசியலில், வேறு வழியின்றி, சமூக ஆற்றலானது, 'தனிநபர்' விசுவாசத்தில், குவிய வாய்ப்புள்ள நபர்களை நோக்கியே, திருப்பு முனை கட்டத்தில் குவியும், என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, எந்தவித முகமூடியுமின்றி, 'நிர்வாணமாக' ஆதாய அரசியல் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'சசிகலா நடராஜன்' என்ற நபரை நோக்கி, 'ஆதாய அரசியல் செயல்நுட்பம்' மூலமாக குவியத் தொடங்கியுள்ளதால், 'அமாவாசைகள்' எல்லாம் மக்கள் மன்ற குவியத்தில் கேலிப்பொருளாகும் போக்கு - சசிகலாவின் படத்தை தவிர்த்து, ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்ட அளவுக்கு- தொடங்கி விட்டது. அது தொடருமானால்;

ஆதாய அரசியலில், வேறு வழியின்றி, சமூக ஆற்றலானது, 'தனிநபர்' விசுவாசத்தில், குவியமான கடைசி தலைவராக ஜெயலலிதா தமிழ்நாட்டில் இடம் பெறுவார். 'ஆதாய அரசியலில்', அதன் 'மீட்சி எல்லை' (Elastic Limit)  பற்றிய புரிதலின்றி, அரசியல் தற்கொலைப் போக்கில் பயணித்து, சசிகலா ஆதாய அரசியலை முடித்து வைத்த பெருமையை(?) பெற்றாலும் வியப்பில்லை. 'சசிகலாவின் அரசியல் ஏஜன்டாக' செயல்படும்( http://www.dinamalar.com/news_detail.asp?id=1749886) சுப்பிரமணியசுவாமியின் துணையுடன்(?)(‘ஈ.வெ.ரா, ராஜாஜி தோற்ற 'இடத்தில்', சு.சுவாமி ஜெயிப்பாரா?’; http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html )

தனிநபர் ஒளிவட்டத்தை 'குவியமாக' கொண்டு பயணிக்கும் கட்சிகளும்,  அந்த போக்கில் சருகாகி, மறைந்தாலும் வியப்பில்லை.

அத்தகைய குவியத்திற்கான 'தகுதி' இல்லாத ஓபிஎஸ் அணி மட்டுமே,  இன்று தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவுடன் பயணிக்கும் ஒரே கட்சியா? 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி', 'சென்னை வெள்ள நிவாரண மீட்பு' போன்றவற்றில் குறுகிய கால முதல்வராக இருந்து பெற்ற மக்கள் ஆதரவு வளருமா?

மக்கள் ஆதரவுடன், 'செயல்பூர்வமாக' தம்மை நிரூபித்து, கூட்டுத் தலைமையில் பயணிக்கும் கட்சி மட்டுமே, இனி தமிழ்நாட்டில் எடுபடுமா? 

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', 'திராவிடக்' கட்சி ஆட்சியில் அரங்கேறிய 'குடும்ப அரசியலுக்கு' எதிராக, 'புரட்சி' செய்து வெளியேறி, சாகும் வரை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கட்டத்திலிருந்து (phase);

'ஜானகி' மூலம் 'குடும்ப அரசியலுக்கு' புத்துயிர் கொடுக்க முனைந்த 'அமாவாசைகளை' வீழ்த்தி, முதல்வரான ஜெயலலிதா, 'சசிகலா' மூலம் புத்துயிர் பெற்று, தமிழ்நாட்டை அச்சுறுத்தி வந்த 'குடும்ப அரசியலுக்கு' எதிராக போரிட்டு, அதன் காரணமாகவே, 'மர்மமான' முறையில் மரணமடைந்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறை செல்ல, அக்குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்து, அடுத்து சிறை செல்ல வாய்ப்புள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கவில் 'அமாவாசைகளின் புரட்சியானது', ஒபிஎஸ் தலைமையில் அரங்கேறியுள்ளது. ( http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html

சசிகலாவின் 'அமாவாசைகள்'  குழுவிலிருந்து வெளியேறி, ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணம் தொடர்பான விசாரணை வேண்டி பயணிக்கும் ஓபிஎஸ் அணியானது;

தமிழ்நாட்டு அரசியல் போக்கில் திருப்பு முனையாக வெளிப்படுவார்களா?

அல்லது 'இன்னொரு வித்தியாசமான அமாவாசை' குழுவாக வெளிப்படுவார்களா?

என்ற கேள்விக்கு விடை தெரியும் காலமும், அதிக தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டில் 'அமாவாசைகளின்', 'பொதுநல முகமூடியுடன்' எவரையும் 'சுயலாப' கணக்குடன் 'ஆதரிக்கும்/எதிர்க்கும்', 'அறிவு விபச்சாரிகளின்', துணையின்றியும், 'வாடை'யின்றியும், வாழ்பவர்கள் எல்லாம் வணங்கத்தக்கவர்களே ஆவர். அவர்கள் எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளரும் போது, அந்த இரு பிரிவினரின் ஆட்டங்கள் அடங்கி, தமிழ்நாடு மீட்சி திசையில் பயணிக்கும்.

Thursday, April 6, 2017

                         Did Tamil & Sanskrit have common origin?
Are the Tamils suffering from the deep rooted inferiority complex, after 1967?


I shall not be surprised if any objective probe revealed the colonial mischief (like introducing ‘caste’ & ‘race’ into Tamil, replacing the original meanings of ‘சாதி’- cAthi- & ‘இனம்’ –inam-  in Tamil) behind the anti-Tamil sentiments found among a section of pro-Sanskrit supporters, and the anti-Sanskrit sentiments among a section of pro-Tamil supporters, especially in Tamilnadu.

Prior to the phase before 1967, pro-Tamil scholars like Somasundara Bharathiar were experts both in Tamil and Sanskrit; to the extent of pointing out the mistakes in the rendering of the Sanskrit Manthra by a priest during a marriage ceremony. Had such scholars been alive today, would they maintain silence to the following wrong observations w.r.t Tamil, by a world renowned scholar?

For example;

In his book 'The Language of the Gods in the World of Men - Sanskrit, Culture and Power in Premodern India', Sheldon Pollock had observed that like other Indian languages, Sanskrit was solely responsible for the development of literature in Tamil; which I had refuted with the evidences,(https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

And also mailed to him, with no response, or any rejoinder from pro- Sheldon Pollock supporters.

Interestingly none of the scholars working in Tamil University, The International Institute of Tamil Studies, Chennai, and the Tamil depts. In the universities in Tamilnadu, seemed to have refuted the above wrong observation of a world renowned Indologist. I shall be thankful and happy, if anyone proved that I was wrong on this point.

Worse, I doubt if they are even aware of the damages done to Tamil, in view of the scholarly status of Sheldon Pollock in the world media.

Also I doubt, if pro-Tamil supporters had become intellectually weak, as the result of the rule of the Dravidian parties in Tamilnadu, after 1967.

Also I wonder if the Tamil scholars working in the above mentioned institutions are aware of the following researches of late Dr.K.Loganathan.

‘Sumerian is primitive or Archaic Tarnil with a surprising degree of closeness to Classical Tamil.’ ( http://www.heritagewiki.org/index.php?title=Sumerian:TAMIL_of_the_First_CaGkam  )


Though I am not an expert in the above field of research, I was surprised to come across a music related technical word, employed as a verb in the researches of late Dr.K.Loganathan. I just published my view for a discussion.

Contrary to the understanding of the pro-Tamil music scholars like late Dr.V.P.K Sundaram & many others, w.r.t the Tamil words ‘curam’- சுரம்-  and ‘curuthi’ – சுருதி, my application of ‘Physics of Music’ to the ancient Tamil texts revealed that the music related Tamil words ‘curam’ and ‘curuthi’, were not Sanskrit origin words. Also their music related meaning in Tamil, conveyed a significant musicology clarification, as to how ‘curam’ functioned as a musical path, leading to ‘curuthi’, and ‘aththam’ –அத்தம்-, another music related discovery meaning musical pitch, in the ancient Tamil texts. One can understand my pleasant surprise, when I came across the following text in the researches of late Dr.K.Loganathan.
" யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே. "  ( yaz kAl curuthiya InE iyamitinE)
Note that the word ‘curuthi’ was employed as a verb- சுருதிய- in music related context.

In the above post, one Mr.Vanpakkam Vijayaraghavan (வன்பாக்கம் விஜயராகவன்; http://vijvanbakkam.blogspot.in/ ) had disputed through his comment, that the world reputed scholars, had not accepted the above mentioned findings of late Dr.K.Loganathan. As mentioned already, I am not an expert in that field to refute the above comment. Unless such comments are taken seriously by the pro-Tamil scholars with expertise in that field, Tamil & Tamils face the danger of getting branded, as those suffering from the deep rooted inferiority complex, camouflaged by the unsubstantiated exaggerated claims.

When some of the findings of the scientist Newton was later proved wrong, it was considered as the progress in Science. In case Newton’s fans refused to acknowledge it, they will be ridiculed, for which they will not appeal to the government to punish those ridiculing them.

But in Tamilnadu, such jokes had taken place, to my surprise. (‘தேவநேய பாவாணர், 'பெரியார்' ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’; https://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html  & http://vijvanbakkam.blogspot.in/2012/08/blog-post.html  )

Unfortunately the followers of ‘Periyar’ EVR do not seem to update themselves w.r.t the disproved ‘Aryan invasion theory’ & the research developments in Tamil ancient texts, etc , entrapping themselves into the ‘prospective objects of ridicule’.

Also the failure to refute with proper evidences, to the above mentioned wrong observations on Tamil, by a world renowned Indologist Sheldon Pollock, may suggest the decline of the real experts in Tamil, after the 50 years rule of the Dravidian parties in Tamilnadu. Did anyone who had taken part in the above mentioned joke, refute the above wrong observations by Sheldon Pollock? What prevented them to refute Sheldon Pollock?  The deep rooted inferiority complex? Or the following process introduced after 1967? Did anyone of the above ‘group’ of ‘scholars’(?), oppose the threats to the Tamil scholar A.Nakkeeran, who lived with the security of his friends till his death, for publishing his book ‘tholkAppia poongavil kaLaikaL’, pinpointing the defects in ‘tholAppiya poonga’ written by DMK leader M.Karunanidhi? or kept quiet as a probable result of the following process (http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802   )  

‘After joining in a college or university, to ensure career elevation, one must use all the energy and time to develop ‘useful’ political ‘contacts’ without ‘wasting’ efforts to gain the intellectual strength. Will not those, appointed through corrupt means, excel in ‘developing the contacts’, to have ‘fast elevation’ in their career? Did we feel guilty or happy, when those in our family or friends had such career elevationWhen such persons occupy most of the key posts in education, will there be any social incentive for the intellectual growth? Did we feel guilty or happy, when those in our family or friends had such ‘career elevation’? In fact those who shun such career elevation to focus and enjoy in gaining intellectual strength, are ‘ socially neglected’ and branded as having no ‘intelligence’ for leading a ‘good life’(?). ‘ Also misusing the ‘social gaps’ of the prominent leaders, I had come across ‘intellectual prostitutes’, who simultaneously ‘benefit’ by ‘sharing their expertise’, for example, to both the groups supporting & opposing DMK leader M.Karunanidhi. When time permits, I plan to probe, if this too was one of the ‘consequences’ of the ‘Dravidian rule’ of Tamilnadu after 1967 ?  I shall not be surprised, if history, in the near future, proved that  unware of the leaders’ ‘social gaps’, the Dravidian top leaders had digged their own grave, by encouraging such ‘intellectual prostitutes’. That proof may awaken the sincere pro-LTTE persons in TN, to verify, a similar blunder by V.Prabakaran, leading to the Mullivaikkal tragedy.(https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html ) Fortunately present college students, educated youth & even villagers, easily identify & shun such ‘intellectual prostitutes’.

Also are the Tamil scholars in the universities & colleges, aware that the present expertise criteria in Tamil, are under drastic transformation in the digital age? (தமிழின்  அடுத்த கட்ட(Next Phase) புலமை? (1); https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html & https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

Unaware  of the relationship between the social changes and the corresponding due changes in the grammar rules of Tamil, all pro-Tamil forums are becoming the unconscious culprit obstacles, forcing the demise of Tamil grammar first and Tamil later; (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html ), encouraging the socially divisive Tamil chauvinism. Failing to sense this socially destructive dimension of the support from such groups, LTTE leader Prabakaran ‘sailed on the waves’ of such support, ultimately ending in the ‘Mullivaikkal Tragedy’. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

Though pro-Tamil chauvinists may have their counter parts in the other Indian languages including Sanskrit (I had distanced myself from one such pro-Sanskrit chauvinist joker, though he had treated me with great respect);

I had come across open minded scholars in the field of Sanskrit, a pleasant surprise for me, with anti-Brahmin & anti-Sanskrit associations, prior to the entry into my music research present phase.

If anyone tries to refer to my significant research findings w.r.t the ancient Tamil texts, they will have to visit http://musicresearchlibrary.net/omeka/ (search S.A.Veerapandian) a great treasure trove, for music research students.

Also the following observation was published in a Sanskrit research journal.

“During ancient times Sanskrit and Tamil had mutually beneficial complimentary interactions. The great works of Buddhist and Jain scholars in the form of epics like perungkathai’ (having more musicological details on string instruments than chilappathikAram) and grammar works like ‘cEnhthan thivAkaram’ (with valuable musicology details including the earliest reference –Sanskrit references seem to be later- for the seven music LETTERS sa, ri, ga, ma, pa, dha, & ni) might be the results of such healthy interactions. Of all the ancient languages, Tamil and Sanskrit may be the only two languages to have such unique complimentary relation. Aware of this complimentary relation, the rules of tholkAppiam were pragmatic while ensuring distinct Tamil language identity by treating the sound format of vatacol as an exception to the rules applicable to the sound format of the normal Tamil word. While Manipravalam violated the rules of tholkAppiam in one extreme, the pure Tamil movement extremism also violated the rules of tholkAppiam in the opposite extreme. Languages can grow, not in total insulation, but by practising healthy interactions with other languages while ensuring the distinct identity. “ 
-           ‘tholkAppiam and the use of Sanskrit words in Tamil’ – The Journal of Sanskrit Academy; Volume XX – 2010; ISSN-0976 089X

Note that the earliest reference –Sanskrit references seem to be later- for the seven music LETTERS sa, ri, ga, ma, pa, dha, & ni) found in the Tamil text  ‘cEnhthan thivAkaram’, was published in a Sanskrit Research Journal.

Also in Sanskrit, “Tamil pulavars not only have produced Tamil masterpieces of poetry and learning, but also have contributed much in Sanskrit to Literature and Philosophy.” (Jean Filliozat - Presidential Address - First International Tamil Conference – Seminar, Kuala Lumpur , Malaysia 18 - 23 April 1966 )

While researches can continue to explore if Tamil and Sanskrit had common origin, the complimentary mutually beneficial relationship between Tamil and Sanskrit, was well established. Also I like to share that I have prima facie evidences to form a hypothesis that both Tamil and Sanskrit languages may have alien origin, which I propose to reveal in my future post. The following news, in my view, is encouraging to the above hypothesis.


Probably had ‘Periyar’ E.V.R was aware that of all the ancient languages including Tamil, “Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language” ( Page 35, ‘Identity and Violence’ by Amartya Sen), he might not have encouraged the anti-Sanskrit phobia in Tamilnadu.


While 1938 anti-Hindi agitation in Tamilnadu, initiated by the pro-Tamil scholars like Somasundara Bharathiar & later led by ‘Periyar EVR’, had removed the compulsion to learn Hindi, it retained the option to learn Hindi in the schools. Unfortunately the 1965 anti-Hindi agitation, encouraged by C.N.Annadurai & Rajaji, removed the option to learn Hindi in TN schools, after 1967. Opposition to the imposing of a language, if extended to developing hatred towards that language, it will lead to linguistic Xenophobia. 

I welcome the non-mother tongue option to learn Sanskrit and other Indian languages to all the students in India, and I appeal to both the central and state govts to ensure the facility to learn the non-mother tongue Indian languages in the schools all over India. We need to replace the linguistic Xenophobia hate politics to the pro-love to all the Indian languages; rescuing our students from the English language mania. That will strengthen the Indian nation building process, now under threat from the vested interests in India & abroad.(‘Is BJP aware of the derailing of the Indian nation building process?; https://tamilsdirection.blogspot.com/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )