Friday, October 26, 2018

மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா? (2)



தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கான முயற்சியும், இந்தியாவிற்கே முன்னுதாரணமான தேசக்கட்டுமானத் திசையும்



தமிழ்நாட்டில் 1967இல் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டு, 1969 முதல் (சர்க்காரியா கமிசன் வெளிப்படுத்திய) அறிவியல்பூர்வ  ஊழல் போக்கில் தமிழ்நாடு பயணித்தது. அதன் தொடர்விளைவாகவே ஆங்கிலவழிக்கல்வி வியாபார சுனாமியில் தமிழ்வழிக்கல்வி வீழ்ச்சியும்,  எவர் காலிலும், எப்படியாவது விழுந்து பணம் சம்பாதிக்க, தமிழர்களில் தன்மானம் இழந்தவர்கள் வளர்ச்சியும், ஏரிகள், ஆறுகள், மலைகள், மட்டுமின்றி, (அச்சுறுத்தியும், கொலை செய்தும்) தனியார்ச் சொத்துக்களை அபகரிப்பதும், ஒன்றுடன் ஒன்றி பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்துள்ளன. 

எனவே தமிழ்வழிக்கல்வி மீட்சி என்பதானது, தமிழ்நாட்டின், தமிழர்களின் தன்மான மீட்பிற்கு வழி வகுக்கும் முயற்சியாகும். அநேகமாக சோவியத் ஒன்றியம் போல, இந்தியா சிதறும் வாய்ப்பிலிருந்து, இந்தியாவை மீட்கும் முயற்சியாகவும் வெளிப்பட்டாலும் வியப்பில்லை. அந்த முயற்சிக்கு தடையாக இருந்த சமூக வண்ணக் குருட்டு நோயும்(Social Colour Blindness) விரைவில் நீங்கும் என்பதும் எனது கணிப்பாகும்.

இந்துத்வா எதிர்ப்பினை அறிவுபூர்வமாக எதிர்ப்பவர்களை எல்லாம், வெறுக்கத்தக்கவர்களாகக் கருதி பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும்;

'பெரியார்' ஆதரவாளர்களை எல்லாம் 'உணர்ச்சிபூர்வ பெரியார் பக்தர்களாக' வெறுக்கத்தக்கவர்களாகக் கருதி பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;

'சமூக வண்ணக் குருட்டு நோயில்'ஒன்றானவர்களே ஆவர். (‘கறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’; http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

தி. வாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் -ஆக இருந்தாலும், எந்த அமைப்பாக இருந்தாலும், அவற்றின் மேக்ரோ உலக புற பிம்பத்தில் ஏமாந்து, அந்தந்த அமைப்புகளை 'அறிவுக்கண்களை' மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களில், எதிர்ப்பவர்களில் சுயலாப நோக்கற்ற சமூகப் பற்றாளர்கள் பலர் இருக்க வாய்ப்புண்டு. 'அந்த' (தம்மிடம் ஏமாந்தவர்களின் ஆதரவு) வாய்ப்புகளை எல்லாம், 'அபகரித்து' வசதியிலும் செல்வாக்கிலும் வளர்ந்து வாழும் 'வாழ்வியல் சுயலாபப் புத்திசாலிகள்', எல்லா அமைப்புகளிலும் இருக்கவும் வாய்ப்புண்டு.

தி. வாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும், எந்த அமைப்பாக இருந்தாலும், மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும், சுயலாப நோக்கற்ற சமூகப்பற்றுடனும் வாழ்பவர்கள் எல்லாம், எல்லா அமைப்புகளிலும் இருக்க வாய்ப்புண்டு. அதற்கு உதாரணமாக, என்னைப்பற்றிய தகவல்களையும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பழந்தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட வேண்டியவை என்பது பெரியாரின் கருத்தாகும்.

கடவுள்களையும் அவர்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், புராணம், தேவாரம், பிரபந்தம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையுமான கடமையாகும்” -       24.3.1943 ஜோலார்பேட்டை சொற்பொழிவு – ‘கலையும் நாடகமும்குடிஅரசு பதிப்பகம் 1943

பழந்தமிழ் இலக்கியங்களில் மக்களுக்குப் பயன்படும் அறிவுபூர்வமான விஷயங்கள் என்ன இருக்கின்றன என்று பெரியார் சவால் விட்ட போது, (அவருக்கு 'நெருக்கமான'(?) தமிழறிஞர்கள் உள்ளிட்ட) தமிழ்ப் புலவர்களால் அதற்குச் சரியான விளக்கம் தர முடியவில்லை. எனவே பெரியாரின் கருத்துக்கு நானும் அடிமைப்பட்டு பழந்தமிழ் இலக்கியங்களைக்கறுப்பாகவேகருதி வெறுத்து வந்தேன்.

அதன்பின் இசை அறிவியல் கோணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை நான் ஆராய்ந்தேன். பல அரிய இசையியல் தகவல்களை அவற்றில் நான் கண்டு பிடித்தேன். அவை எனது கணிணி இசை ஆய்வுக்குப் பெருந்துணை புரிந்ததோடு இசைத் தகவல் தொழில் நுட்பத்தைப் (Music Information Technology) பயன்படுத்தி உலக இசையை வளர்க்கவும் துணை புரிபவை ஆகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் என்னை அறிந்தவர்கள் எவரேனும், எனது இன்றைய நிலைப்பாட்டினை அறிவுபூர்வமாக விமர்சிப்பதை வரவேற்று, கீழ்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.

‘'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' (1);  எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?” ; http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html

.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', 'பெரியார்' கொள்கையையை உட்படுத்தாமல் பயணிப்பவர்கள் எல்லாம், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மனநோயில் பாதிக்கப்பட்டவர்களா? என்ற கேள்வியை எனது பதிவுகளில் எழுப்பியிருந்தேன்

அது தொடர்பாக என் மீது வைக்கப்பட்ட விமர்சனமும், விளக்கமும் வருமாறு:

"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்? இந்தக் கேள்விகள் உடன் செயலாற்றிய எங்களுக்கு ஏற்படுவது நியாயமா? இல்லையா?”

என்று என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் தொடர்பாக;

நியாயமான கேள்விகள். ஆமாம். நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன். 2006 ‘தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்  வெளிவந்த, கீழ்வரும் கட்டுரை, ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு; ‘கறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ ; http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ( ‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா (1)’; http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html)’

மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும், சுயலாப நோக்கற்ற சமூகப்பற்றுடனும் வாழ்பவர்கள் எந்த கொள்கை சார்பில் இருந்தாலும், எதிர்க்கொள்கை சார்பானவர்களும் மதிப்பார்கள். அதனை தஞ்சை சரபோசி கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றிய காலத்தில் உணர்ந்தேன்., தினமும் நான் 'விடுதலை' நாளிதழை கல்லூரி ஆசிரியர் அறைக்கு எடுத்து வந்தேன். சக பிராமண பேராசிரியர்களில் ர்வமுள்ளவர்கள் அதைப்படித்து என்னுடன் விவாதிப்பதும் உண்டு. என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வெளிப்படுத்தி, நான் கல்லூரியில் ஆசிரியர் கழக செயலாளராக முன்னெடுத்த போராட்டங்களில், கல்லூரி முதல்வரின் அச்சுறுத்தலைக்கண்டு அஞ்சாமல் துணை நின்றவர்களும் அவர்களே ஆவர்.  எனது 'தமிழிசையின் இயற்பியல்'(Physics of Tamil Music) முனைவர் ஆய்விற்கு இசைத்துறை, மற்றும் இயற்பியல் துறை(Physics) என இரண்டு நெறியாளர்கள்: தேவைப்பட்டனர். அந்த பிராமண பேராசிரியர்களில் ஒருவரே தாமாக மனமுவந்து எனது முனைவர் பட்ட ஆய்வில், இயற்பியலுக்கான நெறியாளராக செயல்பட்டார். நான் சென்னை மாநிலக்கல்லூரிக்கு மாற்றல் ஆகியிருந்த போது, தஞ்சை சரபோசி கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த எனது மகனுக்கு அவர் தனது வீட்டில் தனிப்பயிற்சி வழங்கினார்.  மிக அதிக மதிப்பெண்கள் (Distinction) பெற்று சிங்கப்பூரில் வாழும் எனது மகன் இன்று, தனது பணியில் சிறப்புடன் செயல்பட, அவர் பாடங்கள் நடத்தியது மிகவும் துணை புரிந்து வருவதை, எனது மகன் அவ்வப்போது  நன்றியுடன் நினைவுகூர்ந்து என்னிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு நான் 'தீவிர பெரியார்' ஆதரவாளராக தஞ்சை சரபோசி கல்லூரியில் பயணித்த காலத்தில், கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைகளில் நான் முன்னெடுத்த போராட்டங்களில், என்னை அறிந்த பிராமண பேராசிரியர்கள் துணை நின்றார்களோ;

இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ரா அவர்களின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்தார்களோ;

அது போல இன்று தமிழ்வழிக்கல்வி மீட்சி பிரச்சினையில், பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணிக்காத 'பெரியார்' ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து செயல்படுவது சாத்தியமாகும்

இந்தியாவில் பிரதமர் மோடி அரசிடம் அடிப்படைக்கல்வி வரையில், தாய்மொழிவழிக்கல்வியைக் கட்டாயமாக்க வலியுறுத்தி வரும் ஒரே அகில இந்திய அமைப்பு ஆர்.எஸ்.எஸ் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) அது மட்டுமல்ல, மக்களைப் பாதிக்கும் மோடி அரசின் திட்டங்கள் தொடர்பாக, சுதேசி நலன்களை முன்னிறுத்தி, ஆர்.எஸ்.எஸ் எதிர்த்து வருவதும் கவனிக்கத்தக்கதாகும். (The Modi government’s reform agenda continues to face opposition from the RSS. http://www.businesstoday.in/magazine/features/the-modi-governments-reform-agenda-continues-to-face-opposition-from-the-rss/story/244680.html)

மோடி குஜராத் முதல்வராகி, அடுத்து வந்த சட்டசபை பொதுத்தேர்தலில், விஸ்வ இந்த் பாரிசத் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் மோடியை தேர்தலில் தொற்கடிக்க முயற்சித்தது, எனது கவனத்தினை 2005 முதல் ஈர்த்தது. அன்று முதல்  சாதி, மத பாரபட்சமற்ற, ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய திசையில் மோடி பயணிப்பதை ஆதரித்தும், அதில் வெளிப்படும் சறுக்கல்களை சுட்டிக்காட்டியும் நான் பயணித்து வருகிறேன். (‘மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?(1)’; http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) என்னைப் போலவே மோடி ஆதரவுப் போக்கில் பயணிக்கும் மது கிஷ்வார் போன்றவர்களும், ஊழல் ஒழிப்பில் மோடி அரசின் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். (http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/ )

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் முதலில் ஒத்தி வைப்பு, சோதனை, கைது, பின் குற்றவாளி ஜாமினில் வெளிவந்து, அடுத்து நடந்த அதே இடைத்தேர்தலில் பா.ஜ.க-வை நோட்டா கட்சியாக்கி, சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவை டெபாசீட் இழக்க வைத்து, ஆளுங்கட்சியையும் தோற்கடித்து, ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட சுயேட்சையாக போட்டியிட்டவர் அதிக வாக்குகள் பெற்றதானது, மத்திய அரசின் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியா?  என்ற கேள்வியை எழுப்பியது. அதன் தொடர்ச்சியாகவே இன்று சி.பி.அய்-இன் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது; தேசக்கட்டுமான சீர்குலைவுக்கும், சி.பி.ஐ-யின் நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவுக்கும் உள்ள தொடர்பின் வெளிப்பாடாக.. (https://www.outlookindia.com/magazine/story/cbi-vs-cbi-murky-details-of-infighting-between-no-1-and-no-2/300814 )

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பில் மெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம் விடுதலை ஆகும் அளவுக்கு அரசு தரப்பு (Prosecution) சொதப்பி வரும் சூழலில்;

'அந்த சந்துகளை' அதிபுத்திசாலித்தனமாக அடையாளம் கண்டு;

ஆட்சியில் இல்லாமலேயே, அந்த ‘ஃபார்முலாவை சுருதி சுத்தமாக செயல்படுத்தி, தினகரன் வெற்றி பெற்ற தினத்தன்று;

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க தலைமை பீடங்கள் வெறிச்சோடி கிடந்தது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த 'சிக்னல்' ஆகும்; தமிழ்நாட்டில் திராவிட அரசியலை 'பணத்துவா' முடித்து வைத்ததன் அறிகுறியாக. (http://tamilsdirection.blogspot.com/2017/12/3_26.html )

தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த ஊழலின் வலிமையில் தான் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் பெருகியது. இன்று குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள்(Play Schools) ஊடுருவி, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தைத் தூண்டுவித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அந்தந்த மொழிகளில் இல்லாத அளவுக்கு, அதிவேகமாக அதிகரித்து வருவதும், குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வருவதும், சங்க காலம் முதல் 1967 வரை 'ஆக்கிரமிப்புக்கு' உள்ளாகாத ஏரிகளும், ஆறுகளும், கல்வெட்டுகளும் வேகமாக 'மறைந்து வருவதும்', அண்டை மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் தமிழ்நாட்டின் மீதிருந்த பயம் நீங்கி, 'கச்சத்தீவை' இழந்து, 'காவிரி, பெரியாறு' போசடிகளுக்கு உள்ளாகி வருவதும்;

1967க்கு முன் வாழ்ந்த எவராலும் நம்பமுடியாத 'சீரழிவு சாதனைகள்' ஆகும்.( http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

எனவே தமிழ்வழிக்கல்வியின் மீட்சி முயற்சியானது முன்னேறும்போது, ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தின் பின்பலமாக உள்ள ஊழல் அரசியல் வலைப்பின்னலின் எதிர்ப்பினை சந்திக்கும் நெருக்கடியையும் தவிர்க்க முடியாது.

பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாத 'பெரியார்' ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும், பிற அமைப்புகளில் உள்ள, அது போன்ற ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கும் போது தான், அந்த எதிர்ப்பினை வெற்றி கொள்ள முடியும்.

பா.. உள்ளிட்ட தேசியக்கட்சிகளின் சுயநல அரசியல் போக்குகள் எல்லாம் இந்தியாவில் தேசக்கட்டுமானத்தினை எவ்வாறு சீர்குலைத்து வருகின்றன? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html ) 

'விதேசி' நலன்களுக்காக செயல்பட்டகாலனிய நிறுவன கட்டமைத்தலானது, இந்திய விடுதலைக்குப் பின், 'சுதேசி' நலன்களை முன்னிறுத்தி, தேச கட்டுமானம் மூலம் சுதேசி நிறுவன கட்டமைத்தல் நோக்கி பயணிக்காமல், 'இரண்டும் கெட்டானாக' பயணித்து, இன்று பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், கட்டமைத்தல் சீர்குலைவுக்குள்ளாகி, பொது ஒழுக்கமும், ஊழல் மூலம் சட்ட ஒழுங்கும், சீர் குலைந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html ) 

இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, தமிழ்நாடானது சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_13.html). கட்சி, கொள்கை வேறுபாடுகளையும் பொதுவாழ்வு வியாபாரிகளையும் ஓரங்கட்டி, தாய்மொழி தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கானமுயற்சியில் வெளிப்படும் ஒற்றுமையானது, அதன் முன்னறிவிப்பாக அமையும், என்பதும் எனது கணிப்பாகும்.

சட்டங்களை இயற்றும் பாராளுமன்றம்/சட்டசபை, செயல்படுத்தும் அரசு, சட்டபூர்வ கண்காணிப்புக்கான நீதிமன்றம் ஊழல் நோயில் சிக்கி,  மூன்றின் வரை எல்லைகளும் சீர் குலையும் போக்கு, மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளில் அரசின் மென்சக்தி (Soft Power) வலுவிழந்து, வன்சக்தி(Hard Power) பிரயோகம் அதிகரிப்பு போன்ற போக்குகள் எல்லாம், மக்களின் அரசங்கீகாரத்தினை(Soverignity) கேள்விக்குறியாக்கும் சிக்னல்கள் ஆகும். (‘Democracy is based on the concept of popular sovereignty. In a direct democracy the public plays an active role in shaping and deciding policy. Representative democracy permits a transfer of the exercise of sovereignty from the people to a legislative body or an executive (or to some combination of legislature, executive and Judiciary’; https://en.wikipedia.org/wiki/Sovereignty). சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு முன், அந்த திசையில் தான் பயணித்தது.


தமிழ்நாட்டில் தேசக்கட்டுமானமானது பலகீனமாகிய போக்கில், இந்திய விடுதலையானது பயணிக்கத் தொடங்கியதை 1952 முதல் பொதுத்தேர்தல் முடிவுகள் உணர்த்தின. அதன் தொடர்ச்சியாக தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வு வியாபாரமானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

இந்தியாவிலேயே தேசக்கட்டுமானமானது பலகீனமாகிய போக்கில் பயணிக்கத் தொடங்கிய தமிழ்நாட்டில், காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் தான், 'அந்த' பலகீனமானது வலுவிழக்கத் தொடங்கியது. காமராஜரின் அரசியலுக்கு எதிரான திசையில் ராஜாஜி பயணித்ததாலேயே, 1967இல் தி.மு. ஆட்சியைப் பிடிக்க நேர்ந்தது. பின் முதல்வர் அண்ணாவிற்கும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்த நல்லுறவானது, அண்ணாவின் மறைவிற்குப்பின் இருளில் சிக்கியது. (‘திருவள்ளுவர் சிலை; கருணாநிதியிடம் ஏமாந்த ஜெயலலிதா’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none.html) பின் அதே ராஜாஜி ஆதரவுடன் கருணாநிதி முதல்வராகி,  சுயலாப அரசியல் நோக்கில், 'பிரிவினை, பார்ப்பன எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ போக்குகளை ஊக்குவித்து பயணித்தார். நேரு பாணி குடும்ப அரசியலை விரிவுபடுத்தி, தி.மு. வை அதில் சிக்க வைத்தார். இடையில் எம்.ஜி.ஆர் ஆட்சியானது அதற்கு விதி விலக்கானது. பின்னர் துவங்கிய ஜெயலலிதா ஆட்சியில், 'பினாமி குடும்ப ஆட்சி' அரங்கேறி, அந்த போக்கில் தமிழ்நாட்டின் தேசிய/திராவிட/தமிழ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் 'மெளன சாட்சியாக்கி', மர்மமான முறையில் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும்.(‘நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும்’; http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html ) அந்த சிக்னலை உணராமல், தமிழக பா..வையும் அந்த 'மர்ம' மரணத்தின் மெளன சாட்சிகள் வரிசையில் இடம் பெறச் செய்து, இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலின்றி, அந்த 'சிக்னலின்' போக்கிலேயே பிரதமர் மோடி பயணித்தார். 'அந்த' பலகீனமே மோடியின்  ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, வடிவேலு பாணி காமெடியானது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று சி.பி.அய்யின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி வருகிறது; உச்சநீதிமன்றமே சாட்சியாக; என்பதும், எனது ஆய்வு முடிவாகும்.

இந்தியாவில் தேசக்கட்டுமானச் சீர்குலைவுப் போக்கினை தடுத்து நிறுத்தவில்லை என்றால்,  ‘சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு இடையிலான 'சமநிலை' (equilibrium) குலையும் போது, இந்தியாவானது, சோவியத் ஒன்றியத்தை விட, இன்னும் மோசமான முறையில் ' சிதறலுக்கு' உள்ளாகி, ஆப்பிரிக்காவுடன் போட்டி போடும் நிலை உருவாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/01/2-same-side-goal.html )

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா? (‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress ) என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்; தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதால்.