Monday, April 29, 2019


'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (5)


'கோழை எலிகள்' சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளான' சமூக உயிரியல் மாற்றம் (Social genetic transformation)?


ஒரு மனிதரின் மனதில் உள்ள தேவைகளும்(needs), ஈடுபாடுகளும்(interests) மாறும்பொழுது, அவரின் மூளையின் செயல்பாடுகளும் அதற்கேற்ற மாற்றங்களுடன் செயல்படத் தொடங்கும். அந்த மாற்றங்கள் அடிப்படைப் பண்பு மாற்றங்களாக இருக்குமானால், அந்த மனிதரிடமிருந்து வெளிப்படும் பண்புகளிலும் அது எதிரொலிக்கும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

உதாரணமாக 1967க்கு முன், தமிழ்நாட்டில் 'ரவுடிகளாக' இருந்தவர்கள் ஊரில் நல்ல மனிதர்களைக் காணும் நேரத்தில், வெட்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் ஒதுங்கும் போக்கு இருந்தது

1967க்குப் பின், 'அந்த' ரவுடிகளில் புத்திசாலிகள் ஆளுங்கட்சியில் சேர்ந்து, 'செல்வாக்குடன்'(?) வலம் வந்து, தாம் முன்பு வெட்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் ஒதுங்கிய 'அதே' நபரைப் பார்த்து, 'பிழைக்கத்தெரியாத நபர்' என்று கேலி பேசியதை நான் அறிவேன். அதன் வளர்ச்சிப் போக்கில், இன்று தமது நிலைப்பாட்டினை அறிவுபூர்வமாக எதிர்ப்பவர்களை, 'ரவுடிகளின் பின் பலத்தில்' அச்சுறுத்தும் 'திராவிட ஆதரவு யோக்கிய'(?) வேட முற்போக்குகளையும் நான் அறிவேன்.

அது போல, அரசு அலுவலகங்களில் 'லஞ்சம்' வாங்குபவர்களாயிருந்த 'வெகு சில' அதிகாரிகள், நேர்மையாகப் பணியாற்றிய பெரும்பாலான அதிகாரிகளைக் காணும்போது, வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு 1967க்கு முன் இருந்தது. அந்த நிலையிலிருந்து எவ்வளவு மோசமாக தமிழ்நாடு மாறி விட்டது? என்பதைக் கீழ்வரும் அனுபவம் உணர்த்தியது.

சுமார் 20 வருடங்களுக்கு முன், ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்ந்த போறுப்பில் இருந்த நபர் ஊழலில் ஈடுபட்டதால், நேர்மையான துணைவேந்தரால் அந்த பணியிலிருந்து அகற்றப்பட்டார். நேர்மையான 'பூனைக்கு' பயந்த 'எலி' போல, 'அந்த' பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அந்த துணைவேந்தர் பணி ஒய்வு பெற்றார். பின் 'ஏலம்' மூலம் துணைவேந்தர் பதவிகள் விற்கப்படும் காலம் துவங்கியது. அந்த 'ஊழல்' நபர் பின்னர் ஒரு கல்லூரிக்கு முதல்வரானதால், 'அந்தப்' பல்கலைக்கழக செனட் உறுப்பினரானார். ஒரு செனட் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் காரில் வந்து இறங்கிய போது, பலகலைக்கழக அதிகாரிகள் பலர் கூடி நின்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். ஏனெனில், 'அந்த' ஊழல் நபர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, 'அந்த' அளவுக்கு அவர்களும் ஊழல் பலன்களை அனுபவித்ததற்கு 'நன்றிக்கடனாகவே', 'அந்த' மரியாதை வெளிப்பட்டது.

தமிழ்நாட்டில் நேர்மையான 'பூனைகளை' கண்டு 'கோழை எலிகள்' போல ஒதுங்கியவர்கள், பின்னர் சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளான' சமூக உயிரியல் மாற்றம் நடந்த போக்கினை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)  

ஒரு சமூகத்தின் வீழ்ச்சியிலும் மீட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர்களாக, அந்த சமூகத்தில் 'செல்வாக்குடன்' வலம் வரும் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1967 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. ஆட்சியின் பண்பிலும், சமூகத்தின் பண்பிலும் ஆழமான மாற்றங்களுக்கான துவக்கமாகவும், 'அந்த' ஆட்சி மாற்றம் இருந்தது.

சமூகத்தின் பண்பு சீரழியும் போக்கினை முன்கூட்டியே உணர்ந்து எதிர்நீச்சல் போட வேண்டிய, குறிப்பாக 'செல்வாக்கான' றிவுஜீவிகள் எல்லாம், 'நமக்கேன் வம்பு?' என்று, தமது 'சொகுசு மண்டிலத்தை' விரிவுபடுத்தும் நோக்கில் பயணித்தார்களா? என்ற கேள்விகளை எழுப்பும் தகவல்களை அடுத்து பார்ப்போம்.

" 'ஆங்கோர் வாட்' ஒரு தமிழ் அரசனால் கட்டப்பட்டது; தமிழ் மன்னர்கள் படையெடுத்த நாடுகளில் ஒன்று கம்போடியா; தமிழ் மரபில் வந்த சூர்யவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் 'ஆங்கோர் வாட்' "
என்பது போன்ற தகவல்கள் உரிய சான்றுகள் இன்றி இணையத்தில் வெளிப்பட்டு வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html) அதன் உள்நோக்கமானது, கம்போடியாவை இழிவுபடுத்த வேண்டும் என்பதாக இருக்காது, என்பது என் கருத்தாகும். தமிழை, தமிழ்நாட்டை உயர்ந்ததாகக் காண்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கமாக‌ இருக்கலாம். அது போலவே, 'இந்துஸ்தானி இசைக்கும் தமிழிசையே மூலம்' என்ற வகையில், மம்மது முன்வைத்துள்ள வாதமும், இந்துஸ்தானி இசைக்கு எதிரானதல்ல; தமிழ் இசையை உயர்ந்ததாகக் காண்பிக்க வேண்டும்' என்பதே அவரின் உள்நோக்கமாக‌ இருக்கலாம்.( http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.htmlஆனால் உரிய சான்றுகள் இன்றி, அவ்வாறு செய்வதானது, செல்டன் பொல்லாக் போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள், தமிழை உயர்த்தி முன்வைக்கும் வாதங்களை அறிவுபூர்வமற்றது, என்று கருத இடமளிக்கிறது
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

அது போலவே சமஸ்கிருதத்தினை உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில், உரிய சரியான சான்றுகள் இன்றி வாதம் முன்வைக்கும் நாகசாமி போன்றவர்களை எல்லாம் தமிழ் விரோதிகளாக அணுக வேண்டியதில்லை. அதற்கு மாறாக, நாகசாமியும், அவரின் ஆதரவாளர்களும் வெட்கப்படும் வகையில், உரிய சரியான சான்றுகளின் அடிப்படையில் அறிவுபூர்வ வாதங்களையே முன் நிறுத்த வேண்டும்.
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_26.html)

மேற்குறிப்பிட்ட பதிவில் எழுப்பப்பட்ட கீழ்வரும் கேள்விகளுக்கு எவரும் இதுவரை பதில் தர முன்வரவில்லை. இனியும் வந்தாலும், அதனை வரவேற்று ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

நாகசாமியின் 'உள்நோக்கம் பற்றிய ஆராய்ச்சியை' ஆதரிப்பவர்கள் எல்லாம். கீழ்வரும் கேள்வியைப் புறக்கணிக்க முடியுமா?

தமிழ் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள தமது ஆய்வு முடிவுகளை எல்லாம், நாகசாமி தமது நெருங்கிய நண்பரான தி.மு. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து விவாதித்தாரா? இல்லையா? அந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு நாகசாமிக்கு இருப்பது போலவே, கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் இல்லையா?

1967இல் அண்ணா முதல்வராகி, இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தி, திருவள்ளுவர் மட்டுமின்றி, 'தீ பரவட்டும்' என்று அண்ணாவால் கண்டிக்கப்பட்ட 'கம்ப ராமாயணத்தை' எழுதிய கம்பருக்கும், மற்ற பழந்தமிழ் இலக்கிய படைப்பாளர்களுக்கும், சென்னை மெ(ரினாவில் சிலைகள் அமைத்தார்
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு கேடானதா? தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/ )

1967க்கு முன் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, குறிப்பாக கம்ப ராமாயணம் தொடர்பாக தாம் முன்வைத்த கருத்துக்கள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்று அண்ணா விளக்கம் கொடுத்துள்ளதாக தெரியவில்லை. அதற்கான விளக்கம் கொடுக்கவில்லை என்றால், அது அறிவுநேர்மையற்ற சமூகக் குற்றம் ஆகாதா?

'செல்வாக்கான' அறிவுஜீவிகள் எல்லாம், 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்க, சாமான்யர்கள்  இது போன்ற கேள்விகள் எழுப்புவதை, தமது 'செல்வாக்கு, அதிகாரம்' மூலமாக தடுக்க முனைந்தவர்களையும், முனைபவர்களையும்;

'கோழை எலிகளாக' இருந்து, திராவிட அரசியலில் 1967க்குப் பின் வளர்ந்த பொதுவாழ்வு வியாபாரப் போக்கில், .வெ.ரா மற்றும் அவர் வழியில் எண்ணற்றோர் புரிந்த தியாகங்களை எல்லாம், தமது 'சமூக தீனியாக்கி' உண்டு கொழுத்து, சமூக உயிரியல் மாற்றம் (Social genetic transformation) பெற்று, சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளாக' வெளிப்பட்டவர்களாகவே, நான் கருதுகிறேன்.

1944வரை இணையற்ற தியாகம் மூலம் .வெ.ரா அவர்கள் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 'கோழை எலிகளுக்கு' தீனியாகி, அவை சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளாக' ஆதிக்க வலம் வர, வழி வகுத்ததா
(‘சமூக சீரழிவு போக்கில், பெரிய தலைமுறை படைப்பாளிகளின் 'லக்ஷ்மண் கோடு'ம்; சமூக மீட்சிப் போக்கில், இளையதலைமுறையின் 'எதிர் லக்ஷ்மண் கோடு'ம்; இயக்குநர் மணிரத்னம் வெளிப்படுத்திய திறவுகோல்’; http://tamilsdirection.blogspot.com/2017/04/blog-post.html )

அந்த போக்கானது 1969க்குப் பிறகு முளைவிட்டது; குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் அநியாயமாக உயிரிழந்து, அவரது தந்தை அச்சுறுத்தலுக்கு இலக்காகி, "இறந்தது என் மகனல்ல" என்று விசாரணையில் தெரிவித்த கோலம் அரங்கேறிய பின்பு, அதன் வளர்ச்சிப் போக்கில், அரசு ஊழியர்கள் மத்தியிலும் தி.மு.கவை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்களை அச்சுறுத்தி அடக்கும் அளவுக்கு;

சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளை' அதிவேகமாக எண்ணிக்கையில் வளர்த்த சமூக செயல்நுட்பமே, ஆண்ட/ஆளும் கட்சிகளின் ஊழல்களுக்கு பாதுகாப்பு அரண் ஆனது. 'அந்த' ஊழல் பாதுகாப்பு அரணுக்கு 'பெரியார் தந்த புத்தியும்' பயன்பட்டதானது, ஈ.வெ.ராவிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

அவ்வாறு சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளான' சமூக உயிரியல் மாற்றத்திற்கான அடித்தளமாகவே 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமானது, காமராஜரையும், .வெ.ராவையும் முட்டாளாக்கி அரங்கேறியது
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்விளைவாக, பிற்கால வெற்றிகர திராவிட பொதுவாழ்வு வியாபாரிகளான கல்லூரி மாணவர்கள் எவ்வாறு கோழை எலிகளாக தமது பொதுவாழ்வினைத் தொடங்கினார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1980களில் தஞ்சை மன்னர் சரபோசி அரசு கல்லூரியில், கல்லூரி ஆசிரியர்களின், உரிமைகளுக்கான,  போராட்டங்களில்,  நான் முன்னிலை வகித்த காலத்தில்;

பேரா..மார்கஸ் தனது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாணவர்கள்  'அராஜகம்'  
(1965 இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின்நன்கொடையா’?; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html) மிகுந்திருந்த, அந்த சமயத்தில்;

தமது 'எடுபிடி மாணவர்கள் '  பின் தொடர,   ஒரு மாணவ தலைவர், வகுப்பு வாசலில் நின்று, ஒரு மாணவனை வெளியில் அனுப்புமாறு கேட்டிருக்கிறான். அதற்கு .மார்க்ஸ், வகுப்பு தேர்வு  நடப்பதால், வகுப்பு முடிந்த பின் அனுப்புவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே;

அந்த மாணவ  'தலைவனின்' முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்த, 'எடுபிடி மாணவன் ' ஒருவன், சிம்புவின் பீப் பாடலில் சர்ச்சைக்கு இடமான 'அந்த' சொல்லினை வெளிப்படுத்தினான்
'அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும், அவர்களின் முதுகுக்குப் பின் மறைந்து பயணிக்கும், மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள்; தமது எடுபிடிகளின் சமூக வலைப்பின்னலுடன்.(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html) ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.’
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

பெண்ணின் பாலியல் உறுப்புகள் தொடர்பான சொற்களை, 'அசிங்க' நோக்கில், பயன்படுத்தும் போக்கானது, தமிழர்களிடையே எப்போது அரங்கேறியது?  அந்த போக்கில், 'புண்டை' என்ற சொல் எப்போது 'புதிதாக' உருவானது? பிற மொழி அரசர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்திலா? அல்லது காலனி ஆட்சி காலத்திலா?  அந்த 'அடிமை நோயில்' சிக்கிய, இயல்பில் கோழைகளான தமிழர்களின், 'போலியான வீரத்தை' வெளிப்படுத்தும் போக்கில், அந்த 'புதிதாக உருவான கெட்ட சொல்', உரம் பெற்று வளர்ந்ததா?  காலனி நோயில் அரங்கேறிய, ‘’புதிய தரவரிசை சாதி அமைப்பில்’ (new hierarchical caste structure)  'உருவான',  'நாகரீக' மனிதர்கள், அந்த 'சொல்லை' கண்டு, அஞ்சி, ஒதுங்கிய போக்கானது, அந்த 'போலி வீரத்திற்கு' வலு சேர்த்ததா? அந்த 'அசிங்க' போக்கினால், இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளிலும்,  'அசிங்க பார்வை' என்ற குறிப்பாய மாற்றமும் (Paradigm Shift) நிகழ்ந்ததா? காலனிய சூழ்ச்சியில், இந்தியாவிற்குள் -தமிழ்நாட்டினுள்- அறிமுகமானசெவ்வியல்-classical/நாட்டுப்புறம்-folk வரிசையில், மேற்குறிப்பிட்ட பெண்ணின் பாலியல் உறுப்புகள் பற்றிய  'அசிங்க' பார்வையும், மேற்கத்திய இறக்குமதியாக இருந்ததா? அதன் விளைவாகவே, மேற்கத்திய ஆய்வாளர்களும், அவர்கள் வழியில் 'பகுத்தறிவாளர்களும்', பண்டை இலக்கியங்களிலும், புராணங்களிலும் குறைகள் காணும் போக்கும், அரங்கேறியுள்ளதா? 
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) 

அந்த மேற்கத்திய குறிப்பாயத்திலிருந்தும், அதன் மூலம் உருவான 'நாகரீக' போக்கில் சிக்கி, ஒதுங்கி, பொதுவாழ்வை சிற்றினத்தின் 'ஏக போகமாக்கும்' நோயிலிருந்தும், 'விடுதலை'  ஆகாமல், தமிழின், தமிழரின் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்கமுடியுமா? மேலே குறிப்பிட்ட 'நாகரீக' மனிதர்களும், 'அடிமை தாழ்வு  மனப்பான்மை நோயில்' சிக்கிய 'கெட்ட சொல் வீரர்களும்', ஒருவரையொருவர் வளர்த்து வரும், ஒரே நோயின்நாணயத்தின் -  இரு பக்கங்களாகும்
(‘சங்க இலக்கியங்கள்-சமூகவியல் வெளிச்சத்தில் சிம்புவின்  'பீப்'  பாடல்’; http://tamilsdirection.blogspot.com/2016/08/blog-post.html

பொதுவாழ்வை சிற்றினத்தின் 'ஏக போகமாக்கும்' சமூக நோயானது, சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளை' அதிவேகமாக எண்ணிக்கையில் வளர்த்து, அது ஆண்ட/ஆளும் கட்சிகளின் ஊழல்களுக்கு பாதுகாப்பு அரண் ஆனது; தமிழ்வழிக்கல்வியையும், அரசு கல்லூரிகளில் படித்த/படிக்கும் மாணவர்களின் கல்வியையும் சீரழித்து.

தமிழ்நாட்டில் இன்றும் எந்த பிரச்சினைக்கும் மாணவர்கள் போராட்டம் நடந்தால் பாதிக்கப்படுவது அரசு கல்லூரிகளே ஆகும். 'மாணவர்கள் படிக்கிற காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு, கல்வியையும், வாழ்க்கையையும் இழக்கக்கூடாது' என்று .வெ.ரா அவர்களுக்குப் பின் துணிச்சலாக அறிவித்தவர் நடிகர் ரஜினி காந்த் ஆவார். கல்லூரிகளில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய, மாணவர் விடுதிகளின் கல்விச்சூழலைக் கெடுத்த 'ரவுடி மாணவர்கள்' பிடியில் இருந்து விடுவிக்க முயற்சிகள் செய்து தோற்ற, என்னைப் போன்றவர்களுக்கே, அந்த அறிவிப்பின் சமூக முக்கியத்துவம் புரியும்.

கோழை எலிகளாக இருந்து, சமூக உயிரியல் மாற்றம் (Social genetic transformation) பெற்று, சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளாக' மாறியவர்களில், 'சில' அதிபுத்திசாலிகள் குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெற்று பேராசிரியர்கள் ஆன போக்கின், அடுத்தக்கட்ட வளர்ச்சியாகவே;

முன்னாள் இன்னாள் துணைவேந்தர்களில் 'ஏலம்'/ ‘அரசியல் செல்வாக்கு’(?) மூலமாக, தகுதி மிகுந்தவர்களை எல்லாம் பின் தள்ளி, பதவி பெற்றவர்கள் யார்? என்ற விவாதமானது இன்று அரங்கேறியுள்ளது.


அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, தமது நிலைப்பாடுகளில் வெளிப்படும் குறைகளையும், தவறுகளையும் ஒப்புக்கொண்டு, திருத்தி பயணிப்பதே, ஒரு சமூகத்தில் புலமையின் வளர்ச்சிக்கு துணை புரியும். மாறாக 'தொல்காப்பிய பூங்கா'வின் குறைகளை வெளிப்படுத்திய தமிழறிஞர் நக்கீரன் சாகும் வரை சந்தித்தது போல, விமர்சித்தவர்களை தமக்குள்ள செல்வாக்கின் மூலம் இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் பயணித்த‌ 'பிரபலங்களின்' காலம் முடிந்து விட்டது. இது டிஜிட்டல் யுகம். அறிவுபூர்வ விவாதங்ளுக்கான தடைகள் நீங்கி, தமிழ் இனி வளர்ச்சி திசையில் பயணிக்கும் காலமும் தொடங்கி விட்டது.
(https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

ஐரோப்பிய‌ நாடுகளில் சட்டம் செய்ய முடியாததை செய்யும் வலிமையானது, சமூகத்தில் இன்றும் இருப்பதால்;
 
பொதுஒழுக்கக்கேடு குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள் பதவி விலகி வருகின்றனர். கட்சித் தலைவர்கள் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலகி வருகின்றனர். அரசியலில் குட்டிக்கரணம் ஒருமுறை அடித்தாலே, வெளியில் தலையைக் காட்ட வெட்கப்படும் சமூக சூழலே அந்நாடுகளில் உள்ளன; 1967க்கு முன்பு இருந்த தமிழ்நாட்டைப் போலவே.
(https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2019-04-24T03:01:00-07:00&max-results=7&start=1&by-date=false


Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)


(வளரும்)