Sunday, June 30, 2019


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் தெரியாத அபாயங்கள்                            


நானறிந்த வரையில், இந்தியாவில் அணு மின் திட்டங்களுக்கு எதிராக வெளிவந்த முதல் ஆங்கில நூல்:

Dhirenda Sharma, ‘India's Nuclear Estate’ (1983)

அமெரிக்காவின் ஆதரவுடன் இந்தியாவில் அணு மின் திட்டங்கள் தொடங்கி வளர்ந்த போது, வெளிவராத எதிர்ப்புகள் இருந்த நிலையில், ரஷ்யாவின் ஆதரவில் இந்தியாவில் அணு மின் திட்டங்கள் தொடங்கும் சூழலில் தான், மேற்குறிப்பிட்ட நூல் வெளிவந்ததும் கவனிக்கத் தக்கதாகும்.

இயற்பியல் (Physics) பேராசிரியராக இருந்து, அணுசக்தி பற்றிய அபாயம் அறிந்த நான், மேற்குறிப்பிட்ட நூல் வெளிவருவதற்கு முன்னேயே, 1970-களின் கடைசியில் இருந்தே, அது பற்றி என்னால் இயன்ற வரை பிரச்சாரம் செய்தேன். கூடங்குளம் திட்டம் துவங்குவதற்கு முன்னேயே, ‍'Indian Express ' ஆங்கில நாளிதழில் 'வாசகர் கடிதம்' பகுதியில், எனது மடல் வெளிவந்தது. திராவிடர் கழகம் சார்பாக வெளிவந்த மாத இதழ் 'உண்மை', திருச்சி பெல் திராவிடர் தொழிலாளர் கழக செய்தி மடல் போன்றவற்றில் எழுதி, பின்னர் திருச்சி பெரியார்  மையம் சார்பாக  'அணு சக்தியா? அழிவு சக்தியா?' என்ற தலைப்பில் சிறு நூல் வெளியிட முடிந்தது.  அதன் இரண்டாம் பதிப்பு 1990 ஏப்ரலில் வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்த வருடம் ஞாபகமில்லை.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு', 'வஞ்சிக்கப்படும் விவசாயம்', இரண்டுமே எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, தி. வெளியீடுகளாக வந்தவையாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியானது, கி.வீரமணி ஆதரவுடன், தி. சார்பில் செலவு செய்து, இரத்தினகிரி, புலவர் இமயவரம்பன் ஒத்துழைப்புடன், திருச்சி பெரியார் மாளிகையில் ஒரு குழு 'அர்ப்பணிப்பு' உணர்வோடு பணியாற்றி உருவாக்கியதாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியில், மின் இணைப்புகள் கொண்ட ஒவ்வொரு 'போர்டும்' (Card Board with small bulbs), அதன் உள்ளடக்கமும் (content), எனது மேற்பார்வையில் உருவானவையாகும்;

அதனை தமிழ்நாடெங்கும் கண்காட்சியாக நடத்தியதில் கோவை.இராமகிருட்டிணன் முக்கிய பங்கு ஆற்றினார்

அதனைத் தொடர்ந்து, கூடங்குளம் பிரச்சினையில் தூத்துக்குடியில் இருந்து தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்பாக தொடர் நிகழ்ச்சிகள் நடத்தும் யோசனையை, கோவை.ராமகிருட்டிணனிடம் வலியுறுத்தினேன். ஆனால் அது செயல்வடிவம் பெறவில்லை.

அந்த காலக் கட்டத்தில், 'ஜீனியர் விகடன்' போன்ற இதழ்களில் நாகார்ஜினன் என்ற பத்திரிக்கையாளர் அணு உலை அபாயம் தொடர்பான கட்டுரைகள் எழுதினார். பேரா. . மார்க்ஸ் அவர் கல்லூரிகளில் உரையாற்ற ஏற்பாடு செய்தார். சில காலம் கழித்து, அவர் பற்றிய எதையும் நான் படிக்கவில்லை. அவரை நான் பார்த்ததுமில்லை. 1990களின் பிற்பகுதியில் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், அவர் என்னைச் சந்தித்தார். தான் டெல்லியில் வசிப்பதாகவும், இளையராஜவின் இசை குரு மறைந்த தன்ராஜின் இசை தொடர்பான ஆய்வுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள என்னைச் சந்தித்ததாகவும்  சொன்னார். அந்த இசைக்குறிப்புகள் தொடர்பாக நான் ஏற்கனவே இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரை சந்தித்த போது, அவர் தங்கள் வசம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்து, தன்ராஜிடம் இசை படித்த அப்துல் என்பவரிடம் விசாரிக்குமாறு சொன்னார். அதன்பின், அம்முயற்சியில் நான் தொடரவில்லை. அந்த தகவலை நான் நாகர்ஜினனிடம் தெரிவித்தேன். அவர் விடை பெற்று சென்றார். அதன்பின் இன்று வரை, அவர் அணு உலை எதிர்ப்பு தொடர்பாக, ஏதும் செய்து வருகிறாரா? என்பதும் எனக்கு தெரியாது.

கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில், பெரிய அளவில் போராட்டம் நடந்த போது, சிலர் என்னிடம் அது பற்றி கருத்து கேட்டார்கள்.

அது பற்றி, கீழே குறிப்பில் உள்ள கட்டுரை 2011 நவம்பரில் எழுதி, என்னுடன் ஈமெயில் தொடர்பில் இருந்தவர்களுக்கு அனுப்பினேன்.

பின்னர் 2016 இல் கீழ்வரும் கருத்தினையும் பதிவு செய்தேன்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு நிதி NGO உதவி  இல்லாமல், சுயபலத்தில்,  'அணு சக்தியா? அழிவு சக்தியா' (1990) என்ற தலைப்பில் 'திருச்சி பெரியார் மையம்' வெளியிட்டதை, தமிழ்நாட்டு 'முற்போக்குகள்'/ NGOக்கள் புறக்கணித்து, தும்பை- அத்திட்டத்தை வேறு மாநிலத்திற்கு 'இடம் பெயர' இருந்த வாய்ப்பை- விட்டு விட்டு, இன்று வாலைப் பிடித்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தாமல், அணு உலையை மூடுமாறு, குவியப்படுத்தியது சரியா? (July 6, 2016 - ‘நாடு பயணிக்கும் போக்கில்: நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?’; 

இன்று கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் யார்? யார்? மேற்குறிப்பிட்ட எனது முயற்சிகளுக்கு உதவினார்கள்? அல்லது புறக்கணித்தார்கள்? அவ்வாறு புறக்கணித்தவர்களுக்கு,  அணு உலை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வெடித்தகூடங்குளம் போராட்டத்தில் கலந்து கொள்ள எப்படி 'ஞானோதயம்' வந்தது?

காவிரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்ற இன்னும் பல பிரச்சினைகள் எல்லாம் தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளாகும். ஆனால் 'நீட் தேர்வு' எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பிரச்சினையாகும்.

அதில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன.

ஒன்று இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கும் கோரிக்கையை துணிச்சலுடனும், அறிவு நேர்மையுடனும் முன்னெடுப்பது.(இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார சூழலில், சர்வதேச ஆதிக்க சக்திகளின் பகடைக்காய்களாகவே, தனிநாடு போராட்டங்கள் இரையாகி வருவதையும் நான் எச்சரித்துள்ளேன்; 

இரண்டாவதாக, மொழிப் பிரச்சினை (நீட் பிரச்சினையைப் போலவே) என்பதானது, இந்தியாவின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். அதில் காரியம் சாதிக்கும் நோக்கில் தான், இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்படுவதே புத்திசாலித் தனமாகும். (‘'நீட்' எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்; தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதத்திற்கு எதிராக பயணிப்பவர்கள் யார்?’;

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படாமல் போகுமானால், அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள மற்ற அணுமின்நிலையங்களும் செயல்படாமல் போகும். இந்தியாவின் எதிரிகளுக்கு அதைவிடபெரியவெற்றி இருக்கமுடியாது. அதன்பின் இந்தியா அணுசக்தி வலிமையுள்ள சீனா போன்ற நாடுகளின் கொத்தடிமையாக தான் பயணிக்க முடியும், அதன்பின் கூடங்குளம் மட்டுமல்ல, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, எண்ணெய் கிணறுகள் உள்ளிட்டு எந்த பிரச்சினை தொடர்பாகவும், தமிழ்நாட்டில் எவரும் எந்த நியாயத்திற்காகவும், வெளிநாட்டு நிதி உதவியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் அநியாயத்திற்காகவும், போராட்டங்கள் நடத்த முடியாது; சீனாவில் உள்ளதைப் போலவே.

வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களிடம், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் அந்தந்த நாட்டு குடிமக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அளவுக்கு இந்திய தூதரகம் செயல்படுவதில்லை என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். மோடி பிரதரான பின்னர், இந்திய தூதரகம் செயல்பாடுகள் மேம்பட்டிருப்பதாகவும், உலக அளவில், இந்தியரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். அது போல மோடி  பிரதமராகும் முன், இந்தியாவில், குறிப்பாக  சீன இறக்குமதிகள்  லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் சீர்குலையும் அளவுக்கு, தமிழ்நாட்டின் உற்பத்திகளை சீர்குலைத்தது உண்மையா? மோடி பிரதமரான பின்னர், அது போன்ற, குறிப்பாக சட்ட விரோத சீன இறக்குமதிகள் குறைந்துள்ளனவா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். இதில் ஒரு வினோதமும் உண்டு. மோடி பிரதமரான பின்னர், இந்தியாவுக்க்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் மேம்பட்டுள்ளதா? என்றும், ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். 

தனி மனிதரானாலும், நாடானாலும், வலிமை இருந்தால் தான் எவரும் மதிப்பார்கள். பலகீனமான மனிதரும் நாடும், ஏமாளிகளாகவே பயணிக்க நேரிடும்.

மக்களின் துயரங்களை உணரும் திறனுள்ள (Sensitive), ஊழலற்ற அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பது இயல்பு. அந்த வகையில் தமிழ்நாட்டின் நலனை முக்கியமாக கருதி, பலரின் நிலங்களும், கிராமங்களும் இடம் பெயர்ந்தே, திருச்சியில் பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க், சென்னை ..டி போன்ற இன்னும் பல பெரிய தொழிற்சாலைகளும், மத்திய கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் 1967க்கு முன் வந்தன. மக்களிடம் நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு ஊழலில் சிக்கிய அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம், மக்கள் சந்தேகிப்பதையும், எதிர்ப்பதையும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சியை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை, அந்நிய நாடுகளின் நலன்களுக்காக, கெடுக்கும் முயற்சிகளை அனுமதிப்பதானது, தமிழ்நாட்டை இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக்கி விடும் அபாய திசையில் பயணிக்கச் செய்யும்.

ஸ்டெர்லைட் ஆலை முடக்கம் காரணமாக, இந்தியாவிற்கு தாமிரத்தை விற்று வரும் சீனா போன்ற நாடுகள் ஆதாயம் பெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தமிழ்நாட்டுக்கும் ஒரு பாடமாகும்;

ஊழல் வலையில் சிக்கி, சுற்றுப்புற சூழலை கெடுத்து வரும் பிற ஆலைகள் எல்லாம், ஊழல் செலவினத்தை குறைத்து, சரியான கழிவு அகற்றல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்தி, போராட்டத்திற்கான 'நியாயங்கள்' எழுவதற்கு இடமில்லாமல் செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஆலைகள் எல்லாம், 'ஸ்டெர்லைட் பாணியில்' மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழந்து, தரகு/திருட்டு போன்ற தொழில்களின் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சீரழிய இருக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும். (‘'ஸ்டெர்லைட் பாணியில்'  செயல்படும் ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் சிக்கியுள்ளதமிழ்நாடு?’; 
http://tamilsdirection.blogspot.com/2018/05/

இன்றைக்கு .நா பாதுகாப்பு அமைப்பில் (United Nations Security Council) அமெரிக்கா, ரஷ்யாபிரிட்டன், பிரான்ஸ்  சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளும் எந்த வலிமையில் இடம் பெற்றுள்ளன? அணுசக்தியில் வலிமை பெற்றதன் காரணமாகவும், தமது செல்வாக்கு வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியாவும் அந்த அமைப்பில் இடம் பெற முயல்கிறது.

என்னுடைய(எனது நாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்த நேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை.

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!!

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும்.

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.” – 'பெரியார்' .வெ.ராவின் ஆதரவாளர்
(http://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html )

உலகில் செல்வாக்குள்ள நாடுகளில் இந்தியா இடம் பெற வேண்டும்: ஏமாளி நாடுகளின் வரிசையில் இடம் பெறக் கூடாது.

அது போல, இந்தியாவில் கல்வியில், வேலைவாய்ப்பில், முன்னேறிய மாநிலங்களின் வரிசையில் உள்ள தமிழ்நாடு, பின் தங்கி ஏமாளி மாநிலமாகக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையாக இருந்தாலும், வேறு எந்த திட்டமாக இருந்தாலும், உலகில் மற்ற நாடுகளில் எந்த நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுகிறது? என்று விசாரித்து, 'அந்த' அளவுக்கு சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும். ஊழல் வழிகளில் தவறாக தொடங்கி, செயல்பட்டால், முதலில் 'அந்த' ஊழல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். பின்னர், மேற்குறிப்பிட்ட முறையில் உலகில் சிறப்பாக செயல்படும் முறையை அடையாளம் கண்டு, அந்த முறையில் 'அந்த' ஆலை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். போட்டிகள் அதிகரித்து வரும் உலகில், கையில் இருப்பதை சரியாக வளர்த்து வாழ்வது புத்திசாலித்தனமா? இருப்பதை இழந்து, தமிழ்நாட்டில் எவரும் தொழில் துவங்க பயந்து ஓடச் செய்வது புத்திசாலித்தனமா

வெளிநாடுகளில் கட்டிட வேலைகளுக்கும், கழிவறை சுத்தம் செய்யும் வேலைகளுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் போக வேண்டுமா? அது முடியாதவர்கள் தரகு, திருட்டு நிபுணர்களாக வளர வேண்டுமா? எந்த திசையில் தமிழ்நாடு பயணிப்பது? என்பதை யோசித்தே, ஆலைகளை மூடும் போராட்டத்தையும், புதிய திட்டங்களை எதிர்க்கும் போராட்டத்தையும் திட்டமிட வேண்டும்.

 'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
 துணை வலியும் தூக்கிச் செயல்' - திருக்குறள் 471


கேரள மாநிலமானது அணு உலைகளைக் கட்ட அனுமதிக்காமல், தமிழ்நாடு உள்ளிட்டபிற மாநிலங்களிலுள்ள அணு உலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் பங்கு பெறுகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே, எனது முயற்சி தொடங்கிய போது, இன்று கூடங்குளம் பிரச்சினையில் போராடுபவர்கள் ஒத்துழைப்பு நல்கியிருந்தால், அது வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம். இனி அணுமின்நிலையங்களின் பாதுகாப்பினைக் குவியப்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அணு மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது, முதலில் தமிழ்நாட்டின் மின் தேவைகளை பூர்த்தி செய்து, எஞ்சிய மின்சாரம் மட்டுமே, பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுப்பதே சாத்தியமானதாகும்.

மேற்குறிப்பிட்ட குறள் வழியில் இருந்து தடம் புரண்டு, உணர்ச்சி பூர்வமாக தூண்டி, ஊரான் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து போராடும்;

தமது குடும்பப் பிள்ளைகள் ஒழுங்காகப் படித்தாலும், படிக்கா விட்டாலும், நன்கு 'செட்டில்' செய்து வாழும் 'மனித உரிமை, சமூக நீதி' தலைவர்களையும், அவர்களின் ரசிகர்களையும் நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்றுவதன் மூலமாக;

குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை, அவர்களிடமிருந்து காப்பாற்றிய புண்ணியம் நம்மைச் சேரும். 

நமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வாழ்வு; ஊரான் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் படிப்பையும் வாழ்வையும் தொலைத்து சமூக விட்டில் பூச்சிகளாக வீணாகும் வகையில், நமது வாழ்வு; என்று பயணித்தால், அதற்கான இயற்கையின் தண்டனைகளில் இருந்து நாம் தப்ப முடியாது.



குறிப்பு: 2011 நவம்பரில் எழுதியது

                    கூடங்குளம்: தெரியாத அபாயங்கள்


உலக அளவில் விவாதத்தில் உள்ள ஒரு பிரச்சினையை, தேச அளவில் ஒட்டு மொத்த நலன்களைக் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்க வேண்டிய பிரச்சினையை, ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியின் பிரச்சினையாக முன்னெடுத்துப் போராடுவது எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு கூடங்குளம் போராட்டம் முன்னுதாரணமாக இருக்கிறது.



அணுசக்தி தேவை தானா, இல்லையா என்ற விவாதம் உலக அளவில் நடந்து வருகிறது.அதே நேரத்தில் அதிக அளவில் அணுகுண்டுகளை தம் வசம் வைத்துக் கொண்டு வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அது மட்டுமல்ல, மற்ற நாடுகள் தாமாக தமது பாதுகாப்புக்காகக் கூட அணுகுண்டு தயாரிப்பதைத் தடுத்து வருகின்றன.அதையும் மீறி அணுகுண்டு தயாரித்துள்ள நாடுகள் இந்தியாவும் சீனாவும் ஆகும். சீனாவின் துணையோடு பாகிஸ்தானும் அணுகண்டுகளைத் தயாரித்து வைத்துள்ளதுபாகிஸ்தானில் உள்ள அரசின் கட்டுப்பாட்டில் அந்த அணுகுண்டுகள் இருக்கின்றனவா என்ற ஐயம் உலக அளவில் எழுந்துள்ளதுஇந்தியாவிற்கு எதிராக அவைப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.



                         இந்தியாவிற்கு எதிரான அபாயங்கள்




இந்தியாவை நோக்கி பாகிஸ்தானிடம் 80 அணுகுண்டுகளும், சீனாவிடம் 240 அணுகுண்டுகளும் உள்ளன என்பதையும், அந்த ஆபத்தை சமாளிக்க இந்தியாவிடம் 100 அணுகுண்டுகள் மட்டுமே இருக்கின்றன என்பதையும் திரு.குருமூர்த்தி (New Indian Express 15 Nov 2011)தெளிவுபடுத்தியுள்ளார்.



அணுகுண்டுகள் தயாரிக்க அணுமின் நிலையம் தேவை. எந்த அணுமின் நிலையத்தில் அணுகுண்டு தயாரிப்பு நடைபெறுகிறது என்பதை ஒவ்வொரு நாடும் தேச ரகசியமாகக் காப்பாற்றி வருகின்றன. எனவே அணுகுண்டைத் தம் வசம் வைத்துள்ள எந்த நாட்டிலும் அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன, புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன.



சீனாவில் ஏற்கனவே 14 அணுமினநிலயங்கள் உள்ள நிலையில் புதிதாக 27 அணுமின்நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜப்பான் அணுமின் நிலைய விபத்திற்குப் பிறகு புதிதாக அனுமதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஆனாலும் சீனாவின் ஒட்டு மொத்த அணுஆற்றல் திட்டமுறைத் தொடரும். (China's overall nuclear energy strategy would continue)  என அந்நாட்டு சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.



அணுத் திட்ட முடக்கம்: ‍எதிரிகளிடம் சரணடைவதின் தொடக்கம்




இந்தியாவில் மகராஸ்டிரத்தில் தாராப்பூரிலும்ராஜஸ்தானில் ராவட்பட்டாவிலும்,தமிழ்நாட்டில் ல்பாக்கத்திலும், உத்திரப்பிரதேசத்தில் ரோராவிலும்குஜராத்தில் க்ரபாரிலும்ர்னாடகாவில் காய்காவிலும், அணுமின்நிலையங்கள் இயங்கி ருகின்ற‌.





ராஜஸ்தானில் 2 நிலையங்களும்,குஜராத்தில் 2 நிலையங்களும், மிழ்நாட்டில் கூடங்குளத்தில் 2 நிலையங்களும் ட்டப்பட்டு ருகின்ற‌.



பாகிஸ்தானில் சீனாவின் உதவியோடு 6 அணுமின்நிலையங்கள் ட்டப்பட்டு ருகின்ற‌.



இந்தியாவில் உள்ளஅணுமின் நிலையங்களின் செயல்பாடு முடக்கப்பட்டால், சினாவிடமும், பாகிஸ்தானிடமும் இந்தியா டைவதைத் விரவேறு ழியில்லை.

                 றாகழி நத்துபர்கள் தேசவிரோதிகளே


கூடங்குளம் போராட்டத்தில் மேற்கூறியவிஷயங்கள் தெரியாமல் அப்பாவித்தமாகப் ர் ங்கேற்றுள்ளர். ஆனால் அவர்களைத் றாகழிநத்திக் கொண்டிருக்கிறர்களுக்கு இவைத் தெரியாமல் இருக்க‌ முடியாது. எனவே இப்போராட்டதிற்குப் பின்னணியில் உள்ளமும், த்திரிக்கைப் மும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது அவசியமாகும்.

உண்மையில் அத்தலைவர்களுக்கு க்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருக்குமானால், வெளிநாட்டில் துக்கி வைக்கப்பட்டுள்ளறுப்புப் த்தைக் கொண்டு ந்து க்கள் னுக்குப் ன்படுத்தவேண்டும் என்றபோராட்டத்தில் தானே தீவிரம் காட்டியிருக்கவேண்டும்.

எந்தஅந்நிய க்திகளுடனும் தொடர்பில்லாமல் , உண்மையாகஇப்போராட்டத்தில் ங்கேற்றர்கள் மேற்கூறியற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படாமல் போகுமானால், அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள மற்ற அணுமின்நிலையங்களும் செயல்படாமல் போகும்.இந்தியாவின் எதிரிகளுக்கு அதைவிடபெரியவெற்றி இருக்கமுடியாது. எனவே அதற்காகக்களைத் றாகழிநத்துபர்கள் தேசவிரோதிகளே.

                       கூடங்குளம்: விழிப்புணர்வுக்கு வெற்றியே


ஆனால் கூடங்குளம் போராட்டம் அணுமின் நிலையபாதுகாப்பின் அவசியம் குறித்தஒரு தேசியவிழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அப்பிரச்சினை கூடங்குளம் ட்டுமின்றி, இந்தியாவில் உள்ளஅனைத்து அணுமின் நிலையங்களைப் ற்றியபிரச்சினையாகும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்டு அணுமின்நிலையங்களைக் கொண்டுள்ளநாடுகளில் உள்ளக்களின் பிரச்சினையாகும்

எனவே அணுமின்நிலையஎதிர்காலம் ற்றியவிவாதம் உலஅளவில் அறிவுபூர்வமாகடைபெற்று, உலஅளவில் ரியாகமுடிவெடுத்து டைமுறைப் டுத்தவேண்டியஒன்றாகும். அதை உள்ளூர் பிரச்சினையாகக் ருதி உணர்வுபூர்வமாகச் செயல்படுவது ற்கொலையாகவே முடியும்.

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1