Tuesday, January 28, 2020

           ‘Periyar’ parties’ ipso facto rejection of EVR


   LTTE Prabakaran replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu?


During the 50th anniversary of Thuglak programme, Rajni cited the 1971 Salem DK anti-Hindu Gods procession related Thuglak ban by then CM Karunanidhi, as the boost for Thuglak circulation. The violent criticisms opposing Rajni & foiled bomb attack on Thuglak editor Gurumurthy implied ‘Periyar’ parties’ ipso facto rejection of EVR who till his death did not meet criticism with violence. Any doubt? Read Jayakanthan’s experience of criticizing EVR in front of him on the stage. 

Communist leader D.Raja had similar experience when he criticized Thuglak in front of Cho on the stage, as shown in the following link.

 

Both E.V.R and Thuglak encouraged criticisms on their stage. If ‘Periyar’ parties resorted to violence and agitation to meet the criticisms, will it not mean ‘Periyar’ parties’ ipso facto rejection of EVR.

The social disease of meeting the criticism with killing was introduced by LTTE Prabakaran. Those who criticized him both within LTTE as well as outside from different Elam groups, were brutally killed. Many TULF leaders including Amirthalingam, TELO, PLOT, EPRLF, etc leaders and trained militants in those groups were killed. An objective assessment of the killing of Elam liberation leaders and their trained cadres, may rank Prabakaran above Rajapaksa. Now ‘Periyar’ parties seemed to be infected with that social disease.

Interestingly, some pro-LTTE parties in TN had started criticizing E.V.R.  Unlike E.V.R’s ‘Periyar image balloon’, Prabakaran’s ‘mAveeran image balloon’ can easily be pricked by criticism to burst it. Even to counter pro-LTTE parties’ criticism of E.V.R, ‘Periyar parties’ fail to criticize Prabakaran, suggesting their servile to Prabakaran, and misusing ‘Periyar’ as a mask to fool TN. Late E.V.R’s  welcoming criticisms, and EVR’s yardstick for public life, would be incompatible with late LTTE Prabakaran’s approach.(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html) 

Hence, after relinquishing E.V.R’s stand on violence to support LTTE, E.V.R was misused as a mask by the ‘Periyar’ parties; draining the goodwill for E.V.R among the public to encourage the anti-EVR chauvinists both in pro & anti Hindutva circles. 
(http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

During 1980s, when then PM Indira Gandhi started encouraging Elam separatist groups to serve her selfish political interests, LTTE was trailing behind TELO (supported by DMK), PLOTE (supported by a section of DK). The present ‘Periyar’ parties’ leaders were aware of my role in strengthening LTTE to overtake TELO & PLOTE. During those periods, I was in the circle of Anton Balasingham, Professors Nirmala & Nithiyanandam. When the journalist Anita Pratap (if my memory is right) wanted to interview Prabakaran, she was told that she had to submit her questions and answers would be delivered to her. All the answers were written by Balasingham, and the interview was published with world wide attention, serving as the first boost to building Prabakaran’s image balloon. In my view, of all the LTTE leaders I had met, Prabakaran was the least intelligent, who could not even understand the answers in that interview. As Prabakaran started exhibiting megalomaniac tendencies, Nirmala & Nithiyanandam discussed it with Balasingham in my presence. As Balasingham was suggesting patience to handle Prabaharan, Nirmala exclaimed “Is he a baby to handle?”. Later Nirmala, Nithiyanandam and Raghavan, one of the founder leaders of LTTE, left LTTE, and I started distancing myself from LTTE. 

In fact, such unhappy experiences forced me to quit my public life and divert to music research. To my surprise, my research applying ‘Physics of Music’ to the ancient Tamil texts, revealed how E.V.R was wrong on the ancient Tamil texts, and how he contributed to a complex psychological Tamil Identity distortion related social diseases in TN. (https://tamilsdirection.blogspot.com/2020/01/how-e.html) As a result, E.V.R had become a victim during the 1965 anti-Hindi agitation and later becoming a ‘Periyar mask’ for the ‘Periyar’ parties worshipping Prabakaran; to silence those opposing them with violence including killing. 

Reactions of the ‘Periyar’ parties to the Rajni’s above mentioned comment, suggest their addiction to argumentum ad hominem. (refers to a fallacious argumentative strategy whereby genuine discussion of the topic at hand is avoided by instead attacking the character, motive, or other attribute of the person making the argument, or persons associated with the argument, rather than attacking the substance of the argument itself.; https://en.wikipedia.org/wiki/Ad_hominem )

Commenting on the 2009 election results after the mullivaikkal tragedy;


“The outcome of the recent elections in Tamil Nadu has been the defeat of the most faithful of the LTTE touts in India. These financial orphans of the LTTE have been thoroughly exposed because Tamilians do not care for the LTTE, contrary to media projections. The common joke today is that 'Puligal' (Tigers) have been reduced to 'Eligal' (Rats) because they (the LTTE) have had to hide in holes in the ground to try save themselves.” - Dr. Subramanian Swamy (https://www.news18.com/blogs/india/dr-subramanian-swamy/sri-lanka-post-ltte-12212-744210.html)


LTTE supporter Vaiko who praised Prabakaran as ‘mAveeran (great hero)’, after the death of Jayalalitha, hailed Sasikala as ‘veera mangai vElu nAchchiyAr (famous freedom fighter Tamil king vElu nAchchiyAr)’. With the support of pro-LTTE, pro-EVR, & anti-Hindutva leaders, Sasikala surrendered to Dr. Subramanian Swamy to become the CM of TN, unmindful of Dr.S.S calling LTTE as ‘Elis (rats)’ and 'chauvinist' Tamils as ‘porki’.

“One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation“ - Dr. Subramanian Swamy (http://tamilsdirection.blogspot.com/2017/02/) 

Those who have intellectual fear to respond to criticisms, and resort to violence are both ‘Eli & Porki’ -two-in-one. 

The following evidence suggest that Subramanian Swamy may be emulating E.V.R, as advised by Kanchi ‘Parmacharya’.

Ironically, in one of his tutorials to me by Parmacharya, God on earth, he said Periyar EVR had kept his vow to his parents to maintain the ancestral temple in Erode, which temple received first prize for the best maintained temple for years. Parmacharya also told me to learn from Periyar EVR how one man can change the thinking of crores of people with nothing but ideas.”

Only persons with a good ‘akam - அகம்’ and intellectual honesty could identify the human ‘Eli & porki’ worshipped by their ignorant followers. (‘The keys in ‘akam’ and ‘puRam’;  The innumerable mysterious treasures in the Nature and Society’; https://veepandi.blogspot.com/2019/10/the-keys-in-akam-and-puram-innumerable.html)

Periyar EVR, probably due to his lack of education, could not understand the multidimensional value of the Indian ‘purAnAs’ (religious stories), like many western writers ignorant of it, and hence missed the intellectual content in those texts.( http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

I doubt if ‘Periyar’ parties’ leaders have the moral courage and the intellectual strength of justifying EVR in 1971 Salem DK anti-Hindu God procession and burning of the picture of Ram, in EVR style. 

Will DK refute & publish a rejoinder to the following article in their journal 'The Modern Rationalist'?

‘The Psychological Damage Periyar’s Pseudo-Rationalism Did To Tamil Nadu’; https://swarajyamag.com/ideas/the-psychological-damage-periyars-pseudo-rationalism-did-to-tamil-nadu
 
LTTE Prabakaran seems to be replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu, fooling few of the mostly first generation educated youth by ‘affluent’ leaders with no transparency and accountability with respect to the financial sources for such anti-India activities.

‘Those making ‘loud anti-Brahmin & anti-Hindutva’ noises in Tamilnadu, can be categorized into two groups; one leading upper middle class & affluent life, and other mostly semi-literate leading lower middle class mostly from the poor families in the villages or slums in the city.

Unfortunately, the latter category could not probe, who all in the former category were the beneficiaries of foreign donors like Oxfam, Ford foundation, etc or linked to the ‘corrupt’ political leaders in India.’ 

Starting from 1965 all the suicides adored by the Dravida/Tamil parties till the recent suicides of chenkodi, Anita, innumerable suicides had taken place; none of them belonging to the families of Dravida/Tamil parties; without exception, almost all belonged to the poor families, mostly first generation educated. 

Taminadu is witnessing ‘Dravida corrupt Carcass eagle’ with one ‘anti-Hindutva’ wing of silencing the criticisms by branding the opponents as ‘Brahmin’s stooges’ & threatening them with violence;

and another ‘pro-Hindutva’ wing for sharing power with the BJP at the central govt. (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_26.html) 

Interestingly, why should there be so many small parties with Prabakaran as their role model for all such parties? It may suggest the ‘war among themselves’, probably for those financial sources. 

I had revealed how the separatist social forces in TN corrupted the Elam liberation groups to the damage of Tamilnadu. (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html) Also, I had explained how to undo the damages. (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html  & http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_98.html) 

From the reactions to Rajni’s comment on 1971 Salem anti-Hindu Gods procession, I infer that the ‘Periyar image balloon’ protection to the ‘Dravida Corruption’ seemed to be threatened by the comment. But till his death, E.V.R encouraged open criticisms and morality in public life. (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html )
 
Time has come for a serious probe to verify if the absence of serious scholarly challenges to Periyar EVR, after the Birth of DK in 1944,  had  caused an unique social mechanism enabling lumpen elements to rise up in the social ladder to become wealthy and powerful under the garb of  ‘anti-Brahmin Tamil sentiments’. Also, the probe shall include the role of the negative emotions in fooling the otherwise well-educated persons to encourage the above ‘lumpen elements.

If the followers of Periyar EVR & ‘anti-Hindu’ pro-Western intellectuals could come out of their mental prison, and wake up to the new findings, all antagonistic divisions, encouraged by the foreign funded NGOs,  will vanish. (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

Tuesday, January 21, 2020

துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் ரஜினியின் பேச்சு:


ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்: லாபமடைந்தவர்கள் 'பெரியார்'(?), துக்ளக், ரஜினி



 

1971 சேலம் மாநாட்டு ஊர்வலம் தொடர்பாக .வெ.ரா அவர்களின் விளக்கம்:
 
1971 சேலம் தி. மாநாட்டு ஊர்வலத்தில் இராமர் படத்தை எடுத்துச்சென்று, வடநாட்டில் இராவணன் பொம்மையை எரித்ததைப் போல, ஊர்வல முடிவில் எரிக்க இருந்ததை தெரிவித்து, ஊர்வல முடிவில் எரித்ததையும் .வெ.ரா அவர்கள் விளக்கியுள்ளார். மற்றபடி .வெ.ரா விளக்கியவாறே, கீழ்வரும் 
காணொளியில் அறிவுநேர்மையுடன் .வெ.ரா எதிர்ப்பாளரும் விளக்கியுள்ளார்.

பேச தெரியாம பேசி ரஜினி மாட்டிகிட்டாரு ! Ramasubbu Interview On Rajini Latest Speech’;  https://www.youtube.com/watch?v=mYp58rrnWf8&feature=youtu.be
 
'திராவிட மடத்தின் கலி.பூங்குன்றன், தனது கட்சித் தொண்டர்கள் ராமர் படத்தைச் செருப்பால் அடித்தார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.' (துக்ளக் 22 ஜனவரி 2020)

மேற்குறிப்பிட்ட ஊர்வலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்ததை எவரும் மறுக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட ஊர்வலத்தில் இந்துமதக்கடவுள்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, ஊர்வலத்தில் இடம் பெற்ற படங்களுடன் வெளிவந்த துக்ளக் தடைக்குள்ளானது. அதனால் துக்ளக் தமிழ்நாட்டில் பிரபலமாகி 'சர்க்குலேசன்' அதிகரித்தது.அதனைப் 'பெரியார்' கட்சிகள் மறுக்கவில்லை. அந்த தகவலை துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, அவமதிப்பு குறிப்பாக தெரிவித்த தகவலில் 'நிர்வாணமான ராமர் படத்தில் செருப்பு மாலை' அணிந்திருந்ததாகக் குறிப்பிட்ட தகவல் தவறு என்பது 'பெரியார்' ஆதரவாளர்களின் வாதம். ராமர் படத்தை செருப்பால் அடித்தது என்பதும், ராமர் படம் எரிக்கப்பட்டது என்பதும், ரஜினி தெரிவித்த அவமதிப்பை விட இன்னும் மோசமான அவமதிப்பு ஆகாதா? அந்த உண்மைகள் வெளிவர துணைபுரிந்த 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், பெரியாருக்கு (சோ தெரிவித்த) 'அனுகூல சத்ரு' என்பதும் வரலாற்றில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. 

தாமே வலிய வந்து வலையில் மாட்டுகிறார்கள்..அன்றைய சம்பவத்துக்கு இன்று கூட வழக்கு போடமுடியும் ..கடசி இன்றும் இருக்கிறது அன்றைய தலைவர் செய்த தவறுக்கு இன்றைய தலைவர் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும் ..முடியாது என்று சொல்ல முடியாது ..ஏனெனில் கடசி இன்னும் இருக்கிறது ......” (தினமலர் வாசகர் மடல்; https://www.dinamalar.com/news_detail.asp?id=2462748

இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இல்லாத விஷயத்தை நான் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்.’ – ரஜினிகாந்த் (https://www.dinamalar.com/news_detail.asp?id=2462725 )

'முதல் மாங்காய் லாபம் எவ்வாறு பெரியாருக்கு?' என்பதற்கான விளக்கத்தை அடுத்து பார்ப்போம்.

‘ "பெரியாரைத் தெரியுமா?" " தாடியோடு, கறுப்புசட்டை போட்டிருப்பார். அதற்கு மேல் ஏதும் தெரியாது" சி.பி.எஸ். (CBSE) பள்ளியில் +1 படிக்கும் மாணவனின் பதில்.

'விவேகானந்தரைத் தெரியுமா?'  'தெரியாது சார். யார் அவர்? ' பாலிடெக்னிக் படிக்கும் மாணவரின் பதில்.

'பெரியார் தெரியுமா?' சற்று யோசித்து "சாமி இல்லைன்னு சொன்னவர். அதுக்கு மேல அவரைப் பற்றி எதுவும் தெரியாது." பி.எஸ்ஸி (கணினி அறிவியல்} பட்ட வகுப்பில் முதல் இரண்டு ரேங்க் மதிப்பெண்கள் வாங்கும் மாணவி.

"பொது அறிவை வளர்த்து கொண்டால் தானே, வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி பெறலாம்." என்று நான் கூறினேன். "அப்போது அதற்கான புத்தகம் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். சார்' " என்று சொல்லி, இணையத்தில் 'கூகுள்' செய்திகள் படித்துக் கொண்டே, அடுத்து கேட்ட கேள்வி:" சிறிசேனா யார் சார்?". உடனே நான் ' ராஜபட்சே யார் என்று தெரியுமா?" என்றேன். அந்த பெண் " யார் சார் அவர்?" என்று கேள்வி எழுப்ப, அதிர்ந்து போனேன்.’ (‘'தமக்கென வாழா மன நோயாளிகள் '; http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html)

ஆர்வமுள்ளவர்கள் எந்த கட்சி சார்பின்றியும் உள்ள மிகப்பெரும்பான்மையான கல்லூரி மாணவர்களில் எவரையாவது சந்திக்க நேர்ந்தால், இயல்பான தமது உரையாடலின் ஊடே, மேற்குறிப்பிட்டவாறு கேள்விகள் கேட்கலாம். 

ஆத்திகராக இருந்தும் .வெ.ராவின் சமூகத்தொண்டுகளால் அவரை மதித்து, அவரின் இந்து மத எதிர்ப்பைப் பொறுத்துக் கொண்டவர்கள் எல்லாம் இன்று  சுமார் 60 வயதுக்கும் அதிகமானவர்களில் சிலரே ஆவர். மற்றபடி ஜி.சுப்பிரமணிய ஐயர், மதுரை வைத்திய நாத ஐயர், பாரதி போன்று உற்றத்தையும் சுற்றத்தையும் பகைத்துக் கொள்ளாமல், இரண்டு மூன்று தலைமுறைகளாக தமது சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டு கறுப்புச்சட்டைகளாக வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.

இந்துமதக்கடவுள்களை .வெ.ரா அவர்கள் விமர்சிக்கத் தொடங்கிய காலத்தில் கல்வீச்சு, செருப்பு வீச்சு உள்ளிட்ட பல வன்முறைகளைச் சந்தித்தார். அவ்வாறு எதிர்த்தவர்கள் மீது .வெ.ரா அவர்கள் வழக்கு போடவில்லை. அவரது பிரச்சாரத்தால், அவரை எதிர்த்தவர்களே மனம் மாறி அவரின் தொண்டர்களாகியிருக்கிறார்கள். இன்று .வெ.ரா இருந்தாலும் அதையே தான் செய்திருப்பார். அறிவுபூர்வ விவாதத்திற்கு ரஜினியை அழைத்திருப்பார். விவாத முடிவில் தமது நிலைப்பாடு தவறாக வெளிப்பட்டால், தயக்கமின்றி தன்னை மாற்றிக்கொண்டிருப்பார்.  (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

.வெ.ராவின் மறைவிற்குப் பிறகு அவரின் நிலைப்பாடுகள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பற்றி அறிந்திருந்தால், அவ்வாறே இன்று 'பெரியார்' கட்சிகள் பயணிப்பார்கள். (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html) இல்லையென்பதால், தடம் புரண்டு ரஜினி மீது வழக்கு தொடுத்தார்களா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.
  
போன தலைமுறை இளைஞர்களை விட, அதிகமாக  'பெரியாரை'த் தெரியாத‌, கடவுள் நம்பிக்கையுடன் கோவிலுக்குச் செல்லும் மாணவர்களின் இளைஞர்களின்  எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இந்துமதக்கடவுள்களை .வெ.ரா அவர்கள் விமர்சிக்கத் தொடங்கிய காலத்தில் கல்வீச்சு, செருப்பு வீச்சு உள்ளிட்ட பல வன்முறைகளைச் சந்தித்தார். இன்று இந்து கடவுள்களை விமர்சித்த .வெ.ராவின் ஒலி, ஓளிப்பதிவுகளை பொதுமக்கள் கூடும் இடங்களில் வெளியிட்டால், அதைவிட அதிகமான வன்முறைகளை இன்று சந்திக்க நேரிடும்.

"மறுபடியும் முதலில் இருந்தா?" என்ற வடிவேலு பாணி சிக்கலில் 'பெரியார்' கட்சிகள் யணிப்பது அவர்களுக்கும் நல்லதல்ல; தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. .வெ.ரா அவர்கள் வலியுறுத்திய காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையை உட்படுத்தாமல் பயணிப்பவர்கள் எல்லாம், கால ஓட்டத்தில் சருகாகும் மூடநம்பிக்கையாளர்கள் ஆவார்கள்.

'1971 சேலம் திக மாநாட்டு ஊர்வலத்தில் ராமர் படம் செருப்பால் அடிக்கப்பட்டது' என்று 'பெரியார்' ஆதரவாளர்களே ஒப்புக்கொள்ளும் சர்ச்சையை ரஜினி உருவாக்கி விட்டார். எனவே ரஜினி ரசிகர்கள் மூலமாக மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் 'பெரியார்' தொடர்பாக வெறுப்பு கலந்த ஆர்வம் வெளிப்பட்டு வளர்வது சாத்தியமாகலாம்

பிரபலமான நபர்களில் நானறிந்தது வரையில், தமது 'பிம்பத்தை' பற்றிய கவலையின்றி, தமது சுயசரிதையில், காந்தி தனது நிர்வாண பரிசோதனைகளை மறைத்தது போல மறைக்காமல், ஒளிவு மறைவின்றி தமது குறைபாடுகளை வெளிப்படுத்தியவர் பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். நிகழ்காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் பவ்லோ கொயெல்கோவின் (https://en.wikipedia.org/wiki/Paulo_Coelho ) ஒத்துழைப்புடன் எழுதப்பட்ட வாழ்க்கை சரிதை நூலிலும் (Biography) அதனைக் கண்டேன்

இந்தியாவில் தான் பொதுவாழ்வில் நுழைவதற்கு முன் 'அனுபவித்த' காமக் களியாட்டங்களை எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதி வெளிப்படுத்திய ஒரே தலைவர் .வெ.ரா ஆவார். அது போல பொதுவாழ்வில் நுழைந்து, பின்னர் மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு இருந்து 'நிர்வாண சபை'கள் பற்றி அறிந்து கொள்ள, கூச்சமின்றி, அந்த சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிர்வாணமாக சென்று புகைப்படம் எடுத்து, அந்த அனுபவத்தை மட்டுமின்றி, அந்த நிர்வாண சபையின் கொள்கைகள் பற்றி, தமது 'குடி அரசு' இதழில் தொடர்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது, அங்கிருந்த நிர்வாண சபையில் .வெ.ரா நிர்வாணமாக இருந்த புகைப்படமானது, 'பெரியார் எதிர்ப்பு' முயற்சிகளில் முக்கிய இடம் பெற்று வருவது தொடர்பாக;

'பெரியார் வழிபாட்டுப் போதையில்' பயணிக்காத, விமர்சனங்களின் ஊடே, தனிப்பட்ட முறையில் .வெ.ராவை மிகவும் மதிக்கும், .டி (Information Technology) துறையில் பணியாற்றும் ஒரு இளைஞர் கீழ்வரும் கருத்தினை தெரிவித்தார்.

பெரியாரின் நிர்வாண புகைப்படமானது கல்லூரி மாணவர்களின் பார்வைக்கு வரும்போது, அதுவரை அவரை தெரியாதவர்களுக்கு எல்லாம், 'அவர் யார்?' என்ற ஆர்வம் மிகுந்து, அவரைப் பற்றிய சரியான தகவல்களை எல்லாம், தேட தொடங்குவார்கள்.(‘ ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா?’; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html

பொதுவாக புதிதாக ஒருவர் மீது நாம் கோபப்பட்டாலும், அவர் யார்? என்று அந்த கோபத்தில் தேடத்தொடங்கிய பின், அவர் பொதுவாழ்வு வியாபாரியாக வாழவில்லை; அவரது நோக்கம் கெட்ட நோக்கமில்லை என்பது தெளிவானால், அவரைப் பற்றியஆராய்ச்சி தான் தொடங்கும்.

ஒரு குற்றத்தில், குற்றச்செயலை விட, குற்றத்திற்கான நோக்கமே முக்கிய இடம் பெறும்.

Mens rea (/ˈmɛnz ˈreɪə/; Law Latin for "guilty mind") is the mental element of a person's intention to commit a crime; or knowledge that one's action or lack of action would cause a crime to be committed.  ‘As a general rule, someone who acted without mental fault is not liable in criminal law.’ (https://en.wikipedia.org/wiki/Mens_rea)

நான் 'பெரியார்'கொள்கையாளராகப் பயணித்த காலத்தில், 'வெற்றிமணி' என்ற புனைப்பெயரில் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்நூலில் பிற்சேர்க்கையாக, கோட்சேயின் நீதிமன்ற வாக்குமூலத்தின் ஒருபகுதியை வெளியிட்டேன். சிறையில் காந்தியின் மகனுக்கும் கோட்சேக்கும் இடையில் நடந்த உரையாடலைப் படித்த போது (The Life and Death of Mahatma Gandhi. By Robert Payne), கோட்சே மீது மிகுந்த மரியாதை எனக்குள் ஏற்பட்டது: நான் 'பெரியார்' கொள்கையாளராகப் பயணித்த போதும்.

காந்தியை கோட்சே கொன்றது தவறு என்பதும், அதன் மூலமாக நேரு அரசியல் லாபம் பெற்று குடும்ப அரசியலில் காங்கிரஸ் சிக்க, அந்த கொலையே காரணம் என்பதும், எனது கருத்தாகும்.

கோட்சேயின் நீதிமன்ற வாக்குமூலத்தில் காந்தியின் இரட்டை வேடப் போக்குகளை வெளிப்படுத்தி உள்ளார். கோட்சேக்கு முன்னேயே, காந்தியின் இரட்டை வேடப்போக்குகளை உரிய சான்றுகளுடன் தமது 'குடி அரசு' இதழில் .வெ.ரா வெளியிட்டிருக்கிறார். எனவே கோட்சே எனக்கு மிகவும் மதிக்கத்தக்க நபராக வெளிப்பட்டதில் வியப்பில்லை.

கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது. தமிழ்நாட்டில் அந்த அறிவுபூர்வ அணுகுமுறையின்றி, உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் இருப்பதால் தான், விமர்சனம் என்ற பெயரில், சுயலாப நோக்கின்றி, இழப்புகளை சந்தித்து வாழ்ந்த தலைவர்களை எல்லாம் தூற்றும் போக்கும் தொடர்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html

'1971 சேலம் தி.க ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டன' என்ற உண்மையை ரஜினி வெளிப்படுத்தியதை, ஈ.வெ.ராவை அவமதித்ததாகக் கருதும் முட்டாள்த்தனத்திற்கும் அந்த போக்கே காரணமாகும். 

மேற்குறிப்பிட்ட பிரச்சினையில் ரஜினியை ஆதரிக்கும் சுப்பிரமணிய சுவாமி தமது டுவிட்டரில், 'ஆச்சார்யா' சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள் 'பெரியார்' .வெ.ரா அவர்கள் பற்றி தெரிவித்த கீழ்வரும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

"தமது பெற்றோர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி, ஈரோட்டில் தமது குடும்பப் பாரம்பரிய கோவிலை சிறப்பாக .வெ.ரா பராமரித்தார். அக்கோவில் சிறந்த பராமரிப்பிற்கான முதல் பரிசை பல வருடங்கள் பெற்றது. தமது கருத்துக்கள் மூலமாகவே பல கோடி மக்களின் சிந்தனையை எவ்வாறு மாற்றுவது? என்பதை பெரியார் .வெ.ராவிடமிருந்து ற்றுக் கொள்ளுமாறு பரமாச்சாரியா என்னிடம் கூறினார்." 

.வெ.ராவின் நிறைகுறைகளை வெளியிட்டு, கோட்சேயைப் போலவே .வெ.ராவும் மதிக்கத்தக்கவர் என்பதை நான் வெளியிட்டு வருகிறேன்.

உதாரணமாக;
தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றியவைத்தியமாகிவிட்டது  (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

ஆனாலும்;
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால், .வெ.ரா அவர்கள் 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீண்டு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகளில் எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணிப்பவர்கள் யார்?' என்று அடையாளம் கண்டு அகற்ற, .வெ.ராவின் திறவுகோலை அங்கீகரித்து, பாராட்டி, பயன்படுத்தும் காலமும், அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கருத்தாகும். (‘ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா?’ (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

அம்பேத்காரைப் போலவே, .வெ.ராவையும் இந்தியாவை உண்மையாக சுயலாப நோக்கின்றி நேசிப்பவர்கள் அங்கீகரிப்பார்கள். தமிழ்நாட்டில் 'அனுகூல த்ருகளாக' .வெ.ரா எதிர்ப்பில் சிலர் பயணித்தாலும், அந்த திசையில்  அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

“there is much in common between Periyar's Dravidian principles and the RSS ideology, as both advocate equality in society without caste and communal differences and class distinctions.” (https://www.deccanchronicle.com/nation/current-affairs/180518/rss-will-strengthen-roots-in-dravidian-turf-dr-manmohan-vaidya.html)

இன்று பேரா .மார்க்ஸை போற்றி பாராட்டும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும், வன்மையாக கண்டித்து வரும் இந்துத்வா ஆதரவாளர்களுக்கும், கீழ்வரும் தகவல் நம்பமுடியாததாக இருந்தால் வியப்பில்லை.

தஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், நான் 'பெரியார்' கொள்கையாளனாக வளர்ந்த காலக்கட்டத்தில், 'தமிழ்நாட்டை கெடுத்த பாவியாக பெரியாரை' சித்தரித்து பல கேள்விகளை எழுப்பிய பேரா.மார்கஸ் தான், அன்று எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற எனது நூலை எதிர்த்து நூல் வெளியிட்டு, பல கூட்டங்களிலும் (அவருடன் சென்று, அவர் மேடையில் அமர, நான் பார்வையாளனாக பங்கேற்ற‌) 'கடுமையாகவே' பேசினார். ஆனால் எங்கள் நிலைப்பாடுகளில் ஒருவரையொருவர் நோக்கத்திலோ, அறிவுநேர்மையிலோ, சந்தேகித்ததில்லை. ஏனெனில் அவரவருக்கு கிடைக்கும் உள்ளீடுகளைக்(inputs) கொண்டு, அவரவர் அறிவு அனுபவ அடிப்படைகளில் நிலைப்பாடுகள் மேற்கொள்வார்; என்ற புரிதல் எங்கள் இருவருக்கும் இருந்தது.  அந்த புரிதல் இன்றி நண்பர்களாக பயணிப்பவர்கள் யாராகஇருந்தாலும், அது 'அகத்தில் பொருந்தாமல், புறத்தில் பொருந்திய' நட்பு ஆகும். (திருக்குறள் 821; இசையியல் பொருள் உள்ள முதல் வரிக்கான உரைகள் எல்லாமே தவறு, என்று எனது ஆய்வில் நிரூபித்துள்ளேன்.-  http://musicresearchlibrary.net/omeka/items/show/2450)

காலத்தின் ''நகைச்சுவையை' ரசிக்க விரும்புபவர்கள் 1980 களுக்கு சற்று முன்னும், பின்னும், 'பெரியார் .வெ.ரா‍' பற்றியும், 'தேசியம்' பற்றியும் பேரா..மார்க்ஸ் எழுதி வெளிவந்த, கட்டுரைகளையும், புத்தகத்தையும் படிக்கவும்

இது டிஜிட்டல் யுகம். உள்நோக்கத்தில் எவரைப் பற்றிய நிறைகளையும் குறைகளையும் நீண்ட காலம் இருட்டில் தள்ளமுடியாது. ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களிடம் அம்பலமாகாமல் தப்பிக்கவும் முடியாது.

'இரண்டாவது மாங்காய் லாபம் எவ்வாறு துக்ளக்கிற்கு?' என்பதற்கான விளக்கத்தை அடுத்து பார்ப்போம்.

சோ அவர்கள் மறைவிற்குப் பின் துக்ளக் தொடருமா? என்ற குழப்பத்தில் குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் மூழ்கியிருந்ததையும், பின் துக்ளக் குழுவின் வற்புறுத்தலுக்கு இணங்கி குருமூர்த்தி ஆசிரியர் ஆனதையும் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.  

அந்த நேரத்தில் சசிகலா குடும்பத்திற்குள்ளேயே நடராஜன் உள்ளிட்டு யார் முதல்வராவது? என்ற செய்தியும் ஊடகத்தில் வெளிவந்தன. சசிகலா குடும்பத்தின் பிடியில் ஆட்சி சிக்குவதை சமரசமின்றி எதிர்த்த ஒரே பத்திரிக்கையாக துக்ளக்கின் மறுஅவதாரம் புறப்பட்டது. "90% பிராமணர்கள்உயிருக்கு உயிராக நேசமாக‌” தம்மை ஆதரிப்பதாக' நடராஜன் அறிவித்து (https://www.youtube.com/watch?v=oeoYzJELPjk&feature=youtu.be), குருமூர்த்தியை மிரட்டும் தொனியில் எதிர்த்தார். (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html) எவருமே எதிர்பார்க்காத  வகையில் துக்ளக் பத்திரிக்கையை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

சோ ஆசிரியராக இருந்த துக்ளக்கிற்கு கருணாநிதி 'சர்க்குலேசன் மேனேஜராக' பங்களித்தது போல, குருமூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக்கிற்கு சசிகலா அதைவிட அதிக வாசகர் எண்ணிக்கையை ஈட்டித்தந்த பங்களிப்பு வழங்கியுள்ளார். அதனை துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் குருமூர்த்தியே அறிவித்துள்ளார்.

தி.மு. ஆதரவு பத்திரிக்கைகளின் வாசகர் எண்ணிக்கை குறைந்து வருவதாக டுவிட்டரில் படித்தேன். அது உண்மையானால், வடிவேல் பாணியில், தி.மு. என்ற 'பில்டிங் ஸ்ட்ராங்காக' தோற்றமளித்து, 'பேஸ்மெண்ட்' நம்பமுடியாத அளவுக்கு பலகீனமாகி வருகிறது. தமிழ்நாட்டு திராவிட ஊழலை ஒழித்தால் தான் வாக்குக்குப் பணம் ஒழியும். அவ்வாறு ஒழிந்து, அடுத்துவரும் பொதுத்தேர்தல் நடக்குமானால், தி.மு.கவின் அந்த பலகீனம் வெட்ட வெளிச்சமாகி விடும்.

துக்ளக்கிற்கு கருணநிதியை அடுத்து .வெ.ரா அவர்களும் வாசகர் வளர்ச்சிக்கு உதவினார். அதைவிட பன்மடங்கு உயரும் அளவுக்கு, துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் ரஜினி .வெ.ரா அவர்கள் தொடர்பாக பேசிய பேச்சிற்கு, 'பெரியார்' கட்சிகள் இலவசமாக பெரிய விளம்பரத்தைப் பங்களித்துள்ளார்கள்.

'மூன்றாவது மாங்காய் லாபம் எவ்வாறு ரஜினிக்கு?' என்பதற்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(வளரும்)