Wednesday, May 31, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (1)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டபோது, இந்த வாதத்தை, அவர்களில் யார்? யார்? முன் வைத்தார்கள்? முன் வைக்காமல், அந்த ஆட்சியில், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் பலன் பெற்றவர்கள் யார்? யார்? என்று அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும்.

ஜெயலலிதாவிற்கு முன், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதும், மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள், அவரவர் மனசாட்சிக்கு தெரியும்.

எம்.ஜி.ஆருக்கு முன் முதல்வராக இருந்த, 'கலைஞர்' மு.கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா என்று முன் வைத்த வாதங்களையும், எதிர்வாதஙகளையும் இன்று வரை, அறிவுபூர்வ விவாதத்திற்கு, மேலே குறிப்பிட்ட நபர்களில் யார்? யார்? உட்படுத்தினார்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு இடமில்லாமல், 1967க்கு முன் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடத்திய முதல்வர்கள் பக்தவச்சலமும், காமராஜரும் ஆவர்.

இந்திய விடுதலைக்குப் பின், நேருவின் ஆட்சியே ஊழலில் சிக்கி பயணித்த காலத்தில், தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராகி ஊழலற்ற ஆட்சி நடத்திய போக்கானது, இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில்  நீதிக்கட்சி முதல்வர்கள் ஊழலற்ற ஆட்சி வழங்கிய போக்கின் தொடர்ச்சியா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“நேரு குடும்ப சுயநல அரசியல் ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத் தொடங்கியுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Feroze The Forgotten Gandhi’ ( by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துட‌ன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;

இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள்; தமிழைத் தாய்மொழியாக கொள்ளாதவர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால், அவர்களில் பாரபட்சமின்றி, ஊழலற்ற ஆட்சி நடத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். ஊழல் ஆட்சி நடத்தியவர்கள் எல்லாம், கண்டிக்கத்தக்கவர்களே; தமிழைத் தாய்மொழியாக கொண்டிருந்தாலும்.

உலக அளவிலும் அதே போக்கு தான் உள்ளது. இந்திய வம்சாவழி லியோவரத்கர் அயர்லாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; (http://www.newindianexpress.com/world/2017/jun/02/indian-origin-gay-minister-wins-leadership-race-set-to-be-irish-pm-1612230.html ) நல்லாட்சி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில்.

1967இல் முதல்வரான அண்ணா, மனமுடைந்து மரணம் அடையாமல், துணிச்சலுடன் கட்சியிலும் ஆட்சியிலும் முளைவிடத் தொடங்கிய களைகளை அகற்றியிருந்தால், அடுத்து 'கலைஞர்' மு.கருணாநிதி முதல்வராகி இருப்பாரா? (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html  )
முதல்வர் கருணாநிதியும் நேரு பாணி குடும்ப ஊழல் அரசியலில் ஈடுபடாமல், 'அந்த' களைகளை அகற்றியிருந்தால், பின்னர் எம்.ஜி.ஆரும், அதன் பின்னர் ஜெயலலிதாவும் முதல்வர்கள் ஆகி இருப்பார்களா?

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியை புறக்கணித்து;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களின் மனசாட்சிக்கு கீழ்வரும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; 

அந்த வாதமானது, சுயநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? அல்லது தமிழ்நாடு சீரழிவதைத் தடுக்கும், பொதுநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? என்ற தெளிவு பெறும் நோக்கில்.

‘‘இன்று 'ஜல்லிக்கட்டு ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;

1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா? பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகளின்'(?) எண்ணிக்கையும் வளர்ந்திருக்குமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், கோவாவில் ஜெயலலிதாவுடன், 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வராக, அது தகுதி குறைவாக, மக்களால் கருதப்படவில்லை. மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டவர்களால் சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், குடும்ப ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வரவேற்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே ரஜினி உள்ளிட்டு எவரும் அரசியல் பயணம் மேற்கொள்வதை தடுப்பது சரியாகாது. அந்த அரசியல் பயணத்தில் மக்கள் விரும்பினால், அந்த நபர் முதல்வர் ஆவதையும் எவரும் தடுக்க முடியாது. அப்படி முதல்வராகி ஊழலற்ற ஆட்சியை அவர்கள் வழங்குவார்களா? அல்லது தமது வெற்றி வாய்ப்பானது ஈர்க்கும் 'ஊழல் பெருச்சாளிகளை' எல்லாம், தமது கட்சியில் சேர்த்து, மீண்டும் 1991 ஆட்சியானது அரங்கேறுமா? என்பது தான், இன்றுள்ள‌ முக்கியமான கேள்விகளாகும்.

அத்தகைய ஆபத்தானது ரஜினியைத் தீண்டக்கூடும், என்ற அபாய எச்சரிக்கையானது கீழ்வரும் தகவலில் வெளிப்பட்டுள்ளது.

“ரஜினியின் நிலைப்பாடு பாஜக பக்கம் போவதாக இருப்பதை விட புதிய கட்சி ஆரம்பிப்பது. பாஜவுக்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து கூட்டணி ஏற்படுத்துவது. ஆந்திராவில் ராமாராவ் ஏற்படுத்தியது போல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்தது போல் தானும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக கூட இருக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அவர் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு அதிமுகவின் முக்கிய தலைகள் முழுவதும் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வளவு ஏன் திமுகவில் உள்ள ஒரு பெரிய அணியே கூட அவர் பின்னால் போகக்கூடும். இவையே இப்படி என்றால் தேமுதிக நிர்வாகிகளின் நிலை சொல்லவா வேண்டும்?’ “ (‘தமிழக அரசியல் களம்: ரஜினி தர்பாரில் நடக்கும் மாஸ்டர் பிளான்!’ ; http://tamil.thehindu.com/tamilnadu/)

அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;
ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ள, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பாக, "லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே ஏன் என்று தெரியுமா, தமிழர்களில் பலருக்கே தெரியாது. ஏன் அந்த சமயத்தில் அழலாமா வேண்டாமா என்று கூட யாருக்கும் தெரியவில்லை." என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-slams-entry-rajini-into-tn-politics-indirectly/articlecontent-pf242245-284356.html ) முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பான,  இக்கருத்து சரியா? என்ற ஆய்விற்கு உதவும் தகவல்கள் வருமாறு:
“முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   ), தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.
மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.” (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஏரிகள், குளங்கள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்களை, சூறையாடி வரும் ஊழல் கொள்ளைக்காரர்களை எதிர்க்காமலும், அந்த கொள்ளையர்களுடன் நேசமாகி பலன் பெற்றுக் கொண்டும், இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளும், 'உணர்ச்சிபூர்வ' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் இருப்பது போல, இலங்கை உள்ளிட்டு உலகில் எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை. அத்தகையோரில் யார்? யார்? சுப்பிரமணியசாமியின் 'பொர்க்கி தமிழர்' (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html) தொடர்பான கருத்தை கண்டு கொள்ளவில்லை? ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பவை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_26.html )
எவ்வளவு சமூகக் கேடான வழியிலும் செல்வம், செல்வாக்கு போன்றவற்றை, எவரும் பெற்று விட்டால், தமது எழுத்து, பேச்சு, கவிதை, 'தரகு'(?) திறமைகள் மூலம், அந்த 'சமூக கிருமிகளை', 'தமிழின், தமிழ் உணர்வின் புரவலர்களாக' பாராட்டி, பிழைக்கும் கும்பல், தமிழ்நாட்டில் ஊடக பின்பலத்துடன் வளர்ந்துள்ளனர்; அதன் மூலம் சாதாரண மக்களிடம் தமது (மற்றும் தாம் ஆதரிக்கும் பிரச்சினைகளில்) செல்வாக்கு வீழ்வது பற்றிய கவலையின்றி.

யாராயிருந்தாலும், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தான் முக்கிய கவ‌னம் செலுத்த வேண்டும்; உண்மையில் சுயலாப நோக்கமின்றி தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிவிலிருந்து மீட்க வேண்டுமானால். தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு மக்கள் காரணமல்ல; மக்களை வழி நடத்திய கட்சிகளும், தலைவர்களுமே காரணங்கள் ஆவார்கள். அந்த காரணங்களை 'அகற்றாமல்', மீட்சி சாத்தியமா?
அரசியலில் நுழைந்தவர்களும்/நுழைபவர்களும் யாராயிருந்தாலும், ஊழலுக்கும், சீரழிவிற்கும் துணை போனவர்களையும்/ போகின்றவர்களையும், எதிர்த்து, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அவர்களாகவே அரசியலில் இருந்து ஒதுங்கும் சூழலை உருவாக்குவதே புத்திசாலித்தனமாகும்.
அரசியலில் யார் வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்று தீர்மானிக்கும் உரிமை தமக்கு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதை வெளிப்படுத்துபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தோல்வி கண்டவர்கள்/காண்பவர்கள்/ தன்னம்பிக்கை அற்றவர்கள் என்ற ஏதாவது ஒன்றில், இடம் பெற்று விடுவார்கள்; அடுத்து மக்கள் மன்றத்தில் நடக்க இருக்கும் தேர்தல்கள் மூலம்.
குறிப்பு:
'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;


'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

Monday, May 15, 2017

வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வரும் காலம் இது;
தமிழின் மீட்சிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸே கை கொடுக்கும்


அண்மையில் நான் படித்த கீழ்வரும் கட்டுரையானது எனது கவனத்தை ஈர்த்தது. 

தமிழ்நாட்டின் அடுத்த கட்ட சமூக அரசியல் போக்குகள் பற்றிய கணிப்பு, தொடர்பான ஆய்விற்கு, அது மிகவும் துணை புரியும் என்பதே, அதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டில் திராவிட/முற்போக்கு கூடாரங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மாறாக, கி.பி 1820 வரை, உலகின் மீது செல்வாக்கு செலுத்திய பகுதிகளாக இந்தியாவும், சீனாவும் இருந்தன. அதன்பின் இயற்கை போக்கிற்கு எதிராக, வரலாற்றுப் பிறழ்வாக (major historical aberration), கடந்த சுமார் 200 வருடங்களாக, ஐரோப்பாவும், அமெரிக்காவும் உலகின் மீது செல்வாக்கு செலுத்தின. வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வருவது போலவே, அந்த செல்வாக்கும் முடியும் கட்டத்தை எட்டி விட்டது. எனவே நிச்சயமாக 21ஆம் நூற்றாண்டு என்பது ஆசியாவின் செல்வாக்கு நூற்றாண்டாகவே அமையும்.

( “As I have now documented in several books, we are now reaching the end of a 200-year cycle of Western domination of world history. Economic historian Angus Maddison has told us that the two largest economies of the world from the year one to year 1820 were China and India. It was only in the past 200 years that Europe and America took off. But against the backdrop of the past 2,000 years, the past 200 years have been a major historical aberration. All aberrations come to a natural end. Hence, the resurgence of Asia is a perfectly natural phenomenon. The 21st century will undoubtedly be the Asian century.”
-          ‘My new love: South-east Asia’ by Kishore Mahbubani,  Dean of the Lee Kuan Yew School of Public Policy at the National University of Singapore

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பிறழ்வு (major historical aberration) போக்கில், காலனிய சூழ்ச்சியில், தமிழ்நாட்டில் 'இனம்', 'சாதி' போன்ற தமிழ்ச் சொற்களின் பொருளைத் திரித்து, காங்கிரசில் உருவாகியிருந்த சீரழிவு கூறுகளை அகவயப்படுத்தி, 1944இல் வரலாற்றுப் பிறழ்வாக, திராவிடர் கழகம் உருவானது, என்பது தொடர்பான எனது ஆய்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.htmlhttp://tamilsdirection.blogspot.sg/2017/02/depoliticize-10.html )

“ 'இனம்', 'சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி;

1919 முதல் 1944 வரை அவரின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

'திராவிடர், திராவிட' சிறை உருவாக்கத்திற்கு பயன்பட்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வருவதை கண்டு பிடித்தேன். ………… தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், 'இனம்' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி, பழந்தமிழ் இலக்கியங்களின் அறிவுச் செல்வத்தை புறக்கணித்து;

மனிதருக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய புலன்களை எல்லாம், 'மேற்கத்திய முற்போக்கு பகுத்தறிவு' பார்வையில், 'விடுதலை' செய்ய முயன்றதன் விளைவாகவே;(http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html  )

இன்று தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்' வாழும் தமிழர்கள் அதிகரித்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.“ (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html) தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' கவிதை, பேச்சு, எழுத்து, 'வீரர்களான'(?) 'அந்த அமாவாசைகளை', 'நிர்வாணமாக' அடையாளம் காட்டி, அனைத்து கட்சிகளிலும் உள்ள அமாவாசைகளின் பிழைப்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டது. (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html'பெரியார்' ஈவெராவின் 'தொண்டில்', தாய்மொழி தமிழும், இலக்கியங்களும், பாரம்பரியமும், பண்பாடும், கேலிக்கும் கண்டனத்திற்கும் உள்ளான சமூக சூழலில், சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று,(அந்த சமூக சாபமானது-social curse- தமது குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? சிபிஐ, வருமானவரி சோதனை நமக்கு வருமா? வராமல் தடுக்க வழியுண்டா? என்ற பயத்தில், வாழ்ந்தே சாவது புத்திசாலித்தனமா? என்ற புரிதலின்றி) அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015_01_01_archive.htmlஅவ்வாறு தமிழ்நாடு சிக்கி சீரழிய, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததே முக்கிய காரணம், என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை ஊழல் கோரப்பசியில் சூறையாடியவர்களுக்கு, 'வாலாக/எடுபிடியாக' இருந்து கொண்டு, 'பகுத்தறிவு, தமிழ் உணர்வு, ஊழல் எதிர்ப்பு' என்று வலம் வரும் 'அசாத்திய துணிச்சலை', 'பெரியார்' ஈவெராவின் 'குருட்டு பகுத்தறிவு' வழங்கியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களை எல்லாம் தமிழர்க்கு கேடாக கருதி, 1944க்கு பின், 'திராவிடர்' பார்வையில் பயணித்த 'பெரியார்' ஈ.வெராவின் இயக்கம், ஒரு வரலாற்றுப் பிறழ்வு ஆகும். தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை எல்லாம் 'தாழ்வாக' கருதி, மேற்கத்திய வழிபாட்டுப் போக்கில், 'குருட்டு பகுத்தறிவு நோயில்', தமிழர்களில் கணிசமானவர்களை சிக்க வைத்ததே, அந்த வரலாற்றுப் பிறழ்வின் விளைவாகும். காலனிய மனநோயாளிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டும், திராவிட மனநோயாளிகளின் 'தனித்துவமான' (Unique), 'குருட்டு பகுத்தறிவு நோயின்' வளர்ச்சிப் போக்கும், பொதுவாழ்வு வியாபாரிகளின் வளர்ச்சியும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும்,  ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டை சீரழித்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html'திராவிட' ஆளுங்கட்சித் தலைவர்களின் ஊழல்களையும், ஒழுக்கக்கேடுகளையும், தமக்கு நெருக்கமான சமூக வட்டத்தில் கேலி பேசி மகிழ்ந்து கொண்டே, அத்தலைவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் 'தொண்டு'(?) செய்து, பலன்கள் அனுபவித்த/அனுபவிக்கும் 'அறிவுஜீவி விபச்சாரக் கூட்டம்', இன்றுவரை அம்பலமாகாமல் பயணிப்பதே, அந்த சீரழிவின் அடித்தளமான சமூக செயல்நுட்பமாகும்; அடுத்த தலைமுறையையும் சிரழிக்கும் ஆபத்துடன்.( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை, சமூக நீதி'  உள்ளிட்ட இன்னும் பல அடிப்படைகளில், 'அந்த அறிவுஜீவிகளின்' பேச்சில், எழுத்தில் 'மயங்கி', நாம் அவர்களிடம் நெருங்கி பழகினால், நமக்கு தெரியாமலேயே, நம்மையும், ('திருச்சி பெரியார் மையம்' வெளியிடுகளைப் போலவே,) அவர்களின் அந்த‌ 'அறிவுஜீவி விபச்சார மூலதனமாக்கி' விடுவார்கள், என்பதும் எனது அனுபவமாகும். 'திராவிட' தலைவர்களுக்கு, ஏதாவது ஒரு வகையில் 'தொண்டு'(?) செய்து, பலன்கள் அனுபவித்த/அனுபவிக்கும் 'அறிவுஜீவி விபச்சாரக் கூட்டம்', அந்த தலைவர்களின் மறைவுக்குப் பின், நேரு உதவியாளர் மத்தாய் பாணியில், அவர்களின் ஊழல்களையும், ஒழுக்கக்கேடுகளையும் நூலாக்கி, காசாக்கினாலும் வியப்பில்லை.

‘நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.htmlமேலே குறிப்பிட்டவாறு, நம்மிடையே 'நாய்களாகவும்', 'கழுதைகளாகவும்' வாழ்பவர்களை அடையாளம் காணாமல், 'சமூக கிருமிகள்' வளரும் வகையில்,  'சமூகப் பார்வை குருடர்கள்' போல் நாம் வாழ்ந்து, சந்தித்த/சந்திக்கும் துய‌ரங்களுக்கும், நாமே பொறுப்பாவோம்; 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' - புறநானூறு. அந்த பொறுப்புணர்வானது, சமூக கிருமிகளை ஒழிக்கும் முயற்சியில் நம்மை தூண்டி, நாம் சந்தித்த துயரங்களும், சமூகத்திற்கு பலன் தர உதவும், என்பதும் எனது அனுபவமாகும்.

மனிதர்களின் சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களாக இருப்பவை எல்லாம், அவர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, தாய் மண் போன்றவற்றுடன் தொடர்புடயவை ஆகும். வரலாற்றின் போக்குகளில், அவைகள் மாற்றங்களுக்கு உள்ளாவதும், இயற்கையின் போக்கே ஆகும். அந்த மாற்றங்களை சரியாக கணித்து, 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' என்ற வகையில்,  சமூகத்தின் சான்றோர்கள் வழி நடத்தும் போது, அந்த சமூகமானது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். மாறாக வரலாற்றுப் பிறழ்வு திசையில் பயணிக்கும் சமூகமானது, வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதும், வீழ்ச்சிக்கான சமூக ஆற்றல்கள் செலவான பின், மீட்சியை நோக்கி பயணிப்பதும், இயற்கையின் விதியாகும்.

“'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'(சிலப்பதிகாரம்:அரங்;65) இசைக்கு மட்டுமின்றி, இலக்கணத்திற்கும் பொருந்துவதாகும். தமிழில் தொல்காப்பியம் தொடங்கி, இன்றுவரை வெளிவந்துள்ள இலக்கண நூல்களை கணக்கில் கொண்டு, உலகில் இலக்கணம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்கால சமூக மாற்றங்களுக்கேற்ற வகையில் இலக்கணத்தை ‘வளர்த்து, வரவிருக்கும் மாற்றங்களோடு ‘ஒற்றிபயணிப்பதே சரியான வளர்ச்சி ஆகும். அதில் தவறினால், அந்த 'தொடர்பு' முறிந்து, மேலே குறிப்பிட்ட 'திரிந்த' திசையில், புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, ‘இளையதமிழர்கள் தமிங்கிலீசர்களாக‌ பயணிப்பதை குறை சொல்ல முடியாது; அவர்கள் மீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை. அந்த 'தொடர்பானது', இலக்கணத்தில் திரிந்து வருவதற்கும், 1944க்கு பின், 'திராவிடர்' பார்வையில் 'திரிந்து', 'பெரியார்' ஈ.வெ.ரா பயணித்தற்கும், இடையிலான‌  தொடர்பினைப் பற்றி, 'முனைவர்' பட்ட ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு, என்னால் இயன்ற உதவி புரிய இயலும். அந்த 'திரிதல்' சமூக செயல்நுட்பத்தின், 1991-க்கு பிந்திய தொடர்ச்சியே, 'பெரியார் சமூக கிருமிகளின்' வளர்ச்சியாகும், என்பதை 'திருச்சி பெரியார் மையம்' அனுபவ‌ங்கள் மூலம் நான் கண்டுபிடித்தேன்.

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது; 1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில், தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக'(?).

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைக்காத, அல்லது அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்காத, தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வரும், தமிழ்நாட்டில் வாழும் தனித்தமிழ் பற்றாளர்கள், பொதுவாழ்விலிருந்து ஒதுங்குவதே, தமிழின் மரணப்பயணத்தை தடுத்து நிறுத்த உதவும்.” (http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

காலனிய ஆட்சிக்கு முன், 'அரசியல்' நோக்கில், 'இந்தியர்' என்ற சொல்லைப் போலவே,  'தமிழர்' என்ற சொல்லும் உருவாகவில்லை என்பது தெரியாமல் (http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html );

தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தை தடுக்கும் முயற்சியின்றி, 'தமிழன்' வரையறை பற்றிய தெளிவின்றி, சீமான் போன்றவர்கள் 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'தமிழன்' என்று பயணிப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகும் ஆபத்தும் இருக்கிறது: ஏற்கனவே மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில், அவை 'கேலிப்பொருளாகிவரும் சமூக சூழலில். (http://tamilsdirection.blogspot.sg/2015/06/ )

மேற்கத்திய ஆங்கில வழிக்கல்வி சுனாமியிலிருந்து, இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் தாய்மொழிக் கல்வியையும், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டு அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும், பாதுகாக்க தவறினால், சம்ஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் அருங்காட்சியகப் பொருட்களாகி விடும், என்ற அபாயத்தினை உணர்ந்து, மீட்பு முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் இறங்கியுள்ளது. (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

அவ்வாறு ஆர்.எஸ்.எஸ் இந்திய அளவில் செயல்பட்டு வருவதானது, தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்கு வரவில்லையென்றால், அதற்கு காரணமான போக்கில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் எல்லாம் 'உணர்ச்சிபூர்வ திராவிட நோயில்' சிக்கி, பயணித்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html & ‘தமிழர் விரோதப் போக்கில் பயணிப்பது; 'பெரியார்' கட்சிகளா? ஆர்.எஸ்.எஸ்ஸா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )
 
வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வருவது போலவே, கடந்த சுமார் 200 வருடங்களாக, உலகின் மீது செல்வாக்கு செலுத்தி வந்த ஐரோப்பாவும், அமெரிக்காவும் செல்வாக்கும் முடியும் கட்டத்தை எட்டி விட்டன. அந்த செல்வாக்கின் பின்பலத்தில், தமிழ்நாட்டில் அரங்கேறிய 'திராவிடர்' வரலாற்றுப் பிறழ்வும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து அந்நியமாகி, முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.(http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் எல்லாம், 'உணர்ச்சிபூர்வ திராவிட நோயில்' சிக்கி, பயணிக்க  முயற்சித்தாலும், அந்த நோயே முடிவுக்கு வரும் கட்டத்தில் இருப்பதால், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி தடுக்க முடியாததாகி விட்டது. 'தமிழ்வழிக்கல்வியின்' (எனவே தமிழின்) மீட்சிக்கு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட 'அஞ்சி', 'இந்துத்வா எதிர்ப்பில்' உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், 'சருகாகி' உதிர்ந்து போவதும், இயற்கையின் போக்கே ஆகும்.


குறிப்பு: எனது பதிவுகள் தொடர்பான அறிவுபூர்வ மறுப்புகளை, நான் வரவேற்கிறேன். அதை தவிர்த்து, 'உணர்ச்சிபூர்வ போக்கில்', 'பெரியார்' கொள்கையாளார்கள் பயணித்தால், அந்த போக்கானது, 1944க்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் 'குடி அரசு' பயணித்த போக்கிற்கு எதிரானதாகும்.
(‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’;  http://tamilsdirection.blogspot.sg/2015_10_01_archive.html‘உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டும் மூடர்களை' விட்டு விலகி, இந்துத்வா புலத்தில், அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுக்கும் புலமையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக, 'பெரியார்' ஈ.வெ.ரா மற்றும் தமிழ்/தமிழர் ஆதரவாளர்கள் மத்தியில், அந்த போக்கு உள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.htmlநேர்மையான 'பெரியார்' தொண்டர்கள் எல்லாம், 'அறிவு' பார்வையிலிருந்து தடம் புரண்டு, 'உணர்ச்சிபூர்வ' பார்வையில், 'விட்டில் பூச்சி'களாக பயணிப்பதா? அல்லது முடிந்தவரை, 'பெரியார்' பெயரில், பொதுவாழ்வு வியாபாரம் தொடருமா? என்ற கேள்விக்கு, விடை தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.