Monday, August 28, 2017

அரசியல் பரமபதத்தில் (1):
ஸ்டாலினும்,சசிகலாவும் பாம்பின் தலைக்கு தாவுகிறார்களா?


வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் பின்னணியில் உள்ள சாதக, பாதகங்களை தெரியாமல், பணம் ஈட்டுவதிலும், செல்வாக்கிலும் முன்னேற வேண்டும் என்று பயணிப்பவர்களின் வாழ்வோடு ஒப்பிடக்கூடியது, பரமபதம் விளையாட்டு ஆகும்.

சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்த போது, அங்கு என் பேத்தியுடன் அடிக்கடி நான் அதை விளையாடினேன். உலக அளவில் குழந்தைகள் விளையாட்டுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ள பரம பதம் விளையாட்டானது, காலனியத்திற்கு முன் ஆடிய விளையாட்டின் சமூக அம்சம் நீக்கப்பட்டு, சிதைந்துள்ள (distorted) விளையாட்டாகும்;

என்பதை கீழ்வரும் கட்டுரையை படித்த பின் தெளிவானது; அதை போல, தமிழரின் பண்பாட்டில் எவை, எவை, எந்த அளவுக்கு காலனிய கட்டத்தில் சிதைந்து, குருட்டு பகுத்தறிவு வளர இடமளித்தது? என்ற கேள்வியையும் எழுப்பி. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

‘பரமபதம் என்ற ஸ்நேக் அண்டு லேடர்ஸ்’ ; http://vidhoosh.blogspot.in/2009/12/blog-post_03.html

காலனியத்திற்கு முன் ஆடப்பட்ட அந்த விளையாட்டின் படமானது, அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.




மேற்குறிப்பிட்ட‌ பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

கீழ்ப்படியாமை, அகந்தை, ஈனம், களவு/திருட்டு,  பொய்/புரட்டு, மதுபானம் அருந்துதல், கடன், கொலை, கோபம்/வெஞ்சினம்/வஞ்சம்,  கர்வம், பெருமை, காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன.

தமிழில் 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'குருட்டு பகுத்தறிவு' வளர்ந்த வேகத்தில், 'பாவம், புண்ணியம்' எல்லாம் மூடநம்பிக்கைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு, அதன் விளைவாக பரம பதம் விளையாட்டிலும், அந்த சமூக அம்சங்கள் நீக்கப்பட்டனவா? என்பதையும், திரிந்துள்ள இன்றைய பரம பதம் விளையாட்டோடு ஒப்பிட்டு, ஆராய எண்ணியுள்ளேன்.

தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் ஏற்கனவே இருந்த பரம பதம் விளையாட்டில்,
சீரழிவை நோக்கிய திருப்பு முனையானது, 1944இல் துவங்கியதை, எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

1944இல் நிகழ்ந்த பாதகமான சமூக மடைமாற்றத்தின் தொடர்விளைவாகவே, 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது; ராஜாஜியின் ஆலோசனை மிகுந்த ஆதரவுடன்.

அதன்பின், தமிழ்நாட்டில் சமூகத்தில், பொதுவாழ்வில்,அரசியலில்:

கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவை வளர்ந்தனவா? வீழ்ந்தனவா?

கீழ்ப்படியாமை, அகந்தை, ஈனம், களவு/திருட்டு,  பொய்/புரட்டு, மதுபானம் அருந்துதல், கடன், கொலை, கோபம்/வெஞ்சினம்/வஞ்சம்,  கர்வம், பெருமை, காமம், போன்றவை வளர்ந்தனவா? வீழ்ந்தனவா?

இன்று குடும்பங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வெளிப்படும் குடும்ப சீர்குலைவு, கைவிடப்படும் குழந்தைகள், முதியவர்கள், வன்முறை, கொலை, தற்கொலை, திருட்டு, ஊழல் எல்லாம் திடீரென்று  வானத்திலிருந்து குதித்துவிடவில்லை.

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபின், ஈ.வெ.ரா அவர்கள் மனம் வெறுத்து முனிவராக பொதுவாழ்விலிருந்து ஒதுங்க விரும்புவதாக அன்றைய முதல்வர் அண்ணாவிடம் தெரிவித்ததும்;‌

முதல்வராயிருந்த அண்ணா, மனம் வெறுத்து சீக்கிரம் மரணத்தை தழுவ விரும்புவதாக, மருத்துவமனையில் தம்மை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததும்;

தமிழ்நாட்டில் தாம் அரங்கேற்றிய தி.மு.க ஆட்சியில் மது விலக்கு ஒழிந்த பின், மனமுடைந்து ராஜாஜி மறைந்ததும்;

தமிழ்நாட்டின் அரசியல் பரம பதம் விளையாட்டில் பாம்புகளின் செல்வாக்கை உணர்த்தியதா? 

அதன் விளைவுகளை தான் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறதா?

டிஜிட்டல் யுகத்தில் முதல்வரின் வீட்டில், கண்காணிப்பு கேமிராக்கள், உதவியாளர்கள், அரசு செலவில் இருந்த பாதுகாப்பு அமைப்புகள் எல்லாவற்றையும் முட்டாளாக்கி, போயஸ்கார்டனில் இருந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன நிலையில், அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டார்? மர்மமாக மருத்துவமும், மரணமும் நடந்ததா?

என்பது தொடர்பான அதிர்ச்சி தரும் வதந்திகள் எந்த அளவுக்கு, குக்கிராமங்கள் வரை பரவியுள்ளன?

குடும்ப அரசியலில் சிக்கிய தி.மு.கவிடம் இருந்து பாடம் கற்று, அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்? என்ற, எம்.ஜி.ஆர் உருவாக்கிய, விதிமுறையைப் பற்றி கவலைப்படாமல்;

இன்னொரு ஜெயலலிதாவாக செயல்படும் பாம்பின் தலையை தழுவிய சசிகலா;

சிறைக்கு சென்று, அடுத்து நடந்த ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலாவின் படத்தை தவிர்த்தே தினகரன் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்த அவமானத்திற்குள்ளாகி, கூவத்தூரில் தமது தீனிக்கு இரையானவர்களில் பெரும்பாலோரின் முயற்சியில் க‌ட்சியை விட்டே, மொத்த குடும்பமாக வெளியேற்றப்படும் அவமானத்திற்கு உள்ளாகி, அதிலும் பாடம் கற்று கெளரவமாக ஒதுங்காமல், கூவத்தூர் பாணியில்,  புதுச்சேரியை அரங்கேற்றி;

ஆளுங்கட்சியின் முதல்வரை மாற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட சட்டபூர்வ முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாமல்;

ஆளுநரின் அதிகாரபூர்வ வரை எல்லைகள் பற்றி தெரியாமல், அந்த வேலையை செய்யுமாறு, புதுச்சேரி புகழ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுக்க;

எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் தமக்குள்ள சட்டபூர்வ வழிமுறைகள் மூலம், சட்டசபையைக் கூட்டி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்காமல்;

புதுச்சேரி புகழ் எம்.எல்.ஏக்களே ஆளுநரிடம் கோராத கோரிக்கையை, சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டி, தி.மு.க ஆளுநரிடம் கோரியுள்ளதும், அதற்காக குடியரசு தலைவரையும் சந்திக்கப்போவதாக அச்சுறுத்துவதும்;

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தி,மு.கவின்  செல்வாக்கை எந்த அளவுக்கு குறைத்துள்ளது? என்பதானது, அடுத்து நடக்க உள்ள தேர்தல்களில் வெளிப்படும்; ஏற்கனவே சட்டசபையில் அரசைக் கவிழ்க்க கிடைத்த அரிய வாய்ப்பினை தவற விட்டு, சட்டமனறத்தை கேலிக்கூத்தாக்கி, பின் மன்னிப்பு கேட்டு முகத்தைக் காப்பாற்றியுள்ள பின்னணியில்.  (Stalin Owned Responsibility & Apologised Over Assembly Ruckus: DMP Spokesperson; http://www.timesnownews.com/newshour-shorts/video/stalin-owned-responsibility-apologised-over-assembly-ruckus-dmp-spokesperson/56300)   

ஆளுங்கட்சியில் யார் முதல்வர்? என்பதில் ஆளுநர் தலையிட முடியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யாமல், தனது பணியை செய்யுமாறு ஆளுநரை நிர்பந்திக்க முடியுமா?

மாநில முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்று, ஆளுநருக்கு அனுப்பி, பின் எடப்பாடியை முதல்வராக்கிய சூழலில், அச்சுறுத்தி ராஜினாமா பெற்றதாக பதவியிழந்த முதல்வர் ஆளுநரிடம் எழுத்துபூர்வமாக முறையிட்ட பின் தான், ஆளுநர் முதல்வர் எடப்பாடியை சட்டசபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்திரவிட்டார். அதை மறந்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையானது (http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-indulging-politics-says-mk-stalin/articlecontent-pf260223-294397.html ),பெரும்பான்மை பலம் இழந்ததாக கருதும் எதிர்க்கட்சித்தலைவர் தனக்குள்ள சட்டபூர்வ வாய்ப்புகளில் ஈடுபடாமல், அந்த வேலையை, ஆளுநரை செய்யுமாறு நெருக்குவது, கேலிக்கூத்தாகாதா? சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் கேலிக்குள்ளாக்கி, முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோவில் சேர்ந்தது முதல் இன்றுவரை, சசிகலா குடும்பம் நடத்தி வரும் அராஜக அரசியலுக்கு, இப்படிப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு வாய்த்ததும் ஒரு முக்கிய காரணமாகும்; 

சசிகலா முதல்வராகி விடுவார் என்ற கனவில், அவரை 'தரிசித்து', தங்களின் அரசியல் அடித்தளத்தை, மற்ற தலைவர்கள் எல்லாம் நாசமாக்கிக் கொண்ட  சூழலில்;

என்று தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் எல்லாம், சுயநல அரசியலுக்கு விலை போனால்;

மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில், ஊடகங்கள் எல்லாம் கேலிப்பொருளாகி விடாதா?‌


ஆளுநரை சந்தித்த 'புதுச்சேரி' எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம், என்று தெரிவித்துள்ளதை கணக்கில் கொள்ளாமலும்,

கூவத்தூர் பாணியில், அந்த எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக கேலிக்கூத்தை கணக்கில் கொள்ளாமலும்,

சசிகலா குடும்ப அரசியல் சூதாட்டத்திற்கு, தி.மு.க துணை புரிகிறதா? அல்லது ஆளுநரின் அதிகார எல்லைகள் பற்றிய புரிதலின்றி, பொறுமையிழந்து ஆட்சிக்கு வர எண்ணி, நிலை தடுமாறுகிறதா? அந்த கேலிக்கூத்தில், காங்கிரசையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும், சிக்க வைத்துள்ளதா, குடியரசு தலைவர் சந்திப்பின் மூலம்? 

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவில் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிகளில் இல்லாத, அடிமட்ட தொண்டர்கள் தான்;

ஜெயலலிதாவின் மீதுள்ள உண்மையான விசுவாசம் உந்த;

கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்ற கூறுகளில் பலவற்றை வெளிப்படுத்தி;

தமிழ்நாட்டில் அரசியல் பரம பதம் விளையாட்டானது;

ஏணியில் பயணிக்கத் தொடங்கும் காரணகர்த்தாக்கள் ஆன ஹீரோக்கள் என்பதை;

நானறிந்தவரையில் அடையாளம் கண்டு பாராட்டியது துக்ளக் இதழ் (துக்ளக் 23.8.2017 தலையங்கம்) மட்டுமே ஆகும.

தமிழ்நாட்டில் குடும்ப ஊழல் அரசியலுக்கு எதிரான மக்களின், குறிப்பாக  மாணவர்களின், இளைஞர்களின் கோபமான சமூக காற்றழுத்த தாழ்வு மண்டிலமானது;

சமூக சுனாமியாக வடிவெடுக்க தடையாக இரண்டு குவியங்களாக இருந்த தி.மு.க அரசியலும், சசிகலா அரசியலும், சுப்பிரமணிய சுவாமி கணித்தபடி, ஒன்றானால்;

அது நிச்சயம் தமிழ்நாட்டிற்கு விடிவைத் தரும், சமூக சுனாமி உருவாக வழி வகுக்கும், என்பதும் எனது கணிப்பாகும்.


தமிழ்நாட்டில் 1944இல் நடந்த பாதகமான சமூக மடைமாற்றத்தின் தொடர்ச்சியாக உருவான திராவிட அரசியலானது;

இந்திய அளவில், நேரு அறிமுகப்படுத்திய குடும்ப அரசியல் நோயில் சிக்கி, பயணித்ததன் தொடர்விளைவுகளான;

தி.மு.க குடும்ப அரசியலும், சசிகலா குடும்ப அரசியலும், காங்கிரஸ் துணையுடன் சங்கமமாகி;

அந்த சமூக சுனாமியில் சிக்கி, மடிவதானது, இயற்கையின் விதியாக இருந்தாலும், வியப்பில்லை.

திராவிட மனநோயாளிகளாக காலில் விழும் கலாச்சாரத்தில் மகிழும் மாநிலத் தலைவர்களின் வழியில்(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ):

மாவட்டம், ஒன்றியம் என்று அடுத்தடுத்த மட்டங்களில் பயணிப்பவர்கள் எல்லாம்;

மேலே குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் கிராமங்களில் மண்ணைக்கவ்வி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன், மேற்குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் ஒரு கிராமத்தில், 'அதிவேக பெரிய' பணக்காரர் தமது மகன் திருமணத்திற்கு வெளியூர் செல்ல ஏற்பாடு செய்திருந்த பேருந்தில், பயணிக்க, அந்த கிராமத்தில் சுமார் 30 பேர்களுக்கு மேல் ஆட்களை கூட்ட முடியாமல், அந்த பேருந்து பயணித்தது.

கிராமப்புறங்களில் நடுத்தர ஏழை மக்களில் தான் மேலே குறிப்பிட்ட ஹீரோக்கள் இடம் பெற்றுள்ள சமூக சூழலில்;

மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?

 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?

ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?

கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற திசையில் பயணிக்கிறார்கள். (http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.htmlசமூக ஒப்பீடு நோயில் சிக்கி (Social Comparison infection), பணத்தில், செல்வாக்கில் யார் பெரிய ஆள்? என்று குடும்ப அளவிலும், தமது சமூக வட்டத்திலும் போட்டி போடும் நோயை பிரதிபலிக்கும், அவர்களின் உரையாடல்களை தேர்ந்தெடுத்து;

(பணம், செல்வாக்கு போன்ற) எலும்புத் துண்டுகளுக்கு சண்டை போடும் தெரு நாய்களாக சித்தரிக்கும் நகைச்சுவை காட்சிகள், இதுவரை, எந்த திரைப்படத்திலும் வெளிவரவில்லை, என கருதுகிறேன். ஆங்கில அறிவின்றி, தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'குருட்டு பகுத்தறிவுடன்', 'யார் அதி புத்திசாலி?' என்ற நோக்கில், அதே போன்ற உரையாடல் சண்டைகளையும், 'பெரியார் சமூக கிருமிகளிடம்' நான் அனுபவித்திருக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட திசையில், 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு 'வாழ்வியல் புத்திசாலிகளாக, 'பணமே பிரதானம்' என்று பயணிப்பவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு - வாழ்வியல் பரமபதத்தின்- தண்டனைகளை அனுபவித்து வருவதும்:


மேலே குறிப்பிட்ட ஹீரோக்களின் பார்வைக்கும் வந்து கொண்டிருப்பதும், அடுத்த பிறவி வரை தள்ளிப் போகாமல், இந்த பிறவியிலேயே சமூக பாவிகள் எல்லாம் தண்டனைகள் அனுபவிக்கிறர்கள், என்று அவர்களின் உரையாடல்களில் வெளிப்படுவதும், எனக்கு வியப்பை அளித்து வருகிறது; தமிழ்நாடு ஏணியில் பயணிக்கத் தொடங்கியுள்ளதன் அறிகுறியாக. 

‘தமிழென்றும் தமிழ் உணர்வென்றும் பகுத்தறிவென்றும்
வாழ்கின்ற சுயலாபக் கள்வரை
மனதில் நினைப்பதும் பாவம், முகத்தில் முழிப்பதும் பாவம்’

என்று வாழ்வதன் மூலம், அந்த ஏணியின் பயணத்திற்கு நாமும் பங்களிக்க முடியும், என்பதும் எனது அனுபவமாகும்; ஆக்கபூர்வமாக வாழும் வகையில், 'மார்ஃபிக் ஒத்திசைவு' (Morphic Resonance) திசையிலும் பயணிக்க ஏதுவாக (https://www.sheldrake.org/research/morphic-resonance ).


Saturday, August 26, 2017

'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக;


'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் ? 


கீழே குறிப்பில் உள்ள செய்தியை படித்தவுடன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக;

'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் இருந்ததை, 'பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில் கண்டுபிடித்ததையும்;

இந்தி எதிர்ப்பு தொடர்பான ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதையும், எனது சமூக கடமையென உணர்ந்து, இதனை எழுதினேன்.

கீழே குறிப்பில் உள்ள செய்தியின்படி,சென்னை பெரியார் திடலில்  திராவிடர் கழகம் சார்பில், இந்திசமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து, கீழ்வரும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல. தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான். என் மொழியில் வளரவிடுங்கள், என் மொழியிலேயே படிக்கவிடுங்கள் என்பதற்காகத்தான் போராடுகிறோம். தமிழ் மொழிக்காக திராவிட இயக்கத்தின் போராட்டம் உணர்வு மிக்கது.”

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு எதிராகவே, 'பெரியார்' ஈ.வெ.ரா இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார், என்பதை கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

‘1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலைஇதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.’ (http://www.tamilhindu.com/2009/06/periyar_marubakkam_par04/ )

எனவே ஈ.வெ.ரா அவர்களின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மாறாக, ஸ்டாலின் வெளிப்படுத்திய கருத்து தொடர்பாக, அந்த மேடையிலேயே, கி.வீரமணியோ அல்லது தி.க சார்பில் வேறு எவருமோ தெளிவுபடுத்தியிருக்காவிட்டால், அது ஈ.வெ.ராவிற்கு செய்யும் அவமரியாதை ஆகாதா?

திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, 'நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ஈ.வெ.ரா அவர்கள் ஏன் கண்டித்தார்? என்ற தெளிவில்லாமல், 'பெரியார்' கொள்கையாளர்களில் யார், யார், பயணித்து வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார சூழலில், சர்வதேச ஆதிக்க சக்திகளின் பகடைக்காய்களாகவே, தனிநாடு போராட்டங்கள் இரையாகி வருவதையும் நான் எச்சரித்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html  )

அது மட்டுமல்ல, மொழிப்பிரச்சினையில், இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே, டி.டி.கிருஷ்ணமாச்சாரி விடுத்த அபாய எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.( Is the Language Policy derailing the nation building process in India?; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html)

மொழிப் பிரச்சினை என்பதானது, இந்தியாவின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். அதில் காரியம் சாதிக்கும் நோக்கில் தான், இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்படுவதே புத்திசாலித் தனமாகும்.

அதற்கு மாறாக, 'இந்தி எதிர்ப்பு' என்ற பெயரில், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் , விருப்பமுள்ளவர்கள் எல்லாம் இந்தி படிக்கும் வாய்ப்பினை கெடுத்ததே;( http://tamilsdirection.blogspot.in/2017/08/1965-social-curse-internalize-role-model.html )

1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேறிய இந்தி எதிர்ப்பு தீர்மானமாகும். அதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக ஒரு மாநாடு, தி. சார்பில் நடந்திருப்பதானது, விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை, 1938இல் ஈ.வெ.ரா தலைமையில், தமிழ்நாடு நிரூபித்தது. அது காந்தியின் சத்தியாகிரகம் காலித்தனத்தில் முடியும் என்று எச்சரித்த‌ தாகூரின் பார்வைக்கு சென்று, சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததிருந்தால், 1965இல் ஈ.வெ.ராவின் எதிர்ப்பு சுவடின்றி ம‌றைந்திருக்காது; 'அண்ணா - ராஜாஜி கூட்டணி'யின் முயற்சியும் வெற்றி பெற்றிருக்காது; தமிழ்நாடும் தப்பித்திருக்கும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் வளர்ந்த 'அந்த சந்தர்ப்பவாத சமூக கேடான போராட்ட கூட்டணி பிரமீடு' என்பத‌ன் அடித்தளமானது, 'அரசியல் நீக்கம்'(depoliticize) மூலம் அரிக்கப்பட்டது. அது தெரியாமல், முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் உச்சக்கட்டமாக, 2018- இல்  ஐ.பி.எல் கிரிக்கெட், ஸ்டெர்லைட் போராட்டங்கள்  மூலமாக, 'அந்த' பிரமீடானது சரிந்து விழத் தொடங்கியுள்ளது; தமிழ்நாட்டின் மீட்சிக்கான அறிகுறியாக. (http://www.dinamalar.com/news_detail.asp?id=2054215)

குறிப்பு:

1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதியை தமிழினம் ஒருபோதும் மறக்காது. அன்றைய தினம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று, வெற்றி பெற்றது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு விடை கொடுத்து, இரு மொழி கொள்கை தொடங்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

‘பெரியார் கொட்டிய போர் முரசு’ என்ற நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பெற்றுக்கொண்டார். “ http://www.dailythanthi.com/News/TopNews/2017/08/25222506/We-oppose-Hinduism-MK-Stalin.vpf


Thursday, August 24, 2017

'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய  திரைப்படம்;
சட்டசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடந்தால், ஆளுங்கட்சி 'அமோகமாக' வெற்றி பெறும்.


தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு முகாம் ஆதரவாளராக பயணிக்கும் ஒருவர், அண்மையில் பின்வரும் கேள்வியை என்னிடம் எழுப்பினார்.

"இன்றைய அ. இ.அ.தி.மு.க அரசியலையும், ஓ.பி.எஸ்ஸையும், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பின்னிருந்து இயக்குவதாக, பரப்பப்படும் செய்தி(?) பற்றி, உங்களின் கருத்து என்ன? "

அவருக்கு நான், பின்வரும் வகையில், பதில் சொன்னேன்.

"அது உண்மையாயிருந்தால், எனக்கும் மகிழ்ச்சியே. தமிழ்நாட்டில் சாதாரண மக்களிடையே மோடியின் செல்வாக்கு பல மடங்கு உயரும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் நேரடி, மற்றும் மறைமுக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை சூறையாடிய சசிகலா குடும்ப அரசியல் ஓரங்கட்டப்பட்டால், அதன் மூலம் தமிழ்நாட்டை காப்பாற்றிய பெருமைக்காக‌, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை, பெரும்பான்மையான பொது மக்கள், குறிப்பாக ஜெயலலிதாவை உண்மையாக நேசித்த, நடுத்தர, ஏழை மக்கள் பாராட்டுவார்கள்.

பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவர் தான், இன்று அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியில் முதல்வர் ஆவார். வடகிழக்கு மாகாண‌ங்களில், முன்பு பிரிவினைவாத கட்சிகளில் இருந்து, இன்று பா.ஜ.கவில் சேர்ந்தவர்கள் பெற்று வரும் முக்கியத்துவம் காரணமாக, நீண்ட காலமாக பா.ஜ.கவில் இருந்தவர்களிடையே, முணகல் வெளிப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கவலையில்லாமல், தமிழக பா.ஜ.க வானது, திராவிடக் கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், குழு அரசியல் என்று தொடர்ந்து பயணிப்பதில், எந்த சிக்கலும் இல்லை."

அது மட்டுமல்ல; சசிகலா குடும்ப எதிர்ப்பு சுனாமியின் குவியமாக கிடைத்த வாய்ப்பை, தீபா தவற விட்டார்; இன்று வரை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாமல்; அரசியல் கோமாளியாக ஓரங்கட்டப்பட்டு.

அந்த சமூக சூழலில், சசிகலா குடும்ப அரசியலை எதிர்த்த ஓ.பி.எஸ் மட்டுமே, இன்று கட்சியில, ஆட்சியிலோ பலன்கள் 'அனுபவிக்காத ' ஜெயலலிதாவின் விசுவாசிகள் அங்கீகரித்துள்ள ஒரே தலைவர் என்பதை, சாதாரண மக்களுடனும், கிராம மக்களுடனும் தொடர்பில் உள்ள நான் அறிவேன்.

அதே போல், அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, இளைஞர்கள் மத்தியில், தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு செல்வாக்கு உள்ள நபர் சகாயம் ஐ.ஏ.எஸ் ஆவார்; மதுரை கிரானைட் ஊழல் விசாரணையை துணிச்சலுடன் மேற்கொண்டு 'சாதனை' படைத்த காரணமாக; அது தொடர்பான சி.பி.அய் விசாரணை கோரிக்கை பற்றி மூச்சு விடாமல், அல்லது காலம் தாழ்ந்து, தொடர் திட்டமின்றி ( No Follow up Plan) எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு, மோடி எதிர்ப்பில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம் கேலிப்பொருளாகி வரும் சூழலில்; 'பேச்சில் எழுத்தில் கவர்ச்சி, முற்போக்கு; சொந்த வாழ்வில் கள்வர் போக்கு', இன்றைய இளைஞர்களிடம் எடுபடாது, என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி. ஊழலை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தைப் பற்றி மூச்சு விடாமல், சசிகலா முதல்வராவார் என்று நினைத்து, அவரை சந்தித்து வாழ்த்தியவர்களையும், ஆதரித்தவர்களையும்,  இளைஞர்கள் ஒரு பொருட்டாக கூட மதிப்பார்களா?

அடுத்து சட்டசபையில் அரசுக்கு எதிரான தீர்மானத்தில், 'இரகசிய வாக்கெடுப்பு' நடந்தால், கீழ்வரும் நகைச்சுவை வெளிப்பட்டால் வியப்பில்லை. சுமார் 180க்கும் மேல், அரசுக்கு ஆதரவாக வாக்குகள் போடப்பட்டு, அத்தீர்மானமானது, பரிதாபகரமாக தோற்கடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது; கீழ்வரும் காரணங்களால்.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்ற ஊடக கணிப்புகளை நம்பி, பெருமளவில் செலவு செய்த தி.மு.க எம்.எல்.ஏக்களில் பலர், மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை இப்போது சந்திக்க ஆர்வமின்றி இருந்தால் வியப்பில்லை; மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தாலும், மீண்டும் பெருமளவில் செலவு செய்வது சாத்தியமா? புத்திசாலித்தனமா? இடையில் ஆளுநர் ஆட்சியில், தம்மிடம் உள்ள கணக்கில் வராத பணமும், சொத்துகளும் தப்பிக்குமா? தி.மு.க தலைவர் சட்டசபைக்கே வரவேண்டியதில்லை என்ற தீர்மானத்தை, நிறைவேற்ற ஒத்துழைத்த அரசை கவிழ்ப்பது புத்திசாலித்தனமா? அவரவர் தகுதி, திறமைக்கேற்ப, ஆளுங்கட்சியுடன் நெருக்கமாகி, பிழைப்பது புத்திசாலித் தனமா?

கூவத்துரில் 'பலன்கள்' அனுபவித்தவர்களில் பெரும்பான்மையோர் தான், இன்று சசிகலாவை கட்சியிலிருந்து ஓரங்கட்டும் முடிவு எடுத்துள்ளார்கள். அதே போல், புதுச்சேரி விடுதியிலும் தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை' அறுவடை செய்தபின், இரகசிய வாக்கெடுப்பில், அரசை கவிழ விடாமல் காப்பாறினால் தானே, அடுத்து, அடுத்து, அதே போல அறுவடை செய்யும் வாய்ப்புகள் கிட்டும், என்று தினகரன் வசம் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் முடிவு செய்தாலும், வியப்பில்லை.'பணநீக்கம்' (Demonetization) மூலம் கள்ளப்பண நடமாட்டத்தை ஒழிக்க முடியும் என்ற மோடி அரசின் அறிவிப்பானது, கூவத்தூரிலும், புதுச்சேரியிலும் கேலிப்பொருளாகி விட்டது.

மேலே குறிப்பிட்ட பாணியில், அறுவடை பலன்கள் அனுபவிக்க வாய்ப்பு இல்லாத, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமே, சிந்தாமல், சிதறாமல், சட்டசபையில் அரசுக்கு எதிராக 'இரகசிய' வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள், என்பது எனது கணிப்பாகும்.

' 'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய  திரைப்படத்திற்கான காட்சிகள் தான், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன. (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )

'‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF
ஹாலிவுட் திரைப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் தான், கொள்ளையைடித்த பணம், காற்றில் பறக்க‌, பணத்தை விரட்டி கண்டவர்களின் கைகளுக்கு போகும்; இந்த திரைப்படத்தில், துவக்கத்திலிருந்து, வெவ்வேறு பாணிகளில், ஊழல்வழி பணம் எல்லாம், 'கிடைத்த வரைக்கும் லாபம்' என்று சாதி. மத, கட்சி வேறுபாடின்றி சுருட்டப்படுகிறது; அடுத்து ஆளுநர் ஆட்சி தொடங்கும் வரை. 

குறிப்பு:

தேவி லால், லல்லு பிரசாத், மாயாவதி, எடியூரப்பா என்று இன்னும் பலர், இந்தியாவில் உள்ள அந்தந்த‌ மாநிலங்களில், ஊழல் கறை படிந்த, தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளாகவும், முதல்வர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஆனால் தமது மாநில நலன்களுக்கு, துரோகம் செய்து, அவர்கள் வாழவில்லை. அவர்களில் எவரும், 1969க்குப் பின், தமிழக முதல்வராக இருந்திருந்தால்:

சட்டசபையில் துணிச்சலாக, 'காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை என்று அறிவித்திருக்க மாட்டார்கள்; அன்றைய பிரதமர் இந்திராவுக்கு பயந்து, கச்சத்தீவினை, இலங்கைக்கு கொடுக்க அனுமதித்திருக்க மாட்டார்கள்;
அதே போல, பெரியாறு அணை பலகீனமானகி விட்டது, என்ற கேரள அரசின் கூற்றை ஏற்று, அணையின் நீர் மட்டத்தை குறைக்க, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரைப் போல‌, சம்மதித்திருக்க மாட்டார்கள்; மாறாக, மத்திய அரசின் நிபுணர் குழுவின் அல்லது உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு, பிரச்சினையை கொண்டு சென்றிருப்பார்கள்;

என்பது எனது கணிப்பாகும். அந்த பிரச்சினைகளின் போது, ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு மேலே குறிப்பிட்ட பாதகங்கள் நிகழ்ந்திருக்காது, என்பதும் எனது கணிப்பாகும்.

Tuesday, August 22, 2017

ஏழைகள் இந்தி படிக்கும் வாய்ப்பு ஒழிய காரணமான, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம்;


சமூக சாபத்திலிருந்து (Social Curse), நான் விடுதலை பெறும் ‘பரிகார  வாய்ப்பு’


என்னால் இயன்றவரை, அவர்களின் வியக்கத்தக்க கூறுகளை அகவயப்படுத்தி (internalize) வாழ, நான் வாழ்வில் எனக்கு முன்மாதிரியாக (Role Model) கருதியுள்ளவர்களில் ஒருவர்,  திருச்சி அன்னை ஆசிரமத்தின் தலைவராக இருந்து மறைந்த காமாட்சி ஆவார். 

அன்னை ஆசிரமத்தை நிறுவிய வீரம்மாளையும், காமாட்சி அம்மாளையும், புகழ் போதையில் சிக்காமல், 60, 70, 80 வயதுகள் நிறைவடைந்த காலங்களிலும் பிறந்த நாட்களை கூட கொண்டாடாமல், சாதி, மத வேறுபாடுகள் அற்ற, பிரமிக்க வைக்கும் சாதனைகள் புரிந்தவர்களாக, நான் வியந்து பாராட்டுகிறேன்; அன்னை தெரசா பற்றிய கீழ்வரும் 'சர்ச்சைகளுக்கு' இடமின்றி, அவர்கள் பயணித்துள்ளதையும் கருத்தில் கொண்டு.

‘அன்னை தெரசாவுக்கு மத மாற்றம் நோக்கம் இருந்தது; என்பது மட்டுமல்ல, அந்த நோக்கத்திற்காக அவர் செய்தது உண்மையில் 'சேவையா'? அந்த 'சேவைக்காக' அவர் பெற்ற நிதிகளில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன? 'அவ்வாறு' நிதி சேகரிக்க, இந்திராகாந்தியின் 'நெருக்கடி கால' ஆட்சியை ஆதரித்தது  மட்டுமன்றி, உலக அளவில் 'சர்வாதிகாரிகளுடன்' அன்னை தெரசா எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்?’
(‘திருக்குறள் 'அறிவில்' 'அன்னை தெரசா' ; ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து  சரியா?  தவறா?; http://tamilsdirection.blogspot.in/2015/02/blog-post.html ) 

குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்டு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றிய வீரம்மாள், தொலை தொடர்பு துறையில் பணியாற்றி வந்த காமாட்சி, ஆகிய இரண்டு 'தலித்' பெண்கள் சேர்ந்து, சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதே அன்னை ஆசிரமம் ஆகும்.

அவர்களின் பிரமிக்க வைக்கும் அர்ப்பணிப்பைப் பார்த்து, நம்ப முடியாத அளவுக்கு உதவிகள் செய்த அந்த வானொலி நிலைய இயக்குநர், திருமணமாகாமல் கல்லூரி பேராசிரியையாகவும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியயையாகவும், அவை போன்ற பணிகளிலும் பணியாற்றி, பணி ஒய்வு பலன்களான பல லட்சம் ரூபாய்களையும், ஓய்வு ஊதியத்தையும் அன்னை ஆசிரமத்திற்கே வழங்கி, அங்கேயே தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிராமண, பிராமணரல்லாத மூத்த பெண்டிரும், எனக்கு வணங்கத் தகும் தெய்வங்களாகவே தெரிகிறார்கள். 

அதே திருச்சியில் அன்னை ஆசிரமத்திற்கு முன் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய அது போன்ற அமைப்பானது, எவ்வாறு செயல்பட்டது? என்பதை 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் அறிவேன். இன்று எப்படி இருக்கிறது? என்று தெரியாது. 


எனது அறிவு அனுபவ அடிப்படைகளில், ஈ.வெ.ரா அவர்கள் தோற்ற இடத்தில், வீரம்மாளும், காமாட்சி அம்மாளும் பிரமிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார்கள்;


என்பது  ‘semi empirical hyphothesis  அரை 'எம்பிரிகல்' கருதுகோள்’   ஆகும்.

 
வெறுப்பு அரசியலில் இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'விடுதலை' செய்து, சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பிலும் சுயலாப நோக்கின்றி வெளிப்படும் ஆதரவு சமூக ஆற்றல்களை ஒருங்கிணைத்து மீட்கும் திறவுகோல்களை;


நான் தேடுவதற்கான மிக முக்கிய மூலமாக (most significant source) திருச்சி அன்னை ஆசிரமம் உள்ளது. 


காமாட்சி அம்மாள் 
வாழ்ந்த போது, என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஞாயிறும், தஞ்சையிலிருந்து திருச்சி வந்து, அன்னை ஆசிரமம் அரசு உதவியின்றி நடத்தும், மேல் நிலைப் பள்ளியில், +2 தமிழ்வழி மாணவிகளுக்கு, இயற்பியல் (Physics) பாடங்கள் நடத்தினேன்.

காமாட்சி அம்மாளின் மறைவுக்குப் பின், அந்த ஆசிரம தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர்;

காமாட்சி அம்மாளைப் போலவே, திருமணம் செய்து கொள்ளாமல்;

சமூக தொண்டுகளில் ஈடுபட்டு, வங்கியில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பூங்குழலி ஆவார்.

அவர் என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று;

கடந்த வருடம் முதல், ஆசிரம காப்பகத்தில் உள்ள ஏழை/கைவிடப்பட்ட பெண் மாணவிகள், இந்தி பயில, உதவும் ஆசிரியர் ஊதிய செலவுக்காக, மாதம் ரூ 2000 கொடுத்து வருகிறேன். 

இன்று திராவிடர்/திராவிட கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் பலர், ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி பயில்வதோடு, இந்தியில் தனிப்பயிற்சியும் பெற்று, 'முன்னேறுகிறார்கள்'.

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் இந்தி படிக்க வாய்ப்பில்லை. 

1967 வரை, விருப்பமுள்ளவர்கள் (தேர்வில் ‘பாஸ்’ (pass) ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை) இந்தி பயிலும் வாய்ப்பானது, அப்பள்ளிகளில் இருந்ததை;

ஒழிக்கும் வினை ஊக்கியாக (catalyst) அமைந்து, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு வித்திட்டது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமாகும்.

அந்த போராட்டத்தின் போது, திருச்சி செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த நான், சுமார் 20  மாணவர்களை சேர்த்துக் கொண்டு, வகுப்புகளைப் புறக்கணித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தடியடி, கண்ணிர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடைபெற்ற போராட்டங்களில், மறைந்திருந்து அந்த காவலர்களை நோக்கி, கற்களை வீசும் போராட்டத்தில், ' உற்சாகமாக' பங்கேற்றேன்; பின் தலைமை ஆசிரியர் என்னை வரவழைத்து, இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி, பிரம்பால் அடிகள் கொடுத்தும், நான் திருந்தவில்லை.

அதைவி, இன்று நான் அவ்வப் போது நினைத்து வெட்கப்படும் வகையில்;

அர்ப்பணிப்போடு வகுப்பில் இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியர், பாடம் நடத்துகையில் மாணவர்களிடையே நடக்கும் போது, அவர் சட்டையின் முதுகு புறத்தில், மற்ற சில மாணவர்களைப் போல, நானும் பேனா இங்கினை தெளித்து, கறையாக்கி, மகிழ்ந்தேன், 

இந்தியை எதிர்த்ததாக நினைத்துக் கொண்டு.

இன்று அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில், இந்தி படிக்கும் வாய்ப்பை, 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, ஒழிப்பதற்கு காரணமான, எண்ணற்ற 'சமூக பாவிகளில்' நானும் ஒருவனாக 'அறியாமையில்' இருந்திருந்தேன்;

என்பதை இப்போது உணர்ந்து, மிகவும் வருத்தப் படுகிறேன்;

ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் போக்கில்;

இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளை உணர்ச்சிபூர்வமாக வெறுப்பதானது, 'செனோபோபியா' (Xenophobia) என்ற மனநோயாகும் என்பதை இப்போது உணர்கிறேன்.

இன்று அன்னை ஆசிரமமானது, அரசு உதவியின்றி நடத்தும் மேல் நிலைப் பள்ளியில், தமிழ்வழியில் படிக்கும், காப்பகத்தில் உள்ள மாணவிகள், இந்தி தனிப்பயிற்சி பெற, நான் புரிந்து வரும் மேற்குறிப்பிட்ட உதவியை;

மேலே குறிப்பிட்ட, எனது வெட்கப்படும் செயல்கள் மூலம் நான் பெற்றுள்ள, சமூக சாபத்திலிருந்து (Social Curse) விடுதலை பெறும்;

இயற்கையின் போக்கில் ,எனக்கு கிடைத்த,  'பரிகார வாய்ப்பாக' கருதுகிறேன்.  

அரைகுறை ஆங்கில அறிவுடனும், தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'பாவம், புண்ணியம்' எல்லாம், ' மூட நம்பிக்கை' என்று ஆணவமாக அறிவித்து, 'குருட்டு பகுத்தறிவு' போக்கினை ஊக்குவித்து பயணித்ததன் பலன்களைத் தான், இன்று தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது; 

என்பது எனது ஆய்வு முடிவாகும். அந்த பாவத்தில் பங்கு பெற்ற நான், இனி வாழும் வாழ்க்கையை 'பரிகார வாய்ப்பாக' கருதி வாழ்கிறேன்;

உணர்ச்சிபூர்வ போக்கில் உள்ள நபர்களையும், பொதுவாழ்வு வியாபாரிகளையும் விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து.


குறிப்பு:

1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று  எப்படி இருக்கிறது?                       

இந்தி எதிர்ப்புப் போராட்டம்:1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html


Also: ‘Is the Language Policy derailing the nation building process in India?’; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html

‘Only with a hard headed population , a leader can be held accountable continuously and he/she cannot hold unhealthy psychological hold over people.’ – comment ; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html 

' செயல் சாத்திய எதார்த்தவாதிகளாக
மக்கள் இருக்கும் போது தான், ஒரு தலைவரை தொடர்ந்து பொறுப்பேற்புக்கு உட்படுத்த முடியும். அந்த தலைவர் மக்கள் மீது கேடான மனரீதியிலான செல்வாக்கு செலுத்துவதும் நடக்காது' - வன்பாக்கம் விஜயராகவன்

வாழும்போதே 'பெரியார்' பட்டம் ஏற்று, தமக்கு சிலையையும் அனுமதித்த போதே, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தில் ஈ.வெ.ரா அவர்கள் தோற்றார்.