Friday, September 26, 2014



           தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (2)

உலகில் உள்ள மொழிகளில் மரணத்தை எதிர்நோக்கியுள்ள (Endangered)  மொழிகளை அடையாளம் கண்டு, மீட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படும் ஒரு அரிய ஆவணத்தை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. 
 http://unesdoc.unesco.org/images/0018/001836/183699E.pdf

ஒரு மொழி மரணத்தை எதிர்நோக்கியுள்ள அபாயம் விளைவதற்குக் காரணமான அக விசைகளாக(Internal forces) , அம்மொழி மீது அம்மொழிபேசும் மக்களுக்குள்ள எதிர்மனப்பாங்கு (community’s negative attitude towards  its own language  ) இருக்கலாம். (Language endangerment may be caused by Internal forces, such as a community’s negative attitude towards its own language. ) 

தமது மொழி மீது மக்கள் கொண்டுள்ள மனப்பாங்கை(Community Members’ Attitudes towards Language )  கணக்கிட  கீழ்வரும் அட்டவணை உருவாக்கப்பட்டுளது.

Grade
Community Members’ Attitudes towards Language
 5
All members value their language and wish to see it promoted. - தமது மொழியை மதித்து,  அம்மொழி முன்னேற வேண்டும் என்று அனைவரும் விரும்புவது
 4
Most  members support language maintenance. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பது
 3
Many members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை பலர் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
2
Some members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை சிலர் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
 1
Only a few members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை வெகு சிலர் மட்டும் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
 0
No one cares if the language is lost; all prefer to use a dominant  language. மொழி இழந்து போவதைப் பற்றி எவரும் கவலைப் படாதது;எல்லோரும் செல்வாக்கான மொழியையேப் பயன்படுத்த விரும்புவது

மேற்குறிப்பிட்ட அட்டவணையில் இடம் பெறாத ஒரு பிரிவினர்  தமிழ்நாட்டில் உள்ளனர். அப்படிப்பட்ட பிரிவினர் உலகில் வேறு எந்த மொழியினரிலும் இல்லை என்பது அப்பிரிவு அட்டவணையில் இடம் பெறாததற்குக் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமது குடும்பத்திற்கு ஒரு நீதி (ஆங்கிலவழிக் கல்வி), பிற தமிழர்களுக்கு வேறு நீதி ( தமிழ்வழிக் கல்வி) என்ற இரட்டை வேடப்போக்கு அந்த வித்தியாசமான பிரிவினரின் தனித்துவமான (Unique) பண்பாகும். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக் கொண்டு, தமிழ்வழியை ஆதரித்து பிரச்சாரங்கள், போராட்டங்கள் நடத்தும் வித்தியாசமான பிரிவினராக அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இது போன்ற வித்தியாசமான பிரிவினர் அண்டையிலுள்ள கேரளா, கர்நாடகா, உள்ளிட்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலோ, அல்லது உலகில் வேறு எந்த மொழி பெசும் மக்களிடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட யுனெஸ்கோ வெளியீடு அட்டவணையில் அந்த பிரிவினரும் இடம் பெற்றிருப்பார்கள். சுழிக்குக் (zero) கீழே எதிர்க்குறியிட்டு(Negative)  கடைசி வரிசையாகச் சேர்த்திருப்பார்கள். ஏனெனில், அந்த மொழியை மீட்க அவர்களை மீறி எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு எதிர்த்திசையில் அவர்களின் பங்களிப்பு இருக்கும்.


இதில் வினோதம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள 'தமிழ், தமிழ் இன உணர்வு' தொடர்பான அமைப்புகளில் எல்லாம் அந்த வித்தியாசமானப் பிரிவின‌ர் செல்வாக்காக உள்ளனர். தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து முன்னோடிகளாக இருப்பவர்கள் வசம் இப்படிப்பட்ட 'தமிழ், தமிழ் இன உணர்வு' தொடர்பான அமைப்புகள் இருந்தால் தான், மரணத்தை நோக்கிய தமிழின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி, மீட்சி நோக்கி திசை திருப்ப முடியும். அனுமதிப்பார்களா, அந்த வித்தியாசமான பிரிவினர்?

அவர்களை மீறி என்ன செய்யமுடியும் என்பதற்கு  ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  ) என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு,  நான் மேற்கொண்டுவரும் ஆய்வுகள் துணைபுரிய வாய்ப்புண்டு.(“சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  (Social Fibers & Social Bonds); http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

நமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பதும், நம்மை மீறி நமது குடும்பத்தில் முடிவெடுக்கும் அளவுக்கு நமது நிலை பலகீனமாயிருந்தால், அதை வெட்கமின்றி பகிரங்கமாக ஒப்புக் கொண்டு, செயல்படுவதுமே தமிழின் மரண பயணத்தைத் தடுக்க உள்ள குறைந்தபட்சத் தகுதியாகும். அந்த அளவுக்கு நமக்கும் குடும்பத்துக்கும் உள்ள சமூக இழையையும்,  நாம்,  கீழ் குறிப்பிட்ட வழியில் பலகீனமாவதையும் ஏற்றுக் கொள்ளும் மனத் துணிச்சல் வேண்டும்.

“மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,” என்ற புரிதலுடன் தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற தேவையை நமது மனதில் உணர்ந்து, அதற்கான ஈடுபாட்டை வளர்க்க வேண்டும். அதன் விளைவாக அப்பணிக்கான ஆற்றல் நம்மிடமிருந்து வெளிப்பட்டு, அப்பணி தொடர்பான வேலைக்கான விசைகளும் (Forces)  நம்மிடமிருந்து வெளிப்படும்.
நமக்கும் நமது குடும்பம், நட்பு, இயக்கம் உள்ளிட்ட சமுக வட்டத்தில் உள்ள‌ ஒவ்வொரு மனிதருக்கும் இடையிலான உறவை அடிப்படை யாகக் கொண்ட சமூக இழை எந்த பண்பின் அடிப்படையில் செயல்படுகிறது என்று நாம் கண்காணிக்க வேண்டும். அந்த கண்காணிப்பில்,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடமை, ஆன்மிகம்' போன்ற பல வேடங்களில் , கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இழிவானவர்களுடன், நாம் பழகியிருப்பது வெளிப்பட்டால், அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

சமூக இழைகள் என்பவை லாப நட்டம் பார்த்துப் பழகும் 'கள்வர்' பண்பு மாற்றத்திற்குள்ளாகும் போது, அந்த இழைகள் தொடர்புள்ள மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகளும்', ஈடுபாடுகளும்' கள்வர் பண்புமாற்றத்திற்குள்ளாவதைத் தடுக்க முடியாது. மேற்குறிப்பிட்ட கண்காணிப்பின்றி அதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அத்தகைய 'கள்வர்' பண்பு மாற்றத்திற்குள்ளனவர்களே மேற்குறிப்பிட்ட இரட்டை வேடப்போக்குள்ள‌ வித்தியாசமான பிரிவினராவர். 

அதை அவர்களுக்குச் சுட்டிக்கட்டி, திருந்த அவகாசம் தர வேண்டும். திருந்த மறுப்பவர்களை விட்டு, இயன்றவரை அவர்களைப் புண்படுத்தாமலேயே விலகுவது சாத்தியமே. நாம் விலகத் தவறினால், நம்மையறியாமலேயே, அவர்கள் மூலமாக தமிழின் மரணப் பயணத்திற்கு நாம் பங்களிப்பு வழங்குவதைத் தவிர்க்க முடியாது. நாமோ, நமது தொடர்புகளாகிய சமூக இழைகளோ 'கள்வர்' நோயில் சிக்கியுள்ளதா? இல்லையா? என்பது பற்றி கவலைப் படாமல், தமிழ் மொழியின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ்நாட்டில் தமிழர்களிடையே  தாய்மொழிப் பற்றுடன்,நல்ல சமுக பண்புகளுடன் குடும்பம்,நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம்‍ சமூக இழைகளெல்லாம்‍ , 'எந்த வழியிலும்' பிழைப்பதே புத்திசாலித்தனம் என்ற பண்பு மாற்றத்திற்குள்ளானதே தமிழின் மரணப் பயணத்தின் முக்கிய காரணமாகும்.
தமிழின் மரணத்திற்கு பங்களிப்பு  வழங்கி,  குற்ற உணர்வுடன் வாழ்வதைத் தவிர்ப்பதற்கு, மேலேக் குறிப்பிட்ட முறையில் தனிமனித ராணுவம் போல நாம் செயல்படுவது சாத்தியமே.

நம்மைப் போன்று லாப நட்ட நோக்கற்ற உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்பவர்களை அடையாளம் கண்டு பிணைப்புகள்(Bonds)  ஏற்படுத்தவும் நமது ஆற்றல்களைச் செலவழிக்கலாம்.திரிந்த பண்புகளுடன்  உள்ள சமுக இழைகள் மற்றும் சமூக பிணைப்புகளிடமிருந்து புத்திசாலித்தனமாக ஒதுங்கி, தமிழின் மரணப் பயணத்திற்கு எதிராக, நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழலாம். அவ்வாறு வாழ்வதில்  உள்ள அமைதியும்,  சாகசமாக நாம் அனுபவிக்கக் கூடிய சிரமங்களும்,மகிழ்ச்சியும் எவ்வளவு சிறப்பானது என்று வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். தமிழ் மொழியின் மரணப்பயணத்திற்கு எதிராக,நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழும்போது அனுபவிக்க வாய்ப்புள்ள இன்பங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு"; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) நீண்ட நெடி ய பாரம்பரியமும், அறிவுச் செல்வங்களும் உள்ள‌  தமிழின் பலம் இந்த முயற்சிகள் வெற்றி பெற துணை புரியும்.

 
 

No comments:

Post a Comment