இரண்டு புத்தகங்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'கள்
முந்தையப் பதிவில்
இரண்டு புத்தகங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
1. ‘The Language of
the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock (2007)
2. ‘M.G.Ramachandran in film and politics- The
Image Trap’ by M.S.S pandian (1992)
'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான்,சமஸ்கிருதத்தின் துணையுடன்
தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன' என்பது உள்ளிட்ட தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய
சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' முதலில் குறிப்பிட்டுள்ள,
உலக அரங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரான ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள நூலில் வெளிவந்துள்ளன. (‘The Pitfalls in the Study
& Translation of the Ancient Tamil Texts (1),(2),(3); http://tamilsdirection.blogspot.com/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )
தமிழ்நாட்டில்
அப்புத்தகம் வெளிவந்த பின், கடந்த 7 வருடங்களில்,
செல்வாக்குடன் பொது அரங்குகளிலும், மீடியாக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் எந்த
தமிழ் அறிஞராவது, அந்த அபத்தமான, தமிழைப்
பற்றி இழிவுபடுத்தும், 'ஆய்வுகள்' என்ற பெயரில்
வெளிவந்துள்ள, கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?
கவலைப்பட்டு அதை மறுத்திருக்கிறார்களா? இல்லையென்றால்,
அதற்கு என்ன காரணம்? அந்தப் புத்தகத்தைப் படித்து, அதில் தமிழைப் பற்றி வெளிப்பட்டுள்ள
தவறானக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்பதை
அகந்தையின்றி ஒப்புக் கொண்டு, அத்தகைய ஆங்கில அறிவுடையவர்கள் துணையுடன் அது போன்ற நூல்களைப்
படித்து, அதில் தமிழைப் பற்றி இழிவுபடுத்தும் தவறானக் கருத்துக்களை மறுக்கும் சமூகப்
பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்றால், அது தமிழை வைத்து, அரசியல் செல்வாக்குடையவர்களிடம்
'நாய்கள்' போல் குழைந்து காரியம் சாதிப்பதில் மட்டும் அவர்கள் குறியாக உள்ளார்கள் என்ற
ஐயம் எழுவது சரியா?
'தமிழ்நாட்டில்,
குறிப்பாக கிராமங்களில், ஆங்கிலத்தில் பேசுபவன் எல்லாம் 'அறிவாளி' என்ற கருத்து ஆழமாக
வேர் பிடித்துள்ளது.'முட்டாள்த்தனமாக ஆங்கிலத்தில் உளற முடியும் என்பதை அவர்களால் ஏற்றுக்
கொள்ள முடியாது. தமிழ்நாட்டில், பல சொற்பொழிவாளர்கள், குறிப்பாக திராவிடக் கட்சிகளைச்
சேர்ந்தவர்கள்,கிராமங்களில் பேசும்போது கூட,தமிழ்ப் பேச்சின் நடுவே அவ்வப்போது ஆங்கிலத்தில்
பேசி,தம்மை 'அதி புத்திசாலி'யெனக் காண்பித்துக் கொள்வார்கள்.' என்பதை ஏற்கனவே பதிவு
செய்துள்ளேன்.(''காலனிய' மனநோயாளிகளும்,
'திராவிட' மன நோயாளிகளும்';
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அந்த 'அதி புத்திசாலி'களும் மேற்குறிப்பிட்ட, தமிழை இழிவு படுத்திய புத்தகம் பற்றி கடந்த 7 வருடங்களாக ஏன் கண்டு கொள்ளவில்லை? அந்தப் புத்தகத்தைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லையா? அல்லது இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் தவறானவை என்று நிரூபிக்கும் வகையில் இனியாவது செயல்படுவார்களா?
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அந்த 'அதி புத்திசாலி'களும் மேற்குறிப்பிட்ட, தமிழை இழிவு படுத்திய புத்தகம் பற்றி கடந்த 7 வருடங்களாக ஏன் கண்டு கொள்ளவில்லை? அந்தப் புத்தகத்தைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லையா? அல்லது இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் தவறானவை என்று நிரூபிக்கும் வகையில் இனியாவது செயல்படுவார்களா?
இத்தகைய
கேள்விகள் எழும் வகையில் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலுள்ள 'அறிவு ஜீவிகள்' வலம்
வந்து கொண்டிருக்கிறர்களா? என்ற கேள்வியை மேலேக் குறிப்பிட்டுள்ள இரண்டவது புத்தகம்-
‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian - எழுப்பியுள்ளது?
எம்.ஜி.ஆர்
தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து அவரோடு சேர்ந்து, அவர் கட்சியில் 'அறிவு ஜீவிகளாக'ப்
பயணித்து வருபவர்களில் ஒருவரின் கவனத்திற்கு எம்.ஜி.ஆரை இழிவு படுத்திய அந்த புத்தகத்தைப்
பற்றி நான் சொன்னபோது, அவர் தெரிவித்த பதில் எனக்கு , 'திராவிட இயக்க' அறிவுஜீவிகளைப்
பற்றிய ஒரு மதிப்பு மிக்க உள்ளீடாக(input) அமைந்தது. அந்த
புத்தகத்தை எழுதிய M.S.S பாண்டியன் தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும், அப்புத்தகம்
எழுதத் தன்னிடமிருந்தும் குறிப்புகள் வாங்கியதாகப் பெருமையுடன் தெரிவித்தார். ஆங்கிலத்தில்
எம்.ஜி.அரைப் பற்றி ஒரு புத்தகம் வர தான் உதவியது போல் பெருமையுடன் அதைத் தெரிவித்தார்.
ஷெல்டன்
பொல்லாக் எழுதியுள்ள முதலில் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில்,தமிழைப் பற்றிய மிகவும்
தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்'
வெளிவந்துள்ளன. M.S.S பாண்டியன் எழுதியுள்ள இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில்,எம்.ஜி.ஆரைப்
பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத்
தகவல்கள்' வெளிவந்துள்ளன. இரண்டுப் புத்தகங்களுமே உலகத்தரம் வாய்ந்த ஆங்கில நடையில்
இருப்பதும் இரண்டு புத்தகங்களுக்கிடையிலுள்ள பொது அம்சமாகும். அந்த ஆங்கில நடையில்
தமிழைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில்
எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளதைப் படித்து புரிந்து கொள்ளும்
ஆங்கில அறிவு இரண்டு திராவிடக் கட்சிகளின் 'அறிவு ஜீவிகளிடம்' இருக்கிறதா? இல்லையா?
என்ற கேள்விகள் எழுவது தவறா?
1944இல்
திராவிடர் கழகம் தோன்றியது முதல் தமிழ் நாட்டில் பொது அரங்கில் செல்வாக்குடன் வலம்
வரும் ‘திராவிட’ அறிவு ஜீவிகளின் 'ஆங்கில அறிவின்' புலமை அளவை ‘Y’ அச்சிலும், காலத்தை ‘X’ அச்சிலும் தோராயமாகக் கணக்கிட்டு வரை கோடு
(Graph) வரைவதற்கு, அவர்கள் ஆங்கிலத்தில் வெளிவந்த
தமிழ், தமிழ்நாடு தொடர்பானப் புத்தகங்களைப் படித்து, அதிலுள்ளவை தொடர்பாக வெளியிட்டுள்ள
கட்டுரைகளும் புத்தகங்களும் சான்றுகளாக உள்ளன.
அச்சான்றுகள் அடிப்படையில் உருவாகும் வரை கோட்டில் (Graph) , 1944 முதல் எதிர்ச் சரிவில் (negative Slope) தொடங்கும் வரைகோடு, 1967இல் எதிர்ச் சரிவு அதிகரிக்கத்
தொடங்கியிருந்தால் வியப்பில்லை. அந்த எதிர்ச் சரிவு அதிகரிப்பு, 1970 களின் பிற்பகுதியில்
ஆங்கில வழிக் கல்வி நோயும், ‘பொது வாழ்வுக் கள்வர் திறமை' நோயும் வளர்ந்த வேகத்தில்
இன்னும் வேகமான எதிர்ச் சரிவுக்குள்ளாகி, கடந்த பல வருடங்களில் சிறும நிலையை
(minima) அடைய வாய்ப்புள்ளவாறு, மேலேக் குறிப்பிட்ட
இரண்டு புத்தகங்களைப் பற்றியும் இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள 'அறிவு ஜீவிகள்
' கவலைப் படாத போக்கு உணர்த்துகிறதா?
அந்த சிறும நிலையுடன் (Minima) திராவிடக் கட்சிகளின் மரணம் நடைபெறப்
போகிறதா? அல்லது சிறுமத்திலிருந்தும், ‘தமிழ், தமிழ் உணர்வு’ என்ற பெயரில் பிழைப்பு
நடத்தும், ‘பொது வாழ்வுக் கள்வர் நோயி’லிருந்தும்
மீண்டு, திராவிடக் கட்சிகள் வளரப் போகிறதா? என்பது தான் இனி வரும் வரலாறாக அமையும்.
No comments:
Post a Comment