Thursday, October 27, 2016



 Political Uncertainty:
  
                                             Singapore & India



My interest in the application of ‘Physics of Music’ to the ancient Tamil & Sanskrit texts, led to the amazing discoveries. (http://www.musicresearch.in/categorydetails.php?imgid=137  ; http://veepandi.blogspot.in/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html; http://musictholkappiam.blogspot.in/ ;  http://musicdrvee.blogspot.in/ )

My other interest, with the post graduate certificate in ‘Sociological theories’, is the application of Physics to the Social Dynamics of the Modern world, identifying the social forces influencing the direction of the current world social history. Some of the results are posted in http://tamilsdirection.blogspot.in/

In the above context, a very interesting & promising experiment is going on in Singapore, whose progress, from its birth on 9 August 1965 as a new independent country plagued with unemployment, corruption, along with the Singapore Dollar valued lower than the Malaysian Ringgit, (https://en.wikipedia.org/wiki/History_of_the_Republic_of_Singapore) to its present status, is a significant pointer to predict the direction of the resultant forces in the world socio-political-economics. By identifying & aligning with the growing forces in the world, synchronizing with the development of corruption free & growth oriented  internal system, Singapore’s success is unique in the modern history.

Did Singapore’s success suggest the following question?

Can the economic and social problems experienced in the Western developed countries, be traced to the destruction of the self-discipline, and the heritage-family value system, during the process of the economic development, along with the ‘heritage-family blind’ human rights development?

In fact, PM Modi, probably sensing it, invited the Deputy PM of Singapore, for the first 'Transforming India' lecture. (‘India's unfulfilled potential largest in world: Singapore Deputy PM; http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indias-unfulfilled-potential-largest-in-world-singapore-deputy-pm/articleshow/53872868.cms )

Probably the above is just the beginning of the new phase of Singapore, with the  increasing contribution to the world peace and development. Of all the countries in the world, Singapore has the logistic advantage of constructively interacting with both India & China, the current two engines of the world economy.

Hence I was surprised to come across the following question, during a casual conversation with a friend.

‘In view of Singapore facing political uncertainty, will it be safe to invest money in Singapore?’

I sensed that the above question arose due to the unfounded magnification of the PM succession debate going on in Singapore.

In fact, I follow the debate and surprised with the emotion free, responsible debate culminating in the most assuring direction of the solution.

To the above question, I responded the following.

Modi, heading the first 100% non-corrupt Govt, had to complete the unfinished nation building process, failing which India, faces the  worse political uncertainty, with the regional thug leaders, derailing all the progress, India had achieved, including the unity of the country.

The person, who raised the question, agreed with my above observation.

deserves the attention.

How Singapore, the only country that was forced unwillingly to 'gain independence' in world history, could get rid of the 'unbelievable' corruption, and 'transform' to become a corruption free, developed country? Also how Singapore consciously strengthen the 'nation building process'? (http://www.straitstimes.com/politics/singapolitics/changes-to-ep-needed-as-race-still-matters-in-politics-pm-lee ) 

Also did the above mentioned Western social disease of ‘‘heritage-family blind’ westernization, infect a section of the Singapore citizens? Did the children of such families, experience academic related difficulties, or/and broken families, fueling frustration in the society? ( ‘Because of the close links between language and identity, if people begin to think of their language as useless, they see their identity as such as well. This leads to social disruption, depression, suicide and drug use, he says.’ http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm ) Did the question of my friend mentioned above, originate, in the circle of such frustration? How far the measures to patronize the mother-tongue in the education of all the races, the traditional festivals of all the races, & other such measures, combat the above social disease?

The answers will be valuable to India’s nation building process.

Wednesday, October 26, 2016

காவிரிப் பிரச்சினை:
தி.மு.கவின் அனைத்துக் கட்சி கூட்டம் உணர்த்திய 'சிக்னல்'


உண்மையாகவும், நேர்மையாகவும், குறுக்கு வழிகளை தவிர்த்து, தமது புலமையின் அடிப்படையில் வளர்ந்து வருபவருமான, நான் மிகவும் மதிக்கும் நண்பரான‌, ஒரு தி.மு.க ஆதரவாளரிடம்;

 எதேச்சையாக காவிரிப் பிரச்சினை தொடர்பாக, விவாதிக்க நேரிட்டது.

1969இல் முதல்வரான பின், சட்டசபையில் 'கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை' என்ற வகையில் தி.மு.க.தலைவர் 'கலைஞர்' கருணாநிதி கருத்து தெரிவித்த பின்னணியில்;

‘தி.மு.க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாமா? ' என்று நான் கேட்டேன்.

'அதெல்லாம் பழைய கதை. இப்போது நடப்பது தானே முக்கியம்' என்றார் அவர்.

'பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல. முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் சாகும் வரை மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாகத் தான், பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக, உச்ச நீதி மன்றத்தில் முதலில் ஒப்புக் கொண்டு, அதன்பின் பின் வாங்கினார் என்ற தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

முன்னாள் பிரதமர் தேவகவுடா காவிரிப்பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்திரவை துச்சமாக மதித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டபோது;

அது இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சிக்கும்'(Rule of Law), 'இந்திய ஒருமைப்பாட்டிற்கும்' எதிரானது' என்று;

இந்தியாவில் எந்த பொறுப்புள்ள தலைவரும், பத்திரிக்கைகளும் கண்டித்தார்களா? (‘Caution: BJP's support to strengthen the regional chauvinism, at the cost of the Indian unity?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

கருப்பையா மூப்பனார் பிரதமராக இருந்த வாய்ப்பைக் கெடுத்து, தேவகவுடா பிரதமர் ஆக உதவிய தி.மு.க தலைவர் கண்டித்தாரா? பிரதமர் பதவி வகித்தவர் என்பதால் தானே, அவரின் உண்ணவிரத அச்சுறுத்தலுக்கு பலன் இருந்தது.

அவர் உண்ணாவிரதம் தொடங்கியவுடன், தமிழக எம்.பிக்கள் எல்லாம் டெல்லியில் போட்டியாக‌ உண்ணாவிரதம் தொடங்கியிருந்தால், அந்த பலன் கிடைத்திருக்குமா?

தமிழக பாஜ.கவினர் தமது கட்சித் தலைவர் அமித் ஷாவை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள். அது போல, தமிழக காங்கிசார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, கர்நாடக அரசின், காங்கிரஸ் முதல்வர் தமிழக விரோத போக்கை கடைபிடிப்பது தொடர்பாக ஏன் முறையிடவில்லை?

இப்போது உச்சநீதிமன்ற உத்திரவை மதித்து 2000 கனாடி நீர் தினமும் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை, தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டித்தார்களா?

ஆக, இந்தியாவில் 'இந்தியர்' என்ற உணர்வை பின் தள்ளி, கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளில் உள்ளவர்களும்;

'கர்நாடகர்' என்ற 'வெறியில்', தமது மாநில நலன்களை பாதுகாப்பதில் போட்டி போடுகின்றனர்.

தமிழ்நாட்டிலோ, தமிழில் 'உணர்ச்சிகரமாக' பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும், (அதன் மூலம் பக்கவாட்டு பாதிப்பாக-collateral damage-, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள்/இளைஞர்கள் பார்வையில் தமிழும் செல்வாக்கிழக்க );

'காரியத்தை கெடுக்கும்’  சுயநல அரசியல் போட்டியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளனர்.” என்று எனது கருத்தை தெரிவித்தேன். அந்த நண்பர் ஆம் என்று ஒப்புக் கொண்டார்.

ஆனால், அவரிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கவில்லை.

'"பின் ஏன் தி.மு.கவை ஆதரிக்கிறிர்கள்?"

அவர் கீழ்வரும் பதிலைச் சொல்வார் என்பது எனக்கு தெரியும்.

'வேறு எந்த கட்சி இருக்கிறது?' என்று அவர் கேட்பார், என்பதும் எனக்கு தெரியும்.

அதற்கு சரியான பதில், இன்று என்னிடம் கிடையாது. (குறிப்பு கீழே)

அதற்கு சரியான பதில் கிடைக்காத வரையில், கீழ்வரும் மரணப்பயணத்தில், தமிழும், தமிழர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது எனது கருத்தாகும்.

“தமிழ்நாடானது,  தமிழ்க் கூட்ட அழிவு நோயில்(Tamil colony collapse disorder- TCCD)
சிக்கியதன் காரணமாக, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் மற்றும் பண்பாடும் எவ்வளவு வேகமாக அழிந்து வருகின்றன‌,”  என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

குறைந்த பட்ஜெட்டில், பெரிய நடிகர்கள் இன்றி, உருவாகி, 'ஜோக்கர்' என்ற திரைப்படம் பெற்ற வெற்றியானது;

தமிழ்நாட்டு கட்சிகளுக்கு எவ்வாறு அபாய அறிவிப்பாகும்? என்பதையும் விளக்கியுள்ளேன்.

அந்த மரணப் பயணத்திலிருந்து, எந்த கட்சி, எப்படி பயணித்தால், தமிழையும், தமிழரையும் மீட்க முடியும்? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/09/signal.html )

‘வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அரசியல் நீக்கம் காரணமாக;

சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது' (Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)

உயர் நடுத்தர(upper middle class), பணக்கார (affluent) வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை' (Comfort Zone) விட்டு விலகி,  பார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை 'தாமதமான' வால்களாக்கி;

இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவிய‌ போக்கானது,

சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெளிப்பட்டது.

அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, அந்த போக்கானது, மேற்குறிப்பிட்ட விசாரணையை தூண்டுவிக்கும் காலமானது, எதிர்பார்ப்பதை விட, விரைவாகவே நடந்தால், வியப்பில்லை. அதில் சந்தேகம் உள்ளவர்களின் பார்வைக்கு;

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும் என்பதை மேற்குறிப்பிட்ட உரையானது, சுட்டிக்காட்டியுள்ளது.’ (‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html )  


குறிப்பு:

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். (http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )

கட்சிப் பதவிகளிலும்,ஆட்சிப் பதவிகளிலும் .இ.அ.தி.மு.கவில் உள்ள நிச்சயமற்ற போக்கின் காரணமாக;


தமது நியாயமான மற்றும் அநியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்றிக்கொள்ள, தொடர்பு கொண்டு, ஆட்சியில் 'சாதிக்க' ஏதுவான கட்சி வலைப்பின்னலானது, தமிழ்நாட்டில், தி.மு.கவிடம் மட்டுமே உள்ளது. அதுவே தி.மு.கவின் 'தனித்துவமான'(Unique)  பலமாகும்.

Saturday, October 22, 2016

தமிழ்நாடானது, 'குப்பை நாற்றத்தில்' இருந்து மீளும் காலம் நெருங்குகிறது!


சில வருடங்களுக்கு முன், புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்திற்கு சென்று, மலை மேல் உள்ள கோட்டையையும், அடுத்தடுத்து இருந்த, பிரமாண்டமான, ஒரே   மலையின் பக்கங்களில் இருந்த, குகை கருவறை உள்ளிட்ட, ‌சிவன், விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்கான‌ தனித்தனி கோவில்களையும் பார்த்து வியந்தேன்.

சீரங்கம் ர‌ங்கநாதரை விட, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான கருவறையில்,  அனைவரும் அர்ச்சகர்  ‘அருகே’  நின்று வழிபட்டதானது,  'பெரியார்' கொள்கையாளனாக முன்பு பயணித்த,  எனக்கு வியப்பானது.

மத்திய அரசின் ASI கட்டுப்பாட்டில் உள்ள அந்த சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை பூட்டப்பட்டு இருந்ததும், அந்த அலுவலகம் சென்று, 'அழுத்தம்' கொடுத்து; 

சாவியை வாங்கி, சரியாக பராமரிக்கப்படாத கழிவறை சென்று வந்ததும், மறக்க முடியாத அனுபவமானது.

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் எல்லாம், பெரும்பாலும் மேற்சொன்ன வகையில், நன்கு பராமரிக்கப்படும்  கழிவறைகள் இன்றி செயல்பட்டு வருகின்றன;

தமிழ்நாட்டின் சுற்றுலா  வருமான வளர்ச்சிக்கு தடைகளாக‌.

அண்மையில் தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக்கில்  4 நாட்கள் தங்கி, நகரங்களில் உள்ள‌ தெருக்கள் மட்டுமின்றி, நகரத்திற்கு வெளியே சுமார் 300 கி.மி வரை காரில் பயணம் சென்று, மிதக்கும் 'மார்க்கெட்' உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களுக்கும் சென்று வந்தேன்.

பின் சிங்கப்பூரிலிருந்து காரில், மலேசியாவில் உள்ள 'மலாக்கா' நகருக்கும் சென்று 2 நாட்கள் தங்கி வந்தேன்.

தாய்லாந்திலும், மலேசியாவிலும் உள்ள ஊழலானது, திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றும் அளவுக்கு மோசமில்லை என்பதை, அங்கெல்லாம் ஒழுங்காக‌ செயல்படும் பாதாள சாக்கடைகளும், சாலைகளும் உணர்த்துகின்றன. இரண்டு நாடுகளிலும், எந்த இடத்திலும் குப்பை நாற்றம் வீசவில்லை; கழிவறைகள் இலவசமாக, நம்மூர் கட்டணக் கழிவறைகளை விட மிக, மிக சுத்தமாக இருந்தன. 

கட்டணம் செலுத்தி தாய்லாந்து அரண்மனைக்கு - மலாக்காவில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கிறித்துவ ஆலயத்திற்கு தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 10% கூட, அதை விட காலத்தால் முந்தைய, அரிய கலை பொக்கிஷங்களையுடைய‌ திருமயம் சுற்றுலா தளத்திற்கு, ஒரு மாதத்தில் வருகிறார்களா? உலகிலேயே அரிய இசையியல் (musicology) தகவல் முக்கியத்துவம் மிகுந்த குடுமியாமலை இசைக் கல்வெட்டை பார்க்க,‌ ஒரு வருடத்தில் வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமிழ்நாட்டில், குறிப்பாக  மழைக் காலங்களில், கழிவறை நாற்றம் வரவேற்காத பேருந்து நிலையங்கள் இருப்பது அபூர்வமாகும்.

அது போன்ற 'வரவேற்பை' சுற்றுலா பயணிகளுக்கு வழங்க, தமிழ்நாட்டில் உள்ள நகரங்களும், ஊர்களும், 'போட்டி போட்டு' முன்னேறி வருவதை, கீழ்வரும் செய்தி உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் ஒழுங்காக செயல்படாத 'பாதாள சாக்கடை' திட்டங்களில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்த பணங்களையும், அந்தந்த ஊர் அரசியல் கொள்ளையர்களின் பணங்களையும் பறிமுதல் செய்தால்;

தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும், நகரங்களிலும்,  ஊர்களிலும்,  'குப்பை நாற்றம் ‘வரவேற்பதை’ ஒழிக்க முடியும்; எஞ்சிய பணத்தை கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிட்டு, தமிழ்நாட்டை மீட்க முடியும்.

சிங்கப்பூரை விட, தாய்லாந்தை விட, மலேசியாவை விட, இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, அதிக அளவில் சுற்றுலா  வருமானம் ஈட்ட முடியும். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும்.

ஊழலுக்கு எதிரான‌, அதற்கான சமூக அழுத்தமானது, கோபக்கனலாக, கீழ்நடுத்தர, ஏழை மக்களிடம் உருவாகி வளர்ந்து வருகிறது; தேர்தல் காலங்களில்,  ‘தமது கிராம/பகுதி பொதுப் பிரச்சினையை தீர்த்தால் தான், ஓட்டு கேட்க உள்ள வரலாம்', என்று ஆளுங்கட்சியையே 'மிரட்டி' காரியம் சாதிக்கும் அளவுக்கு;

அது அரசை செயல்பட வைக்கும்;

'வாழ்வியல் புத்திசாலி'(?) அரசியல் கொள்ளையர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், தமது 'கொள்ளைப்  பணத்தின்' ஒரு பகுதியை அந்த ஊர் நலன்களுக்கு செலவு செய்து, 'கோபக் கனலிலிருந்து' தப்பிக்க முயலும்;

வளர்ச்சிப்  போக்கானது;

மேல் நடுத்தர, பணக்கார தமிழர்களின்   'பாதுகாப்பு வளையம்'  (Safe Zone) மனப்பாங்கு காரணமாக, 'தடை'யில் சிக்கி உள்ளது.

அதே நேரத்தில், அந்த 'பாதுகாப்பு வளையத்தில்' வாழ்வதற்கு அவர்கள் கொடுத்து வரும் விலைகளின் 'இழிவான போக்கு', அந்த பாதுகாப்பு வளையத்தை வேகமாக பலகீனமாக்கி வருகிறது.  

அந்த விலைகள் யாவை? என்பதையும் மிக சுருக்கமாக பார்ப்போம்.

நல்ல வசதியுள்ள, குறுக்கு வழிகளில் பணம் சேர்க்க வாய்ப்புகள் வந்தாலும் ஒதுக்கித் தள்ளும் இயல்புடைய எனது நண்பர் ஒருவர், சிறையில் இருந்த, ஊழல் வழக்கில் சிக்கிய,  முன்னாள் அமைச்சரை பார்க்கச் சென்றதானது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக, அவரிடம் விவாதித்தேன்.

இன்று தமிழ்நாட்டில் 'நேர்மையான' வழிகளில் பணம் ஈட்டி, மேல் நடுத்தர, பணக்காரர்களாக வாழ்பவர்கள் எல்லாம், அந்தந்த ஊர் ஆளுங்கட்சி/எதிர்க்கட்சி முக்கிய  நபர்களுடன் 'நல்லுறவு'  பேணாமல், 'நிம்மதியாக' வாழ முடியாது. அந்த 'நிம்மதியான' வாழ்விற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற, இழிவான- அந்த 'அரசியல் கொள்ளையர்களின் குடும்ப திருமணங்களுக்கு போக வேண்டியது உள்ளிட்ட‌-  சமரச போக்குகளை கடைபிடித்தாக வேண்டும்.

அப்படியென்றால், (கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அந்த அரசியல் கொள்ளையர்களின் பாவத்தின் 'பங்கு', நம்மையும் நமது குடும்பத்தையும் தீண்டாதா?

என்ற கேள்வியை, நான் அது போன்றவர்களிடம் தொடர்ந்து எழுப்பி வருகிறேன்; அந்த 'பாதுகாப்பு வளையத்தை’  சீர் குலைக்கும் முயற்சிக்கு எனது பங்களிப்பாக.

சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களை ஒதுக்கி, இயற்கையோடு இயைந்து, எளிமையாக வாழ்வதில் கிடைக்கும் 'நம்ப முடியாத பலன்களையும்',  அவர்களிடம் பகிர்ந்து கொள்வதால், அது அந்த 'பாதுகாப்பு வளையத்தை  சீர் குலைக்கும் முயற்சிக்கு, வலிமையையும் கூட்டி வருகிறது. (Joyful Life: Do they, the inanimate, have life? ; http://veepandi.blogspot.in/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

ஊழலுக்கான துணிச்சலற்ற 'கோழை யோக்கியர்கள்', அரசியல் கொள்ளையர்களுடன் 'நேசமாகி', வாழ்ந்து கொண்டே, ஊடகங்களில் வெளிவரும், ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை பாராட்டி, 'ஒழுக்க சீலர்களாக' வெளிச்சம் போடும் கூத்தும், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களுடன் 'நேசமாகி', 'அதி வேகமாக' வளர்ந்த, 'அதி புத்திசாலி(?) பெரியார் சமூக கிருமிகள்',  ஊழல் ஒழிப்பு கட்சிகளில் பொறுப்பு வகித்த கூத்துகள், அந்த போக்கின் உச்சக்கட்டமாகும்.

அந்த பாதுகாப்பு வளையமானது, தமிழ்நாட்டில் தமது புலமையையும், விபச்சார தொழில் நுட்பத்தில் 'பிணைத்து' பயணிக்கும், முற்போக்கு/பிற்போக்கு 'புலமையாளர்களை', 'அம்பலமாகாமல்' பாதுகாத்தும் வருகிறது. அரசியல் கொள்ளையர்களை 'நாடி', உதவிகள் பெறும், 'பணத்தையே குறி'யாகக் கொண்ட‌, எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று கணித்து மதிக்கும்/ஒதுக்கும், முயற்சியாளர்கள், அதே நேரத்தில், அவர்களின்/தமது 'சுய உருவத்தை' கண்டுபிடித்தவர்களின், முதுகுக்குப் பின்னால், அவர்களின் 'குறைகளை' பேசி, 'ஒழுக்க சீலர்களாக' வேடம் போடும்- 'பாதுகாப்பு வளையத்தில்' வாழும்- புலமையாளர்கள்(?), உலகில் வேறு எங்கும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை; தமிழ்நாட்டைத் தவிர. எனவே தமிழ்நாட்டின் அறிவுப்புலத்தில், ‘அந்த குப்பைகளின் நாற்றமும்’ சகிக்க முடியாத இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட புலமையும், புலமையாளர்களும்,  தமிழ்நாட்டில் தனித்துவமாக ‌(unique), 'அடையாளச் சிதைவோடு’ வளர்ந்த அரசியல் நீக்கப் போக்கின் (Depoliticize) விளைவுகள் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/10/depoliticize10-social-induction.html )

தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்களுக்கு வர வேண்டிய தேவையில்லாமல், 'பாதுகாப்பு வளையத்தில்' வாழும் மேல் நடுத்தர, பணக்கார குடும்பங்களில், பணத்துக்காக எதையும் இழக்க தயாரான, ‘மனித மதிப்பீடுகளை (Human Values) இழந்த கழிவுநாற்றம்’ வீசும் குடும்பங்களும், எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'அகம்' தொடர்பான அந்த கழிவு நாற்றமும், 'புறம்'  தொடர்பான பேருந்து நிலைய கழிவு நாற்றமும், ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த 'பாதுகாப்பு வளைய' சமரச போக்கில் 'சிக்கியிருந்த', எனது உறவினர்களை, நான் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, 'பாதுகாப்பான' தூரத்தில் தள்ளி வைக்காத காரணத்தால்;

'பெரியார்' ரசிகராக, 'பெரியார் கொள்கை' வேடமிட்டிருந்த, இயல்பில் சிற்றினமானவர்களை, 'சமமாக' கருதி, எனது குடும்பத்தில் நான் அனுமதித்த 'பாவத்திற்காக', எனது குடும்பத்தில் சீர்குலைவு ஏற்பட்டு, அதன் விளைவாக, இது போன்ற ஆய்வுகளிலும், எனது இசை ஆய்வுகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி, பயணித்து வருகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlநானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ புரியும், இது போன்ற 'சமூக பாவங்களின்' விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அந்த 'சமூக பாவங்களின்' ஊற்றுக்கண்களை தேடி, சமூகத்திற்கு கேடான 'பாதுகாப்பு வளையத்தை' அழிக்க, பங்களிப்பு வழங்கி, 'பாவ விமோசனம்' பெற்று வருகிறேன்.

அந்த 'பாதுகாப்பு வளையத்தை’  சீர் குலைக்கும் முயற்சிக்கும்,  நல்ல வரவேற்பு இருப்பதானது;

தமிழ்நாடானது, எனது குடும்பம் உள்ளிட்டு, அகம், புறம் தொடர்பான‌ 'குப்பை நாற்றத்தில்' இருந்து மீளும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

Sunday, October 16, 2016

எனது ஆய்வுகளின் 'நண்பர்களான' வெளியீடுகள்:


எஸ்.வையாபுரி பிள்ளையும், மர்ரே ராஜமும், 

தமிழ்நாட்டின் புலமை மீட்சிக்கு வழிகாட்டிகள்


Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.


‘மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!’ (தி இந்து; 16-10-2016) கட்டுரையை படித்தவுடன், வியப்பில் அதிர்ந்தேன்.

எனது  'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்ட ஆய்விற்கும், அதில் நான் எதிர்பார்க்காமலேயே, திட்டமிடாமலேயே, பழந்தமிழ் இலக்கியங்களில் வெளிப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும்; ( 
http://musicresearchlibrary.net/omeka/ ; Search:s.a.veerapandian  & 

மர்ரே ராஜம் தொகுத்து, 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' 1981இல் வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' இரண்டாம் பதிப்பானது, ஒரு நண்பனைப் போல், நான் நேசிக்கும் அளவுக்கு, எனக்கு உதவி வந்தது/வருகிறது.

அது போன்ற முயற்சிகளில் மர்ரே ராஜம் ஈடுபட காரணமானவர் எஸ்.வையாபுரி பிள்ளை என்ற தகவல், மேற்குறிப்பிட்ட கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. (“1940-களில் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் ஏற்பட்ட சந்திப்பு ராஜத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.”)

1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலையில், அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, தற்போது அவற்றை வெளியிட்டு வரும் ‘சாந்தி சாதனா’வின் (வெளியீடுகளை வாங்க: 044 24352745; orders@santisadhana.org ; http://www.santisadhana.org/books.htm ) தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலா பற்றியும் அக்கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

மேற்குறிப்பிட்டபடி எனது ஆய்வுகளுக்கு உதவிய நூல்களை பதிப்பிக்கும் முயற்சிக்கு, எனது நன்கொடையாக ரூ.10,000 தர நான் விரும்புவதை, நான் சகுந்தலாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "நன்கொடையெல்லாம் வேண்டாம். தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கினாலே போதும் " என்றார். அடுத்த முறை சென்னை செல்லும்போது, அங்கு சென்று புத்தகங்களை வாங்கி வர முடிவு செய்துள்ளேன்; அந்த இடத்திற்கு செல்வதே எனக்கு ஒரு புனித யாத்திரையாகும்.

பெரியார் இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில், எஸ்.வையாபுரி பிள்ளை தொடர்பாக நிகழ்ந்த கீழ்வரும் அனுபவமும் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, எவ்வளவு அபத்தமான உணர்ச்சிபூர்வ திசையில் பயணித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அதன் விளைவான 'கறுப்பு - வெள்ளை' சமூக நோயில் தமிழ்நாடு சிக்கியதன் காரணமாக; (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423

என்பதை பின்னுக்கு தள்ளி;

‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து அவர்பால்
வெறுப்பை உமிழ்வது அழிவு’‍

என்னும் 'புது'க்குறள் அரங்கேறியதா? என்பது ஆய்விற்குறியதாகும்.

அந்த அரங்கேற்றம் காரணமாக, அதிக வெறுப்புக்குள்ளானவர்களில் எஸ்.வையாபுரிபிள்ளை முக்கிய இடம் பெறுவார்; ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாத, அரைகுறை தமிழறிவுடன், 'பெரியார்' முகமூடியில், 'சமூக கிருமிகள்' அரங்கேறிய சூழலில் ( அதை 'திருச்சி பெரியார் மையம்' மூலம் கண்டுபிடித்தேன்). 

‘Quantum Mechanics- இல் ஒரு அணுவில் உள்ள எலெக்ட்ரான்களில், இயல்பின் அடிப்படையில் 'சமத்துவமாக' இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்க முடியாது. இது பவுலியின் 'தவிர்ப்புத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle)  என்று அழைக்கப்படுகிறது. அதே போல், உலகில் உள்ள மனிதர்களில் இயல்பின் அடிப்படையில் 'இரண்டு மனிதர்கள்' கூட 'சமத்துவமாக' இருக்க முடியாது. எல்லா மனிதர்களையும், ‘இயல்பைப் புறக்கணித்து’, குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டம் உள்ளிட்டு, நமது வாழ்வில், அவர்களைச் 'சமத்துவமாக' நடத்துவது எவ்வளவு முட்டாள்த்தனமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பது எனது வாழ்க்கையில், நான் கற்ற 'அசாதாரண' பாடமாகும். புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்', எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு.’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlஎனவே எஸ்.வையாபுரி பிள்ளை, மர்ரே ராஜம், உள்ளிட்டு பல புலமையாளர்கள், 'திராவிட' கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'இருட்டில்' மறைந்த 'குற்றத்திற்கு', என்னை போன்றவர்களும் பங்களித்திருக்கிறோம். இயற்கை விதியின்படி, அதற்கான தண்டனையையும், எனது பங்களிப்பால் வளர்ந்த, 'பெரியார்' சமூக கிருமிகள் மூலம் நான் அனுபவித்து, பாடம் கற்று, அதை எனது சமூகவியல் ஆய்வுக்கும் உட்படுத்தி வருகிறேன். 'தேசிய கிருமிகள்' மூலம் வ.உ.சி அனுபவித்த 'தண்டனைகள்' மூலமாக‌, அந்த 'கிருமி சமூக செயல்நுட்பத்தின்' அடுத்த கட்ட வளர்ச்சியாக உருவெடுத்த, 'பெரியார் சமூக கிருமிகள்' இன்னும் மோசமானவர்கள்‌, என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

'பெரியார்' இயக்கத்தில், அந்த வெறுப்பு நோயில் சிக்காமல் பயணித்தவர், திரு.புலவர் இமயவரம்பன் ஆவார். திருமணம் செய்து கொள்ளாமல், படிப்பு மற்றும் வசதியுடன், தம்மை அர்ப்பணித்து, ஈ.வெ.ராவின் உதவியாளராக, வாழ்ந்து மறைந்தவர் அவர். என் மேல் தாயினும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர்.

திருச்சி பெரியார் மாளிகையில், அவர் ஒரு முறை என்னிடம் விவாதிக்கையில் “எஸ்.வையாபுரி பிள்ளை முன் வைக்கும் கருத்துக்களை முற்றிலும் மறுப்பது தவறு. சிலவற்றில் அவர் முன் வைக்கும் வாதங்கள், மறுக்க முடியாத அறிவுபூர்வமானவையாகும்' என்று தெரிவித்தார். 

அந்த காலக்கட்டத்தில், பெரியார் கொள்கையாளனாக (Theoretician), மார்க்சியம், லெனினியம், மாவோயிசம்' தொடர்பான நூல்களை தேடி தேடி படித்து, அந்த கொள்கையாளர்களுடன் அறிவுபூர்வ விவாதப் போராட்டம் நடத்தி வந்த எனக்கு, புலவர் இமயவரம்பன் தெரிவித்த கருத்தின் முக்கியத்துவம், அப்போது புலப்படவில்லை; பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, 'கறுப்பு - வெள்ளை' நோயில் நான் சிக்கியிருந்த‌ நிலையில்.

பழந்தமிழ் இலக்கியங்கள் மீது, 'இசை இயற்பியல்' (Physics of Music) ஆர்வத்தில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம், நான் அந்த நோயிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி, ஈ.வெ.ராவின் வரை எல்லைகள்' (limitations) பற்றியும், அது பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துக்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கு காரணங்களாகின? என்பது பற்றியும் ஆய்வுகளில் ஈடுபட நேர்ந்தது. 

எஸ்.வையாபுரி பிள்ளை தலைமையிலான அறிஞர் குழு  தொகுத்து, 1982இல் சென்னைப் பல்கலைக்கழகம் மறுபதிப்பாக வெளியிட்ட ‘Tamil Lexicon'-ம், மர்ரே ராஜம் தலைமையில் அறிஞர் குழு தொகுத்து வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' தொகுப்பு நூல்களும் இன்றி, பழந்தமிழ் இலக்கியங்களில் எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்காது.

வையாபுரி பிள்ளையாயிருந்தாலும், நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும், வெளிப்படுத்திய ஆய்வு முடிவுகளை எல்லாம், அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலமாக, நிறை குறைகளை திருக்குறள் (423) வழியில் வெளிப்படுத்துவதே அறிவுடைமை. அதை விடுத்து, அம்முடிவுகள் தமிழின் பெருமையை கூட்டுமா? குறைக்குமா? என்று உணர்ச்சிபூர்வமாக அணுகிய போக்கின் செல்வாக்கு காரணமாகவே;

செல்டன் பொல்லாக் போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் தமிழ்ப்புலமையை ஏளனம் செய்து, சமஸ்கிருதத்தின் துணையுடன், மணிப்பிரவாள காலத்திற்குப் பிறகே, தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன;

என்று தமது நூலில் அறிவிக்கும் விளைவில் முடிந்தது.
(http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

எனது ஆய்வுகள் மூலம் எனக்கு நெருக்கமான‌;

மலேசியாவில் வாழ்ந்து, அண்மையில் மறைந்த, அறிஞர் உலகன் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தை ஏற்கனவே பார்த்தோம்.

"என் அனுபவத்தைப் பொறுத்தவரை ஓர் 50 ஆண்டுகட்கு முன்பிருந்த அறிஞர்கள் இன்று அதிகம் இல்லை, 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆழமான கல்வி அறிவும் இப்பொழுது இல்லை என்றே நினைகின்றேன். இன்றும் நான் அன்று பதிப்பாக்கிய நூற்களையே என் ஆய்விற்கு பயன்படுத்துகின்றேன்.”

உலகன் குறிப்பிட்டுள்ளவாறு, 50 ஆண்டுகட்கு முன்பிருந்த தமிழ் புலமையாளார்கள் பற்றி விளங்கிக் கொள்ள, மேற்குறிப்பிட்ட 'தி இந்து' கட்டுரையின் கீழ்வரும் பகுதியானது, எனது கவனத்தை ஈர்த்தது.

“வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கி.வா.ஜ., தெ.பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு மர்ரே ராஜம் நிறுவனத்துக்கு வாய்த்தது. அதுபோன்றதொரு குழு இனியொருபோதும் வாய்க்காது! சிறு வயதில் ராஜத்திடம் பணிக்குச் சேர்ந்து அவரது இறுதிக்காலம் வரை உடன் இருந்த பரமார்த்தலிங்கத்திடம் பேசியபோது, “வழக்கமாக ஒரு குழுவின் பெரிய அறிஞர்கள் ஒன்றுகூடினால் அவர்களுக்குள் ‘நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் வந்துவிடும். ஆனால், இந்தக் குழு அப்படியில்லை. ஒருவர் பார்த்த ப்ரூஃபை இன்னொருவர் மறுபடியும் சரிபார்ப்பார். ‘நான் பார்த்ததை நீ எப்படிப் பார்ப்பது?’ என்றெல்லாம் யாரும் சண்டையிட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் பிரதான நோக்கம் பிழையில்லாமலும் எளிமையாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களின் வீடுகள்தோறும் சென்றடைய வேண்டும் என்பதுதான்” ( குறிப்பு கீழே)

மேலே குறிப்பிட்ட 'பிரபல' நபர்கள் எல்லாம், சுயலாப நோக்கில், தமது செல்வம், செல்வாக்கை எப்படி வளர்ப்பது? என்ற நோக்கில், மேற்கொண்ட முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்று, அவர்களைப் பிடிக்காதவர்கள் கூட சொல்ல மாட்டார்கள். ‘நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் இன்றி, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, உதவும் நபர்களையும், முயற்சிகளையும், சுயலாப நோக்கின்றி ஆதரிக்கும் 'பிரபல'ங்கள், இன்று யார் இருக்கிறார்கள்? என்று தேடும் நிலையில், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் தமது புலமையையும் விபச்சார தொழில்நுட்பத்தில் 'பிணைத்து' பயணிக்கும், 'புலமையாளர்களும்' இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் 'செல்வாக்கு' மிக்க அரசியல் குடும்பத்தினருடன் நேசமாக போட்டி போடும் 'புலமையாளர்கள்'’;

மற்றும் அப்போட்டியிலிருந்து ஒதுங்கி வாழும் புலமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும்;

தமிழ்நாட்டை புலமை வீழ்ச்சியிலிருந்து மீட்க விரும்பும் ஒவ்வொருவரும், முதலில் தமது அகவாழ்வை ‍சுயபரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும்.

'திராவிட முற்போக்கு வீரர்களாக' வேடம் போட்டு, 'அதிவேகமாக' வளர்ந்த பணக்காரர்களில், 'அதிபுத்திசாலிகள்' ஆனவர்கள், தமக்கு 'ஒத்து வரும்' தமிழ் அமைப்புகளின், தமிழ் 'அறிஞர்களின்'(?) 'ஆதரவுடன்' 'தமிழ்ப்புலமையின் புரவலர்கள்' ஆனார்களா? தெரிந்தோ, தெரியாமலோ, நாமும் அதில் இடம் வகிக்கிறோமா? மது தேவைகளும்(needs), அவை காரணமாக மனதில் தோன்றும் ஈடுபாடுகளும்(interests), 'எந்த வழியிலும்' எவ்வாறு செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' புற வாழ்வில் பெறுவது என்பதை,  தமது அகவாழ்வில் செல்வாக்கு செலுத்த, நாம் அனுமதித்துள்ளோமா? அத்தகைய செல்வாக்கிற்கு இடமளிக்காமல், விரும்பி புறத்தில் இழப்புகளை ஏற்று, புலமையை வளர்ப்பதில் அகத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறோமா? மேற்கத்திய சிந்தனை முறைக்கு (Western Paradigm)  அடிமையாக இல்லாமல், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் தமிழ், தமிழர் தொடர்பான தொன்மை பற்றிய ஆய்வுகளை எதிர்கொள்கிறோமா?

தமிழ்நாட்டில் புலமை மீட்சிக்கு பங்களிப்பு வழங்க, எஸ்.வையாபுரி பிள்ளையும், மர்ரே ராஜமும், எனக்கு வழிகாட்டிகள் ஆவர்.


குறிப்பு:

'அறிஞர்களுடன்' ஒன்று கூடாமல்;

ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாத, அரைகுறை தமிழறிவுடன், 'பெரியார்' முகமூடியில், இருந்த 'சிற்றின' மனிதர்களை 'சமமாக' கருதி, அவர்களுடன் ஒன்று கூடினால்;


நமது 'அறிவு உழைப்பில்', அவர்கள் 'சமூக கிருமிகளாக' வளர்வார்கள் என்பது, எனது ‘திருச்சி பெரியார் மையம்' அனுபவமாகும்.

1944இல் ஈ.வெ.ரா திராவிடர் கழகம் துவங்கி, மேற்கத்திய இறக்குமதிகளின் பொருளில், தமிழில் 'இனம், சாதி' ஆகிய சொற்களை திரித்து, உருவான 'திராவிடர்' போதையில், பயணித்து அரங்கேறிய சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism);


டார்பிடோ ஜனார்த்தனம், குத்தூசி குருசாமி உள்ளிட்ட‌  பலரின் 'சுயலாப நோக்கற்ற‌  அறிவு உழைப்பின்' பலன்களாக, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாகி செல்வாக்கு பெற்றதை;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் கண்டுபிடித்து(discover) வெளிப்படுத்தி, அந்த சமூக செயல்நுட்பத்தை வீழ்த்த வேண்டும் என்பதும்வ.உ.சி உள்ளிட்டு, 'தேசிய', 'திராவிட' இயக்கங்களில், எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், 'கிருமி சமூக செயல்நுட்ப வளர்ச்சிக்கு உரமானது' என்ற பழியும் நீங்கும் என்பதும், இயற்கையின் விதி போல நடைபெற்று வருகிறது. அந்த வீழ்ச்சியில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி துவங்கும் என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

மனசாட்சியையும், அறிவு நேர்மையையும் அடகு வைத்து, 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', எந்த கொள்கை முகமூடியுடன் பயணித்தாலும்;


அல்லது காலத்தால் ஒதுக்கப்பட்ட (anachronistic) கொள்கை அபிமானிகளாக பயணித்தாலும்;

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் எளிதில் அவற்றை கண்டுபிடித்து, (அவர்களை எதிர்ப்பதும் 'வேஸ்ட்'(Waste)  என்று கருதி) ஒதுக்கி வருகிறார்கள்,  என்பதும் எனது அனுபவ புரிதல் (field observation) ஆகும். ஆனால் 'அவசர உதவிக்கு', பெரியவர்களையும், கட்சிகளையும், 'தாமதமான வால்களாக்கி', உதவுபவர்கள் அவர்கள் என்பதை, சென்னை வெள்ள நிவாரணம் மூலம் நிரூபித்தார்கள். மாணவர்களையும், இளைஞர்களையும் பெரும்பான்மையாகக் கொண்டு பயணத்தை துவக்கிய 'பெரியார்' கட்சிகள் எல்லாம், இன்று அவர்களை சிறுபான்மையாகவும், 50 வயதுக்கும் அதிகமானவர்களை பெரும்பான்மையாகவும் கொண்டு பயணிக்கிறார்களா? அது அக்கட்சிகளின் மரணப் பயணங்களின் அறிகுறியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். எஸ்.வையாபுரி பிள்ளை, மர்ரே ராஜம், உள்ளிட்டு, 'திராவிட' கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'இருட்டில்' மறைந்த புலமையாளர்கள் எல்லாம், மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் போக்கு தொடங்கி விட்டது; தமிழின் புலமை மீட்சியின் முன்னறிவிப்பாக.


சாதி, மதம், 'இனம்'(?) உள்ளிட்ட அடிப்படைகளில், 'வெறுப்பு' மனநோய்க்கு அடிமைகளாகப் பயணித்து, கீழ்வரும் குறளை, புறக்கணித்து வாழ்பவர்கள் எல்லாம், கால ஓட்டத்தில் புறக்கணிப்புக்குள்ளாகி, சருகாக உதிரும் கட்டம்(Phase) தொடங்கி விட்டது.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423