Monday, May 14, 2018


தமிழ் மாணவர்களும் & பழந்தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும்;


புதைக்குழிகளிலிருந்து(Pitfalls) மீளும் காலம் நெருங்குகிறது


“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடனே யார் யார் கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்; என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர் Sheldoon Pollock - ஷெல்டான் போல்லாக் – ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (permanent black - Delhi  2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 10 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள,  கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?” ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html  )

சண்டைக்கோழிதிரைப்படத்தில் குட்டி ரேவதி தொடர்பாக வந்த வசனம் கிளப்பிய 'சர்ச்சை' அளவுக்கு கூட (http://theevu.blogspot.sg/2006/01/blog-post.html );

உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்கா எழுத்தாளர்,  தமிழ் தொடர்பாக மிகவும் அபத்தமான கருத்தினை, ஆராய்ச்சி என்ற பெயரில் வெளியிட்ட போதும் கூட, ஏன் எழவில்லை

அறிவுபூர்வபோக்கிலிருந்து தடம் புரண்டு, பாரபட்ச உணர்ச்சிபூர்வ போக்கில் தமிழ் எழுத்துலகம் பயணித்து வருகிறதா

அது உண்மையென்றால், அதற்கான விதை 1944இல் முளை விட்டு, 1949 முதல் வேகமாக வளர்ந்து, 1969 முதல் வீரியம் பெற்று, உச்சத்தை அடைந்து, ஜெயலலிதாவின் மரணம் மற்றும் தி.மு. தலைவர் மு.கருணாநிதியின் நோய் ஆகியவற்றிற்குப் பின்;

வீழ்ச்சி திசையில் பயணிப்பதற்கு, இன்றைய மாணவர்களும் படித்த இளைஞர்களும் அந்த பாரபட்ச உணர்ச்சிபூர்வ‌ நோயில் சிக்காமல் பயணிக்கும் அதிசயமும் ஒரு காரணம், என்பது எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html )

பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசையியல்' (Musicology) தொடர்பான சொற்களில் பலவற்றிற்கு, உரைகளும், அகராதிகளும் சரியான பொருள் தரவில்லை;(http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) 

என்பது பற்றிய எனது ஆய்வுகள் சரி என்றால்;

ஜார்ஜ் ஹார்ட் உள்ளிட்டோர் மொழிபெயர்த்து, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, ஒரு திருத்த பின்னணிப்பு (Appendix)  சேர்க்கப்படவில்லையென்றால்;

அந்த மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எல்லாம், பிழையான திசையில் பயணிக்க நேரிடாதா? (http://tamilsdirection.blogspot.sg/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு மிக்க, மேலே குறிப்பிட்ட செல்டன் பொல்லாக், தமிழை இழிவுபடுத்திய ஆராய்ச்சியை வெளியிட்டமைக்காக‌, அவரை குறை சொல்ல முடியுமா?

எனது ' தமிழிசையின் இயற்பியல் ' (Physics of Tamil Music; Ph.D 1996)  ஆய்வின் மூலம் வெளிவந்த கண்டுபிடிப்புகள் எல்லாம்;

பேராசிரியர்கள் ஜெயதேவன், வீ..அரசு, பொற்கோ, .இராசேந்திரன் உள்ளிட்ட இன்னும் பல, 'திராவிட'  கட்சிகளின் ஆட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, பெரும்பாலும் 'இந்துத்வா எதிர்ப்பு' தமிழறிஞர்களின் பார்வைக்கு வந்தும், அவர்கள் எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டிய பின்னரும்;

கடந்தசுமார் 20 வருடங்களாக தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கிலிருந்தும்

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் விடுதலை பெறும் காலமும் நெருங்கி வருகிறது.’ (http://tamilsdirection.blogspot.sg/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music -1996)  என்ற தலைப்பில் Ph.D முடித்தது முதல் இன்று வரை, எனது ஆய்வு முடிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு இதழ்கள், The Journal of Sanskrit Academy, Sangeet Natak, கணையாழி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள், ‘Ancient Music Treasures- Exploration for New Music’ (2006) , 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (புத்தகம் ‍ 2009), online research journal, http://musicresearchlibrary.net/omeka/ ,
http://www.academia.edu/8213145/Musical_Threads_A_New_Musicological_Concept_discovered_from_the_Ancient_Indian_Music;
https://www.scribd.com/document/244545987/Sound-of-Letters-and-Music ; http://musictholkappiam.blogspot.sg/ ; 
http://musicdrvee.blogspot.sg/ ;
http://tamilsdirection.blogspot.sg/ பதிவுகள்;

'ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software), தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும் (software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும் (signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன.' (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html  ) என்பதை சுட்டிக்காட்டி;

காதல், வீரம் மட்டுமின்றி, அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும், சங்க இலக்கியங்கள் இருப்பதை வெளிப்படுத்தி வரும் ஆய்வுகள் மூலமாக, உலக அளவில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடங்கள் அறிமுகமாகும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html


தமிழ்நாடு
மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate)  படிப்புகளில் எண்ணற்ற மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

உரையாசிரியர்களின் விளக்கங்கள், லெக்சிகன், அகராதிகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களின் துணையுடனே மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன; கீழ்வரும் குறைபாடுகளுடன்.

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசையியல்(Musicology) தொடர்பான சொற்களில் பெரும்பாலானவைக்கும், யாப்பிலக்கணம் தொடர்பான இசையியல் சொற்களுக்கும், உரையாசிரியர்களின் விளக்கங்களில் இருந்த குறைபாடுகளை எல்லாம் மேலே குறிப்பிட்ட வெளியீடுகளில் உரிய சான்றுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளேன்.

எனது கண்டுபிடிப்புகளை பாராட்டியவர்களில் கீழ்வருபவர்கள் எல்லாம் முக்கிய பொறுப்புகள் வகித்தவர்கள் ஆவர்;

பேரா.வி.ஜெயதேவன் ‘Oxford English-English-Tamil Dictionary’- Consultant editor, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் மறுபதிப்பு குழுவின் தலைவர், தமிழ்த்துறை தலைவர்;

முனைவர்.வீ.அரசு,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய‌த்துறை தலைவர்;

முனைவர் பொற்கோ சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;

முனைவர் ம.இராசேந்திரன், தமிழ்ப்பல்கலைகழக துணை வேந்தர், ஆசிரியர் 'கணையாழி' இதழ்; 

முனைவர் ஆர்.தாண்டவன், சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;

தமிழ் தொடர்பான படிப்புகளில் எனது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்திய குறைகளை சரி செய்ய‌, மேலே குறிப்பிட்ட நபர்கள்,  என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்? என்பதானது அவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம், என்றாலும்;

தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இளங்கலை முதுகலை பயிலும் மாணவர்கள் எல்லாம்;

1996 முதல் நான் வெளியிட்டு வரும் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளை எல்லாம் இன்றுவரை கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்ட பாடப்புத்தகங்களின் துணையுடன் பயிலும் அவலத்திற்கு, மேலே குறிப்பிட்ட நபர்களை எல்லாம் நான் குறை சொல்ல மாட்டேன்.

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகள் தொடர்பான எனது அனுபவங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் நோய் ஆகியவற்றிற்குப் பின் தமிழுக்கு கேடான அந்த போக்குகள் எல்லாம் முடிவை நெருங்குகின்றன, என்பதும் எனது கணிப்பாகும்.

எனவே தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate)  படிப்புகளில் எண்ணற்ற மாணவர்கள் பயின்று வரும் படிப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கம்ப ராமாயாணம், பெரிய புராணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கல்லாடம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில்;

ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு எல்லாம், திருத்த பின்னிணைப்புகள் வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

எனது ஆய்வினை, ஒரு குழுவின் துணையுடன் தொடர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும்;

‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts’   என்ற ஆங்கில நூலை எழுதி முடித்துள்ளேன். இந்தியாவில் அல்லது சிங்கப்பூரில் புகழ் பெற்ற பதிப்பாளர் மூலம் அதனை வெளியிடவும் முயற்சி செய்து வருகிறேன்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருவதை உணர்ந்து.


குறிப்பு: 'தமிழ்நாட்டில் அறிவுப் புலத்தில் உள்ள கீழ்வரும் நோயை அடையாளம் கண்டு தீர்ப்பதற்கான முயற்சி இனியும் தாமதமாவது நல்லதல்ல. ஏனெனில்,  'எது அறிவு பூர்வமானது?' 'எது குப்பை?' என்று பிரித்துணர்வதே சிக்கலாகும் அளவுக்கு, 'இரைச்சலும், சிக்னலும்' பிரித்துணர முடியாத தகவல் பரிமாற்ற சிக்கலில்  தமிழ்நாடு மீள முடியாமல் சிக்க நேரிடும். 


எது அறிவுபூர்வமானது? எது அபத்தமானது? என்பது பற்றிய குழப்பம் இருப்பது ஒரு சமூகத்தில் அறிவுப்புலத்திற்கு ஆபத்தானதாகிவிடும். அதன்விளைவாக குப்பையில் இருக்க வேண்டியது கோபுரத்திற்குப் போக, கோபுரத்தில் இருக்க வேண்டியது குப்பைக்கு போக வேண்டியதாகி விடும். சமுகப் பயணத்தின் 'என்ஜீனாக'(Engine)  இருப்பது அறிவுப் புலம் ஆகும். அது 'குப்பைகளின்' கரங்களில் சிக்கியபின், அந்த சமூகம் இழிவான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது.' ; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_9.html 
 

No comments:

Post a Comment