Tuesday, June 30, 2020


தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகளுடன் நேசமாகும் மத்தியில் ஆளும் கட்சிகள்?


தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல




மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிப்பிரச்சினையில் கர்நாடக பா..கவும், கர்நாடக காங்கிரசும் ஒரணியில் நிற்கும் வலுவுள்ள கட்சிகளாக தம்மை செயல்பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள்.

1969இல் முதல்வரான கருணாநிதி சட்டசபையில், ‘காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்' என்று அறிவித்த பின்னும், மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரானதற்கும், தஞ்சை மாவட்டம் தி.மு. ஆதரவு மாவட்டமாக தொடர்ந்ததற்கும், தமிழக காங்கிரஸ், தமிழக பா.. உள்ளிட்ட தேசியக்கட்சிகள் நோஞ்சான் கட்சிகளாக பயணித்தது மட்டும் காரணமல்ல.

'தமிழ் உணர்வு, தனித்தமிழ்நாடு' என்று பயணித்த கட்சிகளும், தி.மு.கவின் குடும்ப ஊழல் ஆட்சியில் மக்கள் பட்ட அவதிகளைப் பற்றி கவலைப்படாமல், தி.மு.கவின் முதுகில் பயணித்த 'நோஞ்சான் கட்சிகளாக' இருந்ததும் கூடுதல் முக்கிய காரணமாகும்.

முதல்வராயிருந்த கருணாநிதி, 'அமெரிக்காவின் ஆதரவுடன் தனித்தமிழ்நாடு' அறிவிப்பதை பரீசிலித்து, விவாதித்து, 'வியட்நாமில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு', அமெரிக்காவின் இராணுவ உதவியானது, இது போன்ற முயற்சிக்கு கிடைக்காது ' என்று கருத்து தெரிவித்திருப்பதை, 'வீக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ளது

அதாவது சர்வதேச அரசியலில், அமெரிக்காவிற்கு எதிரான சோவியத் ரஷ்யா அரசு சார்பாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பயணித்த சூழலில்; 

வியட்நாம் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்தால், இன்று தனித்தமிழ்நாடு உருவாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது;

என்பதை மேலே குறிப்பிட்ட சான்று உணர்த்துகிறது. வியட்நாம் போரில் அமெரிக்கா பெற்ற தோல்வியின் காரணமாக, தி.மு. தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆட்சியில் முழுவதுமாக சிக்கும் ஆபத்திலிருந்து, தமிழ்நாடு தப்பித்திருக்கிறது.

தி.-வில் உள்ளவர்களின் அழுத்தத்தில், தி.மு. தலைவர் பரிசீலித்த 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு, தமிழ்நாடு மக்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது? அல்லது ஊழலின் கேடயமாக 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையும், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பிற்கு உள்ளானதா? என்ற கேள்விகளை, நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியை கலைத்த பின், வெளிப்பட்ட 'சிக்னல்கள்' எழுப்புகின்றன.

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. (‘நல்லவேளை, பிரியும் ஆபத்திலிருந்து தமிழ்நாடு தப்பித்தது’; 

தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளுக்கு காரணமான பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்

கூட்டுக்குடும்பத்தின் வலிமையானது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வலிமையைப் பொறுத்ததாகும்.  உறுப்பினர் எவரும் நோஞ்சானாக இருக்கும் பட்சத்தில், அவர் விரும்பினாலும் மற்ற வலிமையான உறுப்பினர்களுக்கு உள்ள மரியாதை கிடைக்காது. அதே நேரத்தில், கூட்டுக்குடும்பத்தில் அதீத வலிமையுள்ள உறுப்பினருக்கு சிறப்பு மரியாதையே கிடைக்கும்.

திட்டக்கமிசன் ஒப்புதல் இன்றி, மத்திய அரசின் அனுமதியின்றி,  1967க்குப் பின், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசானது அணைகள் கட்டத் தொடங்கியதும்,

1969இல் முதல்வரான கருணாநிதி சட்டசபையில், "காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்' என்று அறிவித்ததும், தமிழ்நாடு நோஞ்சானாகவும், கர்நாடகம் வலிமை மிக்க உறுப்பினராகவும், இந்தியா என்ற கூட்டுக்குடும்பத்தில் இருப்பதை உணர்த்தவில்லையா?

தி.மு. தலைவர் கருணாநிதியின் ஆதரவுடன் 1996 சூனில் இந்திய பிரதமராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கவுடா பிரதமரானார். இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்த காலத்தில், உச்ச நீதிமன்ற ஆணைப்படி உருவான காவிரி நடுவர் மன்ற நீதிபதியாக சித்ததோஷ் முகர்ஜி இருந்தார். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வருடம் தோறும் 205 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட, 25 சூன் 1991 இல் இடைக்கால நிவாரண தீர்ப்பு வழங்கினார்

பின் பிரதமர் தேவகவுடாவின் அழுத்தம் காரணமாக சித்ததோஷ் முகர்ஜி காவிரி நடுவர் மன்றத்தில் இருந்து விலகினார். பின் காவிரியில் இருந்து  சில டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டது. உடனே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடந்தது. எந்த அளவுக்கு தமிழ்நாடு நோஞ்சான் நாடானது? என்ற ஆய்வுக்கு இது போன்ற தகவல்கள் உதவும்.

1920களில் எந்த அளவுக்கு வலிமையான மனிதர்கள் இருந்த நாடானது, இந்த அளவுக்கு ஊழலுடன் சமரசமான நோஞ்சான்கள் நாடாக மாறியுள்ளது. இதற்குத் தான் ஆசைப்பட்டாரா .வெ.ரா? .வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, .வெ.ராவிற்கு  மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே எமனானது. 

கர்நாடகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு வலிமை பெறுமானால், தமிழக பா..கவும் தமிழக காங்கிரசும் காவிரிப்பிரச்சினை மட்டுமின்றி, தமிழ்நாடு தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் ஓரணியில் நிற்பார்கள். வேறுவழியின்றி தமிழ்நாட்டில் உள்ள நோஞ்சான் கட்சிகளும் அதில் சேர்வார்கள்

அதற்கு தமிழ்நாட்டில் உள்ள தேசியக்கட்சிகள் 'நோஞ்சான் நோயில்' இருந்து விடுதலை பெற வேண்டியது முன் நிபந்தனை ஆகும்.

தேசியக்கட்சிகளான‌ தமிழக காங்கிரசும், தமிழக பாஜகவும் மட்டுமின்றி, தனித்தமிழ்நாடு போதையில் பயணிக்கும் கட்சிகளும் ஆர்வலர்களும் நோஞ்சான்களாக இருந்ததாலேயே, அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு சர்க்காரியா கமிசன் வழக்கினை தமது அரசியல் சுயலாபத்திற்காக வாபஸ் பெறும் துணிச்சல் வந்தது.

அதன் விளைவாக‌, கருணாநிதியின் 'அறிவியல் ஊழலில்' தப்பித்திருந்த‌ தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம், 1991 முதல் இன்று வரை ஊழலுக்கு இரையானதை அனுபவிப்பது தமிழ்நாடு தானே. இந்திரா காந்தியின் குடும்பத்திற்கோ கட்சிக்கோ அதனால் என்ன பாதிப்பு? தமிழ்நாடு காங்கிரஸ் நோஞ்சான் கட்சியாக இல்லாமல், கர்நாடக காங்கிரஸைப் போல துணிச்சலான கட்சியாக இருந்திருந்தால், இந்திரா காந்திக்கு அந்த துணிச்சல் வந்திருக்குமாதமிழ்நாட்டு மக்களின் ஒப்புதலின்றி, கச்சத்தீவை இலங்கைக்குத் தானமாக கொடுக்கும் துணிச்சல் இந்திரா காந்திக்கு வந்திருக்குமா? இந்திய விடுதலைக்குப் பின், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இது போன்ற கூத்துகள் நடந்திருக்கிறதா?

தமிழ் உணர்வு, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' உள்ளிட்ட இன்னும் பல உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில், தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனி வளங்களும் குடும்ப ஊழல் பேராசைக்கு இரையானதை கண்டு கொள்ளாத அளவுக்கு குடும்ப ஊழல் பாதுகாப்பு அரண்களாகப் பயணித்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்க இயலாத நோஞ்சான் கட்சிகள் ஆகும். 

இன்று தமிழக பா..கவானது , கர்நாடக பா..கவைப் போல வலிமையுடன் இருந்து, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தலையெடுக்கும் யோக்கியதை இருந்திருக்குமானால், தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் சசிகலா - நடராஜன் குடும்பங்களுக்கு நெருக்கமாகி தமிழக பா.. தலைவர்கள் பயணித்திருப்பார்களா? முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமாகியிருப்பார்களா?

2014 முதல் மோடி பிரதமராக ஆட்சி செய்து வருகிறாரே. தி.மு. மற்றும் ...தி.மு. பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், நடந்த ஊழல் ஒழிப்பு சோதனைகளும் என்ன ஆயிற்று? என்பதைப் பற்றி மூச்சு விடாமல், திராவிட ஊழல்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் மோடி ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் பரப்புரை செய்வது கோமாளித்தனம் ஆகாதா

என்பது போன்ற கேள்விகள் எழும் வாய்ப்பு வந்திருக்குமா?

'பலகீனமான புராசிகியூசன்' (Weak Prosecution) மூலமாக திராவிட ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகும் வகையிலும், ஆமை வேகத்தில் வழக்குகள் நகரும் வகையிலும் பிரதமர் மோடி ஆட்சி செய்தால், தமிழ்நாட்டு மக்களின் கோபக்குவியத்தில் அவர் சிக்குவதைத் தவிர்க்க முடியாது;

என்ற நிலை வந்திருக்குமா?

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஆனால் வடிகால்கள் இன்றி தமிழ்நாட்டில், மக்கள் கோபம் அதிகரித்துக் கொண்டே வருமானால், மத்தியில் ஆள்பவர்கள் நோஞ்சான் கட்சிகள் மூலமே தமிழ்நாட்டை கையாண்டு வருவது நீடிக்குமானால், இந்தியாவின் 'சமூக காங்கிரின்' பகுதியாக தமிழ்நாடு மாறுகின்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது

ஏற்கனவே இந்தியாவுடன் ஒட்டாத 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிக்கலுடன் அரசியல் நீக்கம் (depoliticize) வளர்ந்துள்ள தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இடையே நோஞ்சான் கட்சிகள் மூலமாக இடைவெளி நீண்டகாலம் நீடிக்குமானால், அந்த அபாயமானது மீளமுடியாத (irreversible) நிலையை எட்டிவிடும்.

மலாய் - சீன இனக்கலவரம் வெடித்து 'சமூக காங்கிரின்' பகுதியாக மாறியதாலேயே, தனிநாடு கோரிக்கை இல்லாமலேயே, சிங்கப்பூரை மலேசியா தாமாகவே துண்டித்து தனிநாடாகப் பயணிக்கச் செய்தது.

ஊழலில், பொது ஒழுக்கக்கேட்டில் இன்றைய தமிழ்நாட்டைப் போலவே, அந்த காலக்கட்டத்தில் (1960களில்) சிங்கப்பூர் இருந்ததை, சிங்கப்பூரில் புகழ் பெற்ற நடன ஆசிரியர் மறைந்த பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார். சிங்கப்பூரானது வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு சீரடைந்ததற்கு, மறைந்த லீ குவான் யூ முக்கிய காரணமாவார். அதனை அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களே, அவர் மறைந்த பின் நடந்த இறுதி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்; என்றும் கேள்விப்பட்டேன். லீ குவான் யூ மறைந்ததற்கு சிங்கப்பூரில் விடுமுறை விடப்படவில்லை. தமது காலத்திற்குப் பிறகு, தாம் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்றக்கூடாது என்றும், இடித்துத்தரைமட்டமாக்கி விட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு மறைந்தார். நேர்மையான சுய சம்பாத்தியம் இன்றி, அரசியலில் நுழைந்து, ஊழல் வழிகளில் பணக்காரர் ஆன தலைவரல்ல‌ லீ குவான் யூ. 1960களில் விடுதலையான சிங்கப்பூரானது, லீ குவான் யூவுக்குப் பதிலாக, ஊழல் கொள்ளைக்குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்தால், இன்று உலகில் ஊழல் குடும்ப ஆட்சிகளில் சிக்கி சீரழிந்து வரும் நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இருந்திருக்கும். லீ குவான் யூவும், அவரின் கட்சியும் நோஞ்சானாக இல்லாமல், பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஊழல் ஒழிப்பில்  வலிமையுள்ளவர்களாக இருந்ததால், சிங்கப்பூர் தப்பித்ததுநோஞ்சான் நோயின் முக்கிய அம்சமே 'ஊழலுடன் சமரசம்' என்பதை, அந்நோயில் இருந்து விடுபட்ட‌ சிங்கப்பூர் உணர்த்தியுள்ளது.

இந்திய ஆட்சியில் தமிழ் தொடர்பானவைகள் மற்றும் தமிழ்நாட்டின் மத்திய அரசு துறைகளில் தமிழ் புறக்கணிப்புக்கு உள்ளாகிய காரணங்களால், வி. அய். சுப்பிரமணியம் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் அறிஞர்கள் தமது உரையாடல்களிலும், தமது எழுத்துக்களிலும் தமிழ்நாடு தனிநாடாகாதா? என்ற ஏக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதையும் நான் அறிவேன். இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாக‌ உரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

நாகசாமியின் தமிழ் தொடர்பான‌ நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது.

அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது

முள்ளி வாய்க்கால் போரின் முடிவில், இந்தியாவை உணர்ச்சிபூர்வமாகக் கண்டித்த நோஞ்சான் கட்சிகள் எல்லாம், இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு உதவியதோடன்றி, .நாவில் ராஜபட்சேயின் பாதுகாவலராக செயல்பட்ட சீனாவை ஏன் கண்டிக்கவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

கடந்த ஆட்சியில் சீனாவுடன் சோனியாவும் ராகுலும் இந்தியாவின் நலன்களுக்கு கேடான வகையில், செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பான இரகசியங்கள் கசிந்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்த தொடர்புகள் பற்றியும், தமிழ்நாட்டின் நலன்களைக் காவு கொடுத்து வந்த கங்காணிகள் பற்றிய செய்திகளும், இனி வெளிவந்தால் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகள் தொடர்வதும், அந்த கட்சிகள் மூலமாக சிரமமின்றி எளிதில் தமிழ்நாட்டை கையாளலாம் என்ற திசையில் மத்தியில் ஆளும் கட்சிகள் பயணிப்பதும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல; இந்தியாவிற்கும் நல்லதல்ல.

அதே நேரத்தில்நோஞ்சான்களையும் வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் மத்தியில் ஆட்சி நடைபெறுவது தான் இந்தியாவிற்கு என்றும் நல்லது.

அந்த நோக்கில், கீழ்வரும் கேள்விகளும் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் விவாதத்திற்கும் உரிய கேள்விகள் ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின், தேசக்கட்டுமானமானது (Nation Building) நேரு குடும்ப சுயநல அரசியலில் எவ்வாறு சீர் குலைந்துள்ளது? சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள நிலைமைகளை உணரும் சமூக உணர்விகள் (Social Sensors), மற்றும் மென்சக்தி (Soft Power), எவ்வளவு  பலகீனமாக உள்ளது? இக்குறைபாடுகளின் வளர்ச்சியில் ஊழலுக்கு என்ன தொடர்புள்ளது? என்பது போன்ற கேள்விகளில் உரிய கவனம் செலுத்தாமல், 2014-இல் பிரதமரான மோடி ஆட்சி செய்து வருவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பில் உள்ள தொடர்புகளில் விளக்கியுள்ளேன்.

இந்தியாவில் தேசக்கட்டுமானச் சீர்குலைவுப் போக்கினை தடுத்து நிறுத்தவில்லை என்றால்,  சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு இடையிலான 'சமநிலை' (equilibrium) குலையும் போது, இந்தியாவானது, சோவியத் ஒன்றியத்தை விட, இன்னும் மோசமான முறையில் ' சிதறலுக்கு' உள்ளாகி, ஆப்பிரிக்காவுடன் போட்டி போடும் நிலை உருவாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா
(‘The collapse of the USSR and the illusion of progress’; 
https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress) என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்

Note: Also read ‘Fringe Mechanism derailing the Indian Nation Building Process (1)' ; https://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html