Friday, June 26, 2020


தேசிய அரசியலில் தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில்;


பிரதமர் மோடியும் பயணிக்கிறாரா?


தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு கூடுகிறதா?



'சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14ல் விடுதலையாவார்' என, பா.., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கீழ் வரும் வாச‌கர் கருத்துக்களும் எனது கவனத்தினை ஈர்த்தன.

'திஹார் ஜெயிலில் இருந்த வந்த மாதர் குல தெய்வம், மங்கையர் திலகம் எங்கள் கனிமொழி ராசாவுக்கு கொடுத்த மாதிரி தடபுடலா வரவேற்பு கொடுப்பார்களா திரகரன் கும்பல்'

'மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்தால் இந்த நாட்டில் எதுவும் செய்வார்கள் என்பதையே சிறை தண்டை விடுதலை கோடிக்கணக்கில் சம்பாதித்ததை கண்டுகொள்ளாதது போன்ற எதுவும் நடக்கும்.'

'இவர் சீக்கிரமாகவே விடுதலை ஆகி வந்தால் அதை விட கேவலம் , பா வுக்கு இல்லை.'

'மோடிஜி சாதனையில் இதுவும் ஒன்று.'

மிழ்நாட்டில் ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் பா.ஜ.க கூட்டணி வைக்காமல் 2014 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மோடியை தமிழ்நாட்டு மக்கள் நம்பினார்கள்.

திராவிட மனநோயாளித் தலைவர்கள் ஊக்குவித்து வளர்த்த 'திராவிட அமாவாசைகள்எல்லாம் புரட்சி செய்து, அசைக்க முடியாத சக்தியாக இருந்த பிரதமர் மோடிக்கே, தமிழ்நாட்டு அரசியல் சதுரங்கத்தில் 'செக்' வைத்து விட்டார்கள்: ஆட்டம் இன்னும் முடியவில்லை; உச்சக்கட்ட காட்சியில் (Climax) முடிவு தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை
(‘1944-இல் முளை விட்டதானது முடிவுக்கு வருகிறது; தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது’; 

தமது கட்சியில் ஊடுருவியுள்ள 'அமாவாசைகளை' எவ்வாறு அடையாளம் கண்டு, அகற்றி, கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த வலிமையுடன், அடுத்து வரும் தேர்தலை ஸ்டாலின் சந்திப்பார்? என்பதைப் பொறுத்தும்;

தமிழ்நாட்டின் 'திராவிட லல்லுக்களை' எவ்வாறு சிறைக்கு தள்ளி, தமிழ்நாட்டின் ஊழல் பிரமீட்டை பிரதமர் மோடி தகர்க்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தும்;

'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு. தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது
(https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html )

2014 முதல் மோடி  பிரதமராக ஆட்சி செய்து வருகிறாரே. தி.மு. மற்றும் ...தி.மு. பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், நடந்த ஊழல் ஒழிப்பு சோதனைகளும் என்ன ஆயிற்று? என்பதைப் பற்றி மூச்சு விடாமல், திராவிட ஊழல்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் மோடி ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் பரப்புரை செய்வது கோமாளித்தனம் ஆகாதா?

தமிழ்நாட்டில்.திருமங்கலம் ஃபார்முலாவை வெற்றி பெற செய்த அதே வாக்காளர்கள் தான், அந்த ஃபார்முலாவை நம்பி பயணித்த தி.மு.கவை அடுத்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாகக்கூட ஆக முடியாத அளவுக்கு  தோற்கடித்தார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைத் தவிர்த்துப் போட்டியிட்ட தினகரனிடம் முடிந்த வரை 'அறுவடை' செய்து வெற்றி பெறச் செய்து, தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, பா..கவை நோட்டாக்கட்சியாக்கினார்கள்.

அந்த‌ வெற்றியின் பின்னணியில் பாடம் கற்று சுதாரிக்காமல், தமிழ்நாடெங்கும் சசிகலாவுடன் தமது படத்தையும் சேர்த்து பேனர்களாக்கி, அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்த‌ தினகரனை ஆர்.கே.நகர் தி.மு.கவாக மாற்றி,  அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, ஸ்டாலினுக்கு பெரும் வெற்றி தந்தனர். பா..கவுடன் கூட்டணி சேர்ந்த ..அதி.மு.கவைப் பாராளுமன்ற தேர்தலில் தண்டித்தார்கள்.

பின் பா..கவை ஓரங்கட்டி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களை ஜெஜெ பாணியில் சாமான்ய வேட்பாளர்களை ...தி.மு. நிறுத்திய போது, ஜெஜெ பாணி வெற்றியைக் கொடுத்து, பா..கவிற்கும் தி.மு.கவிற்கும் பாடம் புகட்டினார்கள்.

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். வாய்ப்பு கிடைத்தால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் ஊடகங்களையும் கருத்துக் கணிப்புகளையும் முட்டாள்களாக்கி கணக்கு தீர்ப்பார்கள்.

ஸ்டாலினாலும் சசிகலாவானாலும் அவர்களின் ஊழலைப் பற்றி பேசும் துணிச்சலின்றி கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் ஆனாலும், மோடியானாலும், வேறு யாரானாலும், தமிழ்நாட்டு வாக்காளர்களின் மேற்குறிப்பிட்ட கணக்கில் இருந்து தப்ப முடியாது
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_23.html)

ஜெயலலிதாவின் மர்மமான மரணத்திற்குப்பின், சசிகலா முதல்வராவர் என்ற நம்பிக்கையில் சசிகலாவை 'தரிசித்து' ஆதரவு தெரிவித்து, சசிகலா சிறை சென்ற பின், அவரை சிறையில் சந்திக்காமல் கைவிட்டு, அடுத்து ஸ்டாலின் முதல்வராவர் என்ற நம்பிக்கையில் அவருக்கு நெருக்கமான தலைவர்களை, பத்திரிக்கை அதிபர்களை விடவும்,

அவரவருக்கு கிடைக்கும் ஆதாய அடிப்படையில், சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்தும், ஆதாயத்தை கூட்ட எதிர்த்தும், பின் அதிகரித்த ஆதாயத்தில் ஆதரித்தும் 'குட்டிக்கரணங்கள்' போட்டு வரும் ஊடக எழுத்தாளர்களை விடவும்,

மேற்குறிப்பிட்ட தமிழ்நாட்டு வாக்காளர்கள் மதிக்கத்தக்வர்களே ஆவார்கள்.

மத்திய அரசானது தமிழ்நாட்டில் அடுத்து அடுத்து ஊழல் கொள்ளைக்கு எதிரான வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு சோத்னைகளை நடத்தி, அதன் உச்சக்கட்டமாக சசிகலா குடும்ப வலைப்பின்னல் மீது நடத்தி வரும் சோதனைகள்;

உண்மையில் தமிழ்நாட்டு மக்களிடையே மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடியை (crisis of confidence) ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை வலையிலிருந்து ஊழல் திமிங்கிலங்கள் தப்பிக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளில் உள்ள ஊழல் திமிங்கிலங்களை நெருங்குமா?

மோடி அரசு ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும்; ஏற்கனவே 'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கின் வெளிப்பாடாக.

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.
(‘அரசியல் கொள்ளையர்களுக்கு  எதிரான மத்திய அரசின் சோதனைகள்; தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி?’; 

ராஜிவ் மல்கோத்ரா (https://en.wikipedia.org/wiki/Breaking_India) போன்ற இந்துத்வா புலமையாளர்கள் எல்லாம், தமிழ் தொடர்பான நாகசாமியின் ஆய்வுமுடிவுகளுக்கு எதிராக வெளிப்படும் சான்றுகள் பற்றி அறிந்து கொள்ளாமல், நாகசாமியின் தவறான முடிவுகளை ஏற்று பயணிக்கிறார்களா? அது போன்ற பயணங்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து துண்டிக்கவே துணை புரியாதா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் தமிழும் தமிழ் உணர்வும் எந்த அளவுக்கு தேசியத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டது? என்ற புரிதல் உள்ளவர்களுக்கே, 'அந்த' அபாயம் விளங்கும்.

இந்திய ஆட்சியில் தமிழ் தொடர்பானவைகள் மற்றும் தமிழ்நாட்டின் மத்திய அரசு துறைகளில் தமிழ் புறக்கணிப்புக்கு உள்ளாகிய காரணங்களால், வி. அய். சுப்பிரமணியம் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் அறிஞர்கள் தமது உரையாடல்களிலும், தமது எழுத்துக்களிலும் தமிழ்நாடு தனிநாடாகாதா? என்ற ஏக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதையும் நான் அறிவேன். இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாக‌ உரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

நாகசாமியின் இது போன்ற நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது. (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html) அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். 

இந்தியாவுடன் ஒட்டாத வகையில் தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள அடையாளச்சிக்கலையும், இந்திய விடுதலை முதல் நேரு குடும்ப அரசியல் நலன்களுக்காக சீர்குலைக்கப்பட்ட தேசக்கட்டுமானச் சிக்கலையும் (Nation Building Crisis) அறிந்தவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவின் முக்கியத்துவம் விளங்கும். 

இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது? பிரிவினை சமரசப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தொடங்கி, வளர்ந்து, இன்று 'வற்றி' வரும் தீக்குளிப்புகள்/தற்கொலைகள் மூலமாக, எவ்வாறு 'அந்த' மென்சக்தியும் வற்றி வருகிறது? ஆதாய அரசியலில் அந்த மென்சக்தியானது நீர்த்துப் போன போக்கில், அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது?

குறுகிய அரசியல் லாபத்திற்காக, தேசியக்கட்சிகள் எல்லாம், சரியான தேசக்கட்டுமானத் திசையில் மென்சக்தியை வளர்க்காமல், வன்சக்தியின் வலிமையையே நம்பி ஆட்சி செய்வதானது, இந்தியாவை சோவியத் நாடு பாணியில் எதிர்காலத்தில் சிதறும் திசையிலேயே பயணிக்கச் செய்யும். (‘இந்தியாவில் வித்தியாசமானதமிழ்நாடு (3) உலக அளவிலான 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கு வெளிச்சம் காட்டும் சிக்னல்கள்தமிழ்நாட்டில்?; 

சசிகலா குடும்பத்தினர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் சிங்கப்பூரில் உள்ள சட்டத்தின் ஆட்சியின் பாணியில் உரிய காலத்தில் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால், சாகும் வரை அவர்கள் சிறைச்சாலைகளில் இருந்திருப்பார்கள். சர்க்காரியா கமிசன் வழக்கினை நாட்டின் பொதுநலனுக்கு விரோதமாக அன்றைய பிரதமர் அரசியல் லாபத்திற்காக வாபஸ் வாங்கினார். அந்த தவறினை அவர் செய்யாமல், சர்க்காரியா கமிசன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால், சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயலலிதா மீது வழக்குகள் வரும் வகையில் ஜெயலலிதா ஆட்சி செய்திருக்க முடியாது.

அதே போல ...தி.மு.-வில் பணத்துக்கு விலை போகாத ஜெயலலிதாவின் விசுவாசிகள் நடுத்தர. ஏழைப் பிரிவுகளில், குறிப்பாக கிராமங்களில் கணிசமானோர் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெயலலிதா அப்பொல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பேயே, ஜெயலலிதா சிறைக்கு போனதற்கு சசிகலா குடும்பமே காரணம் என்று அந்த குடும்பத்தின் மீது வெறுப்புடன் இருந்தார்கள். இன்று ஜெயலலிதாவின் மர்மமான சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பாக வலம் வரும் வதந்திகள் எல்லாம், மீடியாவில் வெளிப்படுவதற்கு முன்பேயே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்பட்டது எனக்கு வியப்பைத் தந்தது. அது போல அவர்கள் மத்தியில் தி.மு. தலைவர் கருணாநிதி மீது வெறுப்பு வெளிப்பட்ட அளவுக்கு, ஸ்டாலின் மீது வெறுப்பானது வெளிப்படவில்லை என்பதும் எனக்கு வியப்பைத் தந்தது.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் காரணமாக‌, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) விரும்பிகள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகக் கோபமானது, கருணாநிதி மீது இருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

மத்தியில் ஆளும் பா.. அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் சசிகலா குடும்பத்தின் கட்டளைக்கு உட்பட்டு அப்பொல்லோவில் (ஒளிபரப்பான) கீழ்தளத்தில் நின்று பேசிய பேச்சுக்களும், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக‌ (ஊடக வெளிச்சத்துடன்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவமதிக்கப்பட்டு) மட்டுமே சூழ, ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஜெயலலிதா உடலுக்கு (நேரடி ஒளிபரப்பில்) அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும் நடராஜனையும் வணங்கிய‌ மோடி தாமாகவே வலிய வந்து மேற்குறிப்பிட்ட கோபத்தின் குவியமாகி, ஸ்டாலினைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையான பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.. நோட்டாக்கட்சியானது.

தமிழக மக்களின் நாடித்துடிப்புடன் தொடர்புள்ள‌ அந்த சமூக செயல்நுட்பம் புரியாமல், இன்று வரை தமிழக பா.. பயணித்து வருவது தமிழ்நாட்டின் தூரதிர்ஷ்டமே ஆகும். (‘The Role of Media in influencing Public Opinion’ – my project in P.G.Dip in Mass Communication)

நெருக்கடி காலம் முடிந்த பின் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வட நாட்டில் மண்ணைக் கவ்விய  இந்திரா காங்கிரஸ் எவ்வாறு  தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது? கடந்த பாராளுமன்ற தேர்தலில் வட நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டிய பா.., தமிழ்நாட்டில் கூட்டணிக்கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைத்த அளவுக்கு எவ்வாறு நோட்டாக்கட்சியானது?

சர்க்காரியா கமிசன் வழக்கை இந்திராகாந்தி வாபஸ் வாங்கிய பாணியில் இருந்து வேறுபட்டு;

'பலகீனமான புராசிகியூசன்' (Weak Prosecution) மூலமாக திராவிட ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகும் வகையிலும், ஆமை வேகத்தில் வழக்குகள் நகரும் வகையிலும் பிரதமர் மோடி ஆட்சி செய்தால், தமிழ்நாட்டு மக்களின் கோபக்குவியத்தில் அவர் சிக்குவதைத் தவிர்க்க முடியாது

பாரதத்தில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால், பாரத மாதா மோடியை மன்னிக்க மாட்டார். 


No comments:

Post a Comment