Friday, June 5, 2020


'மூட நம்பிக்கை எதிர்ப்பானது


எவ்வாறு 'குருட்டுப் பகுத்தறிவு’ ஆகும்?



'கர்மத்தினால், அதற்கேற்ற மறுபிறவியும், அதில் நன்மை தீமைகளும் ஏற்படுகிறது. முற்பிறப்பில் செய்த வினைகளுக்கு, இப்பிறவியில் நாம் பலனை அனுபவிக்கிறோம் என்பது இந்த நாட்டில் உதித்த அனைத்து - ஹிந்து, புத்த, ஜைன, சீக்கிய - ஆன்மிக நீரோட்டங்களுக்கும் அடிப்படையான கருத்து.'
- துக்ளக்  (குறிப்பு கீழே)

இசை ஆராய்ச்சிக்கு முன், நான் 'மார்க்சிய லெனினிய பெரியாரியல்' புலமையாளனாகப் பயணித்த காலத்தில் மேற்குறிப்பிட்டதை 'மூட நம்பிக்கை' என்று கருதி கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கியிருப்பேன்.

கீழ்வரும் அறிவியல் ஆய்வகளைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால், மேற்குறிப்பிட்ட 'மூட நம்பிக்கை எதிர்ப்பானது' எவ்வாறு 'குருட்டுப் பகுத்தறிவு’ ஆகும்?' என்று எனக்கு விளங்கியிருக்கும். அதனை திறந்த மனதுடனும் அறிவுநேர்மையுடனும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, திருந்திய திசையில் பயணித்திருப்பேன்;

.வெ.ரா அவர்களையே அதற்கு முன்மாதிரியாகப் பின்பற்றி
(‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா’; 

‘Who Am I?

Where Did I Come From?

Where In The World Is My Family From?

How Did We Get There?

Ancient Origins Ancestry DNA Test’;

What will my results tell me?

Your Ancestry DNA results include information about your geographic origins across 1000+ regions and identifies potential relatives through DNA matching to others who have taken the AncestryDNA test. Your results are a great starting point for more family history research, and it can also be a way to dig even deeper into the research you've already done.                    

நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions) , அன்பு, லாப நட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் ( Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  ( Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, ஏமாற்றம்,கோபம், வெறுப்பு, வஞ்சம்,பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings) செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும்

(“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு"; 
https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்
(‘'மனித எந்திரர்களுக்கு' விளங்காதது’; 

‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; 

மேலே குறிப்பிட்டவை உள்ளிட்டு, நான் சந்தித்து வரும் அனுபவங்களின் அடிப்படைகளில், இயற்கையில் 'உயிரற்ற பொருட்கள்' (inanimate) என்று நாம் கருதிக் கொண்டிருப்பவைக்கும், வேறு வகையிலான உயிர் இருக்கக்கூடும், என்ற எனது கருதுகோளையும்(Hyphothesis) பதிவு செய்துள்ளேன்

அறிவியல் ஆய்வுகளோடு ஒட்டி பயணித்த போக்கில், நான் சந்தித்து வரும் மாற்றங்களையும் கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

‘I was a born catholic, brought up in non-Catholic Hindu environment, later rationalist turned ‘Periyarist’, finally transforming into ipso facto proud ‘Hindu’. Unlike the Abrahamic religions, Hindu is not a religion, but a way of life worshiping all in nature including birds, trees, & inanimate objects; with a maximum possible human freedom to worship any god, in any manner, or not worshiping with no consequent punishments found in the Abrahamic religions.

I had brief exposure of Catholic social life during my school final days and later during post 55 years age. I had come across few honest Catholics who unsuccessfully dared to question the unethical acts of the priests. Even among Muslims there might be some honest Muslims questioning the unethical acts of the Muslim clergy and leaders. In my view, there is social scope for uniting all the honest people in Hindus, Muslims & Christians to check all the unethical acts including illegal appropriating the properties of the temples, churches and mosques.

In my view, only honest people could have the blessings of the God, the infinite; no short cut methods, sacrificing honesty, to fool God.’ 


குறிப்பு:

துக்ளக் (1 ஜீன் 2020) இதழில் 'வினைப்பயன்கள், ஓரவஞ்சனைகள் அல்ல

என்ற தலைப்பில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதிய கட்டுரையில் இருந்து:

வினைப்பயனையும், மறுபிறப்பையும் பிரிக்க முடியாது. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல், வினைப்பயனில் நம்பிக்கை இருக்க முடியாது. வினைப்பயனில் நம்பிக்கை இல்லாமல் மறுபிறப்பில் நம்பிக்கை இருக்க முடியாது. காரணம், ஒருவரின் வினைப்பயன்கள் ஒரு பிறப்பில் முடிந்து விட்டால் வாசகர் கூறும் ஓரவஞ்சனைகளோ, பிறவியிலேயே காணும் கர்ம வினைகளோ ஏற்படக் கூடாது. கர்மத்தினால், அதற்கேற்ற மறுபிறவியும், அதில் நன்மை தீமைகளும் ஏற்படுகிறது. முற்பிறப்பில் செய்த வினைகளுக்கு, இப்பிறவியில் நாம் பலனை அனுபவிக்கிறோம் என்பது இந்த நாட்டில் உதித்த அனைத்து - ஹிந்து, புத்த, ஜைன, சீக்கிய - ஆன்மிக நீரோட்டங்களுக்கும் அடிப்படையான கருத்து. எனவே ஓரவஞ்சனைகள் என்று நாம் பார்க்கும் தீதும், நன்றும் நம்மால் தான் விளைகின்றது. இந்தப் பிறவியில் நாம் படும், அல்லது பார்க்கும் ஓரவஞ்சனைகளை இந்தப் பிறவியை வைத்து மட்டும் பார்த்தால், அதற்கு விடை கிடையாது, கிடைக்காது. இதை நம் ஆன்மிக நீதி நூல்கள் விளக்குகின்றன.

தீதும், நன்றும் பிறர் தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என்கிறது புறநானூறு. அதன் அர்த்தம், நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை; துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை". முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் அவற்றை நாம் அனுபவிக்கிறோம். இந்தக் கருத்தை உள்ளடக்கி இளங்கோவடிகள், இறந்த பிறப்பின் எய்தியவெல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ" (சென்ற பிறப்பில் செய்த வினைக்கான பலனை, இந்தப் பிறவியில் நீ காணவில்லையா) என்று சிலப்பதிகாரத்தில் கேட்கிறார். ஔவையார் கொன்றைவேந்தனில், முற்பகல் செய்யின் பிற் பகல் விளையும்" என்று எழுதியதை, முற்பகல் கண்டான் பிறன்கேடு, தன்கேடு பிற்பகல் கண்டு விடும் (முன்பிறவியில் நாம் மற்றவர்களுக்குச் செய்த கேடு இப்பிறவியில் நம்மை வந்தடையும்) என்று கூறுகிறது புறநானூறு. இதையே வள்ளுவர், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" (முன்பு மற்றவர்களுக்கு துன்பம் செய்தவருக்கு பின்னர் துன்பம் தானே வரும்) என்கிறார். வினைப் பயன்கள் மறுபிறப்புடன் பின்னி பிணைக்கப்பட்டிருக்கின்றன.

இறை நம்பிக்கையை ஒழித்து, மனிதச் சிலைகளையும், நினைவகங்களையும் வழிபடும் திராவிட பகுத்தறிவு விபரீதத்தால், நாம் இந்த மகான்கள் கூறிய ஆன்மிகக் கருத்துக்களை நாம் மறந்து விட்டோம். எனவே, முன்பிறப்பில் நம் வினைகளின் இந்தப் பிறவிப் பயன்களை ஓரவஞ்சனைகளாகப் பார்க்கிறோம்.’

No comments:

Post a Comment