Tuesday, February 21, 2017

அழிவுபூர்வ போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும்;

ஸ்டாலின், ஓபிஎஸ் போன்றவர்களை நாம் ஆதரிக்க முடியுமா? 


சசிகலா குடும்பத்தின் 'தனித்துவ' திறமைகளால் மட்டுமே, 'சசிகலா பினாமி ஆட்சி'  அரங்கேறவில்லை


‘காலில் விழுவதையும், ஆடம்பர பேனர்கள் வைப்பதையும் கண்டித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், இன்றைய முதல்வர் தேசிய கொடி ஏற்றிய குடியரசு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வெறுப்பவர்களில் பலரும் ஆதரிக்கத் தொடங்கும் அளவுக்கு, 'அரசியல் நாகரீகத்துடன்', தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் திசைக்கு எதிரான,  'அரசியல் தற்கொலை' திசையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை அவமதித்து, சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலாவின் "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்( Political Science)  புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் 'ஓபிஎஸ் நிகழ்வு'  ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( ‘நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட’; http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html )

'நேற்று வரை குனிந்திருந்தவர் தானே, ஓபிஎஸ்' என்று கேலி பேசுபவர்கள் எல்லாம், 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள் ஆவர்.

'நேற்று வரை குனிந்திருந்த ஓபீஸ், இன்று நிமிர்ந்ததற்கு, அவரின் அகத்தில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன? என்பது அவரின் மனசாட்சிக்குத் தான் தெரியும்.

ஆனால், புறத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட வெற்றி உள்ளிட்டு, ஆக்கபூர்வமாக வெளிப்பட்டுள்ள சமூக விசைகளின் (Social Forces) செல்வாக்கின் துணையின்றி, சமூக அளவில் ஓபிஎஸ் நிமிர்ந்திருக்க முடியுமா? அகத்தில் உரிய மாற்றங்களின்றி, புற சமூக விசைகளின் செல்வாக்கில், ஓபிஎஸ் நிமிர்ந்திருந்தால், அவ்வாறு நிமிர்ந்தது நீடிக்குமா? 

ஓபிஎஸ் மட்டுமின்றி, தமிழ்நாட்டில், பணம் சம்பாதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்கள் எல்லாம், அவ்வாறு குனிந்திருப்பதானது, 'சமூக அவமானம்' என்று உணரும் அளவுக்கு;

மேலே குறிப்பிட்ட சமூக விசைகளின் வளர்ச்சிக்கு, நாம் எவ்வாறு பங்காற்ற முடியும்? என்ற நோக்கில்;

'கடந்த கால அடிமைகளாக' வாழாமல், நிகழ்காலத்தில் சுயமரியாதையுடன் காலூன்றி, அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள வருங்காலம் நோக்கி, வாழ்பவர்கள் எல்லாம், பங்களிப்பார்கள்.

சமூக இயக்கவியல் (Social Dynamics) புரிதல் உள்ளவர்கள் எல்லாம், நாட்டு நடப்புகளில் வெளிப்படும் ஆக்கபூர்வ/அழிவுபூர்வ சமூக விசைகளை (Social Forces) கணிப்பதிலும், ஆக்கபூர்வமாக பங்களிப்பதிலும், அவ்வப்போது 'உரிய' திருத்தங்களுடன், 'சமூக கணக்குகளுக்கு' விடைகள் கண்டு, பயணிப்பார்கள்.

'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள் எல்லாம், தமது 'மனதில் பதிந்த குறிப்பாய அடிமைகளாக' ( Mental Slaves to the Adopted Paradigm), தம்மிடம் உள்ள 'விடைகளுக்கு', 'சமூக கணக்குகளை' திருத்த முயன்று,

சமூக போக்குகளின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டு, 'வேடிக்கை' பார்த்து, 'அரைகுறை அறிவு சுய இன்ப விமர்சகர்களாக' (semi-literate Intellectual Masturbation) வாழ நேரிடும்.

அவர்களில் திறந்த மனதும், அறிவு நேர்மையும் உள்ளவர்கள் எல்லாம், தம்மை திருத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான திசையில் வாழும் வழிகளை கண்டுபிடிக்க;

‘Freedom From the Known' by J.Krishnamurti ( 'தமிழில் 'அறிந்ததினின்றும் விடுதலை') புத்தகத்தை படிக்கலாம். 

‘தமிழ்நாட்டில் கல்வியறிவற்ற 'தற்குறி'களில் பலர், தமது செயல்பாடுகளில் மிகுந்த அறிவாற்றலை வெளிப்படுத்தி வாழ்வதைக் கண்டு, நான் வியந்ததுண்டு. நன்கு படித்த புலமையாளர்களிடமிருந்தும்,  வெளிப்படும், மிகுந்த அறிவாற்றலை கண்டும், நான் வியந்ததுண்டு. ஆனால் அரைகுறை தமிழறிவுடன் , 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளாக' வளரும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது, தோன்றி, எப்படி வளர்ந்து, தமிழரின் 'அடையாளச் சிதைவிற்கும், அரசியல் நீக்கத்திற்கும்' எந்த அளவு பங்களிப்பு வழங்கி வந்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

தமிழ்நாட்டில் ஆங்கில அறிவில்லாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'பெரியார் சமூக கிருமிகள்' பலர், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், புராணங்களையும், கேலி செய்து மகிழும், 'அரைகுறை அறிவு சுய இன்ப விமர்சகர்களாக', வாழ்ந்து வருவதை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'.

அவர்களில் பலர் 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்ப வலைப் பின்னலில் இடம் பெற்று, 'பலன்கள்' அனுபவித்துக் கொண்டே, 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு' என்று மக்களை ஏமாற்றி வாழ‌, அதன் மூலம் அவர்களோடு, அவர்களின் நிலைப்பாடுகளும் மக்களிடமிருந்து அந்நியமாகி, தமிழ்நாடு திருப்பு முனைக் கட்டத்தில் இருக்கிறது; அதன் உந்து விசையாக, 'சசிகலா பினாமி ஆட்சி' எதிர்ப்புகளின் செல்வாக்கில்.  திராவிட இயக்க வளர்ச்சியில், அத்தகையோர் 'ஆதிக்கம்' பெற்றதன் விளைவாக, அறிவுப் புதையல்களான பழந்தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் 'மூடநம்பிக்கையாக' ஒதுக்கப்பட்டன. (‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'’; http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlதமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கும் காரணங்களாகி. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) அதன் தொடர்விளைவாக, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார் சிலை' மூலம் 'தலைவர் வழிபாடு' துவங்கி, அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) வினை ஊக்கியாகி (Catalyst), 'ஆதாய அரசியல்' வளர்ச்சியின் உச்சக்கட்டமாக, பணம் சம்பதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்களின் துணையுடன், இன்று சசிகலாவின் 'பினாமி ஆட்சியில்', தமிழ்நாடு சிக்கியுள்ளதா? அதையும் 'பெரியார்' வழிபாட்டுக் கட்சிகள், ஆதரித்து வரும் காட்சிகளும் அரங்கேறியுள்ளனவா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.

சோமசுந்தர பாரதியார் சரியாக சுட்டிக்காட்டியபடி,( http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-dec16-2014/27905-2015-02-21-03-30-23) 'தன்மானம்' என்ற தமிழ்ச்சொல்லை அறியாமல், புதிதாக தமிழில் 'சுயமரியாதை' என்ற சொல்லை, 'அரைகுறை' தமிழ் அறிவில் அறிமுகப்படுத்தியதும்;

ஆங்கிலத்தில் 'Self Esteem' (https://en.wikipedia.org/wiki/Self-esteem) என்ற சொல் இருப்பது தெரியாமல், 'Self Respect' என்ற சொல்லை, 'அரைகுறை' ஆங்கில அறிவில் அறிமுகப்படுத்தியதும்;

ஈ.வெ.ரா அவர்கள் உரிய 'அறிவுபூர்வ' வழிகாட்டுதல் இன்றி, தவறான திசையில் பயணித்ததன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஈ.வெ.ராவின் 'சுயமரியாதை' என்பது உண்மையில், 'self-esteem' அல்லது 'self-respect' என்ற எந்த ஆங்கிலச் சொல்லுக்கு பொருந்தும்? என்பதும்(‘Self-Esteem vs. Self-Respect’; https://www.psychologytoday.com/articles/199911/self-esteem-vs-self-respect), அதில் இருந்த குழப்பமுமே, 1944க்குப் பின் முளை விட்ட, 'தனித்துவமான திராவிட மனநோயாளியாக',  'பாதுகாப்பின்மை'(insecurity) நோயில் சிக்கிய தலைவர்கள், 'கடவுளைப் போலவே எடைக்கு எடை பணம், தங்கம், etc, பெறுதல்', 'காலில் விழுதல்', ‘கடவுளராக சித்தரித்தல்’, 'தொல்காப்பியர், திருவள்ளுவர், etc,  தம்மை வணங்குவதாக சித்தரித்தல்', உள்ளிட்ட 'தனிமனித வழிபாட்டு போக்குகளுடன்', வளர்ந்து, தமிழ்நாட்டை சீரழித்து, இன்று ஊழலில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதியின் 'பினாமி ஆட்சியில்', தமிழ்நாடு சிக்க காரணமானதா? என்பதும், ஆய்விற்குரியவையாகும். 

1944இல் தொடங்கிய திராவிடர்/திராவிட இயக்க வரலாற்றில், மேடையில் தலைவர் காலில் விழுந்து வணங்கும் போக்கானது, முதல்முறையாக எப்போது அரங்கேறியது? என்ற கேள்வி தொடர்பான எனது தேடலில், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய, கீழ்வரும் தகவல் கிடைத்துள்ளது.

1967இல் முதல்வராகும் முன், அண்ணா, தான் விலகிய தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில், கட்சியில் மூத்தவர்களை புறக்கணித்து, முரசொலி மாறனை வேட்பாளராக அறிவித்து, தேர்தலில் முரசொலி மாறன் வெற்றி பெற்று, நடந்த பாராட்டு கூட்டத்தில், மேடையில் முதல்வர் அண்ணா காலில், முரசொலி மாறன் விழுந்து, வணங்கியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட தகவல் உண்மையென்றால், அதுவே 'அந்த கலாச்சாரத்தின்' 'திராவிட' தொடக்கமாகும். 

அதன்பின் முதல்வர்களாக இருந்த கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரையில், மெத்த படித்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் எல்லாம் காலில் விழுந்து வணங்கிய போது, அந்த துணை வேந்தர்களின், பேராசிரியர்களின், குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களை எல்லாம் கண்டித்திருந்தால்:

இன்று சசிகலா தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றப்பட்டால், சிறை அதிகாரிகளில் யார்? யார்? சசிகலா காலில் விழுந்து வணங்குவார்கள்? என்ற விவாதத்திற்கு இடம் இருந்திருக்காது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், உண்மையிலேயே, அந்த கலாச்சாரத்தை, தி.மு.கவிலிருந்து, அகற்றுவதில் வெற்றி பெற்றால், அதற்காகவே அவர் வரலாற்றில் இடம் பெறுவார்.

‘தமிழக‌ முதல்வர்கள்’ காலில் விழுந்த‌, துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், போன்ற மெத்த படித்தவர்கள் எல்லாம்  (அவர்களில் யார்? யார்? 'பெரியார்', 'கம்யூனிஸ்ட்', 'முற்போக்கு', ஆதரவாளர்கள்?), அவர்களின் குடும்பங்களின், நண்பர்களின், ஆதரவோடு 'சிக்கும்' அளவுக்கு;

ச‌மூக இழைகளிலும் (Social Fibers), பிணைப்புகளிலும் (Social Bonds) ஏற்பட்ட பண்பு மாற்றங்களால், குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக; (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

'திருச்சி பெரியார் மையத்தில்' இருந்து, பின்னர் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக‌, 'சசிகலா குடும்ப அரசியல்' எடுபிடிகளான, 'பெரியார் சமூக கிருமிகள்' போல; ( http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html

ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வந்த போக்கில், 'சசிகலா பினாமி' ஆட்சியில், தமிழ்நாடு சிக்க நேர்ந்துள்ளதா?

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதி, மறைந்த எஜமானி/கூட்டாளி? -யின் கட்சியை அபகரித்து, 'பினாமி' ஆட்சியானது, உலகத்திலேயே, முதல் முறையாக, தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளதா? 1944இல், காலனி சூழ்ச்சியில் சிக்கி, ஈ.வெ.ரா உருவாக்கிய, 'திராவிடர்/திராவிட விதை'யின் 'அறுவடை' பலனா இது? 

நமது குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட சமூகத்தில், இன்று நாம் சந்திக்கும் நல்லவைகளும், தீயவைகளும், எப்போது முளை விட்டு, எப்படி விளைந்து, இன்று எவ்வாறு 'நல்ல/தீய அறுவடை பலன்களாக', நம்மை 'தீண்டுகின்றன'?, என்ற ‘அறிவுபூர்வ தேடல்’ இன்றி, 'உணர்ச்சிபூர்வ போதைகளில்' வாழ்வதானது, நமக்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிப்பதாகும்.

'இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில் பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், சுப.வீ உள்ளிட்ட இன்னும் பல எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள்/கவிஞர்கள் எல்லாம்;

தமிழில் 'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய சொற்களின் பொருள் திரிந்து, நடந்து வரும் மேலே குறிப்பிட்ட 'சமூக நச்சு விவசாயத்தை' (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6)’- 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான, நல்ல விதைகளும், நச்சு விதைகளும் ; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

ஆதரித்து வாழ்கிறார்களா?

காலனி ஆட்சியில், 'மேற்கத்திய வழிபாடு' நோயின் மூலம், இந்தியர்களின் மனதில் 'தாழ்வு மனப்பான்மையை' விதைத்து, வளர்த்த போக்கில், தமிழ்நாட்டில் 'திராவிடர் இன' நோயில்;

அந்த வழிபாடு ஊக்கம் பெற்றதால், இந்தியாவிலேயே 'காலில் விழும்' கலாச்சாரமானது, 'தனித்துவமாக' தமிழ்நாட்டில் 'முதிர்ந்து', இன்று 'சசிகலா பினாமி ஆட்சிக்கு' வழி வகுத்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில், 'சசிகலா பினாமி ஆட்சி' என்பதானது, சசிகலா குடும்பத்தின் 'தனித்துவ' திறமைகளால் மட்டுமே அரங்கேறவில்லை, என்பதும்;

1944இல் முளை விட்ட 'திராவிடர் நச்சு விதை'யின், அறுவடைக் கட்ட சமூக சூழலும், 'அவர்களின் திறமைகளும்', ஒருவகை 'மார்பிக் ஒத்திசைவு' (http://www.sheldrake.org/research/morphic-resonance) சமூக செயல்நுட்பம் மூலம், 'அந்த பினாமி' ஆட்சியை சாத்தியமாக்கியுள்ளது, என்பதும்;

கவனிக்கத்தக்கதாகும். அதே சமூக செயல்நுட்பத்தில், தமிழ்நாட்டில் முளை விட்டு 'தடம் புரண்ட‌', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்; சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.html )

தமிழ்நாட்டிற்கு கேடான 'கருவேல மரங்களை' ஒழிக்க வெளிப்பட்டுள்ள சமூக விசைகளைப்(Social Forces) போலவே, 'சமூக கருவேல பினாமி ஆட்சியை' ஒழிக்கும் சமூக விசைகளும் கிளர்ந்து, எழுந்து வருகின்றன(http://www.vikatan.com/news/tamilnadu/82055-womens-assembled-in-chennai-elliots-beach-against-corruption.html )

ஜெயலலிதா நல்லவரா? கெட்டவரா? இரண்டும் கலந்தவரா? என்பது ஆய்வுக்குரியது. ஆனால் அவரால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளில்', அவரின் 'விசுவாசிகளாக' காலில் விழுந்து வணங்கிய எவரையும், நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், நாம் எதிர்ப்பின்றி அனுமதித்தால், நாமும் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக மாட்டோமா?

இன்று தமது விசுவாசிகளாக இருப்பவர்கள் எல்லாம், தமது மரணத்திற்குப் பின், தம்மால் 'தீயவராக' அடையாளம் காட்டப்பட்டவர்களின் எடுபிடிகள் ஆக மாட்டார்களா? என்ற கவலையானது, சசிகலாவிற்கு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் சசிகலாவின் 'பினாமி'ஆட்சியை ஆதரிக்கும் சுப்பிரமணியசுவாமி, கி.வீரமணி, வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட இன்னும் பலரும் சசிகலாவைப் போலவே, கவலைப்பட மாட்டார்களா; ‘சுயநல தீய எடுபிடி சக்திகளின்’ வளர்ச்சியானது, தமிழ்நாட்டை எவ்வளவு சீரழித்தாலும்'இந்துத்வா எதிர்ப்பு' என்ற நோக்கில், 'சசிகலாவின் பினாமி' ஆட்சியை ஆதரிப்பவர்கள் எல்லாம், சசிகலா குடும்பம், அவர்களை விட, சுப்பிரமணிய சுவாமியையே 'அதிகமாக நம்பி', துணிச்சலுடன் பயணிப்பதை, 'கண்டு கொள்ளாமல்' இருப்பதானது, 'அறியாமையா'? 'இரகசிய சுயநலனா'?

குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக; 

மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக;

'நாளடைவில், நம்மையறியாமலேயே, நாம் ச‌முகத்திலிருந்தும் இயற்கையிலிருந்தும் வெளிப்படும் இன்பங்களை அனுபவிக்கத் தெரியாத, -இயற்கையான நமது இயல்பிலிருந்து மாறிய‌- மேற்குறிப்பிட்ட‌ பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', வாழ நேரிடும்.'   
(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) 

வரிகள் கட்டாமல் பதுக்கும் 'கறுப்பு பணத்தை'(Black Money) விட ஆபத்தான, சுயநல அரசியல் போக்கை தீர்மானிக்கும் 'இருட்டுப் பணமானது' (Dark Money; https://en.wikipedia.org/wiki/Dark_money), உலக அரசியல் பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருவது தொடர்பான விவாதங்கள், உலகில் வெளிப்பட்டுள்ளன.( ‘the political and economic events of recent decades compel an evaluation of the gaming of the political system by vested interests manifested by the alarming influence of vast sums of dark money.’; https://www.theguardian.com/australia-news/commentisfree/2017/feb/25/just-as-neoliberalism-is-finally-on-its-knees-so-too-is-the-left ) ஊழலுக்கு தண்டிக்கப்பட்ட ஒரு சிறைக்கைதியானவர், உலகத்திலேயே, முதல் முறையாக, தமிழ்நாட்டில் 'பினாமி ஆட்சி'யை அரங்கேற்றியதில், 'இருட்டுப் பணம்' பங்காற்றியிருந்தால், அது உலக அளவிலான விவாதத்தில் இடம் பெறத்தக்கதாகும். 

'வின்னர்' திரைப்படத்தில் 'வடிவேலு'வை 'அச்சுறுத்திய' 'ரவுடி'யுடன், அதில் நகைச்சுவை காட்சிகள் வெளிவந்துள்ளன. அந்த 'ரவுடியுடன் இரகசியமாக' நேசமாகி, 'அந்த ரவுடியின் ஆதரவினை' 'பின்பலமாக'க் கொண்டு, ஊரை வடிவேலு மிரட்டும் நகைச்சுவை காட்சிகள், அந்த படத்தில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக, இன்று தமிழ்நாட்டில், 'இந்திய, உலக ரவுடிகளின்' 'பின்பலத்தில்', தமிழ்நாட்டை அடிபணிய வைத்த 'திராவிட' தலைவர்கள் எல்லாம், அந்த 'இரகசியம்' தெரிந்த சுப்பிரமணிய சுவாமிக்கு அடி பணிந்தும், 'பயந்தும்', 'வாலைச் சுருட்டிக் கொண்டு', பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஆனால் சுப்பிரமணிய சுவாமியோ, தனது 'வலிமையை' இந்தியாவின் நலனுக்கே பயன்படுத்தி வருவதால், ஒரு காலத்தில் 'அமெரிக்காவின் கைக்கூலி' என்று சித்தரிக்கப்பட்ட அவர், இன்று அமெரிக்காவின் 'ஆர்வார்ட்' (Harvard)  பல்கலைக்கழகத்தின் 'தீண்டாமைக்கு' உள்ளாகியுள்ளார்.( http://www.rediff.com/news/report/harvard-snubs-subramanian-swamy/20111208.htm'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள்/இளைஞர்கள் மூலம், அந்த 'திராவிட நாடகமானது' முடிவுக்கு வரும் படலம் துவங்கி விட்டது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

‘பிரமிக்க வைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டமானது வெற்றி பெற்ற‌, அதே தமிழ்நாட்டில்;

'மிருகப் பண்ணை' நாவலில் வருவதைப் போல (‘Animal Farm’,  an allegorical novella by George Orwell; https://en.wikipedia.org/wiki/Animal_Farm ) சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் பல நாட்கள், சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாதவாறு அடைத்து வைத்து, சட்டமன்றத்திற்கு 'ஓட்டி வந்து', 'இரகசிய வாக்கெடுப்பு'க்கான துணிச்சலின்றி;

எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில், சசிகலாவின் 'அடிமையான' ஒருவர், தமிழ்நாட்டின் முதல்வராக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 'வெற்றி'யானது சட்டப்படி சரியாகுமா? என்ற குழப்பங்களுடன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை' எதிர்த்து (http://www.ndtv.com/video/news/ndtv-special-ndtv-24x7/vk-sasikala-s-proxy-prison-rule-449384 ) ;

இனிமேல்  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வன்முறையற்ற 'ஜல்லிக்கட்டு' மாதிரி போராட்டத்தினை, சென்னை மெரினாவில் அரங்கேற்ற வழியில்லாதவாறு, 144 தடை உத்திரவின் துணையுடன், அந்த ஆட்சி துவங்கியுள்ளது.’ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ( ‘தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா? 'சசிகலா பினாமி' ஆட்சியின் முள்ளிவாய்க்கால் பயணம்?’; http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html )

மேலே குறிப்பிட்ட சட்டசபை நிகழ்வுகளில், சில தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்தது உள்ளிட்ட ஒழுங்கீனங்களுக்கு, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்; அது போன்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, எந்த காலத்திலாவது, சட்டசபையில் தமது கட்சி எம்.எல்.ஏக்களின் ஒழுங்கீனங்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறாரா? என்ற ஆய்வுக்கு இடம் அளித்து.

'மிருகப் பண்ணை' நாவலில் வருவதைப் போல, சசிகலா குடும்பம் தமது கட்சி எம்.எல்.ஏக்களை நடத்தி, 'ஆதாய அவமரியாதை அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலை, ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, (http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html ) ;

தி.மு.கவை கண்டித்து அறிக்கை வெளியிட்டதும், அதை 'முன்மாதிரியான' அரசியல் நாகரீகத்துடன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அதை எதிர்கொண்டதும், கீழ்வரும் செய்தியில், வெளிப்பட்டுள்ளது.

‘பேரவைத்தலைவர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும் கூட. இந்தக் கட்டத்தில் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தான் கி.வீரமணியிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாக கூறினார். கி.வீரமணி வயது மூத்த தலைவர் என்றும் அவரை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ‘

நாட்டின் நடப்புகளில் அழிவுபூர்வ போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும்,  ஸ்டாலின், ஓபிஎஸ், போன்றவர்களின், அவர்களது கட்சிக்காரர்களின்,  கடந்த கால 'யோக்கியதைகளை' முன்னிறுத்தி, மறைமுகமாக அந்த குவியத்தை பலகீனமாக்கி, 'சசிகலா குடும்ப அரசியல் நலன்களுக்கு',  சுயலாப நோக்கின்றி, துணை போகின்றவர்கள் எல்லாம் 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதற்கு மாறாக, அழிவுபூர்வ போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும் சமூக விசைகளின் மீது, நமது வரையறைகள் (Limitations)  பற்றிய புரிதலுடன், நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தி, அதன் அடுத்த கட்டமானது, மீண்டும் 'பொதுவாழ்வு வியாபாரத்திற்கு வழி வகுக்காமல், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கி, பயணிக்க வைப்பது?

என்ற நோக்கில், 'கடந்த கால அடிமைகளாக' வாழாமல், நிகழ்காலத்தில் சுயமரியாதையுடன் காலூன்றி, அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள வருங்காலம் நோக்கி, வாழ்பவர்கள் எல்லாம், பங்களிப்பார்கள். ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக விசைகளைப் (Social Forces) போலவே, சசிகலாவின் 'பினாமி ஆட்சிக்கு' எதிராக, தமிழரின் ‘தன்மான மீட்பு’ நோக்கில், சமூக விசைகள் வெளிப்பட்டுள்ளன. அந்த எதிர்ப்பினை, வெறும் தேர்தல் அரசியல் தளத்தில், ஆட்சி அதிகாரம் நோக்கிய எதிர்ப்பாக அணுகுபவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவி, 'வெற்றியை' சீர் குலைக்க முயன்று அம்பலமானதை போல‌, ஒரு கட்டத்தில் முட்டாளாக ஓரங்கட்டப்படுவார்கள், என்ற புரிதலுடன், நாம் வழங்கும் பங்களிப்பானது, சமுக பயனுள் வகையில் அமையும் என்பதும், எனது ஆய்வு முடிவாகும்.

Monday, February 20, 2017

தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்;


சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா?


தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’  கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகத்தையும், 'அரசியல் நீக்கத்தில்'  (Depoliticize), கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, ஆதாய அரசியலில் கூட்டணி போக்கில் பயணித்து வந்த கட்சிகளையும் ஓரங்கட்டி;

மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ள 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டமானது;

 'மண்ணோடு பற்றற்ற' போக்கிற்கும்;

தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறான போக்கிற்கும் எதிராக புதிதாக;

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்,  'ஆதாய அரசியல்' மூலம் அரங்கேறியுள்ள‌, அரசியல் நீக்கத்தையும் தகர்க்க;

வெளிப்பட்டுள்ள 'நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகும்.’

தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கேடாக கருதி, அவற்றிற்கும், தமிழர்கள் வாழும் மண்ணிற்கும், உள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றிய புரிதலின்றி; 

தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற, உதிரிகளின் கூட்டத்தை உருவாக்கிய போக்கின் உச்சக்கட்டமாக, தமிழ்நாடு இன்று 'சசிகலா பினாமி' ஆட்சியில் சிக்கியுள்ளதா? என்ற ஆய்வுக்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

1967இல் ஆட்சிக்கு வந்த 'திராவிட' கட்சிகளின் பங்களிப்பால், தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த 'அரசியல் நீக்கமானது', 1980களில் அந்த கட்சிகளின் 'உதவிகளை' அதன் வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, பெற்று 'ஈழ விடுதலை' குழுக்கள் பயணித்த போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே மற்ற குழுக்களை அழித்து, விடுதலைப் புலிகள் பயணித்த போக்கிலும், அதன் தொகுவிளைவானது, எவ்வாறு தமிழ்நாட்டின்' அரசியல் நீக்கத்திற்கு' 'வினை ஊக்கி' ஆனது? என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html)

இலங்கையில் 'தனிநாடு' கோரிய பிரிவினை போராட்டமானது, வன்முறையற்ற பாதையிலிருந்து விலகி,  'ஆயுத போராட்டமாக' வளர்ந்து வந்த போக்கும்;

இந்தியாவில் தமிழ்நாட்டில் 'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று 'தனிநாடு' கோரிய பிரிவினை போராட்டமானது, 'பிரிவினைத் தடைச் சட்டம்' வந்தவுடன்', 'பிரிவினையை கை விடுகிறேன். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கின்றன' அன்று அறிவித்து, பயணித்து, 1967இல் திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்து, ஊழலை அரங்கேற்றி தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்டு இன்னும் பல கனி வளங்களை கொள்ளை அடித்து, பயணித்து வந்த போக்கும்:

1980‍களில் சங்கமமானது.

'தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும் ,அதை தமது எலும்புத் துண்டு வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதும் அவசியமே. தமது ஊழல் குறுக்குவழி பணத்தின் ஒரு பகுதியை, 'முதலீடாக' 'நன்கொடை' வழங்கி, 'சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' போன்ற, அமைப்புகளின் புரவலராக வலம் வரும் அந்த செயல்நுட்பத்தினை' ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍;வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html )

இந்தியாவில், தமிழ்நாட்டில் சுயலாப‌ அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ’ வன்முறை வழிபாட்டு போக்கு ஆகிய காரணங்களால் வெளிப்பட்ட‌ 'உதவிகளையும்' (பாவத்தில் பங்கையும்), 'கிடைத்த வரைக்கும் லாபம்' என்ற வகையில்;

அந்த சங்கமத்தின் பலத்தில், 'தனி ஈழ' போராட்டம் பயணித்த போக்கானது, எவ்வாறு முள்ளிவாய்க்கால் அழிவை நோக்கி, பயணித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’;

தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.

மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.” 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

அதே போல, இலங்கையிலும் அந்த சங்கமமானது, வித்தியாசமான சமூக விளைவினை ஏற்படுத்தி வருகிறது.

எனது கவனத்தை ஈர்த்த , ‘ புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக் கால‌ விடுமுறையும் பொய் முகங்களும் –‘  என்ற கட்டுரையானது கீழ்வரும் கருத்தை, உரிய சான்றுகளுடன் நன்கு விளக்கியுள்ளது.

“யார் இந்த புலம்பெயர் தமிழர்கள் என்பதை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

1980களின் பின் யுத்தம் ஆரம்பித்த போது,  அதை சாட்டாக வைத்து,  மேற்குலக நாடுகளுக்கு பிழைப்புக்காக‌ வந்தவர்கள் தான் இவர்களில் பெரும்பாலானவர்கள். ( புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களில் 20 வீதமானவர்கள் மட்டுமே உயிராபத்தால்,  தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள்  . மிகுதி 80 வீதமானவர்கள் சொத்து சேர்ப்பதற்காக மேற்குலக நாடுகளை நாடி வந்தனர். )

இந்த புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் மேற்குலக நாடுகளில்   பொய் வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல, விடுமுறை என்று தமது சொந்த ஊருக்கு சென்றும் அங்கும் பொய்யான பகட்டை காட்டி விட்டே வருகின்றனர்……………

துப்புரவுத் தொழிலாளியாக‌ புலம்பெயர் நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் 'கலரால்'  பிரமித்துப் போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.. மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகி விடுகின்றது.”

புலம் பெயர்ந்தவராக வாழும் 'தமிழ்த் தேசியம் பேசும் வீரமங்கை'களும் மேற்குறிப்பிட்ட உதிரிகள் சமூக செயல்நுட்ப வினை ஊக்கியாக செயல்படுவதும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும் சரி, சில தனிநப‌ர்களும் சரி இலங்கை மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும், 5ஆம் கட்ட‌ ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாக வேண்டும், என்றே விரும்புகின்றனர்.

இதன் மூலம் எஞ்சி இருக்கும் தங்களின் உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து கொள்ள முடியும் என்றும்  நம்புகின்றனர்.

இத்தகைய போலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்களின் சொற்படி நடக்க வேண்டும் என சன்னதம் ஆடுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களின் இத்தகைய போலித்தன‌ங்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை உருவாக்கியிருக்கிறது………..

புலம்பெயர்ந்தவர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும்  எனக் கோரினார்களோ, அவர்களை தாயகத்தில் உள்ள மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர்.”

மேலே குறிப்பிட்ட கட்டுரையில், "புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கட‌ந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கட‌ந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்து விட்டனர்." என்ற கருத்தானது கவனிக்கத் தக்கதாகும்.

மேலே குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள அமைப்புகளின் ஆதரவில், ஊக்குவிப்பில், தமிழ்நாட்டில் 'தனித்தமிழ்நாடு' கனவுகளுடன், 'தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்த' அமைப்புகள் எல்லாம் முள்ளிவாய்க்கால் போரின் போது, 'துரோகம்' இழைத்ததாக கூறி, 2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியை எதிர்த்தனர்; 

முள்ளி வாய்க்கால் போரின் போது, தி.மு.கவைப் போலவே, தி.மு.கவை 'துரோகம்' இழைத்ததாக கூறியவர்கள் எல்லாம், 'திலீபனை' போல சாகாமல், ‘சாகும் வரை’ உண்ணாவிரத நாடகம், 'சில மாதங்கள் கூட சிறை செல்ல விரும்பாத' 'போராட்ட நாடகம்' நடத்தி, 'விடுதலைப் புலிகளை' 'முட்டாள்களாக்கி', 'நோகாமல்' போராடியதையும், தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், என்பது கூட தெரியாமல்.

தேர்தல் முடிவுகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றதோடு, 22 தொகுதிகளில் போட்டி போட்ட தி.மு.கவானது,18 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. அதாவது இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில், ஒளிவட்டங்களை எல்லாம் முற்றாக தகர்த்தெறிந்தது போல, அந்த ஒளிவட்டங்களின் ஆதரவில், ஊக்குவிப்பில் செயல்பட்ட தமிழ்நாட்டு ஒளிவட்டங்களும், 2009 பாராளுமன்ற தேர்தலில் அதே முடிவை சந்தித்தன.

மேற்குறிப்பிட்ட கட்டுரையில், "மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகி விடுகின்றது." என்பது மிகவும் முக்கியமான கருத்தாகும்.

பிறந்த மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையதாகும்.

தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த ஈ.வெ.ரா அவர்கள் அந்த நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதல் இல்லாமலும், தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறாகவும், அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு தனிநாடு கிடைத்தாலே போதும் என்றும், 'திராவிட/தமிழ் நாடு' பிரிவினையை முன்னெடுத்ததானது, தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

காடலான் (https://en.wikipedia.org/wiki/Catalan_independence_movement), குர்திஸ்தான் (https://www.channelnewsasia.com/news/world/after-failed-independence-bid--disillusioned-kurds-to-vote-in-iraqi-poll-10222636) உள்ளிட்டு நிகழ்கால விடுதலை முயற்சிகளில், சுய ஆட்சிக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு, சர்வதேச அரசியல் பொருளாதார போக்குகள் பற்றிய புரிதலின்றி, சிறுவர்களையும், பெண்களையும் ஆயுதம் ஏந்திய போராளிகளாக்கி, சிவிலியன்களை மனித கேடயமாக்கி, எண்ணற்ற உயிரிழப்புகளையும், உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தி, தவற விட்ட சுயாட்சியுடன் கீழான அதிகார ஆட்சியில் முடிந்துள்ள, 'சாண் ஏறி, முழம் சறுக்கி சாதனை படைத்துள்ள'(?) விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும், அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்தாமல், 'துதி' பாடும் போக்கு இனியும் தொடர்ந்தால், அது 'வின்னர் வடிவேலு பாணி காமெடி' ஆகி விடாதா?

மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;

தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு  கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;

எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;

மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.

அந்த 'சங்கம' காலக்கட்டத்தில் செயல்பட்ட 'திருச்சி பெரியார் மையத்தை' ஏணியாக்கி, அதன் மூலம், 'சசிகலா குடும்ப ஊழல்' வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராகி, அதன் மூலம் 'பெரியார்' எடுபிடிகள் துணையுடன், வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம்;

எவ்வாறு 'தனித்துவமான(Unique) சமூகவியல் ஆய்வு சோதனைக்கான‌(Sociological Research Experiment), மனித ஆய்வுப் பொருட்களாக‌-human subjects'(https://www.uaf.edu/ori/responsible-conduct/human-research-subjects/) எனது ஆய்வுகளுக்கு உதவி, இந்த பதிவு உள்ளிட்ட ஆய்வுகள் நோக்கி, நான் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டின் மீட்சிக்கான‌, அரிய சமூகவியல் ஆய்வு முடிவுகள் பெற முடிந்தது?

தமிழ்நாட்டில் பிறந்த மண்ணோடும், தாய்மொழியோடும், பற்றில்லாமல், நேர்மையான சுயசம்பாத்திய வழியற்ற, 'பெரியார்' உதிரிகள் துணையுடன், 'திராவிட அரசியல்' வளர்ந்த போக்கில்;

ச‌மூக இழைகளிலும் (Social Fibers), பிணைப்புகளிலும் (Social Bonds) ஏற்பட்ட பண்பு மாற்றங்களால், குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக; 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

'திருச்சி பெரியார் மையத்தில்' இருந்து, பின்னர் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக‌'சசிகலா குடும்ப அரசியல்' எடுபிடிகளான, 'பெரியார் சமூக கிருமிகள்' போல;

ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வந்த போக்கில், 'சசிகலா பினாமி' ஆட்சியில், தமிழ்நாடு சிக்க நேர்ந்துள்ளதா?

என்பதை எல்லாம் எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். 'தான் உழைக்காமல், உழைப்பின் மூலம் உயராமல், ஒரு தலைவரையே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல் கலாச்சாரம்' ('துக்ளக்' 01 - 02 - 2017  கேள்வி - பதில்) உள்ள தமிழ்நாட்டில், அந்த பிழைப்பில் உள்ள தலைவர்களின் 'உதவியையும்' பெற்று பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். உதாரணமாக, ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள காளிமுத்துவும்; (http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.' 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html) 

மேலே குறிப்பிட்ட இரு வேறு பிரிவினை போக்குகளின் சங்கமத்தில்,  எவ்வாறு,

தமிழ்நாட்டில் 'ஊழல் சுனாமி' அரங்கேறி, 'கல்வி வியாபாரம்' மூலமாக, தமிழ்வழிக் கல்வியையும் ( எனவே தமிழையும்) மரணப் படுக்கைக்கு உள்ளாக்கி, மலைகள், காடுகள், தாது மணல், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட கனி வளங்கள் சூறையாடப்பட்டன? தனியார் சொத்துகள் அச்சுறுத்தல் மூலம் அபகரிக்கப்பட்டன? என்ற ஆய்வின் மூலமே;

அதன் மூலம் 'ஈட்டிய' பண பலத்தில், 'வன்முறை அச்சுறுத்தல்' பலத்தில்;

தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவான, 'சசிகலா பினாமி' ஆட்சி அரங்கேறியுள்ளதா?

'ஆதாய வமரியாதை அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கும்', 'சுயலாப நோக்கற்ற சுயமரியாதை மீட்சி அரசியலுக்கும்', இடையே போர் துவங்கியுள்ளதா? திராவிட அரசியல் சுயநல போக்குகளிலிருந்து தப்பித்து, அந்த போரின் முடிவும், தமிழ்நாட்டின் விடிவாகுமா? அத்தகைய ஆக்கபூர்வ விடிவு நோக்கி, தமிழ்நாடு பயணிப்பதற்கு, சுயலாப நோக்கின்றி, நமது வரையறைகள் (limitations)  பற்றிய தெளிவுடன், நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?

என்ற சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும்;

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும். 

Sunday, February 19, 2017

தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா?


'சசிகலா பினாமி' ஆட்சியின் முள்ளிவாய்க்கால் பயணம்?


சில வருடங்களுக்கு முன், என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல் அது.

திருச்சி  NIT-இல் சுமார் 10 மாணவ நண்பர்கள் தமது பணத்தில், அங்கு சில நாட்கள் நடந்த மாணவர் விழாவில், 'தற்காலிக உணவகம்' நடத்தி, அதன் மூலம் ஈட்டிய சில லட்சம் ரூபாய்கள் மூலமாக, அருகிலுள்ள கிராமத்தில், 'சமுதாய கூடம்' கட்டித் தந்துள்ளார்கள்: ஏற்கனவே தாம் புரிந்து வந்த உதவிகளின் தொடர்ச்சியாக.

தெலுங்கு, வடமாநில மாணவர்கள் முன்னணி பங்காற்றிய அக்குழுவில் தமிழ் மாணவர்களும் இருந்தனர். விளம்பரமின்றி, தமது மன திருப்திக்கு நடந்த காரியம் அது.

சென்னையில் படிக்கும் பொறியியல் மாணவ நண்பர்கள் ஒரு குழுவாக, கீழ்வரும் உதவியை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், தாம்பரம் அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 'உதவிக்கு தகுதியானவர்களை' தேர்ந்தெடுத்து, அவர்களின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறார்கள்.

மீடியா வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்த, இது போன்ற போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும், அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும்.

ஒரு படிகத்தின் (crystal)  தோற்றத்தின் முதல் கட்டமான 'நியுகிலியேசன்' (‘Nucleation’; https://en.wikipedia.org/wiki/Nucleation ) போல;

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல்முறையாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய வன்முறை தவிர்த்த, 'அரசியல் நியுகிலியேசன்' ( Political Nucleation) போக்கானது, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டது.

சாதாரண மக்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணித்த நபர்களும், சக்திகளும், உள்நாட்டு/வெளிநாட்டு 'ஊழல் சக்திகளின்' பின்பலத்தில், அந்த போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில், ஊடுருவி, இறுதிக்கட்டத்தில் 'போராட்டத்தின் வெற்றியை' வன்முறை மூலம் சீர்குலைக்க முயன்றதும் தோல்வியைத் தழுவியதோடு, அந்த 'பின்பல'சதிகளும் வெளி வந்துள்ளதும், ஆய்விற்குரியதாகும். 

இந்தியாவை மட்டுமல்ல, உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெருமை சேர்த்தது, ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியாகும்.

பிரதமர் மோடியின் பின்பலத்தில்,  அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்ப அரசியலின் பிடியிலிருந்து விலகிய;

சமூக அரசியல் சூழலின் சாதகமின்றி, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'அரசியல் நியுகிலியேசன்' வெற்றிகரமாக நடந்திருக்குமா? என்ற கேள்வியை;

பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவிற்குப்பின் உருவாகியுள்ள நிலைமைகளானது எழுப்பியுள்ளது; சென்னை மெரினாவில் 'ஜல்லிக்கட்டு ஆதரவு'போராட்டத்தை துவக்கிய மாணவர்களும், இளைஞர்களும், 'அதே வழியில்', 'சசிகலா பினாமி' ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட 'மெரினா' போராட்டத்தினை, 'சசிகலா பினாமி' அரசானது, 144 தடையின் துணையுடன்  சந்திக்க துணிவில்லாமல்,

பிரமிக்க வைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டமானது வெற்றி பெற்ற‌, அதே தமிழ்நாட்டில்;

'மிருகப் பண்ணை' நாவலில் வருவதைப் போல (‘Animal Farm’,  an allegorical novella by George Orwell; https://en.wikipedia.org/wiki/Animal_Farm ) சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் பல நாட்கள், சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாதவாறு அடைத்து வைத்து, சட்டமன்றத்திற்கு 'ஓட்டி வந்து', 'இரகசிய வாக்கெடுப்பு'க்கான துணிச்சலின்றி;

எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில், சசிகலாவின் 'அடிமையான' ஒருவர், தமிழ்நாட்டின் முதல்வராக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 'வெற்றி'யானது சட்டப்படி சரியாகுமா? என்ற குழப்பங்களுடன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை' எதிர்த்து (http://www.ndtv.com/video/news/ndtv-special-ndtv-24x7/vk-sasikala-s-proxy-prison-rule-449384 ) ;

இனிமேல்  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வன்முறையற்ற 'ஜல்லிக்கட்டு' மாதிரி போராட்டத்தினை, சென்னை மெரினாவில் அரங்கேற்ற வழியில்லாதவாறு, 144 தடை உத்திரவின் துணையுடன், அந்த ஆட்சி துவங்கியுள்ளது.

'தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாக, 'சசிகலா குடும்ப அரசியலானது' முன்புத்தியில்லாத, தற்கொலைப் பாதையில், பயணிக்கத் தொடங்கியுள்ளது.' என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

“பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரீனாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பிரயோகித்து கைதாவோரை குறைந்தது 1 மாதம் சிறையில் அடைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார் சுப்பிரமணியசுவாமி.


தமிழ்நாட்டு மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி;

முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், போர் நடந்த போதும், பின்னும், ராஜபட்சேயை சுப்பிரமணியசுவாமி ஆதரித்தது போல;

இன்று 'சசிகலாவின் பினாமி' ஆட்சி அரங்கேற்றத்தையும், சுப்பிரமணியசுவாமி ஆதரித்ததுள்ளார்.

‘சுப்பிரமணிய சுவாமி அன்று ராஜபட்சேயை ஆதரித்ததும், இன்று நடராஜன் செல்வாக்கில் இயங்கும் சசிகலாவை ஆதரித்ததும், நடராஜன் 'ஆரிய Vs திராவிட' கவசத்தை வெளிப்படுத்தியபோது, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவர் நடராஜன் அருகே நின்றிருந்ததும் 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html);

'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்ததும்;

சுயலாப நோக்கின்றி, தனது அறிவு அனுபவ அடிப்படைகளில், 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில், முரண்பாடுகளின்றி, சுப்பிரமணியசுவாமி செயல்பட்டு வருகிறார் என்பதானது;

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பெறும் ஆய்வு முடிவாகும். அந்த முடிவுக்கு முரணாக எந்த ஆய்வு வெளிப்பட்டாலும், அதனையும் திறந்த மனதுடன் அணுகி, எனது ஆய்வுமுடிவினை நெறிப்படுத்திக் கொள்வேன்.....சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் 'பொறுக்கி' தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், 'பொறுக்கி' விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும். ’ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ('ராஜ பட்சே' பாணி  'சசிகலா குடும்ப அரசியல்'; அடையாளம் காட்டிய சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி;
https://tamilsdirection.blogspot.com/2017/02/xenophobia-httpsen.htmlஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வருபவர்கள் எல்லாம், சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்ட 'பொறுக்கி' வரையறையின், நடமாடும் இலக்கணங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இதே சுப்பிரமணியசுவாமியின் ஆதரவை 'நம்பி',  இஸ்ரேலின் உளவு நிறுவனம் 'மொசாத்' மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றது தொடர்பான சான்றினையும், 'ராஜிவ் கொலைகளும் சதிகளும்' புத்தகத்தில் வெளியிட்டிருந்ததையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  'விடுதலைப் புலிகள் தொடர்பான ‘திருச்சி பெரியார் மையஎச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானதும்.........அறிவு ஜீவி ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவாக (குறிப்பு 2 கீழே), முள்ளிவாய்க்கால் போரில், சரியான நேரத்தில் சரணடைய கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, 'தவறான நேரத்தில்' சரணடைய முயன்றதே, பேரழிவுக்கு காரணமா? என்பதானது, ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.' என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

‘விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன் 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால் அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?

'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது ("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல‌) தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது, என்ற நோக்கில், சசிகலாவை நடராஜனிடமிருந்து மீட்கும் நோக்கில், பயணிக்கிறாரா?

தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர் பயணிக்கிறோமா?

எந்த பயணம் வெற்றி பெறும்? என்பது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்.’ என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை', சுப்பிரமணிய சுவாமியின் துணையுடன் அரங்கேற்றியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலின்' முள்ளிவாய்க்கால் அழிவு பயணம் தொடங்கி விட்டதா? என்பதானது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்; 2015 டிசம்பர் சென்னை வெள்ள நிவாரணத்தில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்ட 'வித்தியாசமான' புதிய அணுகுமுறைகளில்.

அநேகமாக அதன் 'முதல் வெப்பமானது', சசிகலா பினாமி ஆட்சி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை, சமூக ரீதியில் 'சுடும்' அளவுக்கு;

அத்தகையோரின் குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக வெளிப்படத் தொடங்கினால் வியப்பில்லை.

'சசிகலா பினாமி' ஆட்சியானது, தமிழ்நாட்டில் புதிதாக தொழில் துவங்க, எவரும் 'அச்சப்படும்' ஆட்சியாக நிரூபணமாகி, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்தால் வியப்பில்லை. (‘PM Modi’s warning to then TN CM Jayalalitha, included the ‘high commission’ demanded by the ‘Mannargudi Mafia’, as the main reason for the reluctance of the prospective investors to start new industries & business in TN; thus ‘strengthening’ the unemployment problem in TN.’; https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/messages/70460 )

1991 - 96 காலக்கட்டம் வேறு. இன்றைய அறிவு யுகத்தில் (Knowledge Age), 'ஊழல் பண' பலமும், 'வன்முறை' பலமும், இன்றைய படித்த மாணவர்களின், இளைஞர்களின், அறிவு பலத்தின் மூச்சில், 'சருகான இலைகள்' போலவே, பறந்து, சமூக குப்பைத் தொட்டிக்கு போகும் நிலை தான் உள்ளது. எந்த சமூகத்திலும் 'திருப்பு முனை' கட்டங்களில், புதிதான‌ சமூக ஆற்றல்கள் எல்லாம் உள்மறையாகவே (Latent)  வளர்ந்து, சாதமான சமூக அரசியல் சூழலில், நம்ப முடியாத வகையில் வெளிப்படும் என்பதற்கு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது சான்றானது. எனவே;

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி பயணித்த போக்குகள் எல்லாம்;

'ஊழல் பெரும்பசியில்' தமிழ்நாட்டின்  மலைகள், காடுகள், தாது மணல், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட கனிவளங்களை சூறையாடிய போக்குகள் எல்லாம்;

பொதுச் சொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் கேடு விளைவித்த போராட்டங்கள் எல்லாம்;

அதற்கு துணையாக,  'குடுகுடுப்பைக்காரனை' போல, 'அரசியல் கொள்ளையர்களுக்கு' சாதகமாக, மக்களின் கவனத்தை 'உணர்ச்சிபூர்வமாக' திசை திருப்பி, இன்று மக்களிடமிருந்து அந்நியமாகியுள்ள‌;

உணர்ச்சிக் கவிஞர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, தத்தம் குடும்பங்களை 'நன்கு செட்டில்' செய்து, பயணித்து வந்த இரட்டைவேட போக்குகளும்;

தமிழ்நாட்டின் விடிவிற்கான, ஆக்கபூர்வமான, 'வித்தியாசமான' முறையில், 'சசிகலா குடும்ப அரசியல் முள்ளி வாய்க்காலில்', அந்த அழிவோடு 'சேர்ந்து' அழியும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு 'போனசாக',  அரசியல் கொள்ளையர்களின் சொத்துக்கள் எல்லாம் பறிமுதலுக்கு உள்ளாகி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் போக்கும் அரங்கேறினால், வியப்பில்லை.