Sunday, February 19, 2017

தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா?


'சசிகலா பினாமி' ஆட்சியின் முள்ளிவாய்க்கால் பயணம்?


சில வருடங்களுக்கு முன், என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல் அது.

திருச்சி  NIT-இல் சுமார் 10 மாணவ நண்பர்கள் தமது பணத்தில், அங்கு சில நாட்கள் நடந்த மாணவர் விழாவில், 'தற்காலிக உணவகம்' நடத்தி, அதன் மூலம் ஈட்டிய சில லட்சம் ரூபாய்கள் மூலமாக, அருகிலுள்ள கிராமத்தில், 'சமுதாய கூடம்' கட்டித் தந்துள்ளார்கள்: ஏற்கனவே தாம் புரிந்து வந்த உதவிகளின் தொடர்ச்சியாக.

தெலுங்கு, வடமாநில மாணவர்கள் முன்னணி பங்காற்றிய அக்குழுவில் தமிழ் மாணவர்களும் இருந்தனர். விளம்பரமின்றி, தமது மன திருப்திக்கு நடந்த காரியம் அது.

சென்னையில் படிக்கும் பொறியியல் மாணவ நண்பர்கள் ஒரு குழுவாக, கீழ்வரும் உதவியை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், தாம்பரம் அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 'உதவிக்கு தகுதியானவர்களை' தேர்ந்தெடுத்து, அவர்களின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறார்கள்.

மீடியா வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்த, இது போன்ற போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும், அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும்.

ஒரு படிகத்தின் (crystal)  தோற்றத்தின் முதல் கட்டமான 'நியுகிலியேசன்' (‘Nucleation’; https://en.wikipedia.org/wiki/Nucleation ) போல;

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல்முறையாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய வன்முறை தவிர்த்த, 'அரசியல் நியுகிலியேசன்' ( Political Nucleation) போக்கானது, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டது.

சாதாரண மக்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணித்த நபர்களும், சக்திகளும், உள்நாட்டு/வெளிநாட்டு 'ஊழல் சக்திகளின்' பின்பலத்தில், அந்த போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில், ஊடுருவி, இறுதிக்கட்டத்தில் 'போராட்டத்தின் வெற்றியை' வன்முறை மூலம் சீர்குலைக்க முயன்றதும் தோல்வியைத் தழுவியதோடு, அந்த 'பின்பல'சதிகளும் வெளி வந்துள்ளதும், ஆய்விற்குரியதாகும். 

இந்தியாவை மட்டுமல்ல, உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெருமை சேர்த்தது, ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியாகும்.

பிரதமர் மோடியின் பின்பலத்தில்,  அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்ப அரசியலின் பிடியிலிருந்து விலகிய;

சமூக அரசியல் சூழலின் சாதகமின்றி, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'அரசியல் நியுகிலியேசன்' வெற்றிகரமாக நடந்திருக்குமா? என்ற கேள்வியை;

பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவிற்குப்பின் உருவாகியுள்ள நிலைமைகளானது எழுப்பியுள்ளது; சென்னை மெரினாவில் 'ஜல்லிக்கட்டு ஆதரவு'போராட்டத்தை துவக்கிய மாணவர்களும், இளைஞர்களும், 'அதே வழியில்', 'சசிகலா பினாமி' ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட 'மெரினா' போராட்டத்தினை, 'சசிகலா பினாமி' அரசானது, 144 தடையின் துணையுடன்  சந்திக்க துணிவில்லாமல்,

பிரமிக்க வைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டமானது வெற்றி பெற்ற‌, அதே தமிழ்நாட்டில்;

'மிருகப் பண்ணை' நாவலில் வருவதைப் போல (‘Animal Farm’,  an allegorical novella by George Orwell; https://en.wikipedia.org/wiki/Animal_Farm ) சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் பல நாட்கள், சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாதவாறு அடைத்து வைத்து, சட்டமன்றத்திற்கு 'ஓட்டி வந்து', 'இரகசிய வாக்கெடுப்பு'க்கான துணிச்சலின்றி;

எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில், சசிகலாவின் 'அடிமையான' ஒருவர், தமிழ்நாட்டின் முதல்வராக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 'வெற்றி'யானது சட்டப்படி சரியாகுமா? என்ற குழப்பங்களுடன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை' எதிர்த்து (http://www.ndtv.com/video/news/ndtv-special-ndtv-24x7/vk-sasikala-s-proxy-prison-rule-449384 ) ;

இனிமேல்  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வன்முறையற்ற 'ஜல்லிக்கட்டு' மாதிரி போராட்டத்தினை, சென்னை மெரினாவில் அரங்கேற்ற வழியில்லாதவாறு, 144 தடை உத்திரவின் துணையுடன், அந்த ஆட்சி துவங்கியுள்ளது.

'தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாக, 'சசிகலா குடும்ப அரசியலானது' முன்புத்தியில்லாத, தற்கொலைப் பாதையில், பயணிக்கத் தொடங்கியுள்ளது.' என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

“பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரீனாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பிரயோகித்து கைதாவோரை குறைந்தது 1 மாதம் சிறையில் அடைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார் சுப்பிரமணியசுவாமி.


தமிழ்நாட்டு மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி;

முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், போர் நடந்த போதும், பின்னும், ராஜபட்சேயை சுப்பிரமணியசுவாமி ஆதரித்தது போல;

இன்று 'சசிகலாவின் பினாமி' ஆட்சி அரங்கேற்றத்தையும், சுப்பிரமணியசுவாமி ஆதரித்ததுள்ளார்.

‘சுப்பிரமணிய சுவாமி அன்று ராஜபட்சேயை ஆதரித்ததும், இன்று நடராஜன் செல்வாக்கில் இயங்கும் சசிகலாவை ஆதரித்ததும், நடராஜன் 'ஆரிய Vs திராவிட' கவசத்தை வெளிப்படுத்தியபோது, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவர் நடராஜன் அருகே நின்றிருந்ததும் 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html);

'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்ததும்;

சுயலாப நோக்கின்றி, தனது அறிவு அனுபவ அடிப்படைகளில், 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில், முரண்பாடுகளின்றி, சுப்பிரமணியசுவாமி செயல்பட்டு வருகிறார் என்பதானது;

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பெறும் ஆய்வு முடிவாகும். அந்த முடிவுக்கு முரணாக எந்த ஆய்வு வெளிப்பட்டாலும், அதனையும் திறந்த மனதுடன் அணுகி, எனது ஆய்வுமுடிவினை நெறிப்படுத்திக் கொள்வேன்.....சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் 'பொறுக்கி' தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், 'பொறுக்கி' விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும். ’ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ('ராஜ பட்சே' பாணி  'சசிகலா குடும்ப அரசியல்'; அடையாளம் காட்டிய சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி;
https://tamilsdirection.blogspot.com/2017/02/xenophobia-httpsen.htmlஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வருபவர்கள் எல்லாம், சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்ட 'பொறுக்கி' வரையறையின், நடமாடும் இலக்கணங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இதே சுப்பிரமணியசுவாமியின் ஆதரவை 'நம்பி',  இஸ்ரேலின் உளவு நிறுவனம் 'மொசாத்' மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றது தொடர்பான சான்றினையும், 'ராஜிவ் கொலைகளும் சதிகளும்' புத்தகத்தில் வெளியிட்டிருந்ததையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  'விடுதலைப் புலிகள் தொடர்பான ‘திருச்சி பெரியார் மையஎச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானதும்.........அறிவு ஜீவி ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவாக (குறிப்பு 2 கீழே), முள்ளிவாய்க்கால் போரில், சரியான நேரத்தில் சரணடைய கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, 'தவறான நேரத்தில்' சரணடைய முயன்றதே, பேரழிவுக்கு காரணமா? என்பதானது, ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.' என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

‘விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன் 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால் அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?

'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது ("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல‌) தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது, என்ற நோக்கில், சசிகலாவை நடராஜனிடமிருந்து மீட்கும் நோக்கில், பயணிக்கிறாரா?

தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர் பயணிக்கிறோமா?

எந்த பயணம் வெற்றி பெறும்? என்பது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்.’ என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை', சுப்பிரமணிய சுவாமியின் துணையுடன் அரங்கேற்றியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலின்' முள்ளிவாய்க்கால் அழிவு பயணம் தொடங்கி விட்டதா? என்பதானது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்; 2015 டிசம்பர் சென்னை வெள்ள நிவாரணத்தில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்ட 'வித்தியாசமான' புதிய அணுகுமுறைகளில்.

அநேகமாக அதன் 'முதல் வெப்பமானது', சசிகலா பினாமி ஆட்சி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை, சமூக ரீதியில் 'சுடும்' அளவுக்கு;

அத்தகையோரின் குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக வெளிப்படத் தொடங்கினால் வியப்பில்லை.

'சசிகலா பினாமி' ஆட்சியானது, தமிழ்நாட்டில் புதிதாக தொழில் துவங்க, எவரும் 'அச்சப்படும்' ஆட்சியாக நிரூபணமாகி, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்தால் வியப்பில்லை. (‘PM Modi’s warning to then TN CM Jayalalitha, included the ‘high commission’ demanded by the ‘Mannargudi Mafia’, as the main reason for the reluctance of the prospective investors to start new industries & business in TN; thus ‘strengthening’ the unemployment problem in TN.’; https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/messages/70460 )

1991 - 96 காலக்கட்டம் வேறு. இன்றைய அறிவு யுகத்தில் (Knowledge Age), 'ஊழல் பண' பலமும், 'வன்முறை' பலமும், இன்றைய படித்த மாணவர்களின், இளைஞர்களின், அறிவு பலத்தின் மூச்சில், 'சருகான இலைகள்' போலவே, பறந்து, சமூக குப்பைத் தொட்டிக்கு போகும் நிலை தான் உள்ளது. எந்த சமூகத்திலும் 'திருப்பு முனை' கட்டங்களில், புதிதான‌ சமூக ஆற்றல்கள் எல்லாம் உள்மறையாகவே (Latent)  வளர்ந்து, சாதமான சமூக அரசியல் சூழலில், நம்ப முடியாத வகையில் வெளிப்படும் என்பதற்கு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது சான்றானது. எனவே;

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி பயணித்த போக்குகள் எல்லாம்;

'ஊழல் பெரும்பசியில்' தமிழ்நாட்டின்  மலைகள், காடுகள், தாது மணல், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட கனிவளங்களை சூறையாடிய போக்குகள் எல்லாம்;

பொதுச் சொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் கேடு விளைவித்த போராட்டங்கள் எல்லாம்;

அதற்கு துணையாக,  'குடுகுடுப்பைக்காரனை' போல, 'அரசியல் கொள்ளையர்களுக்கு' சாதகமாக, மக்களின் கவனத்தை 'உணர்ச்சிபூர்வமாக' திசை திருப்பி, இன்று மக்களிடமிருந்து அந்நியமாகியுள்ள‌;

உணர்ச்சிக் கவிஞர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, தத்தம் குடும்பங்களை 'நன்கு செட்டில்' செய்து, பயணித்து வந்த இரட்டைவேட போக்குகளும்;

தமிழ்நாட்டின் விடிவிற்கான, ஆக்கபூர்வமான, 'வித்தியாசமான' முறையில், 'சசிகலா குடும்ப அரசியல் முள்ளி வாய்க்காலில்', அந்த அழிவோடு 'சேர்ந்து' அழியும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு 'போனசாக',  அரசியல் கொள்ளையர்களின் சொத்துக்கள் எல்லாம் பறிமுதலுக்கு உள்ளாகி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் போக்கும் அரங்கேறினால், வியப்பில்லை.

No comments:

Post a Comment