‘துக்ளக்’கும், சசிகலா நடராஜனும்
'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணியில் நடராஜன்
“நாங்கள்
குடும்ப அரசியல்தான் செய்வோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்துள்ளார் (சசிகலா) நடராஜன்.
மேலே
குறிப்பிட்ட செய்தியில், ஜெயலலிதாவிற்கு தனது மனைவி சசிகலாவும்,
தானும், தனது குடும்பத்தினரும் எந்த
அளவுக்கு பக்கபலமாக இருந்து 'தொண்டு' செய்தோம், என்பதை பட்டியலிட்டு;
அதன் தொடர்ச்சியாக, சசிகலா
தொடர்பாக;
"இன்று
அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார்
என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன்.
இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும்.
அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று
கிழித்துக்காட்டுவேன்"
என்று சூளுரைத்துள்ளார்.
'சசிகலா
ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார்'
என்பது விஷமமான தகவல் என்றும், அதை சுயலாப உள்நோக்கத்துடன்,
சில 'விஷமிகள்' பரப்பி வருகிறார்கள், என்ற நடராஜனின் கூற்றை
ஏற்றுக் கொண்டாலும்;
'அந்த
விஷமமான' தகவலானது தமிழ்நாடெங்கும், குறிப்பாக கிராமப்புறங்களில், 'காட்டுத்தீ' போன்று ஏன்
பரவி வருகிறது?
இன்றைக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும்,
அவருக்கு பக்க பலமாக இருக்கும்
சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம்
காட்டி, போயஸ் கார்டனை விட்டு, ஜெயலலிதா சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;
'அவ்வாறு
சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும்
'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;
'அந்த
சதி' பற்றிய நடராஜனின் விளக்கம் மூலமாகவே, 'காட்டுத்தீ' போல பரவி வரும்,
'அந்த வதந்தியை' முறியடிக்க முடியும்;
என்ற பொதுமக்களின் கருத்துருவாக்கம்
(Public Opinion Formation) பற்றிய
சமூக செயல்நுட்பம்' நடராஜனுக்கோ, அல்லது அவரின் ஆலோசகர்களுக்கோ தெரியாதா?
‘பொதுமக்களின்
கருத்துருவாக்கம்
(Public Opinion Formation) தொடர்பான
சமூக செயல்நுட்பம் (Social
Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம்,
'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே
விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக்
கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.’ என்பதையும்;
'நேற்று
ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள, இன்று எதற்காக சசிகலா காலில் விழுகிறார்கள்? நாளை எவர் காலில்
விழுவார்கள்? தமது சொந்த, பந்தங்கள்
மதிப்பதற்கு, பணம் சம்பாதிக்க இப்படி
அவமரியாதையாக வாழ வேண்டுமா? இப்படி
வாழ்பவர்களை மதிக்கும், அவர்களின் சொந்த பந்தங்களின் யோக்கியதையும் இப்படித்தானா? நமது யோக்கியதையும், நமது
சொந்த பந்தங்களின் யோக்கியதையும் அதே போக்கில் தான்
உள்ளதா? என்ற கேள்வியை மனசாட்சியுடன்
எழுப்பி, விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் பயணிக்கவில்லையென்றால்,
நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க
முடியுமா?
1925இல்
ஈ.வெ.ரா அவர்கள்
தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் பலனா, இவையெல்லாம்? என்று சசிகலா மட்டுமல்ல, அவரை ஆதரிக்கும் தி.க தலைவர் கி.வீரமணி மட்டுமல்ல;
ஆட்சிக்கனவில் மிதக்கும் அனைத்து கட்சிகளும், தலைவர்களும் விடைகள் கண்டு, சுதாரிக்க வில்லையென்றால்:
ஆட்சிக்கனவில் மிதக்கும் அனைத்து கட்சிகளும், தலைவர்களும் விடைகள் கண்டு, சுதாரிக்க வில்லையென்றால்:
விஜயகாந்த்
சந்தித்துள்ள விளைவினை விட, இன்னும் மோசமான
விளைவுகளையே சந்திப்பார்கள்? ' என்பதையும்;
'அந்த
சதி' பற்றிய நடராஜனின் விளக்கம், ஏற்கனவே வெளிவந்துள்ளதா?
என்று இணையத்தில் தேடியபோது, கீழ்வரும் காணொளி கிடைத்தது.
'பட்டுப்புடவையை
இரவல் கொடுத்த மாதிரி', தமிழகம் என்ற 'பட்டுப் புடவையை' ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, அந்த பட்டுப் புடவைக்கு
ஊறு நேர்ந்துவிடக் கூடாது, என்று தான் ஜெயலலிதாவை கவனமுடன்
பார்த்து வந்துள்ளதாகவும்;
"இனி
அப்படி இருக்க மாட்டேன்" என்றும்;
"அரசியலில்
வெளிப்படையாக வா என்று அவர்
(ஜெயலலிதா) அழைத்திருக்கிறார். அவரது நடவடிக்கை (நடராஜனை சிறையிலடைத்தது) மூலம் அழைத்திருக்கிறார். அதை ஏற்று அரசியலில்
வெளிப்படையாக, நான் வருவேன்." என்பது
உள்ளிட்டு, இன்னும் பல 'வியப்பூட்டும்' தகவல்களை
எல்லாம், மேலே குறிப்பிட்ட பேட்டியில்
நடராஜன் வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது "மத்தியில் இனி கூட்டாட்சி தான். தனித்து எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று நடராஜன் கணித்து, சசிகலாவுடன் உள்ள தனது "உறவு உடைந்தது உடைந்தது தான்' என்று தெரிவித்து, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் உறவு விரிந்ததற்கு துக்ளக் சோவே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=_hARl0Vgo4M )

அவ்வாறு
அரசியலில் வெளிப்படையாக பயணித்து வந்த நடராஜன்;
“நாங்கள்
குடும்ப அரசியல்தான் செய்வோம்” என்று துவக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதானது, அரசியல் நகைச்சுவை ஆகாதா?
அரசியல்
அரங்கில் இது போன்ற நகைச்சுவைகளை
வழங்கி, 'துக்ளக்' சோவிற்கு துணை புரிந்து வந்தவர்
தி.மு.க தலைவர்
கலைஞர் கருணாநிதி ஆவார். ஆனால் அந்த நகைச்சுவையை தன்
மீதான தனி மனித தாக்குதலாக,
அவர் கருதாமல், தனிப்பட்ட முறையில் சோ வுடன் நட்பு
பாராட்டினார்.
அதே
போல, ஜெயலலிதாவை அரசியலில் ஆதரித்து வந்த சோ, 1996 பொதுத்
தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடிக்கவும் பங்களித்தார், பகிரங்கமாகவே. அதற்காக ஜெயலலிதாவும் சோவை வெறுக்கவில்லை.
அது
மட்டுமல்ல, 'சசிகலா' தமிழக அரசின் செயல்பாடுகளில் 'சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக' இருப்பது தவறு என்பதையும் பகிரங்கமாக
'துக்ளக்'
சோ வெளிப்படுத்தியிருக்கிறார். (https://www.youtube.com/watch?v=J-voqvypEyI
)
துக்ளக் சோவும் சரி, இப்போது துக்ளக் இதழின் ஆசிரியராக உள்ள குருமூர்த்தியும் சரி, தங்களின் சொத்து, சுகத்திற்காக பொதுவாழ்வில் இருக்கிறார்கள், என்று அவர்களால் எதிர்க்கப்பட்ட எவரும் கூட, குற்றம் சுமத்தியதில்லை. பொது அரங்கில் துணிச்சலுடன் விவாதத்தை சந்திக்க துக்ளக் சோவும், குருமூர்த்தியும் தயங்கியதில்லை.

பா.ஜ.கவை பகிரங்கமாக ஆதரித்து கொண்டே, அக்கட்சியின் குறைகளையும், மோடி ஆட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள தவறுகளையும் 'பகிரங்கமாக' சுட்டிக்காட்டி வந்தவர்கள், துக்ளக் சோவும், குருமூர்த்தியும், ஆவர். குருமூர்த்தி சார்ந்துள்ள 'சுதேசி இயக்கம்', மோடி அரசை ஆதரிக்க வேண்டியவைகளில் ஆதரித்தும், எதிர்க்க வேண்டியவைகளை பகிரங்கமாக எதிர்த்தும், செயல்படும் இயக்கமாகும். 1967க்குப் பின், திராவிட கட்சிகளில் சோ, குருமூர்த்தி போன்றவர்கள், ஆதரவாளர்களாக இருந்திருந்தால், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் போன்ற நோய்களில், அக்கட்சிகள் சிக்கியிருக்குமா? பா.ஜ.க போன்று, திராவிடக் கட்சிகளில், அவர்களை 'சகித்துக்' கொள்வார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவை ஆகும்.
குருமூர்த்தி 'பொது அரங்கில் பகிரங்கமாக ஊழல் குற்றம் சுமத்தி, விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்த போது, அவ்வாறு விவாதிக்காமல் பின்வாங்கியவர்கள் வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் (http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3341680/Gurumurthy-takes-jibe-former-finance-minister-Chidambaram-16-business-premises-raided-tax-officials.html ) , தயாநிதி மாறன் (http://www.thehindu.com/news/national/tamil-nadu/gurumurthy-challenges-dayanidhi-maran-to-debate-on-bsnl-exchange-scam/article6815547.ece ) உள்ளிட்ட பலர் அடங்குபவர்.

சசிகலாவை
துக்ளக் சோ எதிர்த்த அதே
நோக்கில், துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தியும், சசிகலாவின் குடும்ப அரசியலை எதிர்த்து, தொடர்ந்து துக்ளக்கில் எழுதி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே துக்ளக்
ஆண்டு விழாவில் பேசினார்.
அதை
மறுத்து, சசிகலாவோ, அல்லது ஒரு இதழின் ஆசிரியராக
இருக்கும் நடராஜனோ பத்திரிக்கைகளில் எழுதினாலோ, மேடைகளில் பேசினாலோ, அந்த குடும்ப அரசியல்
சரியா? தவறா? என்பது பொது மக்களுக்கு தெளிவாகும்.
தி.மு.க தலைவர்
கலைஞர் கருணாநிதியோ, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோ, தம்மை பகிரங்கமாக எதிர்த்த, துக்ளக் சோவை, 'மறைந்திருந்து' தாக்குவதாக சொல்லவில்லை, என்பதை கவனத்தில் கொள்ளாமல்;
தனது இதழ் சார்பாக
கூட்டம் போட்டு, குருமூர்த்தியின் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை மறுத்திருக்கும்;
அல்லது தனது
இதழில் தலையங்கம் மூலமோ, கட்டுரைகள் மூலமோ மறுத்திருக்கும்;
வாய்ப்புகளை
நடராஜன் நாடாமல்;
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன்
மறைந்திருந்து தாக்குற?", என்று நடராஜன் குற்றம் சுமத்தினால்;
அது
'வின்னர்' திரைப்பட வடிவேல் பாணியில், காமெடி ஆகாதா?
அந்த 'காமெடி வசனத்தில் ஆரிய திராவிட கருத்து' இடம் பெற்றதற்கு, தி.க. தலைவர் கி.வீரமணி மூலகாரணமா?
(http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )
அந்த 'காமெடி வசனத்தில் ஆரிய திராவிட கருத்து' இடம் பெற்றதற்கு, தி.க. தலைவர் கி.வீரமணி மூலகாரணமா?
(http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )
முந்தைய
காங்கிரஸ் ஆட்சியில், சுப்பிரமணியசுவாமிக்கு ஏன் 'இசட்' பிரிவு
பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது? என்று
எவரும் கேட்கவில்லை.
பயங்கரவாதத்தையும், ஊழலையும் எதிர்த்து போராடி வருபவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களில் இருந்து, அவர்கள்
எந்த கட்சியாக இருந்தாலும், பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த அடிப்படையிலேயே சுப்பிரமணிய
சுவாமி, குருமூர்த்தி, போன்ற இன்னும் பலருக்கு அரசு பாதுகாப்பு வழங்கி
வருகிறது.
சுப்பிரமணிய
சுவாமி, குருமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் எவர் சொத்தையும் அச்சுறுத்தி
மிரட்டி வாங்கவில்லை; கொலை செய்யவில்லை. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம், வெளியில் செல்லும்போது, தமக்கான சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வர்.
மேலே
குறிப்பிட்ட பின்னணியில், 'குருமூர்த்திக்கு ஏன் பாதுகாப்பு?' என்று
நடராஜன் வினா எழுப்புவதும் நகைச்சுவை
ஆகாதா?
சென்னையில்
சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பான சி.பி.ஐ
வழக்கில் சிக்கிய தயாநிதி மாறன்", " ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரை" திருப்தி செய்வதற்காக
சி.பி.அய் செயல்படுவதாகக்
குற்றம் சாட்டியதானது, ‘திராவிட
சந்தர்ப்பவாதத்தின் உச்சமா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.htm )
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.htm )
ஆனால் தயாநிதி மாறன் கூட, நடராஜனைப் போல, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன் மறைந்திருந்து தாக்குற?",
என்று மீடியா வெளிச்சத்தில் பேசவில்லை.
ஏனெனில், அப்படி பேசினால், அது 'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணி நகைச்சுவை ஆகிவிடும் என்று தயாநிதி மாறனுக்கும் தெரியும்; ப. சிதம்பரத்திற்கும் தெரியும். ( https://www.youtube.com/watch?v=i3Cuk0rck18 )
'வின்னர்' திரைப்பட வடிவேலு நகைச்சுவையை விட, உலகப் புகழ் பெற்ற நகைச்சுவையை, நிகழ்கால தமிழக அரசியல் சூழலில் கையாண்டுள்ளார், எழுத்தாளர் வாஸந்தி. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes )
‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;
ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம்.
ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்;
சசிகலாவிற்கு எதிரான சமூக ஆற்றல்களின் ஒரே குவியப் புள்ளியாக;
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவும், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன் கை கொட்டி சிரிக்கும்' ஒலியே ஆகும்.’
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html)
குறிப்பு:

1. ஓ.பி.எஸ் முதல்வராக
இருந்த போது, பொது அரங்கில், 'மீடியா
வெளிச்சத்தில்' தமிழக முதல்வரை ஜெயலலிதா அவமதித்ததில்லை; காரணம் அதன் விளைவுகள் தம்மை
எந்த அளவுக்கு பாதிக்கும்? என்று 1996 தேர்தல் தோல்வியானது அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது.
ஆனால்
சசிகலா, தமிழக முதல்வரை மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளின் மாண்புகளை
எந்த அளவுக்கு அவமதித்து நடந்து வருகிறார்? என்பதை;
''சின்னத்தனம்',
சுயமரியாதை இழப்பு' என்ற தலைப்பில், துக்ளக்'(
26.01.2017) தலையங்கம் விளக்கியுள்ளது.
அதன்
தொடர்ச்சியாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்;
'சின்னம்மா,
சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா..' என்று "இளம் பெண் கோஷமிடும்
வீடியோ வைரலாகியுள்ளது."; ( http://tamil.oneindia.com/news/tamilnadu/a-young-woman-protest-at-jallikattu-protest-marina-beach-going-viral-272260.html
)
2. சென்னை
வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை எல்லாம் 'தாமதமான' வால்களாக்கி;
சென்னை
முதல் கன்னியாகுமரி வரை இளைஞர்களும். மாணவர்களும்
'செயல்பூர்வமாக' உதவிய போக்கு என்பது;
தமிழ்நாட்டின்
மீட்சியின் தொடக்க அறிகுறி என்பது தொடர்பான, எனது
பதிவுகளை படித்து வந்துள்ளவர்களுக்கு, 'ஜல்லிக்கட்டு
ஆதரவு' போராட்டம் என்பது, எவ்வாறு
அதன் தொடர்ச்சியே ஆகும்? என்பதும் விளங்கும்.
‘மக்களின்
தேவைகளும், அதை உணர்ந்து (sensitize), செயல்பூர்வமாக
உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த
சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance),
செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை (structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே
உருவாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html )
(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html )
No comments:
Post a Comment