'புறம்போக்கு' மீளும் காலமும் நெருங்கி விட்டது;
தமிழில் இசைக்கு ஏற்றவாறு, அல்லது இசையமைக்க ஏதுவான, பாடல் எழுதுபவர்களின் பார்வைக்கு
'கர்னாடக
சங்கீதத்தில் ஒரு 'பொறம்போக்கு' புரட்சி!'
படித்தேன்.காணொளியும் பார்த்தேன்; கேட்டேன்.
(http://tamil.thehindu.com/opinion/blogs ; தி இந்து 16 ஜனவரி 2017)
“எழுத்துத் தமிழில் 'புறம்போக்கு' என்று சொல்லப்படும் 'பொறம்போக்கு' என்ற சொல்லின் அடிப்படை அர்த்தம், 'பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற இடங்கள்' என்பதே. அது காலப்போக்கில் இந்த அர்த்தம் வலுவிழந்து 'சாவு கிராக்கி', 'ஊட்ல சொல்லிக்கினு வந்துட்டியா' என்ற வசவுகளின் வரிசையில் சேர்ந்துவிட்டது. இந்தப் பொருள் மாற்றமே சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி விழுந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.”
- மேலே குறிப்பிட்ட கட்டுரையில்.
'அந்த' பொருள் மாற்றமும், 'இடைவெளியும்' எப்போது தொடங்கியது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
‘சங்க காலம் முதல் அரசர்கள், பின் காலனி, அதன்பின் காங்கிரஸ் ஆட்சிகள் வரை, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிற்கு ‘சட்டபூர்வ பாதுகாப்பு’ அமுலில் இருந்தது. பின் 'திராவிட' ஆட்சிகளில், அந்த சட்டபூர்வ பாதுகாப்பானது, ஊழல் அரசியல் கொள்ளைக்காக, (சுயசம்பாத்திய தகுதி, திறமைகள் இல்லாதவர்களால்) நீக்கப்பட்டு, ஊழலின் கோரப்பசிக்கு இரையாகும் போக்கானது, 1967இல் முளைவிடத் தொடங்கியது’ (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html )
தமிழில், காலனிய சூழ்ச்சியில், 'சாதி', 'இனம்' போன்ற சொற்களின் பொருள் திரிந்தது பற்றி எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். அதே வகையிலான திரிதல் போக்கில் தான், 'புறம்போக்கு' தொடர்பான, பொருள் திரிதலும் நடந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல, தமிழ் மொழியில் உள்ள சொற்களின் தவறான பொருள் திரிதல் போக்கிற்கும், தமிழர்களிடையே பலகீனமான மனிதர்கள் எல்லாம் இயல்பில் தவறான திரிதலுக்குள்ளாகி, சமூக கிருமிகளாக வளர்ந்து வரும் போக்கிற்கும், இடையில் உள்ள தொடர்பும், ஆய்விற்குரியதாகும்.
மேலே குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் அரங்கேறிய 'ஆரியர் - திராவிடர்' கருத்தாக்கமானது, இன்று சசிகலா நடராஜன் குடும்பத்தின் 'அரசியல் கவசமாகியுள்ள' போக்கானது, (‘இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல." என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-brother-divakaran-slams-centre-271865.html ) அந்த கருத்தாக்கத்தின் மரணத்திற்கு இட்டு சென்று, தமிழ்நாட்டை மீட்கும் காலம் நெருங்கி விட்டதன், 'சிக்னல்'(signal) ஆகும். எனவே 'புறம்போக்கு' என்ற தமிழ்ச் சொல்லானது, தனது திரிந்த பொருளிலிருந்து மீளும் காலமும் நெருங்கி விட்டது, என்பதும் எனது கணிப்பாகும். ('1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே, 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் என்பதும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதி மூலமாக, தமிழ்நாட்டின் விடியல் தொடங்கியது என்பதும், வரலாற்றில் இடம் பெறும்.'; http://tamilsdirection.blogspot.in/2017/01/1948.html )
மேலே குறிப்பிட்ட ''புறம்போக்கு' வீடியோ ஆல்பமானது, கர்னாடக சங்கீதத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சியே ஆகும்.; இசையிலும் பொருளிலும் சில குறைபாடுகள் இருந்தாலும். பாடலில் எழுத்தின் இசையொலியும் தொடர்புள்ள சுருதியும், பெரும்பாலான இடங்களில் மோதலுக்கு உள்ளாகி, வெற்றியின் அளவை குறைத்துள்ளது.

மேலே குறிப்பிட்ட இசை ஆல்பத்தின் பாடலாசிரியருக்கும்,
பாடியவருக்கும், தமிழில்
இசைக்கு ஏற்றவாறு, அல்லது இசையமைக்க ஏதுவான, பாடல் எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும்;
அந்த
மோதல்கள் பற்றி அறியும் ஆர்வமானது, இருந்தால்;
கீழ்வருபனவற்றில்
விளக்கம் பெறலாம்.
3. 'எழுத்தின் ஒலியும் இசையும் பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் இலக்கணம்'; பக்கம் 11, 'தமிழ்
இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்’- 2009 சேகர்
பதிப்பகம் சென்னை
4. ‘சீரும் இசையும்’ பக்கம் 21, 'தமிழ்
இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்’- 2009 சேகர்
பதிப்பகம் சென்னை
5. ‘பாடல்
எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of
the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?’ ; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html
சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த, மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவானது, இன்னும் 'இருட்டில்' இருப்பதன் 'சிக்னலாகவே', மேலே குறிப்பிட்ட 'பொறம்போக்கு' ஆல்பம் வெளிவந்துள்ளது. 'புறம்போக்கு' மீளும் போக்கே , அந்த 'இருட்டிலிருந்து, தமிழ்நாடு மீள வழிவகுக்கும்.
மேலே குறிப்பிட்ட தவறான திரிதலுக்குள்ளாகி, சமூக கிருமிகளாக வாழ்பவர்களில் எவராவது, நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருந்து திருந்தி வாழ மறுத்தால், அத்தகையோரை ஒதுக்கி வாழ்வதன் மூலமே, நாமும் 'புறம்போக்கு' மீளும் போக்கிற்கு, பங்களிப்பு வழங்க முடியும்.(http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

No comments:
Post a Comment