Thursday, January 5, 2017

1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே;


2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா?

ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?


ஈ.வெ.ரா அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின், சர்வதேச அரசியல் பொருளாதார போக்குகளை அறிவுபூர்வமாக அணுகி, 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பில்' வளர்ந்த, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களை நீக்கி, 'தமிழர்' என்ற அடையாளத்தின் வலிமையில், 'இந்தியர்' அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், தமிழ்நாடு பயணித்திருந்தால், தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டும், காஷ்மீர் உள்ளிட்ட 'பிரிவினை' சிக்கல்களை தீர்க்க, 'பங்களிப்பு' வழங்கி, முன்னணி மாநிலமாக வளர்ந்திருக்கும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். தி.மு.கவை-வில் இருந்த காலத்தில், ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கவை அவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்துக்கு இணக்கமாக பயணிக்கச் செய்யும் நோக்கில், கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா புறக்கணித்து சீர் குலைத்தார், என்ற தகவல் உண்மையானால், அது ஆழ்ந்த ஆய்விற்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.

'பெரியார்' வழியில் ஈ.வெ.ரா'வை சிறைபடுத்தி, 'பெரியார்'கட்சிகள் இன்றும் அந்த திசையில், தமிழ்நாடு முன்னேற தடைகளாக,  பயணிப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சையும், மரணமும்.(‘சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்;'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html )

ஈ.வெ.ரா தமது வரை எல்லைகள் (Limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்த தவறை தவிர்த்து, எனது வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், அந்த தடைகளை அகற்றி, தமிழ்நாட்டை மீட்கும் முயற்சியில், ஈ.வெ.ராவைப் போலவே, 'சுயலாப' நோக்கின்றி, நான் பயணிக்கிறேன்.
 '
'அரசியல் நீக்கம்'(depoliticize)  போக்கில், ஆதாய அரசியலில், வேறு வழியின்றி, சமூக ஆற்றலானது, 'தனிநபர்' விசுவாசத்தில், குவிய வாய்ப்புள்ள நபர்களை நோக்கியே, திருப்பு முனை கட்டத்தில் குவியும், என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, எந்தவித முகமூடியுமின்றி, 'நிர்வாணமாக' ஆதாய அரசியல் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'சசிகலா நடராஜன்' என்ற நபரை நோக்கி, 'ஆதாய அரசியல் செயல்நுட்பம்' மூலமாக குவியத் தொடங்கியுள்ளனவா? (http://www.dinamalar.com/news_detail.asp?id=1685437ஆதாய அரசியல் போக்கில், அ.இ.அ.தி.மு.கவும், தி.மு.கவும் வேறுபாடின்றி, ஒரே போக்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளனவா? (http://www.dinamalar.com/news_detail.asp?id=1683787

ஆளுங்கட்சியாக தி.மு.க இருந்து, அதிலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் அ.இ.அ.தி.முகவை தொடங்கிய பின், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக பொது அரங்கில் வெடித்த எதிர்ப்பானது, மீண்டும் இன்று சசிகலா நடராஜனுக்கு எதிராக கிளம்பத் தொடங்கியுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் செய்திகளும் வெளிவந்துள்ளன. (சசிகலா பேனர்கள் கிழிப்பு ; போலீஸ் ஆதரவுடன் மூடி மறைப்பு’’; http://www.dinamalar.com/news_detail.asp?id=1684689

சமூக இயக்கவியலில் (Social Dynamics), நியூட்டனின் மூன்றாம் விதியின் செயல்பாடாக; 

சமூக இயல்பு போக்கில்,  மறைந்த ஜெயலலிதா ஏற்படுத்தியிள்ள 'தனிநபர் விசுவாச அரசியல் வெற்றிடத்தை' நிரப்பும் போக்கில்;

ஜெயலலிதாவை விட அதிகம் படித்துள்ள, சிக்கலான கேள்விகளையும் நிதானமாகவும், பொறுப்புணர்வோடும் தொலைக்காட்சி பேட்டியில் சந்தித்துள்ள, (சதியை மீறி ‘- தீபா பேட்டி ஒளிபரப்பு தடை - தந்தி டிவியின் சதி’’; http://vtube.ge/en/videos/play/V2R2d01taEl2Wms &  - https://www.youtube.com/watch?v=X4Z-YptjKTQ )

ஜெயலதாவின் அண்ணன் மகள் தீபாவை, 'புதிய அரசியல் குவியப் புள்ளியாக்கி' , ஆதாய அரசியலுக்கு எதிரான சமூக ஆற்றல்கள் எல்லாம் குவியத் தொடங்கியுள்ளனவா? (குறிப்பு கீழே)

ஆளுநரை, தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுவதற்காக கூட பார்க்க அனுமதிக்காத, ஆனால் தமக்கு எதிராக சதி செய்ததாக ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அனுமதித்த தவறான போக்கை எதிர்த்து, தமிழ்நாட்டு மக்களையும், சட்டத்தையும் மதிக்காமல், 'மர்மமான'முறையில் அப்பொல்லோவில் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை துவங்கியவுடனேயே, குரல் கொடுக்க தி.மு.க தவறியதால், சசிகலா நடராஜனுக்கு எதிரான சமூக ஆற்றல்களை ஈர்க்கும் 'அரசியல் வலிமையை' தி.மு.க எந்த அளவுக்கு இழந்து வருகிறது? 


'தி.மு.கவின் குடும்ப அரசியலுக்கு எதிராக இயல்பாக வெளிப்பட்ட சமூக ஆற்றலின் மூலம், காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' புத்துயிர் பெற்று வளரத் தொடங்கிய போக்கானது, தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அ.தி.மு.கவை துவக்கி, வளர்ந்த போக்கில், வீழ்ந்தது.' என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2017/01/race-race.html) அதை உலக்குக்கு அறிவித்த திண்டுக்கல் இடைத்தேர்தல் முடிவானது, மீண்டும் அரங்கேற வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பாக விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாத தீபா வின் நிலையோ 'சாண் ஏறி, முழம் சறுக்கின' கதையாகி விட்டது.  அந்த விசாரணை கோரிக்கையை முன்னெடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் செல்வாக்கில், 'சசிகலாவின் எடுபிடியோ'? என்று,  தீபாவை,  'சுயலாப'  நோக்கின்றி ஆதரித்தவர்கள் எல்லாம் சந்தேகிக்கும் அளவுக்கு, தீபா 'செல்லாக்காசாகி' வருகிறார்.

ஓபிஎஸ் தலைமையிலான கட்சியானது உருவாகி, போட்டியிட்டால், வரும் இடைத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறுவது சசிகலா கட்சியா? அல்லது தி.மு.கவா? என்பது மட்டுமே குழப்பமாக இருக்கும், என்பதும் எனது கணிப்பாகும்; மேலே குறிப்பிட்ட 'அரசியல் தவற்றில்' தி.மு.க சிக்கியதால்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதவிற்கே 'மயிரிழையில்'' வெற்றி பெற வேண்டிய அளவுக்கு சவாலை வெளிப்படுத்திய தி.மு.கவானது, திண்டுக்கல் இடைத் தேர்தலில் 'ஸ்தாபன காங்கிரஸ்' பெற்ற இரண்டாவது இடத்தை, வரும் இடைத் தேர்தலில், பெற்றால் வியப்பில்லை.  

'பகுத்தறிவு, தமிழ் உணர்வு, பொதுவுடமை, ஆன்மூகம்' போன்ற முகமூடிகளுடன், சுயநல குவிய போக்கில்,1967க்குப்பின், தமது 'செல்வம், செல்வாக்கு' வளர துணை புரிந்த/புரியும், 'ஊழல் அரசியல்' தலைவர்களுக்கு வெட்கமின்றி மாறி மாறி 'நெருக்கமாகி', அந்த கொள்ளைக்கு கவசமாகி, 'ஆதாய அரசியல் புத்திசாலித்தனத்துடன்' பயணித்தவர்களில் எவருமே; 

தமிழ்நாட்டு மக்களையும், சட்டத்தையும் மதிக்காமல், 'மர்மமான'முறையில் அப்பொல்லோவில் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை துவங்கியவுடனேயும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளை பார்க்க விடாமல் தடுப்பது துவங்கியவுடனேயும், சசிகலா நடராஜனின் 'இணையற்ற எதேச்சதிகார போக்கை' எதிர்த்து குரல் கொடுக்காத அரசியல் தவறின் காரணமாக;

'ஆதாய அரசியல் புத்திசாலித்தனத்தின்' மரண அறிகுறியாக, தமிழ்நாட்டு பொதுவாழ்வில் மக்களால் ஓரங்கட்டப்படும், சமூக சுனாமியில் சிக்கி விட்டார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.  

தமிழ்நாட்டின் மீட்சிக்கு ஒரே வழியான ஊழலற்ற, சாதி, மத பாகுபாடற்ற அரசியல்மய (politicize)  போக்கு உருவாக, துணை புரியும் வகையில்;

சுயலாப நோக்கற்ற சமூகப் பற்றாளர்கள் எல்லாம், வேடிக்கை பார்க்காமல்;

மேலே குறிப்பிட்ட, ஆதாய அரசியலுக்கு எதிரான போக்கில், எவ்வாறு பங்கேற்று, அப்போக்கானது, ஆக்கபூர்வ திசையில், பயணிக்க நாம், நமது அறிவு, அனுபவம் ஆகிய அடிப்படைகளில், எவ்வாறு  பங்களிப்பு வழங்க முடியும்?

என்று நான் யோசித்து வருகிறேன்; 

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பான, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோரிக்கைக்கு, பங்களிப்பு வழங்குவதை, தொடக்கப் புள்ளியாக கருதி. 

புறத்தில் 'நேர்மையானவர்களாக' 'காட்சி' தந்து, அகத்தில் சீரழ்ந்த மேல் நடுத்தர(upper Middle Class), பணக்கார தமிழர்களின் பங்களிப்பின்றி, தமிழ்நாட்டில் ஊழல் அரசியல் கொள்ளையானது, இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும். அத்தகையோர் நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருந்தால்; அவர்களை 'சமூக நோய்க்கிருமிகளாக' கருதி, ஒதுக்கி வாழ்ந்தால் தான்;
 'சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
  சுற்றமாச் சூழ்ந்து விடும்' (திருக்குறள் 451) 
நாம் தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிப்பு வழங்கமுடியும், என்பதை நிரூபிக்கும் வகையில், நான் வாழ்ந்து வருகிறேன்.

“அரசியல் கொள்ளைக்காரர்களை எந்த வகையிலும் 'உரசாமல்' பாதுகாப்பாக, முடியுமானால், வெளியில் தெரியாமல் அவர்களுக்கு நேசமாகி, 'பலன்கள்' அனுபவித்து கொண்டே, அந்த அரசியல் கொள்ளையர்களை தமக்கு நெருக்கமான வட்டத்தில் கேலி செய்தும், கண்டித்தும், அந்த போக்கில் தம்மிடம் ஏமாந்த குப்பன் சுப்பு வீட்டுப் பிள்ளைகளை 'முற்போக்கு', 'புரட்சி' உசுப்பேத்தி 'காவு' கொடுத்து, ஆனால் தமது பிள்ளைகள் ஒழுங்காக படித்தாலும், படிக்கா விட்டாலும், இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ நன்கு செட்டில் செய்து, வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கும், சமூக சீரழிவிற்கும் காரணமான முக்கிய சமூக குற்றவாளிகளா? அதாவது சுயலாப நோக்கற்ற இயல்பான அன்பையும், மதிப்பையும், 'துறந்து', எவரையும் லாபநட்ட கணக்கில் அணுகும் 'சமூக விபச்சாரிகளாக' வாழும், 'சமூக குற்றவாளிகளா' அவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது தமிழ்நாட்டில் சமூக அளவில், ‘சீரழிவு சமூக ரத்த ஓட்டத்தில்’, சமூகத்தில் குடும்பம், கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கட்டமைத்தலில், சீரழிந்த சமூக இழைகளாகவும் (Social Fibers), பிணைப்புகளாகவும் (Social Bonds), மேலே குறிப்பிட்ட நபர்கள் பங்களித்து வருவதானது, இது வரை பொது அரங்கில் அறிவுநேர்மையுடனும், திறந்த மனதுடனும் விவாதிக்கப்படவில்லை என்பதும், அத்தகைய விவாதம் இன்றி மீட்சி இல்லை என்பதும் என் கருத்தாகும். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  
(Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும்’’; http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள், 'தமிழர்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக்குவதே' தனது இலட்சியம் என்று சூளுரைத்தார்.

இன்று தமிழ்நாட்டில் மானமும், அறிவும், சுயமரியாதையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும் விழ போட்டி போட்டு வருபவர்களில், நமக்கு தெரிந்தவர்கள் யார்? யார்? அதை நியாயப்படுத்தி வரும் 'பகுத்தறிவு, பொதுவுடமை' முற்போக்குகள் யார்? யார்?

தமிழ்மொழியின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவில் ஊழல் வகித்து வரும் பங்கினை அறியும் 'பகுத்தறிவின்றி', பெரியார் கொள்கையாளர்களில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? அல்லது அந்த சீரழிவில் 'திரிந்த பகுத்தறிவுடனும்', 'திரிந்த சமூக நீதியுடனும்', 'திரிந்த மனித சமூக கிருமிகளாக' யார்? யார்? பயணிக்கிறார்கள்?

மேற்குறிப்பிட்ட ஆய்விற்கான தொடக்கப்புள்ளியாக, தமிழ்நாட்டில் 'திராவிட' முகமூடியில், 'பொதுவாழ்வு வியாபாரமானது' முளை விடத் தொடங்கியது தொடர்பான, முதல் அபாய எச்சரிக்கையானது, 1948இல் தூத்துக்குடி மாநாட்டில், ஈ.வெ.ரா அவர்களின் உரையில் வெளிப்பட்டது.

‘இந்திய விடுதலைக்குப் பின்,  1948 துத்துக்குடி மாநாட்டில் வெளிப்படுத்திய அபாய எச்சரிக்கையிலிருந்து தாமே சறுக்கி, பின் 1949இல் தி.மு.க உருவான பின், அந்த சறுக்கலில் இருந்து மீண்டு, தி.மு.க.வின் 'ஆதாய தேர்தல் அரசியல்' போக்கினை கடுமையாக எதிர்த்து பயணித்தாலும், ஈ.வெ.ரா அவர்கள், உடல் அளவிலும், மனதளவிலும்  தனது சுயசார்பை (Physically & mentally Independent) இழக்கத் தொடங்கிய போக்கில், அதில் வீழ்ச்சி கண்டு, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பாதக கூறுகளை அடையாளம் கண்டு எச்சரிப்பதிலும் தோற்று, அவமானப்படுத்தப்பட்டார். 1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது. அண்ணா, ஈ.வெ.ரா அவர்களின் மறைவுகளுக்குப்பின், அந்த 'ஆதாய தேர்தல் அரசியல்' சமூக செயல்நுட்பமானது, இரண்டு போக்குகளை அறிமுகப்படுத்தியது.

நேரு குடும்ப வாரிசு அரசியல் நோயில், தி.மு.கவை சிக்க வைத்தது.

'பெரியார்'முகமூடியில், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' போர்வையில், ஊழல் கொள்ளையர்களின் வாலாகி, அரசியல் கட்சியினருக்கு வாய்க்காத 'குறுக்கு வழியில்' (By-Pass) பணம் சம்பாதிக்க‌, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாகி, தமிழ், தமிழர், தமிழ்நாடு சீரழிவிற்கு, 'வினை ஊக்கி'(Catalyst) ஆனது; ('திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட, எனது கண்டுபிடிப்பாகும்)

தி.மு.கவின் குடும்ப அரசியலுக்கு எதிராக இயல்பாக வெளிப்பட்ட சமூக ஆற்றலின் மூலம், 1969க்குப்பின்  காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' புத்துயிர் பெற்று வளரத் தொடங்கிய போக்கானது, தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அ.தி.மு.கவை துவக்கி, வளர்ந்த போக்கில், வீழ்ந்தது. தமிழ்நாட்டில் குடும்ப அரசியலுக்கே எதிரான, அந்த சமூக ஆற்றலே, எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தது வரை, தி.மு.கவை ஆட்சிக்கு வர விடாமல், தடுத்து வந்தது. பின் ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா நடராஜன் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றலே, மீண்டும் மீண்டும் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தியது. அதன்பின் கடந்த‌ ஆட்சியில், குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றலே, மீண்டும் அ.இ. தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தியது; அ.இ.அ.தி.முகவில் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை வீழ்த்தும் சதியில் ஈடுபட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு.

அப்பொல்லோவில்,  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ,இந்திய அரசியல் சட்டத்தையும், சமூக சம்பிரதாயங்களையும்  செல்லாக்காசாக்கி அரங்கேறிய‌, மர்மமான மருத்துவ சிகிச்சையையும், மரணத்தையும் எதிர்த்து குரல் கொடுக்காத’ (‘திராவிடர் இயக்க நூற்றாண்டு: மொழி அடையாள அடிப்படையிலா? மேற்கத்திய 'ரேஸ்'(Race) அடையாள அடிப்படையிலா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/race-race.html

அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும்;

'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத சாதாரண பொதுமக்கள் 'கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்'.

‘ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்த; (Was Sasikala Giving Slow Poison To Jayalalithaa, Tehelka Report Says So; http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html  ) செய்தியானது, தமிழ் மட்டுமே தெரிந்த, ஜெயலலிதாவின் விசுவாசிகளின் பார்வைக்கு போகமல் இருந்திருக்கலாம்.’ (‘தமிழ்நாட்டின் திருப்பு முனையில் நலன்களின் மோதல்;       தண்ணீரில் இருந்து தரைக்கு வந்துள்ள முதலையா சசிகலா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post.html )

இன்றைக்கு அ.இ.அதி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்'   ஜெயலலிதா துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும், 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;

ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட சதிகாரர்கள் ஜெயலலிதா சிசிச்சை பெற்ற அப்பொல்லோ மருத்துவமனைக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்; ஆளுநரையே தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றும் வகையில் முயன்ற போது, பார்க்க கூட அனுமதிக்காத நிலையில்,?

சசிகலாவை சந்தித்து அனுதாபமும், ஆதரவும் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களில் எவராவது மேற்குறிப்பிட்டது தொடர்பாக, விளக்கம் கேட்டார்களா? அவ்வாறு விளக்கம் கேட்காமல் இருந்தால், அவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நீடிப்பதானது, தமிழ்நாட்டிற்கு கேடாகாதா?

என்று 'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத சாதாரண பொதுமக்கள் 'கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்'.

திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் வளர்ந்த வேகத்தில், 'அரசியல் நீக்கமும்', அதன் ஊடே 'ஆதாய அரசியலும்' வளர்ந்து, அதன் தொடர்ச்சியாக மாநிலம் தொடங்கி, மாவட்டம் வரை குடும்ப அரசியலும் வளர்ந்து, அதன் உச்சக்கட்டமாக, கடந்த சட்டமன்ற தேர்தலில், பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளில் 'உள்குத்துகள்'  உச்சமாகி, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் புலம்பியதும் ஊடகங்களில் கசிந்தன. அது போன்ற செய்திகளில்;

முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படுத்திய ஆவேசமானது, எனது ஆய்வு கவனத்தை ஈர்த்ததையும் ஏற்கனவே பார்த்தோம்.

“1967இல் அண்ணா முதல்வரான பின், தனது கட்சியினரின் செயல்பாடுகளால் மனமுடைந்து, மரணமடைய விரும்பியது தொடர்பான தகவலை, ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வர் ஜெயலலிதாவை பிடிக்காதவர்கள் கூட, அவரின் துணிச்சலை பாராட்டியதை நான் அறிவேன்

கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில்,  தமது கட்சியில்,  சுயநல நோக்கில், கட்சி நலனை சீர் குலைத்து, செயல்பட்டவர்கள் தொடர்பாக, 1967இல் முதல்வரான‌ அண்ணாவைப் போல மனமுடையாமல்;

1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயம் தொடர்பாக ஆவேசப்பட்டு, எச்சரித்து, பின் அதிலிருந்து 'பெரியார்' ஈ.வெ.ரா, அந்த ஆவேசத்திலிருந்து, வழுக்கியது போல வழுக்காமல், ஜெயலலிதா துணிச்சலுடன் தனது ஆவேசத்திலிருந்து வழுக்காமல்;

அந்த நோயிலிருந்து, தமது கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்?  என்பது இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்; அதே சிக்கலை சந்தித்துள்ள எதிர் கட்சிகளும் ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் .

'அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்கில், 'தமக்கென்ன லாபம்?' என்ற எதிர்பார்ப்புள்ளவர்களின் ஆதிக்கத்தில்,  அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சிக்கியுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா தமது முயற்சியில்  வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் திருப்பு முனையாக, அமைய வாய்ப்புள்ளது.” ('பெரியார்' ஈ.வெ.ராவின் ஆவேசமும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசமும்''; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_20.html)

ஆனால் முதல்வர் ஜெயலலிதா மேலே குறிப்பிட்ட முயற்சியில், வெற்றி பெறாமலும், தோல்வியடையாமலும், மர்மமான கேள்விகளுடன் மரணமடைந்து விட்டார்.

அந்த மர்மமான கேள்விகளுக்கு, பாரபட்சமற்ற விசாரணை மூலம், விடைகள் வெளிவரும்போது,

மேலே குறிப்பிட்ட முயற்சியில், தனது மரணம் ஏற்படுத்திய நெருக்கடி வழியாக, ஜெயலலிதா வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது.

அந்த வெற்றியானது, ஊழல் பேர்வழிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் போக்கின் தொடக்கமாகவே அமையும். 

'தமிழ்நாட்டின் மீட்சிக்கு ஒரே வழியான ஊழலற்ற, சாதி, மத பாகுபாடற்ற அரசியல்மய (politicize)  போக்கு' என்பதானது திடீரென்று வானத்தில் இருந்து குதித்து விடாது;

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்; அரங்;65) என்ற இயற்கை விதியின்படி;

அரசியல் நீக்கத்தில் வளர்ந்துள்ள  'தனிநபர்' விசுவாச போக்கில் உள்ள முரண்பாடு கூறுகளில்;

ஆக்கபுர்வமான கூறுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வமாக பயணிக்க, நமது சமூக பங்களிப்பை நெறிப்படுத்த கிடைத்துள்ள வாய்ப்பே, ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டுள்ள 'புதிய பரிமாண' சமூக ஆற்றல்களும் ஆகும்

'ஜெயலலிதாவின் மர்ம மரணம்' தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கான அழுத்தமானது;

'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத சாதாரண பொதுமக்களிடமிருந்தும், உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகளிடமிருந்தும் பெருக்கெடுத்து வருவதால்.

அந்த வெற்றி கிடைக்கும் போது;

1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே,

2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் என்பதும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதி மூலமாக‌, தமிழ்நாட்டின் விடியல் தொடங்கியது என்பதும் வரலாற்றில் இடம் பெறும்.

எனவே மறைந்த ஜெயலலிதாவிற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டில் ஊழல் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு கிடைக்கும் மரணமாக முடியும்; 'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத, நமது சமூக பங்களிப்பை தாமதமின்றி நிறைவேற்றும்போது.

குறிப்பு: அப்பொல்லோவில் ஜெர்யலலிதாவை பார்க்க விடாமல் தடுத்த போது, ஆளுநரை சந்தித்து புகார் கொடுக்காதது; ஜெயலலிதா மரணமடைந்தவுடன் சி.பி.ஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மனு கொடுக்காதது; உள்ளிட்ட இன்னும் பல தவறுகள் காரணமாக, தீபா தமிழ்நாட்டு மக்களின் ஏளனத்திற்குள்ளாகி; 'அரசியல் வெற்றிடம்'  வலிமை பெற பங்களித்துள்ளார்.

No comments:

Post a Comment