Sunday, August 30, 2020


1967 முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்'(1);


குணமாக்கும் 'சமூக மருத்துவர்களாக' நாம்?



'ஒரு சமூகத்தில் வெளிப்படும் சமூக ஊமைக்காயங்களை முளையிலேயே கண்டறிந்து, உரிய 'சமூக மருத்துவ சிகிச்சை' மூலமாக குணமாக்காததன் விளைவாக‌, அது இன்னும் மோசமான சமூக ஊமைக்காயங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கியதா?' என்ற ஆராய்ச்சியின் மூலமே, 1967 முதல் சமூக ஊமைக்காயங்களின் பாதுகாவலர்களாகப் பயணித்த 'யோக்கியமான'(?) சமூகக்கிருமிகளை அடையாளம் காண முடியும். அவ்வாறு அவர்களை அடையாளம் கண்டால் தான், 1967 முதல் முளை விட்டு   வளர்ந்து, தமிழின் தமிழர்களின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் சமூகக் காயங்களை எல்லாம் உரிய சமூக மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணியையும் தொடங்க முடியும்.

த‌மது குடும்பப்பிள்ளைகள் எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைத்த 'தமிழ் ஆதரவு அமைப்புகளின் யோக்கியர்கள்' எவருக்கும், இன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி மூலம் ஏழைத்தமிழர்களும், அந்த 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களைப் போலவே பலன் பெற அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் குறை கூற முடியுமா? தி.மு.கவைப் போல இரட்டை வேடப் போக்கில் சிக்காமல், ,,அ.தி.மு.க பயணித்து வருவதால் தான், இந்த நெருக்கடியானது, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியே தொடர்ந்திருந்தால், இது போன்ற ஏழைத்தமிழர்களையும் முன்னேற்றும் முயற்சிகள் இன்றி, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களின் ஆதரவுடன் தமிழ்வழியிலேயே அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு தமிழ்வழிக்கல்வியின் எனவே தமிழின் மரணம் நிச்சயமாகி இருக்கும்.

தமிழ் செய்த புண்ணியம் காரணமாக, அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகமாகி, கொரொனாவின் விளைவாக தனியார்ப்பள்ளிகளில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் மூலமாக, மேற்குறிப்பிட்ட நெருக்கடியானது, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது 

மேற்குறிப்பிட்ட நெருக்கடி மூலமான‌ சமூக மருத்துவம் மூலமாக, 1967-இல் முளை விட்டு இன்று தமிழக முதல்வரையே காவு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட சமூக ஊமைக் காயங்களை எல்லாம் குணமாக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்களின் அதிவேக வளர்ச்சியின் முடிவாக, தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறுவதற்கு அதிக காலம் ஆகாது.

1967இல் முளை விட்டு இன்று தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றும் அளவுக்கு அச்சுறுத்தி வரும் சமூக ஊமைக்காயங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஊமைக்காயம் : முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம்.

சமூக ஊமைக்காயம்: அதிகார பலத்தின் முரட்டடியால் சமூக வெளியில் காயம் தெரியாது உண்டாகும் சமூக உள்வீக்கம்

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமானது ஏன் 1968 வரை நீடித்தது? காங்கிரஸ் ஆட்சியைப் போலின்றி, தி.மு.க ஆட்சியில் எவ்வாறு அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒடுக்கப்படது? என்பது தொடர்பான உண்மைகளே,1967இல் முளை விட்ட சமூக ஊமைக் காயத்தினை அடையாளம் காட்டும்.

'மாணவராக 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் (தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து, திருச்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரே மாணவர் தலைவர்) கலந்து கொண்டவன் நான்.
(‘நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ள‌ யோக்கியதை?’; 

1965க்குப்பின், 1966 முதல் 1967 வரை கல்லூரிகள் கோடை விடுமறைக்குப்பின் திறக்கப்பட்டதும், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே கல்லூரிகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கும். பின் காலவரையறையின்றி கல்லூரிகள் மூடப்படும். பின் திறந்ததும் தேர்வுகளை மனதில் கொண்டு போராட்டம் தொடராது. அந்த சூழலில், 1968இல் கோடை விடுமறைக்குப்பின் திறக்கப்பட்டதும், திருச்சி மன்னார்புரத்தில் இருந்த சமால் முகம்மது கல்லூரி மாணவர்களுக்கான தனியார் மாணவர் விடுதியில் ('Bird’s Lodge’ எனது ஞாபத்தின்படி)  நானும் கலந்து கொண்ட அனைத்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது நான் St.Joseph’s College’-இல் B.Sc     மூன்றாம் ஆண்டு மாணவன்.

"ஒவ்வொரு வருடமும் கல்லூரி திறந்தவுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குகிறோம். காலவறையற்ற விடுமுறை. பின் கல்லூரி திறந்தவுடன் தேர்வுகளுக்காக போராட்டத்தை நிறுத்தி விடுகிறோம். தி.மு.க ஆட்சியில் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் இந்தித் திணிப்பை ஒழிக்காது. எனவே மத்திய அரசு நம் கோரிக்கையை ஏற்கும் வரையில், தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். முடியாதெனில், இந்தியை ஏற்றுக்கொள்வோம்." என்று எனது கருத்தினை அந்த உரையாடலில் தெரிவித்தேன். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு 'மத்திய அரசு நம் கோரிக்கையை ஏற்கும் வரையில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து, கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்.' என்று . முடிவு செய்தார்கள். "எனது கல்லூரியில் இருந்து மாணவர்கள் போராட வர மாட்டார்கள். நான் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்தேன். பின் மறுநாள் போராட்டத்தில் தீ வைத்து கொளுத்த இந்தி (வைக்கோல்) உருவ பொம்மையை உருவாக்க துணை புரிந்து விட்டு, இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்பினேன். 

இரவு 12 மணியளவில்  St.Joseph’s College பணியாளர்கள் நான்கைந்து பேர் வந்து கதவைத் தட்டினார்கள். நான் திறந்தவுடன் அவர்களின் முகத்தில் அச்சம் கலந்த அதிர்ச்சி. என் தந்தையைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பின் அவரை எழுப்பியவுடன், அவரை தனியாக வரச்ச்சொல்லி அவரிடம் பேசினார்கள். அதே நேரத்தில் சுமார் 15 தி.மு.க அதரவு மாணவர்கள் சைக்கிளில் என் வீட்டிற்கு வந்தார்கள். நான் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடினேன். "கழக ஆட்சி வந்து விட்டது. அதற்கு கெடுதல் செய்யும் போராட்டத்தை நீ எவ்வாறு ஆதரிக்கலாம்?" என்று கேட்டார்கள். நான் எனது நிலைப்பாட்டினை விளக்கினேன். அப்போது சமால் முகம்மது கல்லூரியில் ஆணழகன் போட்டியில் வென்ற மாணவர் (காட்டூர் கோபால் எனது நினைவின் படி) "நண்பராக பழகி விட்டதால் யோசிக்கிறேன். இல்லையென்றால், வேறு மாதிரியாகியிருக்கும்' என்று அன்பு கலந்த எச்சரிக்கையுடன் பேசினார். அவரது கல்லூரி மாணவர்கள் போராடவில்லையென்றால், நான் மட்டும் தனித்து போராட முடியுமா?" என்றேன். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றார்கள். என் தந்தையைப் பார்க்க வந்தவர்களும் சென்று விட்டார்கள்.

பின் என் தந்தை என்னிடம் 'உனது தலைமையில் நாளை மாணவர்கள் போராடப் போவதாக போலீஸிலிருந்து உனது கல்லூரிக்கு தெரிவித்து உன்னை ஒரு வாரத்திற்கு வெளியூருக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்" என்று சொன்னார். நான் நடந்த உண்மைகளைத் தெரிவித்தேன். என் தந்தை என்னைக் கண்டிக்காதது எனக்கு வியப்பானது. "ஒரு வாரம் நீ கல்லூரிக்குப் போக வேண்டாம்" என்று மட்டும் கேட்டுக்கொண்டார். மறுநாள் போராட்டம் முளையிலேயே கிள்ளப்பட்டது. காலை சுமார் 11 மணியளவில், எனது கல்லூரி நண்பர் துரைப்பாண்டியன் எனது வீட்டிற்கு வந்தார். "உன்னை சஸ்பெண்ட் செய்து விட்டதாக கல்லூரியில் பேசுகிறார்கள். நான் கல்லூரி வாயிலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். 'அதனால் ஏதும் பலன் வராது. நீ ஒழுங்காக கல்லூரிக்கு போ" என்று அறிவுறுத்தினேன். பின் என் தந்தை முதல்வரை சந்தித்து, "என் பையனை கல்லூரியில் அனுமதியுங்கள். இல்லை சஸ்பென்சன் ஆர்டர் கொடுங்கள்" என்று கேட்ட பின்னர், ஒரு வாரத்திற்குப் பின் நான் கல்லூரி சென்றேன்.

பள்ளியில் கல்லூரியில் தி.மு.க ஆதரவு மாணவராகப் பயணித்த எனக்கு ஏற்பட்ட சமூக ஊமைக்காயம் அதுவாகும். பின்னர் படிப்பு முடித்து, 1971 ஆகஸ்டில் பாளையங்கோட்டையில் St.Xavier College-இல் பணியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியின் முத்த பிராமணப் பேராசிரியரை அவர் வீட்டின் முன் ஒரு இன்ஸ்பெகடர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார். மறுநாள் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஊர்வலமாக பாளையங்கோட்டை காவல் நிலையம் நோக்கி சென்றோம். அந்த இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே கோரிக்கை. சரியான வெயிலில் சாலையில் நின்றோம். எதிரே கோட்டையின் (FORT) காவல் நிலையம் இருந்தது. திடீரென கோட்டையில் இருந்து சரமாரி கற்கள் எங்கள் மீது விழ, அனைவரும் கலைந்து சென்றோம். 'அமைதியாக இருந்ததால் தான் எங்களைத் தாக்கினார்கள். எனவே நீங்கள் தனியாக போராடுங்கள்.நாங்கள் தனியாகப் போராடுகிறோம்' என்று சொல்லி, மாணவர்கள் முதலில் தாமிரவருணி பாலம் அருகே இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றர்கள்.

சுமார் 1 மணி நேரம் கழித்து ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்றோம். தாமிரவருணி பாலம் நெருங்கிய போது, வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் ஒரு அரசுப் பேருந்தில் கண்ணடிகள் உடைக்கப்பட்டு அனாதையாக நின்றது. பாலத்தின் கீழே தண்ணீரில் சிலர் மூழ்கி எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்குவதற்குள், நனைந்த ஆடைகளுடன் சுமார் 15 மாணவர்கள்  மாணவர் சடலத்துடன் கோரமான அழுகுரலுடன் வந்தார்கள். அன்றில் இருந்து சுமார் 3 நாட்கள் காவலர்கள் ஊரில் நடமாட பயந்தார்கள். அந்த அளவுக்கு சாதி மத கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய அரசின் மீதும் போலீஸ் மீதும் கோபம் வெடித்தது. மூன்று நாட்கள் கழித்து, மார்க்கெட்டில் போலீஸ் வேன் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. வேனில் இருந்து அவசரமாக காவலர்கள் இறங்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் தவறுதலாக குண்டடிப்பட்டு வயதான காவலர் இறந்தார். அதன்பின் தான் மேற்குறிப்பிட்ட கோபம் தணிந்தது. நான் அனுபவித்த இரண்டாவது சமூக ஊமைக்காயம் அது. 

அதே காலக்கட்டத்தில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த St.Joseph’s College-இன்   கிளைவ் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்களின் கை கால்கள் உடைந்தன. அந்த விடுதியில் இருந்து கல்லூரி செல்லும் வழியில் ஒரு ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் துணைவி (?) குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் இருந்த ஒரு இளம்பெண்ணை மாணவர்கள் சிலர் கேலி கிண்டல் செய்ததால், அந்த முக்கிய புள்ளியின் தூண்டுதலால் அந்த தாக்குதல் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் படித்த கல்லூரியின் மாணவர்கள் அவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதானது நான் அனுபவித்த மூன்றாவது சமூக ஊமைக்காயம்.

அதே காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி 'டாக்டர்' பட்டம் வாங்க, அநியாயமாக அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் பலியாகி, 'இறந்தது என் மகனல்ல' என்று அவரின் தந்தையை நீதி மன்றத்தில் சொல்ல வைத்த அநியாயம் அரங்கேறியது. தமிழ்நாட்டில் நேர்மையாகவும் பிறரின் துயரை 'ஏம்பதைஸ்' (Empathise: understand and share the feelings of another) மூலமாக உணர்ந்தும் வாழ்பவர்கள் சமூகக் காயங்களை தொடர்ந்து அனுபவிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. ஆதாய அரசியலே திராவிட அரசியலாக வேகமாக வளர்ந்தது.

தி.மு.கவின் ஆதாய திராவிட அரசியலின் சமூக முதுகெலும்பாக பல 'யோக்கியத் தமிழர்கள்' (?) வளர்ந்தார்கள். 

இன்றுள்ள கல்வி முறையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாண‌வர்கள் படிக்கும் போதோ, படித்த பின் பணியாற்றுகையிலோ, எந்த அநீதியையும் எதிர்க்காமல், மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்றைய கல்விமுறையில் உள்ள சமூக உளவியல் பாதிப்பும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்கள் திராவிட அரசியலின் ஆதரவாளர்களாகப் பயணித்ததும், தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst)  வெளிப்பட்டுள்ளது.

எந்த சேதாரமும் இன்றி தமது குடும்பங்களை மட்டும் பாதுகாப்புடன் வளர்ந்துக் கொண்டு, சமூக ஊமைக்காயங்களை உணரமுடியாத சுயநல மனித மிருகங்களாக (insensitive selfish human animals) அத்தகையோர் அம்பலமாகாமல் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள். திராவிட ஊழல் பிதாக்களைப் புரவலர்களாகக் கொண்டு பயணித்து வரும் 'பெரியார்' மற்றும் 'தமிழ்த்தேசிய' கட்சிகளின் பாராட்டுதல்களும் அவர்களுக்கு போனசாகி வருகிறது.‌

ஒழுக்கக்கேடான (immoral) மற்றும் சட்டவிரோத (unlawful) வழிகளில் உருவான அதிவேகப் பணக்கார சமூகக்கிருமிகளுக்கு, மேற்குறிப்பிட்ட 'யோக்கியர்களின், அவர்களைப் பாராட்டிய கட்சிகளின் துணையுடனேயே, தமிழ்நாட்டில் (சாமான்யர்கள் கேலி பேசும்) 'மரியாதை பிம்பம்' ஏற்பட்டுள்ளது.

அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகளை எல்லாம் ஆதரித்த யோக்கியத் தமிழர்களின்’(?) குடும்பங்களில் ஏன் அது போன்ற தற்கொலை இன்றுவரை நடக்கவில்லை
(‘தமிழ்நாட்டில் 'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு'    (Dravidar/Tamizhar Social Blue Whale Game) ?’; 
https://tamilsdirection.blogspot.com/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html)

அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம்,  நான் மனசாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.
(‘தாய்மொழி அடையாளச் சிதைவுக்கும், 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியால் விளைந்த தற்கொலைகளுக்கும், தொடர்பு இருக்கிறதா?’; 

ஆதாய அரசியல் ஒழியாதது வரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயிரிழந்த உதயகுமார், திருச்சி கிளைவ் விடுதியில் காவல் துறைக் கண்மூடித் தாக்குதலில் கை, கால் உடைந்த மாணவர்கள், அச்சுறுத்தலுக்கும் கொலைக்கும் இலக்காகி சொத்தை இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், சத்யம் தியேட்டர்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர், நிர்மலாதேவியிடம் சிக்கிய மாணவிகள், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, போன்ற இன்னும் பல எண்ணிலடங்காத கொடுமைகளை நேற்றும், இன்றும், நாளையும் சந்திப்பதிலிருந்து தமிழ்நாடு தப்பிக்க முடியாது. 'தன்மானம்' என்ற கோமணம் இழந்து, ஊழலுடனும், ஆதாய அரசியலுடனும் ஒட்டிப் பயணித்தவர்களும், பயணிப்பவர்களும் மேற்குறிப்பிட்ட கொடுமைகளின் 'கூட்டுப்பங்காளி குற்றவாளிகள்' ஆவார்கள்.

கருணாநிதியின் குடும்ப அரசியல் நலன்களுக்காக வளர்ந்த சமூக ஊமைக்காயங்கள் எல்லை மீறி போகவே, இயற்கையின் போக்கில் எம்.ஜி.ஆர் மூலமாக அந்த குடும்ப அரசியல் வீழ்ந்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் ஜெயலலிதாவின் பலகீனம் காரணமாக சசிகலா குடும்ப அரசியல் தோன்றியது. அது கருணாநிதியின் அறிவியல் ஊழலை விஞ்சியது. எனவே குடும்ப அரசியல் நலன்களுக்காக வளர்ந்த சமூக ஊமைக்காயங்கள் எல்லை மீறி முதல்வர் ஜெயலலிதாவையே காவு வாங்கியது. இனி இயற்கையின் போக்கில் சசிகலா குடும்ப அரசியல் வீழ்வதை எவரும் தடுக்க முடியாது;

சசிகலாவுக்கு நெருக்கமான சீமான், நல்லக்கண்ணு, நல்லக்கண்ணுக்கு நெருக்கமான ஊழல் ஒழிப்பில்(?) பிரபலமான சகாயம் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டு எவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தாலும். (குறிப்பு கீழே)

இரண்டு குடும்ப அரசியலின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஆட்சி இன்று நடக்கிறது.

ஊழலற்ற ஆட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கருணாநிதியின் குடும்ப அரசியல் நலன்களுக்காக கலைக்கப்பட்டது. அதனால் எதிர்க்கட்சியும் தமக்கான பங்கு பெற்ற, பகுதி ஊழலில்  சிக்கிய‌ எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ்நாடு பயணிக்க நேரிட்டது. அது போலவே இன்று அ.இ.அ.தி.மு.க ஆட்சி பயணிக்கிறது. 

பிரதமர் மோடி பார‌பட்சமின்றி ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமாகவே, இன்றுள்ள ஆட்சியும் எம்.ஜி.ஆர் தொடங்கிய ஊழலற்ற ஆட்சியாக மாற வேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். தமிழக பா.ஜ.கவில் திராவிட ஊழல் பாதுகாப்பு கவசங்களும் செல்லாக்காசாகும்.

ஆனால் எளிதாக செய்திருக்க வேண்டிய பணியை, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், எவ்வாறு பிரதமர் மோடி சிக்கலைக் கூட்டிக் கொண்டார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

எனவே சுயலாப நோக்கற்று தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை விரும்பும் தமிழர்கள் எவ்வாறு தனிமனித இராணுவமாக மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்க முடியும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

1967 முதல் இன்று வரை அரங்கேறியுள்ள சமூக ஊமைக்காயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நமது குடும்பத்தினரே என்று 'ஏம்பதைஸ்' பண்ணுவதானது, அம்முயற்சிக்கான உத்வேகத்தைத் தரும், என்பதும் எனது அனுபவமாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு குடும்ப அரசியலின் ஆதரவாளர்கள் எவரும் நமது சமூக வட்டத்தில் இருந்தால், அவர்களை திருத்த வேண்டும். திருந்த மறுப்பவர்களை எல்லாம், இழப்புகளை விரும்பி ஏற்று, நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றத் தொடங்கிய பின், எனது சமூக வலிமையானது அதிகரித்து வருவதும் நம்ப முடியாத அதிசயமாகும்.

மேலும் கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமையைக் கூட்ட வேண்டும். அதற்கு நாம் தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும். தீய எண்ணங்களுடன் வாழ்பவர்களின் வாடையின்றி வாழ வேண்டும். அவ்வாறு வாழத் தொடங்கினால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமை கூடுவதுடன், நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளைப் படைக்கும் வாழ்க்கையில், திட்டமிடாமலேயே, இயற்கையின் போக்கில் நாம் பயணிப்போம். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/immunity.html)

எனவே தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட தனிமனித இராணுவங்கள் எல்லாம், கட்சி கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் 'சமூக மருத்துவர்' ஆகி, 1967 முதல் இன்று வரை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கி, தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க முடியும்.

தமிழத்துவாவைச் சரியாக உள்வாங்கிய இந்துத்வாவே, மேற்குறிப்பிட்ட சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கும் 'சமூக மருந்தாக' எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. அதனை அறிவுபூர்வமாக விவாதிப்பதையும் நான் வரவேற்கிறேன்.

சமஸ்கிருதம் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளத்தை உள்ளடக்கிய இந்துத்வாவே இந்தியாவில் 'தேச கட்டுமானத்தை' (Nation Building) வலுவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில்;

வளர்த்தெடுப்பதே,  'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' ஆகும். 
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

'கந்த சஷ்டி கவசம் சர்ச்சை' மூலமாக இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டம்' அம்பலமாகி வருகின்றன
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html)

இரண்டு வகை கறுப்பர் கூட்டங்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமமானவையாகும். எஞ்சியவை கருணாநிதி குடும்ப அரசியலில் சங்கமம் ஆனவையாகும். மேற்குறிப்பிட்ட இலக்கில் பெறும் வெற்றியின் மூலமாக, அவை சமூகக் குப்பையாக ஒதுங்கப் போவதும் நிச்சயமாகி வருகிறது.

வெற்றி நமதே. வெற்றி வேல். வீர வேல்.



குறிப்பு:
நல்லக்கண்ணு தனிமனித அளவில் நேர்மையாளராக இருந்தாலும், சசிகலா குடும்பத்தின் அராஜகங்களை எதிர்க்காமல், அக்குடும்பத்திற்கு நெருக்கமாகி தமது சமூக நேர்மையைக் கேள்விக்குறியாக்கியவர் ஆவார். மக்கள் பாதை' அமைப்பு சார்பில் சகாயம் ஐ.ஏ.எஸ் நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி கவுரவித்தது ஊழல் ஒழிப்புக்கு சாதகமா? பாதகமா?

Saturday, August 29, 2020


'கல்லூரி மாணவ-மாணவிகளின் அரியர் பாடங்கள் அனைத்தும் பாஸ்'


வரவேற்க வேண்டிய அறிவிப்பும், எதிர்க்கட்சித் தலைவரின் அபத்தமான கோரிக்கையும்



'23 அரியரில் பாஸ்: முதல்வருக்கும், கொரோனாவுக்கும் திருச்சி மாணவர் நன்றி

என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்வரும் செய்தியானது எனது கவனத்தினை ஈர்த்தது.

மாணவர் சஞ்சய்நேரு கூறியது:முதலாம் ஆண்டில் முதல் செமஸ்டரில் ஒரு அரியர் பேப்பரும், 2-வது செமஸ்டரில் 5 அரியர் பேப்பரும் இருந்தது. 2-ம் ஆண்டில் 3-வது செமஸ்டரில்-5, 4-வது செமஸ்டரில்-6, 3-ம் ஆண்டில் 5-வது செமஸ்டரில்-6 என மொத்தம் 23 அரியர் இருந்தது. மேலும் அத்தனை அரியர் பாடங்களை மீண்டும் எழுதும் நோக்கில் கட்டணமும் செலுத்தினேன்.

இந்த நிலையில்தான் முதல்வர் பழனிசாமி, கல்லூரி மாணவ-மாணவிகளின் அரியர் பாடங்கள் அனைத்தும் பாஸ் என அறிவித்தார். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்கு காரணமான கொரோனாவுக்கும் நன்றி. இனி இறுதியாண்டில் எப்படியாவது எஞ்சிய செமஸ்டர் பாடங்களை நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 23 அரியரில் பாஸ்: முதல்வருக்கும், கொரோனாவுக்கும் திருச்சி மாணவர் நன்றி

'இனி இறுதியாண்டில் எப்படியாவது எஞ்சிய செமஸ்டர் பாடங்களை நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன்.' என்பதை மேற்குறிப்பிட்ட மாணவர் நிரூபித்தால் வியப்பில்லை.

பொதுவாக நிறைய அரியர்கள் வைத்துள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் புத்திசாலிகள் என்பது எனது அனுபவமாகும். 

நான் 1960களின் பிற்பகுதியில் திருச்சி St.Joseph’s College- இல் நான் M.Sc (Physics) படித்த போது,  அதே கல்லூரியில்  M.Sc (Maths) படித்த மாணவரின் பின்னணியை நான் அறிவேன்.  PUC-இல் முதல் முறை பெயில் ஆகி, மீண்டும் தேர்வு எழுதி பாஸானவர். B.Sc-இல் முதல் முறை பெயில் ஆகி, மீண்டும் தேர்வு எழுதி பாஸானவர். அவரது அண்ணன் வங்கியில் சீனியர் மேனேஜர். 'எனக்கு   M.Sc  St.Joseph college-இல்  சேர்த்து விடு. நான் பாஸ் பண்ணி காண்பிக்கிறேன்' என்று சவால் விட, அன்று வழக்கில் இருந்த துணைவேந்தர் கோட்டா மூலம் M.Sc- இல் சேர்ந்தவர் அவர். 

M.Sc (Physics) முதலாண்டு பாடங்களுக்கு முதலாண்டில் தேர்வு, இரண்டாவது ஆண்டு பாடங்களுக்கு 2ஆம் ஆண்டில் தேர்வு இருந்தது. ஆனால் M.Sc (Maths)-இல் எல்லா பாடங்களுக்கும் இரண்டாவது ஆண்டில் தான் தேர்வு. எனவே பாஸாவதே கடினமாகும். ஆனால் அந்த மாணவர் M.Sc (Maths) First Class-இல் தேர்வானார். அந்த அளவுக்கு இரண்டு வருடமும் கடினமாக உழைத்துப் படித்தார். அவரின் P.U.C & B.Sc performance அடிப்படையில் அவரை முட்டாள் என்பதா?  M.Sc அடிப்படையில் புத்திசாலி என்பதா? 

சில ஆண்டுகளுக்கு முன், என்னுடன் தங்கி இருந்த மேல்நிலைப்பள்ளி C.B.S.E முதலாம் ஆண்டு மாணவன், அவன் பாடப்புத்தகத்தில் 3 பக்கங்களில் இருந்த C++ programme தேவையில்லாமல் நீண்டது என்று சொல்லி, தானாகவே ஒரு பக்கத்தில் அடங்கும் C++ programmeஐ கணினியில் enter செய்து,  Result காண்பித்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான். ஆனால் பள்ளியில் முதலாண்டு பெயில். மீண்டும் வேறொரு பள்ளியில் படித்தான். குறைந்த மதிப்பெண்களுடன் பாஸ். ஆனால்  நுழைவுத் தேர்வில் தேர்ச்சிக்கான அளவுக்கு மேல் மதிப்பெண் எடுத்தும், தேர்வில் மாணவர் சேர்க்கைக்காக விதித்திருந்த C.B.S.E மதிப்பெண் இல்லாததால் IIT, NIT போன்ற இடங்களில் சேர முடியவில்லை.

தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில்  15 அரியருடன் இருந்தவர் இப்போது அரசு அறிவிப்பால் பாஸ்.

மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்கள் நிறைய அரியருடன் இருப்பதை நானறிவேன். எனவே அரசின் அறிவிப்பால், கல்வியின் தரம் கெடும் என்ற வாதம் தவறு ஆகும்.

பொறியலில் 'civil, mechanical, electrical, ECE, etc'  படித்து, பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள். ஐ.டி வேலைக்குப் போன மாணவர்களுக்கு அவர்கள் படித்த படிப்பாலும் தேர்வு மதிப்பெண்களாலும் அந்த வேலைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஐ.டி நிறுவனங்கள் நடத்திய தேர்வுகளிலும் நேர்க்காணலிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை கிடைக்கிறது.

இப்போதுள்ள பொறியியல் கல்வி முறையில் தேர்வுகளே தேவையில்லை. இன்றுள்ள வேலைவாய்ப்புகளுக்கும் அடுத்து வர உள்ள வேலைவாய்ப்புகளுக்கும் பயிற்றுவிக்குமாறு மாற்றினால், வருகைப்பதிவும் தேவையில்லை. வேலைக்குப் போகும் ஆர்வமுள்ளவர்கள் விருப்பம் இருந்தால் பயில்வார்கள். நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்காகவே பயிற்சி பெறுவார்கள். வருகைப்பதிவும் தேவையில்லை. தேர்வுகளும் தேவையில்லை. சரக்குள்ளவர்களே ஆசிரியர்களாக இருக்க முடியும். இன்றுள்ள வருகைப்பதிவு, தேர்வுகள் முறை எல்லாம், சரக்கிலாதவர்கள் அம்பலமாகாமல் ஆசிரியர்களாகப் பணியாற்ற உதவுகிறது.

தாம் சேரும் வேலைக்கு தேவையற்ற, தமக்கும் ஆர்வமற்ற படிப்புகளை படிக்க வைக்கும் கல்வி முறையால் எவ்வளவு பணம், மனித நேரங்கள், மனித ஆற்றல் விரயமாகிறது? அவற்றை வேறு ஆக்கபூர்வமான வழிகளில் செலவழிக்க வழி செய்வது தானே புத்திசாலித்தனம். அந்த திசையில் நமது கல்வி முறையை மாற்ற, எந்த அளவுக்கு புதிய கல்விக் கொள்கையானது ஒரு பாலமாகும் அமையும்? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

அடுத்து கீழ்வரும் செய்தியானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நானறிந்தது வரையில், கீழ்வரும் மாணவர்களே செமஸ்டர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தாதவர்களாக இருப்பார்கள்.

வருகைப்பதிவு இல்லாதவர்கள் அல்லது மரணித்தவர்கள்;

வருகைப்பதிவு இல்லாதவர்களில், அந்த செமஸ்டரில் படிப்பை கை விட்டு வேலைக்கு சென்றவர்களும் இருக்கக்கூடும். அல்லது குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையிலும் இருக்கக்கூடும்.

ஸ்டாலினின் கோரிக்கை ஏற்கப்பட்டால், மேற்குறிப்பிட்டவர்களும் 'தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும்'.

அது மட்டுமல்ல, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும், முதல்வரும் உச்சநீதி மன்ற ஆணைப்படியும், உயர்க்கல்விக்கான அமைப்புகளின் வழிகாட்டுதலின்படியும், மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார்கள். கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் அந்த சலுகையை நீட்டிக்கும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது. மேற்குறிப்பிட்ட காரணங்களால், அவ்வாறு நீட்டிப்பதானது சட்டச்சிக்கலை ஏற்படுத்தும் அபத்தமான விளைவில் முடியும்.

'முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கு பயனளிப்பதாக இல்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.' என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்திருப்பதானது, சமூக வலைதளங்களில் அவரை கேலிக்குள்ளாக்காதா?

நான் கடந்த கால அனுபவத்திற்கு ஒரு உதாரணமும், நிகழ்கால அனுபவத்திற்கு ஒரு உதாரணமும் மேலே குறிப்பிட்டுள்ளேன். இது போல பல உதாரணங்கள் எனது சுமார் 40 வருட கல்லூரி ஆசிரியர் அனுபவத்தில் உண்டு.

மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வர, இப்போதுள்ள கல்வி முறையும் தேர்வு முறைகளும் தோற்று விட்டன, என்பது எனது அனுபவமாகும்.

உலகில் தர வரிசையில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி முறையுடனும், வருகைப்பதிவு மற்றும் தேர்வு முறையுடனும் ஒப்பிட்டால்,  மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வர நமது கல்வி முறை எவ்வாறு தோற்று வருகிறது? என்பது தெளிவாகும். 

அதுமட்டுமல்ல, இன்றுள்ள கல்வி முறையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாண‌வர்கள் படிக்கும் போதோ, படித்த பின் பணியாற்றுகையிலோ, எந்த அநீதியையும் எதிர்க்காமல், மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்றைய கல்விமுறையில் உள்ள சமூக உளவியல் பாதிப்பும் ஆய்விற்குரியதாகும்.

Wednesday, August 26, 2020


அழுகிய கழகங்களால் அழுகும் தமிழக பா.ஜ.க (4)


தமிழக பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிப்ப‌து இயற்கையின் தண்டனை ?



2014இல் மோடி பிரதமரானது, எவ்வாறு இந்தியாவிற்கு நல்லதாகவும், தமிழ்நாட்டிற்குக் கெடுதலாகவும் ஆனது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

பிரபாகரனின் விடுதலைப்புலிகளின் முட்டாள்த்தனத்தால், இலங்கையின் ஆட்சி ராஜபட்சே குடும்பத்திடம் சிக்கியது.

எனது தலைமுறையானது தி.மு.கவின் கவர்ச்சித்தமிழில் ஏமாந்ததால், தமிழ்நாடானது கருணாநிதியின் குடும்ப ஆட்சியில் சிக்கியது. ஆனால் தி.மு.கவில் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களால், அதில் இருந்து எம்.ஜி.ஆர் மூலமாகத் தப்பித்தது தமிழ்நாடு.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின், சசிகலா குடும்ப ஆட்சியில் தமிழ்நாடு சிறையுண்டது. சசிகலா குடும்ப ஒத்துழைப்பில் தமிழ் மீண்டும் கருணாநிதியிடம் சிறைபட்டது. 
(‘தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; 
https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

அந்த சிறையில் இருந்து விடுபட முயன்று தோற்றதே ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குக் காரணமானது. 

பிரபாகரனைப் போலவே ஜெயலலிதாவும், தமது முட்டாள்த்தனத்தால் தமது முடிவைத் தாமே வரவழைத்துக் கொண்டார்.

தமிழக பா.ஜ.க நோஞ்சான் கட்சியாகப் பயணித்ததால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின், சரியான தேச்சக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் எவ்வாறு கெட்டது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 'ஊழல்' புலியைக் கொல்லப் புறப்பட்டு, அதன் வாலைப் பிடித்த 'நாயரான‌'  பிரதமர் மோடி பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அதைப் பயன்படுத்தி, முட்டாள்த்தனமாக இந்துத்வா ஆதரவு முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்' எவ்வாறு வளர்ந்து வருகிறது? என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html)

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்கள்' எல்லாம், உணர்ச்சிபூர்வ பரிமாற்ற வெறுப்பு அரசியலில் சமூக நேர்மையைச் சீர்குலைத்துப் பயணிப்பதானது, 2014 முதல் வேகமெடுத்து வரும் ஆபத்தான சமூக சிக்னலாகும்.

மேற்குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, சசிகலா குடும்பத்திற்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் நெருக்கமான 'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் போக்கும் தீவிரமாகியுள்ளது. 

நித்தியானந்தாவைப் பாராட்டிய ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் எல்லாம், சரியான தேச்சக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சிக்கு எவ்வாறு அனுகூல சத்ருவாக பங்களித்து வருகிறார்கள்
(‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics -EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?; 

2014இல் பிராமணர்கள் சார்புள்ள கட்சி என்று கருதப்பட்டிருந்தாலும், திராவிடக்கட்சிகளைப் போலின்றி, நாகரீகமான நேர்மையான கட்சி என்ற பெயர் தமிழக பா.ஜ.கவிற்கு இருந்தது. தமிழ்நாட்டில் 2014 தேர்தலில் ஏன் வெற்றி பெற்றோம்? என்பது தெரியாமல், மோடியின் தோளில் பயணித்து, இன்று தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கினையும் வீழ்த்தி, தமிழக பா.ஜ.க நோட்டாக் கட்சியாகி விட்டது.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் தமக்குள்ள ஆர்வத்தை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் தொடர் முயற்சியின்றி,

மோடியின் செல்வாக்கு என்ற முதுகின் மேல், 'திராவிட' கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், இந்துத்வாவை விட தமக்கான முக்கியத்துவத்தில் 'குவியமாகி', தமது 'விசுவாசிகள்' கூட்டத்தை பேணி பாதுகாத்து வரும் 'குழு'(?) தலைவர்கள் அரசியலில் சிக்கி பயணித்து வரும் தமிழக பா.ஜ.கவானது;

தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பிடித்து வரும் 'இந்துத்வா' மூலம் பலன் பெற வாய்ப்பில்லை. 

பகிரங்கமாக மூகாம்பிகை கோவிலில் வழிபட்டு, ஆன்மீக திசையில் திராவிட அரசியல் பயணிக்க வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு இருந்த புலமையாளர்களின் பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி (Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்ததே, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஜெயலலிதாவிற்கும் எவ்வாறு கேடாக முடிந்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘தமிழக அரசியல்  நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வரும் காட்சிகள்: விஜயகாந்த் வழியில் சசிகலா - நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?’; 

1967 முதல் சாகும் வரை அண்ணா பயணித்த வழியிலும், பின் அந்த வழியில் சாதனைகள் புரிந்த எம்.ஜி.ஆர் வழியிலும் தமிழ்நாடு பயணித்தால் மட்டுமே மீட்சி திசையில் இனி பயணிக்க முடியும்.  

சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அது சசிகலாவின் 'பி டீமா?  இல்லையா? தெளிவாகும். 
(‘'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள்? சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க?’; 

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாடம் கற்று, பா.ஜ.கவை ஓரங்கட்டி, ஜெயலலிதா பாணியில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் சாமான்யர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பிரமாண்ட வெற்றியை சுவைத்த பின்னர், சசிகலாவால் அ.இ.அ.தி.மு.க பிளவுபடாது.

தப்பித்தவறி பிளவு பட்டாலும், சசிகலா எதிர்ப்புடன் பா.ஜ.கவை ஓரங்கட்டி போட்டியிட்டால், அ.இ.அ.தி.மு.க எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றி பெறும் என்பது எனது கணிப்பாகும்.

"ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலால் கட்சி உடையுமா?" என்று அ.இ.அ.தி.மு.கவில் நீண்ட காலமாக அடிமட்டத் தொண்டராக இருக்கும் ஜெயலலிதா விசுவாசியிடம் கேட்டேன். கீழ்வரும் பதில் கிடைத்தது.

"ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸிடம் பணிந்து போய் உடைவதைத் தவிர்த்து விடுவார்."

அவர் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் எனக்கு வியப்பைத் தந்தது.

இலங்கை ஆட்சி ராஜபட்சே குடும்பத்திடம் சிக்க, பிரபாகரனின் மரணம்  வழி வகுத்தது. ஜெயலலிதாவின் மரணமானது தமிழக பா.ஜ.கவை நோட்டாக்கட்சியாக்கி விட்டது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் மற்றும் இறுதிச்சடங்கு தொடர்பான 'சமூக ஊமைக்காயத்தின்' ஆழம் புரியாமல், தமிழக மக்களை முட்டாளாகக் கருதி, தமிழக பா.ஜ.க முட்டாளாகி வருகிறது.

திருமங்கலம் ஃபார்முலாவை அமுல்படுத்தி பிரமாண்ட வெற்றியைச் சுவைத்த தி.மு.க 2011 சட்டசபை பொதுத்தேர்தலில் 180க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. தமிழக மக்களிடையே வெளிப்பட்ட தி.மு.க எதிர்ப்பு அலையை எவரும் கணிக்கவில்லை. ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகி, தி.மு.க 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்தது.

அந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே புதுக்கோட்டையில் இருந்து சென்னை சென்று வந்தேன். பேரா. (ஞானாலயா) டோரதி கிருட்டிணமூர்த்தி "யாருக்கு சார் வாக்களித்தீர்கள்?" என்று கேட்டார்.

"அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்' என்று பதில் சொன்னேன். உடனே அவர் தெரிவித்தது, எனக்கு மறக்க முடியாத சமூக சிக்னல் ஆனது.

"நான் இதுவரை கேட்டவர்களில் நீங்கள் ஒருவர் தான் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன் என்று சொன்னீர்கள். மற்ற எல்லோரும் தி.மு.கவிற்கு வாக்களித்ததாகவே சொன்னார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் சொன்னதற்கு எதிராக இருக்கிறது"

அரசால் கைப்பற்ற முடியாத ஊழல் பணத்தை நம்மால் முடிந்த அளவு கைப்பற்றி, தமது கோப அலையை எவருமே கணிக்க முடியாத அளவுக்கு வாக்களிக்கும் போக்கு தமிழக மக்களிடையே வளர்ந்து விட்டது. மேக்ரோஉலகத்தை விட்டு விலகி, இயன்றவரை சாமான்யர்களின் மைக்ரோஉலகத்தோடு ஒட்டி வாழ்ந்து வருவதே, எனது பதிவுகளில் நான் வெளியிட்ட  (2016 இல் ஜெஜெ மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்; கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும் நோட்டா கட்சியாக தமிழக பா.ஜ.க மாறி விட்டது; ஆனாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் ஈபிஎஸ் ஆட்சி கவிழாது) என்பது போன்ற கணிப்புகள் சரியானதற்குக் காரணமாகும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க 3ஆவது இடத்துக்கு வரும், டெபாசீட் இழந்தாலும் வியப்பில்லை, பண விநியோகத்தைப் பொறுத்து இரட்டை இலை அல்லது தினகரன் வெற்றி பெறலாம், என்று தேர்தல் முடிவுக்கு முன்பே, நான் கணித்தற்கு, மேலே குறிப்பிட்ட, மீடியா செல்வாக்கு வளையத்தில் வராத பிரிவினரின், அந்த நாடித்துடிப்பை உணரும் வகையில் நான் வாழ்ந்து வருவதே முக்கிய காரணமாகும்.

நான் ஆர்.கே.நகர் வாக்காளராக இருந்திருந்தால், முதல் முறை ஒத்திவைக்கப்படாமல் தேர்தல் நடந்திருந்தால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஏற்படுத்தியிருந்த கோப அலையில்,  மதுசூதனனுக்கு வாக்களித்திருப்பேன். போனமுறை தினகரனுக்கு ஆதரவாக வலம் வந்த ஈ.பி.எஸ் குழுவினர் இந்த முறை மதுசூதனனுக்கு ஆதரவாக வந்ததால், நான் நோட்டாவிற்கு தான் வாக்களித்திருப்பேன். நான் பணக்கஷ்டத்துடன் வாழும் பிரிவினராயிருந்து, சசிகலாவின் படத்தைத் தவிர்த்து வாக்குக்கு ரூ 10,000 தினகரன் கொடுத்திருந்தால், குக்கருக்குத் தான் வாக்களித்திருப்பேன். 
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

ஒப்பீட்டளவில் அ.இ.அ.தி.மு.க வாக்கு வங்கிக்கு அதிக சேதாரம் இன்றி, தி.மு.க, பா.ஜ.க வாக்குகளே அதிகமாக பணத்திற்கு விலை போனதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறும் வாய்ப்பினை 2018 சனவரியில் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

ttps://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html

இந்தியாவின், தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் வெற்றி வாய்ப்பினைக் கெடுக்கக்கூடாது;

என்பதே 2005 முதல் மோடி ஆதரவாளராகப் பயணித்து வரும் எனது விருப்பமாகும், ராஜபட்சே பாணி குடும்ப ஆட்சியில் சிக்கும் வாய்ப்பில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பதற்காக‌.

2016 டிசம்பர் பதிவில் கீழ்வருவது வெளிவந்தது.

'மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னும், இன்றுவரை எந்த 'மெகா' ஊழல் வழக்கும் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஊழலையும், கறுப்பு பணத்தையும், ஒழிப்பதாக கூறி, பிரதமர் மோடி முன்னெடுத்த பணநீக்க (Demonetization)  முயற்சியை தோற்கடிப்பதில், ஊழல் நோயில் சிக்கிய அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் எந்த அளவுக்கு  வெற்றி பெறுவார்கள்? அல்லது தோல்வியைத் தழுவார்கள்? என்பதும் இனி தான் தெரியும்.  அந்த முடிவில் தான், தமிழ்நாடும் ஊழல் அரசியலிலிருந்து விடுதலை ஆகுமா? ஆகாதா? என்பதும் தெளிவாகும். 'டிஜிட்டல் யுகத்தில்'(Digital Age), எந்த அரசுக்கும் மனதும், துணிவும் இருந்தால், ஊழல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பது சாத்தியமே.

மோடி பிரதமரான பின், தமிழ்நாட்டில் வாக்குகளுக்கான பணம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

நானறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான (கட்சித் தொடர்பில்லாத) கல்லூரி மாணவர்கள் 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இருந்தார்கள். 2019 தேர்தலில் நான் விசாரித்த அனைவருமே விதி விலக்கின்றி மோடிக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள்.

கருணாநிதி - மாறன் குடும்பம், சசிகலா குடும்பம், மற்றும் அவர்களை ஒட்டி ஊழல் புரிந்த அனைத்து கட்சிகளின் முக்கிய புள்ளிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோடி ஆட்சியில் நடந்த சோதனைகள் அடிப்படையிலான வழக்குகள், வைகோவால் பிரபலமான சாதிக்பாட்சா கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படும் வரையில், தமிழக பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிக்கப் போவது இயற்கையின் தண்டனையாகும். 



குறிப்பு:

புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்ல‌ எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்திருந்தால், அவை  உடனே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்;

என்பதும் எனது கருத்தாகும்               

எந்த வகையான வெறுப்பு அரசியலையும் நான் ஆதரிக்க முடியாது. எனக்கு வேண்டியவர்களாயிருந்தாலும், அவர்களின் ஆய்வுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் புலமையின் வளர்ச்சிக்கு முக்கியமாகும்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி, பிரபாகரன் 'வழிபாடு வலைப்பின்னல்களில்' இடம் பெறாமல், தனித்து அறிவுபூர்வ விமர்சனப்பார்வையோடு நான் பயணித்து வருவதே, மேலே குறிப்பிட்ட இருட்டடிப்புக்கு காரணமாக இருக்கலாம். மோடி ஆட்சியில் வெளிப்படும் நிறைகளைப் பாராட்டினாலும், குறைகளையும், இந்துத்வா ஆதரவு முகாம்களில் வெளிப்படும் குறைகளையும் சுட்டிக்காட்டி வருவதால், இந்துத்வா ஆதரவு முகாம்களிலும், அதே பாணி இருட்டடிப்பு தொடரலாம்.