நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (8)
தி.மு.க, பா.ஜ.க தோல்விகளுக்கான 'மீடியா செயல்நுட்பம்'?
தமிழ்
இதழ்களின் எழுத்தாளர்களின் வாசகர்கள் எல்லாம் பெரும்பாலும் ஓரளவு வசதியான சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். எனவே மாணவர்கள், படித்த
இளைஞர்கள், கிராமப்புற நடுத்தர ஏழைகள் தொடர்பான பொதுக்கருத்து உருவாக்கத்தில் (Public Opinion
Formation), தமிழ் இதழ்களின்
எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக மிக குறைவே
ஆகும் மேற்குறிப்பிட்ட பிரிவினரின் நாடித்துடிப்பை, அந்த இதழ்களும் எழுத்தாளர்களும்,
சரியாக கணிப்பதும் கடினமே ஆகும்.
மீடியாக்களில்
விதி விலக்காக, கடந்த சட்டமன்ற தேர்தல் முதல், ஆர்.கே.நகர்
தேர்தல் வரை, ஓரளவு
சரியான கணிப்பினை 'துக்ளக்' மட்டும் எப்படி, அந்த நாடித் துடிப்பை
உணர்ந்து, வெளியிட்டு வருகிறது? என்பதானது வியப்பிற்குரியதாகும்.
ஜெயலலிதாவின்
'மர்மமான' மரணம் காரணமாகவும், அதன்பின் தமிழ்நாட்டின் ஆன்மீக சம்பிரதாயங்களை மிதித்து, கேலிக்கூத்தாக நடந்த இறுதி சடங்கின் காரணமாகவும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், குறிப்பாக சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவும்,
மத்தியில் ஆளும் பா.ஜ.கவும்
எந்த அளவுக்கு நம்பிக்கையின்மையை, மேலே குறிப்பிட்ட ஊடக
செல்வாக்கில் சிக்காத பெரும்பான்மை வாக்காளர்களிடம் இழந்து வருகின்றன? என்பதன் தொடக்க சிக்னலே ஆர்.கே.நகர்
தேர்தல் முடிவாகும்.
அதிலும்
' பண நீக்கம்' மூலம் வந்த துயரங்களை, மோடி ஊழலை
ஒழிப்பார் என்று நம்பி பொறுத்துக் கொண்டவர்கள் எல்லாம், மோடி ஆட்சிக்கு வந்து
3 வருடங்களுக்கு மேலாகியும், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான டெலிபோன் கேபிள் இணைப்புகளை துணிச்சலுடன் பூமியில் புதைத்து, நீண்ட காலம் அரசை முட்டாளாக்கியது உள்ளிட்ட
மெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம்
அடுத்து அடுத்து விடுதலை ஆகி வருவதானதும், மீனவர்
பிரச்சினையை மோடி தீர்ப்பார் என்ற
நம்பிக்கையும் சீர் குலைந்து வருவதும்,
ஜெயலலிதாவின் மர்ம மரணம் விளைவித்த
கோபத்துடன் சேர்ந்து, தமிழக பா.ஜ.கவை
உச்சத்தில் (maximum) வெறுப்பவர்கள் ( அவர்களில் பலர் கடந்த பாராளுமன்ற
தேர்தலின் போதும், தேர்தல் முடிந்தும் மோடியின் ஆதரவாளர்களாக பயணித்தவர்கள்) எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இனிவரும்
தேர்தல்களிலும் பணக்கஷ்டத்தில் வாழ்பவர்கள் எல்லாம் அதிக பணம் தரும்
நபருக்கும், பணத்தேவை இல்லாதவர்கள் எல்லாம் 'நோட்டாவிற்கும்' தான் வாக்களிப்பார்கள்; ஊழலற்ற நேர்மையான
ஆட்சியை தரக்கூடியவர்கள் என்று செயல்பூர்வமாக நிரூபிக்கும் கட்சியானது அரசியல் வானில் வெளிப்படும் வரை; அது ரஜினியாக
இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும்.
திருமங்கலம்
ஃபார்முலாவை வெற்றி பெற செய்த அதே
வாக்காளர்கள் தான், அந்த ஃபார்முலாவை நம்பி
பயணித்த தி.மு.கவை
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்கள்;
என்பதும்
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஜெயலலிதா
'மர்மமான' முறையில் அப்பொல்லோவின் சேர்க்கப்பட்ட மறுதினமே சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவும்,
மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் கீழ்வரும் கேள்விகளை
ஏன் எழுப்பவில்லை?
தமிழக
முதல்வராக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமிராக்கள், ஆம்புலனஸ், மருத்துவ கண்காணிப்புகள் என்னவாயிற்று?
அப்பொல்லோவில்
கண்காணிப்பு கேமிராக்கள், முதல்வருக்கான அரசின் மருத்துவ சிகிச்சை கண்காணிப்பு வழி முறைகள் எல்லாம்
காற்றில் போக, ஆளுநரும், எதிர்க்கட்சித்தலைவரும்,
உரிய மருத்துவ பாதுகாப்பு முறையில் ஐ.சி.யூவில்
இருந்த முதல்வரை கண்ணாடி வழியாக கூட ஏன் பார்க்க
அனுமதிக்கவில்லை?
என்பது
போன்ற பொதுஅறிவின் (Common
Sense) அடிப்படையிலான கேள்விகளை
எழுப்பியிருக்க வேண்டிய,
எதிர்க்கட்சியான தி.மு.கவின்,
மத்தியில் ஆளும் பா.ஜ.கவின்
மறைமுக ஒத்துழைப்பு இன்றி, ஜெயலலிதா 'மர்மமான' முறையில் மரணமடைந்திருக்க வாய்ப்புண்டா?
என்ற
கேள்விகள் எல்லாம் மேலே குறிப்பிட்ட பிரிவினரிடம்
எந்த அளவுக்கு ஆழமாக வேர் பிடித்திருக்கிறது? என்பதற்கு விடையாகவே,
ஆர்.கே.நகர் தேர்தல்
முடிவானது, தி.மு.கவிற்கும்,
பா.ஜ.கவிற்கும் நம்பமுடியாத
தண்டனையானது.
ஏற்கனவே
தினகரனுக்கு ஆதரவாக பணம் கொடுத்த ஆளுங்கட்சி
அமைச்சர்கள் எல்லாம், இந்த முறை ஓ.பி.எஸ் ஆதரவு
அதே வேட்பாளருக்கு வாக்கு கேட்டதால், எந்த அளவுக்கு அது
அந்த வேட்பாளருக்கு கேடானது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
சசிகலா
படமின்றி, நடராஜனை ஒதுக்கி வைத்து;
போன
முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டபின், தொகுதியில் வாக்குக்கு பணம் விநியோகித்தவர்களோ, வாங்கியவர்களோ, எந்த
தண்டனைக்கும் உள்ளாகாத நிலையில், 'இரட்டை லாபத்துடன்' வள்ளலாக வலம் வந்த தினகரன்
பெற்ற வெற்றியானது; தி.மு.கவும்,
பா.ஜ.கவும், தேர்தல்
கமிசனும், 'சுயநினைவின்றி' வழங்கிய நன்கொடையே ஆகும்.
ஆர்.கே.நகர் தேர்தலில்
தி.மு.க 3ஆவது
இடத்துக்கு வரும், டெபாசீட் இழந்தாலும் வியப்பில்லை, பண விநியோகத்தைப் பொறுத்து
இரட்டை இலை அல்லது தினகரன்
வெற்றி பெறலாம், என்று தேர்தல் முடிவுக்கு முன்பே, நான் கணித்தற்கு, மேலே
குறிப்பிட்ட, மீடியா செல்வாக்கு வளையத்தில் வராத பிரிவினரின், அந்த நாடித்துடிப்பை உணரும்
வகையில் நான் வாழ்ந்து வருவதே
முக்கிய காரணமாகும்.
நான்
ஆர்.கே.நகர் வாக்காளராக
இருந்திருந்தால், முதல்முறை ஒத்திவைக்கப்படாமல் தேர்தல் நடந்திருந்தால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஏற்படுத்தியிருந்த
கோப அலையில், மதுசூதனனுக்கு
வாக்களித்திருப்பேன். அதன்பின் ஓ.பி.எஸ்
முதல்வராகி, அவர் தலைமையில் அரசும்
கட்சியும் தொடர்ந்திருந்தால், அந்த கோப அலையின்
தொடர்ச்சியாக, ஒத்தி வைக்கப்பட்டு, பின் நடந்த தேர்தலிலும்
அதே போல் வாக்களித்திருப்பேன். போனமுறை தினகரனுக்கு
ஆதரவாக வலம் வந்த ஈ.பி.எஸ் குழுவினர் இந்த முறை மதுசூதனனுக்கு ஆதரவாக வந்ததால்,
நான் நோட்டாவிற்கு தான் வாக்களித்திருப்பேன். நான் பணக்கஷ்டத்துடன் வாழும் பிரிவினராயிருந்து, சசிகலாவின் படத்தைத் தவிர்த்து வாக்குக்கு ரூ 10,000 தினகரன் கொடுத்திருந்தால், குக்கருக்குத் தான் வாக்களித்திருப்பேன்.
அவ்வாறு
வாக்களித்ததற்கு கமல்ஹாசன் என் மீது குறை கண்டால்;
முதல்வர்
ஜெயலலிதா அப்போல்லோவில் சேர்க்கப்பட்ட போது, பொது அறிவின் அடிப்படையில் எழுப்பியிருக்க
வேண்டிய, மேலே குறிப்பிட்ட கேள்விகளை கமல்ஹாசன் ஏன் எழுப்பவில்லை? முதல்வராக இருந்த
ஜெயலலிதாவின் மர்மமான மரணம் தொடர்பாக, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவை
தரிசித்து வாழ்த்து கூறிய கட்சித்தலைவர்களை விட, பத்திரிக்கை அதிபர்களை விட, தினகரனிடம்
பணம் வாங்கி வாக்களித்த வாக்காளர்கள் எல்லாம் கேவலமானவர்களா?
1996இல்
ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி குரல் கொடுத்த போது, கமல்ஹாசன் என்ன செய்தார்? 'விஸ்வரூபம்'
படத்தில் பிரச்சினை வந்த போது, தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போவேன் என்று சொன்னது எதற்காக?
அதன் மூலம் விளைய இருந்த பணகஷ்டத்தை சமாளிக்கும் துணிவில்லாதது தான் காரணமா? கிரானைட் முறை கேடு தொடர்பாக, சகாயம் ஐ.ஏ.எஸ் அச்சுறுத்தலை சந்தித்த போது, கமல்ஹாசன்
என்ன செய்தார்? இனியாவது ஏதும் செய்வாரா?
என்பது
போன்ற கேள்விகளை நான் கேட்பேன். நான் மட்டுமல்ல; மேலே குறிப்பிட்ட மீடியாவின் செல்வாக்கு
வளையத்தில் வராத மாணவர்கள், படித்த இளைஞர்கள், கிராமப்புற நடுத்தர, ஏழை மக்கள் எல்லாம்
இது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள்.
மீடியாக்கள்
எல்லாம், பணத்துக்காகவோ அல்லது தத்தம் 'புலமை'யின் அடிப்படையிலோ, அவர்களின் செல்வாக்கு
வளையத்திற்குள் சிக்கிய, பெரும்பாலும் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு ' மீடியா'
தீனி போட்டு வளர்ப்பார்களா? அல்லது இனியாவது துக்ளக் இதழைப் போல, மேலே குறிப்பிட்ட
பிரிவினரின் நாடித்துடிப்பை உணர்ந்து பயணிப்பார்களா? அதன் மூலம் தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட
கட்சிகள் எல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துவரும்
நம்பிக்கையின்மையை உணர்ந்து, ' நம்பிக்கை மீட்சி' நோக்கில் பயணிக்க வாய்ப்புண்டா?
விடைகள்
தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.
தமிழ்நாட்டில்
'இந்துத்வா'எதிர்ப்பானது, 'திராவிட' அரசியல் கொள்ளை குடும்பங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதன்
காரணமாக;
அது
தமிழ்நாட்டில் இந்துத்வா வளர உதவி செய்து வந்துள்ளது.
அதையும்
மீறி, தமிழ்நாட்டில் மோடி மீது 2ஜி தீர்ப்பிற்குப் பிறகு, 'மோடி மீதான வெறுப்பு
அலை'யானது, மீடியாவின் செல்வாக்கு வளையத்தில் வராதவர்கள் மத்தியில் 'அதிவேகமாக' வளர்ந்து
வரும் அளவிற்கு;
மீடியாவின்
செல்வாக்கு வளையத்தில் உள்ள சுமார் 50 வயதுக்கும்
அதிகமானவர்கள் மத்தியில் வளர்வதாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில்
மோடி மீதான வெறுப்பு அலையில் மேலே குறிப்பிட்ட வேறுபாட்டினை கணக்கில் கொண்டு;
தமிழ்நாட்டில்
மெகா ஊழல் புள்ளிகள் மீது நம்பிக்கையூட்டும் வகையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு;
தமக்கான
முக்கியத்துவத்திற்கு இந்துத்வாவை அடிமைப்படுத்தி, 'திராவிட' கட்சிகளின் பாணியில் ஆளுயர
மாலை, மலர்க் கிரீடம்,
தமக்கான 'விசுவாசிகள்'(?) கூட்டம், என்று திராவிடக் கட்சிகளின் பாணியில் பயணிக்கும் போக்கிலிருந்து தமிழக பா.ஜ.க
'விடுதலை' ஆகி;
பெரியார்'
ஈ.வெ.ரா, அண்ணா
போன்று சுயலாப நோக்கற்று மக்களை நேசித்து வாழ்ந்த தலைவர்களை, உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் கண்டித்து ஒதுக்கி;
அஸ்ஸாம்
பா.ஜ.க வழியில்,
பிரிவினை ஆதரவாளர்களையும் ஈர்த்து;
தமிழக
பா.ஜ.க பயணித்தால்;
தமிழ்நாடு
மீள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment