Tuesday, January 2, 2018


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (5)


'பெரியார்'  ஈ.வெ.ரா மூலமாக,  தமிழ்நாட்டின் ஆன்மீக சீர்குலைவும்,


ரஜினியின் ஆன்மீக அரசியலும் ?


‘ஒரு சமூகத்தில் நல்ல சமநிலையானது (Equilibrium) குலைந்து, ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து செல்வாக்கு பெறும் நிலையில் அடுத்த மாற்றத்திற்கான 'திருப்பு முனையை' அடையும்' என்று இந்த தொடரின் முந்தைய பதிவில் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2017/06/4-socialnucleation-signals-on-growth.html ) அதன்பின் ரஜினியின் அரசியல் பிரவேசமானது உறுதியாகி உள்ளது.

"பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்... சபாஷ்" என்று பா.ஜ.க எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். 

"இது பெரியாரின் பகுத்தறிவு பூமி. திராவிட இயக்கத்தின் மண்ணில் அதன் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாக இங்கு யாரும் வேரூன்ற முடியாது......பா.ஜ.கவின் மாயமானாக ரஜினியின் கட்சி அமைந்து விடக்கூடாது." தி.க தலைவர் கி.வீரமணி (ஒன் இந்தியா இணைய செய்தி)

மேலே குறிப்பிட்ட இரண்டு எதிர் எதிரான கருத்துக்களும்;

ரஜினியின் 'ஆன்மிக அரசியல்' தொடர்பாக;

ஆன்மீகம் என்பதை 'கடவுள், மதம்' என்ற வட்டத்திற்குள் இருப்பதாக கருதி, ஒரே அணுகுமுறையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களா? என்பது விவாதத்திற்கு உரியதாகும்; நிச்சயமாக, கேலி, கிண்டலுக்கான கருத்துக்கள் அல்ல, அவை இரண்டும்.

சித்தர்களை ஆன்மீக வட்டத்திலிருந்து அகற்ற முடியுமா?
'அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை  கடவுள்
 அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை' ;  உலோகாயுத சித்தர்.

மேலே குறிப்பிட்டது போல, சமஸ்கிருதத்திலும், 'உலோகாயுத' கருத்துக்கள் உள்ள நூல்கள் இருக்கின்றன.

ஈ.வெ.ராவால் தனது 'ஆருயிர் நண்பர்' என்று அடையாளம் காட்டப்பட்ட ராஜாஜியின் இறுதி சடங்கு நிகழ்ந்த போது:

மயானத்தில், மூத்திரப்பையுடன் தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியுடன் தம்மை தூக்கச் சொல்லி, மூன்று முறை வலம் வந்து இறுதி சடங்கில் பங்கேற்றவர் ஈ.வெ.ரா ஆவார்.

தனிமனித அளவில் நம்பமுடியாத அளவுக்கு ஈ.வெ.ரா அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இருந்த நெருக்கமான‌ தொடர்பு பற்றிய‌ தகவல்களும்; (தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட 'பெரியார்'ஈ.வெ.ரா (1); http://tamilsdirection.blogspot.in/2017/09/blog-post_20.html )

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்து பங்கேற்ற பிராமணர்கள் பற்றிய தகவல்களும்;

பின் 1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, ஈ.வெ.ரா முன்வைத்த 'திராவிட நாடு பிரிவினை'கோரிக்கையை ராஜாஜி ஆதரித்ததோடு மட்டுமின்றி;

காலனி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்குமாறு ஈ.வெ.ராவை ராஜாஜி கேட்டதும், அதை ஈ.வெ.ரா மறுத்ததும் தொடர்பான தகவல்களும்;

இன்று 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா'வில் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும்;

"பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன்' என்று அறிவித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்;


(‘தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?’; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none.html ;
அதைப் பற்றி கவலைப்படாமல், அவர்களுக்கு 'நெருக்கமான' 'திராவிட' தலைவர்களும், 'அந்த' திராவிட‌ தலைவர்களுக்கு நெருக்கமாக 'முயலும்' 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களும், உண்மையில் ஈ.வெ.ரா அவர்களை அவமதித்தவர்கள் இல்லையா?)

நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தால் வியப்பில்லை. 


இத்தகைய எதிரெதிரான உணர்ச்சிபூர்வ போக்குகள் எல்லாம், அறிவுபூர்வ விவாததிற்கான சமூக சூழலை கெடுக்கும் சமூக நோய்கள்; என்பது எனது கருத்தாகும்.


பொதுவாழ்வு வியாபாரியாக வாழாமல், சுயநலமின்றி சமூகத்திற்கு பாடுபட்டவர்கள் எல்லாம், எந்த கொள்கையாளராக இருந்தாலும், அவர்களை இழிவுபடுத்தி கண்டிப்பது தவறாகும். அந்தந்த கொள்கை அடிப்படைகளில் அவர்கள் வாழ்ந்ததால், சமூகத்திற்கு விளைந்த நன்மை, தீமைகள் பற்றிய அறிவுபூர்வ விவாதங்களின் நோக்கம் கூட, விருப்பு வெறுப்பின்றி, உரிய பாடங்களை, சமூக வளர்ச்சிக்காக கற்று, செயல்படுத்துவதாக இருந்தால் தான், அந்த சமூகமானது வளர்ச்சி நோக்கி பயணிக்கும்.

ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம், நேர்மை வழிகாட்டி என்ற அடிப்படைகளில் வாழ்ந்த வாழ்வில், ஈ.வெ.ரா அவர்களை, நான் உலோகாயுத சித்தரைப் போன்ற ஆன்மீகவாதியாகவே அடையாளம் காண்கிறேன்.

ஆனால் தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் தமிழர்க்கு கேடேன தவறாக புரிந்து, 'குருட்டு பகுத்தறிவானது' தமிழ்நாட்டில் வளர இடமளித்தது போலவே;

தனதளவில் ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம், நேர்மை வழிகாட்டி ஆகியவற்றுடன் வாழ்ந்து கொண்டே, தமது பேச்சுக்கள் எழுத்துக்கள் மூலம், எந்த அளவுக்கு ஆன்மீக சீர்குலைவு ஏற்பட வழி வகுத்தார்?

தமிழ்நாடு நேர்மை வழிகாட்டி போக்கிலிருந்து, தடம் புரண்டு, இன்று ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மூலமாக;

'இரட்டை இலை'யையும், ' உதய சூரியனையும்' , பணத்துவா மூலம் 'குக்கர்' விழுங்கிய தன்மானக் கேடான தலைக்குனிவு எவ்வாறு அரங்கேறியது? தமது பண பலத்தில் ஒரே நேரத்தில் ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் 'ஸ்லீப்பர் செல்களை' உருவாக்கியதன் வெளிப்பாடே அந்த வெற்றியா? இனி ஒவ்வொரு கட்சியிலும் தமக்குள்ள ஆதாயத்தை விட, அதிக ஆதாயம் பெற, தினகரனை நாடும் போக்கானது வீரியம் பெறுமா? மோடியின் ஊழல் ஒழிப்பானது, தமிழ்நாட்டில் செல்லாக்காசாகி, கேலிக்கு இடமாக போகிறதா?

என்ற விவாதமானது;

'ஆன்மீக அரசியல்'  தொடர்பான வெளிச்சத்தை தரும்; கீழ் வரும் பின்னணியில்.

1967இல் தி.மு.க ஆட்சிக்கும் வந்ததும், அன்றைய முதல்வர் அண்ணா, தமது கட்சியில் இருந்த பொதுவாழ்வு வியாபாரிகளை கட்டுப்படுத்த முடியாமல், மனம் வெறுத்து, மருத்துவ மனையில் தன்னை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம் அதனை வெளிப்படுத்தி, தான் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்தார்.

அது போன்ற மனம் வெறுத்த போக்கில், ஈ.வெ.ரா அவர்களும் சிக்கி வெளிப்படுத்திய கருத்து வருமாறு;

“பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி அகி விடுவேனோ என்னமோ................ இது உடல்நிலை மாத்திரமல்லாமல், பஞ்சேந்திரியங்களோடு புத்தி மனது சிந்தனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்க குறைந்து பலவீனப்பட்டு விட்டன. ……….. 90 வது 'பிறந்த நாள் விழா' மலரில்  'எனது நிலை' கட்டுரை முடிவில் 'துறவியாய் போய் விடலாமா' என்று எழுதி இருக்கிறேன்..... அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும் அறிஞர் அண்ணாவும் 'இப்போது உங்களுக்கு எதற்காக கவலை ? நீங்கள்  நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்' என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன. " 
( 'எனது நிலை' ;  ஆனைமுத்து.தொ தொகுப்பு.3 பக்கம் 1967; பிறந்த நாள் விழா மலர் 91;  17.9.1969)

தனதளவில் ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம், நேர்மை வழிகாட்டி ஆகியவற்றுடன் வாழ்ந்து பின்னணியிலும்;

மேலே அவரைப் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்களின் பின்னணியிலும்;

'துறவியாய் போய் விடலாமா' என்று ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது,

அவர் உலோகாயுத சித்தரைப் போன்ற ஆன்மீகவாதியாகவே வாழ்ந்ததை உறுதிப்படுத்துகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாத்தீகர் வெளியிட்டுள்ள கீழ்வரும் கருத்தின் படியும், ஈ.வெ.ரா அவர்கள் உலோகாயுத சித்தரைப் போலவே வாழ்ந்து மறைந்தார்.

“உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.)
:‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann  (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/)
ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே.’  (‘'பெரியார்'  ஈ.வெ.ராவின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு’ ; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )
ஆன்மீகத்தை சீரழித்ததே அரசியலில் நேர்மை வழிகாட்டியை சீரழித்தது, என்பதை மேலே பார்த்தோம்.

1967 சட்டமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டு சேர்ந்தது முதல், இன்று வரை கொள்கைகளை எல்லாம் காற்றில் போக, ஆதாய அடிப்படையில் பயணித்த கூட்டணி அரசியல் வளர்ந்த போக்கில், ஊழல் சுனாமியில், தமிழ்நாட்டை சிக்க வைத்து, அனைத்து கட்சிகளையும் ஓரங்கட்டி, 'பணத்துவா' ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஊழலை ஒழித்து, அரசு நிர்வாகத்தில் வெளிப்படையும் (transparency), பொறுப்பேற்பும் (accountability) ஏற்பட வழி வகுத்தால் தான், 1967க்கு முன்பு இருந்த அரசியல் நிலைக்கு தமிழ்நாடு திரும்பும். அப்போது தான் கொள்கை அடிப்படையிலான அரசியலானது மீண்டும் அறிமுகமாகும்; அரசியல் நீக்கமும் (Depoliticize) முடிவுக்கு வந்து. 


அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுத்து, இந்துத்வா ஆதரவாளராக பயணிப்பவர்களில் ஒருவரான மாது பூர்ணிமா கிஷ்வார் (Madhu Purnima Kishwar; www.Manushi.in  ) தமது 'டுவிட்டரில்' வெளிப்படுத்திய கருத்து:

“No righteous cause should be left at the mercy of lumpen elements. If goonda elements become champions of nationalism, then the nation is in much greater trouble than when outside enemies attack it .”


'பொதுவாழ்வில் 'நேர்மை வழிகாட்டி'யின்றி பயணிக்கும் 'ஒட்டுண்ணி'  (lumpen elements) அல்லது ரவுடிகளின் (goonda elements) கட்டுப்பாட்டில் சிக்கும் எந்த நியாயமான பிரச்சினையும், தேசிய பிரச்சினையும், கடைசியில் நாட்டுக்கே, எதிரிகளால் விளையும் கேடுகளை விட, அதிக கேடாக முடியும்.' என்ற வகையில் வெளிப்படுத்தியுள்ள கருத்தின் அடிப்படையில்;



'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம்' உள்ளிட்ட இன்னும் பலவற்றின் பேரில், தமிழ்நாட்டில் தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்த, இயற்கை வளங்களை சூறையாடி, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழிக் கல்வி மூலம் தமிழ்வழிக் கல்வியை சீரழித்த‌ போக்கினை எதிர்க்காமல், 'கூட்டாளி'யாக பயணித்த கட்சிகளையும், தலைவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கி வாழ்வதும், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும். பொதுவாழ்வில் ‘நேர்மை வழிகாட்டி’யை மீட்பதும் ஆன்மிக அரசியலே ஆகும். 


அதற்கு மாறாக அத்தகைய நபர்களை எல்லாம், 'கோவிலுக்கு நன்கொடை கொடுத்தார்கள்', 'தமது கட்சிக்கு நன்கொடை கொடுத்தார்கள்' என்று பாராட்டி வாழ்பவர்கள் எல்லாம், பொது வாழ்வில் 'நேர்மை திசை காட்டியை' சீர்குலைத்து வாழும் சமூக குற்றவாளிகள் ஆவர்.

(வளரும்)

No comments:

Post a Comment