Friday, January 5, 2018


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (6)


 



இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் 'தனித்துவம்' (Unique)? 



'ஆன்மீக அரசியல்' பற்றிய விவாதத்தில், முதலில் இந்தியாவில் இன்று வலம் வரும் அரசியலின் யோக்கியதை பற்றியும் விவாதிக்க வேண்டும்.

இந்தியாவில் இன்றுள்ள அரசியல் என்பதானது காலனிய இறக்குமதியாகும். அது எந்த அளவுக்கு 'சுதேசி வேர்பிடித்துள்ளது? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும். தொன்மை காலம் முதல் காலனிய ஆட்சி அரங்கேறும் வரை, இந்தியாவில் மன்னராட்சியில் கிராமம் தொடங்கி, தலைநகரம் வரை, வரலாற்றில் வெளிப்பட்ட இந்திய மக்களின் பங்கேற்பு தொடர்புள்ள அரசியல் பற்றிய, மேற்கத்திய போதையில் சிக்காத ஆய்வுகள், விவாதங்கள் மூலமே சுதேசி அரசியலின் கூறுகளை அடையாளம் கண்டு, இன்றுள்ள அரசியலை;

சிலப்பதிகாரம் ( அரங்கேற்று காதை) சுட்டிக்காட்டிய, 'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி', சுதேசி அரசியல் போக்கில் வளர்க்க முடியும்.
இங்கிலாந்தில் அரசியல் என்பதானது, தலைவர்களின் தனிமனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, கொள்கை அளவில் இன்றுவரை செயல்பட்டு வருவதை

கட்சித்தலைவர்களின், பிரதமர்களின், அமைச்சர்களின் கொள்கை தோல்வி/பொது ஒழுக்க மீறல் அடிப்படைகளில், வெளிப்பட்டு வரும் பதவி விலகல் உணர்த்தி வருகின்றன

ஆனால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியானஇந்திய அரசியலில்;
அதற்கு வழியில்லாதவாறு, காங்கிரசில் தேர்தலில் வென்ற சுபாஷ் சந்திர போஸை, அந்த பதவியில் தொடர விடாமல், துரத்தும் அளவுக்கு, இந்திய அரசியலை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அடிமைப்படுத்தும் போக்கை, துவக்கி வைத்தவர் காந்தி ஆவார்.

தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் அரசியலானது, முதல் கட்டத்தில் சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இடையிலான பனிப்போராகவும், பின்னர் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜருக்கும், ராஜாஜிக்கும் இடையிலான பனிப்போராக தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பிடியிலும், இந்தியாவானது இந்திரா காந்தியின் பிடியிலும் சிக்கிய பின், கடைசி காலத்தில், காமராஜரும், ராஜாஜியும் அரசியலில் ஒரணியானார்கள். அந்த ஒற்றுமை கடைசி காலத்தில் நிகழாமல், ஆரம்பத்திலேயே நடந்திருந்தால், 1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று ஆர்.கே.நகர் தேர்தலில், மத்திய, மாநில அரசுகளை எல்லாம் முட்டாளாக்கி, ' பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற, இழிவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது;

எம்.ஜி.ஆர் மறைந்து, ஜெயலலிதா பிடியில் தமிழ்நாடு சிக்கிய பின், இராம.வீரப்பனும், திருநாவுக்கரசரும் நட்பானதானது, கடைசி காலத்தில் நிகழாமல், ஆரம்பத்திலேயே நடந்திருந்தால்;

ஜெயலலிதா முதல்வராகியிருக்க முடியாது; சசிகலா குடும்ப பிடியில் தமிழ்நாடும் சிக்கியிருக்காது; மத்திய, மாநில அரசுகளை எல்லாம் முட்டாளாக்கி, 'பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற, இழிவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது.

தமிழ்நாட்டில் .வெ.ரா அவர்களின் நம்பிக்கையின்மைக்கு அண்ணா உள்ளானதன் விளைவே, தி.மு.கவின் தோற்றத்திற்கு காரணமாகும்.

1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்தபின் தமது கட்சியானது பொதுவாழ்வு வியாபார கருவியானதை உணர்ந்து, மனம் வெறுத்து, முதல்வர் அண்ணா கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியிடம் விரைவில் மரணம் அடைய விரும்புவதாக தெரிவித்ததற்கு பதிலாக;

1948இல் .வெ.ராவின் தூத்துக்குடி மாநாட்டு உரையை ஆராய்ந்து, தமது தவறான பயண திசையை உணர்ந்து, .வெ.ராவுடன் அண்ணா சேர்ந்து பயணித்திருந்தாலும்;

1949இல் தி.மு. தோன்றியிருக்காது;

ஜெயலலிதா முதல்வராகியிருக்க முடியாது; சசிகலா குடும்ப பிடியில் தமிழ்நாடும் சிக்கியிருக்காது; மத்திய, மாநில அரசுகளை எல்லாம் முட்டாளாக்கி, 'பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற, இழிவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது;

எம்.ஜி.ஆருக்கு அமைச்சரவையில் அன்றைய முதல்வர் கருணாநிதி அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், .தி.மு. என்ற கட்சியே வந்திருக்காது; (என்று வலம் வரும் தகவல் சரி என்றே நான் கருதுகிறேன்.)

ஜெயலலிதா முதல்வராகியிருக்க முடியாது; சசிகலா குடும்ப பிடியில் தமிழ்நாடும் சிக்கியிருக்காது; மத்திய, மாநில அரசுகளை எல்லாம் முட்டாளாக்கி, 'பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற, இழிவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது;

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்காமல், கோவாவில் ஜெயலலிதாவுடன் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்ததாக வெளிப்பட்ட தகவலும்;

சரி என்றே கருதுகிறேன்.

இன்று ரஜினி தமிழரா? தமிழ்நாட்டிற்க்காக ஏதாவது போராடினாரா? என்ற கேள்விக்கு;

முதல்வரகளாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விட, ரஜினிக்கு அரசியலுக்கு வர கூடுதல் தகுதி இருக்கிறது; நடிகராக இருந்து கொண்டே, காவிரிப் பிரச்சினைக்கு உண்ணாவிரதம் இருந்தவர் ரஜினி என்ற அடிப்படையில். அது போல எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திரைத்துறையில் இருந்த காலத்தில் எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை.

கீழ்வரும் திரைப்பட நடிகர்கள் தொடர்பான யூகத்தை, இந்தியாவில் என்.டி.ஆர் முதல்வராக இருந்த ஆந்திரா உள்ளிட்டு, வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் எழுப்பினால், அது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும். ஆனால் 'பெரியார்' .வெ.ரா, அண்ணா, ராஜாஜி 'கைங்கர்யத்தால்', தமிழ்நாட்டில் அதனை இன்று எழுப்பி, விவாதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இன்று ரஜினி, கமல் உள்ளிட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வரும் எந்த நடிகருக்கும், தமிழக முதல்வராக வாய்ப்பு கிட்டினாலும்;

சட்டசபையில் துணிச்சலாக, 'காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை என்று அறிவித்திருக்க மாட்டார்கள்; அன்றைய பிரதமர் இந்திராவுக்கு பயந்து, கச்சத்தீவினை, இலங்கைக்கு கொடுக்க அனுமதித்திருக்க மாட்டார்கள்;

அதே போல, பெரியாறு அணை பலகீனமாகி விட்டது, என்ற கேரள அரசின் கூற்றை ஏற்று, அணையின் நீர் மட்டத்தை குறைக்க, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரைப் போல‌, சம்மதித்திருக்க மாட்டார்கள்; மாறாக, உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு, பிரச்சினையை கொண்டு சென்றிருப்பார்கள்;

என்பது எனது கணிப்பாகும்

அந்த பிரச்சினைகளின் போது, ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு மேலே குறிப்பிட்ட பாதகங்கள் நிகழ்ந்திருக்காது, என்பதும் எனது கணிப்பாகும்.

மேற்குறிப்பிட்டதில் தவறு இருப்பதாக அறிவுபூர்வ அணுகுமுறையில் தெரிவித்தால்; அதனை பரீசிலித்து உரிய திருத்தங்கள் மேற்கொள்வதிலும், எனக்கு விருப்பம் உண்டு. அரசியலில் இந்தியாவிலேயே தனித்துவமான கீழ்வரும் போக்கில் தமிழ்நாடு பயணித்து வந்ததன் பின்னணியிலேயே, மேலே குறிப்பிட்ட யூகமானது எழுந்துள்ளது.

இந்திய அளவில் காந்தி, நேரு போன்றவர்களின் ஆதிக்கத்தில் காங்கிரஸ் சிக்கி பயணித்த போக்கிலிருந்து வேறுபட்டு, தமிழ்நாட்டில் கூட்டு தலைமையில் நீதிக்கட்சியானது சமூக நீதியையும், 'நேர்மை வழிகாட்டியையும்' முன் நிறுத்தி, இந்தியாவிலேயே தனித்துவமான (Unique) போக்கில் பயணித்தது; இந்திய விடுதலைக்குப் பின், இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நீதிக்கட்சியின் ஆர்.கே.சண்முகம் செட்டியார் நியமிக்கப்பட்டதையும் கணக்கில் கொண்டால்.

இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

‘Feroze The Forgotten Gandhi’ ( by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துடன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;

இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா? பின் 1967‍இல் ஆட்சி மாற்றம் வெளிப்படுத்திய 'பொதுவாழ்வு வியாபார' போக்கில், முதல்வர் அண்ணா மனமுடைந்து, விரைவில் மரணமடைய விரும்பியதையும், அண்ணாவை அறிமுகம் செய்த .வெ.ரா அவர்களும் மனமுடைந்து, முனிவராக ஒதுங்க விரும்பியதையும், இன்று வரை விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது சரியா?’ ( http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html )

இந்தியாவிலேயே தனித்துவமாக தனிமனித ஆதிக்கமற்ற அரசியலில், 'நேர்மை வாழிகாட்டி'யை முன் நிறுத்தி பயணித்தது நீதிக்கட்சியாகும்'. காலனி ஆட்சியில் பங்கேற்றதில் காங்கிரசின் சுயராஜ்ய கட்சியை குறை கூறாமல், நீதிக்கட்சியை குறை கூறுவது சரியா? அதிலும் சுயராஜ்ய கட்சியைப் போலவே, நீதிக்கட்சி தலைவர்களும் காங்கிரசில் இருந்தவர்கள் தான், என்ற அடிப்படையில்.

காந்தியை விமர்சித்த 'பாவத்திற்காக' பாரதி, ..சி போன்ற தலைவர்களையெல்லாம் தமிழ்நாட்டில் காந்தியின் செல்வாக்கில் சிக்கிய காங்கிரஸ் ஓரங்கட்டி பயணித்தற்கும்;

..சி போன்ற தேசிய வாதிகள் எல்லாம் .வெ.ராவின் சமூக நீதி பயணத்தை ஆதரித்தற்கும்;

இந்திய விடுதலைக்குப் பின் நடந்த 1952 பொது தேர்தலில், 'திராவிட பிரிவினை' கோரிக்கையை ஆதரித்த கட்சிகள் பிரமிக்கும் வகையில் வெற்றி பெற, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியாமல் போனதற்கும்;

பின் .வெ.ராவின் ஆதரவில் முதல்வர் காமராஜர் பயணித்த போக்கில், 1957 தேர்தலில் தான், காங்கிரஸ் கட்சியானது, தமிழ்நாட்டில் பெரும்பான்மை பலம் பெற்றதற்கும்;

இடையிலான உறவுகள் எல்லாம், தமிழ்நாட்டில் 'ஆன்மீக அரசியல்' தொடர்பான விவாதத்தில் இடம் பெற வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

தமிழ்நாட்டை 'நேர்மை வழிகாட்டியுடன்' ஆட்சி செய்த முதல்வர்களில் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்களும் முதல்வர்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவில் தமிழர்கள் முதல்வர்களாக ஆன பின் தான், தமிழ்நாட்டு அரசியலானது ஊழலில் சிக்கி, அரசியலே
பொதுவாழ்வு வியாபாரமாகும் போக்கில் பயணித்தது.

எனவே இன்று தமிழ்நாட்டின் மீட்சியானது, 'நேர்மை வழிகாட்டியுடன்' ஊழலற்ற ஆட்சியை வழங்கப் போவது யார்?  என்ற கேள்வியையே மையமாகக் கொண்டதாகும். அத்தகைய ஆட்சியின் மூலமே தமிழ்நாட்டின் ஆதாய அரசியலும், அதனால் விளைந்த 'அரசியல் நீக்கமும்' (depoliticize) முடிவுக்கு வரும்: கொள்கை அரசியலானது 1967க்கு முன் இருந்த பாதையில் பயணிக்கும் வகையில்.

No comments:

Post a Comment