Monday, February 26, 2018


தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’(Macro-world) (1) ;


கமல்ஹாசனின் 'கட்சி அரசியல்' (?) வெற்றியை நோக்கியா?


 'காமெடி'யாகி விடுமா?


கமலஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன், கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.

'தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF    ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html    )

அவ்வாறு அரங்கேறிவரும் போக்கில், அந்த திரைக்கதைக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில், நடிகர் கமலஹாசன் உள் நுழைந்திருக்கிறார்.

அதில் அவரின் பாத்திரமானது நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? என்பதை தெளிவுபடுத்தும் சம்பவங்கள் அடுத்து அரங்கேற உள்ளன?’ (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html

கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பல முறை சிறை சென்றுள்ள எனது கல்லூரி ஆசிரியர் கழக அனுபவங்களில், சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்தத் தூண்டும் வகையில் கீழ்வரும் அனுபவம் கிடைத்தது.

சுமார் 100 ஆசிரியர்கள் பணியாற்றும் ஒரு அரசு கல்லூரியில், ஆசிரியர் கழகத்திற்கான அந்த கல்லூரியின் கிளை செயற்குழு உறுப்பினர்கள் 5 பேர் என்றால், 20 கல்லூரி ஆசிரியர்கள் வாக்களித்தாலே, கிளை செயற்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற முடியும். 10க்கும் குறைவான வாக்குகள் வாங்கி தோற்ற ஒரு பேராசிரியர், அடுத்து சில மாதங்களில் நடந்த மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலில், அதிக வாக்குகள் பெற்று மாநில பொறுப்பாளர் ஆனார்

அதிலும் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிறை சென்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், அடுத்த சில வருடங்களில் ஆசிரியர் கழக போட்டிக் குழுக்களின் தலைவர்களாக, மாநில பொறுப்பாளர்களாகவும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களாகவும் 'வலம்' வந்த 'வாழ்வியல் புத்திசாலி'(?) பேராசிரியர்களும் இருந்தார்கள். அத்தகைய போட்டிக்குழு தலைவர் ஒருவரின் ஆதரவிலேயே, மேலே குறிப்பிட்ட பேராசிரியர் மாநில பொறுப்பில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்லூரி கிளை என்பது 'மைக்ரோ உலகம்' (Micro-world) போன்றது. மாநில ஆசிரியர் கழகம் என்பது 'மேக்ரோ உலகம்' (Macro-world)  போன்றது.

கிளையில் கல்லூரி ஆசிரியர் வேலை நிறுத்த/சிறை செல்லும் போராட்டங்களில் பங்கேற்க பயந்து ஒதுங்கியிருந்தவர்களில் 'புத்திசாலிகள்' எல்லாம், பின்னர் நடந்த மாநில தேர்தல்களில் வென்று, மாநில பொறுப்பாளராகும் கூத்துகள் அரங்கேறிய போக்கும், ஆசிரியர் கழக செயல்பாடுகளில் இருந்து , எனது குவிய கவனத்தை  மாற்றி, சமூகத்தை நோக்கி, 'பெரியார்' கொள்கையாளராக நான் பயணிக்க காரணமானது.

நம் கண்ணுக்கு தெரிகின்ற பொருள்களின் உலகம் 'மேக்ரோ உலகமாகும்' (Macro-world). அதன் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ள உதவும் அறிவியல் துறை 'கிளாசிகல் எந்திரவியல்' (Classical Mechanics) ஆகும்.

பொருள்களின் உள்ளே, நம் கண்ணுக்கு தெரியாமல் இயங்கும் அணுக்கள்(atoms), மூலக்கூறுகள்(Molecules) உள்ளிட்டவற்றின் உலகம் 'மைக்ரோ உலகமாகும்' (Micro-world). அதன் செயல்பாடுகளை விளங்கிக்கொள்ள உதவும் அறிவியல் துறை 'குவாண்டம் எந்திரவியல்' (Quantum Mechanics) ஆகும்.

'கிளாசிகல் எந்திரவியல்' அணுகுமுறையில் 'மைக்ரோ உலகத்தின்' செயல்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது. அது போலவே 'குவாண்டம் எந்திரவியல்' அணுகுமுறையில் 'மேக்ரோ உலகத்தின்' செயல்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது.

அது போல சமூகத்திலும் 'மைக்ரோஉலகம்' மற்றும் 'மேக்ரோ உலகம்' பற்றிய எனது ஆய்வில், மார்க்சிய லெனினிய புலமையுடன் 'சமூகவியல் கொள்கைகள்' பற்றி தெரிந்து கொள்ள, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இருந்த சமூகவியல் துறைக்கு சென்றேன். அங்கிருந்த பேராசிரியர்கள் அறிவுறுத்தியபடி, அந்த வருடம் மாலை நேர ' Certificate Course in Sociological Theories’   வகுப்பில் சேர்ந்து பயணித்ததும் ஒரு ஆக்கபூர்வ அனுபவமாக அமைந்தது.

மேலே குறிப்பிட்ட அறிவு, அனுபவ அடிப்படைகளில், உயிர்கள் சம்பந்தப்பட்ட‌ ' On Growth and Form'  என்ற நூலை முன்மாதிரியாகக் கொண்டு;

சமூகம் சம்பந்தப்பட்ட 'On Social Growth and Form' என்ற நூலை உருவாக்கும் ஆய்விலும் ஈடுபட்டிருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html     )

தமிழ்நாட்டில் பிரபலமாகி 'மீடியா வெளிச்சத்தில்' சிக்கிய பின்னர், தமிழ்நாட்டின் மைக்ரோ உலகம் பற்றிய நேரடி அனுபவம் பெறும் வாய்ப்புகள் பெருமளவு குறைந்து விடும். மற்றவர்கள் அல்லது மீடியா மூலமாக மட்டுமே, அந்த மைக்ரோ உலகத்தின் போக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நெருக்கடியில் சிக்குவதையும் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆதாய அரசியல் மூலம் விளைந்த அரசியல் நீக்கத்தின் (Depoliticize) காரணமாக, தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில் தொடர்பு  முறிவானது ( link breaking)  அதிவேகமாக அதிகரித்து வருகிறது; ஊடகங்களையும், கருத்துக் கணிப்புகளையும் முட்டாளாக்கி.

2011 தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.கவை ஆதரித்து நடிகர் வடிவேலு மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூடிய கூட்டத்தினை பார்த்து, தேர்தலுக்கு முன் தி.மு. தலைவர் கருணாநிதியிடம் 'அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்' என்று வடிவேலு கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட முடியாத அளவுக்கு தி.மு. தோற்றது.

தமிழ்நாட்டில் தமிழ்  ஊடகங்கள் எல்லாம் தேர்தல் வெற்றிகளை தீர்மானிக்கும் வாக்காளர்களோடு தொடர்பின்றி இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

திராவிட ஊழல் திமிங்கிலங்களின் அரவணைப்பில் புற்றீசல் போல் வளர்ந்துள்ளஆங்கிலவழிக்கல்வி மூலமாக,  தமிழில் எழுதப் படிக்க தெரியாத மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கையானது, அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்;

சுமார் 50 வயத்துக்கும் அதிகமான ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே பெரும்பாலும் தமிழ் இதழ்களை படித்து, மீடியா செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் திராவிட/கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களே இந்துத்வா எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர். அவர்களில் வீதியில் இறங்கி போராடுபவர்களின் எண்ணிக்கையானது மிக குறைவாகும்.

தமிழ்ப் பத்திரிக்கைகளின் செல்வாக்கு வளையத்தில் சிக்காதமாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தில் நம்ப முடியாத அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கு பற்றியும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்;’  ( http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

தி.மு.கவின் சார்பாக வடிவேலு மேற்கொண்ட பிரச்சாரத்தில், பிரமிக்க வைக்கும் அளவுக்கு கூடிய கூட்டமெல்லாம், 'இலவச சினிமா' போல அவரை ரசித்தார்கள், என்பதானது தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டது. எந்த கட்சி சார்புமின்றி கமல்ஹாசனுக்கு கூடும் கூட்டமானது அதிலிருந்து வேறுபட்டதா? இல்லையா? என்பதானது, வரும் சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிட்டால், அதன்பின் வரும் தேர்தல் முடிவுகள் விடைகளைத் தரும்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவிற்குப் பின், அந்த வெற்றியின் பின்னணி பற்றிய புரிதலின்றி, வாக்காளர்களை கமல்ஹாசன்  குறை சொல்லியதானது

தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகம்' பற்றிய புரிதலின்றி, கமல்ஹாசன் கட்சி அரசியலில் நுழைந்திருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்ததானது, சில ஆயிரங்களாக 'திருமங்கலம் ஃபார்முலா' வில் உயர்ந்தது.

ஆட்சியாளர்கள் பலமணி நேரம் மின்வெட்டுக்கு பிறகும், அதிக விலையுள்ள சொத்துக்களை எவரும் 'சுதந்திரமாக' விற்கவும், வாங்கவும் முடியாத நிலையை உருவாக்கிய பிறகும், அதிக வருமானம் தரும் தொழில், சினிமா உள்ளிட்ட வியாபரங்களிலும் 'அந்த'  சுதந்திரத்தைப் பறித்த பிறகும்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது;

என்பதை அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தல் உணர்த்தியது.

அதாவது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கோபமோ, அல்லது செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் கட்சியோ வெளிப்படாத வரையில்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி தேர்தலில் வெற்றி பெறலாம்.’ (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அது மட்டுமல்ல, ஜெயலலிதா இருந்த போது, அவரை எதிர்த்து கட்சி துவங்கி வளர்ந்து, பின் தமிழ்நாட்டில் 'குடும்ப அரசியலுக்கு' உள்ள வெறுப்பு அலையை உணராது வீழ்ச்சி திசையில் பயணித்து வருபவர் விஜயகாந்த். ரஜினிகாந்தோ 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் ஆவார். ஆனால் கமல்ஹாசனோ தனது திரைப்படத்திற்கு ஜெயலலிதா ஆட்சியில் தடைகள் வந்த போது, தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போவதாக அறிவித்து, ஜெயலலிதாவிடம் தஞ்சமாகி தப்பித்தவர் ஆவார்

ஜெயலலிதா றைவிற்குப் பின்னும்;

'அமாவாசைகளாக' வெளிப்பட்ட, இன்றும் செல்வாக்கான வி..பிக்களை குறை சொல்லும் துணிச்சலின்றி, அபத்தமாக ஆர்.கே.நகர் வாக்காளர்களை குறை சொல்லியதானது;

அவரது 'கட்சி அரசியலுக்கு' பலம் சேர்க்குமா? ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் வெளிப்பட்ட கீழ்வரும் வெளிச்சமானது கமல்ஹாசன் பார்வைக்கு தெரியாததாலேயே, அவர் ஆர்.கே.நகர் வாக்காளர்களை குறை சொல்லி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், பொதுமக்களிடம் அந்த 'மர்ம மரணம்' ஏற்படுத்திய வீச்சினைப் பற்றியும், பொதுமக்களின் கருத்துருவாக்க செயல்நுட்பம் (Public Opinion Mechanism) பற்றியும், புரிதலின்றி;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' குறித்த விசாரணை கோருவதற்குப் பதிலாக, சசிகலாவை தரிசித்து ஆதரவு நல்கிய கட்சித் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், துணை வேந்தர்கள் எல்லாம், 'எந்த அளவுக்கு இழிவான அமாவாசைகளாக' பொது மக்கள் பார்வையில் வெளிப்பட்டார்கள்?

அதன் தொடர்விளைவாக தி.மு., ...தி.மு. மட்டுமின்றி, பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் 'அமாவாசைகளாக' யணித்தவர்களின்  'நம்பிக்கை' எந்த அளவுக்கு அதிகரித்தது? வெட்கப்பட்டு 'அமாவாசைகளாக' மாற தயங்கியவர்கள் எல்லாம், அந்தந்த கட்சிகளில் எவ்வாறு அமாவாசைகளாக மாறத் தொடங்கினார்கள்?

என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் வெட்ட வெளிச்சமானது.’ (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html )


மேக்ரோ உலகில் 'அந்த அமாவாசைகள்' எல்லாம் அவர்களுக்கு தெரிந்த வழிகளில் பலன்கள் பெற்றதை கண்டிக்காத கமல்ஹாசன், சாமானியர்கள் தங்களால் முடிந்த, பொதுக்கூட்டங்களில் ஆர்பாட்டங்களில் பங்கேற்க கட்டணம் வசூலித்தது போலவே, தங்களுக்கு மிக பெரிய தொகையான வாக்குக்கு பல ஆயிரம் வாங்கியதை மட்டும் குறை சொன்னது சரியா? மேக்ரோ உலகத்தில் வாழும் கமல்ஹாசனுக்கு, மைக்ரோ உலக நியாயம் தெரியவில்லையா?

தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.. ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பலதலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்தகட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html )

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பின், தி.மு., ...தி.மு. உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் சுய ஆதாயத்திற்காக அலையும் 'அமாவாசைகள்' எல்லாம், 'எந்தப் பக்கம் பண அலை வீசும்' என்று தங்களின் 'மோப்பம்' பிடிக்கும் திறனைக் கூட்டி வருகிறார்கள். மைக்ரோ உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, 'அமாவாசைகளின்' பலத்தில் பயணித்த கட்சிகள் எல்லாம், 'அமாவாசைகளின் புரட்சியில்' முழி பிதுங்கி வருகின்றன.


'மோப்பம்' பிடிக்கும் திறன் மிகுந்த அமாவாசைகள் மேக்ரோ உலகத்தில் ஈட்டிய பணத்தில் மிதக்கும் அவர்களின் குடும்பங்கள் எல்லாம் மைக்ரோ உலகத்தில், குறிப்பாக கிராமங்களில், 'வெளியில் தெரியாத' கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.((http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) பேச்சும், எழுத்தும், மைக்ரோ உலகத்தில் 'தகவல் பரிமாற்ற வலிமையை' இழந்து, செயல்களே தகவல் பரிமாற்ற வலிமை பெற்று வருகின்றன.


பொதுவாழ்வு வியாபாரிகளான என்.ஜி.ஓக்களின் 'சுயலாப கணக்குகள்' எல்லாம் கிராமங்கள் வரை அம்பலமாகி விட்டதால்;


'செயல்பூர்வமாக' பேசுபவர்களையும், அதில் அவர்களுக்கு 'சுயலாபம் இருக்கிறதா? இல்லையா?' என்று ஆராய்ந்த பின்னரே நம்பி தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திவரும் மைக்ரோ உலகம் பற்றிய சரியான புரிதலின்றி;

புதிதாக கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு ஏற்கனவே உள்ள கட்சிகளின் அமாவாசைகளை ஈர்க்கிறார்கள்? எந்த அளவுக்கு 'அந்த' அமாவாசைகள் மோசம் செய்யாமல், தேர்தல் கமிசனுடன் 'கண்ணா மூச்சி' ஆடி, வாக்குகளுக்கு பணம்/பலன் விநியோக்கிறார்கள்? என்பதைப் பொறுத்தே, வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்; 'தமிழ்நாட்டு லல்லுக்களிடம்' பிரதமர் மோடி தோற்றுவிடும் சூழலில்.

ஆதாய அரசியல் ஏற்படுத்தியுள்ள அரசியல் நீக்கம் (Depoliticize) காரணமாகவும், 1967 முதல் தொடர்ந்து வரும் சந்தர்ப்பவாத கூட்டணிகள் காரணமாகவும், தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தில், கட்சிகளின் கொள்கைகள் எல்லாம் கேலிப்பொருளாகி விட்டன.

நடுத்தர, ஏழை, கிராம மக்களிடையே, காசுக்கு விலை போகாத, கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத/ஆசைப்படாத கொள்கைக்கு அப்பாற்பட்டு தனிநபர் விசுவாச அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு இருந்த வாக்கு வங்கியானது, ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு இருந்தது. இணைப்பிற்குப் பின் ஓபிஎஸ் முன்னிலைப்படுத்தப்படாததால், அது பலகீனமாகியிருக்கிறது. அது போன்ற தி.மு.கவின் காசுக்கு விலை போகாத வாக்கு வங்கியானது, சுமார் 50 வயதுக்கும் அதிகமான ஓரளவு படித்தவர்களிடையே உள்ளது. கருணாநிதியின் குடும்ப அரசியலில் வெறுத்து போயிருக்கும் அந்த வாக்கு வங்கியும், உதயநிதியின் நுழைவிற்குப் பின் பலகீனமாயிருந்தாலும் வியப்பில்லை.

நெருக்கடிகால இந்திரா ஆட்சியில், 'ஊழல் ஒழிப்பு' நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு மூலம், இந்திரா காங்கிரஸ் கூட்டணி அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்கள்.

அது போல பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஊழல் திமிங்கலங்களின் மீது, மக்கள் நம்பும் அளவுக்கு நடவடிக்கை எடுத்து, தேர்தலில் 'பணத்துவா'விற்கு வாய்ப்பில்லை என்ற சூழலை உருவாக்கினாலும்;

ராஜிவ் மல்கோத்ரா, குருமூர்த்தி போன்ற இந்துத்வா புலமையாளர்கள் எல்லாம் எதிர்நிலைப்பாட்டில் உள்ளவர்களை எல்லாம் மதித்து, அறிவுபூர்வ விவாதத்தின் மூலம் தமது பக்க ஈர்த்து வரும் போக்கிலிருந்து தடம் புரண்டு;

தமிழிசை செளந்தர்ராஜன், எச்.ராஜா போன்றவர்கள் .வெ.ரா, அண்ணா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் போக்கும் தொடருமானால் (http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html )

அதன் பலன்கள் பா..கவிற்கு கிட்டாமல் போகலாம். ஓரளவு அடிமட்ட அளவில் மக்கள் நம்பிக்கையுள்ள வலைப்பின்னலையுடைய பழைய கட்சிகளில் ஒன்றோ, அல்லது புதிய கட்சிகளில் ஒன்றோ, அதன் பலனைப் பெறலாம்.

‘ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.. உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.’(http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )  

மைக்ரோ உலகத்திலிருந்து துண்டித்து, அமாவாசைகளின் புரட்சியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டின் மேக்ரோ உலகத்தில் பயணிக்கும் கட்சிகளும், தலைவர்களும், அடுத்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படும் வரை;

அமாவாசைகளின் 'சமூக கிளாச்சிகல் எந்திரவியல்' (Social Classical Mechanics) வெளிப்படுத்தும் தொகு சமூக விசைகளுக்கு (Resultant Social Forces) ஏற்ப, வேறு வழியின்றி, 'கூத்தாடும்' நகைச்சுவை காட்சிகள் அரங்கேற தொடங்கியுள்ளன.


மைக்ரோ உலக தொடர்பு முறிவில், மேக்ரோ உலகில் வெளிப்படும் கட்சிகளும், தலைவர்களும், அவர்களின் 'பணத்துவா' இயக்கும் அமாவாசைகளும், மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மந்தமாக இருக்கும் வரை தான் வெளிச்சம் போட முடியும். சீர் குலைந்துள்ள அரசு நிர்வாகத்திற்கும், ஊழலுக்கும் எதிராக, மைக்ரோ உலகில் ஒருங்கிணைக்கப்படாமல் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கும்  போராட்டங்களின் வீச்சு அதிகரிக்கும் போது, சென்னை வெள்ள நிவாரணத்தின் போது வெளிப்பட்டது போன்ற மாணவர்கள், படித்த இளைஞர்களின் ஒருங்கிணைப்பானது, அந்த போராட்டங்களின் சமூக வெள்ளத்தில் வெளிப்படும் காலமும் அதிக தொலைவில் இல்லை. மைக்ரோ உலகத்துடன் உயிரோட்டமுள்ள தொடர்புள்ள மேக்ரோ உலகம் தமிழ்நாட்டில் மலரும் காலம் நெருங்கி வருகிறது.