Sunday, February 18, 2018

உலகிலேயே முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும் வாழ்பவர்கள் மட்டுமல்ல;


'பாரம்பரிய செல்வ வாசனை தெரியாத கழுதைகளா', வரலாற்றுக் குற்றவாளிகளான, தமிழர்கள்?


உலகிலேயே முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும் வாழ்பவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை' பிரச்சினையை ஏற்கனவே பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

சில தினங்களுக்கு முன், திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள நார்த்தாமலையில், தமிழ்நாட்டின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகிய 'விஜயாலய சோழீஸ்வரம் கோவில்' பகுதிக்கு சென்ற போது;

பல மில்லியன் டாலர் பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டக் கூடிய, விலை மதிப்பில்லாத செல்வங்களை எல்லாம், 'திராவிட அரசியல் கிரானைட் ஊழலுக்கு' இரையாக்கி வரும் 'பாரம்பரிய செல்வ வாசனை தெரியாத கழுதைகளா, வரலாற்றுக் குற்றவாளிகளான, தமிழர்கள்?' என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது

கீழ்வரும் அரிய தகவலை படித்து விட்டு, அதன்பின் அங்கு சென்று பார்க்கும் எவருக்கும், அந்த கேள்வி எழுந்தால் வியப்பில்லை.
 
பிற்காலத்தில் உருவான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் தார் சாலையின் வலது பக்கம், சரியான இணைப்பு சாலையின்றி;

அந்த பகுதி மலைகளில் இருந்த பாரம்பரிய செல்வங்கள் எவ்வளவு இதுவரை அழிந்துள்ளன? என்ற கேள்வியை எழுப்பும், கிரானைட் கொள்ளைக்காக போடப்பட்ட குண்டும் குழியுமான மண்சாலையையும், வயல் வெளியையும் கடந்து, சரியான வெயிலில், மலை அருகே, இன்னும் 'இரையாகாமல்' எஞ்சியுள்ள மலையை ஒட்டியுள்ள கற்கோவிலும், அதன் அருகே உள்ள மேலும் இரண்டு கற்கோவில்க‌ளும், இடையில் உள்ள 'என்றும் வற்றாத' சுனையும்;

அந்த இடத்தை கடும் வெயிலில் அடைந்ததால் ஏற்பட்ட சிரமங்களை எல்லாம் மறந்து, நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை, எனக்கும், கூட வந்த என் நண்பர்களுக்கும் கொடுத்த.

கோவில்கள் பூட்டப்பட்டிருந்தாலும். சுமார் 10 வருடங்களுக்கு முன், மத்திய அரசின் ASI  கட்டுப்பாட்டில் இருக்கும் அதே இடத்திற்கு நானும் நண்பர்களும் சென்றிருந்த போது, அதிர்ஷ்டவசமாக அங்கு  ASI பணியாளர் இருந்ததால், கோவில் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த வேலைப்பாடுகள் மிகுந்த தூண்களையும், சிற்பங்களையும், கட்டிடவியல் நுட்பங்களையும் கண்டு மெய்மறந்த அனுபவம், மீண்டும் நினைவுக்கு வந்ததே;

ஓர் இன்ப அனுபவமாக அன்று அமைந்தது.

அகத்தில் 'சுயலாப கணக்குகளுடன்', புறத்தில் 'யோக்கியர்' போல காட்சி தந்து, இழிவான சமரசங்களின் அடித்தளத்தில், 'சொகுசு மண்டிலத்தில்' (Comfort Zone) வாழ்பவர்களுக்கு, இவை போன்ற இன்ப அனுபவங்கள் கிட்டாது. அது மட்டுமல்ல, 'திராவிட அரசியல் ஊழல் சுனாமி'யின் 'சமூக முதுகெலும்பான', இவை போன்ற‌ 'சொகுசு மண்டிலங்களில்' வாழ்பவர்கள் எல்லாம், பாரம்பரிய செல்வங்களை சீரழித்த பாவத்தில் பங்கு பெற்றவர்கள் ஆவர். எனவே 'இயற்கையின் சாபத்திலிருந்தும்' அவர்களும், அவர்களின் குடும்பங்களும் தப்பிக்க முடியாது. 

ஏற்கனவே மதுரை பகுதிகளில் கிரானைட் ஊழல் தொடர்பான சகாயம் விசாரணை அறிக்கை பரிந்துரையானது, சிபிஅய் விசாரணை நோக்கி  நீண்ட காலமாக முன்னேறாமல் இருக்கிறது. அது தொடர்பான 'மெளனப் போக்கை' கடைபிடிப்பதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், புதிதாக தொடங்கப்படும் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளார்களா? என்ற ஐயமும் உள்ளது. 

1938இல் வெளிவந்து, மீண்டும் 2004இல் மறுபதிப்புக்குள்ளான 'A Manual of The Pudukkottai State’  தொகுப்புகளை வாங்கி, அதில் உள்ள  'உலக இசையியல் அதிசயமான' (பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தெரியாத) குடுமியான்மலை இசைக்கல்வெட்டு பற்றி படித்திருக்கிறேன். (குறிப்பு கீழே

நார்த்தாமலை பகுதியில் இருந்த, பல மில்லியன் டாலர் பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டக் கூடிய, விலைமதிப்பில்லாத பாரம்பரிய செல்வங்களில்;


அந்த பகுதியில், 'திராவிட கிரானைட் ஊழல் சுனாமி'யில் அழிந்து போன செல்வங்கள் யாவை?

என்று அடையாளம் காண்பதற்கு, மேலே குறிப்பிட்டுள்ள நூல் தொகுப்பு பயன்படும்.

அந்த பாரம்பரியச் செல்வங்களை விட, காலத்தால் மிகவும் பிற்பட்ட பாரம்பரியச் சின்னங்களின் மூலம், லண்டன், பாரீஸ், பாங்காக், உள்ளிட்டு உலகில் உள்ள இன்னும் பல பகுதிகள் எல்லாம், எந்த அளவுக்கு வருமானங்கள் ஈட்டி வருகின்றன? என்பதை அறிந்தவர்களுக்கே;

நார்த்தாமலையில் காலத்தால் முந்திய, இன்னும் அதிக பிரமிப்பூட்டும் பாரம்பரியச் செல்வங்களால், தமிழ்நாடு இதுவரை எவ்வளவு வருமானத்தை இழந்துள்ளது? என்பதை ஓரளவு கணிக்க முடியும்.

ஓரு பாரபட்சமற்ற விசாரணக்கு தாமதமின்றி உயர்நீதிமன்றம் மூலம் ஆணையிட்டால், நார்த்தாமலையில் எஞ்சியுள்ள பாரம்பரிய செல்வங்களை பாதுகாத்து, பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டும் வழிகளை உருவாக்க முடியும்.

அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு, என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்

குறிப்பு:

சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில், ', ரி, , , , , நி' என்ற 7 இசைச் சுர எழுத்துக்களுக்கான தொன்மை ஆதாரம் (Most Ancient Evidence), தமிழில் 'சேந்தன் திவாகரம்' (கி பி 7 - 8 ஆம் நூற்றாண்டு) ஆகும், என்பதையும்;

சமஸ்கிருதத்தில்  7 இசைச் சுர எழுத்துக்களுக்கானஆதாரங்கள் எல்லாம் அதற்கு பிந்தியவை, என்பதையும்;

பல வருடங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக இசை மாநாட்டு கருத்தரங்கில், நான் வெளிப்படுத்திய போது, அதனை மறுப்பின்றி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அது தவறு என்று மெய்ப்பிக்கும் சான்றுகளை, இன்றும் வரவேற்கிறேன்.

அந்த 7 சுர எழுத்துக்களையும், தமிழில் உள்ள ", , , ' போன்ற உயிரெழுத்துக்களின் அடிப்படையில், சுரக்கோவைகளை எவ்வாறு உருவாக்குவது? என்பதை விளக்கியுள்ள;

இந்தியாவில் மட்டுமல்ல, உலக இசை அளவில் உள்ள தொன்மையான சான்றாக;

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு இருக்கிறது. (‘ the inscription should be taken as the earliest known example of pitch notation,’; https://www.sahapedia.org/kudumiyanmalai-inscriptions  )

அந்த இசைக்கல்வெட்டு தொடர்பான எனது ஆய்வின் தொடக்கப்புள்ளியான; இசைச்சுரங்கள் 7ம், உயிரெழுத்துக்களுடன் 'இசையியல் தொடர்பு கொண்டவை' என்ற கருத்தினை, தமது ஆய்வுக்கட்டுரையில் (http://musicresearchlibrary.net/omeka/items/show/2382) வெளியிட்ட, பிரிட்டனில் வாழும் ஆராய்ச்சியாளருக்கு, அந்த தொடர்புக்கான 'சேந்தன் திவாகரம்' சான்றினை நான் அனுப்பி வைத்தேன். அவர் எனக்கு நன்றி தெரிவித்து எழுதிய மடல் கீழே:


Thank you so much for this very interesting information. I will look up the inscription you mention at the earliest opportunity. I would also be interested to know about any other examples from Tamil literature about the relationship of vowels and musical notes.
I’m very happy to know that you have found my article useful.
Best wishes
Richard Widdess

Richard Widdess
Professor of Musicology
Research Tutor and Acting Head of Department
Department of Music
School of Oriental and African Studies
University of London 

தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்' (Musical Linguistics) தொடர்பான ஆய்விற்கு, குடுமியான்மலை இசைக்கல்வெட்டும், அதற்கும் காலத்தால் முந்திய - சரியாக பாதுகாக்கப்படாத‌- அரச்சலூர் இசைக் கல்வெட்டும் (https://www.youtube.com/watch?v=qoLBg-_tc7s ) அரிய சான்றுகளாகும். 'திராவிட கிரானைட் ஊழல் சுனாமி' ஒழிந்தால் தான், இது போன்ற அரிய பாரம்பரிய செல்வங்களுக்கு உள்ள ஆபத்துகள் எல்லாம் நீங்கும்.

No comments:

Post a Comment