Monday, February 12, 2018


'தமிழ்வழிக் கல்வி மீட்சி' என்ற நோக்கில், 'சினர்ஜி' (Synergy) முறையில் ஒன்றுபட‌;



'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்?


1969 முதல் தமிழ்நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) என்பதானது, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், மாநில முதல்வரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் 'வளையும்' ஆட்சியாக மாறியதன் விளைவாக;

'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) ஒழுங்காக செயல்பட்டிருந்தால், சிறைக்கு சென்றிருக்க வேண்டியவர்கள் எல்லாம்;

செல்வத்திலும், செல்வாக்கிலும் 'அதிவேகமாகவும்','அதீதமாகவும்' வளர்ந்து;
அவர்கள் சார்ந்த சாதிகளில் எல்லாம், அவர்கள் 'மதிக்கத்தக்க பெரிய மனிதர்கள்' ஆன போக்கும்;

'திராவிட' மற்றும் 'தேசிய' கட்சிகளிலும் செல்வாக்கில் வளர்ந்து தலைவர்கள் ஆன போக்கும்;

ஏற்படுத்திய 'சமூகத் தூண்டலின்' (Social Induction) வலிமையின் காரணமாகவும்;

'பெரியார்' இயக்கத்தில் புலமையாளனாக நான் பயணித்த கட்டத்தில், தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான .வெ.ராவின் தவறானநிலைப்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு, எனது ஆய்வு குவியத்தில் ' மார்க்சியம் - லெனினியம்' உள்ளானதன் காரணமாகவும்;

'திருச்சி பெரியார் மையம்' மூலமும், என்னையும் முட்டாளாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவானார்கள், என்பதானது, ;( http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html & http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html   ) எனது ஆய்வு முடிவாகும்.

பின்னர் நான் இசையின் இயற்பியல் (Physics of Music) ஆய்வுக்கு, தமிழ் இலக்கியங்களை உட்படுத்தி பெற்ற ஆய்வு முடிவுகள் எல்லாம், என் கண்களை திறக்க (திருக்குறள் 573 );

அது போன்றசமூக கிருமிகளால், திராவிட இயக்க வரலாற்றில் சீர் குலைந்த எண்ணற்ற குடும்பங்களில், எனது குடும்பமானது 'தனித்துவமாக' (Unique) சீர்குலைந்துள்ள நிலையில்;

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு 192) வழியில், அந்த சமூக கிருமிகள் மீது தனிப்பட்ட முறையில் கோபமின்றி;

அவ்வாறு சமூக கிருமிகளாக அவர்களை செயல்படத் தூண்டிய;

அவர்கள் மனங்களில் இருந்த நலன்கள் (interests) யாவை? அந்த நலன்கள் உருவாகும் அளவுக்கு அவர்களின் மனங்களில் இருந்த தேவைகள் (Needs) யாவை

என்பதை எனது ஆய்வு குவியத்திற்கு உட்படுத்தி பெற்ற முடிவே;

'காலனிய’  மனநோயாளிகளும், ‘திராவிட’  மனநோயாளிகளும்'  (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html   

அவ்வாறு 'பெரியார் சமூக கிருமியாகி' செல்வம், செல்வாக்கில் வளர்ந்த பின்பு, பிற திராவிட மனநோயாளிகளைப் போல, ஒதுங்கி தமக்கு வாய்த்த தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தியிருந்தால், அதன்பின் அந்த கிருமிகளை எனது ஆய்வுக்கு தொடர்ந்து உட்படுத்துவதானது, ஆற்றல் விரயம் என்று கருதி, அவர்களை அகற்றியிருந்திருப்பேன்.

அதற்கு மாறாக, அதே ' திருச்சி பெரியார் மையம்' பின்னணி வலிமையில், கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்., எம்.பி ஆக முயற்சிப்பது, என்ற போக்கில், 'வளர்ந்தும்'(?), அந்த வளர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலையே முட்டாளாக்கி, ‘ஆம் ஆத்மி கட்சி’யில் தமிழக மாநில பொறுப்பாளர் பதவி பெறும் அளவுக்கு ' உயர்ந்ததும்';

அந்த வளர்ச்சிக்கு துணையாக பயணித்த 'பெரியாரிஸ்டுகள்' பங்களித்ததும்;

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு குடும்ப அளவில் 'நெருக்கமாக' இருந்த எனது மாமனாரின் சட்டபூர்வ மகளை மணந்த காரணத்தால், வைப்பாட்டி/துணைவியுடன் இருந்தஅவருடன் நீதி மன்ற வழக்குகளில் சிக்கி, அவருடன் சமரசமாதல் உள்ளிட்ட இன்னும் பல வழிகள் இருந்தும், ஏன் கடனில் நான் மூழ்கி பயணித்தேன்? என்ற அறிவில்லாமலும், அதிலிருந்து நான் வெளிவந்ததும் தெரியாமலும்,, என் முதுகுக்குப் பின்னால், என் குடும்பத்தினரிடமே என்னை இழிவுபடுத்தியதும்;    (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

எனது ஆய்வுக் குவியத்திற்கு உள்ளாக வேண்டியதாகி விட்டது.

கட்சி என்பதானது மனிதர்களை உள்ளடக்கியது. மனிதன் தனது தேவைகளை (Needs) உணர்ந்து, மனதில் அந்த தேவைகள் எல்லாம் ஈடுபாடுகளாக (Interests) மாறிய பின், அந்த ஈடுபாடுகள் மனிதனின் செயலைத் தூண்டுகின்றன‌. 

எனவே மேலே குறிப்பிட்ட 'பெரியார்' சமூக கிருமிகளின் செயல்பாடுகளை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியதால் பெற்ற கண்டுபிடிப்பே:

தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்- வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம் ' (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

தமது இயல்பான தகுதிக்கும், திறமைக்கும் உள்ள நேர்மையான வருமானம் ஈட்டும் மனமின்றி;

'எந்த இழிவான வழியிலாவது' பணம், செல்வாக்கு சம்பாதிக்க வேண்டும்’, என்ற 'வெறியில்', 'திராவிட' கட்சிகளின் ஆட்சிக‌ளில், 'அதிவேக' பணக்காரர்கள் வளர்ந்த இரகசியங்கள் தான் அவையாகும்.

அதற்கு பின், இன்று 'பெரியார்' கட்சிகளில் பயணிப்பவர்கள் எல்லாம் பல கட்சிகளாக பிரிந்து கிடப்பதற்கு, 'பெரியார்' கொள்கை பற்றிய புரிதலில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமா? அல்லது கொள்கையை விட தமக்கு பிடித்த நபரையே தலைவராக கொள்ளும் 'தனிநபர் விசுவாசம்' காரணமா? அல்லது தமது சாதிக்குளேயே திருமணங்கள் செய்து வரும் 2ஆவது, 3ஆவது, 4 ஆவது தலைமுறை 'கருப்புச் சட்டை'(?) குடும்பங்களாக வாழ்ந்து கொண்டு, இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளை பாதுகாத்து, முடியுமானால் 'தலைமையின் கருணை' மூலம் இன்னும் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் காரணமா?

என்பது போன்ற கேள்விகளும் எனது ஆய்வின் கவனத்தை ஈர்த்தன.

‘தமது நலனை விட கட்சி நலனே முக்கியம் என்று கருதுபவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்து, ஒரு கட்சி உருவாகி வளரும்போதே, எளிதில் சுயநலத்திற்கு வளைக்க முடியாத சட்ட திட்டங்களுடனும், உரிய தகுதி, திறமை அடிப்படைகளிலேயே பொறுப்புகளுடனும், கட்சி கட்டமைத்தலானது, உரிய வலுவான அடித்தளத்துடன் வலிமையாக வளரும். அதற்கு மாறாக, தலைவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், அடித்தளமின்றி, தலைவரின் வீழ்ச்சி காரணமாகவோ, எதிர்பாராத சமூக மாற்றங்கள் காரணமாகவோ, எந்த நேரத்திலும் மரணிக்கும் ஆபத்தில் உள்ள கட்சிகள் ஆகும். குடும்ப அரசியல் நோயில் சிக்கி பயணிக்கும் கட்சிகள் எல்லாம் அந்த வகையை சாரும். அது போன்ற கட்சிகளில் சுயலாப நோக்கின்றி வாழும் உறுப்பினர்களின் கொள்கைப் பற்றெல்லாம், தலைவர் வழிபாட்டுப்போக்கில், அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து விலகி, உணர்ச்சிபூர்வமாக சீரழிவதை தவிர்க்க முடியாது.’ ( http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html    

அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் 'வெறுப்பு அரசியல்' அரங்கேறியதன் மூலமாக, பொதுவாழ்வு வியாபாரிகளின் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக,  'அரசியல் நீக்கம்' (Depoliticize) வழியாக 'ஆதாய அரசியல்' என்பதானது, 'கட்சி அரசியலை' ஒழித்துள்ளதன் வெளிப்பாடே,  'ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு' ஆகும்

'பிராமண எதிர்ப்பு' என்ற பெயரில், .வெ.ரா தொடங்கிய 'திராவிடர் கழகம்' மூலமாக, வெறுப்பு அரசியல் அரங்கேறுவதற்கு முன், தமிழ்நாடானது ஆக்கபூர்வமாக அறிவுபூர்வ திசையில் தான் பயணித்தது

தமது ஆய்வு நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள உணர்ச்சிபூர்வ புழுதி மனிதர்களை ஒதுக்கி, புலமையாளர்களை தேடி சென்று திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் விவாதிப்பதன் மூலமாக, நமது நிலைப்பாட்டில் உள்ள குறைகளை அடையாளம் கண்டு, நமது ஆய்வினை வளர்க்க முடியும்;

என்ற போக்கில். 'பெரியார்' இயக்கத்தில் புலமையாளனாக பயணித்த நான்;
பின்னர் இசை ஆய்வு நோக்கி திசை திரும்பி பயணித்த போது தான்;

ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்தம் சாகரம்' நூலை படிக்க நேர்ந்தது.

மேலே குறிப்பிட்ட ஆய்வு முறையில், எனக்கே முன்னுதாரணமாகி, என்னை இன்னும் செழுமைப் படுத்திக் கொள்ள உதவும் வகையில்;

இசைத் துறையில் பிராமண புலமையாளர்களின் பங்களிப்புடன், இந்திய இசை மாநாடுகள் உள்ளிட்ட இன்னும் பல முயற்சிகள் மேற்கொண்டு, தமிழின் பெருமையையும், தமிழ் இசையின் பெருமையையும் அவர்களும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சாதனையாளராக, அவர் வெளிப்பட்டுள்ளார். 

அந்த நூலைப் படித்து விளங்கிக் கொள்ளும் அறிவானது ஈ.வெ.ராவிற்கு இல்லை என்பதன் காரணமாகவோ;

அவ்வாறு விளங்கிய எவரும் ஈ.வெ.ராவிற்கு துணை புரிந்தவர்களில் இல்லாததன் காரணமாகவோ;

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் தமிழருக்கு கேடென கருதி, 'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமல், அதில் பலியாகி;

'புழுதி' பிராமணர்களும், 'புழுதி' பிராமணரல்லாதவர்களும் பொது அரங்கில் வலிமை பெற்ற போக்கில்;

'புலமையாளர்களாக' இருந்த பிராமணர்களும், பிராமணரல்லாதோரும் ஓரங்கட்டப்பட; ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html   )

'இந்துத்வா' தலைவர்கள் மட்டத்திலும் 'செருப்பு அரசியல் நோய்' தொத்தும் அளவுக்கு;

பொது அரங்கானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்கி;

தமிழ்நாட்டில் 'கட்சி அரசியல்' என்பதானது 'செருப்பு அரசியலாகி, 'கட்சி அரசியலும்' ஆதாய அரசியல் மூலமாக ஒழிந்து, தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, அரசியல் அமாவாசைகளின் புரட்சிக் கட்டத்தில் இன்று தமிழ்நாடு, திருப்பு முனையை எதிர்நோக்கி, காத்திருக்கிறது;

என்பது எனது ஆய்வு முடிவாகும்.

அது மட்டுமல்ல, ஆபிரகாம் பண்டிதரின் முயற்சியால் தமிழின், தமிழ் இசையின் அருமை பெருமைகளை புலமையாளர்களாக இருந்த பிராமணர்களும் ஏற்றுக் கொண்டு வந்த போக்கானது;

ஆபிரகாம் பண்டிதரின் மறைவிற்குப் பின்னர், ஈ.வெ.ரா அவர்கள் முன்னெடுத்த வெறுப்பு அரசியலில், திசை மாற்றத்திற்கு உள்ளாகி, பிராமணர்கள் மத்தியில் கர்நாடக இசையை உயர்த்திப் பிடிக்கும் போக்கும், தமிழ் இசையை வெறுக்கும் போக்கும் அதிகரித்ததா? அதற்கு எதிர்வினையாக, அதே வெறுப்பு அரசியலின் ஆதரவில் அண்ணாமலை செட்டியார் முன்னெடுத்த தமிழ் இசை மீட்பும், 'கருணாமிர்த சாகரம்' நூலை இருட்டடிப்புக்கு உள்ளாக்கியதா? அந்த 'வலையில்' சிக்கிய விபுலானந்த அடிகளும், ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வைப் புறக்கணித்ததால், தமது ஆய்வினையும் குறைபாடுகளுடன் மேற்கொள்ள நேர்ந்ததா? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.


'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாத கொள்கைகள் எல்லாம் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய கழிவுகளாகும். நீண்டகாலமாக கழிவு அகற்றப்படாமல் பயணிக்கும் கட்சிகளும், காலப் போக்கில், சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய கழிவுகளாகும். 'பெரியார் கட்சிகள்' எல்லாம் அந்த நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக, நான் கருதுகிறேன். (
http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html

தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அரிய பங்களிப்பு வழங்க உள்ள சூழலில்; ( Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics ‘; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )


ஆக்கபூர்வமாக இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில், சுயலாப நோக்கற்ற தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் 'தமிழ்வழிக் கல்வி மீட்சி' என்ற நோக்கில் ஒன்றுபட்டு, 'சினர்ஜி' (Synergy) முறையில் செயல்பட; (http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html  )
'பெரியார்' கழிவுகள் எல்லாம் தடையாக இருக்கின்றன; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

தமிழ்நாட்டில் கழிவுகளாக உள்ள 'பெரியார்' புழுதிகள் எல்லாம், அகற்றப்பட வேண்டிய நேரமும் வந்துவிட்டதாக கருதுகிறேன்; பொதுஅரங்கில் உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் மூலம், அறிவுபூர்வ விவாதங்களை கெடுத்து வருவதால்.

எனவே தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள இடங்களில் " 'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்?' என்ற விவாத உரை நிகழ்த்தலாம், என திட்டமிட்டு வருகிறேன்; உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ மறுப்புகளை வரவேற்று; வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி 'லைவ்' (Live) நிகழ்ச்சியாகவும்.

அதன் மூலம் 'பெரியார்' சிறையிலிருந்து, .வெ.ரா அவர்கள் மீளவும் வாய்ப்பிருக்கிறது

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு காரணமான 'முதன்மை குற்றவாளி' என்று வரலாற்றில் இடம் பெறுவதைத் தவிர்த்து.

'காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல்' பிரச்சாரங்கள் மேற்கொண்ட .வெ.ரா அவர்கள், எதிர் நிலைப்பாட்டில் உள்ளவர்களிடம் அறிவுபூர்வ மறுப்புகளை வரவேற்றது போலவே;

நானும் வரவேற்கிறேன். உரிய சான்றுகள் அடிப்படையிலும், வாத குறைபாடின்றியும் (Logical Defects: http://tamilsdirection.blogspot.in/2015/10/ ) வரும் மறுப்புகளை பரிசீலித்து, 'சரி' என்றால், மேற்குறிப்பிட்ட திட்டத்தை கை விடுவேன்; 'தமிழ்வழிக் கல்வி மீட்சி'க்காக‌, 'சினர்ஜி' (Synergy) முறையில் செயல்படுவதற்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கியதாக கருதி.

No comments:

Post a Comment