Tuesday, February 6, 2018


'சமூகத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன்.' - மலையாள நடிகை சனுசா;


                                   சரி, ஆனால் சரியல்ல, ஏன்?


'திருமங்கலம் ஃபார்முலா’வின் அடுத்த கட்ட வளர்ச்சியில், 'ஆர்.கே.நகர் ஃபார்முலா' மூலம் வீழ்ந்த கட்சி அரசியல்?



'சமூகத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன்.' என்று மலையாள நடிகை சனுசா தெரிவித்துள்ளார்.( https://www.thenewsminute.com/article/actor-sanusha-sexually-harassed-train-files-police-complaint-75743  )

இரயில் பயணத்தின் போது, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, தமக்கு பாலியல் தொல்லை கொடுக்க முனைந்த நபரின் கரங்களைப் பிடித்து, உதவிக்கு குரல் எழுப்பிய போது, பெண்கள் உள்ளிட்ட சக பயணிகள் துணைக்கு வராதது கண்டு, வெறுத்து, மேலே குறிப்பிட்ட கருத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

இரயிலில் ஏர்கண்டிசன் முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகளின் சமூகத்தை பொறுத்த மட்டில்;

சக பெண் பயணி பாலியல் தொல்லைக்கு உள்ளாவது, கண் முன் தெரிந்தும், 'நமக்கேன் வம்பு?' என்று வேடிக்கை பார்ப்பவர்கள், ஒப்பீட்டளவில், அதிகமாக இருக்கலாம். அந்த சமூகத்திற்கு வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட கருத்து சரியாக இருக்கலாம்



அதுவும் கூட இந்தியாவில் வெவ்வேறு மொழி மாநிலங்களிலும், வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறாக இருக்கவும் வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல, இது போன்றவற்றில், உறுதியாக முடிவுகள் பெற முடியாத அளவுக்கு, சமூகம் தொடர்பான ஆய்வுகளுக்கு வரை எல்லைகள் உள்ளன. (https://revisesociology.com/2016/01/17/field-experiments-definition-examples-advantages-and-disadvantages/ & https://cirt.gcu.edu/research/developmentresources/research_ready/experimental/benefits_limits ) எனது அறிவு அனுபவத்தில் தமிழ்நாட்டில் அவ்வாறு தான் இருக்கிறது. இல்லை என்பது தொடர்பான அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாயுள்ளேன்.

ஆடு மாடுகளைப் போல இடித்துக் கொண்டு பயணிக்கும், முன்பதிவு தேவைப்பட்டாத கம்பார்ட்மெண்டில், அது போல நடக்க வாய்ப்பில்லை. முன்பதிவு செய்து பயணிக்கும் ஏர்கண்டிசன் செய்யப்படாத சாதாரண கம்பார்ட்மெண்டிலும், அது போல நடக்க வாய்ப்பில்லை.

பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களையும், கழுத்தில் இருக்கும் செயினைப் பறித்து ஓடும் திருடர்களையும், விர‌ட்டிப் பிடித்து, அடித்து, துவைத்து, காவல் துறையிடம் ஒப்படைக்கும் மனிதர்கள் வாழும் சமூகத்திற்கு, மேற்குறிப்பிட்ட நடிகை வெளியிட்ட கருத்து பொருந்தாது

வாழ்வதற்கான நம்பிக்கையை இழக்காத, அந்த 'கீழ்மட்ட'  சமுகத்திலும்;

'எந்த இழிவான வழியிலாவது' பணம், செல்வாக்கு சம்பாதித்து, அந்த நடிகை குறிப்பிட்ட மேல் மட்டசமூகத்தில் ஒருவராக வேண்டும், என்ற 'வெறியில்';

தமது இயல்பான தகுதிக்கும், திறமைக்கும் உள்ள நேர்மையான வருமானம் ஈட்டும் மனமின்றி;

'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு,கம்யூனிஸ்ட்' ஆதரவாளராக காட்டிக்கொண்டு, 'பொதுத் தொண்டராகி'(?), அந்த 'புரட்சி போதையில்' சிக்கிய, என்னைப் போன்ற பேராசிரியர்களை 'முட்டாள் ஏணிகளாக்கி', தங்களின் மேற்குறிப்பிட்ட 'இலட்சிய வெறியில்'(?) வெற்றி பெற்றவர்களின் 'வாழ்வியல் வெற்றி இரகசியங்களை'(?),  நான் எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்.
தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்; வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’ (http://tamilsdirection.blogspot.in/2013/10/ ) 

‘தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை (Social Status) என்று கற்பனை செய்து கொண்டு கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

இன்றும் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது, சக பயணிகளிடம் அவர்களைப் போலவே, இயல்பாக உரையாடி வரும் நான்;

இன்றும் இரயிலில் ஏர்கண்டிசன் வகுப்பிலும், விமானத்திலும் பயணிக்கும் போது, அங்கெல்லாம் சமூக நிலை  உணர்வுக் கூண்டில் (Social Status Conscious) பெரும்பாலும் சிக்கிய‌ மற்ற சக பயணிகளிடம் உரையாடுவதை, இயன்றவரை தவிர்த்தே பயணிக்கிறேன். அதற்கான காரணம் வருமாறு:

சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களில், ஒப்பீட்டளவில், திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளின் விளைவாக, கீழ்வரும் திறமையுடன் உரையாடுபவர்கள் அதிகரித்து விட்டார்கள்.

மேலே குறிப்பிட்ட பதிவில், வாழ்வியல் வெற்றிக்கான‌  “நான்காவது இரகசியம்' :
 
புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்தநாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும்

அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” 

ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும், ஆடம்பரம் மிகுந்த திருமணமாக இருந்தாலும், சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் கூடும் இடங்களில் நடக்கும் உரையாடல்களை கூர்ந்து கவனித்தால், அந்த உரையாடல்கள் எல்லாம் மேலே குறிப்பிட்ட திறமைகளின் ‘போட்டிக் களமாக இருப்பதை உணர முடியும்.

சாகும் வரை அத்தகைய‌ போட்டியிலேயே காலத்தைக் கழித்து சேர்த்த சொத்தையும், செல்வாக்கையும், சாகும் போது கூட எடுத்துப் போக முடியாது:

என்பது தெரிந்தும், தமக்கான வாழ்க்கையைத் தொலைத்து, அந்த போட்டியில் மூழ்கி, சமூகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்த சமூக குற்றவாளியாக‌, அரசியல் கொள்ளையர்களின் சமூக முதுகெலும்பாக  வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?
 

அதே நேரத்தில் இன்னொரு போக்கும் எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

வாழ்வதற்கான நம்பிக்கையை இழக்காத, அந்த 'கீழ்மட்ட'  சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில்;

மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறி'யுடன் வாழ்பவர்களை எல்லாம், எளிதில் அடையாளம் கண்டு,எள்ளி நகையாடும் போக்கும், கீழ்மட்டத்தில் அதிகரித்து வருகிறது; திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் அரங்கேறிய 'அரசியல் நீக்கம்' வெளிப்படுத்தி வரும் ' சிக்னல்களில்' ஒன்றாக.

அந்த போக்கில், தேர்தல் காலங்களில், 'அந்த இலட்சிய வெறியர்களின்' வாக்கு சேகரிப்பு பலமானது குறையத் தொடங்கியதை, 'உணர்ந்து',  வாக்கு சேகரிப்பில் திருப்பு முனையாக;

வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்ததானது, சில ஆயிரங்களாக 'திருமங்கலம் ஃபார்முலா' வில் உயர்ந்தது.

ஆட்சியாளர்கள் பலமணி நேரம் மின்வெட்டுக்கு பிறகும், அதிக விலையுள்ள சொத்துக்களை எவரும் 'சுதந்திரமாக' விற்கவும், வாங்கவும் முடியாத நிலையை உருவாக்கிய பிறகும், அதிக வருமானம் தரும் தொழில், சினிமா உள்ளிட்ட வியாபரங்களிலும் 'அந்த'  சுதந்திரத்தைப் பறித்த பிறகும்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது;

என்பதை அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தல் உணர்த்தியது.

அதாவது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கோபமோ, அல்லது செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் கட்சியோ வெளிப்படாத வரையில்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி தேர்தலில் வெற்றி பெறலாம்.

தி.மு. தலைவரின் குடும்ப ஆட்சி ஊழலில் தப்பித்திருந்த;

கிரானைட், தாது மணல், ஆறுகள், குளங்கள், சந்தனக் காடுகள் எல்லாம்;

அச்சுறுத்தியும், கொலை செய்தும் அபகரிப்பதிலிருந்து தப்பித்திருந்த‌ தனியார் சொத்துக்கள் எல்லாம்;

1991 முதல் ஜெயலலிதாவுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஊழல் பெரும்பசிக்கு இரையாக;

அடுத்து வந்த தி.மு. ஆட்சியும் அந்த போக்கிலேயே பயணிக்க வைத்தது அறிந்தும்;

முதல்வர் ஜெயலலிதாவின் ' மர்ம மரணம்' குறித்த விசாரணையை கோருவதற்குப் பதிலாக;

'அதீத' பணமும், ஆளுங்கட்சியில் எம்.எல்.ஏக்கள் எல்லாம் காலடியில் விழும் ' செல்வாக்கும்'(?) இருப்பதாக கருதி, சசிகலாவை தரிசித்து, ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களும், பத்திரிக்கை அதிபர்களும் கூட;

திருமங்கம் ஃபார்முலாவை வெற்றி பெறச் செய்த அதே வாக்காளர்கள், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் அந்த ஃபார்முலாவை நம்பி பயணித்த தி.மு.கவை தோற்கடித்த துணிச்சலின் முன் தோற்றவர்கள்;

என்பதும் என் கருத்தாகும்.

பிரதமர் மோடியின் பணநீக்கமும், ஊழல் ஒழிப்பும் தமிழ்நாட்டில் அரசியல் ஊழலை அதிகரிக்கவே வழி செய்து விட்டது;

என்பதை பா...வை நோட்டாவிடம் தோற்கச் செய்தும்;

'திருமங்கலம் ஃபார்முலாவானது', அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக, கட்சி அரசியலை விட்டு விலகிப் போய்விட்டதை;

தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்ததன் மூலமும்;

மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறி வீரர்களின் வலைப்பின்னலுடைய' சுயேட்சையின் வசமே தமிழ்நாடு சிக்கும்; ஊழல் பிரமீடு ஒழிக்கப்படாத வரையில்;

என்பதையும் உலகுக்கு அறிவித்துள்ள ஆர்.கே.நகர் வாக்காளர்களை;

மேலே குறிப்பிட்டவாறு, சசிகலாவை தரிசித்து, ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களை விட, பத்திரிக்கை அதிபர்களை விட, நான் அதிகம் மதிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஊழல் பிரமீடின் அபாயத்தை பிரதமர் மோடிக்கு உணர்த்தி, அந்த அபாயத்தை ஒழிக்காமல், பிரதமர் மோடி, கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பினை எதிர்பார்க்க முடியாது;

என்று உலகுக்கு அறிவித்த அவர்களை, உண்மையில் நான் பாராட்டுகிறேன்.

'சமூகத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன்.' என்று மலையாள நடிகை சனுசா தெரிவித்துள்ளதானது;

மேலே குறிப்பிட்டவாறு, சசிகலாவை தரிசித்து, ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களும் பத்திரிக்கை அதிபர்களும், வெற்றி பெற்ற மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறியர்களும்' உள்ள சமூக மேல் மட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்.

'திருமங்கலம் ஃபார்முலாவை' வெற்றி பெறச் செய்து, பின் அதே ஃபார்முலாவை நம்பிய தி.மு.கவைத் தோற்கடித்து, தமிழ்நாட்டில் 'கட்சி அரசியலானது' ஏற்கனவே பணத்துவாவில் சிக்கி செத்து விட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய;


பெரும்பாலான ஆர்.கே.நகர் வாக்காளர்களை உள்ளடக்கிய சமூகத்தின் கீழ்மட்டத்தின் மீது;


'நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.' 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) ஒழுங்காக நடந்து, ஊழல் பிரமீட்டினை ஒழிக்க வேண்டிய 'சமூக வெப்பத்தைக்' கூட்டும் வகையில்;

கட்சிக் கூட்டங்களில், போராட்டங்களில் பங்கேற்கவும், வாக்குகளுக்கும்  ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில், முடிந்தவரை 'வசூல்' செய்யும் அவர்களை குறை சொல்லும் அருகதையானது; 


ஊழல் ஆட்சியின் சமூக முதுகெலும்பாக செயல்படும் மேல் மட்டத்தில் வாழும் எவருக்கும் கிடையாது.
ஊழல் பிரமீடு ஒழிக்கப்படாமல் இனி நடக்கும் தேர்தல்களில்;

மேலே குறிப்பிட்ட ஊழல் பிரமீடு வளர்த்து வரும் 'சமூக கிருமிகளான', 'இலட்சிய வெறியர்களில் அதி புத்திசாலிகள்' எல்லாம்;

ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தும்; ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தும், பணம் சம்பாதித்த ஊடக செய்திகளைப் போலவே:

'பூத்' வாக்கு சேகரிப்பில் 'புலி' என ஏமாற்றி, ' இலட்சிய வெறியர்கள்' ஒரே நேரத்தில் பல கட்சிகளிடமும் பணம் கறக்கும் படலமானது, பெரிய அளவில் அரங்கேறப் போகிறது; செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் கட்சி எதுவும் வெளிப்படாத வரையில்.

சமூகத்தின் கீழ்மட்டத்தின் 'நாடித் துடிப்பை' உணராமல், செயல்பூர்வமாக அவர்களுக்குள்ள பிரச்சினைகளில் தலையிட்டு அவர்களின் நம்பிக்கையை பெறாமல்;

'பூத் கமிட்டிகள்' அமைத்து தேர்தலை சந்திக்கும் கட்சிகள் எல்லாம்;

அவரவர் 'பண வலிமையைப்' பொறுத்தும், மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறியர்கள்' எந்த அளவுக்கு எந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தும்;

அந்தந்த கட்சிகளின் வெற்றிகள் இருக்கும்; ஊழல் பிரமீட்டை ஒழிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தி. 

சமூகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்த சமூக குற்றவாளியாக‌, அரசியல் கொள்ளையர்களின் சமூக முதுகெலும்பாக  வாழ்வதை வெறுத்து, விலகி;

சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூக மேல் மட்ட‌ கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல்;


தமது இயல்பை ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions), தம்மால் இயன்ற அளவுக்கு அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), சமூகத்தின் கீழ் மட்டத்தொடு 'ஒட்டி' (திருக்குறள் 140) வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே, ஊழல் பிரமீட்டை ஒழிக்க முயலும் தனிமனித இராணுவமே ஆவர்.

No comments:

Post a Comment