Saturday, August 31, 2019


www.isaipulavar.blogspot.com - 'அசாத்திய துணிச்சல் (!)'

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்மாதிரியாக 


சுமார் 8 வருடங்களுக்கு முன், நான் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சந்தித்த கீழ்வரும் சம்பவமானது, ஒரு முக்கிய சமூக சிக்னலை வெளிப்படுத்தியது.

உள் மதிப்பீடு (internal valuation) தேர்வு விடைத்தாளுடன் ஒரு மாணவன் எனது அறைக்குள் வந்தார். விடைத்தாளில் விடைகளின் மதிப்பெண்களை நான் கூட்டியதில் பிழை இருப்பதாக சொன்னார். நான் விடைத்தாளை வாங்கி, மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தேன். அவன் சொன்னது சரியே, எனவே 'சாரி (sorry)' என்று சொல்லிக்கொண்டே, விடைத்தாளில் இருந்த மொத்த மதிப்பெண்ணை திருத்தினேன். 'அந்த' மாணவன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, 'சார், நீங்கள் என்னிடம் சாரி கேட்பதா?' என்று பயத்துடன் பேசினான். அதாவது ஒரு பேராசிரியர் கவனக் குறைவின் காரணமாக செய்யும் தவறினை, சம்பந்தப்பட்ட மாணவர் முன் ஏற்று வருத்தம் தெரிவிப்பதானது, மிகவும் அரிதாகும்; என்ற திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா?

பொதுவாக தமிழ்நாட்டில் தமது தவறுகளை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு திருந்தி பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது, அதிவேகமாக குறைந்து வருகிறது; இயன்ற வரை, பிறர் மீது பழி சுமத்தி,  சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Infection) சிக்கியுள்ளதமது 'பிம்பத்தை'(?) பாதுகாக்கும் போக்கே அதிகரித்து வருகிறது. 

நேர்மையான மனித உறவில் இருப்பவர்கள் எல்லாம், தமக்கு வேண்டியவருக்கு இடிப்பாராகவே பயணிப்பார்கள்

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதர் தவறு செய்ய முற்படும்போது, அதைத் தடுப்பதும், மீறி புரிந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ்வதும் அந்த மனிதர் வாழும் குடும்பத்தில், சமூக வட்டத்தில், சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகளின் (Social Functional Checks) வலிமையைப் பொறுத்ததாகும்.’

தமது தவறை உணர்ந்து, பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். 'பிம்ப' சிறையில் சிக்கிய 'பிரபலங்களும், பிம்ப வழிபாட்டாளர்களும், 'அந்த' துணிச்சல் அற்ற கோழைகளாக வாழ்பவர்கள் ஆவார்கள். அத்தகையோரை நான் எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததில்லை. அண்மையில் எனது சமூக வட்டத்தில் இடம் பெற்றவர் துரைப் பாண்டி ஆவார்.

துரைப்பாண்டியின் 'http://www.tamilpulavar.org/' தமிழின் மீட்சிக்கு பெரும் துணை புரியக்கூடியதாகும்.

அடுத்து அவரின் 'https://isaipulavar.blogspot.com/' எனது கவனத்தை ஈர்த்தது. எனது அனுமதியுடன் எனது சில கட்டுரைகளும் அதில் வெளிவந்துள்ளன‌.

அண்மைக்காலங்களில் இணையத்தில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி வருபவர் துரைப்பாண்டி. அவருக்கு அண்மையில் நான் அனுப்பிய மடல் அடுத்து வருகிறது.

அன்புடையீர்,

'நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமான பார்வை (கட்டுரையாளர் .ஷைலா ஹெலின்)
நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு'  கட்டுரையினைப் படித்தேன். (https://isaipulavar.blogspot.com/2019/02/1.html)

கர்நாடக இசை மும்மூர்த்தி தியாகராயரைப் பாராட்டி
'Tyagaraja- Life and Lyrics'

என்ற புத்தகமானது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டியே வெளிவந்துள்ளது.

பிம்ப வழிபாட்டு முறையில் என்னைப் பற்றி எழுதினாலும் அது குப்பையே.

இசைப்புலவர் குப்பை திசையில் பயணிப்பதற்கு இது சான்றானது.

எனவே எனது கட்டுரைகளை அகற்றி விடவும். குப்பை திசையில் பயணிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, நான் அனுமதிப்பேன்.

அன்புடன்,
செ..வீரபாண்டியன்
(‘தமிழ், தமிழ் இசை - புலமை மீட்சியில் வெற்றி பெறுவோம்; பாராட்டு, புகழ் போன்ற போதைகளில் சிக்காமல்’; https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_25.html )

எனது மேற்குறிப்பிட்ட மடலுக்கு, கீழ்வரும் பதில் எனக்கு கிடைத்ததானது, ஓர் இன்ப அதிர்ச்சியாகும்.

அன்பின் ஐயா பதில் அனுப்பும் கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.

முதலில் இரண்டு விஷயஙகளைத் தெளிவிட வேண்டிய தேவை உள்ளது.

 www.isaipulavar.blogspot.com என்பது கட்டுரைகளின் தொகுப்புப் பெட்டகம் article archive. wwe.isaipulavar.in என்பதே இசை குறித்தான ஆய்வுத்தளம். அந்தத் தளம் இன்னமும வடிவமைப்பில்தான் உள்ளது. அடுத்ததாக ஆய்வாளர்கள் ந்.மம்மது அவர்களையோ அல்லது எந்தத் தனியரை வியந்த்தோதல் எமது நோக்கமல்ல.

பெரியோரை வியத்தல் இலமே என்பதே எமது நோக்கு. அந்தக் கட்டுரை article archive ஆரம்பிக்கப்பட்ட போது வெளியானது. நீங்கள் குறிப்பிட்டது போல iconization தவறு அந்தப் பதிவில் உள்ளது. அது எமது பயணத்தின் துவக்கம் என்பதால் கூரிய நுண்ணாய்வின்மை வெளிப்பட்டுள்ளது. தவறுக்கு வருத்தமும் சுட்டியமைக்கு நன்றியும். இனி இது போல் பிழை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் ஆய்வுப் பங்களிப்பு மிக முக்கியமானது. எதனாலும் அது தடை பெற வேண்டாம்.

அன்பும் நன்றியும்
இரா.துரைபாண்டி

மேற்குறிப்பிட்ட மடலில் வெளிப்பட்டுள்ள‌ துரைப்பாண்டியின் 'அசாத்திய துணிச்சல் (!)' என்பதானதுதமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்மாதிரியாகும்

தற்காலத்தில் தமிழ் மற்றும் தமிழிசை தொடர்பாக வெளிவரும் நூல்களில், தனி மனிதர்களை 'பிம்பமாக்கும்' நூல்களே பெரும்பாலும் வெளிவருகின்றன. அதன் 'பாதுகாப்பு கவசங்கள்' போல, தமிழையும், தமிழ் இசையையும் 'பிம்பமாக்கும்' நூல்களும் பெரும்பாலும் வெளிவருகின்றன

அண்மைக்காலங்களில் இணையத்தில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி வருபவர் துரைப்பாண்டிக்கு, அண்மையில் நான் அனுப்பிய மடலையும், 'அந்த' மடலுக்கு துரைப்பாண்டி அனுப்பிய பதிலையும் மேலே பார்த்தோம்.

என்னை மிகவும் புகழ்பவராயிற்றே என்ற வகையில், துரைப்பாண்டியின்   https://isaipulavar.blogspot.com/2019/02/1.htmlஇல் வெளிப்பட்ட தவறினை நான் சுட்டிக்காட்ட தவறவில்லை.

ஒப்பீட்டளவில், என்னை விட கூடுதலான செல்வாக்குள்ள சமூக வலைப்பின்னலுடனும், ஊடக வெளிச்சத்துடனும் பயணிக்கும் துரைப்பாண்டி, எனது மடலை வைரமுத்து பாணியில் புறக்கணித்திருக்கலாம்; (‘வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக; 'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?’;

எனது விமர்சனத்தால் எந்த பாதிப்பின்றியும்., வைரமுத்துவைப் போலவே தமது பயணத்தையும் தொடர்ந்திருக்கலாம்; மம்மதுவின் பிம்ப பலூனைப் பாதுகாக்கும் முயற்சியாக. மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், 'பிம்ப பலூனை' ஊக்குவிப்பதானது, தமிழ்நாட்டின் புலமை வளர்ச்சிக்கு கேடாகும். அது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நபரின் புலமை வளர்ச்சிக்கும், 'அந்த பிம்ப பலூன்' கேடாகும்; தவறுகளைச் சுட்டிக்காட்டும் 'இடிப்பார்கள்' இன்றி

துவக்கத்தில் அறிவுநேர்மையற்ற காற்றில் ஊதப்பட்டு உருவாகும் 'பிம்ப பலூன்கள்' எல்லாம், அடுத்த கட்டத்தில் 'வழிபாட்டுக் காற்றில்' ஊதப்பட்டு பெரிதாகும்.

இது டிஜிட்டல் யுகம். செல்வாக்கானவர்களின் குறைபாடுகள் எல்லாம் இனி இருளில் நீடிக்க முடியாத நெருக்கடிகள் அதிகரித்து வரும் காலம். 

வரும் காலத்தில், அறிவு நேர்மையற்ற காற்றில் ஊதப்பட்டவைரமுத்து போன்றவர்களின் 'பிம்ப பலூன்கள்' எல்லாம்;

'அறிவுபூர்வ விமர்சனம்' என்ற ஊசியின் துணையுடன், புலமையின் வளர்ச்சிக்கு கேடான அவை ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறும் போக்கு நெருங்கி வருகிறதுஅதனை வேகப்படுத்தும் போக்கிலேயே, துரைப்பாண்டி எனது மடலுக்கு பதில் போட்டுள்ளார்

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

Sunday, August 4, 2019



             கோத்திரத்தின் அறிவியல் பரிமாணம்   



‘Quantum Mechanics’(குவாண்டம் எந்திரவியல்)-இல் ஒரு அணுவில் உள்ள எலெக்ட்ரான்களில், இயல்பின் அடிப்படையில் 'சமத்துவமாக' இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்க முடியாது. இது பவுலியின் 'தவிர்ப்புத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle) என்று அழைக்கப்படுகிறது. அதே போல், உலகில் உள்ள மனிதர்களில் இயல்பின் அடிப்படையில் 'இரண்டு மனிதர்கள்' கூட 'சமத்துவமாக' இருக்க முடியாது. எல்லா மனிதர்களையும், ‘இயல்பைப் புறக்கணித்து’, குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டம் உள்ளிட்டு, நமது வாழ்வில், அவர்களைச் 'சமத்துவமாக' நடத்துவது எவ்வளவு முட்டாள்த்தனமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பது எனது வாழ்க்கையில், நான் கற்ற 'அசாதாரண' பாடமாகும். புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்', எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு

உயிரணுவியல் (Genetics), உயிர் பன்முக வேறுபாடு (Bio-Diversity), போன்றவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகள் எல்லாம்  உயிரணுக்கள்(Genes) ஒரு மனிதரின் தகுதி, திறமை, உடல் நலம், மனநலம் போன்றவற்றில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அந்த பின்னணியில் ஒவ்வொரு மனிதரும் தமக்குள்ள இயல்பின் அடிப்படையில் தகுதி திறமைகளை வளர்த்து, தமது இயல்போடு ஒன்றிய உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passion) அடையாளம் கண்டு,வளர்த்து வாழ்வதே உண்மையான 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்பதையும், அப்படி வாழும் போது, கிடைக்கும் பலன்கள் காரணமாக, நமது வாழ்வில் நாம் சந்திக்கும் பாதிப்புகளும், அவமானங்களும் கூட மதிப்பு மிக்க உள்ளீடாக அமையும் என்பதையும் இது போன்ற பதிவுகள் உணர்த்துகின்றன..

‘‘நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்.’ 
(‘'மனித எந்திரர்களுக்கு' விளங்காதது’; http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html  & 'வாழ்க்கை பரமபத விளையாட்டில்'  முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' ; http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none.html)

‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனி வரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; 
http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html  )’ (From: http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

இன்றைய சாதி அமைப்பு பிரிவுகள் எல்லாம் காலனி ஆட்சியில் உருவானவை

தாய்மாமன் மகளை, அத்தை மகனை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகள் அறிவில் குறைவாகவும், பிறப்பு நோய்களுக்கு உள்ளாகவும், வாய்ப்புகள் உள்ளதால் தவிர்க்க வேண்டும்; என்று இன்றைய மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். 'கோத்திரம்' பார்த்து நடக்கும் திருமணங்களில், அது நடைமுறையில் உள்ளது.

‘இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும்.

ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விளக்கத்தில் உள்ள 'இரைச்சலை'(noise) நீக்கி, 'சிக்னலை' (signal), புரிந்து கொண்டால், கோத்திரத்தின் அறிவியல் பரிமாணம் தெளிவாகும்.

உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் கோத்திரம் உண்டு. தமது கோத்திரத்தில் தமக்கு வர வாய்ப்புள்ள நோய்களை அறிய,தமது உயிரணு பதிவு சோதனைகளை படித்த பெரும் பணக்காரர்கள் செய்து வருகிறார்கள் 
(https://www.mayoclinic.org/tests-procedures/genetic-testing/about/pac-20384827 & http://www.childrenshospital.org/conditions-and-treatments/conditions/g/genetic-disorders/testing-and-diagnosis). அதற்கான கட்டணம் குறையும் போது, சாமான்யர்களும் செய்வார்கள்.

மனிதருக்கு மட்டுமின்றி ஊருக்கும் கோத்திரம் உண்டு.

ஒரு ஊரின் 'கோத்திரத்தை' அந்த ஊரில் உள்ள இசையின் மூலம் ஆய்ந்தறியலாம் என்பதை 'நாலடியார்' கீழ்வரும் வரிகளில் விளக்கியுள்ளது.(‘The history of a city and the history of music of the city are intertwined’;
https://musicdrvee.blogspot.com/2012/08/history-of-city-and-history-ofmusic.html)

'பணிவுஇல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.'
நாலடியார் 25:2

சீர் என்பது ஒரு பாடலின் சுர இசை, தாளம் உள்ளிட்ட இசை அழகியல் கூறுகளை உள்ளடக்கிய ஒரு இசை முக்கியத்துவம் வாய்ந்த சுர உள் அமைப்பு (musically significant sub-structure)  ஆகும்.

திருக்குறள்(118) கூறும் 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்' என்பது இசையில் 'சீரை நிறுக்கும்'  கோல் என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது

'மாத்திரை' என்பது பாடலுக்கான இலக்கணத்திற்குட்பட்டு 'சீர்' ஒலிக்க வேண்டிய கால அளவாகும்.(‘'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' மீளும் தமிழ்நாடு?’; 
http://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html)

'கோத்திரம்' என்ற சொல், ஒரு மனிதரின் அல்லது ஊரின் பரம்பரைப் பின்னணியில் இன்றுள்ள பண்பை (characterestics) வெளிப்படுத்தும் சமூகவியல் முக்கியத்துவம் உள்ள சொல்லாகும். திராவிட மனநோயாளித்தனத்தில் நல்ல‌ 'கோத்திரம்' சிதைந்து, 'கள்வர்' (திருக்குறள் 813) கோத்திரத்தில் தமிழர்கள் அதிகரித்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்
(https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html 

தமிழ்நாட்டில் இன்று 'தமிழ் உணர்வு, புரட்சி' முற்போக்குகளின் கோத்திர ஆய்வுக்கு தொடக்கமான சொந்த ஊர் பற்றிய தகவலே இருட்டில் மறைந்து வருகிறது.

கடந்த தலைமுறையில் தமிழ்நாட்டில் .வெ.ரா, .வெ.சா போன்று எல்லோரின் பெயர்களிலும் முதல் எழுத்தானது, அவர்களின் சொந்த ஊரின் முதல் எழுத்தாக இருந்தது. அத்தகையோர் மேக்ரோ உலகில் பிரபலமான பின்னர், ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊரில், மைக்ரோ உலகத்தில், அவர்களின் யோக்கியதையை, கோத்திரத்தை, விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்தனஅதாவது மேக்ரோ உலகில் வாழ்ந்த பிரபலங்களின், சொந்த ஊர், மைக்ரோ உலகநல்ல/கெட்ட யோக்கியதையை விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அப்போது இருந்தன.

சொந்த ஊரில், வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், 'சுயலாப கள்வராக' வாழ்ந்து கொண்டு, நல்ல பேர் எடுக்க முடியாது. அதுவே மைக்ரோ உலகத்தின் தனித்தன்மையாகும்; இன்றும் கூட. அங்கு கெட்ட பேர் எடுத்து, பின் நகரங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் சென்று, 'பகுத்தறிவு, புரட்சி, முற்போக்கு, மனித உரிமை, ஆன்மீகம்' போன்ற ஏதாவது ஒன்றில் பிரபலமாகி, மேக்ரோ உலக மனிதராக இன்று நம்மிடையே பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்; மீடியா வெளிச்சத்தின் துணையுடன். அவர்களின் மைக்ரோ உலக தீய யோக்கியதையை, கோத்திரத்தை, மேக்ரோ உலகின் கவனத்திற்கு கொண்டுவர விடாமல், மீடியா வெளிச்சம் உள்ளிட்ட அவர்களின்செல்வாக்கு தடைகள்’ செயல்பட்டு வருகின்றன.
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

காலனியத்திற்கு முன் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களில் 'சாதி' என்ற சொல்லின் பொருள் வேறு. ஆங்கிலத்தில் 'caste' என்ற சொல்லின் பொருளை 'சாதி' என்ற தமிழ்ச்சொல்லில் திணித்தது ஒரு 'பொருள் திரிபு' (Semantic Distortion) சூழ்ச்சி ஆகும்சங்க இலக்கியங்களில் 'கோத்திரம்' என்ற சொல் உள்ளது. ஆனால் 'சாதி' என்ற சொல் இல்லை;   காலனிய பொருள் திரிபு சூழ்ச்சியில் நுழைந்த இன்றுள்ள 'சாதி' என்ற பொருளில். எனவே இன்றுள்ள சாதியை கோத்திரத்தோடு குழப்பி எதிர்ப்பதனாது 'குருட்டுப் பகுத்தறிவு' ஆகும்; சாதியின் பேரால் நடைபெறும் பொதுவாழ்வு வியாபாரத்தின் பாதுகாப்பு அரணாகும். அதன் தொடர்விளைவாக, அகத்தில் சாதி வெறியுடன், புறத்தில் 'சாதி ஒழிப்பு முற்போக்குகளாக' வலம் வருவதும் சாத்தியமாகியுள்ளது.

எனவே இன்றைய இசை பற்றிய எனது ஆய்வு, தமிழ்நாட்டில் உள்ள 'சீர்' குலைவுகளையும், அதிலிருந்து மீளும் வாய்ப்புள்ள 'சிக்னல்களையும்', பற்றிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264