Friday, July 26, 2019


தமிழ், தமிழ் இசை - புலமை மீட்சியில் வெற்றி பெறுவோம்;

பாராட்டு, புகழ் போன்ற போதைகளில் சிக்காமல்



தமிழ்நாடானது புலமைக்குக் கேடான திசையில் பயணித்து வருவதையும், என்னால் இயன்ற அளவுக்கு அதை எதிர்த்து வருவதையும், எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள்

துரைப்பாண்டியின் 'http://www.tamilpulavar.org/' தமிழின் மீட்சிக்கு பெரும் துணை புரியக்கூடியதாகும்

அடுத்து அவரின் 'https://isaipulavar.blogspot.com/' எனது கவனத்தை ஈர்த்தது. எனது அனுமதியுடன் எனது சில கட்டுரைகளும் அதில் வெளிவந்துள்ளன‌..

அண்மைக்காலங்களில் இணையத்தில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி வருபவர் துரைப்பாண்டி. அவருக்கு அண்மையில் நான் அனுப்பிய மடல் அடுத்து வருகிறது.

அன்புடையீர்,

'நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமான பார்வை (கட்டுரையாளர் .ஷைலா ஹெலின்)
நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு'  கட்டுரையினைப் படித்தேன். (https://isaipulavar.blogspot.com/2019/02/1.html)

கர்நாடக இசை மும்மூர்த்தி தியாகராயரைப் பாராட்டி 
'Tyagaraja- Life and Lyrics' 
என்ற புத்தகமானது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டியே வெளிவந்துள்ளது.

பிம்ப வழிபாட்டு முறையில் என்னைப் பற்றி எழுதினாலும் அது குப்பையே.

இசைப்புலவர் குப்பை திசையில் பயணிப்பதற்கு இது சான்றானது.

எனவே எனது கட்டுரைகளை அகற்றி விடவும். குப்பை திசையில் பயணிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, நான் அனுமதிப்பேன்.

அன்புடன்,
செ..வீரபாண்டியன்

'சான்றற்ற/மிகைப்படுத்தப்பட்ட வறட்டுப் பெருமைகள்' எல்லாம், தமிழைக் கேலிக்கிடமாக்கி, தமிழின் உண்மையான புகழ் பரவ தடைகளாக வெளிப்பட்டு வருகின்றன.'
(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

மேற்குறிப்பிட்ட மம்மது தொடர்பான‌ 'இசைப்புலவர்' கட்டுரையில்;

'அகராதியினை உருவாக்குவதே ஆராய்ச்சியாய் இருக்க, பேரகராதி உருவாக்கம் என்பது பல நூறு ஆராய்ச்சிக்குச் சமம்' என்று வெளிவந்துள்ளது.

அது தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்.

'மர்ரே எஸ்.ராஜம் தலைமையில் கூட்டு முயற்சியாகதொகுத்த 'பாட்டும் தொகையும்' நூலில் விளக்கங்கள் இருந்ததும், எனது ஆய்வுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. (http://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html)

நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் இன்றி, 'பிழையில்லாமலும் எளிமையாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களின் வீடுகள் தோறும் சென்றடைய வேண்டும்' என்ற உயரிய நோக்கில், பல அறிஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவானது, அந்த குழுவின் வெளியீடுகள் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.html)

அத்தகைய கூட்டு முயற்சி இன்றி, தனிநபரால் தொகுக்கப்பட்டு வெளிவந்தால், என்னென்ன குறைகள் வெளிப்படும்? என்று எவரேனும் ஆய்வு மேற்கொள்ள விரும்பினால்;

அந்த முயற்சிக்கு, மேலே குறிப்பிட்ட 'தமிழிசைப் பேரகராதி' துணை புரியும்.'

'உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது, தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?' என்ற தலைப்பில் மம்மது உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் புரிந்துள்ள தவறுகளை உரிய சான்றுகளுடன் வெளியிட்டுள்ளேன்

அதற்கான மறுப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்

இது டிஜிட்டல் யுகம். மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், சான்றுகளின் வரைஎல்லைகள் தெரியாமல், ஆராய்ச்சி என்ற பெயரில், அபத்தமாக வெளிவந்துள்ள முடிவுகள் எதையும், இருட்டில் தள்ளி தப்பிக்க முடியாது

பிரபல தமிழ் மற்றும் தமிழ் இசை ஆய்வாளர்களின் படைப்புகளில் உள்ள குறைபாடுகளை 'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION' என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளேன்

எனது ஆராய்ச்சிகள் உள்ளிட்டு, இதுவரை வெளிவந்துள்ள‌ தமிழ் மற்றும் தமிழ் இசை தொடர்பான ஆராய்ச்சிகளை எல்லாம், இளம் ஆராய்ச்சியாளர்கள் துணிச்சலுடன் மறு ஆய்வு செய்து குறைபாடுகளை எல்லாம் வெளிப்படுத்துவதை, நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.

விமர்சன சிந்தனை அணுகுமுறையே (Critical Thinking) புலமையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். பிம்ப வழிபாட்டு முறையானது புலமையின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.

இசை ஆராய்ச்சிக்கு முன், நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், பாரதி தொடர்பாக ஆராய்ச்சி செய்து, 'வெற்றிமணி' என்ற புனைப்பெயரில் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் .மார்க்ஸ், அந்த நூலைக் கண்டித்து புத்தகமும் கட்டுரைகளும் வெளியிட்டார்; கருத்தரங்குகளிலும் உரை நிகழ்த்தினார். பாரதி தொடர்பான எங்களின் எதிரெதிர் நிலைப்பாடுகள் எங்களின் நட்பில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்தியதில்லை. ஒருவர் மற்றவரின் அறிவு நேர்மையையோ, சமூக நேர்மையையோ சந்தேகித்ததில்லைஅந்த காலக்கட்டத்தில் கல்லூரியில் முன்னெடுத்த போராட்டங்களில், எனக்கு மிகவும் உற்ற துணையாக பங்களித்தவர் .மார்க்ஸ். ஆனால் இன்று 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' என்ற பொதுவான நோக்கத்திற்காக;

'ஆர்.எஸ்.எஸ்' ஆதரவாளராக பயணிப்பவர்களுடன் இணைந்து பங்களிக்க மறுக்கும் 'இந்துத்வா' எதிர்ப்பாளர்கள் இருப்பதானது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது போன்ற போக்கானது, 'இந்துத்வா ஆதரவாளர்கள்' மத்தியில் இருக்கிறதா? என்பதை அறியும் அனுபவம் இதுவரை கிட்டவில்லை.

எனது ஆராய்ச்சிகளின் பலன்களானபதிவுகளில், எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேற்குறிப்பிட்ட புத்தகத்தை .மார்க்ஸ் கண்டித்தது போல, எனது பதிவுகளையும், கண்டித்து எழுதுவதை வரவேற்கிறேன். அவை நிச்சயமாக, என்னை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும்; 'சமூகக் கிருமிகளின்' பிடியிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள்வதற்கு, பங்களிப்பு வழங்குவதற்காக.’ 

மேற்குறிப்பிட்ட பதிவில் கீழ்வரும் கருத்தையும் வெளிப்படுத்தி உள்ளேன்.

'எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால்.

பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்; அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன்.' 

'அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம்நான் மன சாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.' (https://tamilsdirection.blogspot.com/2019/06/alexithymic.html)

ஒரு சமுகத்தில் புறத்தில் எதை இழந்தாலும், மீண்டு எழுவது சாத்தியமாகும்; 'அந்த' சமூகத்தின் 'அகம்' வலிமையுடன் நீடிக்கும் பட்சத்தில். ஆனால் 'அந்த சமூகத்தின் 'அகம்' சீரழிவினைச் சந்தித்தால், மீள்வது சிக்கலாகி விடும்.

சமூகத்தின் 'அகம்' சீரழிவினைச் சந்திப்பதால், அந்த சமூகத்தின் புலமையானது, அறிவுபூர்வ திசையில் இருந்து தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்க நேரிடும்.

தமிழ் உணர்வு, பெரியார், இந்துத்வா ஆதரவாளர்களை உள்ளடக்கியஎனது சமூக வட்டத்தில் கருத்து வேறுபாடுகளை மதித்து அறிவுபூர்வமாக விவாதிப்பதை ஊக்குவிக்கும் அந்த முயற்சியை நான் துவங்கி விட்டேன். நம்மோடு உடன்பட்டு இருப்பது போல் ஏமாற்றி, பலவகையிலான பலன்கள் அனுபவித்து, பின் 'செல்வாக்கான' தொடர்புகள் கிடைத்தவுடன் 'ஓடி விடும்', லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'கள் நமது சமூக வட்டத்தில் இருக்கும்போது, அவர்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினமே என்பதும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் பெற்றஎன் அனுபவமாகும்

அப்படி ஏமாந்தாலும், அதன்பின் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன், உள்நோக்கமோ. சுயநலமோ இல்லாமல்,  நமது சமூக வட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். அது போல ஒவ்வொருவரும் தமது சமூக வட்டத்தில் துவங்கினால், வழிபாட்டுப் புழுதிப் புயலிலிருந்து தமிழ்நாடு மீள வாய்ப்புள்ளது. அந்த மீட்சியில் தமிழும் தனது மரணப் பயணத்திலிருந்து மீளவும் வாய்ப்புள்ளது.முயல்வோம். வெற்றி பெறுவோம்; ‍ பாராட்டு, புகழ் போன்ற போதைகளில் சிக்காமல்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html


அகத்தில் சீரழிந்தவர்களின் பணம், செல்வாக்கு உள்ளிட்ட வலிமைகள் எல்லாம், சமூகத்தின் 'அகம்' சீரழிவுடன் நீடிக்கும் வரையில் தான் மிரட்டும். நமது 'அகம்' வலிமையுடன் நீடிக்கும் பட்சத்தில், எதை இழந்தாலும், நாம் மீண்டு எழுவது சாத்தியமே. அதே போக்கில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் வேகத்தில், சமூகத்தின் அகச்சீரழிவின் வலிமையும் குறையும்; 'அந்த' மிரட்டல் அச்சமாக மாற, 'அமாவாசைகளாக' மிரட்டியவர்கள் சமூகத்தின் தூசியாக ஒதுங்குவார்கள்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சியின் முன்னறிவிப்பாக.

‘1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின் குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html )


Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment