Wednesday, July 25, 2018

தமிழின் வலிமையின் துணையோடு, மது புலமையின் வலிமையை வளர்ப்போம்;


எம்.ஜி.ஆர்  ", ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்(1)


மதுரையில் 1981-இல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில், 'திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழிசை எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?' என்று வீ.பா.கா. சுந்தரம் உரையாற்றினார். உடனே எம்.ஜி.ஆர் மேடையில் ஏறி, 'நான் இப்போது முதல்வர். தமிழிசை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள்; செய்கிறேன்" என்று அறிவித்து; பின் வீ.பா.கா சுந்தரத்தை அணைத்து, அவரின் காதருகே, ", ரி, , , , , நி, தமிழா?" என்று எம்.ஜி.ஆர் கேட்க, உடனே வீ.பா.கா.சுந்தரம் "ஆமாம் ஐயா. வாய்ப்பு தந்தால் நேரில் விளக்குகிறேன்' என்று சொன்னார். அதன்பின் சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி, சில காலம் கழித்து மறைந்தார்.

வீ.பா.கா சுந்தரம் என்னிடம் மேற்குறிப்பிட்ட தகவலை சொன்னார். ...தி.மு. அவைத் தலைவராக இருந்த காலத்தில், புலமைப்பித்தனும் அதை என்னிடம் உறுதிப்படுத்தினார்.

2001 காலக்கட்டத்தில் அமைச்சர் பொன்னையனையும் வீ.பா.கா. சுந்தரத்தையும் சந்திக்க வைத்து, அதன் மூலம் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆரின் 'தமிழிசை மீட்பு' வாக்குறுதியை, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு செல்ல, புலமைப்பித்தன் முயற்சித்தார். ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. ஏன் நடைபெறவில்லை? என்ற ஆராய்ச்சியானது, ஜெயலலிதாவின் மர்மமான மரணம் நடந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பத்துடன் தொடர்புடையதாக, வருங்காலத்தில் வெளிப்பட்டால் வியப்பில்லை.

, ரி, , , , , நிஎனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், சமஸ்கிருதத்தில் 'ஷட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்' என்ற சுரப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

, ரி, , , , , நிஎனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், தமிழில் சுரப்பெயர்கள் 'குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்று அழைக்கப்பட்டதற்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. அதனை, தமிழ் இசை ஆய்வுகளில்  முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர்,  1917 இல் வெளிவந்த, தனது 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பிரமிக்க வைக்கும் வகையில்,  ', ரி, , , , , நி' தமிழ் இசைக்கே உரியவை என்று நிறுவி, மேலேக்குறிப்பிட்ட சமஸ்கிருத சுரப்பெயர்கள், சமஸ்கிருத இலக்கணப்படி, 7 சுர எழுத்துக்களை குறிக்காது என்பதற்கு, திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, அந்நூலில் வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

அவருக்குப்பின் 'தமிழிசை மீட்பு' என்ற நோக்கினை, 'வெறுப்பு நோயில்' சிக்க வைத்து தமிழ்நாடு பயணித்தது. அதன் விளைவாக, ', ரி, , , , , நி' 'தமிழ் இசை எழுத்துக்கள்' என்று ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்திய உண்மையானது இருளில் சிக்கியதா? என்று;

முதல்வர் எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய மேற்குறிப்பிட்ட, ', ரி, , , , , நி தமிழா?' என்றகேள்வியானது எழுப்பியுள்ளது.

ஆபிரகாம் பண்டிதருக்குப் பின், விபுலானந்த அடிகள் 'யாழ் நூல்' மூலம் தமிழ் இசைக்கு ஆதாரமாக சமஸ்கிருத நூல்களை முன்நிறுத்தி, ', ரி, , , , , நி' ஆகியவற்றின் தமிழ்த்தொடர்பானது இருட்டில் மறைய வழிவகுத்தார். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html  ) அது தெரியாமல், தமிழ்நாட்டில் 'தமிழ் இசை இயக்கம்' என்பதானது 'சமஸ்கிருத எதிர்ப்பு' என்ற 'வெறுப்பு நோயில்' சிக்கி பயணித்த போக்கில், விபுலானந்த அடிகள் முன் நிறுத்தப்பட்டு, ஆபிரகாம் பண்டிதர் இருட்டில் வைக்கப்பட்டார்.

ஆபிரகாம் பண்டிதர் வெறுப்பு நோயில் சிக்காமல், தமிழின் வலிமையின் துணையோடு, தமது புலமையின் வலிமையை வளர்த்து, புலமை மிகுந்த பிராமணர்களையும், பிராமணரல்லோதோரையும் மட்டுமே தமது சமூக வட்டத்தில் அனுமதித்து, எவ்வாறு பயணித்தார்? அதே வழியில் நான் எவ்வாறு பயணிக்கிறேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

‘'பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற வெறுப்பு அரசியலில் சிக்காமல், ஆபிரகாம் பண்டிதர் உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல் என்ற திசையில், பிராமணர்களிலும், பிராமணரல்லாதாரிலும் இருந்த புலமையாளர்களை தமது ஆய்வு வட்டமாகக் கொண்டு, தமது ஆய்வுகளை மேற்கொண்டார். அதனால் அறிவுபூர்வமான விமர்சனங்களின் ஊடே, அவரின் புலமையும், ஆய்வும் வளர்ந்தன.

அதற்கு மாறாக, வெறுப்பு அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும், அதுவே கேடாக அமையும்.

அது மட்டுமல்ல, கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளின் ஆர்வலர்கள் தமிழை வெறுப்பதற்கும், தமிழ்ப்புலமையாளர்களின் சான்றுகள் 'உணர்ச்சிபூர்வமானவை' என்று ஒதுக்கி,  இலக்கியத் தமிழே, 'சமஸ்கிருதத்தின் 'நன்கொடை' ஆகும்', என்று உலகப்புகழ் பெற்ற செல்டன் பொல்லாக் தமது நூலில்  (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html), அறிவித்ததற்கும், 'வெறுப்பு அரசியலில்' பயணித்த தமிழ்ப்புலமையாளர்களே காரணம் ஆவர். கம்போடியாவில் உள்ள 'ஆங்கோர் வாட்' கோவிலானது, 'தமிழரின் அடையாளம்' என்று அறிவிப்பது போன்ற (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html), 'சான்றற்ற/மிகைப்படுத்தப்பட்ட வறட்டுப் பெருமைகள்' எல்லாம், தமிழைக் கேலிக்கிடமாக்கி, தமிழின் உண்மையான புகழ் பரவ தடைகளாக வெளிப்பட்டு வருகின்றன.

'வெறுப்பு நோயில்' சிக்கி, சமூகத்தில் அழிவுபூர்வ அலையியற்றி (Negative Oscillator) போல வாழ்பவர்கள் எல்லாம், தமக்கான வாழ்க்கையைத் தொலைத்தும், வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கும் இன்பங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் தொலைத்தும், அதன் காரணமாகவே விளையும் நோய்களில் சிக்கி வாழ்வார்கள்;

என்பதனை ஆய்வுமுடிவுகளுடன் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

'வெறுப்பு நோயில்' சிக்காமல், நிகழ்கால வரலாற்றில் தமிழ் இசை மீட்பு நோக்கில்,  பிரமிக்கும் வகையில் பயணித்தவர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

தமிழ்நாட்டில் உரிய புலமையின்றி, 'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயானது, பிராமணர்களிடமும், பிராமணரல்லாதாரிடமும் வெளிப்பட்டு வருவதை நான் அறிவேன். உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலில் பயணிக்கும் தமிழ் இசை ஆர்வலர்களையும், தமிழ் இசையை இரண்டாம் தரமாக கருதி, கர்நாடக இசை உயர்வு போதையில் பயணிக்கும் பிராமணர்களையும், எனது சமூக வட்டதில் இருந்து அகற்றியே, நான் வாழ்கிறேன்';’ (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html


இந்திய மொழிகளில், 'ச, ரி, க, ம ,ப, த, நி' ஆகிய 7 இசை எழுத்துக்களின் தொன்மையான நூல் ஆதாரமாக, தமிழின் 'சேந்தன் திவாகரமும்', தொல்லியல் சான்றாக, தமிழ்நாட்டில் உள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டும் இருக்கின்றன; என்பதை பல வருடங்களுக்கு முன் சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த உலக இசைக்கருத்தரங்கில் வெளிப்படுத்தினேன்; எந்த மறுப்புக்கும் இடமின்றி.

ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்திய ', ரி, , , , , நி  தமிழே' என்ற கண்டுபிடிப்பினை, எனது 'தமிழிசையின் இயற்பியல்' ( 1996- Physics of Tamil Music)) என்ற முனைவர் பட்ட ஆய்வில் பதிவு செய்துள்ளேன். ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்திய ', ரி, , , , , நி  தமிழே' என்ற கண்டுபிடிப்பானது, இருட்டில் நீடிப்பதன் காரணமாகவே, அதனுடன் தொடர்புடைய, அரச்சலூர், குடுமியான் மலை இசைக்கல்வெட்டுகள் தொடர்புடைய எனது கண்டுபிடிப்புகளும், வெளிச்சத்திற்கு வராமல் இருக்கின்றன‌.

தமிழ்நாட்டில்சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அந்த முக்கியத்துவத்தை நான் வெளிப்படுத்திய போதே 'விழித்திருந்தால்', எவ்வளவு சுற்றுலா வருமானமும், எண்ணற்ற வேலை வியாபார வாய்ப்புகளும் பெருகியிருக்கும்? இனியும் அது தாமதமாகலாமா? 'எந்திர' தமிழ்ப்புலமையால் வந்த விளைவா இது? என்ற விவாதங்களை, இனியும் தாமதிப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகும்………. சமஸ்கிருத நூல்களில் இருந்து கண்டுபிடிக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பானவை எல்லாம், உடனுக்குடன் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் சூழலில்; (https://sanskritdocuments.org/articles/ScienceTechSanskritAncientIndiaMGPrasad.pdf  )


பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வெளிப்பட்ட மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம், 20 வருடங்களுக்கும் மேலாக 'வெளிச்சத்திற்கு' வராமல் இருக்கும் அவலமானது, தமிழைத் தவிர, வேறு எந்த மொழிக்கும், எந்த மொழி ஆய்வாளருக்கும், உலகில் நேர்ந்திருக்கிறதா? (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html    )

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று (192) வரிகளில் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம்;

சாதி, மத, மொழி அடிப்படைகளில் 'வெறுப்பு மனநோயில்' சிக்காமல்;

ஊழல் குற்றவாளிகளை எல்லாம், அந்த 'வெறுப்பு நோயின்' உணர்ச்சிபூர்வ பலத்தில், 'நம்மாளு' என்று ஆதரிக்கும் தவறிலும் சிக்காமல்;

தமது வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன் இயற்கையின் போக்கினை உணர்ந்து ('திறவோர்') ;

"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே (காரியம் சாதிக்க அடிவருடாமல்);

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" (சமூக ஒப்பீடு உயர்வு நோயில் சிக்குவதைத் தவிர்த்து);

பயணித்தவர்கள் தமிழர்கள் ஆவார்கள். அதனை 'பழமைவாதமாக' கருதி ஒதுக்குவது சமூக சீரழிவிற்கே வழி வகுக்கும்.

ஆபிரகாம் பண்டிதரும், நானும், இன்னும் பலரும் 'வெறுப்பு நோயில்' சிக்காமல், தமிழின் வலிமையின் துணையோடு, தமது புலமையின் வலிமையை வளர்த்து, புலமை மிகுந்த பிராமணர்களையும், பிராமணரல்லோதோரையும் மட்டுமே தமது சமூக வட்டத்தில் அனுமதித்து பயணித்து வந்துள்ளோம்; வெறுப்பு நோயினை உணர்ச்சிபூர்வமாக வளர்த்து, புலமைக்கு கேடாக பயணிக்கும் பிராமணர்களையும், பிராமணரல்லாதோரையும் 'சமூக புழுதிகளாக' கருதி ஒதுக்கி.

அவ்வாறு சமூக நெறியுடன் பயணிக்கவில்லையென்றால், ‘எது அறிவுபூர்வமானது? எது அபத்தமானது? என்பது பற்றிய குழப்பம் உருவாகும். அது ஒரு சமூகத்தில் அறிவுப்புலத்திற்கு ஆபத்தானதாகிவிடும். அதன்விளைவாக குப்பையில் இருக்க வேண்டியது கோபுரத்திற்குப் போக, கோபுரத்தில் இருக்க வேண்டியது குப்பைக்கு போக வேண்டியதாகி விடும். சமுகப் பயணத்தின் 'என்ஜீனாக'(Engine)  இருப்பது அறிவுப் புலம் ஆகும். அது 'குப்பைகளின்' கரங்களில் சிக்கியபின், அந்த சமூகம் இழிவான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது.'; ( https://groups.google.com/forum/#!topic/minTamil/hrOOYG68Z1w )


தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகள் தொடர்பான எனது அனுபவங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் தி.மு. தலைவர் மு.கருணாநிதியின் நோய் ஆகியவற்றிற்குப் பின் தமிழுக்கு கேடான அந்த போக்குகள் எல்லாம் முடிவை நெருங்குகின்றன, என்பதும் எனது கணிப்பாகும்.

எனவே தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate)  படிப்புகளில் எண்ணற்ற மாணவர்கள் பயின்று வரும் படிப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கம்ப ராமாயாணம், பெரிய புராணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கல்லாடம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில்;

ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு எல்லாம், திருத்த பின்னிணைப்புகள் வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

எனது ஆய்வினை, ஒரு குழுவின் துணையுடன் தொடர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும்;

The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts’   என்ற ஆங்கில நூலை எழுதி முடித்துள்ளேன். இந்தியாவில் அல்லது சிங்கப்பூரில் புகழ் பெற்ற பதிப்பாளர் மூலம் அதனை வெளியிடவும் முயற்சி செய்து வருகிறேன்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருவதை உணர்ந்து. (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html )


தாய்மொழி வழியில் அடிப்படைக்கல்வி கற்று, புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சி (Cognitive Skills Development) பெற்று (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html);


வாழும் சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டிய வாழ்வும், அதன் மூலம் தனது இயல்போடு இசைந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passions) அடையாளம் கண்டு, பேணி வளர்த்து, இயல்பான இன்பங்களை அனுபவித்தும், துன்பங்களை அதற்கான 'விலையாக' ‘அனுபவித்தும், நான் வாழ்ந்து வருகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html  )


எனவே 'வெறுப்புநோயில்' இருந்து விடுபட்டு, தமிழின் வலிமையின் துணையோடு, எனது 'இசையின் இயற்பியல்' (Physics of Music) புலமையின் வலிமையானது வளர்ந்ததன் காரணமாகவே, இசைத்தகவல் தொழில் நுட்ப புலமையாளனாக (Music Information Technologist) உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறேன். ( http://drvee.in/ ).

மேலே குறிப்பிட்ட 'சிக்னல்கள்' காரணமாக, தமிழும், தமிழ்நாடும் எனது கண்டுபிடிப்புகளால் பலன்கள் பெறும் காலமும் நெருங்கி வருகிறது.

எனவே எம்.ஜி.ஆர் கேட்ட கேள்விக்கான விடையாக, ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்தி இருளில் நீடித்த, ', ரி, , , , , நி  தமிழே' என்ற கண்டுபிடிப்பும், அதன் தொடர்ச்சியான இருளில் நீடித்த‌, அரச்சலூர், குடுமியான் மலை இசைக்கல்வெட்டுகள் தொடர்புடைய எனது கண்டுபிடிப்புகளும், வெளிச்சத்திற்கு வருவதானது தொடங்கி விட்டது.

NOTE: 'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'  
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment