எம்.ஜி.ஆர் "'ச, ரி, க, ம, ப, த, நி' தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம் (2);
மலேசியா பினாங்குத் தீவில் தமிழின் மீட்சி தொடங்கியது
அண்மையில்
மலேசியாவில் பினாங்குத் தீவில் உள்ள 'இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி' அரங்கத்தில், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics in Tholkappiam)
என்ற
தலைப்பில், கணினி, ‘கீபோர்ட்’ இசைக்கருவி
(Music Keyboard) ஆகியவற்றின்
துணையுடன் விளக்க உரை நிகழ்த்தினேன். ஆசிரியர்
பயிற்சிக்கல்லூரி ஆசிரியர்கள்,
கல்லூரி மாணவர்கள், தமிழ்ப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் சுமார் 100க்கும் அதிகமாக அரங்கை நிரப்பியிருந்தனர்.
பினாங்குத்
தீவு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் குழாமும், அரசு கல்வித்துறையும், பினாங்கு
சுய மெய்யறிவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அதுவாகும்.
ஏற்கனவே
'Musical Phonetics in tholkAppiam' என்ற
தலைப்பில் எனது ஆய்வுக்கட்டுரையானது, 2013இல் சென்னை உலகத்தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் ஆய்வு இதழில் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, கோயம்புத்தூரில் உள்ள PSG Tech-இல் இந்தியா உள்ள
பொறியியல் கல்லூரிகளிலிருந்து வந்திருந்த சுமார் 100 கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்ற கீழ்வரும் நிகழ்ச்சியிலும், மேற்குறிப்பிட்ட 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான
கண்டுபிடிப்பினை விளக்கினேன்.
“Research Perspectives in Music
Signal Processing“, covering ” Musical Linguistics & Natural Language
Processing ” from Electronics & Communications Engineering (ECE) department at PSG Tech, Coimbatore, under UGC
sponsored Faculty Development Programme, for the engineering faculty, of the
universities in South India.
‘எனது
ஆய்வானது ‘புதிய உத்தியில்’ இருப்பதை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் மலேசியாவில் உள்ள பொறியியல் பேரா.முனைவர். R.சிவக்குமார் ஆவார்.’ என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html
) அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவே, மேலே குறிப்பிட்ட பினாங்கு
தீவில் நடந்த நிகழ்ச்சி ஆகும்.
மலேசியாவில்
பினாங்கு தீவில், மலேசிய மாநில அரசின் கல்வித்துறையும், பினாங்குத் தீவு தமிழ்ப்பள்ளி தலைமை
ஆசிரியர் குழாமும், பினாங்கு சுய மெய்யறிவகமும் இணைந்து
ஏற்பாடு செய்திருந்த ஒரு பொது நிகழ்ச்சி
மூலமாக, முதல் முறையாக 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' என்ற
எனது கண்டுபிடிப்பானது, உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
தொல்காப்பியம்
இலக்கண நூல் மட்டுமல்ல என்பதையும்;
தொல்காப்பியம்
இலக்கண நூல் மட்டுமின்றி இசை,
நடனம் உள்ளிட்டு பல துறைகளின் தகவல்களின்
புதையலாகும், என்பதையும்;
சுட்டிக்காட்டி,
தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம்
என்பதானது, உலக மொழிகளுக்கான இசை
மொழியியல் (Musical
Linguistics) இலக்கணமாகும்;
என்பதையும்
எனது உரையில் விளக்கினேன்.
இன்று
'NLP (Natural Language Processing) ' என்ற
துறையில் ' Text to Speech; Speech to Text; Grammar
Check; Spell Check ' போன்ற பல கணினி மென்பொருட்கள்
நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.
தொல்காப்பியத்தில்
உள்ள இசை மொழியியல் இலக்கணமானது,
தமிழ் மட்டுமின்றி, மலாய், சீனமொழி உள்ளிட்டு உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கான
'இசை மொழியியல் இலக்கணம்' ஆகும் என்பதையும் விளக்கினேன். அதன் மூலம் உலகில்
உள்ள பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' என்ற
துறையானது உருவாக வேண்டிய கட்டமானது நெருங்கி விட்டதையும் விளக்கினேன்.
அவ்வாறு
அரங்கேறும் 'இசை மொழியியல்' துறை
மூலமாக, நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கீழ்வரும்
NLP பொருட்கள் சந்தைக்கு வரும் என்பதையும் விளக்கினேன்.
Lyric to Music; Music to Lyric;
Music Grammar Check, etc will be future NLP products based on the Musical
Linguistics in Tholkappiam
நிகழ்காலத்தில்
புதிய நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகள் தொல்காப்பியம் மூலமாக உருவாகும் காலம் நெருங்கி விட்டது. இனி பழந்தமிழ் இலக்கியங்களை
நோக்கிய ஆய்வுப்படையெடுப்புகள் எல்லாம்,
உலகில் உள்ள உள்ள பல்கலைக்கழககங்களில்
இருந்து தொடங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை.
(‘தமிழின் அடுத்த
கட்ட (Next Phase) புலமை? (2); புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்’;
http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html
)
அது
மட்டுமல்ல, உலக அளவில் 'இசை
மொழியியல்' தொடர்புள்ள 'அரச்சலூர் இசைக்கல்வெட்டும்', 'குடுமியான்மலை இசைக்கல்வெட்டும்';
மேலே
குறிப்பிட்ட ஆய்வுபடையெடுப்புகளில் சிக்கும் காலமும் நெருங்குகிறது.
அதன்
விளைவாக 'அரச்சலூர் கல்வெட்டினை' பாதுகாக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு விழிக்கும். 'ஆங்கோர் வாட்' கோவில்கள் உலக சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து, கம்போடியாவில்
முக்கிய வருமான மூலமாக மாறி உள்ளது. அது
போலவே உலக இசைப்பாரம்பரிய சுற்றுலாப்
பயணிகளை 'அரச்சலூர்
இசைக்கல்வெட்டும்', 'குடுமியான்மலை இசைக்கல்வெட்டும்' ஈர்த்து,
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நல்ல சுற்றுலா தொழில்,
வியாபார, வேலைவாய்ப்புகள் உருவாகும் காலுமும் நெருங்கி வருகிறது.
‘எம்.ஜி.ஆர் கேட்ட
கேள்விக்கான விடையாக, ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்தி இருளில் நீடித்த, 'ச, ரி, க,
ம, ப, த, நி தமிழே'
என்ற கண்டுபிடிப்பும், அதன் தொடர்ச்சியான இருளில்
நீடித்த, அரச்சலூர், குடுமியான் மலை இசைக்கல்வெட்டுகள் தொடர்புடைய எனது
கண்டுபிடிப்புகளும், வெளிச்சத்திற்கு வருவதானது தொடங்கி விட்டது.’ (‘தமிழின் வலிமையின் துணையோடு, நமது புலமையின்
வலிமையை வளர்ப்போம்; எம்.ஜி.ஆர் "ச,
ரி, க, ம, ப,
த, நி, தமிழா?" என்று
கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்.’; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html
)
என்பதை
ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். மேலே குறிப்பிட்ட பினாங்கு
தீவில் நடந்த 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' நிகழ்ச்சியே,
அந்த தொடக்கமாகும்.
‘தொல்காப்பியத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள
'இசை மொழியியல்' என்பதானது, சமஸ்கிருத எழுத்துகளின் தோற்றம் பற்றிய, பாணினியின் 'அஷ்டதாயி'
இலக்கண நூல் தொடர்பான, 'மகேஸ்வர
சூத்திரங்களுடன்' (https://en.wikipedia.org/wiki/Shiva_Sutras
) எந்த அளவுக்கு ஒத்து வருகிறது? என்ற ஆய்வுத் திட்டத்தினையும்
தொடங்கியுள்ளேன். இந்தியாவில் உள்ள சான்றுகளை விட,
கம்போடியாவில் எனது மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கு
உதவும் சான்றுகள் இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.
எனது
ஆய்வு முயற்சிகள் வெற்றி பெறுமானால், சமஸ்கிருதம் மூலமாக, கம்போடியாவில் தமிழுக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது. தமிழ் இசையியலின் (Tamil
Musicology) முக்கியத்துவமும்,
உலகின் கவனத்தை ஈர்க்கவும் அது வழி வகுக்கும்.
(‘கம்போடியாவில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat) (1); தமிழனின் அடையாளமா? 'இந்திய' அடையாளமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html
)
பல தமிழ்ப்புலவர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்கள் எழுதியது தொடர்பான சான்றுகள் எல்லாம், மலேசியாவில் நடந்த முதல் உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வுத்தொகுப்பின் மூலமாக உலகின் கவனத்தை ஈர்த்தன.
அமர்த்யா சென் எழுதிய ‘Identity and Violence’ (https://en.wikipedia.org/wiki/Amartya_Sen#Books), தமிழரான ஆனந்த குமாரசாமி எழுதிய ‘The Dance of Shiva’ உள்ளிட்ட இன்னும் பல நூல்கள் (https://en.wikipedia.org/wiki/Ananda_Coomaraswamy#Works_by_Coomaraswamy
) போன்ற
இன்னும் பல இந்தியர்கள் எழுதிய
நூல்கள் மூலமாக ஆங்கில மொழியின் பெருமை அதிகரித்தது. அது போலவே தமிழ்ப்புலவர்கள்
எழுதிய சமஸ்கிருத நூல்கள் மூலமாக சமஸ்கிருத மொழியின் பெருமை அதிகரித்தது. தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத வெறுப்பின் காரணமாக இருளில் சிக்கிய இது போன்ற உண்மைகள்
எல்லாம், வெளிச்சத்திற்கு வர வேண்டிய நேரமும்
நெருங்கி விட்டது.
மேலே
குறிப்பிட்டவற்றை சுருக்கமாக பினாங்கு தீவில் நடந்த நிகழ்ச்சியில் விளக்கினேன். அந்த பின்னணியில் சமஸ்கிருதம்
உள்ளிட்ட எந்த மொழியையும் வெறுத்து
பயணிப்பதானது, தமிழ்ப்புலமையின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பதை
விளக்கினேன்.
உலக அளவில் மொழியியலில்(Linguistics), 'Morphology' என்பதானது சமஸ்கிருத மொழியில் பாணினியின் இலக்கண அடிப்படையில் உருவானதாகும். (‘The history of morphological analysis dates back to the ancient Indian linguist Pāṇini, who formulated the 3,959 rules of Sanskrit morphology in the text Aṣṭādhyāyī by using a constituency grammar.’; https://en.wikipedia.org/wiki/Morphology_(linguistics) ) திருச்சி NIT-இல் 'NLP' (Natural Language Processing) பாடத்திட்டத்தினை 'M.B.A'க்காக உருவாக்கிய போது, உலக மொழியியலில், சமஸ்கிருத மொழி பெற்றுள்ள முக்கியத்துவம் அறிந்து வியந்தேன்.
எனது கண்டுபிடிப்புகள் மூலமாக உலக மொழிகளுக்கான 'இசை மொழியியல்'(Musical Linguistics) தொல்காப்பியத்தின் யாப்பிலக்கண அடிப்படையில் உருவாகும் நேரம் வந்து விட்டது. எனவே உலக மொழிகளுக்கான மொழியியலின் வளர்ச்சிக்கு அடிப்படையாக பாணினியின் இலக்கணமும், 'இசை மொழியியலின்' அடிப்படையாக தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமும் அமைந்திருப்பதானது, தொன்மை இந்தியாவின் அறிவுச் செல்வமானது, நிகழ்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுவதானது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் கரத்தில் இருந்த 'தமறு' என்ற தாளக்கருவியில், ஒரு பக்கத்திலிருந்து ஒலித்ததானது சமஸ்கிருதத்தையும், மறுபக்கத்திலிருந்து ஒலித்ததானது தமிழையும் தோற்றுவித்தது.
‘Siva’s drum Damaruka gave Sanskrit from one side and Tamil from another side….. Tamil poets Kamban, Paranjothy and Bharatiyar openly proclaimed this truth and Kalidasa indirectly referred to it in his Raghuvamsam. Saivite and Vaishnavite saints also praised Sanskrit and Tamil in their hymns from seventh century CE.’ ; https://tamilandvedas.com/2014/11/13/origin-of-tamil-and-sanskrit/ )
இவை போன்ற தகவல்கள் எல்லாம் பல பரிமாண புலமையின் ஆய்வுக்கு உரியவையாகும்;
என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )
‘வெறுப்பு' அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும், அதுவே கேடாக அமையும். அதிலும் ஊழல் தலைவர்களை அடிவருடுபவர்களின் புலமையின் வளர்ச்சியானது குன்றி, 'அறிவு விபச்சார புலமையாக' சீரழியும் அபாயமும் உண்டு; பொதுவாழ்வு வியாபாரத்தின் சமூக முதுகெலும்பாக; 'என்கவுண்டரில்' இறந்த 'ரவுடி' வீரமணி மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) பெற வழி வகுத்து.( http://tamilsdirection.blogspot.com/2018/02/ )
எனது கண்டுபிடிப்புகள் மூலமாக உலக மொழிகளுக்கான 'இசை மொழியியல்'(Musical Linguistics) தொல்காப்பியத்தின் யாப்பிலக்கண அடிப்படையில் உருவாகும் நேரம் வந்து விட்டது. எனவே உலக மொழிகளுக்கான மொழியியலின் வளர்ச்சிக்கு அடிப்படையாக பாணினியின் இலக்கணமும், 'இசை மொழியியலின்' அடிப்படையாக தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமும் அமைந்திருப்பதானது, தொன்மை இந்தியாவின் அறிவுச் செல்வமானது, நிகழ்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுவதானது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் கரத்தில் இருந்த 'தமறு' என்ற தாளக்கருவியில், ஒரு பக்கத்திலிருந்து ஒலித்ததானது சமஸ்கிருதத்தையும், மறுபக்கத்திலிருந்து ஒலித்ததானது தமிழையும் தோற்றுவித்தது.
‘Siva’s drum Damaruka gave Sanskrit from one side and Tamil from another side….. Tamil poets Kamban, Paranjothy and Bharatiyar openly proclaimed this truth and Kalidasa indirectly referred to it in his Raghuvamsam. Saivite and Vaishnavite saints also praised Sanskrit and Tamil in their hymns from seventh century CE.’ ; https://tamilandvedas.com/2014/11/13/origin-of-tamil-and-sanskrit/ )
இவை போன்ற தகவல்கள் எல்லாம் பல பரிமாண புலமையின் ஆய்வுக்கு உரியவையாகும்;
என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )
‘வெறுப்பு' அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும், அதுவே கேடாக அமையும். அதிலும் ஊழல் தலைவர்களை அடிவருடுபவர்களின் புலமையின் வளர்ச்சியானது குன்றி, 'அறிவு விபச்சார புலமையாக' சீரழியும் அபாயமும் உண்டு; பொதுவாழ்வு வியாபாரத்தின் சமூக முதுகெலும்பாக; 'என்கவுண்டரில்' இறந்த 'ரவுடி' வீரமணி மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) பெற வழி வகுத்து.( http://tamilsdirection.blogspot.com/2018/02/ )
அது
மட்டுமல்ல, கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளின் ஆர்வலர்கள் தமிழை வெறுப்பதற்கும், தமிழ்ப்புலமையாளர்களின் சான்றுகள் 'உணர்ச்சிபூர்வமானவை' என்று ஒதுக்கி, இலக்கியத்
தமிழே, 'சமஸ்கிருதத்தின் 'நன்கொடை' ஆகும்', என்று உலகப்புகழ் பெற்ற செல்டன் பொல்லாக் தமது நூலில் (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html),
அறிவித்ததற்கும், 'வெறுப்பு அரசியலில்' பயணித்த தமிழ்ப்புலமையாளர்களே காரணம் ஆவர். கம்போடியாவில் உள்ள 'ஆங்கோர் வாட்' கோவிலானது, 'தமிழரின் அடையாளம்' என்று அறிவிப்பது போன்ற (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html
), 'சான்றற்ற/மிகைப்படுத்தப்பட்ட வறட்டுப் பெருமைகள்' எல்லாம், தமிழைக் கேலிக்கிடமாக்கி, தமிழின் உண்மையான புகழ் பரவ தடைகளாக வெளிப்பட்டு
வருகின்றன.’ (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html
)
வெறுப்பு
அரசியலில் இருந்து, ஆக்கபூர்வ வளர்ச்சி அரசியல் நோக்கிய திருப்பு முனையில் தமிழ்நாடு உள்ளது. மேலும் இது 'டிஜிட்டல்'(Digital) யுகமாகும்;
பணமூலதன வலிமையைப் பின் தள்ளி, 'அறிவு
வலிமையானது' (Knowledge
is Power; https://www.information-age.com/knowledge-power-data-money-123458725/
) செல்வாக்கு பெற தொடங்கியுள்ள காலமாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்த அரிய தொழில்நுட்பப் புதையல்கள் எல்லாம், 'வெறுப்பு அரசியல் இருளில்' சிக்கியிருந்த நிலைமையானது, எனது ஆய்வுகளின் அறிவு வலிமை என்ற வெளிச்சம் மூலமாக மாறி வருகிறது.
எனவே மேலே குறிப்பிட்ட தமிழின்
வளர்ச்சிக்கான தடைகள் எல்லாம் 'சருகாகி உதிரும்' போக்கின் தொடக்கமாகவே, பினாங்கு தீவில் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி
அரங்கேறியுள்ளது. அதன் மூலமாக,
உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்த்து, தமிழ் வளரும் நல்ல காலம் தொடங்கி
விட்டது.
Note: 'Musical Linguistics in Tholkappiam' ;
https://www.youtube.com/watch?v=Ba1rd0dRy8s&t=51s
Note: 'Musical Linguistics in Tholkappiam' ;
https://www.youtube.com/watch?v=Ba1rd0dRy8s&t=51s
No comments:
Post a Comment