Saturday, July 21, 2018

தமிழ் சந்திக்கும் வித்தியாசமான புகழ்ச் சிக்கல் (1):

 


எனது கண்டுபிடிப்புகளின் புகழ் தமிழுக்குக் கிட்டாமல்,


முழுப்புகழும்' எனக்கே சேர்வதா?

 


உலகின் தொன்மையான அரச்சலூர் இசைக்கல்வெட்டுக்கு சரியான முக்கியத்துவம் கிடைத்திருந்தால்

அக்கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ள இசையியல் (Musicology) தகவல்களுடன் தொடர்புடைய (அதையும் நான் தான் வெளிப்படுத்தி வருகிறேன்), 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டும்;

சிற்பங்களில் ஆங்கோர் வாட் கோவில்களுடன் போட்டி போடும் குடுமியான்மலை கோவிலும்;

உரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுமானால்;

ஆங்கோர் வாட் ஈர்த்து வரும் சுற்றுலாப்பயணிகளில், பாரம்பரிய இசை ஆர்வலர்களில் பெரும்பாலோர், தமது வாழ்வில் ஒருமுறையாவது, தமிழ்நாட்டில் உள்ள மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு வருகை புரிவார்கள்.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_15.html  )

சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அந்த முக்கியத்துவத்தை நான் வெளிப்படுத்திய போதே 'விழித்திருந்தால்', எவ்வளவு சுற்றுலா வருமானமும், எண்ணற்ற வேலை வியாபார வாய்ப்புகளும் பெருகியிருக்கும்? இனியும் அது தாமதமாகலாமா? 'எந்திர' தமிழ்ப்புலமையால் வந்த விளைவா இது? என்ற விவாதங்களை, இனியும் தாமதிப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான சொற்களுக்கு உரைகள் சரியான விளக்கம் தரவில்லை, என்பதை 1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்று வரை கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் வெளியிட்டு வருகிறேன்

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களில், எனது ஆய்வில் இடம் பெற்ற வரிகளில் உள்ள சொற்களை நான் எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்துகிறேன்? என்பதையும் 2005 முதல் கீழ்வரும் கட்டுரை மூலமும் விளக்கியுள்ளேன்.

'பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலைத் தேடுவோம்' (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444 )

எனது ஆய்வானது ‘புதிய உத்தியில்’ இருப்பதை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் மலேசியாவில் உள்ள பொறியியல் பேரா.முனைவர். R.சிவக்குமார் ஆவார். எனது ஆய்வுகளை எல்லாம் தொடர்ந்து பாராட்டி ஊக்குவித்தவர் மறைந்த பேரா.முனைவர்.லோகநாதன் (உலகன்) ஆவார்.

எனது 'உத்தியைப்' புரிந்து கொள்ளாமல், 'அந்த' வரிகளுக்கான உரையையே எனது ஆய்வுக்கு எதிராக முன்வைக்கும் தவறு என்பதானது; நான் மிகவும் மதிக்கும், என் மீது அன்பு கொண்ட தமிழ்ப்புலமையாளர்களிடம் வெளிப்பட்டதையும், நான் அனுபவித்திருக்கிறேன்.

அந்த அனுபவம் தொடர்பான வரிகள் வருமாறு:


"கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்" (சிலப்பதிகாரம் அரங்; 16-௧௬ உரை ; http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0451_01.html )

மேற்குறிப்பிட்டஇரண்டு வரிகளிலேயே, உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) சிலப்பதிகாரத்தில் இருந்ததையும், நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2440 )

நான் மிகவும் மதிக்கும், என் மீது அன்பு கொண்ட தமிழ்ப்புலமையாளர், எனது விளக்கத்தினை கேட்ட பின், சற்றே எரிச்சலுடன், உரையில் உள்ள விளக்கத்தினைச் சொல்லி, எனது விளக்கத்தினை நிராகரித்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள உரைகளை எல்லாம் உள்வாங்கிய ஒரு எந்திரன் (Robot), அவ்வாறு நிராகரிப்பதை, என்னால் விளங்கிக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட வரிகளில் உள்ள ஒவ்வொரு சொல் பற்றிய எனது விளக்கமும், அந்த விளக்கங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வரிகளுக்கான விளக்கம் சரியா? உரையில் உள்ள மாத்திரைகள் தொடர்பான விளக்கமானது, ஒரு குறிப்பிட்ட பாணிக்கான உரையே, என்ற எனது விளக்கம் சரியா? 'பாணி' என்ற சொல்லானது, சங்க இலக்கியங்கள் உள்ளிட்டு எந்தெந்த இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன? மேலே குறிப்பிட்டுள்ள உரையின் விளக்கமானது, அங்கெல்லாம் பொருந்துமா? என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், மனப்பாடமாக உரையைச் சொல்லி, மேற்குறிப்பிட்ட வரிகளுக்கான எனது விளக்கத்தினை மறுக்க, ஒரு எந்திரர் போதுமே? மனிதராக உள்ள தமிழ்ப்புலமையாளர் தேவையில்லையே.

அதிலும் இசையியல்(Musicology), இசை இயற்பியல்(Physics of Music), பற்றிய அறிவுகள் தேவைப்படும் மேலே குறிப்பிட்ட வரிகளுக்கான விளக்கத்தினை, தமிழ்ப்புலமை அறிவில் மட்டுமே மறுப்பது சரியாகுமா?

'பைலாலஜி'(Philology) என்பதன் சரியான பொருள் தெரியாமல்
Philology: the study of literature and of disciplines relevant to literature or to language as used in literature;  https://www.merriam-webster.com/dictionary/philology
 
மேலே குறிப்பிட்ட எந்திரர் போல‌,  உரைகளை முன்நிறுத்தி 'இசை இழை' (Musical Thread) தொடர்பான எனது விளக்கத்தினை மறுத்து;

““your interpretations are logically flawed and philologically not justified.” என்று பதில் வந்துள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

இதில் வினோதமான ஒரு பகுதி உண்டு.

'இசை இழை' (Musical Thread)  தமிழ் இலக்கியங்களில் இருப்பதாக நான் ஆய்ந்தது (Discovered) தவறு, என வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்;( http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

அது எனது சொந்த கண்டுபிடிப்பாகி (Invention), நுண்ணொலி (Microsound) தொடர்புடைய இசைத்தகவல் தொழில்நுட்பத்துறையில் (Music Information Technology) 'முழுப்' புகழும் எனக்கே உரித்ததாகி விடும்; தமிழுக்கான பங்கு இல்லாம‌ல் போய்விடும். உலகில் எந்த 'மெலடி'(melody) இசையிலும் அடுத்தடுத்த சுரங்களை இணைக்கும் 'இசை இழை' என்பதை குறிப்பிட்டு பாராட்டியவர் சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறைத்தலைவர் Dr.N.ராமநாதன் ஆவார்.

'நுண்ணொலி'(Microsound) ஆய்வின் பிதாமகனாகிய 'கர்டிஸ் ரோட்ஸ்(Curtis Roads)' 'இசை இழை' (Musical Thread)  தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள கருத்தும், 'இசை இழை' 'நுண்ணொலி' அடிப்படைகளில், இசையொலி தொடர்புடைய 'முக்செல்' (Muxel) என்ற எனது கண்டிபிடிப்பினைப் பற்றி, தரத்தில் உயர்ந்த ஆய்வு இதழ் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள கருத்தும் கீழே:

“It (Musical Threads) sounds potentially interesting. Best wishes on your interesting research” – Curtis Roads, Professor and Chair, Media Arts and Technology, University of California.

‘Musical Threads’ & ‘ MUXEL’ (Both Discovered By Dr Vee) -A New Concept in Digital Music for Enhanced Aesthetics’ –  Like PIXEL in visual graphics, MUXEL in musical aural graphics, was the result of the convergence of the above discoveries with the  ‘Sruthi’ concept, and ‘MICROSOUND’. ( http://drvee.in/ )

“The concept of “Muxel” as opposed to “Pixel” has undoubtly a creative potential, which is worth to be further developed.”- Comment from Robert Peck, Editor in Chief, Journal of Mathematics and Music, SCI Journal

அது போலவே, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் துணையுடன் நான் கண்டுபிடித்த 'பாணி' விளக்கத்தின் அடிப்படையில், உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) வெளிப்பட்டுள்ளது. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2440 ) அதன் அடிப்படையில், உலக இசைகளுக்கான சந்தைப்படுத்தக்கூடிய‌ (marketable) கணினி மென்பொருள் பல உருவாக வழி ஏற்பட்டுள்ளது.

உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம், தமிழ் இலக்கியங்களில் இருப்பதாக நான் ஆய்ந்தது (Discovered) தவறு, என வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்;

'தாளம்'(percussion) தொடர்புடையஇசைத்தகவல் தொழில்நுட்பத்துறையில், உலக தாள இலக்கணத்திற்கான‌ (universal percussion grammar) 'முழு' புகழும் எனக்கே உரித்ததாகி விடும்; தமிழுக்கான பங்கு இல்லாமல் போய்விடும்.

'டிஜிட்டல் யுகத்தில்' தமிழின் அடுத்த கட்ட புலமை எந்த திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது? என்பதை கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software), தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும் (software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும் (signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன…….. என் போன்ற சிலரின்  பல்துறை ஆய்வுகள்  (inter-disciplinary research) மூலமாக‌,  தமிழின் அடுத்த கட்ட புலமையின் வளர்ச்சி திசை என்பது தெளிவாகத் தொடங்கி விட்டது. அந்த அடுத்த கட்ட தமிழ்ப் புலமையை வளர்ப்பதில்- ‘திராவிடஅரசியல் செல்வாக்குள்ள' ‘தமிழ் அறிஞர்கள்' 'பிடி'யில் தமிழ்நாடு சிக்கியதன் காரணமாக, - தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்தங்கினாலும்,உலகில் புதிய பயன்பாட்டு தொழில் நுட்ப முயற்சிகளில்(New technology application products)  ஈடுபடும் வெளிநாட்டினர், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, சந்தையில்(market)பெறும் வெற்றிகள் மூலம், திராவிட மனநோயாளித்தனப் பாதிப்புகளிலிருந்து 'விடுபட்டு', தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.’ (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

'எந்திர தமிழ்ப்புலமை'யிலிருந்து விடுபட்டு, நான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய யுத்தியை கையகப்படுத்தி வளர்த்து பயணிக்கும் தமிழ்ப்புலமையாளர்களுக்கு எல்லாம், NLP(Natural Language Processing), AI(Artificial Intelligence) உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில், ஆலோசகராக(Consultant) பணியாற்றும், அதிக வருமானம் தரும் 'ஆய்வு மூலகர்த்தாக்கள்'(Resource Persons) பணிகள் காத்திருக்கின்றன. (கூடுதல் விளக்கத்திற்கு: https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்ப்புலமையாளர்கள் 'விழித்து' பயணிக்கும் வரையில், 'பாணி', 'இசை இழை' மட்டுமின்றி, எனது இன்னும் பல கண்டுபிடிப்புகளின்முழுப்புகழானது’, தமிழுக்கு கிட்டாமல், நான் விரும்பா விட்டாலும் எனக்கே வந்து சேரும். அந்த தவறு நடக்காமல் இருக்கவே, என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

அதில் நான் வெற்றி பெறுவதானது தாமதமாகும் வரையில், தமிழ்நாட்டில் சுற்றுலா வருமானமும், எண்ணற்ற வேலை வியாபார வாய்ப்புகளும் பெருக, 'எந்திர' தமிழ்ப்புலமையானது  தடைகளாக நீடிக்கும். 

சமஸ்கிருத நூல்களில் இருந்து கண்டுபிடிக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பானவை எல்லாம், உடனுக்குடன் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் சூழலில்; (https://sanskritdocuments.org/articles/ScienceTechSanskritAncientIndiaMGPrasad.pdf )

பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வெளிப்பட்ட மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம், 20 வருடங்களுக்கும் மேலாக 'வெளிச்சத்திற்கு' வராமல் இருக்கும் அவலமானது, தமிழைத் தவிர, வேறு எந்த மொழிக்கும், எந்த மொழி ஆய்வாளருக்கும், உலகில் நேர்ந்திருக்கிறதா?


அநேகமாக இது போன்ற நெருக்கடியில் சிக்கிய ஒரே ஆய்வாளராக நானும், ஒரே மொழியாக தமிழும் இருந்தால் வியப்பில்லை. தமிழ்ப்புலமையானது, 'உரைகளுக்கு அடிமையான எந்திரர்' போக்கில் பயணிப்பதாலேயே, இந்த நெருக்கடிகள் எழுந்துள்ளன, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

குறிப்பு: பல வருடங்களுக்கு முன் எனது இசை ஆய்வு தொடர்பான சோதனைகள்(experiments) செய்வதற்கான பரிந்துரைக்காக‌,  ஒரு பல்கலைக்கழகத்தில் இசைத்துறைத் தலைவரை சந்தித்தேன். அவர் இசை தொடர்பாக அபத்தமான கருத்துகளை தனது ஆய்வு முடிவுகளாக என்னிடம் பெருமையுடன் விளக்கினார். நான் எனது கருத்தைச் சொல்லி அவரைப் பகைத்துக் கொண்டால், எனது ஆய்வுகளுக்கான சோதனைகள் செய்ய முடியாமல் போகும் வாய்ப்பிருந்தது. எனவே நான் 'உங்கள் ஆய்வு முடிவுகளைப் புத்தகமாக வெளியிடலாமே' என்ற யோசனையைத் தெரிவித்து,  தப்பித்து வந்தேன்.

பின் தமிழ்நாட்டில் ஒரு பிரபல புத்தக வெளியீட்டாளர் மூலம் அவர் எனது யோசனையை நிறைவேற்றிவிட்டார் என்பது எனக்கு அதிர்ச்சியானது. அவர் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சித்தலைவரின்/முதல் மந்திரியின் 'வாரிசாக' இருந்திருந்தால், தமிழ் அறிஞர்களும் தமிழ் அமைப்புகளும் போட்டி போட்டு, அப்புத்தகத்தைப் பாராட்டி கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். நல்ல வேளையாக அவருக்கு அந்த அளவுக்கு செல்வாக்கில்லை. அப்புத்தகத்தில் கர்நாடக இசையிலுள்ள 72 மேளகர்த்தா ராகங்களும், தமிழிசையில் 72 பாலைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் காலனிய வருகைக்குப் பின் மேற்கத்திய இசைக் குழுக்கள் தஞ்சை சரபோசி உள்ளிட்ட இந்திய மன்னர்களின் அரண்மனைகளில் இசைப்பது நடந்தது. மேற்கத்திய இசையில் 'மேஜர் ஸ்கேல்- major scale, மைனர் ஸ்கேல்- minor scale  என்று இருப்பது போல், கர்நாடக இசை ராகங்களை உள்ளடக்கிய ஒரு 'புதிய' முறையை உருவாக்க மேற்கொண்ட பல முயற்சிகளில் தஞ்சையில் 17வது நூற்றாண்டில் வேங்கடமகி என்பவர் உருவாக்கியது 72 மேளகர்த்தா ராக முறையாகும்.தமிழ் நாட்டில் ஏற்கனவே இருந்த இசை இலக்கணமானது, எந்த காலக்கட்டத்தில், என்னென்ன சமூக காரணங்களால் வழக்கொழிந்தது? அதை மீட்பதற்கு பதிலாக, ஆய்வுகள் மூலம் குறைகள் வெளிப்பட்டுள்ள 72 மேளகர்த்தா முறையானது, எவ்வாறு அரங்கேறியது? அதனை 72 பாலைகளாக 'திரித்து' நூல் வெளிவரும் அளவுக்கு, தமிழ் இசை அறிவு எவ்வாறு சீர் குலைந்தது? 


'கர்நாடக இசை உயர்வானது' என்ற தாழ்வு மனப்பான்மையில்;( http://musicresearchlibrary.net/omeka/items/show/2446  )


அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற 'தமிழ் இசையியல்'(Tamil Musicology) கூறுகள் பற்றிய புரிதலின்றி;



தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் கர்நாடக இசைப்பாடல்களைப் பாடும் முறையில், தமிழ்ப்பாடல்களை 'தமிழ் இசை' என்று பாடும் (ஒலிப்பதிவுகளில் இருந்து, கணினி மூலம் வெளிப்படுத்தக்கூடிய) தவறுகள் எவ்வாறு அரங்கேறின?


இவை எல்லாம் ஆர்வமும், உழைப்பும் உள்ள ஆய்வாளர்களின் கவனத்திற்கு உரியவை ஆகும்.


NOTE: 'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; 
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264 

2 comments:

  1. தங்கள் அரிய ஆய்வுகள் தொடரட்டும், தங்களுக்குந் தமிழன்னைக்கும் புகழ் பெருகட்டும் (நானுந் தஞசையில் வசிக்கிறேன்) என் கைக்குருவி எண் : 9566021578

    ReplyDelete
  2. ஐந்திறம் பற்றிய தேடலில் உம் வலையைக் காண நேர்ந்தது, கூகுளாண்டவரின் கிருபையால்

    ReplyDelete