சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (8);
'வழிபாட்டுப்போக்கின்' தொடர்விளைவா 'ஆய்வுக்குழாயடி சண்டைகள்' ?
‘ஒருவரின் ஆய்வுக்கட்டுரையில் இரண்டு குறைகளை நான்
சுட்டிக்காட்டி, அந்த இரண்டு குறைகளுக்கும் விளக்கம் அளித்து அவர் அனுப்பிய சான்றுகள்
சரி என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறு என்றால் அறிவுபூர்வமாக மறுக்க வேண்டும்.
அதை விடுத்து புதிதாக ஒரு குறையை நான் வெளிப்படுத்தினால், அது 'ஆய்வுக்குழாயடி சண்டை'யாகி
விடாதா? அது போன்ற அனுபவமும் எனக்கு அண்மையில் கிடைத்தது. ‘என்பதை போன பதிவில் பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html )
மேலே குறிப்பிட்ட பதிவின் இறுதியில் குறிப்பிட்டவாறு,
அவரிடமிருந்து வந்த மின்மடலில், கீழ்வரும்
முடிவினை தெரிவித்துள்ளார்.
“I am sorry to say your interpretations are
logically flawed and philologically not justified.”
கடந்த சுமார் 20 வருடங்களாக எனது ஆய்வுகளை வெளிப்படுத்தி,
அறிவுபூர்வ விவாதங்களை வரவேற்று பயணித்து வருவதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.
முதல் முறையாக;
“your interpretations are logically flawed and
philologically not justified.” என்ற கருத்தினை சந்தித்துள்ளேன். அதனையும் தமிழின்,
தமிழ்நாட்டின் அறிவுப்புல மீட்சிக்கான சிக்னலாக வளர்த்தெடுக்க விரும்புகிறேன்.
தமது படைப்புகளின் பாராட்டுகளை வெளிச்சத்திற்கும், குறைகளை சுட்டிக்காட்டும் விமர்சனங்களை இருட்டிற்கும் உட்படுத்தும் போக்கிற்கு, எதிர்நீச்சலாக, எனது ஆய்வுகளை விமர்சித்து வெளிப்படும் குறைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து, நான் பயணிக்கிறேன். அதன் மூலம் தமிழ்நாட்டின் புலமையை வழிபாட்டுப் போக்கிலிருந்து மீட்க முடியும் என்று நான் கருதுகிறேன்.
இன்று விஞ்ஞானி நியூட்டனுக்காக விழா எடுத்தால், அதில் அவருக்குப் பின் நடந்த ஆய்வுகள் மூலம் 'நியூட்டனின் ஆய்வு முடிவுகளில் சில தவறு' என்று நிரூபிக்கப்பட்டதை மறைத்து, விழா எடுக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் தாம் விழா எடுக்கும் நபரின் ஆய்வுகள் எல்லாம் 'காலத்தை வென்ற முடிவுகள்' போல கருதி, தவறு என்று அவருக்குப் பின் நடந்த ஆய்வுகளில் வெளிப்பட்டதை எல்லாம் இருட்டில் வைத்து விழா எடுப்பார்கள்.
உதாரணமாக, அமெரிக்காவில் பெட்னா FETNA என்ற அமைப்பானது,மறைந்த இசை அறிஞர் வீ.பா.கா சுந்தரத்தின் நூற்றாண்டு விழாவினை 2015இல் கொண்டாடியிருக்கிறது. (http://www.valaitamil.com/2015-fetna-dedicated-to-babanasam-sivam_14710.html )
ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ.பா.கா.சுந்தரம் உள்ளிட்டோரின் ஆய்வுகளில் வெளிப்பட்ட குறைபாடுகளை எல்லாம், 1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்றுவரை, கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளேன். சென்னைப்பல்கலைக்கழக இசைத்துறை, தமிழ்த்துறை உள்ளிட்டு பல இடங்களில் ஆய்வுரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். சென்னையில் எனது இல்லத்திற்கு வந்து, எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினைப் படித்த வீ.பா.கா சுந்தரம், மீண்டும் ஒரு முறை வந்து, என்னிடம் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) பாடம் படிக்க விரும்புவதாக சொல்லிச் சென்றார்.
ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ.பா.கா.சுந்தரம் உள்ளிட்டோருக்கு விழா எடுத்த பெட்னா போன்ற உலகில் உள்ள தமிழ் அமைப்புகள் எல்லாம் அவர்களின் ஆய்வுகளில் வெளிப்பட்ட குறைகளை இருட்டில் வைத்து, விழா எடுத்தார்களா? இல்லையா? என்பதானது, அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களின், அந்த விழாக்களில் பங்கேற்றவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம்.
விபுலானந்த அடிகளின் தமிழ் இசை ஆய்வுகள் தான் என்ன?
என்று தெரியாமல், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்பு’க் கருத்தரங்கத்தில், விபுலானந்தர்
படத்திறப்பு நிகழ்ச்சியானது 'சுருதி பேதமாக' நடந்ததையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
‘தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ச' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை, அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
‘தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ச' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை, அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
தமிழ்நாட்டில் 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா, மு.கருணாநிதி,
பிரபாகரன் போன்றவர்களை எல்லாம், அறிவுபூர்வ விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களாக
'வழிபடும்' அவர்களின் 'ரசிகர்கள்' பலர் இருப்பதை அறிவேன். அதே போக்கில் தான், ஆபிரகாம்
பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ.பா.கா.சுந்தரம் போன்றவர்களையும் 'அதே வழிபாட்டு' போக்கில்,
சிறை பிடித்தால், அது தமிழ் இசையின் வளர்ச்சிக்கு கேடாகாதா?( http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.htm )
'அந்த ரசிகர்கள்' வலைப்பின்னல்களானது, வெறுப்பு அரசியலுக்கு
உரமூட்டி, மர்ரே எஸ் ராஜம் உள்ளிட்ட பல புலமையாளர்களின் படைப்புகளை இருட்டில் தள்ளி,
தமிழையும் தமிழ்நாட்டையும் சீரழித்த அரசியல் கொள்ளையர்களில் 'அதிபுத்திசாலிகள்' எல்லாம்
'தமிழ்ப்புரவலர்களாக வலம் வர உதவி, 'பிரிவினை அரசியல்' ஆக்சிஜனில் 'தமிழ், தமிழ் இசை வியாபாரிகள்' செல்வாக்கு பெற்று, எந்த அளவுக்கு தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின்
சீரழிவுக்கு வழி வகுத்தன? என்ற கேள்வியை,
'இந்துத்வா எதிர்ப்பு' என்ற கவசம் மூலம் தாமதப்படுத்திய போக்குகள் எல்லாம் முடிவுக்கு
வரும் காலமும் நெருங்கி வருகிறது.(' 'இந்துத்வா எதிர்ப்பு' தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை
பொம்மை'யாகி விட்டதா?’ http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )
ஆங்கில அறிவின்றி, தமிழிலும் புலமையின்றி, சராசரி பொது
அறிவின் அடிப்படையில், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் 'பகுத்தறிவு' என்ற பேரில்,
கேலி, கிண்டல் செய்து இழிவுபடுத்தி, 'அறிவுஜீவிகளாக' வலம் வந்தவர்கள் எல்லாம், தாமாகவே
வெட்கப்பட்டு ஒதுங்கும் சூழலும் கனிந்து வருகிறது. (‘‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html
)
அவ்வாறு 'அறிவுஜீவிகளாக' வலம் வந்தவர்களையும், மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 'பிரபல' அறிவுஜீவிகளையும், 'இந்துத்வா எதிர்ப்பு' வலைப்பின்னலானது ஒன்றுபடுத்தி, தத்தம் 'வழிபாட்டு போதைகளுக்கு' எதிரான ஆய்வுகளை எல்லாம் இருட்டில் தள்ளியதன் விளைவுகளாகவே, தமிழ்நாடு இன்று அரசியல் தரகர்களின், திருடர்களின் செல்வாக்கில் சீரழிந்து, திருப்பு முனை கட்டத்தில் உள்ளது; 'சமூக சோளக்கொல்லை பொம்மையாகி’ வரும் 'இந்துத்வா எதிர்ப்பு' போக்கில்.
அவ்வாறு 'அறிவுஜீவிகளாக' வலம் வந்தவர்களையும், மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 'பிரபல' அறிவுஜீவிகளையும், 'இந்துத்வா எதிர்ப்பு' வலைப்பின்னலானது ஒன்றுபடுத்தி, தத்தம் 'வழிபாட்டு போதைகளுக்கு' எதிரான ஆய்வுகளை எல்லாம் இருட்டில் தள்ளியதன் விளைவுகளாகவே, தமிழ்நாடு இன்று அரசியல் தரகர்களின், திருடர்களின் செல்வாக்கில் சீரழிந்து, திருப்பு முனை கட்டத்தில் உள்ளது; 'சமூக சோளக்கொல்லை பொம்மையாகி’ வரும் 'இந்துத்வா எதிர்ப்பு' போக்கில்.
திராவிட ஆட்சிகளில், அறிவுபூர்வ விமர்சனங்களை இருட்டில் தள்ளி, தமிழில் புலமையைச் சீரழித்து செல்வாக்கு பெற்றுள்ள 'பாராட்டு, புகழ்' நோய்களிலிருந்து, தமிழை மீட்க, அறிவுபூர்வ விமர்சனங்களை ஊக்குவிக்க வேண்டும். அந்த விமர்சனங்களில் குறைகள் வெளிப்பட்டாலும், அதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலே குறிப்பிட்டவாறு எனது ஆய்வுகளில் இரண்டு குறைகளை சுட்டிக்காட்டியவருக்கு, நான் அனுப்பிய - அவர் சுட்டிக்காட்டிய- அந்த இரண்டு குறைகள் தொடர்பான (6 பக்கங்கள் கொண்ட) எனது விளக்கத்திற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல்;
““your interpretations are logically flawed
and philologically not justified.” என்று;
நான் அனுப்பிய நேரத்திலிருந்து 39ஆவது நிமிடத்தில்;
எனக்கு மின்மடல் வந்தது;
'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமாக.
'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமாக.
மேலே குறிப்பிட்ட 'வழிபாட்டுப்போக்கின்' தொடர் விளைவா, இது போன்ற 'ஆய்வுக்குழாயடி சண்டைகள்' ? என்ற ஆய்வுக்கும் நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.
Philology: the study of literature and of
disciplines relevant to literature or to language as used in literature; https://www.merriam-webster.com/dictionary/philology
எனவே தமிழ், தமிழ் இசையியல் (Tamil Musicology),
தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music) அறிவுள்ளவர்களே, எனது விளக்கத்தினை
புரிந்து கொள்ள முடியும். அதே காரணத்தால், எனது விளக்கங்கள் புரியவில்லை என்ற பின்னூட்டங்கள்
வந்துள்ளன.
‘தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகள் தொடர்பான எனது அனுபவங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் நோய் ஆகியவற்றிற்குப் பின் தமிழுக்கு கேடான அந்த போக்குகள் எல்லாம் முடிவை நெருங்குகின்றன, என்பதும் எனது கணிப்பாகும்.
எனவே தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate) படிப்புகளில் எண்ணற்ற மாணவர்கள் பயின்று வரும் படிப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;
தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கம்ப ராமாயாணம், பெரிய புராணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கல்லாடம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில்;
ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு எல்லாம், திருத்த பின்னிணைப்புகள் வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;
எனது ஆய்வினை, ஒரு குழுவின் துணையுடன் தொடர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும்;
‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts’ என்ற ஆங்கில நூலை எழுதி முடித்துள்ளேன். இந்தியாவில் அல்லது சிங்கப்பூரில் புகழ் பெற்ற பதிப்பாளர் மூலம் அதனை வெளியிடவும் முயற்சி செய்து வருகிறேன்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருவதை உணர்ந்து. (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
எனக்கு வரும் மறுப்புகளில் உரிய சான்றுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரும் மறுப்புகளை ஏற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றியும் தெரிவித்து, எனது ஆய்வு முடிவுகளில் உரிய மாற்றங்களுடன் வெளியிடுவேன். 'ஆய்வுக்குழாயடிச் சண்டையாக' நான் கருதும் மறுப்புகளையும் பின்னிணைப்பாக வெளியிடுவேன்; சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி தந்தால், அவர்களின் பெயர்களையும் அவற்றுடன் சேர்த்து வெளியிடுவேன். எனது நூலைப்படிப்பவர்கள் அவற்றையும் படித்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும், என்பதும் எனது கருத்தாகும்.
‘எப்பொருள் எவர்வாய் என்றாய்ந்து அப்பொருள்
புகழ்வதும் இகழ்வதும் இழுக்கு’
என்ற போக்கிலிருந்து விடுபட்டு;
‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’
திருக்குறள் 423
குறிப்பு: உரையாசிரியர்களின் விளக்கங்களில் இருந்த
சில குறைபாடுகளை, நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்ற இரகசியத்தைத் தெரிந்துகொள்ள படிக்கவும்.
http://musicresearchlibrary.net/omeka/items/show/2444
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION';
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION';
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264
No comments:
Post a Comment