சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (9);
'வழிபாட்டுப் போதையும்', 'இந்துத்வா எதிர்ப்பு போதையும்', சங்கமமான 'அழுகல் இன சமூக செயல்நுட்பம்' ?
துக்ளக் இதழில் நான் எழுதுவதை மறுபரிசீலனை செய்ய
வேண்டும்' என்று வலியுறுத்தி, 'பெரியார்' ஆதரவாளர்கள் சார்பில் வந்த மடலைப் படித்த
பின், கீழ்வரும் ஐயங்கள் எழுந்தன.
சோ ஆசிரியராக இருந்து குருமூர்த்தியின் கட்டுரைகளை
தொடர்ந்து துக்ளக் வெளியிட்டு வந்த காலத்திலும், சோவிற்கும் குருமூர்த்திக்கும் பொருளாதாரம்,
சுதேசி உள்ளிட்ட கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்ததை இருவருமே வெளிப்படுத்தி
உள்ளார்கள். அதனை துக்ளக் வாசகர்களும் அறிவார்கள். அந்த வேறுபாடு கூட தெரியாமல், மேலே
குறிப்பிட்ட மடல் எழுதப்பட்டதா? அது போலவே, துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றது முதல்
இன்று வரை, நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், சோவிலிருந்து தாம்
மாறுபட்டிருப்பதையும் வெளிப்படையாக குருமூர்த்தி எழுதி வருவது கூட தெரியாமல், மேலே
குறிப்பிட்ட மடல் எழுதப்பட்டதா?
துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்ற பின் நடந்த துக்ளக்
ஆண்டு விழாவில், தமக்கும் சோவிற்கும் 1989 தேர்தல் நிலைப்பாட்டில் இருந்த, எதிரெதிரான
கீழ்வரும் கருத்து வேறுபாட்டினை குருமூர்த்தி வெளிப்படுத்தினார்.
போபர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்தியை எதிர்த்த குருமூர்த்தி,
1989 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருந்தார். அவ்வாறு
போபர்ஸ் ஊழலில் ராஜிவ்காந்தியை எதிர்த்த சோ, காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருந்தார்?
ஏன்? என்று குருமூர்த்தி சோவிடம் கேட்ட போது, 'தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால்,
கருப்பையா மூப்பனார் முதல்வராகி, தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி கிடைக்கும்' என்ற வகையில்
சோ பதில் அளித்திருக்கிறார்.
1967க்கு முன் தி.மு.க வெற்றி பெறுவது ஆபத்து என்று
கருதிய ஈ.வெ.ரா அவர்கள், தேர்தல்களில் பிராமண வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த
அணுகுமுறை புரியாத 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும், கண்களைத்
திறக்கச் செய்யும் வகையில், மேற்குறிப்பிட்ட அணுகுமுறையினை சோ செயல்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் 'கடந்த காலத்திலேயே வாழும்', 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போதையில் மிதந்து பயணிப்பவர்களுக்கு
எல்லாம், அந்த அணுகுமுறையினை புரிந்து கொள்ளும் அறிவோ, செயல்படுத்தும் துணிவோ இருப்பதற்கு
வாய்ப்பில்லை. பிரதமர் வாஜ்பாய் அரசினை ஜெயலலிதா கவிழ்க்க முயன்றபோது,
தி.மு.க பா.ஜ.க அரசினைக் காப்பாற்றி, அதனை பாராளுமன்றத்தில் முரசொலி மாறன் நியாயப்படுத்தி
உரை ஆற்றினார். அந்த உரைக்குப் பின்னும், இன்று பா.ஜ.கவை எதிர்க்க தி.மு.கவை ஆதரிப்பதற்கும்,
அந்த 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற உணர்ச்சிபூர்வ போதையே காரணமாகும். தமிழ்நாட்டில் 'வழிபாட்டு போதையும்', 'இந்துத்வா எதிர்ப்பு போதையும்', 'சங்கமமாகி' பயணித்து
ஏற்படுத்தி வரும் சீர்குலைவுகளை அடுத்து பார்ப்போம்.
‘தமிழ்நாட்டில் 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா, மு.கருணாநிதி,
பிரபாகரன் போன்றவர்களை எல்லாம், அறிவுபூர்வ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக 'வழிபடும்'
அவர்களின் 'ரசிகர்கள்' பலர் இருப்பதை அறிவேன்.’ என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த வரிசையில் 'காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, நேரு, ஜீவா,' முதல், நிகழ்காலத்தில்
'சுபவீ, சீமான், சகாயம் ஐ.ஏ.எஸ்' உள்ளிட்டு இன்னும் பலர், அவரவர்களின் 'ரசிகர்களின்
வழிபாட்டுப் போதைக்கு' உள்ளாகும் சமூக செயல்நுட்பத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளதா? என்றும்
ஆராய்ந்து வருகிறேன்.
அந்த சமூக செயல்நுட்பத்தில் அவரவர்களிடம் 'நிகழ்கால/எதிர்கால
ஆதாயத்திற்காக' பயணிப்பவர்கள் யார்? சுயலாப நோக்கின்றி உண்மையான சமூக அக்கறை நோக்கில்
பயணிப்பவர்கள் யார்? அவ்வாறு பயணிப்பவர்களில் கீழே குறிப்பிட்டுள்ள 'அடையாள இழப்பால்'
(Identity Loss) விளைந்த போதைகளில் சிக்கி பயணிப்பவர்கள் யார்? என்று பிரித்து அணுகுவதும்,
அந்த ஆய்வில் அடக்கமாகும்.
‘இசை ஆராய்ச்சிக்கு முன், மார்க்சியம், லெனினியம்
புலமையோடு, 'பெரியார்' கொள்கையில் நான் பயணித்த காலத்தில், ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’
கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி
எழுந்ததை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
“தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில்
பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது
மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ
வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது
ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும், வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த
சமஸ்கிருத நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது
தொடர்பான புலமையையும், வடநாட்டு மார்க்சிய
அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும்
எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்…………ஒரு சமூகத்தில் தாய்மொழியும், அவர்களின் அடையாளமும்,
நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது தாய்மொழியும், அடையாளமும், பயனற்றது என்று கருதும்
மக்கள், கட்சிகளையும், கொள்கைகளையும் 'விரயமாக' கருதி, பலவகை போதைகளில் பயணிக்கத் தொடங்குவார்கள்.
(http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm
) தமிழ்நாட்டில் தமிழர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் தமிழையே, ' விரயம் - waste' ஆக கருதும் அபாயமும் வளர்ந்து
வருவது உண்மையானால், கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ
விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக,
மாறி வருகின்றனவா?’ (' 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்'; 'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்'; http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html
)
தமிழ்நாட்டில் 'வழிபாட்டுப் போதையும்' 'இந்துத்வா எதிர்ப்பு
போதையும்', 'சங்கமமாகி' பயணித்து ஏற்படுத்தி வரும் சீர்குலைவுகள் காரணமாக, 'அழுகல்
இனம்' எவ்வாறு வளர்ந்தது? என்பதை அடுத்து பார்ப்போம்.
‘கீழ்வரும் திருக்குறள் அளவுகோலின்படி, தமிழ்நாட்டில்
வாழும் 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்
இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்.
'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு' - திருக்குறள் 452
நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள்
இல்லாதவர்களும், உழைத்து சம்பாதிக்க மனமில்லாதவர்களும், தமிழ்நாட்டில் அரசியலில் வளர்வதானது,
சீரழிவில் முடியும் என்று, 1948 தூத்துக்குடி
மாநாட்டு உரையில், ஈ.வெ.ரா எச்சரித்திருக்கிறார்.
அந்த 'அழுகல் இனம்' உருவான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலானது, ஈ.வெ.ராவுக்கு இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’
(‘'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’
தானே; எந்த கட்சியில்/கொள்கையில்
இருந்தாலும்’; http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html
)
தமிழ்நாட்டில் 'வழிபாட்டு போதையும்', 'இந்துத்வா
எதிர்ப்பு போதையும்', 'சங்கமமானதன்' விளைவாக உருவான;
‘ 'அந்த ரசிகர்கள்' வலைப்பின்னல்களானது, வெறுப்பு
அரசியலுக்கு உரமூட்டி, மர்ரே எஸ் ராஜம் உள்ளிட்ட பல புலமையாளர்களின் படைப்புகளை இருட்டில்
தள்ளி, தமிழையும் தமிழ்நாட்டையும் சீரழித்த அரசியல் கொள்ளையர்களில் 'அதிபுத்திசாலிகள்'
எல்லாம் 'தமிழ்ப்புரவலர்களாக வலம் வர உதவி, 'பிரிவினை அரசியல்' ஆக்சிஜனில் 'தமிழ்,
தமிழ் இசை வியாபாரிகள்' செல்வாக்கு பெற்று, எந்த அளவுக்கு தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின்
சீரழிவுக்கு வழி வகுத்தன? என்ற கேள்வியை,
'இந்துத்வா எதிர்ப்பு' என்ற கவசம் மூலம் தாமதப்படுத்திய போக்குகள் எல்லாம் முடிவுக்கு
வரும் காலமும் நெருங்கி வருகிறது.(' 'இந்துத்வா எதிர்ப்பு' தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை
பொம்மை'யாகி விட்டதா?’ http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html
) …… ஆங்கில அறிவின்றி, தமிழிலும் புலமையின்றி,
சராசரி பொது அறிவின் அடிப்படையில், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் 'பகுத்தறிவு'
என்ற பேரில், கேலி, கிண்டல் செய்து இழிவுபடுத்தி, 'அறிவுஜீவிகளாக' வலம் வந்த அறிவுஜீவிகளையும்,
(அமெரிக்காவில் உள்ள 'பெட்னா'(FETNA), தமிழ்நாட்டில் தி.க போன்ற உலகில் உள்ள 'தமிழ்
இன(?) உணர்வு' அமைப்புகளின்) மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 'பிரபல' அறிவுஜீவிகளையும்,
'இந்துத்வா எதிர்ப்பு' வலைப்பின்னலானது ஒன்றுபடுத்தி, தத்தம் 'வழிபாட்டு போதைகளுக்கு'
எதிரான ஆய்வுகளை எல்லாம் இருட்டில் தள்ளியதன் விளைவுகளாகவே, தமிழ்நாடு இன்று அரசியல்
தரகர்களின், திருடர்களின் செல்வாக்கில் சீரழிந்து, திருப்பு முனை கட்டத்தில் உள்ளது;
'சமூக சோளக்கொல்லை பொம்மையாகி’ வரும் 'இந்துத்வா எதிர்ப்பு' போக்கில்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html
)
தமிழ்நாட்டில் 'வழிபாட்டுப் போதையும்' 'இந்துத்வா எதிர்ப்பு
போதையும்', 'சங்கமமாகி', அதன் விளைவான 'அழுகல் இன சமூக செயல்நுட்பத்தினை' எதிர்த்து,
தனிமனித இராணுவமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். துக்ளக் அசிரியர் குருமூர்த்தி என்னை அறிமுகப்படுத்தி,
துக்ளக் இதழில் எனது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர உள்ளதை அறிவித்த பின், அந்த 10 வருட
முயற்சிகள் ஏற்படுத்தாத அதிர்வலைகள் இப்போது வெளிப்பட்டிருப்பதை நல்ல அறிகுறியாகவே
கருதுகிறேன்.
1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of
Tamil Music) என்ற தலைப்பில் நான் முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்று வரை நான் வெளிப்படுத்திவரும்
ஆய்வு முடிவுகள் எல்லாம், சில விதி விலக்குகளை தவிர்த்து, 'பெரியார்' கட்சிகளைப் பொறுத்த
மட்டில், 'செவிடர்கள் காதில் ஊதிய சங்கான' விளைவினையே சந்தித்து வந்துள்ள நிலையில்,
முதல் முறையாக 'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமாக மறுப்பு வெளிவந்ததையும் வெளிப்படுத்தியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html
) அதனையும் நல்ல அறிகுறியாகவே கருதுகிறேன்.
பெட்னாவாக(FETNA) இருந்தாலும், தி.க வாக இருந்தாலும்,
வேறு எந்த இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு அமைப்பாக இருந்தாலும்;
கல்யாணியாக இருந்தாலும், அ.மார்க்ஸாக இருந்தாலும்,
நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும்;
அகத்தில் சுயலாப/பாதுகாப்பு கணக்குகளுடனும், புறத்தில்
'வீர தீர சமூக அக்கறையுடனும்' பயணிப்பவர்கள்
யார்? யார்? ('மேக்ரோஉலக 'முற்போக்கு சாதியின்' சுயலாப யோக்கியதையானது,
மைக்ரோஉலகில், 'கட்சிகளில்' சிக்காமல் வாழ்பவர்களில் பெரும்பாலோருக்கு தெரிந்திப்பதும்,
எனக்கு வியப்பைத் தந்தது.'; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html
)
என்று 'எளிதில்' கண்டுபிடிக்கும் திறமையானது, மாணவர்கள்,
படித்த இளைஞர்கள் மட்டுமின்றி, குக்கிராமங்கள் வரை வளர்ந்து வருகிறது; தமிழும், தமிழ்நாடும்
நிச்சயமாக மீளும் என்ற நம்பிக்கையின் அடித்தளமாக.
No comments:
Post a Comment