'அழுகியது' கழகங்கள் மட்டுமா?
'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும்,
தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்படப்போகும் போக்குகள்
பற்றிய, கீழ்வரும் கணிப்பு, எனது கவனத்தை ஈர்த்தது.
“கட்சியின்
பழைய வரலாற்று நினைவுகளாலும் தலைவர்கள் மீதான கண்மூடித்தனமான அன்பாலும் கீழே உயிரைக்
கொடுத்து உழைக்கிறார்கள் தொண்டர்கள். நடுவில் தரகு வேலையில் தேர்ந்தவர்களே கொழிக்கிறார்கள்.
நிழல் அதிகார மையங்களே ஆள்கின்றன.
மக்களும்
தொண்டர்களும் நெருங்க முடியாத உயரத் தில் கட்சித் தலைமைகள் நிற்பதால், நிழல் அதிகார
மையங்களையும் இடைத்தரகர்களையும் தாண்டி அவற்றால், உண்மையான தொண்டர்களை அடையாளம் காண
முடியவில்லை. நிழல்களின் தவறுகள் அம்பலமாகும்போது, கட்சித் தலைமைகளால் ‘அடி - அழு’
பாவனைகளைத் தாண்டி ஒன்றும் முடியவில்லை.
ஓரளவுக்கு
மேல் இந்த பாவனையை நீடிக்கவும் முடியாது. பாவனைகள் நீண்டு உண்மையாகவே அவர்கள் மீது
அடி விழுந்தால், அடி வாங்குபவர்கள் திரும்ப அடிப்பார்கள். பேச ஆரம்பிப்பார்கள். தரகின்
பங்குகள் வெளிச்சத்துக்கு வரும். தலைமைகளின் பிம்பங்கள் உடைந்து நொறுங்கும். எப்படியும்,
புரையை ரொம்பக் காலம் பொத்திவைக்க முடியாது. ஊழல் முடை நாற்றம் அடிக்கும். சீழ் வெளியேறும்.
அதையே இப்போது வேட்பாளர் அதிருப்திப் போராட்டங்களாகப் பார்க்கிறோம். இரு கழகங்களும்
அழுகிக்கொண்டிருக்கின்றன! “
‘அழுகும்
கழகங்கள்’ – சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/
இந்தியாவில் 2016 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு,
மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடக்கிறது. தேர்தல் கமிசன்
கண்காணிப்பில், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில்,
தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. (http://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/assembly-elections-2016-over-rs-62cr-illegal-cash-seized-in-poll-bound-states-tamil-nadu-tops-west-bengal-assam/)
நாம் ஓட்டிற்கு பணம் வாங்கினாலோ, அல்லது அவ்வாறு
பணம் விநியோகிக்கும் தரகராக பணியாற்றி லாபம் அடைந்தாலோ, நாமும் 'அழுகிய' மனிதர்கள்
தானே."யார் ஆட்சியைப் பிடித்தால், நமக்கு லாபம்? தேர்தலுக்காக செலவு செய்யப்படும் பணத்தில், நாமும் நமக்கான பங்கை அபகரிக்க, யார் வேட்பாளராக நின்றால், நமக்கு லாபம்?" என்ற சுயநலநோக்கு நமக்கிருந்தாலும், நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே.
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_16.html)
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_16.html)
'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட
ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்று செல்வம், செல்வாக்குடன் வலம் வருபவர்களில் எவராவது,
நமது குடும்பத்தில், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருப்பது தெரிந்தவுடன்,
அவர்களை திருத்துவதிலோ, திருந்த மறுத்தால் ஒதுக்கி வைப்பதிலோ, நாம் ஈடுபடவில்லையேன்றால், நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே.
அந்த ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை
பயம்' குறைந்து, கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகள், 'அதிவேகமாக' அதிகரித்து வருவது;
பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'அழுகிய மனிதர்களான சமூக குற்றவாளிகளாக'
நாம் இருக்கையில் ?
அழுகிய மனிதர்களை ஆதரவாளர்களாகவும், தொண்டர்களாகவும்,
அதிகம் அழுகியவர்களுக்கே முன்னேற வாய்ப்புள்ளதாகவும் உள்ள, கட்சிகள் எல்லாமே 'அழுகிய' கட்சிகள் தானே.
'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'அழுகிய மனிதர்கள்'
எவ்வாறு உருவானார்கள்? என்பது பற்றிய எனது ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் சமூக நோயாக வளர்ந்து
வரும், 'அழுகல்' தொடர்பான சமூக செயல்நுட்பத்தை, நான் கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)
நம்மிடையே வாழும் 'அழுகல்' மனிதர்களின் அறிவானது,
எந்த சமூக செயல்நுட்பத்தில் செயல்படுகிறது?
என்பதை மேற்குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.
கீழ்வரும் திருக்குறள் அளவுகோலின்படி, தமிழ்நாட்டில்
வாழும் 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்.
'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு' - திருக்குறள் 452
நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாதவர்களும், உழைத்து சம்பாதிக்க மனமில்லாதவர்களும், தமிழ்நாட்டில் அரசியலில் வளர்வதானது, சீரழிவில் முடியும் என்று, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில், ஈ.வெ.ரா எச்சரித்திருக்கிறார். அந்த 'அழுகல் இனம்' உருவான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலானது, ஈ.வெ.ராவுக்கு இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் 'அழுகல் இனம்' உருவாக காரணமான, 'அழுகல் சமூக செயல்நுட்பமானது', எப்போது முளைவிட்டு,
எப்படி வளர்ந்தது? என்ற ஆய்விற்குதவும் கீழ்வரும் பதிவை அடுத்து பார்ப்போம்.
('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460';
https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)
மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்'
(Race) என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த
'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர்
வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை
யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது…………….
மனிதர்களின்
பண்புகள் அடிப்படையில், தமிழில் வழக்கத்தில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, தவறாக ஆங்கிலத்தில்
இருந்த 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரித்த,
காலனிய சூழ்ச்சியில், 'திராவிடர் இனம்' என்ற அடையாளமானது, உணர்ச்சிகர போதையில், கவர்ச்சிகரமான
பேச்சு, எழுத்து மூலம் தமிழர்களின் சமூக அடையாளமாக திணிக்கப்பட்டதா? அது தமிழர்களின்
இயல்பில் , அரசியல் நீக்கம் உள்ளிட்டு என்ன வகைகளிலான திரிதலை ஏற்படுத்தியது?
'இனம்' திரிந்தது ஆனது, தமிழர்களின் இயல்பில் திரிதலைத்
தூண்டியதா?
(''காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3) இயல்முறி
வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்';
இயல்பில் திரிந்து, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி', 'எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும், அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்ததந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருந்ததும், 2016 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மாற்றங்களுக்கு காரணமா? தமிழ்நாடானது, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், என்ன மாற்றம் ஏற்படும்?
'தமிழ்நாட்டில் 'சிற்றினமானது', 'அழுகல் இனமாக', ஆதிக்கத்துடன் வளர்ந்த வளர்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், ஒரே காலக்கட்டத்தில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் நிகழ்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அது போன்றே, 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே, வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) - சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்;
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
அதாவது 'அழுகல் இனமானது', தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த சமூக செயல்நுட்பம் காரணமாகவே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) வீழ்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், மது/போதை பொருள், திருட்டு, கொலை, தற்கொலை, உள்ளிட்ட சமூக நோய்கள் எல்லாம், பள்ளி/கல்லூரி மாணவர்கள் வரை பரவியதும், சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே பரவியதும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்ததும், ஒன்றுடன் ஒன்று பின்னி, அரங்கேறினவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
முந்தைய பதிவில் குறிப்பிட்ட 'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்', 'அழுகல் இனத்தின் ஆதிக்கத்திற்கும்', தொடர்பு உண்டா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி சாத்தியமா?

'அழுகல் மனிதர்கள்' எல்லாம், 'பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம், இந்துத்வா, தலித், முஸ்லீம்' உள்ளிட்ட இன்னும் பல முகமூடிகளுடன் ஏமாற்றி வாழ, நாம் துணையாக இருக்கிறோமா? நாம் 'அழுகல்
இனத்தில்' இருக்கிறோமா? நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் ‘அழுகல்
மனிதர்கள்’ இருந்து, அந்த 'அழுகல் மனிதர்களோடு', நாம் நேசமாக இருப்பது தொடர்ந்தால்,
நாமும் அந்த 'அழுகல் மனிதர்' இனத்தில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா? குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளும், சமூக ஒழுக்க நெறிகளும், பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான சடங்குகளும், 'அழுகல் இனத்தின் ஆதிக்கத்திற்கு' அடிமையாக, நாம் துணை போகிறோமா? தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை (வாய்ப்பு கிடைத்தால், அவர்களுடன் நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்துக் கொண்டே) குறை சொல்லியவர்கள் யார்? யார்? அவ்வாறு குறை சொல்லியவர்களில், தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள் எல்லாம், 'அழுகல் மனிதர்கள்' இல்லையா?
ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு;
தமிழ்நாட்டு பொதுவாழ்வில், நேர்மையான சுயசம்பாத்தியமில்லாதவர்களில், உண்மையான சமுக அக்கறை உள்ளவர்களெல்லாம், பொது வாழ்விலிருந்து ஒதுங்கி, நேர்மையான சுயசம்பாத்தியம் மூலம், தற்சார்பை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர், மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடலாம்; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால்.

குடும்பம், நட்பு, கட்சி போன்ற அடிப்படைகளில், 'அந்த அழுகல் மனிதர்கள்' மீது நமக்குள்ள 'பற்றிலிருந்து' விடுபட்டு, 'அழுகல் இனத்தின்'
'பிடியிலிருந்து' வெளியேற முடியுமா?
சமூக ஒப்பீடு நோயில், 'திராவிட மனநோயாளியாக' சிக்கி, வாழ்பவர்களுக்கு,
அது சாத்தியமில்லை.
‘அந்த நோயில் சிக்காதவர்களுக்கு, குறைந்த பட்சம் தமது சமூக வட்டத்தில், அது சாத்தியமே’
என்று நிரூபிக்கும் வகையில், நான் வாழ்ந்து வருகிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான ஆதரவானது; வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்' என்ற நம்பிக்கையில்.
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_19.html )
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_19.html )
“'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு
உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும்,
'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; 'தமிழ்,
தமிழர், தமிழ்நாடு' சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக.”
ஊழல்
ஒழிப்பானது, ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்களெல்லாம், ஊழல்
ஒழிப்பு கட்சிகளின் மாநில பொறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள். கட்சி வேறுபாடின்றி, ஊழல் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டால், 'மதுவிலக்கு' உள்ளிட்டு, அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும், அந்த பணத்தில் செயல்படுத்த முடியும் என்பதை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் விந்தையும், தமிழ்நாட்டில் உள்ளது. 'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?
'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’
'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’
என்று குழம்ப வேண்டியதில்லை. சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ள ‘சமூக செயல்நெறி மதகுகள் ‘ புத்துயிர் பெறும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html)
அதன்பின் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட சட்டங்களும் ஒழுங்காக செயல்படும்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்திலிருந்து, 'விடுதலை' பெற்று.
தமிழில் மனிதரின் பண்பு அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்', 1944க்குப்பின் திரிந்து உருவான, 'அழுகல் இனத்திலிருந்து' 'விடுதலை' பெற்றால் தானே, தமிழ்நாட்டில் 'நல்லினம்' பல்கி பெருக முடியும். நமது முயற்சியில், நமது சமூக வட்டத்திலிருந்து, 'அழுகல் இனத்தை' அகற்றுவது தானே, அதற்கு சரியான, வலுவான, தொடக்கமாக அமையும்.
காந்தப் புலத்தில் இருந்தாலும், இரும்பு போன்ற ஒரு சில உலோகங்கள் மட்டுமே, ‘காந்தத் தூண்டல்’ (Magnetic Induction) என்ற வினைக்குள்ளாகி, காந்தமாக மாறும்.
அது போல, ‘அழுகல் இனத்தின் ஆதிக்கத்தில்’ உள்ள சமூக சூழலில்;
இயல்பில் 'பலகீனமான' தமிழர்களே, தமிழ்நாட்டில் ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' என்ற சமூக செயல்வினை மூலம், 'அழுகல் இனமாக' மாறி வருகிறார்கள்.
அதற்கு 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'சீரழிவு சமூக வினையூக்கியாக (Catalyst)' செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், நான் மேற்கொண்டு வரும் சமூகவியல் பரிசோதனையில் (Sociological Experiment) வெளிப்பட்டுள்ளது.
நமது சமூக வட்டத்தில் இருக்கும் 'அழுகல் இனத்தை', அடையாளம் கண்டு அகற்றுவதானது, ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' எனும் சமூக நோயிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க துணை புரியும்.
No comments:
Post a Comment