தமிழரின் அடையாள மீட்புக்கான ஆய்வு :
தமிழரின் அடையாள வீழ்ச்சியும், 'சுயநல கள்வர்களின்' வளர்ச்சியும்
'உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்'; திருக்குறள் 813
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் (2016) யார் ஆட்சியைப்
பிடித்தால், நமக்கு லாபம்?
தேர்தலுக்காக செலவு செய்யப்படும் பணத்தில், நாமும் நமக்கான
பங்கை அபகரிக்க, யார் வேட்பாளராக நின்றால், நமக்கு லாபம்?
என்பது போன்ற,
'தரகு, வன்முறை' உள்ளிட்ட, தத்தம் தகுதி,
திறமைகளின் அடிப்படைகளில், 'சுயலாப கணக்கு'களுடன் வாழ்பவர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட
குறளின்படி, 'கள்வர்கள்' ஆவர்.
மேலே குறிப்பிட்டது போன்ற, 'சுயலாப கணக்கு'களுடன் நிலைப்பாடுகள் மேற்கொண்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு, 'பொதுநலன்' என்று, 'சமூக நீதி, கொள்கை' 'நியாயங்கள் கற்பித்து' வாழ்பவர்கள் முகங்களில் 'முழிப்பதும் பாவம்' என்று, 'ஒதுங்கி' நான் வாழ்கிறேன்; ஒரு தனித்துவமான (Unique) 'சமூக பொறியியல் வினையாக' (Social Engineering Process), சமூகவியல் பரிசோதனை (Sociological Experiment) நோக்கில்; அவற்றால் வரும் 'நம்பமுடியாத' இழப்புகளை எல்லாம் 'விரும்பி' அனுபவித்துக் கொண்டு.
அத்தகைய சுயலாப கணக்குகளோடு வாழ்பவர்களுடன், 'ஈழ விடுதலை' முயற்சிகள் கொண்ட 'கூடா நட்பும்' முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கான காரணங்களில் ஒன்றா? உலகில் உள்ள சுயநல சக்திகள், தம் வசம் இருந்த, சமூக பொறியியல் நுட்பங்கள் (Social Engineering Techniques) மூலம், ஈழ பிரச்சினையை, தத்தம் சுயநலன்களுக்கு ஏற்ற திசையில் பயணிக்க வைக்க, 'சுயலாப கணக்கு'களுடன் வாழ்பவர்கள் எல்லாம், எவ்வாறு 'துணை' புரிந்து, 'எத்தகைய பலன்கள்' பெற்றார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
'சுயலாப கணக்கு'களின்றி; பொது நலன் நோக்கில், தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான ஆர்வம் யார் யாருக்கு இருக்கிறது? என்ற ஆய்விற்குதவும் சமுகவியல் களமாக, தமிழ்நாடு இருக்கிறது.

"முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப்
பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.
அதே போல், ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும்,
தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம்
பெறவில்லை. அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான
பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த
அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."
என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
ஆனால் இன்று, மாணவர்களின் கேலிப்பொருளாக, அரசியல்
கட்சிகளும், தலைவர்களும், சமூக வலை தளங்களில் எந்த அளவுக்கு உள்ளாகியுள்ளார்கள்? என்பது
ஆய்விற்குரியதாகும். கூடுதலாக, தமிழும், தமிழ்
உணர்வும், மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெற்றுள்ளனவா? என்பதும்
ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html
)
அதே நேரத்தில்,
கிராமப்புற பள்ளிகள் வரை போதைப் பொருள்/மது
பழக்கமும், திருட்டு, கொலை, தற்கொலை உள்ளிட்ட நோய்களும் மாணவர்களைப் பற்றி, வளர்ந்து
வருவதற்கான, சமூக நோய்களின் மூலங்களை ஆராய்வது, சமூக மீட்பு தேவையாகி விட்டது.
இன்று, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற அடிப்படைகளில்,
தமிழ்நாட்டில் தமிழர் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் 'அகவயப்படுத்தியுள்ள' (internalize) அடையாளங்களையும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநில குடும்பங்களில் உள்ள மாணவர்கள் 'அகவயப்படுத்தியுள்ள'
அடையாளங்களையும் ஒப்பிடுவது, தமிழின், தமிழரின் மீட்சிக்கு துணை புரிய வாய்ப்புள்ளது.
‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான
தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது
என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social
disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug
use) போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)
‘1. ஒரு இனத்தின் அடையாளம்
அழிவதற்கு முன், அதன் மொழியின் வீழ்ச்சியில் தான் அது தொடங்கும். மொழியின் வீழ்ச்சி
பயிற்று மொழி வலுவிழப்பில் ஆபத்தான கட்டத்தை அடையும்.1970 களுக்கு முன் உயர்நிலைப் பள்ளி வரை மிகவும் வலுவுடன் இருந்த தமிழ்வழிக்
கல்வி அதன்பின் ஆங்கிலவழிக் கல்வி புற்றீசல் வளர்ச்சியில் பாதிக்கப்பட்டு, இன்று தமிழ்வழி
ஆரம்பப்பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் அபாயத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறது
. ( தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சியும், மீட்சியும்- http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )
2. பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை விளங்கி, விவாதிக்க ஆர்வமும்,புலமையும் வேகமாக வற்றும் அளவுக்கு தமிழ் அறிவுப்பாலைவனமாக தமிழ்நாடு மாறிவருகிறது.( தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்- http://tamilsdirection.blogspot.in/)
3. தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலீஸின் அசுரவளர்ச்சி வேகத்தில் தமிழும் மரணப் படுக்கையில் உள்ளது.
4. வெள்ளைக்கார ஆட்சியில் அடையாளம் கண்டு அச்சில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் உள்ளிட்டு தமிழரின் வரலாற்றுச் சான்றுகளான பல கல்வெட்டுகள் கடந்த 30 வருடங்களில் நம்ப முடியாத அளவுக்கு 'குவாரி'வியாபாரிகள் லாபத்திற்காக, மலைகளில் அழிக்கப்பட்டு வருகின்றன. (உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இது நடந்திருந்தால், எந்தவித தூண்டுதலுமில்லாமல் தாமாகவே, மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும். தமிழ்நாட்டிலோ, இது போன்ற வழிகளில் 'பணக்காரர்' ஆனவர்கள், தமக்கு ஒத்து வரும் 'தமிழ்க்' குழுக்களின் புரவலராக இருக்கும் போது, இது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையாகக் கூட வெளிப்படவில்லை.)
5. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்டு அனைவரும் 1960 கள் வரை விளையாடிவந்த உள்ளும்(indoor) வெளியிலுமான(outdoor) அறிவு வளர்ச்சியை உள்ளடக்கிய விளையாட்டுகள் பெரும்பாலும் இன்று அழிந்து விட்டன.

1944இல்,
தமிழில் இருந்த' இனம்' என்ற சொல்லானது, பொருளில் திரிந்து, அந்த திரிதலில்
'திராவிடர்' அரங்கேறி, அதன்பின் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பத்துடன்
கூடிய, உணர்ச்சிபூர்வ போக்குகளின் வளர்ச்சியில்,
அறிவுப்புலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தொகு விளைவுகள் தான், மேலே குறிப்பிட்டவையா? என்பதும்
ஆய்விற்குரியதாகும்.
இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது, காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்பது பற்றிய சான்றுகளை கணக்கில் கொள்ளாமல், உணர்ச்சிபூர்வ போக்குகளில், சாதி ஒழிப்பு வீரர்களாக யார்? யார்? வலம் வருகிறார்கள்? (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) சாதிப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று போன்ற இன்னும்
பல பற்றுகளிலிருந்து விடுபட்டு, உலகக் குடிமகனாக வாழ்ந்து மறைந்த, ஆபிரகாம் கோவூர் (https://en.wikipedia.org/wiki/Abraham_Kovoor ) போன்று வாழ
வேண்டுமானால், அவர் அளவுக்கு ஆழ்ந்த புலமையும், நேர்மையான முறைகளில் சம்பாதித்து வாழும்
வசதியும் இருக்க வேண்டும். அது போன்று, விதி விலக்காக வாழ்பவர்கள் எல்லாம் பாராட்டுக்குரியவர்களே
ஆவர்.
அதற்கு மாறாக, தமிழில் ஆழ்ந்த புலமையின்றி, ஆங்கிலம்
உள்ளிட்ட பிற மொழி எதுவும் தெரியாத, (1967க்கு முன் தமிழ்வழிக்கல்வியில் உயர்நிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி -S.S.L.C- தேறியவர்கள் எல்லாம், ஆங்கில புத்தகங்களை படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு பெற்றிருந்தனர். கல்லூரிகளில் முதல் பாடம் ஆங்கிலமாயிருந்ததால், கல்லூரிகளில் தமிழ் மொழியை முதன்மைப் பாடமாக படித்தவர்களும், ஆங்கில இதழ்கள்/நூல்கள் படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு பெற்றிருந்தனர்.);
நேர்மையான முறைகளில் சம்பாதிப்பதை தவிர்த்து, சமூகக் கேடான குறுக்குவழிகளில் சம்பாதிப்பவர்களில் யார்? யார்? தாய் மொழிப் பற்றையும், பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள அறிவுச் செல்வத்தையும், கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ), 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று, பிரச்சாரம் செய்து வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் புலமையையும், நேர்மையையும் சீர்குலைத்து, அறிவுப்பதர்களாக, குறுக்குவழி பணக்காரர் ஆகும் தேவைகளும், (needs), ஈடுபாடுகளும் (interests,) எந்த சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism) வளர்ந்தது?

‘ஒரு தேசத்தில் “ அங்கம் வகிக்கும் மனிதர்களின் மனங்களில்
உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests) ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு
+ அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான ஆற்றலை (Energy) உருவாக்குகின்றன,/ சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம்,
பண்பாடு போன்றவையெல்லாம் மனிதரின் மனங்களில்
அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests) தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு
வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers) போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும்
செயல்படுகின்றன என்பது (ON GROWTH AND FORM BY D'ARCY WENTWORTH THOMPSON ) இந்நூலைப்
படிக்கையில் எனக்கு தெளிவானது.
'முற்போக்கு', 'புரட்சி' என்று உணர்வுமயமாக அவற்றை
சிதைத்தால், சமூகம் எவ்வளவு ஆபத்தான அழிவுப் பாதையில் பயணிக்கும் என்பதும் எனக்கு தெளிவானது…… சட்டத்தை ஏமாற்றி, குறுக்கு வழிகளில் (மனித நாய்களாகவும், காக்கைகளாகவும்,
'வாழ்வியல் புத்திசாலிகளாக') செல்வம் செல்வாக்கு
சம்பாதிப்பவர்களை, 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது, தமிழர்களின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும்.அது
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இடையில்
உள்ள, தொடர்புகளாகிய சமூக இழைகள் எதிர்த்
திசையில் ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட
அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813), உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.”
(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’;
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )
‘சுயமாக முன்னேறக்கூடிய அறிவாற்றலோ, தொழில் வியாபாரத்
திறமைகளோ இல்லாமல், உடலுழைப்பைத் தவிர்த்து 'முன்னேற', தமக்கு இயல்பாக அமைந்த 'தரகுத்
தொண்டு புலமையின்' மூலம் 'அதிவேகப் பணக்காரர்கள்' உருவாகவே, பெரியாரும், பெரியார் போதையில்
'முட்டாளாக' வாழ்ந்த என்னைப் போன்றோரும், உழைத்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’
(‘தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’;
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html
)
1944இல் திரிந்த 'இனம்' என்ற சொல்லை மீட்பதிலும்,
தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தை தடுத்து நிறுத்துவதிலும், உணர்ச்சிபூர்வ போக்குகளில்
பயணிப்பவர்களை விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதிலும், ஈடுபடுவதன் மூலமே,
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நாம் பங்களிக்க முடியும் என்பது எனது
கருத்தாகும்.
தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், தமிழரின்
அடையாளத்தை மீட்பதில் தாமதித்தால்;
தமிழ்நாட்டில்
வாழும் தமிழர்களில் பெரும்பாலோர், 'தமிங்கிலீசர்களாக' மாறி, பல்வேறு 'போதைகளில்' சிக்கி,
'தரகு, திருட்டு, சேவகம்' மூலமே பிழைக்க, உலக ஆதிக்க சக்திகளின் கங்காணிகள் பிடியில்,
தமிழ்நாடு முழுமையாக சிக்கி விடும் ஆபத்தை தவிர்க்க முடியாது.
“தமது பாரம்பரியத்தையும் மற்றும் பாரம்பரியம் பின்னிய
கதைகளையும் வேர்களாகக் கொண்ட தமக்கான சொந்த விளக்கம் ஆனது, ஒவ்வொரு நாட்டிற்கும் தேவைப்
படுகிறது. அது இல்லையென்றால், அதிக சக்தியுள்ள நாடுகளின் பிடியில் சிக்கி, சீரழிவதற்கே
அதிக வாய்ப்பிருக்கும்.”
“every country needs its own narrative, a
narrative rooted in its tradition and story; without this narrative, its agenda
could be appropriated by more powerful countries, and the country is more
likely to fail.”
http://logos.nationalinterest.in/2014/10/the-indian-grand-narrative/http://logos.nationalinterest.in/2014/10/the-indian-grand-narrative/
அந்த ஆபத்தை உணர்ந்து, உரிய ஆக்கபூர்வ மாற்றங்களுடன்
ஆர்.எஸ்.எஸ் பயணிப்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். பெரியார் கட்சிகள் விழித்துக் கொள்வார்களா?
அந்த மீட்பு முயற்சியில், தமிழரின் அடையாள மீட்பு இடம் பெற துணை புரிவார்களா? அல்லது தடைகளாக தொடர்வார்களா?
No comments:
Post a Comment