Friday, April 1, 2016

'சமூக நீதி' பற்றி பேச, நமக்கு அருகதை உண்டா? 

'பெரியார் சமூக கிருமிகள்' மூலம், தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான சமூகவியல் ஆய்வு? (1)



 “ நொய்யலுக்கு நூறு, நொய்யலை மீட்போம், நொய்யலைத் தேடி,நொய்யலுக்காக,...என நொய்யல் ஆற்றின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தி வந்த சிறுதுளி அமைப்பு, தற்போது 'நொய்யலை நோக்கி' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் சமூக ஆர்வலர்கள் சிலர். .... நொய்யல் ஆறு உருவாகும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே சிறுதுளி நிறுவனர் வனிதா மோகன் பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து சுற்றுலா விடுதிகளை கட்டி இருக்கிறார். முண்டாந்துறை வனப்பகுதியில் ஆற்றை வழி மறித்து சொகுசு பங்களாக்களையும், பண்ணை வீடுகளையும் 'தாமரா ரிசார்ட்ஸ்' என்ற பெயரில் எழுப்பி இருக்கிறார் வனிதா மோகனின் மகன் விக்ரம்....” 
'தமிழக அரசியல்' 30.03.2016 பக்கம் 20 - 21;

மேற்குறிப்பிட்ட செய்தியானது, கீழ்வரும் பதிவின் பின்னணியில் ஆய்விற்குரியதாகும்.

 தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள் (1) (Hyphothesis);

ஆய்வு (Research) திறந்த‌ மூலம் (Open Source)  கூட்டு முயற்சியே  (Collaboration) 
   'சாதி ஒழிப்பு' முகமூடியில், 'புதிய' பொது வாழ்வு திருடர்களா? 

Excerpt:

" மேலே பராமரிக்கப்பட்ட 'நச்சு நாற்றுகள்', 'நச்சு விவசாயமாக' வளர்ந்து; ( ' தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6); 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான; நல்ல விதைகளும், நச்சு விதைகளும்'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html ), 

திருடர்களே,  திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, அவ்வாறு 'விதைக்கப்பட்டு', 'திராவிட அரசியல்' மூலம், 'திராவிட, தேசிய, முற்போக்கு,  பிற்போக்கு' உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் 'சிக்க' வைத்து, தமிழ்நாட்டு பொதுவாழ்வில்  'அறுவடை'யில் உள்ளது; வெளிநாட்டு நிதியில் செயல்படும் என்.ஜி.ஓக்களின் 'பல வகை' ஆதரவுடன். 

மேலே குறிப்பிட்ட கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவிலேயே, அது சரியா? அல்லது தவறா? என்பது தெளிவாகும். (குறிப்பு கீழே)

மேலே குறிப்பிட்ட கருதுகோளை நான் உருவாக்கவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், துணை புரிந்த/புரியும் சமூகவியல் பரிசோதனை மாதிரிகளாக ( Sociological Real Life Experimental Specimens), திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' பயன்பட்டு வருகிறார்கள். [ 'sociologists use empirical evidence (that is, evidence corroborated by direct experience and/or observation) combined with the scientific method or an interpretive framework to deliver sound sociological research.'; https://opentextbc.ca/introductiontosociology/chapter/chapter2-sociological-research/ ] அந்த ஆய்வு நோக்கில், எனக்கு கிடைக்கும் சான்றுகளையும், அந்த சான்றுகள் அடிப்படையில் நான் யூகிப்பவைகளையும், எனது பதிவுகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். நான் முனைவர் பட்டம் பெறுவதற்கோ, பணம், புகழ் சம்பாதிப்பதற்கோ,  இதில் ஈடுபடவில்லை.

தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எண்ண‌ற்றோரின் தியாகங்கள் (தேசிய, திராவிட, பொதுவுடைமை உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும்) எல்லாம், தமிழ்நாட்டில் 'பொது அரங்கில் சுயநலக் கள்வர்கள்' ஆதிக்கம் பெறும் விளைவிலா,  முடிய வேண்டும்? அதிலிருந்து மீள வேண்டுமானால், அந்த பாதக விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பத்தை (Social Mechanism),  கண்டுபிடிக்க வேண்டாமா? 

இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. சுயலாப நோக்கமின்றி, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்கும் ஆர்வமுள்ள அனைவரின் பிரச்சினை ஆகும். "
போலியோ நோய்க்கிருமிகளின் மூலம் போலியோ எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்தது போல; (http://www.nytimes.com/1990/11/25/magazine/once-again-a-man-with-a-mission.html?pagewanted=all#h[ShcIwt,1] )

மேலே குறிப்பிட்டுள்ள திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார் சமூக கிருமிகள்' மூலம், தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான மருந்தினை -
மீட்சி வழிகளை -  கண்டுபிடிக்கும் சமூகவியல் ஆய்விலும், எனது இசை ஆய்வுகளுக்கிடையில்,நேரம் ஒதுக்கி, நான் முயன்று வருகிறேன். போலியோ எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜொனாஸ் சால்க், அந்த மருந்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முன், அவர் உள்ளிட்டு, அவரின் மனைவி மற்றும் 3 மகன்கள் உடல்களுக்குள்  ஊசி மூலம் செலுத்தி, பரிசோதனைகள் செய்தார்.( After successfully inoculating thousands of monkeys, Salk began the risky step of testing the vaccine on humans in 1952. In addition to administering the vaccine to children at two Pittsburgh-area institutions, Salk injected himself, his wife and his three sons in his kitchen after boiling the needles and syringes on his stovetop. Salk announced the success of the initial human tests to a national radio audience on March 26, 1953.
http://www.history.com/news/8-things-you-may-not-know-about-jonas-salk-and-the-polio-vaccine ) அது போலவே, நானும் நம்பமுடியாத விலை கொடுத்து, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' மூலம் தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான மருந்தினை - - வழிகளை-  கண்டுபிடிக்கும் சமூகவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
 

தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகள் உள்ளிட்ட சமுகவியல் நோக்கில், சமூகத்தில் ஊழல் வளரும் சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய சரியான புரிதல் ஈ.வெ.ராவுக்கு இருந்ததா?  மேலே குறிப்பிட்ட, 'பெரியார் முகமூடி சமூக நோய்க்கிருமிகள்' எந்த  சமூக செயல்நுட்பத்தில் முளைவிட்டு வளர்ந்தார்கள்? என்பது போன்ற கேள்விகளே, மேற்குறிப்பிட்ட சமூகவியல் ஆய்வுகளுக்கு துணை புரியும்.

நேர்மையான சுய சம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகளின்றி, மனித மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, 'பெரியார்' முகமூடியை எப்படியெப்படி பயன்படுத்தி, எந்தெந்த 'குறுக்கு வழி'களில், சமூகத்தை சீரழித்துவரும் எந்தெந்த 'வலைப்பின்னலில்'(network) இடம் பெற்று, எங்கெங்கு 'எதற்காக' உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு, எப்படியெப்படி சம்பாதித்து, அதில் எவ்வளவு எப்படியெப்படி செலவழித்து, 'எடுபிடி முற்போக்குகளை' வளர்த்து, இன்று வரை, 'சட்டத்தின் பிடியில்' சிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்? என்பது போன்ற அரிய சமூகவியல் (Sociology) ஆய்வுகள் மூலமே, சமூக நோய்க் கிருமிகளை அடையாளம் காண முடியும்.

எனவே தமிழ்நாட்டில் உண்மையான ஊழல் ஒழிப்பின் மூலமே சமூக கிருமிகளை ஒழித்து, சமூக நோய்களிலிருந்து தமிழையும், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க முடியும். வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்களில் சுயநல கள்வர்களாக வாழ்பவர்களும், மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு முகமுடி திருடர்களும், மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தால் வியப்பில்லை. மோடி ஆட்சியானது, ஊழல் ஒழிப்பில் வெற்றி பெற்று, அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் முன், அவர்களில் பெரும்பாலோர் சிறைவாசம் புரிந்தாலும் வியப்பில்லை. டிஜிட்டல்(Digital)  யுகத்தில், உரையாடல்கள், பண பரிவர்த்தனைகள், உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட அனைத்துமே அழியாத தடயங்களாக உள்ள சூழலில், மத்திய அரசுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்கும் அக்கறை இருந்தால், அது சாத்தியமே; 'ஊழல் பெருச்சாளிகளின்' செல்வாக்கு வளையத்தில் 'குளிர் காய்ந்து' கொண்டிருக்கும், 'இந்துத்வா' தலைவர்களை 'துணிச்சலுடன்' ஓரங்கட்டி.

'ஊழல் பெருச்சாளிகளிடம்' தமது 'தரகு திறமை' மூலம் நெருக்கமாகி, பிழைத்துக் கொண்டு, 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழின(?) உணர்வு' போன்ற முகமூடிகளில், 'மனித இழிவுக்கு இலக்கணமாக' வாழும் 'பெரியார் சமூக கிருமிகள்', எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தார்கள்? 'சமூகத்தூண்டல்' (Social Induction)  செயல்வினை மூலம், 'இந்துத்வா, முஸ்லீம், தலித், தேசிய' உள்ளிட்ட இன்னும் பல முகமூடிகளுடன், பொது அரங்கில், சுயநல கள்வர்களின் வளர்ச்சியை, அக்கிருமிகள் தூண்டி வருகிறார்களா? என்பதும், மேலே குறிப்பிட்ட, மீட்சிக்கான சமூகவியல் ஆய்வில் இடம் பெறுவதும் முக்கியமாகும். வியாபார ரீதியில் வெற்றி பெற்றுள்ள 'விசாரணை', 'கிருமி' போன்ற திரைப்படங்களில், அரசு அமைப்பில் (Govt system) ஊழல் பெருச்சாளிகளின் 'ஆதிக்கம்' அம்பலமாகியுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஆய்வின் மூலம், 'சமூக விசாரணையை' துவங்க வேண்டிய கட்டம் நெருங்கி விட்டதை, அந்த திரைப்படங்களின் வெற்றிகள் உணர்த்துகின்றன. 

அது போன்ற திருடர்கள் நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருந்தால், 'சமூக நீதி' பற்றி பேச, நமக்கு அருகதை உண்டா?

மோடி அரசானது, ஊழலை ஒழிப்பதில் வெற்றி பெறவில்லையென்றாலும்;

புறத்தில் பல்வேறு கொள்கை முகமூடிகளுடன் வாழ்ந்து கொண்டு, அகச் சீரழிவில், 'ஒற்றுமையுடன்' வாழ்ந்து, சமூகத்தை சீரழித்து வரும் கள்வர்களை அடையாளம் கண்டு, ஒதுக்குவதன் மூலம், ஊழலை மட்டுமல்ல, சமூகச் சீரழிவையும் நாம் வெற்றி கொள்ள முடியும்; அகச்சீரழிவின்றி நாம் வாழ்ந்து கொண்டிருந்தால். சுயலாப நோக்கின்றி, வெற்றி பெறும் நம்மைப் போன்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சியின் வேகமும் அதிகரிக்கும். பிறக்கும்போது எதையும் கொண்டுவராத, இறக்கும்போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாத, மனித வாழ்க்கையில், நம்மை போன்றவர்கள் மட்டுமே இறக்கும்போது, அம்மீட்சிக்கு பங்களிப்பு வழங்கிய மனநிறைவுடன் மரணத்தை தழுவ முடியும்; வீழ்ச்சிக்கு பங்களித்த குற்ற உணர்வின்றி.

No comments:

Post a Comment