'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான ஆதரவானது;
வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்'
கீழ்வரும் குறிப்பில் உள்ளவை பற்றிய 'அறியாமையில்',
ஈ.வெ.ராவை 'தேசதுரோகி' என்றும், 1967க்கு முன் 'முரசொலியில்' ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி
வெளிவந்தவைக்கு, இன்று 'புத்துயிர்' கொடுத்தும், இழிவு படுத்திவரும், 'இந்துத்வா' முகாம்களில் உள்ளவர்களும் சரி;
'சுயநல கள்வர்களாக' 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம்
சமூகத்தை சீரழித்துக் கொண்டே, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு' என்று
'வாழும்' 'சமூக கள்வர்களை' கண்டுகொள்ளாமல், 'பெரியார்' போதையில் ('திருச்சி பெரியார்
மையத்தில்' நான் பயணித்தது போல; ) வாழ்ந்து வருபவர்களும் சரி; (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html
)
சுயலாப நோக்கின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி பற்றி, அந்த இரு வகை பிரிவினரில், எவருக்கேனும், உண்மையான
அக்கறை இருந்தால், அவர்கள் 'வீழ்ச்சிக்கான' காரணங்களை சரியாக கண்டுபிடிக்க, அவசியம்
படிக்க வேண்டியது, ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையாகும்.
இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல்
கட்சிகளில் உள்ள 'பொதுவாழ்வு வியாபாரிகள்' பற்றிய சமூக 'எக்ஸ் ரே' (X-ray) போன்று அந்த உரை அமைந்துள்ளதை,
இன்று அந்த உரையை படிப்பவர்கள் அறிவார்கள். (இணையத்தில் எனது தேடலில் அந்த உரை கிடைக்கவில்லை.
கிடைத்தால் இந்த பதிவில் அதையும் இணைக்கலாம்)
அத்தகைய அபாய எச்சரிக்கை விடுத்த, ஈ.வெ.ரா, அதன்பின்
'உணர்ச்சிபூர்வ' போக்கில், தி.மு.கவினரையும், குறிப்பாக அண்ணாதுரையையும் இழிவுபடுத்தியவையெல்லாம்,
எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் வரலாற்று சான்றுகளாக வாழ்கின்றன. அதே போல், அண்ணாதுரையை
தவிர்த்து, மற்ற தி.மு.க தலைவர்கள் எல்லாம், ஈ.வெ.ராவை இழிவுபடுத்தியவையெல்லாம், 'முரசொலி' உள்ளிட்ட
இதழ்களில் இருக்கின்றன; ஒலி வடிவிலும் இருக்கலாம். திராவிட இயக்க வரலாற்றில், அது போன்ற கருத்துக்கு, ‘பகிரங்க மன்னிப்பு’ கேட்ட முதல் நபராக வைகோ இருக்கலாம். (http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=52c7f082-09dd-444f-aeb0-7794cd2058d2&CATEGORYNAME=TCHN )
தி.க மற்றும் தி.மு.க இடையே, 1949 முதல் 'வீரியமாக' வளர்ந்த 'உணர்ச்சிபூர்வ' மோதல்கள்
காரணமாக, தி.க பலகீனமாகி, தி.மு.க 'வீரியத்துடன்' ராஜாஜியின் 'துணையுடன்' வளர்ந்து,
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், ஈ.வெ.ராவையும், தி.கவையும் ஓரங்கட்டி, 'உண்ர்ச்சிபூர்வ'
போராட்டங்களில், தமிழ்நாட்டில் 'திராவிட' இயக்க ஆதரவுடன், 'காந்தி வழியில்'(?) மாணவர்களை
போராட்டங்களில் பங்கேற்க வைத்து;
அதுவே 1967 ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்க, 'தமிழ்,
தமிழர், தமிழ்நாடு' ஆகியவற்றின் 'வீழ்ச்சிப் பயணம்' தொடங்கியதா? தமிழர்களிடையே இருந்த புலமையும், அறிவும், மானமும், சுயமரியாதையும் வீழ்ச்சிக்குள்ளாகி, 'சுயநல கள்வர்' நோயானது, 'சமூக வைரஸாக' (Social Virus) பரவி, 'குறுக்கு வழிகளில்' பணம் சம்பாதிக்க, மனித காக்கைகளும், மனித நாய்களும் 'வீரியமாக' வளர, உணர்ச்சிபூர்வ 'சுனாமியில்', அறிவுபூர்வ போக்குகளும் வீழ்ச்சிக்குள்ளாகி, தமிழ்வழிக்கல்வியும் (எனவே தமிழும்) மரணப்பயணத்தில் சிக்கியதா? (http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html)
அந்த வீழ்ச்சிப்போக்கில், 'பெரியார் சமூக கிருமிகள்'
வளர்ந்து, என்னைப் போன்றவர்களை முட்டாளாக்கி, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பலன்கள்' பெற நேர்ந்ததா? 'அந்த பாதிப்புகள்'
காரணமாக, எனது இசை ஆய்வுப்பணிகளின் ஊடே, சமூகவியல் ஆய்வும் மேற்கொண்டு, 'பெரியார் சமூக
கிருமிகள்' வளர்ந்த சமூக செயல்நுட்பத்தினை நான் கண்டுபிடிக்க நேர்ந்ததா? என்பவையெல்லாம்
விவாதத்திற்கும், ஆய்விற்கும் உரியவையாகும்.
“பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப்
பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும்,
அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing) உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்'
உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு
1)
அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations) காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும்,
இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது.
தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து,
அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை- நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த- உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின்
அடிப்படையில், அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை
தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம்
கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.
எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்
செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.” (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html
) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த, தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன். 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ), தொடர்ந்து 'இணைய வழியில்', அந்த கண்டுபிடிப்பை விளக்கி, பல கட்டுரைகள் வெளியிட்டு வருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு வெளி வராத நிலையில், ( 2005 முதல் இன்றுவரை, ஏன் வெளிவரவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும். இனிமேலாவது வருமா?) அவ்வாறு அறிவுபூர்வ மறுப்பு வெளி வராத நிலையில், திருச்சி பெரியார் மையத்திற்கு நான் உழைத்ததன் பலனாக, 'தனது கடனுக்காக, பிராமண சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும்' மாறிவிட்டதாக, என்னிடம் நேரில் தெரிவித்து விளக்கம் கேட்கும் துணிச்சலின்றி, என்னை இழிவுபடுத்தி, 'கோழைத்தனமாக', எனது முதுக்குப் பின்னால் பிரச்சாரம் நடந்து வந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) இவையனைத்தையுமே, அந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய சமூக சிக்னல்களாக (Social Signals) கருதி, எனது சமூகவியல் ஆய்வில், நான் பயணிக்கிறேன்; 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்பவர்களை, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் அடையாளம் கண்டு; 'பெரியார் முகமூடியுடன்' எவ்வாறு ஏமாற்றி வாழ்கிறார்கள்? 1944-இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கி, சமூக ஒப்பீடு நோயில், லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நஞ்சானது, சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில் கலந்து ஏற்படுத்திய பாதிப்புகள், தமிழ்நாட்டில் இருந்த சமூக செயல்நெறி மதகுகளை எந்த அளவுக்கு சிதைத்தன? என்ற சமூக செயல்நுட்பம் (Social Technique) பற்றிய ஆய்வுடன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில்
வெளிப்படும் உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்தும், (
http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html);
http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html);
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கில், இன்று
இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்படும் அறிவுபூர்வ விவாதங்களை
ஊக்குவித்தும், என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்காக, சுயலாப நோக்கின்றி வாழ்பவர்கள்
மத்தியில், இதற்கான ஆதரவானது, வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்', என்ற நம்பிக்கையில்;
திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் எல்லாம்;
அந்தந்த கட்சிகளில் உள்ள சுயலாப நோக்கின்றி, தத்தம் கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்களின் சமூக பொறுப்பினால், விளைந்த முயற்சிகளால்;
அந்தந்த கட்சிகளில், 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக';
அதன் மூலம், அந்த சமூக கிருமிகளின் வலைப்பின்னலில் இடம் பெற்றிருந்த, நீதிபதிகள், அரசு வக்கீல்கள், காவல் துறை, சிறை துறை ஆகியவற்றில் இருக்கும் 'கறுப்பு ஆடுகள்' எல்லாம் அம்பலமாக;
அரசும், சட்டமும் தமது 'முகத்தை'க் காப்பாற்றிக்கொள்ள, 'சமூக குற்றவாளிகளை' சட்டம் மூலம், 'சரியாக' தண்டிக்கும் படலமானது, தமிழ்நாட்டில் தொடங்கும், என்ற எதிர்பார்ப்பில்.
திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் எல்லாம்;
அந்தந்த கட்சிகளில் உள்ள சுயலாப நோக்கின்றி, தத்தம் கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்களின் சமூக பொறுப்பினால், விளைந்த முயற்சிகளால்;
அந்தந்த கட்சிகளில், 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக';
அதன் மூலம், அந்த சமூக கிருமிகளின் வலைப்பின்னலில் இடம் பெற்றிருந்த, நீதிபதிகள், அரசு வக்கீல்கள், காவல் துறை, சிறை துறை ஆகியவற்றில் இருக்கும் 'கறுப்பு ஆடுகள்' எல்லாம் அம்பலமாக;
அரசும், சட்டமும் தமது 'முகத்தை'க் காப்பாற்றிக்கொள்ள, 'சமூக குற்றவாளிகளை' சட்டம் மூலம், 'சரியாக' தண்டிக்கும் படலமானது, தமிழ்நாட்டில் தொடங்கும், என்ற எதிர்பார்ப்பில்.
குறிப்பு:
1857 இந்திய விடுதலைப் போர் வெற்றி பெற்றிருந்தால்,
இந்தியா சுமார் 50க்கும் அதிகமான மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும்; தமிழ்நாடும்
பல மன்னர்கள் ஆட்சியில் இருந்திருக்கும்; 'இந்தியர்' என்ற அடையாளமானது 'பாரம்பரியம்,
பண்பாடு' பரிமாணங்களில் 'வேற்றுமையுடன் கூடிய ஒற்றுமையில்'; 'அரசியல்' பரிமாணமின்றி.
அந்த பின்னணியில் தான், அதன்பின் 'காலனி சூழ்ச்சியில்' அரங்கேறிய மாற்றங்களின் பின்னணியில்,
1947 இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ரா கோரிய 'திராவிட நாடு பிரிவினையை', ராஜாஜியும்,
அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்தனர்.
இன்றுள்ள சர்வதேச சூழலில், 'இந்தியர்' அடையாளத்துடன்
இணக்கமான முறையில் தமிழர் உள்ளிட்ட அடையாளங்களை, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றை,
மேற்கத்திய வழிபாட்டில் சிக்காமல், நவீனமயப்படுத்தி (Modernization without
Westernization) முன்னேறுவதே புத்திசாலித்தனம்;
வீழ்ச்சியிலிருந்து மீண்டு முன்னேற.
குறிப்பு 1:
தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட
பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும், என்பதற்கான பெரியார்
ஈ.வெ.ரா அவர்களின் கருத்து, கீழ்வரும் மேற்கோளில்
உள்ளது.
"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது;
மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும்.
அல்லது அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும்
கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள்,
அவர்கள் குடும்பங்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு
மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.
வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான்
பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன்
மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ
'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.
மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத்
தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று
உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக்
கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம்
செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும் மேற்பட்ட
செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப்
பார். " - பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்
17.09.1962
( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் )
தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில்
'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக
வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு,
ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக்
கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.
No comments:
Post a Comment