Friday, June 1, 2018

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (9);

 

'ஸ்டெர்லைட் பாணியில்'  செயல்படும் ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் சிக்கியுள்ள‌ தமிழ்நாடு?




ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால் தூத்துக்குடி சந்திக்கும் வேலைவாய்ப்புகள், வியாபாரங்கள் தொடர்பான இழப்புகள் பற்றி முகநூலில் (https://www.facebook.com/Sreepriya.Iyer?hc_ref=ARS15XmzFFYPwOos6jRVc-3j3gvEn98FI9SXd7fyzgQDPF1XeumnaXTK1aUYPI36XKg&fref=nf ;Thanks to Kumar Kandasamy from Facebook ) வெளிவந்துள்ள தகவல்களும்,  

இதே போக்கு தொடருமானால் திருப்பூர், வேலூர், உள்ளிட்டு தமிழ்நாடெங்கும் ஆலைகளை மூட வைக்கும் இலக்கு நோக்கி, இணையத்தில் வெளிப்பட்டு வரும் முயற்சிகளும், எனக்குள் ஏற்படுத்தியுள்ள கவலையின் காரணமாக இப்பதிவினை எழுதுகிறேன்.

ஏற்கனவே படித்து விட்டு வேலைக்காக அலைபவர்களின் துயரங்களோடு, தூத்துக்குடியில் புதிதாக வேலை இழப்புகளுக்கும், வியாபார இழப்புகளுக்கும் உள்ளாகியுள்ளவர்களின் துயரங்களும் சேர்ந்து, எவ்வளவு மாரடைப்பு, தற்கொலை, குடும்ப சீர்குலைவு, போன்ற இன்னும் பல சமூக சீர்குலைவுகளை ஏற்படுத்தப் போகிறது?

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் போன்று பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகள் தரும் ஆலைகளின் சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகளை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை, என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளிப்பட்டுள்ளது.
“Jayshree Vencatasan, a scientist and managing trustee at the Care Earth Trust, a conservation group, said Tamil Nadu lacked the technical capacity to properly monitor the impact of heavy industry”.; https://www.theguardian.com/world/2018/may/28/india-copper-plant-sterlite-vedanta-shut-down-deadly-protests
 
உலகில் தாமிரத்தின் மொத்த உற்பத்தியில் 35% ஆனது, 20 பெரிய தாமிரத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் 10 தொழிற்சாலைகள் சீனாவில் உள்ளன. அந்த 20 தொழிற்சாலைகளில் மிகவும் பெரியதான முதல் 5 தொழிற்சாலைகளில், 4 சீனாவில் உள்ளன. (https://www.thebalance.com/the-20-largest-copper-refineries-2339744 )

உலகில் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளில் இந்தியா இல்லை.; https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_copper_production

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தமிழ்நாட்டுக்கும் ஒரு பாடமாகும்

ஊழல் வலையில் சிக்கி, சுற்றுப்புற சூழலை கெடுத்து வரும் பிற ஆலைகள் எல்லாம், ஊழல் செலவினத்தை குறைத்து, சரியான கழிவு அகற்றல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்தி, போராட்டத்திற்கான 'நியாயங்கள்' எழுவதற்கு இடமில்லாமல் செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஆலைகள் எல்லாம், 'ஸ்டெர்லைட் பாணியில்' மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழந்து, தரகு/திருட்டு போன்ற தொழில்களின் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சீரழிய இருக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட கவலையை வெளிப்படுத்திய ரஜினியை நான் மனமாற பாராட்டுகிறேன்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக துவக்கத்தில் கேலி பேசிய நண்பரான பேராசிரியர், ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி மட்டுமே சமூக பொறுப்புடன் கருத்து தெரிவித்துள்ளதாக பாராட்டி, என்னை வியப்பில் ஆழ்த்தினார்.

அதைவிட மேலாக;

மாணவர்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே தவிர, கட்சி அரசியலில் ஈடுபடக்கூடாது, என்று துணிச்சலுடன், காமராஜருக்கு பிறகு, பகிரங்கமாக அறிவித்துள்ள ஒரே நபர் ரஜினி மட்டுமே, நானறிந்த வரையில்.

தமிழ் இதழ்களின் எழுத்தாளர்களின் வாசகர்கள் எல்லாம் பெரும்பாலும் ஓரளவு வசதியான சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். எனவே மாணவர்கள், படித்த இளைஞர்கள், கிராமப்புற நடுத்தர ஏழைகள் தொடர்பான பொதுக்கருத்து உருவாக்கத்தில் (Public Opinion Formation), தமிழ் இதழ்களின் எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக மிக குறைவே ஆகும் மேற்குறிப்பிட்ட பிரிவினரின் நாடித்துடிப்பை, அந்த இதழ்களும் எழுத்தாளர்களும், சரியாக கணிப்பதும் கடினமே ஆகும்

மீடியாக்களில் விதி விலக்காக, கடந்த சட்டமன்ற தேர்தல் முதல், ஆர்.கே.நகர் தேர்தல் வரை,  ஓரளவு சரியான கணிப்பினை 'துக்ளக்' மட்டும் எப்படி, அந்த நாடித் துடிப்பை உணர்ந்து, வெளியிட்டு வருகிறது? என்பதானது வியப்பிற்குரியதாகும்.’ (‘நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (8); தி.மு., பா.. தோல்விகளுக்கான 'மீடியா செயல்நுட்பம்'?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக துக்ளக் (31.05.2018) இதழில் வெளிவந்த கட்டுரைகள் எனது கவனத்தை ஈர்த்தன.

ஜெயலலிதா ஆட்சியில் 1995இல் 'மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரம் தள்ளி தொழிற்சாலை அமைய, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவாக, சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான மதிப்பீடு செய்தே ஆக வேண்டும் என்று .தி.மு.. அரசு உத்தரவிட்டது. 14.10.1996 - ல் தி.மு.. அரசுதான், .தி.மு.. அரசு - மே 1995-ல் விதித்த விதிகளை ஒதுக்கி, மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தூரத்துக்குள் தொழிற்சாலை அமைய TNPCB மூலம் அனுமதி அளித்தது.' முதல் கோணல் இங்கு தான் தொடங்கியது. 1997 முதலே ஸ்டெர்லைட் கழிவுகள் காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் ஆலை செயல்பாட்டின் குறைபாடுகள் வெளிவரத் தொடங்கின

அது முதல் ஆலை செயல்பட நீதிமன்றங்கள் தடை விதித்ததிலும், பின் தடையை நீக்கியதிலும்

சென்னை உயர் நீதிமன்றம்,சுற்றுச்சூழல் விவகாரங்களை ஆய்வு செய்யும்நீரி’ (NEERI)) அமைப்பை, ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்யக் கூறியதிலும், ஆய்வு செய்ய ஸ்டெர்லைட், நீரிக்கு ரூ.1.27 கோடி கட்டணம் கொடுத்ததும், 40,000 டன் செப்பு தயாரிக்க முதலில் அனுமதி கொடுத்து செயல்பட்ட போதே, நோய் பாதிப்புகள் வெளிப்பட தொடங்கியிருந்தும், பின்பு 4 லட்சம் டன் செப்பு தயாரிக்கும் ராட்சத நிறுவனமாக்கி, அதன் சுற்றுச்சூழல் மாசுபடும் சக்தியை 10 மடங்கு தமிழகத்தில் தி.மு..வும், டெல்லியில் தி.மு.. பங்கு பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்தான் அதிகமாக்கியதும்;

நோய் பாதிப்புகள் பன்மடங்காகி, மக்களின் கோப வெள்ளம் சுனாமியாகியது எவ்வாறு?

என்ற உண்மையை அறிய, 28 ஆண்டு ஸ்டெர்லைட் அரசியல் சரித்திரத்தை திரும்பப் பார்த்தால்தான் விளங்கும்.

ஆனால் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்த க‌ட்சிகளின் தலைவர்கள் எவராவது ('பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு), தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட்டின் 28 வருட வரலாற்றில், மேலே குறிப்பிட்டவாறு கடும்பாதிப்புகளை ஏற்படுத்தி ஆலை செயல்படுவதற்கு, அரசு துறைகளிலும், கட்சிகளிலும் ஒத்துழைத்து 'பலன்கள்' அனுபவித்த குற்றவாளிகளை உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்;

என்று கோரிக்கை எழுப்பியதாக‌ தெரியவில்லை. 

மாறாக 'மோடி எதிர்ப்பு' என்ற குவியத்தில் முன்னெடுத்து, வன்முறையில் பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்து, பல உயிர்களை காவு வாங்கியதானது, சமூக விரோத சக்திகளின் ஊடுறுவலுக்கான முன் தடயமானது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நிய சக்திகள் பற்றிய கீழ்வரும் செய்திக்கு முறையான மறுப்பு வெளிவந்ததாக தெரியவில்லை.

‘எல்லா பிரச்சினைகளையும் அரசியல் நோக்கில், அதுவும் ஏற்கனவே முடிவு செய்து கொண்டு விட்ட காழ்ப்புணர்ச்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது என்பதான‌ நமது தனி அடையாள நோய் அரங்கேறியதா? என்ற ஆய்வுக்கான நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டுவது அரிது. தகர்ப்பது எளிது. அது போல சமூகத்தில் ஆக்கபூர்வமாக எதையும் உருவாக்குவது அரிது. 'முற்போக்கு, புரட்சி'  என்ற பெயரில் அதனை சீர்குலைப்பது எளிது; என்பதற்கு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்து, வி.ஐ.சுப்பிரமணியத்தை துணைவேந்தராக நியமித்து, ஊழலுக்கு இடமின்றி தமிழ் பாரம்பரியத்தை முன் நிறுத்தி, கணபதி ஸ்தபதி மேற்பார்வையில் கட்டப்பட்டு உருவான 'தமிழ்ப்பல்கலைகழகமானது', எந்த போராட்ட வழிமுறைகளில் சீர்குலைவுக்கு உள்ளானது? அந்த போராட்டங்களில் முன்னுக்கு நின்றவர்களில் எவராவது, அந்த சீர்குலைவினைப் பற்றி கவலைப்பட்டு, அதனை மீண்டும் சீரமைக்க மெனக்கெட்டார்களா? அது போன்ற சீர்குலைவுகளின் விளைவுகளை தமிழ்நாடு தொடர்ந்து அனுபவித்தாக வேண்டுமா? சீர்குலைத்த தலைவர்கள், அந்த பாதிப்புகளில் பங்கேற்காமல், அடுத்தடுத்த 'புரட்சி' சீர்குலைவுகளை தூண்டி, வசதி வாய்ப்புகளில் வளர்வது என்ற போக்கிலிருந்து, தமிழ்நாடு விடுதலையாகாமல், மீள முடியுமா?’ (‘'புரட்சி'(?) சமூக செயல்நுட்பம் மூலம் சீரழிந்த‌ தமிழ்நாட்டை, எவ்வாறு மீட்பது?’; https://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_7.html)
 

தமது குடும்பப் பிள்ளைகள் படித்தாலும், படிக்கா விட்டாலும் நன்கு செட்டில் செய்து, 'தமது குடும்பத்துக்கு ஒரு நீதி', 'ஊரான் குடும்பத்திற்கு வேறு நீதி' என்ற இரட்டை வேடப் போக்கில், மனசாட்சியின்றி பயணிப்பவர்கள் மட்டுமே, மேலே குறிப்பிட்ட 'புரட்சி' சீர்குலைவுகளை தூண்டி வாழ முடியும்.

1967க்கு முன்பு இருந்தது போல ஊழலற்ற ஆட்சி இருந்திருக்குமானால், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே ஸ்டெர்லைட் ஆலையானது அனுமதி பெற்று செயல்பட்டிருக்கும்: ஊழலுக்கு செலவு செய்த தொகைக்கும் குறைவான தொகையிலேயே உரிய மாசுக்கட்டுப்பாட்டு பாதுகாப்புகளுடன் அந்த ஆலை செயல்பட்டிருக்கும்;

உலக நாடுகளில் ஒழுங்காக செயல்பட்டு வரும் மற்ற தாமிர ஆலைகளைப் போலவே.

 ஒரு வீட்டில் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் களவாடப்பட்டதை அறிந்து, அந்த வீட்டில் திருடன் திருடியதை யூகித்து வெளிப்படுத்தினால், 'அப்ப உனக்கு திருடனை தெரியுமா? யார்னு சொல்லு' என்று கேட்பதைப் போலவே, ரஜினியை நோக்கி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் தொடர்பான அவரது கருத்தினை ஏளனம் செய்து, கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் போன்றவற்றில் சமூக விரோத சக்திகள், போராட்டத்தின் வளர்ச்சிப்போக்கில் ஊடுருவி, எந்த அளவுக்கு ஊடுருவி  குலைப்பார்கள்?  (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

என்பதை விளக்கி பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன

உதாரணமாக, உலக ஆதிக்க சக்திகள் மனித உரிமை, பிரிவினை உள்ளிட்ட போராட்டங்களை எல்லாம் ஊடுருவி பொம்மலாட்டம் ஆக்கிவரும் போக்குகளை வெளிப்படுத்திய ஆங்கில நாவல் The Aquitaine Progression (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression )

மேற்கத்திய அரசுகளின் சுயநலன்களுக்கு உதவும் வகையில் 'ஆம்னஸ்டிக் இன்டன்நேஷ்னல்' போன்ற அமைப்புகளே செயல்பட்டு வருவது தொடர்பான சான்றுகளும் வெளிவந்துள்ளன.
Boyle stated his suspicion that the International Secretariat of Amnesty International, based geographically in London, UK, was also subject to this bias. He attributes the alleged links between Amnesty International and US and UK foreign policy interests to the relatively large financial contribution of Amnesty International USA to AI's international budget, which he estimated at 20%.[1]; http://research.omicsgroup.org/index.php/Criticism_of_Amnesty_International
 
‘'போராட்டம் எப்படி கலவரமாகிறது? என்பதை விளக்கும் கீழ்வரும் காணொளி எனது பார்வையில் பட்டது. அதனை அறிவுபூர்வமாக மறுத்து, ஏதேனும் வெளிவந்திருந்தால், அதனை காண்பதிலும் ஆர்வமாயுள்ளேன்.

சிக்னலுடன்(Signal) இரைச்சல்(Noise) அளவுக்கு மீறி கலந்து ஏற்பி(Receiver)  செயல்பாட்டினை சீர் குலைப்பது போலவே;

ஸ்டெர்லைட் போன்ற எதிர்ப்புகளுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து எதிர்க்கும் போக்கு தொடர்ந்தால், புதிய திட்டங்கள் வராமலும்; 

அதிக வேலைவாய்ப்புகளுடன் செயல்படும் தொழில்களும், தமிழ்நாட்டை விட்டு, வெளியேறும் அபாயமும் இருக்கிறது. 

அது போன்ற எதிர்ப்புகள் இருந்திருந்தால், திருச்சி பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள்/திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா?’ (‘ஸ்டெர்லைட் படுகொலையில், ‘ஆச்சாரப் பார்ப்பான், லௌகீகப் பார்ப்பான்' காண்பது குருட்டுப் பகுத்தறிவாகாதா?’; http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் செயல்பட உதவிய ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் தண்டிக்குமாறு எவராவது கோரிக்கை எழுப்பினார்களா? இனியாவது எழுப்புவார்களா? 

அவ்வாறு தண்டிக்கப்படவில்லையென்றால்;

சரியான கழிவு நீக்கல் தொழில்நுட்ப செலவுகளை குறைத்து, ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, சுற்றுப்புற சூழலை சீரழித்தஸ்டெர்லைட் பாணியில், தமிழ்நாட்டில்  செயல்பட்டு வரும் அனைத்து ஆலைகளையும் மூடி, லட்சகணக்கானோர் வேலை இழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது.

அந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டிய ஒரே நபரான ரஜினையை ஏளனம் செய்து இழிவுபடுத்துவதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கான வாய்ப்பினையும் கெடுக்கும் பெரும் அபாயமாகும்.

No comments:

Post a Comment