Saturday, June 23, 2018

தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’ (Macro-world (7)

 

தமிழ்நாட்டில் மாணவர்கள் தெருவில் பிச்சை கேட்டல் இன்னும் வேகமாக அதிகரிக்கும்?



‘தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் வரை சீரழித்து வரும் பல வகை போதைகளும், திரிந்த சமூக நீதியில் வளர்ந்து வரும் தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களும், அதன் மூலம் வளர்ந்து வரும்தமிழர் அடையாள அழிப்பும்’, ஆதாய அரசியலில் கட்சிகளை சீரழித்து வரும் பிரிவினைப் போக்குகளும்;

மேலே குறிப்பிட்ட 'அந்த தேவைகள்' உருவான சமூக செயல்நுட்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியதன் விளைவுகளே அகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

அந்த சமூக செயல்நுட்பமானது எவ்வாறு அரங்கேறியது? என்ற கேள்விக்கான, விடைகளை தரும் திறவுகோல்கள் எல்லாம் முக்கியமானவையாகும்.

தாழ்வு மனப்பான்மையில் (Inferiority Complex) உழலும் ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் நடத்தும் உரையாடல் கூட, 'எப்பாடுபட்டாகிலும் வெற்றி பெற வேண்டிய போர்க்களமாகிவிடும்' அவலமும் உண்டு.

தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும், வாழும் தமிழர்கள் மத்தியில் நடக்கும் உரையாடல்களை கூர்ந்து கவனித்தால், மேலே குறிப்பிட்ட 'போர்க்களமானது' 'சமூக ஒப்பீடு நோயின்' (Social Comparison Infection) அடிப்படையில் செயல்படுவது புலனாகும்;

படைப்பாற்றல் திறனுள்ள கதாசாரியருக்கு, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கான மூலங்களாக (sources).

தான் அண்மையில் வாங்கிய வீடு, கார், மேற்கொண்ட சுற்றுலா புதிதாக படித்த புத்தகம், சந்தித்த முக்கிய நபர் உள்ளிட்டு முதல் நபர் எந்த தகவலையும் தமது உரையாடலில் வெளிப்படுத்தினால்;

அடுத்த நபர் அந்த தகவலையே 'உரையாடல் போரின்' துவக்கமாக கருதி, தன்னிடமுள்ள வீடு, கார், மேற்கொண்ட பயணம், புதிதாக படித்த புத்தகம், சந்தித்த முக்கிய நபர், போன்றவற்றினை வெளிப்படுத்தி, முதல் நபருக்கு சமமாக, அல்லது மேலாக தாம் வாழ்வதை சுட்டிக்காட்டுவதில் வெற்றி பெற்றால் தான், அந்த உரையாடலில் அவருக்கு திருப்தி இருக்கும்.

'அந்த உரையாடல் போரில்' தான் வெற்றி பெற முடியாத அளவுக்கு, முதல் நபர் 'அதீத' மேல் இடத்திற்கு உயர்ந்து விட்டதாக தெரிந்த மறுகணமே, சிறிதும் கூச்சமின்றி, அவருக்கு 'வாலட்டி', அவர் மூலம் தாம் உயரும் 'சுயலாப' கணக்கில் உரையாடலை தொடரும் காட்சி அரங்கேறும்; மனதுக்குள் அழுக்காறு நோயில் அவர் மீது புழுங்கியவாறே.

அந்த அளவுக்கு எப்பாடுபட்டாகிலும், 'பிறர்'(?) பார்வையில் தம்மை உயர்த்திக்காட்டுவதையே, சாகும் வரை வாழ வேண்டிய வாழ்க்கையாகக் கருதி வாழும் முட்டாள்த் தமிழர்கள் அதிகரித்து வருவதும்;

அந்தந்த குடும்பப்பிள்ளைகள் எல்லாம் பொது ஒழுக்க நெறிகள் தெரியாமல் வளரும் சூழலுக்கு, முக்கிய காரணமாகி விடுகிறது. இயல்பான அன்பை வெளிப்படுத்துவது, 'ஈகோ'(Ego) சிறையில் சிக்காமல், 'சுயலாப நட்ட கணக்கீடு' நோயிலும் சிக்காமல், 'தகவல் பரிமாற்றம்' மூலம் தம்மை வளர்த்துக் கொள்வது, உதவுவது, போன்றவை எல்லாம் தமிழர்களின் 'உரையாடல்களில்' வற‌ண்டு, அந்த சீரழிவுக்கு வினைஊக்கியாகி(catalyst) வருகிறது.

‘'தமக்கென வாழாமல்' 'பிறர் பொறாமைப்படும் அளவுக்கு' வாழ்வதையே, தனது வாழ்வின் அதிமுக்கிய நோக்கமாகக் (Life Aim) கொண்டு வாழ்பவர்கள் எல்லாம்;

எந்த அளவுக்கு 'சமூக ஒப்பிடு நோயில்' சிக்கி, பிறரின் பாராட்டுதலுக்கு ஏங்கி, வாழ்கிறார்களோ, அந்த அளவுக்கு உள்ளார்ந்த ஈடுபாடுகளிலிருந்து(Passions) விலகி, தமிழருக்கான இயல்பில் திரிந்து, வாழ்வின் உயிரோட்டத்தை இழந்து, 'மனித ரோபோக்களாக' வாழ்கிறார்கள்.’ (‘தமக்கென வாழா மன நோயாளிகள் '; http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html )

சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிக்கும் திருட்டு, கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் எல்லாம், அதிக விலையுள்ள காருடன், அதிக விலையுள்ள வீடுகளில், அந்தந்த சாதி உற்றமும், சுற்றமும் மதிக்க வாழ்வதானது, அந்தந்த சாதிகளில் உள்ள குடும்பப் பிள்ளைகள் எல்லாம் சீரழிய காரணமாகிறது.

மேலே குறிப்பிட்ட சமூக சூழலில், தமிழ்நாட்டில் இன்று மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper middle class- குடும்பப்பிள்ளைகளும் கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை) திருட்டு, (மது/போதை மாத்திரை, சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில் பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம் அதிகரித்து வருகின்றன.

அவ்வாறு அதிகரித்து வரும் போக்குகளும், தமிழ்நாட்டில் எந்த கட்சியும், தலைமையும் இன்றி அதிகரித்து வரும் போராட்டங்களும், எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை? என்பதை அடுத்து பார்ப்போம்.

‘ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் மன‌ங்களில் உள்ள தேவைகளும்(needs), அத்தேவைகளின் அடிப்படையில் எழும் ஈடுபாடுகளும்(interests), அவற்றின் அடிப்படையில் வெளிப்படும் செயல்பாடுகளும்;

சமூக செயல்நுட்பத்தில் அமைதியான சமநிலையில் (peaceful equilibrium) இருந்தால், அந்த சமூகத்தில் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடம் இருக்காது. 

அதற்கு மாறாக, போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தால், அந்த சமூக செயல்நுட்பத்தில் அமைதியற்ற சமநிலை (turbulent equilibrium) இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.

அந்த போராட்டங்களின், வன்முறைகளின் பண்புகளை ஆராய்வதன் மூலம், அந்த சமூக செயல்நுட்பத்தில் உள்ள அமைதியற்ற சமநிலையின் பண்புகளை ஆராய முடியும். அதிலிருந்து அந்த சமூகத்தின் தேவைகள், ஈடுபாடுகள் போன்றவற்றிற்கும், சமூக செயல்நுட்பத்திற்கும் இடையிலான‌ முரண்பாடுகள் பற்றி ஆராய இயலும். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

துப்பாக்கி சூட்டில் முடிந்த ஸ்டெர்லைட் போராட்ட பேரணிக்கு தலைமை தாங்கியது யார்? பங்கு பெற்ற இயக்கங்கள் எவை? அமைப்பாளர்கள் யார் யார்?”

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு (SSLC) மாணவனாக படித்த காலத்தில், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு அரங்கேறியபோது, வடநாட்டு காவலர்கள் மீது, கற்களை வீசி, முக்கிய சாலையில் இருந்த சந்துகளுக்குள் புகுந்து, 'கண்ணாமூச்சி கல்வீச்சில்' ஈடுபட்டேன்

(எனது நினைவின்படி) திருப்பூரில் போராட்டத்தில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரு சப்இன்ஸ்பெக்டரை உயிரோடு எரித்த சம்பவம் நடந்த பின், துப்பாக்கி சூடுகள் தொடர, போராட்டம் இன்னும் தீவிரமானது.

அவ்வாறு தீவிரமான கட்டத்தில், போராட்டத்தைத் தூண்டிய தி.மு. தலைவர்கள் 'தங்களுக்கும் மாணவர்கள் போராட்டத்திற்கும்' தொடர்பில்லை என்று அறிக்கை விட்டார்கள்.

மாணவர் தலைவர்களாக முன் நிறுத்தப்பட்டவர்களில் யார்? யார்? 1967க்குப் பின், சட்டசபை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், .. எஸ் அதிகாரிகளாகவும் 'பலன்கள்' பெற்று, அத்தோடு அடங்காமல், ஊழலிலும் திளைத்தார்கள்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். மைக்ரோஉலகில் பிரமிக்கும் வகையில் வெளிப்படும் உரிமைக்கான போராட்டங்களின் பலன்களை எல்லாம், 'புத்திசாலித்தனமாக' மேக்ரோ உலகில் 'அறுவடை' செய்யும் போக்குகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

அந்த போக்கிற்கு வழி வகுத்ததே, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமாகும். 'வெள்ளைக்காலர் திருடர்களைப்' போல(https://en.wikipedia.org/wiki/White-collar_crime), தமிழ்நாட்டில் 'புறத்தில் சமூக நீதி' வேடத்தில், தமிழ்நாட்டை ஊழல் சூறையாடும், எளிதில் சிக்காத 'சமூக திருடர்கள்' உருவானதும், அதன் விளைவேயாகும்.

1965 போராட்டத்தில் சரியான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டிருந்தால்;

தற்போது நடந்துள்ள தூத்துகுடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடுகள் வரை, எண்ணற்ற உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் நடந்திருக்காது, என்பது எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  

“1944க்குப்பின், மேலே குறிப்பிட்ட இரண்டு போராட்டங்களையும் (1925 வைக்கம் போராட்டமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமும் ) போன்ற போராட்டத்தினை, .வெ.ரா முன்னெடுக்காதது மட்டுமின்றி, 'இரட்டைக்குழல் துப்பாக்கியில்' 'ஒரு குழலான' தி.மு., 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டத்தை அறிமுகப்படுத்தி, இன்றுவரை தமிழ்நாடு 'அந்த போராட்ட நோயிலிருந்து' மீள முடியாமல் தவிக்கிறது;” (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

.வெ.ராவின் போராட்ட முறைகளில் இருந்து தடம் புரண்டு, .வெ.ரா-வால், 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட ' போராட்ட நோயில்';

'பெரியார்' கொள்கையில் இரண்டாம், மூன்றாம் தலைமுறை குடும்பங்களில் கூட, தத்தம் சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு, 'சாதி எதிர்ப்பு கறுப்பு சட்டை'களாக வலம் வருபவர்களைக் கொண்ட 'பெரியார் கட்சிகளும்' சிக்கி;
 
தமிழ்நாட்டில் ஊழல் சுனாமியை அரங்கேற்றி, 'அதீத' செல்வத்துடன், தத்தம் சாதிகளிலும் செல்வாக்குடன் வலம் வருபவர்களை;

'பெரியார் தந்த புத்தியில்' வெண்சாமரம் வீசி ஆதரிக்கும் போக்கிலிருந்தும் மீள முடியாமல், தமிழ்நாடானது தவிக்கிறது.

ஸ்டெர்லைட் போன்ற எதிர்ப்புகளுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து எதிர்க்கும் போக்கு தொடர்ந்தால், புதிய திட்டங்கள் வராமலும்

அதிக வேலைவாய்ப்புகளுடன் செயல்படும் தொழில்களும், தமிழ்நாட்டை விட்டு, வெளியேறும் அபாயமும் இருக்கிறது

அது போன்ற எதிர்ப்புகள் இருந்திருந்தால், திருச்சி பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள்/திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா?’ (‘ஸ்டெர்லைட் படுகொலையில், ‘ஆச்சாரப் பார்ப்பான், லௌகீகப் பார்ப்பான்' காண்பது குருட்டுப் பகுத்தறிவாகாதா?’; http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html  )

‘விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் செயல்பட உதவிய ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் தண்டிக்குமாறு எவராவது கோரிக்கை எழுப்பினார்களா? இனியாவது எழுப்புவார்களா

அவ்வாறு தண்டிக்கப்படவில்லையென்றால்;

சரியான கழிவு நீக்கல் தொழில்நுட்ப செலவுகளை குறைத்து, ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, சுற்றுப்புற சூழலை சீரழித்த ஸ்டெர்லைட் பாணியில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ஆலைகளையும் மூடி, லட்சகணக்கானோர் வேலை இழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/ )

அவ்வாறு தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுவதும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதும், புதிய தொழில்கள் தொடங்க அருகதையற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுவதும், அரங்கேறும் போது;

அந்தந்த குடும்பப் பெற்றோர்களும் ஊக்குவிக்க;

மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper middle class- குடும்பப்பிள்ளைகளும் கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை) திருட்டு, (மது/போதை மாத்திரை, சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில் பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம் இன்னும் அதிவேகமாக அதிகரிக்கும்.

(வளரும்)

No comments:

Post a Comment