'தமக்கென வாழா மன நோயாளிகள் '
தமிழரின் நிகழ்கால திரிந்த புறநானூறு வாழ்வியல் கோட்பாடு :-
“திரிதல் அம்ம, இவ்வுலகம்; இழிசினர்;
எறிசோறு இயைவ தாயினும், இழிவுஎனத்
தமியர் ஒதுக்கலும் இலரே; நற்பண்பிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சா,
பொருள் எனின், உயிருங் கொடுக்குவர், புகழ்னெனின்,
இழிவது பெறினும், கொள்ளுவர், அயர்விலர்;
அன்ன சூழ்ச்சி அனைய ராகித்,
தமக்கென முயலா பிறர் அழுக்காற,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
- திரிந்த புறநானூறு 182
பாடியவர்: பெரியாரியலில் மாய்ந்த உறவிலி தனியன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
பாடியவர்: பெரியாரியலில் மாய்ந்த உறவிலி தனியன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
பொருள் :-
·
"திரிந்து கெட்டது இவ்வுலகம்;இழிவானவர்களால்;
· உணபவர் கை அசைவால் எறியப்படும் சோறெனினும், அதை இழிவு என்று ஒதுக்காமல் உண்பவர்; நற்பண்புகள் எதுவும் இல்லாதவர்;
· சோம்பலற்ற சுறுசுறுப்பானவர்;
· பிறர் அஞ்சுவதற்கு தாமும் அஞ்சி வாழாமல், வரும் பொருளுக்கு உயிரையும் கொடுப்பர்; பிறர் பாராட்டுக்காக இழிவான செயல்களிலும் ஈடுபடுவர்;அதில் சோர்வடையார்;
· அத்தகைய சூழ்ச்சியுடன் வாழ்ந்து, தமக்கென வாழாமல், பிறர் பொறாமைப்படுவதற்காகவே, முயன்று வாழ்பவர்கள் இருக்கும் உண்மையால்; .
தமக்கென வாழா , பிறர்க்கென வாழுபவர் ."
"பெரியாரைத் தெரியுமா?"
" தாடியோடு, கறுப்புசட்டை போட்டிருப்பார். அதற்கு மேல் ஏதும் தெரியாது"
சி.பி.எஸ்.
ஈ
(CBSE)
பள்ளியில் +1 படிக்கும் மாணவனின் பதில்.
'விவேகானந்தரைத் தெரியுமா?' 'தெரியாது சார். யார் அவர்? ' பாலிடெக்னிக் படிக்கும் மாணவரின் பதில்.
'பெரியார் தெரியுமா?' சற்று யோசித்து
"சாமி இல்லைன்னு சொன்னவர். அதுக்கு மேல அவரைப் பற்றி எதுவும் தெரியாது."
பி.எஸ்ஸி (கணினி அறிவியல்} பட்ட வகுப்பில் முதல் இரண்டு ரேங்க் மதிப்பெண்கள் வாங்கும் மாணவி.
"பொது அறிவை வளர்த்து கொண்டால் தானே, வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி பெறலாம்."
என்று நான் கூறினேன்.
" அப்போது அதற்கான புத்தகம் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். சார்'
" என்று சொல்லி, இணையத்தில் 'கூகுள்' செய்திகள் படித்துக் கொண்டே, அடுத்து கேட்ட கேள்வி:"
சிறிசேனா யார் சார்?".
உடனே நான் ' ராஜபட்சே யார் என்று தெரியுமா?"
என்றேன். அந்த பெண்
" யார் சார் அவர்?"
என்று கேள்வி எழுப்ப, அதிர்ந்து போனேன்.
ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாகப் படித்தாலும், தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்கத் தெரியாது. பேருந்துகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழில் இருப்பதைப் படிக்க முடியும்.
ஆனால் இம்மாணவர்களில் பெரும்பாலோர் தமது கல்வி, தாம்
பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital
devices),
வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில் 'லேடஸ்ட்'(latest)
தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.
தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது.
மீடியாக்களில் செல்வாக்குடன் வலம் வரும் ஆதாயத்தொண்டர்கள் கட்சித் தலைவர்களும், இது போன்ற மாணவர்களும், தமிழ்நாட்டிலேயே தனி தனித் தீவுகளில் வாழ்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டவை எனது அனுபவ உள்ளீடுகள் (experienced
observation inputs). தமிழ்நாட்டில் இது தான் பொதுவான நிலைமை என்றால், அது மிகவும் கவலைக்குரிய அபாய நிலையாகும்.
பெரியார் கொள்கை சார்ந்த இயக்க சமூக வட்டத்தில் இருந்து, அதிலிருந்து வெளிவந்து, இசை தொடர்பான ஆய்வினை தொடங்கியபோது, ஏற்கனவே இருந்த சமூக வட்டத்தின் வரைஎல்லைகள்(limitations)
எனக்குப் புரிந்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html)
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html)
அதன்பின் எனது இசை ஆய்வுத் திட்டங்கள் தொடர்பாக, மாணவர்களுடன் சமூகத் தொடர்பு(social
interaction) கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுடனும், சராசரி மக்களுடனும், பழகுவது எவ்வளவு மதிப்பு மிக்க 'சிக்னல்களை' தரும் என்று எதிர்பார்க்காத அனுபவமாக, அது அமைந்தது.
மேலே குறிப்பிட்ட உரையாடல்களும், கீழ்வரும் பதிவும் உருவாக, அதுவே காரணமானது.
"முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல், ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."
என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
பேரா.பெருமாள் முருகன் எழுதிய 'மாதொரு பாகன்' அண்மையில் மீடியாக்களிலும், பொது அரங்கிலும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html) அவர் பணியிட மாற்றம் பெற்று, சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். மாணவர் தலைவர் உள்ளிட்டு அங்குள்ள மாணவர்களைச் சந்தித்த நிருபரிடம், " பெருமாள் முருகன் யார்?" என்று கேட்டிருக்கிறார்கள்.
http://www.newindianexpress.com/cities/chennai/Perumal-Murugan-Who-Students-Scratch-Heads-on-Day-he-Joins-Presidency-Faculty/2015/02/18/article2673869.ece
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
பேரா.பெருமாள் முருகன் எழுதிய 'மாதொரு பாகன்' அண்மையில் மீடியாக்களிலும், பொது அரங்கிலும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html) அவர் பணியிட மாற்றம் பெற்று, சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். மாணவர் தலைவர் உள்ளிட்டு அங்குள்ள மாணவர்களைச் சந்தித்த நிருபரிடம், " பெருமாள் முருகன் யார்?" என்று கேட்டிருக்கிறார்கள்.
http://www.newindianexpress.com/cities/chennai/Perumal-Murugan-Who-Students-Scratch-Heads-on-Day-he-Joins-Presidency-Faculty/2015/02/18/article2673869.ece
பெரியவர்களெல்லம் எதிர் எதிரான கொள்கைகளில் வேறுபட்டு, பெரும்பாலும் உணர்ச்சிமய போக்கில் பயணிக்க, அந்த கொள்கைகளுக்கு சம்பந்தமில்லாமல், தமிழ்நாட்டில் மாணவர்களில் பெரும்பாலோர் 'வித்தியாசமாகப்' பயணித்துக் கொண்டிருக்கிறார்களா?
என்பது ஆய்விற்குரியது.
கீழ்வரும் வெற்றிக்கான இரகசியங்களைக் கடைபிடிக்கும் 'வாழ்வியல்
புத்திசாலிகள்' குடும்பப் பிள்ளைகள் எல்லாம், கூடுதலாக தமது பெற்றோர்கள் 'வாலாட்டி'
காரியம் சாதிக்கும் 'செல்வாக்குள்ள' மனிதர்களுக்கு, வாலாட்டும் 'குட்டி நாய்களாக' பயிற்சி
பெறும் கூத்தும் தமிழ்நாட்டில் நடக்கிறது. அதனால் 'ஏற்கனவே திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு'
நோயில் வளரும் அக்குழந்தைகளுக்கு, கூடுதலாக 'செல்வாக்குக்கு வாலாட்டும்' பண்பும் வளர
வாய்ப்புள்ளது.
“நான்காவது இரகசியம்: புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.”
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html )
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html )
'பகுத்தறிவு, ஆன்மீகம், இந்துத்வா, முஸ்லீம், தலித், இன்னும் பல' முகமூடிகளுடன் வாழும்,
வீட்டுப் பிள்ளைகளில் பெரும்பாலோர், தமது கைகளில் அல்லது ஆடைகளில் தமது சாதி/மத அடையாளங்களுடன்
கல்லூரிகளுக்கு வருவது சீரணிக்க முடியாத கொடுமையாகும். மேலேக் குறிப்பிட்ட பெற்றோர்களை விட்டு விலகி, சாதாரண 'மனிதர்களாக' வாழ்பவர்களுக்கு, இத்தகைய அனுபவபூர்வ உள்ளீடுகள் பெற அதிக வாய்ப்புண்டு.
1967க்கு முன் தமிழ்நாடு எவ்வாறு இருந்தது என்பது சுமார் 65 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு தெரியும்.
1944இல் 'திராவிடர் கழகம்' உருவாவதற்கு முன், தமிழ்நாடு எவ்வாறு இருந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ள
1925 முதல்
1944வரை வெளிவந்த குடி அரசு இதழ்களும், மற்ற இதழ்களும் துணை புரியும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
அந்த பின்னணியில் மேலே குறிப்பிட்ட
பெற்றோர்கள் கூட்டம் வளர்ந்த போக்கும், கீழ்வரும் அறிகுறிகள் தொடர்பான நோயும், எப்போது முளைவிட்டு, எப்படி வளர்ந்து, இன்று கீழ்வருமாறு வெளிப்பட்டுள்ளது? என்பது
ஆய்வுக்குரியதாகும்.
“ உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பொதுவாக ஒரே தாய்மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியில் தான் உரையாடுகின்றனர்.அதில் தமிழர்கள் மட்டுமே, அதிலும் அதிகம் படித்தவர்கள், பெரும்பாலும் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.அவர்களை 'ஏக்கமுடன்' பார்த்து, மற்ற தமிழர்களும், அதுல நாமும் பேச வேண்டும் என்ற 'இலட்சியத்துடன்'(?)
வாழ்கின்றனர். அத்தகையோரில் குடிப் பழக்கம் உடையவர்கள், மது போதையில் தப்பும் தவறுமாக தங்களுக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் பேசி, அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வது;
ஒருவரைப் பற்றி மிகவும் இழிவாக நாம் கருதி, அந்த நபரின் இழிவான செயல்பாடுகள் பற்றி நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் 'விலாவாரியாக' விவாதித்து விட்டு, அவர் 'செல்வமும்,செல்வாக்கும் மிக்க நபர்' என்ற ஒரே காரணத்தால், அவரிடம் நாய் போல் குழைந்தும், காலில் விழுந்தும் 'காரியங்கள்' சாதித்து தமது செல்வத்தை, செல்வாக்கைப் பெருக்கி,அப்படி வாழ்வதே 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று குடும்பம், நட்பு உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில் அந்த நோயைத் தீவிரமாக பரப்பியும் வருவது; “
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html)
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html)
அதிலும் நம்மிடம் பலன்கள் அனுபவித்துக் கொண்டே, நமது முதுகுக்குப் பின்னால் மனசாட்சியின்றி அபாண்டமாக பழி சுமத்தும், மனித இழிவுக்கு இலக்கணமானவர்களும், 'அந்த' போக்கில் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்துள்ளார்கள்.
மேலே குறிப்பிட்ட நோய்களில், தமிழர்கள் அதி வேகமாகச் சிக்கும் போக்கிற்கு ‘சமூக ஒப்பிடு நோய் '
(social Comparison) , ‘வினை ஊக்கி’யாகச் (catalyst) செயல்படுகிறது. தாம் விழித்திருக்கும் நேரமெல்லாம், தம்மையும் தமது குடும்பத்தையும் பிறருடன் ஒப்பிட்டு, அதன் விளைவாக, மன அழுத்தம், எரிச்சல், கோபம் போன்ற எதிர் உணர்வுகளுக்கு ஆளாகி, இவற்றின் ஒட்டு மொத்த விளைவாக, பல்வேறு உடல்நோய்களுடன் வாழும் நோய்க் குடும்பங்களாக, தமிழர் குடும்பங்கள் தமிழ்நாட்டில் வளர்வதும் ‘தமிழ்க் கூட்ட அழிவு நோயின்’ அறிகுறியே ஆகும். இந்த ‘சமூக ஒப்பீடு நோயை’ப் பற்றிய விரிவான விளக்கமானது Barry Schwartz எழுதிய
‘‘The Paradox of Choice – why more is less ‘
என்ற நூலில் உள்ளது.”
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
மேற்குறிப்பிட்ட வகையில் வாழும் தமிழர்கள் எல்லாம், 'தமக்கென வாழாமல்' 'பிறர் பொறாமைப்படும் அளவுக்கு' வாழ்வதையே, தனது வாழ்வின் அதிமுக்கிய நோக்கமாகக்
(Life Aim) கொண்டு வாழ்கிறார்கள். அவ்வாறு வாழ்பவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு 'சமூக ஒப்பிடு நோயில்' சிக்கி, பிறரின் பாராட்டுதலுக்கு ஏங்கி, வாழ்கிறார்களோ, அந்த அளவுக்கு உள்ளார்ந்த ஈடுபாடுகளிலிருந்து(Passions) விலகி, தமிழருக்கான இயல்பில் திரிந்து, வாழ்வின் உயிரோட்டத்தை இழந்து, 'மனித ரோபோக்களாக' வாழ்கிறார்கள்.
"அறிவின்(knowledge) வீழ்ச்சிக்கும், 'குறுக்குவழி பணம் ஈட்டும்' திறமைகளின் '(Skills) அதிவேக' வளர்ச்சிக்கும் வழி வகுத்த, இயல்முறி வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்களைக் காப்பாற்ற நினைப்பவர்கள் எல்லாம், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைப் பின் தள்ளி,ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான்,குழந்தைகள், தாய்மார்கள்,பெரியவர்கள் உள்ளிட்ட தமிழர்களைக் காப்பாற்ற முடியும்.”
(http://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html )
"அறிவின்(knowledge) வீழ்ச்சிக்கும், 'குறுக்குவழி பணம் ஈட்டும்' திறமைகளின் '(Skills) அதிவேக' வளர்ச்சிக்கும் வழி வகுத்த, இயல்முறி வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்களைக் காப்பாற்ற நினைப்பவர்கள் எல்லாம், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைப் பின் தள்ளி,ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான்,குழந்தைகள், தாய்மார்கள்,பெரியவர்கள் உள்ளிட்ட தமிழர்களைக் காப்பாற்ற முடியும்.”
(http://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html )
சங்க காலத்
தமிழரின் வாழ்வியல் கோட்பாடு :-
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், |
|
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. - புறநானூறு 182
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி பொருள் :-
.
.
|
No comments:
Post a Comment