பெரியாரும், காந்தியும் தவறான 'சமூக ஓட்டுநர்'களா?
ஒரு மனிதரின் மனதினுள் அறிவுபூர்வமான நிலைப்பாடுகளுக்கும், உணர்வுபூர்வமான நிலைப்பாடுகளுக்கும் மோதல் ஏற்படும் பொழுது, அந்த
மனிதரின் மனதில் சம்பந்தப்பட்ட தேவைகள்(needs) மற்றும் ஈடுபாடுகள் (interests),
அடிப்படையிலேயே,
அந்த நபர் தேர்ந்தெடுக்கும் நிலைப்பாடு அமையும். உலக அளவில் எனக்கு தெரிந்த தலைவர்களில்,
அத்தகைய மோதல் தொடர்பான ஆய்விற்குரியதாக, பெரியார் எடுத்த நிலைபாடுகள் தனித்துவமாக(unique)
உள்ளன.
பெரியார், காந்தி,
உள்ளிட்டு எந்த மனிதரும், அத்தகைய மோதல் அடிப்படையில் எடுக்கும் நிலைப்பாடுகள் ஆனவை, அவரின் அறிவு, அனுபவம்,
மற்றும் அவரின் வரை எல்லைகள்(limitations) ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கும். பெரியாருக்கு
இருந்த கீழ்வரும் வரை எல்லைகளின் பின்னணியிலேயே அவரின் நிலைப்பாடுகளை விளங்கிக் கொள்ள
முடியும்; அவரை 'கறுப்பு(சில இந்துத்வா பிரியர்களின் பார்வை)/வெள்ளை (பெரியார் ஆதரவாளர்களின்
பார்வை-) சமூக வண்ணக்குறைபாட்டுடன்' –social
colour blindness- அணுகுவதைத் தவிர்க்க. (refer
post dt. December 4, 2013 ‘கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’
)
"பெரியாரின் உள்ளீடுகளை(inputs)
இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர்
திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு(
processing) உட்படுத்திய முடிவுகள், இன்றும்
'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும்.
அதே நேரத்தில் அவருக்கிருந்த
கல்வி வரை எல்லைகள்(limitations) காரணமாக, அவரால்
பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த
ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக்
கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே,
அவருக்கான இரண்டாவது வகை- நேரடியாக இன்றி மற்றவரைச்
சார்ந்திருந்த- உள்ளீடுகள் ஆகும்." (refer
post dt. December 28, 2014;’ பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு’) என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்திய விடுதலைக்கு
முன் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களில், காந்தியின் நிலைப்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து
பெரியார் எழுதியுள்ள கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மாணவர்களை
வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதில் முடிந்த
காந்தியின் 'சத்தியாகிரக போராட்டங்களை' காந்தி துவங்குவதற்கு முன், எச்சரித்தவர் தாகூர்.
துவங்கி, மேற்சொன்ன விளைவுகளில் முடிந்த பின், காந்தியைக் கடுமையாகக் கண்டித்தவர் பெரியார்.
அதே காந்தி,மரணமடைந்த போது, அவரை வானளாவப் புகழ்ந்தவர் பெரியார். அதன்பின், காமராஜரை
முதல்வராக ஆதரித்த காலத்தில், காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல் ஆகிய
போராட்டங்களின் அவசியத்தைப் பிரச்சாரம் செய்தவரும் பெரியார்.
பெரியாரைப் போல, தாகூர் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளிலும், போராட்டங்களிலும் பங்கேற்றிருந்தால், இந்தியாவானது, காந்தியின் செல்வாக்கில், நேரு குடும்ப பரம்பரை ஆட்சியில் சிக்கி சீரழிந்திருக்காது. பெரியாரும் தமது வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதலுடன், புலமையாளர்களுடன் இருந்த உறவை, 1944இல் 'திராவிடர் கழகம் ஆரம்பித்து துண்டிக்காமல், அந்த உறவை வலிமையாக்கி வளர்ந்திருந்தால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் சிக்கி, தமிழும், தமிழ்நாடும் சீரழிந்திருக்காது. அதன் விளைவாய் , பல்வேறு சுயலாபங்களுக்காக, 'புலமை விபச்சாரம்' உணர்வுபூர்வ சமூகச் சூழலில். சுயநல அரசியலுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்காது.
பெரியாரைப் போல, தாகூர் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளிலும், போராட்டங்களிலும் பங்கேற்றிருந்தால், இந்தியாவானது, காந்தியின் செல்வாக்கில், நேரு குடும்ப பரம்பரை ஆட்சியில் சிக்கி சீரழிந்திருக்காது. பெரியாரும் தமது வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதலுடன், புலமையாளர்களுடன் இருந்த உறவை, 1944இல் 'திராவிடர் கழகம் ஆரம்பித்து துண்டிக்காமல், அந்த உறவை வலிமையாக்கி வளர்ந்திருந்தால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் சிக்கி, தமிழும், தமிழ்நாடும் சீரழிந்திருக்காது. அதன் விளைவாய் , பல்வேறு சுயலாபங்களுக்காக, 'புலமை விபச்சாரம்' உணர்வுபூர்வ சமூகச் சூழலில். சுயநல அரசியலுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்காது.
ஆனால் எந்தப் பிரச்சினையிலும்,
என்ன நிலைப்பாடு எடுத்தாலும், சுயநலமின்றி, தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நிலைப்பாடுகள்
எடுத்தவர் பெரியார் என்பதை முந்தையப் பதிவுகளில் பார்த்தோம். அவர் தனிப்பட்ட முறையில் உண்மையாகவும்,
நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்தாலும், அவரின் 'தொண்டுகளின்' விளைவுகளாகவே, திராவிடக்கட்சிகள்
தோன்றி, வளர்ந்து, ஆட்சிகளைப் பிடித்த பின், உண்மையாகவும், நேர்மையாகவும், எளிமையாகவும்
வாழ்பவர்களை முட்டாள்களாக்கி, தமிழின் மரணப்பயணத்திற்கும், அரசியல் என்பது’பொதுவாழ்வு
வியாபாரமாக’ மாறி, 'கள்வர்களின்' (திருக்குறள் 813) ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கி
, கனிவளங்களும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகளும், குளங்களும் சூறையாடப்பட்டு,
தமிழ்நாடு சீரழிவதற்கும் வழிவகுத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (refer post
Dt. November 13, 2014;’ 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்:1938க்கும் 1965க்கும்
என்ன வேறுபாடு? ‘)
அதே போல இந்தியா சந்தித்த
சீர்கேடுகளுக்கு, காந்தி எப்படி முக்கிய காரணம் என்பதை அடுத்து பார்ப்போம்.
இந்திய பிரிவினை தொடர்பான
சான்றுகள், நேருவின் 'பிரதமர் பதவி ஆசையே' பாகிஸ்தான் பிரிவினைக்கும்,நேதாஜியின் மரணம்
தொடர்பான மர்மங்களுக்கும் காரணம் என்பதை உணர்த்தியுள்ளன. (குறிப்பு கீழே). இந்திய விடுதலைக்கு
முன், காங்கிரசில் தேர்தல் மூலம் தலைவரான சுபாஸ்
சந்திரபோஸ், மனம் வெறுத்து ராஜினாமா செய்து, இந்தியாவை விட்டு வெளியேறும் அளவுக்கு, ஜனநாயக
நெறிமுறைகளை மீறி, தனது நிலைப்பாட்டைத் திணித்து, பொதுவாழ்வில் பொது ஒழுக்கத்தைச் சிதைத்த
காந்தியின் ஆதரவின்றி, நேரு இந்திய பிரதமராகியிருக்க முடியாது; காங்கிரசில் பெரும்பான்மையோர்
வல்லபாய்ப்படேல் பிரதமராவதை விரும்பியபோதும்.
காஷ்மீர் பிரச்சினை
உள்ளிட்டு, இந்தியா சந்தித்து வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட முக்கிய சீர்கேடுகளுக்கு
அதுவே வழி வகுத்தது.
ஜனநாயக நெறிமுறைகளை
மீறி, தமது வரை எல்லைகள் (limitations) பற்றிய
புரிதலின்றி, தனது நிலைப்பாட்டைத் திணித்து, செயல்பட்டதில் பெரியாருக்கும், காந்திக்கும்
நிறைய ஒற்றுமைகள் உண்டு. நேரு குடும்ப ஆட்சியில் இந்தியா சந்தித்துவரும் சீர்கெடுகளுக்கு
காந்தி எவ்வளவு காரணமோ, அது போலவே திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழும், தமிழ்நாடும்
சந்தித்துவரும் சீர்கேடுகளுக்கு பெரியாரும் காரணமாவார். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த
பின்னர், நேரு குடும்பம் காந்தியை எவ்வாறு 'பயன்முடிந்த குப்பையாக' கருதி செயல்பட்டார்களோ,
அதே வழியில் தான் திராவிடக்கட்சிகளும் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவின் சீர்கேடுகளுக்கு
காந்தி என்ற தனி நபரையும், தமிழ்நாட்டின் சீர்கேடுகளுக்கு பெரியார் என்ற தனிநபரையும்
முக்கிய காரணங்களாக குற்றம் சொல்ல முடியுமா? என்பது ஆய்விற்குரியதாகும்.
“ஒரு தனி மனிதர் தமது
அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors)
பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில், வெவ்வேறு சமூக நிலைகளில்
உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு(Resultant Forces) அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும்,
சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும்
ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது
பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள ஓட்டுநர்களாக
இடம் பெயர்வார்கள்.” என்பதையும்;
“ஒரு ஓட்டுநர் தனது
கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures)
வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது
கெட்ட திசையில் பயணிக்க முடியும்.” என்பதையும், ஏற்கனவே பார்த்தோம்.(refer post
dt. January 16, 2015; ‘மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?’ )
ஒரு நாட்டில் செல்வாக்குடன்
வலம் வரும் தலைவர்கள், 'சமூக ஓட்டுநர்கள்' போன்றவர்களே ஆவர்.
எனவே தமிழின், தமிழ்நாட்டின்
சீர்கெடுகள் தொடர்பாக, பெரியாரும், இந்தியாவின் சீர்கெடுகள் தொடர்பாக, காந்தியும் தவறான
'சமூக ஓட்டுநர்'களா? என்ற ஆய்வினை, திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
என்பது என் கருத்தாகும்.
குறிப்பு :
1.’ Nehru Solely
Responsible For Partition. Godse Chose Wrong Target: RSS Mouthpiece In Kerala’
http://www.outlookindia.com/blogs/post/Nehru-Solely-Responsible-For-Partition-Godse-Chose-Wrong-Target-RSS-Mouthpiece-In-Kerala/3419/31
2. The Three
villains of India's Partition :1.Jawaharlal Nehru2.Muhammad Ali Jinnah3.Edwina
Mountbatten; The story started When Jinnah, Nehru and Edwina were studying in
the same college (Harris Manchester college.) and many few people know that
there was a love triangle between them and they both started to hate each other
from then on.
The British
intelligence knew that Edwina was a smart lady and she can influence both Nehru
and Jinnah. But they could succeed to a great extent so they decided to divide
to nation in two parts./ ------------ After
few days the personal doctor of Jinnah came to meet gandhi and told him that
jinnah is going die soon, he is suffering from dangerous disease, let him
become the Prime Minister, at least the nation will not be divided. Gandhi went
to Nehru and told him about this to but Nehru's reply was the same ''Jinnah ko
mai chaprasi na banau''
From:The
untold story of India's partition: https://www.facebook.com/AntiCongressArmy/posts/513096825398984
No comments:
Post a Comment