Thursday, February 26, 2015



திருக்குறள் 'அறிவில்' 'அன்னை தெரசா' ;                            

ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து  சரியா?  தவறா?


'உண்மையைப் பேச', மத்தியில் ஆளும் பா..கவின் பொறுப்பாளர்களே, பயப்படும் அளவுக்கு, 'இந்துத்வா' எதிர்ப்பாளர்களின் 'மனித உரிமைப் பாதுகாப்பு' ‘யோக்கியதை’ இருக்கிறதா? என்ற கேள்வியை, அன்னை தெரசா பற்றி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் அண்மையில் தெரிவித்த கருத்து எழுப்பியுள்ளது.

அன்னை தெரசா ஏழைகளுக்கு சேவை செய்ததன் நோக்கம், கிறித்துவ மத மாற்றமே என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Mohan Bhagwat, the chief of Rashtriya Swayamsevak Sangh, has reportedly indicated that converting people to Christianity was the main objective behind Mother Teresa's service to the poor, 

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் 'கருத்துரிமை' விவாதக் குவியத்திற்கு (focus)  உள்ளான நூல் 'மாதொரு பாகன்' ஆகும்.

'மாதொரு பாகன்' பெருமாள் முருகனின் 'கருத்துரிமை' இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கான 'அறிவுபூர்வ தடைகளை' (Reasonable Restrictions) மீறியுள்ளதா? இந்திய தண்டனைச் சட்டப்படி, பெருமாள் முருகன், 'மான நட்டகுற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டியவரா? என்ற கேள்விகளுக்கு நீதி மன்றம் மூலமே விடை கிடைக்கும்திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற 'சமூக சீர்குலைவு' போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள முன்மாதிரிகளின்படி, உச்ச நீதி மன்றமோ, உயர் நீதி மன்றமோ, தாமாகவே ('suo-motu'),  இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லியிருக்க வாய்ப்புண்டு. ( For example, “Noting the prevalence of unethical practice of paid news in recent Gujarat polls, a Press Council of India panel has suggested a relook at the entire issue by the media watchdog before the next general elections while seeking 'suo-motu' action against erring publications’: http://articles.economictimes.indiatimes.com/keyword/suo-motu )

இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், இக்கேள்விகள் பரீசிலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை, பத்திரிக்கை செய்திகளின்படி. (‘மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்;  'மாதொரு பாகன்எழுப்பும் கேள்விகள்’ https://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள், போராட்டங்கள் நடத்தியவர்கள், 'யாருக்காக குரல் கொடுப்பது? ' என்பதற்கு ஏதேனும் அளவுகோல் வைத்திருக்கிறர்களா? என்பதும் ஆய்விற்குரியது.

'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு’;    திருக்குறள் 423

திருக்குறள் 'அறிவின்' படி, அன்னை தெரசா பற்றி,  எனக்குக் கிடைத்த கீழுள்ளசான்றுகளின் அடிப்படையில், கீழ்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளேன். 'திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும்' இச்சான்றுகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் சான்றுகளையும், அதே 'திருக்குறள் அறிவின்' படி, பரீசிலிக்க உள்ளேன்.

அன்னை தெரசாவுக்கு மத மாற்றம் நோக்கம் இருந்தது; என்பது மட்டுமல்ல, அந்த நோக்கத்திற்காக அவர் செய்தது உண்மையில் 'சேவையா'? அந்த 'சேவைக்காக' அவர் பெற்ற நிதிகளில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன? 'அவ்வாறு' நிதி சேகரிக்க, இந்திராகாந்தியின் 'நெருக்கடி கால' ஆட்சியை ஆதரித்தது  மட்டுமன்றி, உலக அளவில் 'சர்வாதிகாரிகளுடன்' அன்னை தெரசா எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்? போன்ற கேள்விகளை எழுப்பும் சான்றுகளை கீழே பார்ப்போம். அவற்றிற்கு முறையான ஆதாரபூர்வ மறுப்புகள் வெளிவந்திருந்து, அதை எனக்கு அனுப்பினால், நன்றியுடன், இந்த பதிவில் அதனைச் சேர்க்க இயலும்.

அன்னை தெரசாவின் கருத்துக்காக ஆர்.எஸ்.எஸ் தலைவரைக் கண்டிப்பவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' தலைவர்கள், இச்சான்றுகளைப் பற்றி அறிவார்களா? சான்றுகள் சரி என்றால், தமது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பார்களா? அல்லது சான்றுகள் எவ்வாறு தவறு என்று விளக்கம் கொடுப்பார்களா? பெருமாள் முருகனின் கருத்துரிமை ஆதரவாளர்கள், இதில் நிலைப்பாடு எடுத்துள்ளார்களா? அல்லது கருத்துரிமைக்கான வெளிநாட்டு உதவியில் இயங்கும் மனித உரிமைக் காவலர்களின் 'மனித உரிமை செயல்திட்டத்தில்' இதற்கு இடம் இல்லை, என்பதால், அவர்கள் வழியில் பெருமாள் முருகனின் மனித உரிமைக் காவலர்கள்' பயணிக்கிறர்களா

ஏற்கனவே 'பாலுணர்வு வியாபாரத்தில்' தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஈட்டும் வியாபாரத்தில்வீழ்ச்சியில் உள்ள தமிழர்களை மேலும் சீரழிக்கும் ' பாலுணர்வு  எழுத்து வியாபாரத்திற்கு', அதே 'மேற்கத்தியபாணி' மனித உரிமைகளின் வழியில், தமிழர்களின் 'பாரம்பரிய, பண்பாட்டு' வீழ்ச்சிகளுக்கு, 'முற்போக்கு மனித உரிமை' எழுத்தாளர்கள்  பங்களிப்பு வழங்குகிறர்களா?

திருக்குறள் அறிவின்படி அணுகாமல், 'யார் நமக்கு வேண்டியவர்' என்று 'மாதொருபாகன்' நூலின் கருத்துரிமையைப் பாதுகாப்பதும்,'யார் நமக்கு வேண்டாதவர்' என்று ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அன்னை தெரசா பற்றிய கருத்துரிமையை எதிர்ப்பதும் சரியா? 

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் இலக்கியங்கள், புராணங்களில் உள்ள கதைகளை  விளங்கிக் கொள்ளும் புலமையில்லாதவர்கள், அவற்றின் பல பரிமாணங்கள் பொருளை விளங்கிக் கொள்ளாமல்,வெறும் 'பாலுணர்வு' கதைகளாகவேப் பார்க்கும் குறைபாட்டை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா? https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’ https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

அந்த குறைபாட்டின் காரணமாக,அது போன்ற கதைகள் இளைஞர்களின் மனதைப் பாதிக்கும் என்று விவேகானந்தர் எச்சரித்துள்ளார்.(“Remember that the episodes of the divine relationship between Radha and Krishna are quite unsuitable for young minds.”: http://www.swamivivekanandaquotes.org/2014/03/swami-vivekanandas-quotes-on-radha.html )
 
அந்த எச்சரிக்கையைக் கடைபிடிக்கும் சமூகப் பொறுப்புணர்வு இன்றி, திராவிட இயக்கம் செயல்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. September 14, 2014;’ தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’) அந்த பதிவில் உள்ள கீழ்வரும் பகுதி இங்கு கவனிக்கத்தக்கது.

“‘The History of the Decline and Fall of the Roman Empire’ (http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire )  என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை மட்டும்,  'ரோமாபுரி ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை  இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உணர்ச்சியைத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும் - என்ற கருத்தை அவர் ஏன் நூலாக வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின் அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்? அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதை' நினைவுக்கு வருவது தவறா?”

'கம்பரசம்', 'ரோமாபுரி ராணிகள்' வரிசையில், 'மாதொரு பாகன்' போன்ற நாவல்கள், இளைஞர்களைச் சீரழிவில் சிக்க வைக்குமா? என்பது ஆய்வுக்குரியது.

தமிழை வைத்துப் பிழைக்கும் எழுத்தாளர்கள், தமிழின்  வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் 'தமிழ்வழி மரணக் கல்வியின் மரணப்பயணத்தை'த் தடுத்து நிறுத்துவது பற்றி, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? இனிமேல் என்ன செய்ய எண்ணியுள்ளார்கள்? அல்லது 'தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தை' எழுத்து வியாபாரத்திற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்களா? ”(refer post dt. October 15, 2014;’ தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (7)‘தமிழ்க் கூட்ட அழிவு நோயும் - (TCCD), தரகு நோயும்) அத்தகைய 'எழுத்து வியாபாரம்', தமிங்கிலீஸில் தான் ,இருக்கும் வகையில், இப்போதே, 'தமிங்கிலீஸ் எழுத்து/ தொலைக்காட்சி பேச்சு வியாபாரம்' முளை விட்டு, 'வீரியமாக' வளர்வதும், அதற்கு தானா?

அதற்கு 'மேற்கத்திய பாணி' மனித உரிமைகளை முன்னிறுத்தி, வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என். ஜி.ஓக்கள் என்ன பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்? அந்த 'பாரபட்ச மனித உரிமை'ப் பாதுகாப்பில், அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்துள்ள கருத்திற்கு, திருக்குறள் அறிவின்படி ஆராயாமல், கண்டிப்பதும், அல்லது கண்டிப்பவர்களுக்கு 'மெளன ஆதரவு' தருவதும் சரியா? அது 'குருட்டுத்தனமான ஆர்.எஸ்.எஸ்' எதிர்ப்பு(Blind RSS opposing) ஆகாதா?

“இந்தியாவிலும், உலக அளவிலும் மனித உரிமைப் பாதுகாப்பில் உள்ள பாரபட்சத்தையும், வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில், இன்னொரு சமூகத்தில் அந்த வரை எல்லைகளைத் திணிப்பதானது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமைவதையும், தமிழ்நாட்டில் பொது அரங்கில், சமூகப் பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, 'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை' (?) ஆதரவாளர்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பானது, அந்த விவாதத்தின் அவசியத்தைக் கூட்டியுள்ளது.

அன்னை தெரசாவின் 'சேவை'(?) பற்றிய சான்றுகள் வருமாறு:

“After studying nearly 300 documents on her life, they concluded that a number of issues surrounded the nun were not taken into account by the Vatican. These included 'her rather dubious way of caring for the sick, her questionable political contacts, her suspicious management of the enormous sums of money she received, and her overly dogmatic views regarding, in particular, abortion, contraception, and divorce.'
They also say that following numerous natural disasters in India she offered prayers and medallions of the Virgin Mary but no direct or monetary aid. But she accepted the Legion of Honour and a grant from the Duvalier dictatorship in Haiti, said prof Larivee, and although millions of dollars were transferred to the various bank accounts, most of the accounts were kept secret. Dr Larivie says, 'Given the parsimonious management of Mother Teresa's works, one may ask where the millions of dollars for the poorest of the poor have gone?'”

After Indian Prime Minister Indira Gandhi's suspension of civil liberties in 1975, Mother Teresa said: "People are happier. There are more jobs. There are no strikes."
Mother Teresa encouraged members of her order to baptize dying patients, without regard to the individual's religion. In a speech at the Scripps Clinic in California in January 1992,
In 1981, Teresa flew to Haiti to accept the Legion d'Honneur from the right-wing dictator Jean-Claude Duvalier, who, after his ouster, was found to have stolen millions of dollars from the impoverished country. There she said that the Duvaliers "loved their poor", and that "their love was reciprocated".
She accepted money from the British publisher Robert Maxwell, who, as was later revealed, embezzled UK£450 million from his employees' pension funds…………the public image of Mother Teresa as a "helper of the poor" was misleading, and that only a few hundred people are served by even the largest of the homes. In 1998, among the 200 charitable assistance organizations reported to operate in Calcutta, Missionaries of Charity was not ranked among the largest charity organizations–with the Assembly of God charity notably serving a greater number of the poor at 18,000 meals daily
http://en.wikipedia.org/wiki/Criticism_of_Mother_Teresa#Baptisms_of_the_dying

No comments:

Post a Comment