பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;
உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்
பெருமாள்
முருகேசனைத் தொடர்ந்து, எழுத்தாளர் புலியூர் முருகேனின் நூலை எதிர்த்தும் போராட்டங்கள்
வெடித்துள்ளன.
After
Perumal Murugan, another Tamil writer has landed in controversy. The bone of
contention this time is a novel penned by Puliyur Murugesan. On Wednesday, a
group of people allegedly attacked the 45-year-old writer in his village in
Karur and demanded police action against him saying the book insulted their
community.
According
to sources, the police had already planned to register a case against Murugesan
as soon as the contents of the book triggered riots in Karur town. After a
series of discussions with law experts, police registered a case against the
author under five IPC sections - 153 (wantonly provocating riot), 292 (writing
and circulating obscene contents), 502 (sale of book containing defamatory
matter), 504 (intentional provocation of breach of peace and 505 (causing fear
or alarm to public).
ஏற்கனவே
தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள், 'மெட்ராஸ் கஃபே' (Madras Café) உள்ளிட்டு
தமக்குப் பிடிக்காத திரைப்படங்களை எதிர்த்துப் போராடி ,தடையில் வெற்றியும் பெற்றதை
ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பெருமாள்
முருகன், புலியூர் முருகேசன் நூல்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களும், விடுதலைப்
புலிகள் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும்; கருத்துரிமை எதிர்ப்பில் ஒரே வகையா?
இல்லையா? பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில்
யார் யார் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட
தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.
அதே போல்,
விடுதலைப்புலி ஆதரவாளர்களில் (குறிப்பாக அந்தந்த பகுதிகளில்) யார் யார்
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் கருத்துரிமை மீது மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்?
என்பது ஆய்விற்குரியதாகும்.
பாதிக்கப்பட்டதாகக்
கருதிய மக்கள், பாதிப்புக்குள்ளாக்கியதாகக் கருதிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்
உள்ளிட்ட எழுத்தாளர்களை எதிர்த்து,போராடினார்கள்.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் சார்ந்த
சாதியினரையோ அல்லது கட்சியினரையோ தாக்கவில்லை.
ஆனால் இலங்கையிலிருந்து
தமிழ்நாட்டிற்கு ஆய்விற்காகவும், ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் வந்திருந்தவர்களை, 'சிங்களவர்,
பெளத்தர்' என்ற காரணத்திற்காக தாக்கியவர்கள் தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் செயல்படும்
கட்சியினர் ஆவர். (http://dbsjeyaraj.com/dbsj/archives/18826
)
பெருமாள்
முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்?
என்பது ஆய்விற்குரியதாகும்.
பெருமாள்
முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை எதிர்ப்பாளர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும்
நடத்திய போராட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள்
உள்மறை இரகசியத்தடை ‘Subterranean
censorship’ என்று அழைக்கப்படும்.
பாதிப்புக்குள்ளானதாக
கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக
பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும்
வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar) ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை'
-‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல்
நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf
தமிழ்நாட்டில் ‘உள்மறை
இரகசியத்தடைகளின்’ ‘Subterranean censorship’ தோற்றமும் வளர்ச்சியும், எந்தெந்த காலக்கட்டங்களில்
உருவாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பது ஆய்விற்குரியதாகும்.
ஒரு சமூகத்தின் செயல்பாடு
ஆனது அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of the law), மற்றும் சமூக செயல்நெறி மதகுகள்(social
functional checks) மூலம் நெறிப்படுத்தப்படுபவையாகும்.
சமூகத்தில் உள்ள மனிதர்களின்
நலன்களைக் கருத்தில் கொண்டு, 'அரசியல்' செயல்நுட்பம் மூலம் அரசால் உருவாக்கப்பட்டு
அமுலாவதே அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of law) ஆகும்.
சமூகத்தில் அரசியல்
புலத்திற்கான வரை எல்லைகளுக்கு அப்பால், அந்த சமூகத்தின் பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளில்
உருவாகி செயல்படுவதே, அந்த சமூகத்தின் செயல்நெறி மதகுகள்(social functional
checks) ஆகும். (refer ’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social
Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார்
என்ற வேறுபாடின்றி”;
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
சட்டபூர்வ செயல்பாடும்,
சமூக செயல்நெறி மதகுகளின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும்போது, அந்த
சமூகத்தில் குற்றங்கள் சிறுமமாக, இணக்கமான சூழலில் அச்சமூகம் வளர்ச்சி திசையில் பயணிக்கும்.
சட்ட அடிப்படையிலான
நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம்
அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும்
வலிமை அரசுக்கு இருக்கும்.
பாரம்பரியம்,பண்பாடு
அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள், கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,அவற்றின் செயல்பாட்டிற்கு வலிமை இருக்கும்.
சமூகத்தில் வாழும்
மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு
இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு'
முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.
“இந்திய விடுதலைக்குப்
பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட
சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில்
அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக
வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி,
வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை'
பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின்
கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன்
தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும்,ஊழல் தொடர்புள்ள
அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட
சமசீரற்ற பண்பு வலிமை பெற எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை
'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.” என்பதை ஏற்கனவே
பார்த்தோம். (refer ‘மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்; 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அந்த சமசீரற்ற பண்பு
உள்மறை இரகசியத்தடைகள் மூலம் வெளிப்படுவது போல, சமூகத்தின் மற்ற பரிமாணங்களிலும் வெளிப்படும்.
“தமிழ்நாட்டில் தமிழ்வழிக்
கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது
மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவதும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை,
தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு
உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய
சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான
நோயின் வெளிப்பாடுகள் ஆகும்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer ’ 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா' நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
குடும்பங்களில் கொலை,
தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள்,விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள்
தமிழ்நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி புற்றீசல் போல் வளர்ந்து வருவது பற்றி, இதுவரை, 'தமிழ், தமிழர்
அமைப்புகள் கவலைப்பட்டிருக்கிறர்களா? அல்லது தங்களின் உள்மறை இரகசியத்தடை தொடர்புள்ள
சமூக ஆற்றலை, தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய போக்கினால், தமிழர் அமைப்புகளும்,
தலைவர்களும் அதிகரித்து வருகிறர்களா? எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டில் தமிழர் குடும்பங்களில்
'சமூக எபோலா' நோய் போல, 'அதிவேகமாக'ப் பரவிவரும் குடும்ப சீர்குலைவுகளை, 'தமிழர் அமைப்புகள்'
விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, அந்த அமைப்புகளில் 'அதிக அனுபவம்' பெற்ற கவிஞர் தாமரை
உருவாக்கியுள்ளார். (அவரின் பத்திரிக்கையில் வெளிவந்த பொதுவிவாதத்திற்கான பகுதியும்,
சில மடல்களும் கீழே )
'தமிழ் உணர்வு, பகுத்தறிவு'
போன்ற முகமூடிகளுடன், அல்லது அரசு பதவியில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 'செல்வம்,
செல்வாக்கு' ஈட்டி வருபவர்களின் 'வாழ்வியல் வெற்றி இரகசியம்' பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
“நான்காவது இரகசியம்: புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில்
அந்த நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான
நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை
உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம்
அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத
நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட
கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதாவது புதிதாக சந்திக்கும்
நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.” (refer ‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்
- வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )
http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )
குடும்பம், நட்பு உள்ளிட்ட
மனித உறவுகளைக் காவு கொடுத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வரும், 'வாழ்வியல்
வெற்றியாளர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கும் பொது விவாதத்தை, கவிஞர் தாமரை தூண்டியுள்ள
'விவாதத் தீ'யை உரிய முறையில் பயணிக்கச் செய்தால், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின்
மீட்சிக்கான சமூக ஆற்றலானது, தவறான உள்மறை இரகசியத்தடைகளிலும், குடும்ப சீர்க் குலைவுகளிலும்
விரயமாவதைத் தடுத்து, மீட்சி திசையில் பயணிக்க வழி ஏற்படும். தவறினால், அடுத்த சில
வருடங்களில் அவ்விவாதத்தைத் தவிர்க்கும், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' அமைப்புகள் சுவடின்றி
உதிர்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
‘வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
திருக்குறள் 4
தனக்கே தலைமை, செல்வம்,
செல்வாக்கு போன்ற விருப்பும்(desire), தனது சுயநலன்களுக்குப் பயன்படாதவர்கள் மீது வெறுப்பும்,
என்பது போன்ற தனிமனித பலகீனங்கள் இல்லாத பண்பினை அகவயபடுத்தியவர்களைக் (internalize) கொண்ட இயக்கமும்,
தலைமையுமே, இனி தமிழ்நாட்டில் எடுபட முடியும்.
கவிஞர் தாமரையின் அறிக்கையும்,
வெளிவந்த சில கருத்துக்களும்;
தனக்கு நியாயம்
கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில்
ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.------------ மிகவும் கசப்பான சூழ்நிலைதான்
என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய
தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன்
வரத் துணிந்தேன்----------- அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள
விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப்
போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப்
புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. -------- நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின்
கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.
நான் கனவு
கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு
நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.
எனவே சாரத்தில்
என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில்
அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.----------- நியாயத்தை எடுத்துக்
கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?
http://tamil.thehindu.com/tamilnadu
வெளிவந்துள்ள சில கருத்துக்கள்:
1. தியாகு.
தூக்கு தண்டனைக் கைதியாக இருந்த போது, 'பரோலில்' வெளிவந்து, தனது நண்பரின் சகோதரியை
மணந்து, கர்ப்பமாக்கி விட்டு, சிறை சென்ற பின் குழந்தை பிறந்தது உண்மையா? தனது குழந்தையின்
தகப்பனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு 'அந்த மனைவி' கொடுத்த கருணைமனு காரணமாக
தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்றதா? பின் சிறையிலிருந்து விடுதலையாகி,
விடுதலைப் புலி ஆதாவாளராக, தாமரையைக் 'காதலித்து' திருமணம் செய்தது உண்மையா? 'என்னோடு
பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி,
அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவு' எடுத்தது உண்மையானால், அவர்களும்
'அந்த மனைவிக்கு' துரோகம் இழைக்கத் துணை போனார்களா? அந்த மனைவிக்கு' துரோகம் இழைத்து
தாமரை தியாகுவை மணந்தது சரியா? இந்த தவறுகளை 'சரியான ஜனநாயகத் தீர்வு' என்று நியாயப்படுத்தலாமா?
2. --சமூகத்தில்
பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது -- நல்ல ஜோக்!
3. தமிழை
வைத்து வணிகம் செய்யும் பலர் இணைவி துணைவி பிணைவி என வாழ்வது சகஜமாகி எத்தனையோ காலமாகிறது
ஒழுக்கம் பற்றிப் பேசும் தானைத் தலிவர்களே களவொழுக்கம் கள்ளத்தொடர்பு மாற்றான் தோட்டத்து
மல்லிகை என அலைவதும் உண்டு இரண்டாம் முறை தோற்ற தாமரை பாவம்
4. இவர் தனது முதல் கணவரை விட்டு வந்தவர்.அது
இவரது தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது கணவர் அதுதான் இப்போது ஓடி போயிருப்பவர்,
அவரும் தன் மனைவியும் மற்றும் ஒரு மகளையும் விட்டு இவருடன் இணைந்தார்.அந்த முதல் மனைவிக்கும்
அந்த இளம் பெண்ணுக்கும் யார் வாழ்கை கொடுப்பார்கள்/கொடுத்தார்கள்.இந்த தமிழ் தேசியம்,திராவிட
புரட்டு இதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு வழி- புண்ணாக்கு .அப்படி போகும் வழியில் தன்
உடல் பசிக்கு ஏதேனும் கிடைத்தால் அது போனஸ்.இதை சீரியஸ் ஆக நினைத்து ஏமாறும் அப்பாவிகளும்
இருக்கிறார்கள், தாமரையை போல. இவர் பல வருடங்களாக புலம்புவதே வேலையாக வைத்து கொண்டிருக்கிறார்.ஆனால்
தமிழ் செனிமாவை பொறுத்தவரை ஒரு முதல் தர கவிஞர்.
" " in the immediate aftermath of that protest by her, Thiyagu had agreed that an investigation committee be set up to look into her allegations against him. "That committee comprised renowned writers, and it has been investigating what actually happened. It's almost a year now, and if they let me know their findings, I'd like to make that public so that other women are aware of what all can go wrong in a marriage. And I have decided that till I announce that result, I will not attend any public events in a personal capacity"
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/My-life-is-not-a-love-poem-Thamarai/articleshow/50772132.cms
" " in the immediate aftermath of that protest by her, Thiyagu had agreed that an investigation committee be set up to look into her allegations against him. "That committee comprised renowned writers, and it has been investigating what actually happened. It's almost a year now, and if they let me know their findings, I'd like to make that public so that other women are aware of what all can go wrong in a marriage. And I have decided that till I announce that result, I will not attend any public events in a personal capacity"
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/My-life-is-not-a-love-poem-Thamarai/articleshow/50772132.cms
No comments:
Post a Comment