தமிழ் வலிமையின் துணையோடு ;
வெண்டி டோனிகர் (Wendy Doniger), ஷெல்டன் பொல்லாக்(Sheldon Pollock) போன்றோரை எவ்வாறு எதிர்க்க முடிந்தது?
மேற்கத்திய உலகில்
தமிழைப் பற்றியும், சமஸ்கிருதத்தைப் பற்றியும் 'மேற்கத்திய புலமையாளர்கள்' கடந்த காலத்திலும்,
நிகழ்காலத்திலும் பல நூல்கள் எழுதி வந்துள்ளார்கள். அதில் சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களைத்
தவறாகப் புரிந்து கொண்டு, இழிவுபடுத்திய நூல்களும் உண்டு. எனது பார்வையில் கடந்த பல
வருடங்களில் சமஸ்கிருதத்தில் உண்மையான உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions), தமது புலமையைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு, மேற்கத்திய
புலமையாளர்களின் தவறுகளை, 'அறிவுபூர்வமான' விவாதத்துடன், வெற்றிகரமாக அம்பலப்படுத்தி
வருகிறார்கள். அந்த விவாதத்தைச் சந்திக்கும் துணிச்சலின்றி, 'உணர்வுபூர்வமாக' சமஸ்கிருதப்
பற்றாளர்கள் வெளிப்படுத்தும் தவறான 'தடை, வன்முறை' எதிர்ப்புகளை, 'மேற்கத்திய குறுக்கு
புத்தியில்'(western style cunning) கேடயமாகப்
பயன்படுத்தி, அது போன்ற புலமையாளர்கள் தப்பித்து வருகிறார்கள்.
அத்தகைய மேற்கத்திய
புலமையாளர்களில் முன்னிடத்தில் இருப்பவர்.வெண்டி டோனிகர் (Wendy Doniger) ஆவார். அவரையும்
அவர் போன்ற 'மேற்கத்திய புலமையாளர்களையும்' புறமுதுகு காட்டி தப்பிக்கும் அளவுக்கு, 'தடை, வன்முறை' எதிர்ப்புகளை ஆதரிக்காமல்,
அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுப்பவர்களில், முன்னிடத்தில் இருப்பவர், அமெரிக்காவில்
வாழும் ராஜிவ் மல்கோத்ரா ஆவார்.
வெண்டி டோனிகர், சமஸ்கிருதத்தோடு,
தமிழையும் இழிவுபடுத்தி நூல் எழுதியுள்ள, ஷெல்டன் பொல்லாக்(Sheldon Pollock) , உள்ளிட்டோரின்
தவறுகள், ராஜிவ் மல்கோத்ராவின் அறிவுபூர்வ விவாதங்கள் பற்றிய, உலகின் கவனத்தை ஈர்த்து
வரும் இணைய விவாத அரங்கில், தமிழின் 'வலிமை'யுடன் நான் பங்கேற்றுள்ளது பற்றி தெரிந்து
கொள்ள;
‘How ancient Indian texts could become a
source of vulgar stories?’; https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/topics/70122;_ylc=X3oDMTM2dmR1MDluBF9TAzk3MzU5NzE0BGdycElkAzU3ODU5OTAEZ3Jwc3BJZAMxNzA1MDc1OTkxBG1zZ0lkAzcwMTI0BHNlYwNmdHIEc2xrA3Z0cGMEc3RpbWUDMTQyNjczMDg3MgR0cGNJZAM3MDEyMg--
அறிவுபூர்வமான விவாதத்திற்கான
தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல், 'தடை, வன்முறை' போன்ற தவறான முறைகளில், உணர்வுபூர்வமாக
எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்ப்பற்றாளர்களும், சமஸ்கிருதப்பற்றாளர்களும் தத்தம் மொழிகளுக்கு
ஒரே வகையிலான கேடு விளைவிக்கிறார்கள். அந்தந்த மொழியை இழிவுபடுத்தும் 'மேற்கத்திய புலமையாளர்களுக்கு',
அதுவே 'தப்பிக்க' உதவும் கேடயம் என்பதை வெண்டி
டோனிகர் போன்றவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 'பார்ப்பன
எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' தமிழ்ப் புலமையாளர்களில், யார் யார் வெண்டி டோனிகர் போன்றோரின் நூல்களைப் பாராட்டி,
புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அது போன்ற 'மேற்கத்திய புலமையாளர்களில்' ஷெல்டன்
பொல்லாக் என்பவர் - உலக அளவில் 'அதீத செல்வாக்குடையவர்'-
தமிழைப் பற்றி, இதுவரை யாரும் குறிப்பிடாத
அளவுக்கு, மிகவும் மோசமாக, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்து,
உலகப்புகழ் பெற்ற நூலில் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ், தமிழ் உணர்வு'கட்சித்
தலைவர்களோ, தமிழ்ப் புலமையாளர்களோ உலக அளவில் அறிவுலகில் தமிழுக்கு நேர்ந்த அந்த அவமானத்தைப்
பற்றி அறிந்ததாகவோ, அதை உரிய சான்றுகளுடன் மறுத்து ஏதும் எழுதியுள்ளதாகவோ நான் இதுவரை
அறியவில்லை.
தமிழ்நாட்டில்
, 1944இல் முளைவிட்டு, 'உணர்வு பூர்வ' போக்கில்
சமூக வண்ணக்குருடு நோய்(social colour blindness) தோன்றி வளர்ந்துள்ளது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.( ‘கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’; http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html
) அறிவுபூர்வமான விவாதத்திற்கான தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல், 'தடை, வன்முறை'
போன்ற தவறான முறைகளில் உணர்வுபூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்ப்பற்றாளர்கள் வளர்ந்து,
தமிழ்நாட்டை தமது ஆதிக்கத்தில் 'சிறைபிடித்த' போக்கும் அவ்வாறே வளர்ந்ததாகும்.
எனது R & D ஆய்வு
முடிவுகள் துணையுடன், மேற்கத்திய நாடுகளுக்கு நல்ல வசதி வாய்ப்புடன் குடியேறுவதற்கான
வாய்ப்புகளும், ஆதரவும் தாமாகவே என்னைத் தேடி வந்த போதும்,வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள் மிகுந்த 'சிறைக் கூண்டுகளில்'
சிக்குவதற்காக, எனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்வதைத் 'தியாகம்' செய்யாமல் , தமிழ்நாட்டில் நான் வாழ்வதை விளங்கிக்
கொள்ள, கீழ்வரும் விளக்கம் துணை புரியும்.
பெரும்பாலானவர்கள்
பார்வை வண்ணக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், பிறந்தது முதல், வண்ணக் குருடு
(colour blindness) எனும் பார்வைக் கோளாறுடன்
வளரும் ஒருவர், உலகில் தாம் பார்க்கும் அனைத்தையும் 'கறுப்பு, வெள்ளையாகவே' பார்த்து வளர்ந்து, பெரியவராகி
விட்டதாக வைத்துக் கொள்வோம். பின் ஒரு குறிப்பிட்ட மருந்தின் மூலம் அவர் குணமாகி, உலகை
வண்ணத்துடன் பார்த்து,பார்வை வண்ணக்குருடு நோயில் சிக்கிய அவரது சமூக வட்டத்தில் தெரிவிக்கையில், அவரது சமூக வட்டத்தில்
'முட்டாளாக'(?)க் கருதி, அவர் முதுகுக்குப்
பின்னும், வெகுசிலர் நேரடியாகவும் பரிகசிப்பதில் வியப்பில்லை.அவரை உண்மையில் மதித்து
அன்பு செலுத்தியவர்கள், அவ்வாறு கேலி செய்யாமல், அவரின் வெளிப்பாடுகளை மதித்து, தமது
சொந்த அறிவு, அனுபவ அடிப்படையில், அது போன்ற மருத்துகள் மூலம், தாமும் வண்ணக்குறைபாட்டிலிருந்து
குணமாகி, வருவதாகவும் வைத்துக் கொள்வோம்.
முன்னர் குறிப்பிட்ட
சமூகத்தில் உள்ள குறைவான எண்ணிக்கையிலான, பார்வை வண்ணக்குறைபாடற்றவர்கள்
, பிற சமூகங்களில் பார்வை வண்ணக்குறைபாடு சமூக அளவில் குறைவாக இருந்து, அங்கு வாழ்பவர்கள்,
உலகில் வண்ணங்களைப் பார்த்து, அழகானவற்றை அடையாளம் கண்டு, மகிழ்ந்து வாழ்வதை அறியும்
போது, தமது சமுகத்தில் அந்த நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முற்படுவதும், அல்லது
அக்குறைபாடற்ற சமூகத்தை நோக்கி இடம் பெயர்ந்து, 'இடம் பெயராமல்' 'கேலிகளை'ப் பற்றி
கவலைப்படாதவர்களுக்கு தம்மால் இயன்ற ஆதரவுக்கரம் நீட்டுவதும், நிகழ்வதாக வைத்துக் கொள்வோம்.
மேலேக் குறிப்பிட்டவற்றில்
பார்வை வண்ணக் குருடுக்குப் பதிலாக, 'சமூக வண்ணக் குருடு' என்று மாற்றி படித்தால்,
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழ் வலிமையின் துணையோடு, உலக அரங்கில் மேலேக் குறிப்பிட்ட
விவாத அரங்கில் பங்களிப்பு வழங்கி, நான் வாழ்வதை விளங்கிக் கொள்ள முடியும்.
பெரியார் இயக்கத்தில்
இருந்த காலத்திலேயே, செல்வம், செல்வாக்கிற்கு மயங்காமல், பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
கருத்துக்களை அறிவுபூர்வமாகவும், திறந்த மனதுடனும் ஆய்ந்து பயணித்தேன். பெரியார் ஈ.வெ.ராவை
முன்மாதிரியாகக் கொண்டு, தவறுகளை 'ஈகோ'(Ego) சிக்கலின்றி, பகிரங்மாக ஒத்துக் கொண்டு,
பயணித்ததே, எனது சமூக வண்ணக் குருடை, இசை ஆராய்ச்சி மூலம் 'குணப்படுத்தி', எனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ,
வழி வகுத்தது.
தமிழ்வழியின் மரணப்
பயணத்தைத் தடுத்து, தமிழ்நாட்டு தமிழர்களிடையே வளர்ந்து வரும், 'லாபநட்ட நோக்குடன்' சமூக
உறவுகளை சீர்குலைத்து வரும், 'சமூகக் கள்வர்' நோயிலிருந்து தமிழ்நாட்டை மீட்கும் முயற்சிக்கு,
எனது ஆய்வுகளின் அடிப்படைகளில் என்னாலான பங்களிப்பு வழங்கி வாழ்வதற்கும் அதுவே வழி
வகுத்தது. தமிழ் வலிமையின் துணையோடு,வெண்டி டோனிகர் (Wendy Doniger), ஷெல்டன் பொல்லாக்(Sheldon
Pollock) போன்றோரை அவ்வாறே எதிர்க்க முடிந்தது.
ஐயா
ReplyDeleteகீற்று தளத்தில் வே.பாண்டியன் என்ற பெயரில் எழுதியது நீங்களா? உதாரணம்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/297-2009-08-26-21-37-53
ஆரியரும் அக்னியும்
முனைவர் வே.பாண்டியன்
ஐயா,
ReplyDeleteஅது நானல்ல. எனது பெயர் செ.அ.வீரபாண்டியன்.டாக்டர்.வீ என்றும் பதிவுகளில் குறிப்பிடுவேன்.
அன்புடன்,
செ.அ.வீரபாண்டியன்