தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’ (Macro-world (8)
'ஊசி குத்தலுக்கு உள்ளான பலூன்' போல, அடங்கி வரும் போராட்டங்கள்?
மாணவர்கள் உலகத்திலும்
கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper
middle class- குடும்பப்பிள்ளைகளும் கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை)
திருட்டு, (மது/போதை மாத்திரை, சினிமா
போன்ற தேவைகளை மறைத்து
பொய் சொல்லி) தெருவில்
பிச்சை கேட்டல்
போன்றவை எல்லாம்,
1967க்கு முன் தமிழ்நாட்டில்
இருந்ததா? எந்த ஆட்சி காலத்தில் எப்போது
முளை விட்டு, எப்படி
வளர்ந்தது?
சட்டத்தின் பிடியில்
சிக்காமல் தப்பிக்கும்
திருட்டு, கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் எல்லாம்,
அதிக விலையுள்ள காருடன்,
அதிக விலையுள்ள வீடுகளில்,
அந்தந்த சாதி உற்றமும், சுற்றமும்
மதிக்க வாழ்வதானது,
அந்தந்த சாதிகளில்
உள்ள குடும்பப் பிள்ளைகள்
எல்லாம் மேலே குறிப்பிட்ட போக்கில்
சிக்க காரணமானதா?
‘அவ்வாறு பிச்சை
எடுப்பது நமது குடும்பப் பிள்ளை
இல்லையே?’
‘அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் அநியாயமாக
உயிர் இழந்த உதயகுமாரும்
நமது குடும்பப் பிள்ளை
இல்லையே?’ என்று கவலைப்படாமல் பயணித்தவர்களுக்கும்;
'கங்கை அமரன், பாலு ஜிவல்லரி போன்று
இன்னும் பலர் கொலை, அச்சுறுத்தல் மூலம் சொத்துகளையும், உயிர்களையும்
இழந்தவர்களில் எவரும்
நமது குடும்பத்தினர் இல்லையே'
என்ற துணிச்சலில், அந்த 'ஊழல் தலைவர்களுடன்' நேசமாக
பயணித்தவர்களுக்கும்;
வேறுபாடு உண்டா? 'புளோட்' தலைவர் உமா மகேசுவரன் உச்சத்தில் இருந்த காலத்தில், அவர் புகழ்பாடி, பிரபாகரனை இழித்து பேசியவர்கள், அவரின் மறைவிற்குப் பின், பிரபாகரன் புகழ் பாடி பயணித்தவர்களும், அந்த வகை இல்லையா? அதில் 'பெரியார் தந்த புத்தியில்' பயணித்தவர்களும்
அடக்கம் இல்லையா?
ஆணிவேரை சிதைத்த
பின், எவ்வளவு பராமரித்தாலும்,
அந்த தாவரம் அழுகுவதை
தவிர்க்க முடியுமா?
காலனி மனநோயில்
சிக்கி, தனித்துவமான
(unique) 'திராவிட' மனநோயில்
பயணித்து (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html
);
தமிழரின் ஆணிவேர்களான
தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், சிதைத்ததால்,
தமிழ்நாட்டில் சமூகமானது
அழுகி வருவதன் அறிகுறிகளாகாவே,
மேலே குறிப்பிட்ட நோய்களில்
பள்ளி மாணவர்களும் சிக்கி
பயணிக்கிறார்களா? தாமும்
தமது குடும்பப் பிள்ளைகளும்
படித்த காலத்தில்,
பணியாற்றும் காலத்தில்,
எந்த பொதுப்பிரச்சினைக்கும் போராடாதவாறு
'பாதுகாப்பு மண்டிலத்தில்
வாழ்வியல் புத்திசாலிகளாக'
வாழ்ந்து கொண்டு,
குப்பன் சுப்பன்
வீட்டுப் பிள்ளைகள்
எல்லாம் போராடி
படிப்பையும், வாழ்வையும்
கெடுத்துக் கொண்டதையும்,
தீக்குளித்ததையும் ஆதரித்த
போக்குகளும், அந்த சமூக அழுகலின் வெளிப்பாடுகள்
ஆகாதா?
தமிழ், தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக,
ஈ.வெ.ரா அவர்கள் முன்னெடுத்த
'அழிவுபூர்வ' விமர்சனப்
போக்கானது (Destructive criticism);
தமிழின், தமிழர்களின்,
தமிழ்நாட்டின் சீரழிவிற்கு
காரணமானதா? என்ற கேள்வியை, பின்வரும்
ஆய்வானது எழுப்பியுள்ளது.
‘Destructive
criticism will never create a real civilization and will not bring to the fore
competent people among the community who really deserve praise and
appreciation. On the contrary, it will contribute to the destruction of the
community.’ http://www.almokhtarone.com/portal/wp-content/uploads/2016/05/al-Naqd_Critisism.pdf
ஒரு சமூக இயக்கமனது 'அழிவுபூர்வ'
விமர்சனப் போக்கில்
பயணிப்பதானது, அந்த சமூகத்தில் பிரிவினைப்
போக்குகளை வளர்த்து
சீரழிவிற்கு இட்டுச்
செல்வதை தவிர்க்க
முடியாதா? என்ற சமூகவியல் ஆய்விற்கான
பரிசோதனைக் கூடமாக
தமிழ்நாடு இருக்கிறது.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
)
தமக்கு சரி என்று பட்டதை, ஆய்வுகள்
மூலம் நிறுவப்பட்ட உண்மை போல் எழுதும் அபத்தங்களும்
தமிழ்நாட்டில் வெளிப்படுகின்றன,
என்பதற்கு கீழ்வருவதும்
ஒர் உதாரணமாகும்.
"பண்பான பழந்தமிழ்
இலக்கியங்கள் எப்படி
தமிழ் நாட்டில் பெருந்தன்மையான,
சான்றாண்மையாளர்களான தலைவர்களை
உருவாக்கவில்லையோ அதே போல் தான் எல்லாப்
பழைமை மரபுகளும்."
- 'பெரியார்' ஆதரவாளரின்
கருத்து.
'பண்பான பழந்தமிழ்
இலக்கியங்கள் எப்படி
தமிழ் நாட்டில் பெருந்தன்மையான,
சான்றாண்மையாளர்களான தலைவர்களை
உருவாக்கவில்லை' என்ற ஆய்வினை யார் மேற்கொண்டு, எப்போது
வெளியிட்டார்கள்?
ஈ.வெ.ரா அவர்களிடமிருந்து பிரிந்த
பின்பு, அண்ணா கீழ்வரும் குற்றச்சாட்டினை
ஈ.வெ.ரா மீது சுமத்தினார்.
'ராமாயணத்தினை எரிக்கும்
போராட்டத்தினை, ஆர்.கே.சண்முகம்
செட்டியார் கேட்டுக்
கொண்டதால், பெரியார்
அப்போராட்டத்தினை நடத்தாமல்,
ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.'
1944இல் 'அண்ணாதுரை தீர்மானம்'
மூலம், நீதிக்கட்சியில்
இருந்து நீக்கப்பட்ட
பட்டியலில் ஆர்.கே.சண்முகம் செட்டியாரும்,
அவரைப் போன்ற 'பெருந்தன்மையான, சான்றாண்மையாளர்களான
தலைவர்களும்' இருந்தார்களா?
இல்லையா? அவ்வாறு
நீக்கப்பட்ட ஆர்.கே.சண்முகம் செட்டியார்
விடுத்த கோரிக்கைக்கு,
ஈ.வெ.ரா அவர்கள் ஏன் கட்டுப்பட்டு, ராமாயண
எரிப்புப் போராட்டத்தினை
ஏன் ஒத்தி வைத்தார்?
என்பதை
ஆர்வமுள்ளவர்கள் தாமே ஆராய்ந்து தெளிவு
பெறலாம்.
அந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார்
'பெருந்தன்மையான சான்றாண்மையாளர்களான'
தலைவர் இல்லையா?
என்பதை ஆர்வமுள்ளாவர்கள்
தாமே ஆராய்ந்து தெளிவு
பெறலாம். அவர் மட்டுமின்றி, நீதிக்கட்சியில்
அவரைப் போலவே இன்னும் பலர் பெருந்தன்மையான, சான்றாண்மையாளரான
தலைவரா? இல்லையா?
என்பதையும் ஆர்வமுள்ளவர்கள்
தாமே ஆராய்ந்து தெளிவு
பெறலாம்.
இன்று அவர்கள் எல்லாம்
உரிய முக்கியத்துவம் இன்றி இருப்பதற்கு காரணம்
'பெரியார் 'போதையா'?
தமக்கு சரி என்று பட்டதை, ஆய்வுகள்
மூலம் நிறுவப்பட்ட உண்மை போல் எழுதும் அபத்தங்களும்
தமிழ்நாட்டில் வெளிப்படுவதற்கும்,
அதே 'பெரியார் போதை' காரணமா? இல்லையா?
என்பதையும் ஆர்வமுள்ளாவர்கள்
தாமே ஆராய்ந்து தெளிவு
பெறலாம்.
அது மட்டுமல்ல,
தமிழ்நாட்டில் 'பெருந்தன்மையான,
சான்றாண்மையாளர்களான தலைவர்கள்'
எல்லாம் மறைந்து,
பொதுவாழ்வு வியாபாரிகளிடம்
தமிழ்நாடு சிக்கியதற்கு,
ஈ.வெ.ரா அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்பாவார்?
என்ற விவாதமும் அரங்கேற
வேண்டிய நேரமும்
வந்து விட்டது.
தமது அறிவு வரை எல்லைகள்
(intellectual limitations) பற்றிய புரிதலின்றி,
பல பரிமாண அறிவுச்
செல்வமான தமிழ் இலக்கியங்களையும், புராணங்களையும்
'சமூகத்திற்கு கேடான மூட நம்பிக்கை'யென கண்டித்த; (‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின்
வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html &’ தமிழின் அடுத்த
கட்ட (Next Phase) புலமை?
(2);புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்’; http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html ) ;
திராவிட மன நோயாளிகள் தமிழ்நாட்டில்
எவ்வாறு உருவானார்கள்?
என்பதை ஏற்கனவே
விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html
)
தமிழின் வளர்ச்சி
மட்டுமின்றி, தமிழ்நாட்டில்
புதிய தொழில் வியாபார
வாய்ப்புகளையும் கெடுக்கும்
போக்கிலும், ஈ.வெ.ராவின் போராட்ட
முறைகளில் இருந்து
தடம் புரண்டு, ஈ.வெ.ரா-வால், 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட 'போராட்ட
நோயில்' சிக்கியும்,
பயணிக்கும்
திராவிட மனநோயாளிகள்
எல்லாம்;
ஈ.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய
'காலதேச வர்த்தமான
மாற்றங்களுக்கு' அவ்ரின்
கொள்கைகளை எல்லாம்
உட்படுத்தி திருந்த
வேண்டும்;
இயலாதெனில்
ஒதுங்க வேண்டும்;
என்ற சமூக நெருக்கடியினை
உருவாக்கினால் தான், தமிழும், தமிழ்நாடும்
மீள முடியும்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு
வரும் தொழிற்சாலைகள் எல்லாம்
மூடப்படுவதும், தமிழ்நாட்டை
விட்டு வெளியேறுவதும்,
புதிய தொழில்கள் தொடங்க
அருகதையற்ற மாநிலமாக
தமிழ்நாடு மாறுவதும்,
அரங்கேறுவதும் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும்
நோக்கில்;
“துப்பாக்கி சூட்டில்
முடிந்த ஸ்டெர்லைட்
போராட்ட பேரணிக்கு
தலைமை தாங்கியது யார்? பங்கு பெற்ற இயக்கங்கள்
எவை? அமைப்பாளர்கள் யார் யார்?”
என்பது போன்ற கேள்விகளுக்கு
விடைகளின்றி பயணிக்கும்
போராட்டங்கள் எல்லாம்,
'ஊசி குத்தலுக்கு உள்ளான
பலூன்' போல, அடங்கும்
காலம் அதிக தொலைவில்
இல்லை;
என்பதை கீழ்வரும்
கட்டுரை உணர்த்தியுள்ளது.
'போராட்டங்கள் வழியல்ல,
வலி!'
No comments:
Post a Comment